Monday, June 29, 2015

தமிழ் சீரியல் கில்லர்ஸ்ம் காதணி விழாக்களும் !!கடந்த இரண்டு வார மதுரை வாசத்தில் என்ன புது விஷயங்கள் கற்று கொண்டேனோ இல்லையோ ஒரு சில விஷயங்கள் மனப்படமாகி இருக்கிறது. அவைகள், குறைந்தது 12 மணி நேரமாவது அலறும் FM ரேடியோக்கள், மாலை நேரங்களில் வீட்டுக்கு வீடு மறக்காமல் ஒலிக்கும் டிவி சீரியல்கள், ஏதாவது ஒரு கல்யாணம், காது குத்து, பூப்புனித நீராட்டு விழா இல்லை கோயில் திருவிழா, அரசியல் கட்சி  கூட்டம் என்று ஊரெங்கும் ஒலி பெருக்கி கட்டி அலறவிடப்படும் பாடல்களும், வெடி சத்தங்களும்.

அதுவும், நான் பார்த்த ஒரு  கட்சி கூட்டம் , பெட்ரோல் பங்குக்கு எதிரில் இருந்த  திருமண மண்டபத்தில்  நடந்தது..ஆயினும் யாரும் எந்த கவலையும் இல்லாமல் 1000 வாலா , 10000 வாலா  என்று வெடி விட்டு கொண்டு இருந்தார்கள். என்னுடன் வந்த 9 வயது என் அண்ணன் மகள், இப்படி பெட்ரோல் பங்குக்கு பக்கத்துல வைக்கிரன்களே, பெட்ரோல் பத்திக்காது? என்று கேட்டாள். ஒரு 9 வயது சிறுமிக்கு இருக்கும் பொது அறிவு கூட இவர்களுக்கு இல்லையே என்று வருந்த நேர்ந்தது.

இன்னொரு காமெடியான விஷயம் மொய் வசூலிப்பதற்காக ஒரே பையனுக்கு இரண்டு மூன்று முறை காது குத்துவது. மறுகுத்து என்று வேறு சொல்லி கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு முறை காது குத்துக்கும் ப்ளெக்ஸ் பானேர்கள். தாங்க முடியலடா சாமி.

அடுத்து, மக்களின் சீரியல் பார்க்கும் மோகம். இதனை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள், நானும் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆயினும், மக்களின் மோகம் எல்லை கடந்து போய் விட்டது போல. ரேடியோ மிர்ச்சி, சீரியல் கில்லர்ஸ் என்று ஒரு நிகழ்ச்சி கூட நடத்துகிறார்கள். முன்பெல்லாம் வீட்டு வேலை முடிந்ததும் நிறைய கைவேலைகள், கைத்தொழில்கள் என்று செய்து வந்த பலர் இப்போது சீரியல் மோகத்தில் மூழ்கி, சீரியல் அடிமைகள் ஆகி விட்டு இருப்பதை பார்த்தேன். அதுவும் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்று இருந்தேன், அங்கு கல்லாவில் இருந்த ஒரு பெண் கல்லாவுக்கு அருகில் டிவி பெட்டி வைத்து கொண்டு அதில் வரும் ஒவ்வொரு டயலாக் குக்கும் முக பாவனைகள் மாற்றுவது, கதாநாயகியை பார்த்து பாவப்படுவது என்று ரியாக்சன் பார்க்க காமெடியாக இருந்தது. காசு கூட கரெக்டாக வாங்கி கல்லாவில்  போடுமா அந்த அம்மா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்த தையல் வேலையில் சிறந்த என் தோழி ஒருத்தி பிள்ளைகள் கணவர் வேலைக்கு வெளியில் சென்றதும் தற்போது டிவி பெட்டியே கதி என்று இருப்பதை பார்க்க முடிந்தது. நாம் அவர்கள் சீரியல் பார்க்கும் நேரத்திற்கு வீட்டுக்கு சென்றால் நம்மிடம் கூட இவர்கள் பேசுவதில்லை அல்லது பாரமாக நினைக்கிறார்கள் என்பதை கண்கூடாக காண நேர்ந்தது. இனிமேல், ரேடியோ மிர்ச்சியில் கிண்டல் செய்வது போல, இவர்களிடம் போன் செய்து எப்பொழுது வந்து சந்திக்கலாம் என்று கேட்டாலும், ஒரு சீரியலுக்கு பின்னர் அடுத்ததாக இவர்கள் சொல்லி கிட்டத்தட்ட வீட்டுக்கு வராதீர்கள் என்று சொல்லி விடுவார்கள் போல.  எங்கே போக போகிறதோ இவர்களின் நிலைமை, பார்க்க கஷ்டமாக இருக்கிறது. எப்படி இவர்களை திருத்துவதோ?


நன்றி

Saturday, June 27, 2015

10 ஆம் வகுப்பு தமிழ்நாடு அறிவியல் பாட நூலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிலையும்

TNPSC பரிட்சைக்காக என்று தயார் செய்து கொண்டிருந்தார்  என் சொந்தகார பெண் ஒருவர். 10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித புத்தங்கங்களை வைத்து ரெபெர் செய்து  கொண்டு இருந்தார்.  தற்செயலாக  புத்தகங்களை படிக்க  நேர்ந்தது. அதுவும், துவக்க பாடமான, மரபும் பரிணாமமும் பார்த்த போது,  மெண்டல், டார்வின் என்று தமிழில் பார்க்க படிக்க ஆர்வமாக  இருந்தது.   அதுவும்   மரபு பொறியியல் என்று படிக்க, அட நம்ம சப்ஜெக்ட் ஆச்சே என்று சந்தோசமாக இருந்தது. பரவாயில்லையே, 10 ஆம்  வகுப்பிலேயே ஜெனெடிக் பாடங்கள் சொல்லி தராங்களே என்று சந்தோசப்பட்டேன். Biochip, Biosensor, alternative medicine என்று பலதும் சிறு சிறு பகுதிகளாக இணைக்க  இருக்கின்றன. இதனை பற்றியெல்லாம் விளக்க ஒரு பத்தாம் வகுப்பு ஆசிரியாரால் முடியுமா. அப்படி என்றால் என்ன என்று கூட இந்தியாவில் M.Sc படித்த பல மக்களுக்கு விளக்க, அறிந்து கொள்ள தெரியாதே..எப்படி 15-16 வயது பிள்ளைகள் அறிந்து கொள்ளும் என்று கேள்விகள்.
முக்கால் வாசி பேர் இதனை கடம் மட்டுமே செய்கிறார்கள், புரிந்து படிப்பது என்பது துளியும் இல்லை. 8ஆம் வகுப்பில் இருந்தே 10ஆம் வகுப்பு பாடத்தை ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து செய்து ஒப்பித்து பழகி இருகிறார்கள். இப்படி கடம் அடித்து பின்னர் தேர்வில் வாந்தி எடுத்து 100-100 வாங்கி விட்டேன் என்று பெருமை வேறு.


ஒரு அறிவியலில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிய ஒரு பெண்ணை கூப்பிட்டு மெண்டல் அவர்களின் தத்துவம் பற்றி கேட்டேன். உடனே அவள் புத்தகத்தில் இருப்பதை ஒரு வரி விடாமல் ஒப்பித்தாள். அதில் குறுக்கு கேள்விகள் கேட்க விழிக்கிறாள்.  சரி ஜெனிடிக் வேண்டாம் மனித உடலில்  DNA எங்கு இருக்கும் என்று கேட்டால் விழிக்கிறாள். அறிவியல் பற்றிய ஒரு  basic அறிவு கூட இவர்களுக்கு இருப்பதில்லை. பின்னர் எப்படி 100-100 மார்க் வாங்கினார்கள் என்று தெரியவில்லை.

அப்படி நான் நினைத்து கொண்டு இருக்கும் போது, அறிவியல் புத்தகத்தில் ஒரு பாரா கண்ணில் பட்டது. அது மரபணு மருத்துவம் பற்றியது.புத்தகத்தின்  கூற்றுப்படி, "மரபணு மருத்துவத்தை பயன்படுத்தி நோய் குறைபாடுகளான புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான சேனை புதிய ஜீன் புகுத்தி சை செய்யும் முறையாம்". படித்தவுடன் புல்லரித்து விட்டது.எய்ட்ஸ் என்பது HIV என்னும் வைராசால் உருவாக்கபடுகிறது என்று அறிந்து இருந்தேன்..ஆனால் அதனை ஒரு ஜெனெடிக் டிசீஸ் என்று 10ஆம் வகுப்பு அறிவியல் பாட புத்தகம் தெரிவிக்கிறது. அதுவும் எயிட்ஸ் உருவாக்கும் ஜீனை இவர்கள் மரபணு மருத்துவம் மூலம் சரி செய்து விடுவார்களாம். எந்த ஊரில் இப்படி நடக்கிறது என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா. நிறைய எயிட்ஸ் நோயாளிகள் காத்து  கொண்டு இருகிறார்கள். செய்வார்களா தமிழ் நாடு 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல் தயாரித்தவர்கள்?.

  இப்போது பாடம் சொல்லி கொடுப்பவர்களுக்கு இதனை பற்றி அறிந்திருக்குமா என்பதெல்லாம் எனக்கு கவலை இல்லை . பாட நூல் தயாரித்தவர்களுக்கு இதனை பற்றி எல்லாம் உண்மையில் தெரியுமா?, இல்லை யாராவது எழுதி கொடுத்ததை இவர்கள் பிரசுரித்து இருக்கிறார்களா? ரெபெர் செய்து உண்மையா இல்லையா என்று சோதித்தார்களா? நிறைய கேள்விகள்...என்னவோ போங்கப்பா.


நன்றி.

