Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Saturday, June 6, 2015

தண்ணீர் பஞ்சமும், தண்ணீருக்காக மனைவிகளும்

சில நாட்களுக்கு முன், இந்தியாவில் நிலவும் அதீத வெப்பநிலையால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது என்று BBC செய்தி காண நேர்ந்தது. தலைநகர் டெல்லியில் தார் ரோடுகள் கூட உருகி ஓடும் நிலை என்று செய்தி காண நேர்ந்தது. பசுபிக் மகாசமுத்திரத்தில் நடக்கும் El Nino என்னும் சமுத்திர மேற்பரப்பு வெப்பமாதல்  என்னும் ஒரு நிலை ஆசிய முழுக்க  அதீத வெப்பநிலைக்கு காரணமாக சொல்ல படுகிறது. இதே, ஆப்ரிக்காவில் கனமழையும் வெள்ளபெருக்கும் தரும் என்றும் கணிக்கபடுகிறது. 




இந்தியாவின் வட மேற்கு மாநிலங்களில் மலை அளவு குறையும் என்றும் அதனால் பஞ்சம், விவசாயம் பாதிக்க படும் என்றும் நிறைய செய்திகள் வாசிக்க நேர்ந்தது. தண்ணீர் வேண்டி பூஜை, பலியிடுதல் போன்றவை நிகழ்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன.




ஆனால் இவை எல்லாவற்றியும் தூக்கி சாப்பிடும் ஒரு செய்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்காக பல மனைவிகள் மணக்கும் ஒரு கிராம பழக்க வழக்கத்தை "Water wives", என்று பல செய்தி தளங்களும் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

நேற்றே Reuters தளத்தில் இதனை வாசிக்க நேர்ந்தது. இன்று கிட்டத்தட்ட யாஹூ நியூஸ் , Guardian, NBC news என்று சகலமும் இதனை கொண்டு இந்தியாவின் "polygamy" என்று செய்தி வெளியிட்டு இருக்கின்றன. 





Photos from Danish Siddiqui / Reuters

அனைத்து தளங்களும்  Sakharam Bhagat  என்னும் ஒருவரின் புகைப்படத்தையும் அவரின் மூன்று மனைவிகள் Tuki, Sakhri மற்றும் Bhaagi  ஆகியோரின் படத்தையும் வெளியிட்டு இருந்தார்கள். இவர் வசிக்கும் Denganmal என்னும் ஒரு ஊரில், வீட்டு தேவைக்கு தூரத்தில் இருந்து தண்ணீர்  கொண்டு வர ஆட்கள் தேவை என்பதற்காக, அந்த ஊரில் இருக்கும், விதவைகள், வயதானவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என்று பலரையும் ஒருவர் திருமணம் செய்து ஒரே வீட்டில் வைத்து கொள்ளுவது என்பது சகஜமாம். இப்படி ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு வேலை என்று செய்து கொள்ளுகிறார்கள். அதில் முக்கியமான வேலை தண்ணீர் கொண்டு வருவது.



Photos from Danish Siddiqui / Reuters


இதை எல்லாம் படிக்கும் போது, தண்ணீருக்காக ஒரு யுத்தம் சீக்கிரம் வந்துவிடும் போல என்று எண்ண தோன்றுகிறது.  சென்னை, மதுரையில் கூட 115 டிகிரி வெப்பம் நிலவுவதாகவும் அனைவரும் சொல்ல கேட்டேன்.  இன்னும் பத்து நாளில் இந்திய பயணம், எப்படி சமாளிக்க போகிறேன்  என்று தெரியவில்லை.



நன்றி 




Thursday, August 21, 2014

உங்கள் குழந்தைகள் அதிகம் டிவி பார்கிறார்களா!!



வீட்டு  வேலை அவசரமாக  முடிக்க வேண்டும், சமைக்கணும், பிள்ளைகள் வேற  ஸ்கூல் ல  இருந்து வந்துட்டாங்க, என்ன செய்ய , சரி டிவில கார்டூன் போட்டு விட்டுடலாம்.

பிள்ளைகள் ரொம்ப அடம் பிடிக்கிறாங்களா?, சரி கார்டூன் போட்டுடலாம், பேசாம இருப்பாங்க.

குழந்தைங்களுக்கு சாப்பாடு ஊட்டணுமா? சரி கார்டூன் போட்டுடலாம்.

