இந்தியாவில் இருந்து எழுதுவது
இரண்டு மாதத்திற்கு முன்பு தேவதை இதழில் இருந்து தொடர்பு கொண்டார்கள். என்னை பற்றிய தகவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். இன்று தற்செயலாக கடைக்கு செல்லும் வழியில் தேவதை இதழை வாங்க நேர்ந்தது. பிரித்தவுடன் இனிய அதிர்ச்சி. என்னுடைய வலைப்பக்கத்தை பற்றி எழுதி இருந்தனர். என்னுடைய நான்கு இடுகைகளை பற்றி தொகுத்து எழுதி இருக்கிறார் நவநீதன் அவர்கள். நன்றி.
அந்த நல்ல செய்தியை தெரிவிக்கவே இரவல் கணினி துணை கொண்டு இந்த இடுகை எழுதுகிறேன்.
வீடு திரும்பியதும் மீண்டும் சந்திப்போம். நன்றி.