Wednesday, June 24, 2015

உண்மையில் இந்தியா வளர்ந்து இருக்கிறதா?விமான பயணத்தில்  பொருளாதாரம் பற்றிய ஒரு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது. அது உலக பொருளாதாரங்கள் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறது எப்படி இன்னும் சில வருடங்களில் வளரும் என்ற உலக வங்கியின் International Monetary Fund ப்ரோஜெச்சன். அதன் கூற்றுப்படி இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  IMFடைரக்டர்  Christine Lagarde அவர்களின் கூற்றுப்படி இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் சீனா பொருளாதரத்தை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார். இவை எல்லாம் கேட்கும் போதும் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. 

இன்றைய சூழலில் வீட்டுக்கு ஒரு சாப்ட்வேர் மக்கள் இருக்கிறார்கள், சாப்ட்வேர் தவிர வேறு துறை எவ்வாறு வளர்ச்சி அடைந்து  இருக்கிறதா? இந்த சாப்ட்வேர் துறையில் ஏற்படும் வளர்ச்சி மட்டுமே பொருளாதரத்தை உயர்த்துமா? என்று எனக்குள் கேள்விகள். 

இப்பொழுது சீன பொருளாதரத்தை எடுத்து கொள்ளுவோம். இந்தியாவில் புழங்கும் 99% எலேக்ட்ரோனிக் பொருள்கள் சீனாவில் இருந்து வந்தவை. உலகில் எங்கு சென்றாலும் எந்த பொருள்கள் வாங்கினாலும் அதில் made in china tag இருக்கும். துணிமணியில் இருந்து பிளாஸ்டிக், வீட்டு உபயோக பொருட்கள் என்று அனைத்தும் சீனா மார்க்கெட் ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் 20 வருடத்திற்கு தேவையான infrastructure, ரோடுகள், கழிப்பறை, சுகாதாரம்  என்று நகரங்களில் மட்டும் அல்ல, கிராமங்களிலும் கூட சீனாவில்  அடிப்படை வசதிகள் பக்காவாக இருக்கின்றன.

மதுரை வந்த பிறகு சுற்றி இருக்கும் infrastructure பார்க்கும் போது,  சாலை வசதி ,சுகாதார வசதி, கழிப்பறை வசதி, வேஸ்ட்மானேஜ்மென்ட் வசதி போன்ற வற்றை பார்க்கும் போது இந்தியா உண்மையில் சீனா பொருளாதாரத்தை மிஞ்சுமா?,இது சாத்தியமா என்று பல கேள்விகள். 

உதாரணமாக, மதுரையில் காலை நேரங்களில் ஏர்போர்ட் பை பாஸ் ரோட்டில் இருந்து எங்கு சென்றாலும் ரோட்டை அடைத்து கொண்டு மனித கழிவுகளை ஏற்றிக்கொண்டு செல்லும் மாநகராட்சி வண்டிகளும் குப்பை எடுத்து செல்லும் வண்டிகளும் செல்கின்றன. மூக்கை பிடித்து கொண்டு பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. காலை நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள், சிறுவர்கள் கல்லூரி செல்லுவோர் என்று பலரும் அவசர கதியில் கிளம்பி பறந்து கொண்டு இருக்கும் பொழுது பல நேரங்களில் குப்பை எடுக்கும் வண்டிகளில் இருந்து குப்பை முகத்தில் அடிப்பதை அல்லது கழிவு பொருட்களை எடுத்து செல்லும் வண்டிகளில் இருந்து சிதறும் கழிவை தடுக்க முடிவதில்லை.
மற்ற நாடுகளில் இருப்பது போல, ஷிப்ட் முறையில், இரவு நேரங்களில் இப்படி பட்ட கழிவு பொருட்களை எடுத்து செல்வது அல்லது ரோடு கூட்டுவது குப்பை கூட்டுவது என்று செய்தால் எப்படி இருக்கும் என்று எனக்குள் கேள்விகள்.

எங்கும் எதிலும் குப்பை, எல்லா இடங்களிலும் முத்திர வாடை, மனித கழிவுகள் அகற்ற கழிப்பறைகள் கூட இல்லை என்று ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நிறைய வீடுகள். நான் சொல்லுவது எதோ ஒரு கிராமம் இல்லை, ஆனால் மதுரை போன்ற நகரத்தின் நிலை. 

அடுத்து மக்களுக்கு இருக்கும் இலவச மோகம். உதாரணமாக என் சொந்தகார பெண் நல்ல வசதியுடன் போன வருடம் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டாள். அவளுக்கு இப்பொழுது ஒரே கவலை. அது அவள் வோட்டிங் வார்டு மதுரையின் வேறு ஏரியா வில் இருப்பது தான். அப்படி இருப்பதால் இன்னும் ஆறு மாதத்தில் நடக்க போகும் எலெக்சனில் இலவசமாக வரும், மிக்சி கிரைண்டர், அடுப்பு , டிவி...போன்ற எதுவும் கிடைக்க போவதில்லை என்று வருத்தம். காசு வாங்கி கொண்டு உரிமையை விக்கிறோம் என்று யாருக்கும் தோணுவது இல்லை.  எங்கே செல்கிறது இந்தியா?

எந்த விசயத்தில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்ற கேள்விக்கு,  எனக்கு கிடைத்த பதில் என்னவோ இங்கு இருக்கும் கவுன்சிலருக்கும், வார்டு மெம்பருக்கும், மேயருக்கும், MLA களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல் அமைச்சர்களுக்கும், MP களுக்கும் எவ்வளவு பணம் அடிப்பது என்று போட்டி நடப்பதில் இந்தியா மிக முன்னேறி இருக்கிறது. மிக மிக முன்னேறி இருக்கிறது. இதனை தவிர எனக்கு தெரிந்து முன்னேற்றமாக ப்ராஜெக்ட் செய்யபடுவதெல்லாம் வெறும் மாயை போல தோன்றுகிறது.


டிஸ்கி.

இது என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்ததை, கேட்டதை வைத்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நன்றி.

Sunday, June 21, 2015

மக்கள் செல்லும் வாக்கிங்ம் பெருகி வரும் மருத்துவமனைகளும்உடம்பை குறைக்கணும்னு  சிலர் வாக்கிங் போறாங்க. ஆனா ஜோக் என்னன்னா, இவர்கள் செய்யும் வாக்கிங் தான். காலையில ஒரு 6 மணிக்கு கிளம்ப வேண்டியது. தனியா நடந்தா போர் அடிக்கும்னு ரெண்டு பேரை கூட்டிட்டு போக  வேண்டியது. நடக்குறேன் பேர்வழி அப்படின்னு ஒரு சில தப்படி எடுத்து வேண்டியது. அப்புறம் மூச்சு வாங்கினா, ரெஸ்ட் எடுக்கிரோம்னு உட்கார்ந்துகிறது. அப்படி உட்கார்ந்து ஊர் கதை பேச வேண்டியது. அப்புறம் ரெண்டு தப்படி எடுத்து வைக்கிறது. இப்படி உட்கார்ந்து உட்கார்ந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க எப்படியும் அரை மணி நேரம் ஆக்கிடறது. சரி ஆச்சு வாக்கிங், எதவாது சூப் குடிக்க வேண்டியது. வல்லாரை சூப், பருத்தி பால், காளான் சூப் இப்படி லிஸ்ட் பெருசு.  அதில ஏதாவது குடிச்சிட்டு மறுபடியும் ஊர் கதை பேசிட்டு, காய் கறி,கீரை ஏதாவது வாங்கிட்டு வீட்டுக்கு போயிடறது.

எதுக்குங்க வாக்கிங் போக சொல்லுறாங்க. கலோரி எரிக்க தானே?, இவங்க இப்படி நடக்கிறதால 50 கலோரி கூட எரிக்க மாட்டாங்க. ஆனா, அவங்க குடிக்கிற சூப் எப்படியும் 100 கலோரி மேல இருக்கும்.  இதுனால நீங்க 50கலோரி இன்னும் உடம்புல ஏத்திட்டு தான் போறீங்களே தவிர குறைக்கல. 

இது காலையில் வாக்கிங் செல்பவர்கள் ரௌடீன் என்றால், மாலையில் வாக்கிங் செல்பவர்கள் செய்வது இன்னும் ஜோக். காலையிலயாவது சூப் மட்டும் தான் ஆனா சாயங்காலம் பேல்பூரி, பாணி பூரி, சில்லி காளான், சில்லி சிக்கன், பிரைடு நூட்லஸ் என்று வித விதமாக வாங்கி சாப்பிடுகிறார்கள் எப்படியும் 300-500 கலோரி சாப்பாடு இவை எல்லாம் . எதுக்கு இவங்க எல்லாம் வாக்கிங் போகணும், அட்லீஸ்ட் வீட்டுல இருந்தாலும் இப்படி வாங்கி சாப்டுரதுல வர்ற கலோரீஸ் கம்மியாகும். 

இவங்க உண்மையில உடம்ப குறைக்கணும்னு வாக்கிங் வர்றாங்களா இல்ல, ஏதாவது வாங்கி சாப்பிடலாம்னு வர்றாங்கலன்னு தெரியல. இது எல்லாம் இரண்டு நாள் மதுரை தெப்பகுளத்தை சுற்றி வாக்கிங் போனதில் பார்த்தவை. உண்மையா வாக்கிங் போகணும்னு வர்றவங்க 100துல 1 அல்லது 2 பேரு மாதிரி தான் தோணுது. மத்த மக்கள் எல்லாம் நாங்களும் வாக்கிங் போவோம்ல! என்று பேருக்கு வாக்கிங் வருகிறார்கள்.நிறைய obese எனப்படும் குண்டான மக்களை பார்க்க முடிகிறது. 