நம்ம டிவில சீரியல் பாக்கணுமா?, சரி பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் ல கேம்ஸ் விளையாட கொடுத்துடலாம்.

....இப்படி கிட்ட தட்ட பெற்றோர்களுக்கு  ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால்  இப்போது பிள்ளைகளுக்கு நாம கொடுப்பது ஸ்க்ரீன் டைம்...அது டிவி, கம்ப்யூட்டர், ipad, வீடியோ கேம்ஸ்...etc

 கூட்டு குடித்தனம் சிதைந்து தனிக்குடித்தனம் என்றன பின், குழந்தைகளை பார்த்துக்கொள்ள என்று பெரியவர்களும் இல்லாத நிலையில், சிறு வயதில் இருந்து இப்படி எல்லாவற்றிற்கும் டிவி என்பது ஒரு குழந்தைகளை கவனிக்கும் ஒரு ஆயா போல ஆகிவிட்டது.

நாம் சுவிட்ச் ஆன் செய்ய மாட்டேன் என்று சொன்னாலும் தானாகவே டிவி சுவிட்ச் ஆன் செய்து தனக்கு வேண்டிய கார்டூன் சேனல் போட்டு கொள்ள 4-5 குழந்தைகள் கூட தற்போது  அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்படி எப்போதும் டிவி பார்க்கும் குழந்தைகள் தங்களை அந்த கார்டூன்  கேரக்டர்களை போலவே நினைத்து கொள்வது எல்லா வீடுகளிலும் தற்போது பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து சோட்டா பீம் பார்த்து விட்டு பெரியவர்களை போட்டு குத்து குத்து என்றும் குத்தும்  பிள்ளைகளை அதிகம் பார்த்து இருக்கிறேன். நான் நின்ஜா,  என்னால் மேலிருந்து கீழே குதிக்க முடியும் என்று குதித்து அடி வாங்கிய சிறுவர்களை காட்ட முடியும். பார்பி  பொம்மைகளையும், டிஸ்னி கார்டூன் களையும் பார்த்து விட்டு தன்னை இளவரசியாக நினைத்து அதற்கு ஏற்றார் போல நடை உடை பாவனைகள் மாற்றி கொள்ளும் அனேக பெண் குழந்தைகள் பார்த்து இருக்கிறேன்.

இப்படி தனக்கு முன்னால் விரியும் ஒரு உலகத்தில் வாழ ஆரம்பிக்கும் பல குழந்தைகள் தங்களால் நிஜ உலகுக்கு வர முடியாமல் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கத்துவது, அடிப்பது போன்ற மன மாற்றங்கள் அடைந்து . பொறுமை என்பது நிறைய குழந்தைகளுக்கு இருப்பதில்லை. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய தோன்றுவதையும் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய குழந்தைகள் பள்ளி சென்றாலும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதை தற்போது attention deficient disorder  என்று அழைக்கிறார்கள் . அதாவது கவன பற்றாகுறை நோய். தற்போது ஒரு ஆராய்ச்சியில் இந்த நோய்க்கு டிவி யின் பங்கு எவ்வளவு என்பதை நிருபித்து இருக்கிறார்கள். http://www.additudemag.com/adhd/article/826.html


இதனை தவிர்க்க வேண்டுமாயின், குழந்தைகளுக்கு வெளியில் சென்று விளையாட நிறைய நேரம் கொடுக்கவும், டிவி யை, ஒரு ஆயா போல பயன் படுத்தாமல் ஒரு மணி நேரம் மட்டுமே டிவி நேரம் என்று நேர எல்லை வகுக்கலாம். இதனால் எப்போதும் டிவி ஏ  கதி என்று குழந்தைகள் இல்லாமல் இருக்கும்.
புத்தகங்கள் வாசித்து காட்டலாம். புதிய இசை, பாட்டு, நடனம் போன்ற விசயங்களில் குழந்தைகளை செலுத்தலாம்.

குழந்தைகள் களிமண் போன்றவர்கள், அவர்களை நன்வகையில் வளர்ப்பது பெற்றோர்களான  நம் கையில் மட்டுமே இருக்கிறது.

நன்றி.

Saturday, May 31, 2014

ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகிப்பது நல்லதா இல்லையா?

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்ட போது , anti-bacterial lotion எனப்படும் பாக் டீரியா நுண்ணுயிர்  எதிர்ப்பு கை கழுவும் லோஷன் பற்றிய விளம்பரங்களை அதிகம் காண நேர்ந்தது. ஒவ்வொரு கம்பெனியும், தன்னுடைய லோஷன் 15 நிமிடத்தில் செயல்படும், என்னுடையது 10 நிமிடத்தில் செயல்படும் என்று ஒரே புராணத்தை பாடி கொண்டிருந்தார்கள்.

