Saturday, May 19, 2018

என்ன கொடுமை சார் இது??

அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு துப்பாக்கி சூடு நடக்கும், பின்னர் அதனை தொடர்ந்து குய்யோ முறையோ என்று மக்கள் அடித்து கொள்ளுவார்கள். ஜனாதிபதியே, வருத்தம் தெரிவிப்பார், பின்னர், கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவிப்பார்.  NRA எனப்படும் துப்பாக்கி கழகம் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் க்கு நிறைய பணம் கொடுத்து லாபி செய்திருப்பதால் அவரும் சும்மா பேருக்கு ஒரு அறிக்கை விட்டு விட்டு, அவர் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறார்.   பின்னர், ஒன்றும் நடக்காது. அடுத்த வேலையை பார்க்க போய் விடுவார். இது அடுத்த ஷூட்டிங் நடக்கும் வரை தொடரும்.

கடந்த புளோரிடா பள்ளி துப்பாக்கி சூட்டுக்கு பின்னர், பரவலாக பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஜியார்ஜியா போன்ற கான்செர்வ்டிவ் மாநிலங்களில் துப்பாக்கி வைத்து கொள்ளுவது என்பது மனித உரிமை போல சித்தரிப்பார்கள். பக்கா பைபிள் பெல்ட் இது. அல்லேலுயா தானே பாடிவிட்டு போங்கள் என்று விட முடியாது. நான் கான்செர்வ்டிவ், எங்களுக்கு தகுந்த, எங்களை போன்ற ஒருவர் ப்ரெசிடெண்ட் ஆகி விட்டார் என்று இவர்களின் தொல்லை அலம்பல் தாங்க முடியவில்லை.

தற்போது ஜியார்ஜியா மாகாண கவர்னர் பதவிக்கு என்று பலர் போட்டி போடுகின்றனர். அதில் கான்செர்வ்டிவ் டிரம்ப் ஆதரவாளர் ஒருவரின் தேர்தல் விளம்பரம் டிவி யில் பார்த்து வாயடைத்து போய் விட்டேன்.துப்பாக்கி  கையில் வைத்து கொண்டு, இவர் பெரிய பருப்பு, நான் NRA ஆதரவாளர், டிரம்ப் சப்போர்ட்டர் என்று ஒரு சின்ன பைய்யன் மீது துப்பாக்கி காட்டும் ஒரு விளம்பரம் டிவி யில் அதுவும் பப்ளிக் டிவி யில் பார்த்து வாந்தி வந்துவிட்டது. இவரின் பெண்ணை டேட் செய்ய வேண்டும் என்றால் இவர் மிரட்டுவாராம்.  என்ன கான்செப்ட் ஓ  ..


நாம என்ன செய்ய முடியும், இப்படி புலம்புவது தவிர...இது ரெட் ஸ்டேட்..எப்படியும் ஜெயித்து ரிபப்லிக்கன் வந்து விடுவார்கள். இந்த ஆளே ஜெயித்து வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

இங்க ஊர் பாலிடிக்ஸ் இப்படி போய் கொண்டிருக்க, அங்க இந்தியாவில் நடப்பதோ, சிரிப்பு சிரிப்பாக இருக்கிறது. அதுவும் கர்னாடக தேர்தல்...சபாஷ்...

முன்பு ஜோக் ஒருமுறை படித்த ஞாபகம். அதாவது, +2 வில், மிக குறைந்த  மார்க் எடுத்த பைய்யனிடம் சமாதானம் செய்வது போல இப்படி சொல்லி இருப்பார்கள்.

அதாவது, 12 இல், முதல் மார்க் எடுப்பவர்கள், என்ஜினீயர் ஆகி விடுவார், மத்திமம் மார்க் எடுப்பவர்கள் கமெர்ஸ் படித்து மேனேஜர், அக்கௌன்டன்ட் ஆவார், என்ஜினீரியரை வேலை வாங்குவார்., கடைசி மார்க் எடுத்தவர்கள் அல்லது பெயில் ஆனவர்கள், ரவுடி ஆகி, பின்னர் மந்திரி ஆகி, முதல் இருவரையும் வேலை வாங்குவார்கள். அதாவது, முதல் மார்க் எடுத்தவனை விட, பெயில் ஆனவனே பெஸ்ட். என்பது போல அந்த ஜோக் போகும்.

அது போல  தேர்தலில் நிறைய சீட் ஜெயிச்ச கட்சி எல்லாம், ஒன்னும் இல்ல. இப்போ டிமாண்ட் இருக்கிறது எல்லாம், சோட்டா மோட்டா கட்சி, அல்லது தனித்து நின்று ஜெயித்த சுயேட்ச்சை க்கி தான். ஏன் நாஇப்போதைக்கு அவங்க தான் கிங் மேக்கேர்ஸ்.. லக்கோ லக்கு தான்.
 
நமக்கு எதுக்கு வம்பு. எந்த ஊர் பாலிடிக்ஸ் ஆக இருந்தாலும் பேசாம வாயை மூடிட்டு போயிடனும்...

நன்றி.