இன்னொரு விஷயம் தப்படி தப்படிக்கு மருத்துவமனைகளையும் காண முடிகிறது. பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள் ஊர் எங்கும் நிறைந்து இருக்க, சிறிய சிறிய கிளினிக் க்குகளும் ஊர் எங்கும் நிரம்பி வழிகின்றன. கிளினிக்குகளில் எல்லாவற்றிற்கும் ஊசி போடுகிறார்கள். என்ன காரணம், என்ன நோய் என்று கேட்க முடிவதில்லை. கேட்டாலும் பதில் வருவதில்லை. மக்களும் அதான் ஊசி போட்டுடாங்கல்ல சரியா போயிடும் அப்படின்னு சொல்லிட்டு மக்களும் போயிடறாங்க. எல்லா வற்றுக்கும் நிறைய அண்டிபையடிக்ஸ் மருந்து ஊசி வழி செலுத்துகிறார்கள். சளி, காய்ச்சல், வயிற்று போக்கு, வாந்தி என்று அனைத்திற்கும் சர்வ லோக நிவாரணியாக இது செலுத்த படுகிறது. வைரசால் கூட வாந்தி வயிற்று போக்கு வரலாம் எதற்கு அண்டிபயாடிக் என்று யாருக்கும் தெரியவில்லை, தெரிந்தவர்கள் கேட்டாலும் பதில் இருக்காது. 

இது இப்படி இருக்க, வீடுகளில் மக்களே மருத்துவர்களாக மாறி விடுகிறார்கள். அதாவது, டாக்டர் உடம்புக்கு முடியல என்று சென்றால் அண்டி பயாடிக் 3-5 நாள்களுக்கு எழுதி கொடுத்தால், இவர்கள் முதல் ஒரு நாள் மட்டுமே மருந்து கொடுகிறார்கள். ஒரு நாள் போட்டவுடன் உடம்பு சரியானது போல இருந்தால் அடுத்த நாட்களுக்கு கொடுப்பது இல்லை. 

அண்டிபயாடிக் எடுத்து கொண்டால், வயிற்று போக்கு நிறைய மக்களுக்கு வரும், ஏனெனில் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியா களும் அண்டிபயாடிக் மருந்துகளால் சாகும் என்பதால் இது சகஜம். அதற்காகவே, ப்ரோபியாடிக் மாத்திரைகள் அல்லது வீட்டில் தோய்த்த தயிர் சாப்பிட சொல்லுவார்கள். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது என்பதால் வயிற்று போக்கு நிற்கும். ஆனால் நாம் ஊரு மூட நம்பிக்கை என்னவென்றால், உடம்புக்கு முடியாலய்னா தயிர் சாப்பிட மாட்டாங்க. தயிர் குளிர்ச்சி என்று ஒதுக்கி வைக்கிறார்கள். நாம் சொன்னாலும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பதில் வருகிறது.

அதே போல, இது சாப்பிட்டா சக்கரை நோய் வராது அல்லது குறையும் என்று யார் என்ன கொடுத்தாலும் சாபிடுகிறார்கள். இப்படி சாப்பிட்டுவிட்டு, உடல்பயிற்சி எதுவும் செய்யாமல் சக்கரை குறைய மாட்டேன்கிறது என்று புலம்பல் வேறு. 

உடல் பற்றிய விழிப்புணர்ச்சி, எப்படி நோய் வராமல் காப்பது அப்படியே நோய் வந்தாலும் எப்படி சமாளிப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. நோய் வந்து விட்டால் டாக்டர் இடம் ஓட வேண்டியது, அவர்கள் கொடுக்கும் மருந்துகளில் உடனே நோய் குணமாக வேண்டும், இல்லையெனில் அந்த டாக்டர் நல்ல டாக்டர் இல்லை. ஐயோ சாமி..முடியல....

எப்பொழுது மக்களுக்கு உடல் நிலை பற்றி நல்ல விழிப்புணர்ச்சி வருவதோ..இப்படியே சென்றால் திரும்பும் இடமெல்லாம் மருத்துவமனை மட்டுமே காட்சியளிக்கும்.

நன்றி.

Friday, June 12, 2015

இசை கேட்பதால் ஏற்படும் நன்மையையும் தீமையும்பலர் இதனை அனுபவித்து இருப்பார்கள். ஏதாவது ஒரு பாட்டு நம் காதில் கேட்கும் போது உடனே மனசு சந்தோசம் ஆகும், அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலன்,காதலி, கணவன், மனைவி  ஞாபகம் வரும். அல்லது நீங்கள் அவர்களுடன் கேட்டு இருப்பீர்கள் அந்த நினைவுகள் வரும். அதுவும் நீங்கள் இளவயதில் கேட்ட பாட்டுக்கள் எத்தனை வயதானாலும் இன்னும் மனதில் நிற்கும். மனம் குதூகலமடையும். 

அதே போல இன்னும் சில பாட்டுக்கள் நீங்கள் கேட்டீர்கள் என்றால் எங்கிருந்தோ ஒரு சோகம் வந்து ஒட்டி கொள்ளும். அது பிரிந்தவர்களை/ இறந்தவர்களை ஞாபகப்படுத்தலாம். அல்லது உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் வாழ்கையில் தோல்வி மேல் தோல்வி சந்திக்கும் போது, ஒரு சில மனசுக்கு உற்சாகம் கொடுக்கும், தன்னம்பிக்கை கொடுக்கும் பாட்டுக்கள் கேட்போம். அப்பொழுது மனது ஆறுதல் அடையும். 

இன்னும் சிலர் தூங்க, மனம் அமைதியடைய என்று இசை கேட்பார்கள். உதாரணமாக என் ஆபிசில் என் டீம் ரூமில் இப்பொழுதெல்லாம் Spotify மூலம் நிறைய இசை ஒலிபரப்புகிறார்கள். பெரும்பாலும் instrumental என்பதால் நிறைய concentrate செய்ய முடிகிறது. அதில் சில நாட்களாக பண்டிட் ரவி ஷங்கர் அவர்களின் சித்தார் இசை கேட்க முடிகிறது. நல்ல relaxing ஆக இருக்கிறது. அதே போல இன்னும்  சில டீம் ரூம்களில் சிலர் ராக் அண்ட் ரோல் மியூசிக் ஒலிபரப்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு டீமும் Agile எனப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை முடிக்கும் பரபரப்பான டென்ஷன் ஆன சூழலில் வேலை பார்ப்பதால் இது போன்று relaxing மியூசிக் கேட்கிறார்கள். 

இப்படி இசை நம் வாழ்கையில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. இசைக்கும் உடல் நலத்திற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று தேடி பார்த்ததில் சிக்கியவை இங்கே.

positive மனநிலையில் மட்டும் அல்ல, நெகடிவ் மன நிலையான, break up, divorce, death போன்ற நேரங்களில் மக்கள் சோக பாடல்களையும். கோபம் ஆத்திரம் வரும் நேரங்களில் heavy metal, ராக் அண்ட் ரோல் போன்ற இசைகளையும். அமைதியான, ஆனந்தமான நேரங்களில் மென்மையான Jazz அல்லது கிளாசிகல் போன்ற இசைகளையும் உலகம் முழுக்க கேட்கிறார்கள். 

இப்பொழுது மியூசிக்  தெரபி என்பது பிரபலமாகி கொண்டு வருகிறது. நோயாளிகளின்  மன நிலை எப்படி மாற்றுவது அல்லது எப்படி அவர்களை மகிழ்ச்சி கொள்ள செய்வது அதன் மூலம் உடல் நிலையை முன்னேற்றுவது அல்லது அவர்களின் லட்சியங்களை அடைய வைப்பது என்று செய்கிறார்கள். 

நியூயார்கில் இருக்கும் Eleven-Eleven Wellness சென்டர் நடத்தும் Integrative அண்ட் Functional மருத்துவர்  Dr.Frank Lipman அவர்களின் கருத்து படி "ஒவ்வொரு நாளும் நாம் மனதிற்கு மியூசிக் டைம் ஒவுட்கொடுத்தால், நம் இதயத்துடிப்பு கட்டுக்குள் வந்து, மூளை சமநிலை அடைந்து சுவாசம் சீராகும்" என்று கூறுகிறார்.

நம்மூரில் நிறைய meditation சென்ட்டர்களில் எல்லாம் "ஓம்" மந்திரம் chant செய்ய சொல்லுவார்கள். இப்படி செய்வது Vagus Nerve Stimulation(1), என்னும் நரம்பு மண்டலத்தை தூண்டி  மன முறிவுக்கு அல்லது  மன நலம் பிறழ்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

இவை எல்லாம் positive side of listening to  music என்றால். இதன் அடுத்த பக்கமும் இருக்கிறது. அது இப்போது இருக்கும் இளைய தலைமுறை  millennials மக்களிடம் நான் கண்டது. எந்த பையன் அல்லது பெண்ணிடமும் காதில் எப்பொழுதும் ஒரு ear போன் இருக்கும். அதில் ஏதாவது ஒரு மியூசிக் அலறி கொண்டு இருக்கும். எல்லா நேரங்களிலும் மியூசிக் கேட்பதால் என்ன என்ன விளைவுகள் வரும், மூளையை எப்படி பாதிக்கும் என்று ஆராய்ச்சி செய்து இருகிறார்கள் (2).  இசைக்கு அடிமையான இவர்கள் emotional ஆக இருக்கிறார்கள் என்று கணித்து இருகிறார்கள். எப்பொழுதும் இசை கேட்பதால் காது கேட்காமல் போகும் அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கணித்து இருக்கிறார்கள்.

என்னை பொருத்தவரை எந்த இசையாயினும் சரி, அது இந்தியன், வெஸ்டேர்ன் எதுவாயினும், அந்த சூழலுக்கு ஏற்றார்போல நம் மனதிற்கு இதம் தர வேண்டும். அது சோகமான சூழலாயினும் சந்தோசமான சூழலாயினும் சரி.  அதுவே மனதிற்கு நல்ல மருந்தாகும், ஆனால் எதுவும் ஓவர்டோஸ் ஆக கூடாது. எதுவாயினும் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் அமுதும் நஞ்சு.

நன்றி.