உண்மையில், இப்படி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை  உபயோகிப்பது நல்லதா இல்லையா? பார்ப்போம் இங்கே .

நம்மை சுற்றி நம் சுற்றுபுறத்தில் கோடிகணக்கான பாக்டீ ரியாக்கள் உள்ளன. நம் digestive system நன்கு செயல்படவும், பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் காரணமாக இருக்கின்றன. நம்முடைய ecosystem அனைத்திலும் பாக்டீ ரியாக்கள் செய்யும் வேலைகள் பல, இலை தளை  மக்கவைப்பது, கழிவுப்பொருள்களை மீண்டும் உரமாக்குவது என்பது அவற்றுள் முக்கியமானவை. நாம் வாழும் ஈக்கோ சிஸ்டத் தில் பாக்டீ ரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நம்மை சுற்றி பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் இருந்தாலும், பல தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்கலும் உள்ளன . இந்த தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்களை கொல்லவே தற்போது நிமிடத்திற்கு நிமிடம் ஆண்ட்டி பாக்டீரியல் சோப் விளம்பரங்கள் ஒலிபரப்பபடுகின்றன. 

சரி இப்போது அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என பார்போம்.

முதலில், இந்த வகை சோப்கள் கெட்ட கிருமிகளை மட்டும் கொல்வதில்லை, அவற்றோடு, நமக்கு நன்மை கொடுக்கும் பலவும் அழிகின்றன.

தற்போது, இங்கு இருக்கும் மருத்துவர்கள் பலர் , ஆண்டி பயொடிக்க்ஸ் மருந்துகளை சாதாரண இருமல் காய்ச்சல் என்று போனால் பரிந்துரை செய்வதில்லை, அதற்கும் ஆ ண்ட்டி பாக்டீரியல் சோப்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டும் பாக்டீ ரியாக்களை கொல்ல உபயோகபடுத்த படுகின்றன.



Photo courtesy Rocky Mountain Laboratories
என்ன பிரச்சனை என்றால், இந்த பாக்டீ ரியாக்களை கொல்ல நாம் மருந்துகளையோ  அல்லது கை கழுவும் திரவங்கலையோ உபயோகபடுத்த படுத்த , அவை மிக சாதுர்யமாக தங்களை mutate எனப்படும் மாற்றி அமைத்து கொள்கின்றன. தற்போது இங்கிருக்கும் மருத்துவ மனைகள் சந்திக்கும் ஒரு மிகபெரிய பிரச்சனை antibiotic resistant bacteria. தற்போது ஒரு சில anti biotics மருந்துகளுக்கு கட்டுபடாத MRSA  101 எனப்படும் பாக்டீ ரியா பெருகி வருகிறது. அதனை superbug என்று சொல்லும் அளவுக்கு. 


எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் சாதாரண ஆபரேஷன் என்று மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை முடிந்து சில நாட்களில் இறக்க நேரிட்டது. இத்தனைக்கும் அவருக்கு மிகச்சாதாரணமான ஒரு ஆபரேஷன் மட்டுமே. என்னவென்று விசாரித்தால், சிகிச்சை முடிந்த பின்னர் அவருக்கு antibiotic resistant bacteria தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. அதனை கொல்ல எந்த antibiotic மருந்துகளும் பயன்படவில்லை.

சரி, இப்போது தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்,நாம் தேவை இல்லாமல் ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகபடுத்த உபயோகபடுத்த, அவை நம்முடைய உடம்பின் ecosystem மாற்றியமைப்பது மற்றுமின்றி, இதனை போன்ற antibiotic resistant bacteria உருவாகவும் காரணமாக இருக்கிறது. முடிந்தவரை இதனை போன்ற கண்கவர் விளம்பரங்கள் வராது தடுக்கவும், மக்களுக்கு இதன் எதிர்விளைவை சொல்லவும் வேண்டும்.

சரி, அதற்கென்று எப்படி கிருமிகளை ஒழிப்பது என்று பலர் கேட்கலாம், நாம்  அன்றாடம் உபயோகிக்கும் சோப்புகளை கைகழுவ உபயோகிக்கலாம். இதற்காக, அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப் தனியாக உபயோகிக்க வேண்டாம்.