References 
(1) Neurohemodynamic correlates of ‘OM’ chanting: A pilot functional magnetic resonance imaging study: Int J Yoga. 2011 Jan-Jun; 4(1): 3–6.
(2) http://archpedi.jamanetwork.com/article.aspx?articleid=379041


டிஸ்கி 

இந்தியா பயணத்திற்கு முன்பு கடைசி பதிவு.  திரும்பியவுடன் நேரம் அமைந்தால் மீண்டும் பதிவெழுத முயற்சிக்கிறேன்.


Tuesday, June 9, 2015

ஏன் டையட் மட்டுமே வேலை செய்வதில்லை?


வெயிட் கூடி விட்டது எப்படி குறைப்பது என்று நினைத்தாலே பலர் சென்று விழுவது டையட் தான். நோ-கார்ப் டையட், லோ கலோரி டையட், Nutrisystem, Weight watchers diet, Cabbage soup diet, Watermelon diet, Juice diet,.......என்று இருக்கும் டையட் லிஸ்ட் விண்ணை தாண்டும். இந்த டையட் நல்லது, ஒரு மாதத்திற்குள் 10 பவுண்ட் குறைந்து விடும், 20 பவுண்ட் குறைந்து விடும்..என்று இவர்கள் கொடுக்கும் சேல்ஸ் பிட்ச் ஐயோ என்று இருக்கும்.

என் உடன் வேலை பார்த்த பெண் அவள், 20 பதுகளில் இருந்த அவள் நல்ல உடல் பருமன் பிரச்சனையால் எந்த பாய் ப்ரெண்ட்ம் கிடைக்க வில்லை என்று ஒரே கவலை அவளுக்கு. உலகில் இருக்கும் எல்லா டையட் ம் முயன்று பார்த்து விட்டால். முடிவாக லிப்போ சக்சன் எனப்படும் வயிற்று கொழுப்பை சர்ஜெரி மூலம் குறைத்து வயிற்று பகுதி ஸ்லிம் தோற்றம் வந்து விட்டது. இது ஒரு எக்ஸ்ட்ரீம் கேஸ் என்றாலும் எப்படி அதிக வெயிட் என்பது ஒருவரின் மன நிலையை, வாழ்கையை தன நம்பிக்கையை குறைக்கிறது என்று அவள் மூலம் நான் கண்டேன்.

 பலருக்கு பல டையட் முயற்சி செய்தும் எடை குறைவதில்லை. ஏனெனில் டையட் என்ற பெயரில் ஒரு வகை உணவுப்பொருள்களை ஒதுக்குவது, அல்லது கிராஷ் டையட் என்ற பெயரில் வெறும் பழங்களை, காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது என்று செய்து கொண்டு இருப்பார்கள். இப்படி பட்ட டையட் எல்லாம் சிறிது காலத்திற்கு வேண்டுமானால் உதவலாம். இப்படி கிராஷ் டையட் மூலம் குறையும் எடை பெரும்பாலும் வாட்டர் வெயிட் தான். கொழுப்பு குறைவதில்லை. ஏனெனில் உணவுகளை சாப்பிடாமல் தவிர்பதால் ஒரு மாத காலத்திற்கு பிறகு அந்த உணவுகளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வெறி அல்லது craving வந்து விடும், பின்னர் உணவை வளைத்து கட்டி சாப்பிட்டு குறைந்த எடை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து விடுவார்கள்.

இன்னும் சிலர் டையட் என்ற பெயரில் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிட மாட்டார்கள் அல்லது காலை உணவை தவிர்த்து இருப்பார்கள். இப்படி செய்வதால் அடுத்த வேலை சாப்பிடும் போது அதிக கலோரி உணவுகளை அதிகம் சாப்பிட தோன்றும் சாப்பிட்டு விடுவார்கள்.

இன்னும் சிலர் டையட் என்று சொல்லி சோடா குடிப்பார்கள் அதுவும் டையட் கோக், அல்லது டையட் பெப்சி என்று குடிப்பார்கள், அதில் கலோரி இல்லை என்பார்கள் ஆனால் அதில் இருக்கும் சோடியம் மற்றும் செயற்கை ச்வீட்னெர் எப்படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று யாரும் அறிவதில்லை.

இன்னும் சிலர் packed food சாப்பிடுவார்கள், அதிக சோடியம் நிறைந்த, அதிக கொழுப்பு நிறைந்த  குறைந்த சத்துகள் உள்ள இந்த வகை உணவுகள் உடலில் அதிக வாட்டர் ரிடென்சன் செய்யும் என்று அவர்கள் அறிவதில்லை.

சிலர் தண்ணீர் சுத்தமாக குடிப்பதில்லை. அல்லது நிறைய டீ அல்லது காப்பி குடிப்பது. டீ காபியில் இருக்கும் கோபீன் போன்றவை உடலில் கால்சியம் தனிமம்  உரிஞ்சபடுவதை குறைக்கும். அதனால் எலும்பு வலுவடையாது.

இன்னும் சிலர் டையடிங் இருந்தால் போதும் என்று உடல் பயிற்சி செய்வதில்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் எவ்வளவு எடை இருக்குறீர்கள், அல்லது BMI எவ்வளவு என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்திற்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும், எவ்வளவு நீங்கள் இருக்கிறீர்கள் எவ்வளவு குறைக்க விழைகிறீர்கள் என்று குறித்து கொள்ளுங்கள். பின்னர் என்ன என்ன சாப்பிடுகிறீர்கள் என்று log வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் என்றால் fitness  pal என்பது போன்ற நிறைய ஆப்கள் இருக்கின்றன. அதனை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.  உங்கள் எடை goal என்ன என்று enter செய்து விட்டால் எவ்வளவு கலோரி நீங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லும். என்ன சாப்பிடீர்கள் என்று நீங்கள் log செய்தால் எவ்வளவு கலோரி நீங்கள் எடுத்து கொண்டீர்கள் என்று  தெரியும். ஒரு சில ஆப்கள் GPS வைத்து நீங்கள் எவ்வளவு தூரம் நடக்குரீர்கள் என்று monitor செய்யும் அல்லது எவ்வளவு உடல்பயிற்சி செய்ய வேண்டும் அது எவ்வளவு கலோரி எரிக்கும் என்றெல்லாம் சொல்லும். அதற்கேற்றார் போல நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை குறைத்தோ அல்லது உடல் பயிற்சியை அதிகரித்தோ மாற்றி அமைத்து கொள்ளலாம்.

ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். எடை குறைப்பது எப்போது லைப் ஸ்டைல் மாற்றமாக இருக்கிறதோ அப்பொழுது தான் உங்களால் எடை குறைப்பை maintain செய்ய முடியும். சுய கட்டுப்பாடு மிக மிக முக்கியம். ஒரு நாள் செய்து விட்டு முடியும் காரியம் இல்லை. consistent ஆக  தொடர வேண்டும். ஒரு சில நேரங்களில் சிறு சிறு மாற்றங்கள் கூட நமக்கு நல்ல விளைவை தரும். உதாரணமாக, காரை தூரத்தில் நிறுத்தி விட்டு நடந்து வருவது. இல்லை லிப்ட்க்கு பதில் படிகளில் ஏறுவது அல்லது பப்ளிக் transport உபயோகிப்பது, தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு சிறு நடை போடுவது  போன்ற சிறு சிறு விசயங்கள்.  இல்லத்தரசிகள் துணிகளை கையால் துவைப்பது, வீடு கூட்டுவது, துடைப்பது, தோட்ட வேலை செய்வது போன்ற விடயங்களை machine உபயோகிக்காமல் செய்வது நிறைய கலோரி எரிக்க உதவும். வசதிகள் பெருக பெருக நாம் சோம்பேறியாகி உடல் பருமன் அதிகரித்து உடல் நலம் குன்றி போகிறோம். உடல் எடை கூட கூட டியாபெடிக்ஸ், BP, இதய நோய்கள் அணிவகுத்து வந்து விடுகின்றன.

சாப்பாடு கண்ட்ரோல் உடல் பயிற்சி இரண்டும் செய்தால் கட்டாயம் எடை குறைக்கலாம் நோயில்லாமலும் வாழலாம்.

நன்றி.


Sunday, June 7, 2015

வேலையில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது எப்படி?

வேலை பார்க்கும் பெரும்பான்மை மக்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். மாங்கு மாங்கு என்று வேலை பார்த்து இருப்போம், அந்த ப்ராஜெக்ட் கான்செல் ஆகி இருக்கும். நீங்கள் உயிரை கொடுத்து வேலை பார்த்து இருப்பீர்கள், ஆனால் ரெவ்யுவில் உங்களை பற்றி தாறுமாறாக உங்கள் மேனேஜர் திட்டுவார். என்னய்யா/என்னம்மா வேலை பார்க்குற, ஒரு போகஸ் இல்ல என்பது போன்று நிறைய வாங்கி கட்டி கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமோசன் வேறு சிலருக்கு கிடைக்கும். உங்களை பற்றி உங்கள் நண்பர்களே அல்லது நண்பர்களாக நினைத்தவர்களே உங்கள் மேனேஜர் இடம் போட்டு கொடுத்து ப்ரோமோசன் வாங்கி இருப்பார்கள். எதிர் பார்க்காமல் உங்கள் வேலை போய் இருக்கும், உங்களின் இந்த வேலையை நம்பி வீட்டு  லோன், கார் லோன் என்று பலதும் இருக்கும்..இப்படி சொல்லி கொண்டே போகலாம். 

இதே நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தால் என்ன செய்வோம், தாறுமாறாக சத்தம் போடுவோம், அழுது ஆர்பாட்டம் செய்வோம், சண்டை போடுவோம், எல்லாரையும் கை காட்டி உன்னால் தான் நடந்தது என்று பெரிய டிராமா செய்து விடுவோம். ஆனால் இவை எல்லாம் ஆபிசில் நடந்து இருக்கிறது. அங்கு எந்த வித உணர்சிகளையும் நீங்கள் காட்ட முடியாது. அப்படி ஏதாவது காட்டினாலும் உங்களை வீக், எந்த சூழலையும் ஸ்ட்ரெஸ் ஐயும் சமாளிக்க தெரியாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

இப்படி எல்லா நெகடிவ் விசயங்களும் நிகழ்ந்தாலும் எப்படி உணர்ச்சி வசப்படாமால் நிதானமாக இருப்பது. சில டிப்ஸ் இங்கே. பொதுவாக நான்கு வகை எதிர்மறை உணர்ச்சிகள்  நமக்கு நேரலாம்.

 1. நம்பிக்கை இழத்தல் 
 2. கவலை கொள்ளுதல்
 3. கோவப்படுதல் 
 4. வேலையில் வெறுப்பு கொள்ளுதல் 

1. நம்பிக்கை இழத்தல் 

இந்த வகை உணர்ச்சி பெரும்பாலும், நாம் முன்னேற முடியாமல் போகும்போது நிகழலாம். "Feeling stuck" அல்லது நமக்கு future இல்லை இங்கே,  நம்மால் இனிமே சாதிக்க முடியுமா?, இங்கேயே இருந்து விடுவோமா? என்று மனம் அலைபாயும் போது நம் மீதே நம்பிக்கை குறையலாம். எப்படி இந்த நிலையை சமாளிப்பது.

 • Stop and  evaluate : மனதளவில் இந்த நிலைலையை பற்றி BP ஏறும் அளவு யோசிக்காமல் நிறுத்துங்கள். ஒரு மூன்றாவது மனிதனாக அந்த சொல் நிலையை பாருங்கள். ஏன் நமக்கு ப்ரோமோசன் கிடைக்க வில்லை, நமக்கு திறன் இல்லையா?, இல்லை நம்முடைய திறமை எங்கே குறைகிறது. எப்படி அதனை வளர்த்து கொள்ளுவது என்று யோசியுங்கள். இல்லை ஆபீஸ் பொலிடிக்ஸ் தான் காரணம் என்றால், எப்படி அதனை சமாளிப்பது, யாரை சமாளிப்பது என்று மூன்றாவது மனிதனாக யோசியுங்கள்.
 • Find Something Positive about the situation: இந்த நிலை நாள் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது உண்டு. வாழ்கையில் பல விஷயங்கள் நமக்கு மிக மிக கசப்பான அனுபவங்கள் தரும். ஆயினும், நான் அந்த விஷயங்கள் நம்மை எப்படி மாற்றி இருக்கின்றன, என்ன கற்று கொண்டு இருக்கின்றன என்று பார்ப்பேன். நிறைய விஷயங்களில் சிறிதேனும் நல்ல பாடம் இருக்கும், அதனை நாம் பார்க்க தவறி இருப்போம். அந்த positive விசயங்களை கண்டறியுங்கள்.
 • Remember last time: இதே போன்ற ஒரு நிலை முன்பும் நேர்ந்து இருக்கலாம், அப்பொழுது அதனை எப்படி சமாளித்தீர்கள், எப்படி அதிலிருந்து வெளியே வந்தீர்கள் என்று யோசியுங்கள். ஒரு முறை வெளியே வந்து விட்டோம், இப்பொழுது வருவதற்கு என்ன? என்று நமக்கு தோன்றி விடும்.
2.  கவலை கொள்ளுதல்

நிறைய பேருக்கு  வேலை போகும் போது இந்த கவலை வந்து விடும். எதிர்காலத்தை பற்றிய பயம் வரும். இந்த நிலையை கிள்ளி எறியாவிட்டால் உங்கள் உடல் நிலை பாதிக்கப்படும். எப்படி சமாளிப்பது.

 • உங்களுடன் வேலை பார்பவருக்கு வேலை போய்  விட்டது என்று அங்கும் இங்கும் புரண் பேசுகிறார்களா?, அப்படி எனில் அந்த இடத்துக்கு செல்லாதீர்கள். இப்படி விஷயங்கள் கேட்க கேட்க உங்களுக்கு BP எகிற தான் செய்யுமே தவிர அந்த சூழ்நிலையை சமாளிக்க உதவாது.
 • அப்படியும் காதில் விழுகிறது எனில் மூச்சு பயிற்சி செய்யுங்கள். எப்பொழுதும், இது இல்லாவிட்டால் வேறொன்று என்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். எந்த வேலையும் நிரந்தரம் இல்லை, இதனை விட்டால் வேறொன்று இருக்கும் என்று நம்புங்கள்.
 • கவலைகளை எழுதுங்கள், worry log, எப்படி எழுதும் பொது, மன பாரம் குறையும், அதனை திரும்ப படிக்கும் பொது ஒரு தெளிவு, பாதை காட்டாயம் தெரியும். நிலைமையை சமாளிக்க என்ன என்ன வழிகள் இருக்கின்றன என்றும் எழுதுங்கள். அதனை எப்படி செயல் படுத்ஹ்டுவது என்றும் எழுதுங்கள்.
 • Always think different: என்னுடைய பாலிசி இது. எப்பொழுதும் அடுத்தவர் அதிகம் செல்லாத, முயற்சி செய்யத விஷயத்தை செய்ய விழைவேன். உதாரணமாக வேளையில் பிரச்னை என்று தெரியும் பொது, வெரி வேலை ஏன் செய்ய கூடாது என்று யோசிப்பேன். அதனை செயல் படுத்த முயற்சிப்பேன். இது போன்று யோசிக்கும் போது, இந்த வேலை இல்லாட்டி ஆயிரம் வேலை என்று நம்பிக்கை பிறக்கும்.
3. கோவப்படுதல் 

"கோவம் பாவம் சண்டாளம்" என்று படித்து இருக்கிறேன். கோவப்படுவது போன்ற அதல பாதாளத்திற்க்கு எடுத்து செல்லும் ஒரு நெகடிவ் எண்ணம் இல்லாவே இல்லை. இது நம்மை ஈசி டார்கெட்ஆக்கி  விடும். அதாவது இவனை கோவப்பட வச்சிட்டா போதும், நாம் காரியத்தை சாதிச்சிடலாம்  என்று  நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை உபயோகிக்க கற்று கொள்வார்கள். யாருக்கும் உங்களை பிடிக்காது. இதனை எப்படி சமாளிப்பது.

 • உங்களுக்கு கோவம் வருவது போல நிகழ்சிகள் நடந்தால், என்ன செய்து கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தி விடுங்கள். கோவம் வரும் பொது செய்யும் எந்த காரியமும் நெகடிவ் ஆக தான் முடியும்.
 • உங்களை கோவப்பட்டு நீங்களே பார்ப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். எப்படி உங்கள் முகம் பாவனைகள் இருக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். 
 • எப்படி தாக்குதல்களை எதிர்ப்புகளை கோவப்படாமல் சமாளிப்பாது என்று மூன்றாவது மனிதனாக இருந்து யோசியுங்கள்.
 • முக்கியமாக கோவம் வரும் நேரம் அந்த இடத்தை விட்டு அல்லது அந்த சொல்லலை விட்டு மனதளவில் அல்லது முடிந்தால் இடம்பெயர்ந்து சென்று விடுவது நன்மை பயக்கும். ஏனெனில் கோவம் என்பது ஒரு இன்ஸ்டன்ட் ரியாக்சன் மட்டுமே, பத்து நிமிடம் அல்லது அரை மணிநேரம் கழித்து கட்டாயம் வேகம் குறைந்து விடும்.
4. வேலையில் வெறுப்பு கொள்ளுதல் 

உங்களுக்கு பிடிக்காத சில நபர்களுடன் வேலை செய்ய நேரும் பொது இது நேரலாம். ஒரு சிலர் இவனோட/இவளோட எல்லாம் வேலை செய்யிற நிலைமை இருக்கே என்று வெறுப்பு கொள்ளுவார்கள். எப்படி இதனை சமாளிப்பது.

 • Be Respectful: யாராக இருந்தாலும், மரியாதை கொடுங்கள்.அவருக்கும்,உங்களுக்கும்  பிரச்னை என்றால், முதலில் உங்களின் ஈகோ, பெருமை எல்லாவற்றியும் விட்டு விட்டு அவரை உங்கள் சமமாக நினையுங்கள். அவர் உங்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்றால் நாமும் அதே போல அவரை நடத்த வேண்டும் என்று இல்லை. 
 • Be assertive: நான் மேற்சொன்ன விசயங்களுக்காக அவர் நம்மை தவறாக நடத்தினால் நாம் செருப்பாகஇருக்க  வேண்டியது இல்லை. மாறாக, நேருக்கு நேர் கோவப்படாமல் ஆனால் கண்டிப்புடன் உங்களுக்கு அவர் நடந்து கொள்ளும் விதம் பிடிக்க வில்லை என்று சொல்லுங்கள். முடிந்தால் அவரிடம் நேரில் பேசுவதை தவிர்த்து, ஈமெயில் அல்லது லெட்டெர் என்று மட்டுமே தொடர்ப்பு வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் நிலையை நன்றாகவும் அதே சமயம் உங்களை தவறாக எண்ணுபவரை பற்றி அனைவருக்கும் வெளிச்சம் போட்டும் காட்டும்.
முடிவாக, இதனை போன்ற நெகடிவ் எண்ணங்கள் வரும் பொது முளையில் கிள்ள பாருங்கள். ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இந்த வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை. உலகம் மிக பெரியது. உங்கள் மேல் மட்டுமே நம்பிக்கை வையுங்கள். உலகை வெல்லலாம்.