நன்றி.

Sunday, April 8, 2012

ஈ -வேஸ்ட் வாங்கலையோ ஈ-வேஸ்ட்!!!

Mobile Company Nokia, Samsung, Sony, LG, Motorola, Apple iPhone , Blackberry...

Facilities 3G, dual sim, camera, music player, Bluetooth, Internet, Email....

Electronics Company Onida, Sony, Toshiba, LG, Samsung, Nikon, Fuji, Cannon, Bose, Apple..

Facilities LCD TV, Plasma TV, digital camera,video camera, iPod, iPad, music system, home theater

இப்படி புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது ...தினமும் புது புது மாடல் கள், இன்னைக்கு விட்டு நாளைக்கு வாங்கினால் இன்னும் நல்ல  மாடல் கிடைக்குமே..ஏங்கும் இளைஞர் நெஞ்சங்கள்.


புதுசா லேட்டஸ்ட் ஆ இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்க இல்லாட்டி யாரும் மதிக்க மாட்டாங்க!! , இன்றைய உலகம் இதுதான்.

சரி, ஓல்ட் மாடல் செல் போன்களும், டிவிக்களும் என்னவாகும்? அவைகள் எல்லாம் பழைய electronics கடைக்கோ அல்லது குப்பை தொட்டிக்கோ போகப்படும்...



அங்கு. இருந்து அவை எங்கே போகின்றன என்னவாகின்றன?  யாருக்கு கவலை? எனக்கு புது செல் போன் வந்தா போதும்.

நம்ம ஊரு குப்பை போதாதென்று வெளிநாடுகளும் இதனை போன்ற இ-வேஸ்ட் கலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது.



இப்படி தூக்கி எறியப்படும் cell போன் களும்  டிவிக்களும், அதில் இருக்கும் இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்களுக்காக குப்பை பொறுக்குபவர்களால் பொறுக்க படுகின்றன. பின்னர் அதில் இருக்கும் உலோகங்கள் எல்லாம் எடுக்ககப்பட்ட பின்னர் எஞ்சி இருப்பது Integral Circuit & wires

சரி அவை என்னவாகின்றன?

வேறென்ன.? எரிக்கப்படுகின்றன..

ஆனால் இப்படி எரிப்பவர்கள் அந்த circuit இல் Cadmium, lead நச்சு பொருட்கள் இருக்கின்றன , அவை சூழ்நிலைக்கும், தமக்கும் கேடு விளைவிப்பவை என்று அறிவார்களா.

அதனை எரிக்கும் ஏழைகளையும் விடுங்கள்.. அவர்கள் வயிற்று பிழைப்பிற்க்காக வேறு வழி இன்றி இதனை செய்கிறார்கள்.

ஆனால் ..அப்படி எரியூட்டப்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பதால் தமக்கும் அந்த கேடு விளையும் என்று பொது மக்கள் அறிவார்களா?


இல்லை எந்த வேகத்தில் மார்க்கெட்டிங் செய்து பொருட்களை விற்கின்றோமே அதில் கொஞ்ச அளவாவது ப்ரோபர் டிஸ்போசல் முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று கம்பெனி கள்தான் செய்யுமா..

இல்லை...இந்திய மிளிர்கிறது என்று விளம்பரபடுத்தும் அரசாங்கம் , இப்படியே போனால் இந்தியா வியாதிக்கூடமாகிவிடும் என்று அறிந்து, இ-வேஸ்ட் பற்றியும் ரி சைக்ளிங் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றுமல்லாமல் அதற்குரிய நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் அறியுமா?

God only knows!

Photos: Google Images

Saturday, April 7, 2012

அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?




அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?, அதன் நிறமும் சுவையும் மறக்க முடியாதது என்று நினைப்பவரா, எல்லாவற்றுக்கும் ”ஹாவ் எ கோக்” என்று சொல்பவரா நீங்கள்..அப்படி என்றால் உங்களுக்கு கான்சர் வரும் வாய்ப்பு அதிகம்.. எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.