டிஸ்கி 
இது IT தம்பதியினர் தற்கொலை செய்திக்கு பின்னர் வாசித்த விசயங்களை வைத்து எழுதியது.Saturday, June 6, 2015

தண்ணீர் பஞ்சமும், தண்ணீருக்காக மனைவிகளும்

சில நாட்களுக்கு முன், இந்தியாவில் நிலவும் அதீத வெப்பநிலையால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது என்று BBC செய்தி காண நேர்ந்தது. தலைநகர் டெல்லியில் தார் ரோடுகள் கூட உருகி ஓடும் நிலை என்று செய்தி காண நேர்ந்தது. பசுபிக் மகாசமுத்திரத்தில் நடக்கும் El Nino என்னும் சமுத்திர மேற்பரப்பு வெப்பமாதல்  என்னும் ஒரு நிலை ஆசிய முழுக்க  அதீத வெப்பநிலைக்கு காரணமாக சொல்ல படுகிறது. இதே, ஆப்ரிக்காவில் கனமழையும் வெள்ளபெருக்கும் தரும் என்றும் கணிக்கபடுகிறது. 
இந்தியாவின் வட மேற்கு மாநிலங்களில் மலை அளவு குறையும் என்றும் அதனால் பஞ்சம், விவசாயம் பாதிக்க படும் என்றும் நிறைய செய்திகள் வாசிக்க நேர்ந்தது. தண்ணீர் வேண்டி பூஜை, பலியிடுதல் போன்றவை நிகழ்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஆனால் இவை எல்லாவற்றியும் தூக்கி சாப்பிடும் ஒரு செய்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்காக பல மனைவிகள் மணக்கும் ஒரு கிராம பழக்க வழக்கத்தை "Water wives", என்று பல செய்தி தளங்களும் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

நேற்றே Reuters தளத்தில் இதனை வாசிக்க நேர்ந்தது. இன்று கிட்டத்தட்ட யாஹூ நியூஸ் , Guardian, NBC news என்று சகலமும் இதனை கொண்டு இந்தியாவின் "polygamy" என்று செய்தி வெளியிட்டு இருக்கின்றன. 

Photos from Danish Siddiqui / Reuters

அனைத்து தளங்களும்  Sakharam Bhagat  என்னும் ஒருவரின் புகைப்படத்தையும் அவரின் மூன்று மனைவிகள் Tuki, Sakhri மற்றும் Bhaagi  ஆகியோரின் படத்தையும் வெளியிட்டு இருந்தார்கள். இவர் வசிக்கும் Denganmal என்னும் ஒரு ஊரில், வீட்டு தேவைக்கு தூரத்தில் இருந்து தண்ணீர்  கொண்டு வர ஆட்கள் தேவை என்பதற்காக, அந்த ஊரில் இருக்கும், விதவைகள், வயதானவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என்று பலரையும் ஒருவர் திருமணம் செய்து ஒரே வீட்டில் வைத்து கொள்ளுவது என்பது சகஜமாம். இப்படி ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு வேலை என்று செய்து கொள்ளுகிறார்கள். அதில் முக்கியமான வேலை தண்ணீர் கொண்டு வருவது.Photos from Danish Siddiqui / Reuters


இதை எல்லாம் படிக்கும் போது, தண்ணீருக்காக ஒரு யுத்தம் சீக்கிரம் வந்துவிடும் போல என்று எண்ண தோன்றுகிறது.  சென்னை, மதுரையில் கூட 115 டிகிரி வெப்பம் நிலவுவதாகவும் அனைவரும் சொல்ல கேட்டேன்.  இன்னும் பத்து நாளில் இந்திய பயணம், எப்படி சமாளிக்க போகிறேன்  என்று தெரியவில்லை.நன்றி 
Friday, June 5, 2015

எத்தனை நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் ?

FB, ட்விட்டர், வாட்ஸ்ஆப் காலத்தில் இப்படி ஒரு கேள்வி முட்டாள் தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையாக உங்களை நீங்களே கேட்டு பாருங்கள். எத்தனை உண்மை நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள், அவர்களை நம்பி எதனையும் சொல்ல முடியும், நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் அவர்கள், நமக்கு அறிவுரைகள், திட்டுகள் சொல்லும் அளவு, எத்தனை பேர் இருக்கிறார்கள் உங்களுக்கு. யோசித்து வையுங்கள்.

நட்புகள் என்பது ஒவ்வொரு வயதிலும், கால கட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.  சிறு வயதில் நம்முடன் விளையாடிய நட்புகள், பள்ளி நட்புகள் எல்லாம் பள்ளி பருவம் வரை நம்முடன் இருந்து இருக்கலாம். பின்னர் வேறு வேறு திசையில் நிறைய பேர் பிரிந்து சென்று இருப்பார்கள். கல்லூரி நட்புகள் எல்லாம் மீண்டும் FB, வாட்ஸ் ஆப் மூலம் பலர் திரும்ப கிடைத்து இருக்கலாம். வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் நட்புகள்..மீட்டிங், பார்ட்டி, கெட் டோகேதேர் என்ற அளவில் மட்டுமே பெரும்பாலும் இருக்கும். வெளி நாடுகளில் வசிக்கும் போது பல நேரங்களில் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு மக்களுடன் பர்த்டே பார்ட்டி, கெட் டோகேதேர் மட்டுமே என்ற அளவில் இருக்கும். இப்படி எல்லாம் இருக்கும் நட்புகள் எல்லாம் பெஸ்ட் ப்ரெண்ட் என்று சொல்ல முடியுமா. இப்படி இருக்கும் மக்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் மனதை திறந்து பேச முடியும். நம்ப முடியும்.

சிறு வயது நட்புகள், பள்ளி, கல்லூரி நட்புகளுடன் நீங்கள் நெருக்கமாக இருந்து இருக்கலாம், அந்த நேரங்களில், மனம் விட்டு பேசி இருக்கலாம். ஆனால், அதே நட்புகளுடன் இப்போது அதே நெருக்கம் காட்ட முடியுமா. நம்ப முடியுமா?. வேறு வேறு திசைகள் சென்று, வேறு வேறு preference , வாழ்க்கை முறை என்று வளர்ந்து விட்ட நாம் திரும்ப நம் பழைய நண்பர்களை சந்திக்கும் பொது, பழைய நினவிகள் கிளரும், மனதுக்கு சந்தோசம் தரும். அந்த ஒரு சில மணி நேர சந்தோசம் மனதுக்கு இதம் தரும். அவ்வளவு தான். ஆனால், அதே நட்புகளுடன், உங்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனையை பேச முடியுமா, அறிவுரை கேட்க முடியுமா?. எதனை பேர் அதனை செவி சேர்த்து கேட்பார்கள், தேவை பட்டால் உதவுவார்கள்?

இப்படி, பல கேள்விகள்.சமீபத்தில் நான் வாசித்த எத்தனை நண்பர்கள் எனக்கு தேவை என்னும் டைம் பத்திரிக்கை  கட்டுரை என்னை இப்படி நிறைய கேள்விகள் கேட்க வைத்தது.

நிறைய கேள்விகளுக்கு பதில் என்னவென்றால், நிறைய மக்களுக்கு உண்மையில் நிறைய நண்பர்கள் இல்லை என்பதே?, நீங்கள் உங்கள் FB யில் ஆயிரகணக்கான நண்பர்கள் வைத்து இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இன்னும் நம்புவது தன்னுடைய குடும்ப மக்களை மட்டுமே. ஏனெனில் குடும்ப மக்கள் பெரும்பாலும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். உங்களை நட்டாற்றில் வீசி எறிந்து விட்டு தன் சுயநலம் மட்டுமே முக்கியம் என்று செல்ல மாட்டார்கள் என்று பலரும் நம்புவதால். இது உலகம் இருக்கும் ஒரு நிலை போல. ஆனால் நம்பிக்கையான நண்பர்கள்  இருப்பவர்களின்  உடல் நலமும், மன நலமும் நன்றாக இருக்கும் என்று அந்த கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.

என்னை பொருத்தவரை, நெருக்கமான நிறைய நண்பர்கள் உங்களுக்கு இருக்க வேண்டியதில்லை. ஒரு சிலர் இருந்தாலே போதும். அவர்களிடம் நீங்கள் தினமும் பேச வேண்டியது கூட இல்லை. ஆனாலும் எப்போது நீங்கள் பேசினாலும் அவர்கள் உங்களிடம் ஏன் என்னிடம் இதனை நாள் பேசவில்லை என்று கேட்க மாட்டார்கள், மாறாக எதோ இருக்கிறது என்று காது கொடுத்து கேட்பார்கள். உங்களை உற்சாக படுத்துவார்கள். நம்பிக்கை கொடுப்பார்கள்.என் சொந்த அனுபவத்தில், நிறைய false பிரெண்ட்ஸ் பார்த்து இருக்கிறேன். நன்றாக உங்களிடம் நடிப்பார்கள் அவர்கள், எதோ ஒன்றை எதிர்பார்த்தே அவர்களின் நட்பு இருக்கும் உங்களிடம். இன்னும் சிலரை நம்பி இருக்கிறேன், நன்றாக என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். ஆயினும், இன்றும் எந்த கஷ்டம் என்றாலும் நான் முதலில் டயல் செய்வது இரண்டு நம்பர்கள் மட்டுமே. பல மாதங்கள் நான் அவர்களிடம் பேசி இருக்க மாட்டேன், அவர்களும் என்னிடம் பேசி இருக்க மாட்டார்கள், ஆனாலும்  டயல் செய்தவுடன்..என்னமா விஷயம் என்று முதலில் கேட்பார்கள், மனதில் இருப்பதை கொட்டி விடுவேன், பின்னர் மன பாரம் இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கும். அதே போன்ற ஒன்றை அவர்களும் செய்வார்கள். எந்த கஷ்டம் என்றாலும் முதலில் அவர்கள் கேட்பது, "கையில் பணம் இருக்கிறதா" என்று தான். ஊர் விட்டு வெளி நாடுகளில் வந்து சொந்த பந்தங்கள்இல்லாமல் வாழும்  இந்த சூழலில் இப்படி கேட்பதற்கு ஒரு சிலர் இருக்கிறார்களே என்று நினைக்கும் போதே மனது சந்தோசமாக இருக்கும். இப்படி பட்ட  ஓரிரண்டு நட்புகள் போதும். நூற்றுகணக்கான false பிரெண்ட்ஸ் இருப்பதை விட ஓரிரண்டு உங்களை தெரிந்த, அறிந்த உண்மை நட்புகள் போதும்.  அதுவே சந்தோசம்.


டிஸ்கி

இது என் சொந்த கருத்து மட்டுமே. நிறைய நண்பர்கள் யாரும் வைத்து கொள்ள கூடாது என்று நான் இங்கு சொல்ல வரவில்லை. அப்படி நிறைய நம்பிக்கை நண்பர்கள் அமைந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நன்றி.Thursday, June 4, 2015

Kardashian குடும்பம் சொல்லி தரும் மார்க்கெட்டிங் தந்திரங்கள்

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றால் இதனை பார்த்து சந்தித்து இருப்பீர்கள். எந்த கடைக்கு, மாலுக்கு சென்று செக் அவுட் கௌண்டர் சென்று நின்றாலும் அந்து தொங்கும் magazine, புத்தகங்கள் எல்லாவற்றிலும் Kardashian குடும்பத்தில் ஏதாவது ஒருவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி/கிசு கிசு என்று இருக்கும்.  கம்ப்யூட்டர் திறந்து எந்த செய்தி என்று வாசித்தாலும், அல்லது யாகூ, கூகிள் போன்ற பல தளங்களில் செய்தி வாசித்தாலோ உடனே அந்த குடும்ப செய்தி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும். இது அமெரிக்க பத்திரிக்கைகள் என்று மட்டும் இல்லை. இந்திய ஊடகங்களும் இவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். அமெரிக்காவிலேயே நிறைய பேருக்கு இந்த குடும்பம் பற்றி செய்திகள் எங்கும் நிறைந்து இருப்பது கடுப்படிகிறது, "Kartrashian" என்று ஒரு சொல் கூட இப்போது பிரயோகத்தில் உண்டு. தேடி பார்த்தீர்கள் என்றால் "விஷயம் ஒன்றும் இல்லாமல் famous ஆக" இருப்பவர்களை குறிப்பதற்கு என்று இந்த பதம் இப்போது உபயோகிக்க படுகிறது.

யார் இந்த கர்டஷியன் குடும்பம். அப்படி என்ன talent இருக்கிறது இவர்களிடம்.ஏன் இப்படி எங்கும் நீக்கமற இவர்கள் நிறைந்து இருகிறார்கள், உண்மை சொன்னால் இவர்கள் எல்லாரும் "Famous for being famous"..என்று யோசித்தால், இவர்களின் ஸெல்ப் மார்க்கெட்டிங் தந்திரம், குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் ப்ரொமோட் செய்ய இவர்களின் அம்மா/மேனேஜர் க்ரிஷ் எடுத்து கொண்ட தந்திரங்கள் விளங்கும்.

முதலில் இந்த குடும்பம் வெளியில் தெரிய ஆரம்பித்தது, கிம் கர்டஷியனின் ஆபாச வீடியோ மூலம் தான். பின்னர், "Keeping up with Kardashians" என்னும் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம்  அவரின் அக்கா, தங்கைகள் என்று ஒவ்வொருவராக அறிமுகபடுத்த பட்டு, பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்று ஒரு ரியாலிட்டி ஷோ வரும் அளவு வளர்ந்து இருக்கிறார்கள்.

இந்த குடும்பம் சோசியல் மீடியாவை எப்படி உபயோகிப்பது, அதன் மூலம் எப்படி followers கொண்டு வருவது, பிசினஸ் பொருள்களை ப்ரொமோட் செய்வது என்று நன்கு அறிந்தவர்கள்.

கிம், மற்றும் அவரின் அக்கா தங்கைகள் அனைவரும் 36 லட்சம் ட்விட்டர் followers வைத்து இருக்கிறார்கள். தினமும் தன்னை பற்றி ஒரு படம் போடுவது, தன் ஆடை பற்றி, சென்ட் பற்றி, diet மாத்திரை, excercise பற்றி என்று ஏதாவது இருக்கும். இப்படி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு product பற்றியும் ஒரு ட்வீட் எழுத இவர்களுக்கு பல லட்சம் சம்பளம்.

இன்னொரு தந்திரம், இவர்கள் டார்கெட் செய்யும் ஆடியன்ஸ் எல்லா வயது பெண்களும்.
முக்கியமாக, கிம் டார்கெட் செய்வது, ஹை எண்டு பெண்களை, நிறைய பேஷன் விரும்பும் பெண்களை. அவரின் அக்கா டார்கெட் செய்வது, குழந்தை பெற்ற பெண்களை, அல்லது "Moms with kids", குழந்தைகளோடு இவர்களின் பிரச்சனைகள், சமாளிப்பது, அதோடு எப்படி career success அடைவது என்பது போன்ற ஆடியன்ஸ். இவரின் தங்கை டார்கெட் செய்வது, 20 களில் இருக்கும் பெண்கள் முக்கியமாக இவரை போலவே எடை அதிகமான பெண்கள். இவர் எடை குறைக்க செய்யும் செயல்கள் அதன் முன், பின் விளைவுகள் என்று எல்லாமே சோசியல்/ரியாலிட்டி  மீடியாவில் கவர் செய்ய படுகிறது.
அடுத்து கடைசி தங்கைகள் இருவரும் டீன் ஏஜ் பெண்கள் என்பதால் இவர்கள் டார்கெட் எல்லாமே டீன் ஏஜ் பெண்கள். இவர்கள் போடும் உடை, நைல் பாலிஷ், மேக் அப், சூ, hand bag, லிப் ஸ்டிக், மஸ்காரா...என்று அனைத்தும் பற்றி சோசியல் மீடியாவில் தங்கள் படங்களோடு  பகிர்கிறார்கள்.  இவரின் தம்பி டார்கெட் செய்வது, 20-30 வயதில் இருக்கும் ஆண்களை. இப்போது இவர்களின் தந்தை, transgender என்று ஆணிலிருந்து பெண்ணாகி விட்டார், அதனால் திருநங்கைகளையும் இந்த குடும்பம் விட்டு வைக்க போவதில்லை.

 இவர்கள் ஒவ்வொரு productம் endorse  செய்ய சொல்லி பல கம்பனிகள் க்யூவில் இருக்கிறார்கள்.  இப்படி பகிர்வதற்கு மட்டுமே இவர்கள் சம்பாதிக்கும் பணம் தலை சுற்ற வைக்கும்.

அடுத்து, இவர்கள் தாங்களாகவே சில productகளை தயார் செய்து சோசியல் மீடியா மூலம் ப்ரொமோட் செய்கிறார்கள். அதிலும் தந்திரமாக, முதல் நாள் ட்விட்டர், இரண்டாம் நாள் FB, மூன்றாம் நாள் Instagram ....என்று ஏதாவது ஒன்றில் ஒரு நாள். அடுத்து இவர்கள் போட்டி அறிவிகிறார்கள். இந்த பொருள்களை பற்றி உங்கள் கருத்து, புகை படம்..போடுங்கள் சிறந்த படத்திற்கு பரிசு..என்று அதிலும் இவர்கள் செய்யும் மார்க்கெட்டிங் அசத்தும் டெக்னிக்.

ஒரு படத்தில் சொல்வார்கள், "பிரபலம் நாலே ப்ரோப்ளேம் தான்" என்று.. ஆனால் கர்டஷியன் குடும்பத்தை பொருத்தவரை, பிரபலம் தான் இவர்களின் பலம், அதுவே இவர்களின் வாழ்க்கை, சம்பாத்தியம் என்று கோலோச்சுகிறார்கள்.  இவர்கள் அறிவில்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் என்று அனைவரும் சொல்லி விட்டு போகட்டும், ஆனால் என்னை பொருத்தவரை, மிக சிறந்த பிசினெஸ் women. எப்படி, மக்கள், சோசியல் மீடியா உபயோகித்து சம்பாதிப்பது என்று கை தேர்ந்தவர்கள்.இந்த அறிவு இல்லை என்றால் "15 min fame" மக்கள் பலர் போல இந்நேரம் காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க இவர்களை பற்றி தெரிந்து இருக்கும் அளவு இவர்களின் மார்க்கெட்டிங் தந்திரம் இருக்கிறது.


நன்றி.

Wednesday, June 3, 2015

நாம் செய்யும் முட்டாள் தனமான செய்கைகள்

நம் வாழ்கையில் பலருக்கு இது நடந்து இருக்கும். ஏதோ ஒரு செய்கை செய்து இருப்போம், பயங்கர முட்டாள் தனமான அல்லது வெறுக்கத்தக்க செய்கையாக இருக்கும். அதனை நினைத்து பார்த்தாலே, மனது கொதிக்கும்.. ஏன் இப்படி ஒரு செய்கை செய்தேன், என்ன தேவை எனக்கு வந்தது.. என்று நம் மேல் கோவம் கோவமாக வரும். ஆனால் அந்த காரியம் செய்த போது தப்பாகவே தெரிந்து இருக்காது. எல்லாமே சரியாக இருப்பது போல தோன்றி இருக்கும்.பின்னர் அதனை பற்றி நினைப்பு வரும் போது எல்லாம் கோவம் வரும். இது போன்ற முட்டாள் தனமான செய்கைகள் செய்வதை தடுப்பது என்பது இயலாது. ஆனால் திரும்ப எப்படி செய்யாமல் தவிர்ப்பது என்பது பற்றி நான் வாசித்த Dale Carnegie 's , "How to stop worrying and start living"  புத்தகத்தில் இருந்து சில வரிகள் இங்கே.

என்னிடம் எப்பொழுதும் ஒரு பிரைவேட் பைல் காபினெட் உண்டு. அதில் "FTD" என்று ஒரு folder இருக்கும். அது "Fool Things I Have Done". பல நேரங்களில் வேலை சம்பந்தமான நான் எடுத்த தப்பான முடிவுகள் அல்லது மீடிங்க்கில் நான் பேசிய/சொதப்பிய விஷயங்கள் அல்லது முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல் விட்டவை என்று பல விஷயங்கள் அதில் இருக்கும்.அ தில் நான் செய்த முட்டாள் தனமான காரியங்கள் இருக்கும். அதில் என்னை திட்டி எழுதிய என்னை பற்றிய விமர்சனங்கள் இருக்கும்.

என்னுடைய பெர்சனல் FTD  போல்டர்  ம் உண்டு , அதில் பெர்சனல் தவறுகளும், முட்டாள் தனமான காரியங்களும்  சில நேரங்களில் எழுத பட்டு இருக்கும் என்றாலும் இது பிரைவேட் போல்டர் என்பதால் யாருக்கும் பார்க்க உரிமை இல்லை.

ஒவ்வொரு நாளும் அல்லது ஒரு வாரத்தில் ஒரு மணி நேரமும் அந்த நாள் முழுதும் அல்லது அந்த வாரம் முழுதும் நான் சொதப்பிய/செய்யாமல் விட்ட/முட்டாள் தனமான விஷயங்கள் , அந்த விஷயங்கள் பற்றிய என்னுடைய கமெண்ட்ஸ் எழுதப்பட்டு இருக்கும்.

இப்படி எழுதி விடுவதால் ஒரு advantage, மனதில் இருக்கும் நம்மை பற்றிய விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் நம்மை நாமே திட்டி எழுதி வைத்து விடுவதால் மன பாரம் குறையும், அடுத்து அதனை திரும்பி பார்க்கும் போது திரும்ப அதே தவறை செய்யாமல் தடுக்கும்.

ரிலாக்ஸ் ஆன சமயத்தில் FTD இல் இருந்து மாதத்திற்கு ஒரு முறை எடுத்து படித்தால், எவ்வளவு கஷ்டமான காரியத்தை எப்படி சமாளித்து இருக்கிறோம், அல்லது எப்படி வெளி வந்து இருக்கிறோம் என்று தோன்றும். நம் மீதே ஒரு நம்பிக்கை தோன்றும்.

பெரும்பாலான நம் குணமே, நாம் செய்த தவறுகளுக்கும் பிறிதொருவர் மீது பழி போடுவது. எல்லாத்துக்கும் அவர்/அவள் தான் காரணம் என்று கை காட்டி விடுவது. இது, நம் மனதை திசை திருப்பும் / ஏமாற்றும் செயல் தானே தவிர உண்மை அல்ல. எப்பொழுது, உங்களை நீங்களே திட்ட/விமர்சிக்க முடிகிறதோ, விமர்சனங்களை ஏற்க முடிகிறதோ அப்பொழுதே நீங்கள் எந்த எதிர்ப்பையும்/விமர்சனத்தையும் ஏற்க தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம். அது வேலை பிரச்சனையாக இருந்தாலும் சரி, பர்சனல் விசயமாக இருந்தாலும் சரி. எப்பொழுது உங்களை நீங்களே சந்திக்க தயாராக இருகிரீர்களோ அப்பொழுதே அனைவரையும் சந்திக்க முடியும், நிமிர்ந்து நிற்க முடியும். உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள், உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேளுங்கள்.

தவறு செய்யாத மனிதன் இல்லவே இல்லை. ஒரு முறை கீழே விழுந்து அடி பட்டால் தான், அடுத்து கீழே விழுந்தால் அடி படும் என்று மூளைக்கு எட்டி, அடி எடுத்து வைக்கும் பொது கவனமாக வைக்க தூண்டும்.  புதிதாத தொழில் தொடங்குபவர்களுக்கும் இதை தான் அறிவுரையாக சொல்லுகிறார்கள். உண்மையில் நிறைய தடவை தவறு செய்தவன் கீழே விழுந்தவனால் தான் நிலையாக நிற்க முடியும்.நன்றி.Monday, June 1, 2015

தைராய்டும், ஐயோடின் குறைபாடும், பெண்களும்

சில நாட்களுக்கு முன்னர் என் அம்மாவுக்கு இருக்கும்  தைராய்டு குறைபாடு பற்றி எழுதி இருந்தேன். ஆரூர் பாஸ்கர் அவர்கள் சிறிது விளக்கமாக எழுதும் படி கேட்டு கொண்டதிற்கு இணங்க, எனக்கு தெரிந்த அளவு தைராய்டு பிரச்சனைகள் இங்கே.

கிட்டத்தட்ட 40 வயதை கடந்த பல பெண்களுக்கு இப்போது தைராய்டு பிரச்சனைகள் வருகின்றன. பலர் ஹைபோ /ஹைபர் தைரைடிசம் கொண்டு இருக்கிறார்கள். பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்செர் அளவுக்கு வந்து இருக்கிறது. தைராய்டு என்பது என்ன, என்ன செய்யும் நமக்கு என்பது பற்றிய சிறு விளக்கம் இங்கே.நம் கழுத்தை  சுற்றி, உணவுக்குழல் மற்றும் பேச்சு குழலை ஒட்டி butterfly வடிவம் கொண்டது தான் தைராய்ட்.

தைராய்ட் என்றால் என்ன?, எதற்கு உதவுகிறது ?

தைரோய்ட் நம் உடலில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். உடல் நிலையை சீராக்கும் ஹார்மோன்களை சுரக்க உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் உடலின் பல பகுதிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர உதவு கின்றன. உங்கள் உடலின் உணவு செரித்தலை கண்ட்ரோல் செய்வது, எனெர்ஜி எப்படி கன்ட்ரோல் செய்வது. என்று உங்கள் உடலின் metabolism அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது தைரோய்ட் ஹார்மோன் ஆகும்.

தைராய்டு ஹார்மோன் குறைந்தாலோ அதிகமானாலோ என்னவாகும் ?

உங்கள் உடலில் தைரோய்ட் ஹார்மோன் அளவு குறைந்தால் Hypothyroidism என்று அழைக்கபடுகிறது.  கை கால்கள் வெலவெலத்து போகுதல், கைகால்கள் குளிர் எடுத்தல் அல்லது சில்லிட்டது போன்ற நிலை என்று இருக்கும். முடி கொட்டுதல், irregular periods..என்று சில அறிகுறிகள்.

தைரோய்ட் ஹார்மோன், நிறைய இருந்தாலோ hyperthyroidism என்று அழைக்க படுகிறது.  எப்பொழுதும் பதட்டமான, இதயதுடிப்பு  அதிகமாகுதல், தூக்கமின்மை, சில நேரங்களில் வயிற்று போக்கு..என்று சில அறிகுறிகள் தருகிறது.

தைராய்டு நோய்கள் 

Graves' diseases, Thyroiditis, Tyroid nodule போன்றவை ஹைபர் தைராய்டு இருப்பதால் உண்டாகும் நோய்கள்.

Hashimoto disease, fertility issues, hair loss, weight gain போன்ற சில அறியப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக மிடில் வயது பெண்கள் இந்த நோய்களுக்கு ஆளாகின்றனர்.

தைராய்ட் அளவு பெரியதாகுதல் Goiter என்று அழைக்கபடுகிறது.

பின்னர், தைரோய்ட் கான்செர்.தைரோய்ட் கான்செர் தற்போது மிக அதிகமாக அறியப்படுகிறது. நிறைய பெண்களுக்கு வருகிறது.
RET என்னும் "ret proto-oncogene"  என்னும் ஜீனில் ஏற்படும்  DNA மாற்றங்கள் (mutations) முக்கியகாரணமாக அறியபட்டலும். இன்னும் அறியபடாத சில பல காரணங்களும் இருக்கின்றன.

iodine குறைவாக அல்லது அதிகமாக சேர்த்து கொள்ளுவது  நிறைய தைராய்டு நோய்களுடன் தொடர்பு படுத்த படுகிறது. Goiter முதல் தைராய்டு கான்செர் வரை பலவற்றுக்கு காரணமாக iodine காரணமாக  இருக்கிறது.

தைராய்டு குறைபாட்டை தவிர்ப்பது எப்படி ?

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது, தைராய்டு சுரப்பி அளவை கண்காணிப்பது, மற்றும் தக்க மருத்துவம் பார்த்து கொள்ளுவது.


குணப்படுத்தும் வழிகள் 

ஹைபர் தைரடிசம் நோய்க்கு, Thyroid ஹார்மோன் replacement மாத்திரைகள் அல்லது தெரபி வாழ்நாள் முழுதும் எடுக்க வேண்டி வரும். ஒரு சில நேரங்களில் goiter அளவு வந்தால் ரேடியேசன் ஐயோடின் தெரபி கொடுப்பார்கள். தைராய்டு கான்செர் வந்து விட்டாலோ, எந்த நிலையில் கான்செர் இருக்கிறது, தைராய்டு தவிர  வெளியில் எங்கும் பரவி இருக்கிறதா?, என்றெல்லாம் பார்த்து, ரேடியோ ஐயோடின் தெரபி, அல்லது கீமோ தெரபி அல்லது சர்ஜெரி என்பதே வழி. நான் கேள்வி பட்டவரை  தைராய்டு கான்செர் முழுவதும் குனபடுத்த கூடிய ஒன்று. எவ்வளவு சீக்கிரம் பிரச்னை பற்றி அறிகிறோமோ அவ்வளவு சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பித்தால் முழுதும் குணப்படுத்த  முடியும்.


டிஸ்கி
இது நான் படித்ததை, என் அம்மாவுக்கு நேர்ந்த அனுபவத்தை  வைத்து எழுதப்பட்டது மட்டுமே..மெடிக்கல் அட்வைஸ் அல்ல.  அம்மாவின் சர்ஜெரி முடிந்த பின்பு இன்னும் நிறைய அறிந்து இருப்பேன்,  திரும்பி வந்ததும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

நன்றி