Center for Science in the Public Interest (CSPI) சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கோக் மற்றும் பெப்ஸியில் இருக்கும் காரமல் கலருக்காக சேர்க்கப்படும்  4-methylimidazole (4-MEI) and 2-methylimidazole (2-MEI) போன்ற காரமல் கலரிங் ஏஜெண்ட்ஸ் கார்ஸினோஜெனிக் எனப்படும் கான்ஸரை தூண்டும் பொருள்கள் என கண்டறிய பட்டிருக்கின்றன.


http://www.cbsnews.com/8301-504763_162-57391560-10391704/chemical-found-in-cola-causes-cancer-watchdog-warns-what-does-fda-say/


http://www.dailymail.co.uk/news/article-2112335/Coke-Pepsi-change-recipe-avoid-putting-cancer-warning-labels.html

http://healthcarenewsblog.com/coke-and-pepsi-blink-will-tone-down-dubious-caramel-coloring/


இந்த அபாயமான கலரிங் ஏஜண்ட்ஸ் அதிக அளவில் கோக், பெப்ஸி போன்ற குளிர் பானங்களில் இருப்பதால் இங்கிருக்கும் கலிபோர்னியா மாகானத்தில் இந்த கலரிங் ஏஜெண்ட்ஸ் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போல பல மாகானங்களும் தடை செய்யபோவதாக அறிவித்ததால் பெப்சி, மற்றும் கோக் கம்பெனிகள் இந்த கலரிங் பொருளை மாற்றுவதாக இங்கு அறிவித்திருக்கிறார்கள்.



இது இந்தியாவில் இன்னும் அமல் படுத்த படவில்லை..இந்தியாவில் இளைஞர்களிடையே அதிக பாப்புலராக இருக்கும் இந்த காலத்தில் இந்திய மக்கள் நலன் கருதி அரசாங்கம் உடனடியாக இந்த கான்சர் ஏஜெண்டை தவிர்க்குமாறு கோக் மற்றும் பெப்ஸி கம்பெனிகளை வலியுறுத்த வேண்டும்..இல்லையேல் கான்சர் தாக்கம் அதிகரிக்கலாம்.

நன்றி.

படங்கள் : நன்றி கூகுள்.



Friday, October 7, 2011

ஒரு பசுவின் கண்ணீர் கதை



”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது.

”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான்.

”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!”

“என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்”

”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்”

”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே”

“அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முடியுமோ அதை எல்லாம் செய்துட்டு..சாமியா கும்பிடுராங்களாம்..நல்ல கதைப்பா”

“என்னது நாங்க கொடுமை செய்யுரமா?..என்னா சொல்லுற”

”நீங்க சொய்யிற கொடுமை ஒன்னா, ரெண்டா...வரிசையா சொல்லுரேன் கேளு”

”நான் ஏன் தான் பசுவா பிறந்தேனோன்னு நோகாத நாளில்லை..பிறந்த கொஞ்ச நாளில அம்மா கிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டாங்க..அப்புறம், நான் இனப்பெருக்கத்துக்கு தயாரானவுடன் என்னுடைய சோதனை காலம் ஆரம்ப்பிச்சிடுச்சு”

“வருடம் முழுதும் புள்ளதாச்சின்ங்கிற கதையா..எப்போ பார்த்தாலும் செயற்கை முறையில விந்தனுவை செலுத்தி என்னை புள்ளதாச்சி ஆக்கிடறாங்க...அப்புறம் கன்று பிறந்தவுடன்..கன்றையா பாலை குடிக்க விடறீங்க?....நீங்க தானேப்பா பாலை கறந்து குடிக்கிறீங்க..அதுவும் இப்பொல்லாம் எதோ rBGH ஒரு ஊசியை போட்டு அதிக நாள் பால் கொடுக்கிற மாதிரி பண்ணுறீங்க” என்று கண்ணீர் விட்ட பசு...கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தொடர்ந்தது.


“அந்த rBGH எங்களை என்ன பாடு படுத்துன்னு யாருக்காவது தெரியுமா? பால் மடியில எரிச்சல் ஏற்படுத்தி ஒரு பக்க பால்மடி பெருத்து வழி ஏற்படுத்துது. இதுவாவது பரவாயில்லை, இது எங்களை லேம்னெஸ் எனப்படும் நோயை தருகிறது. எங்களால் சரியாக நடக்க முடியாமல், நிற்க முடியாமல், செயல்பட முடியாமல் படும் பாடு இருக்கிறதே..அப்பப்பா!”

“சில நேரங்களில் இது எங்கள் கருப்பையில் கட்டிகளை ஏற்படுத்தி, அது கான்சேர் கட்டிகளாகும் அபாயத்தையும் தருகிறது, இதுவாவது பரவாயில்லை, எங்கள் கன்றுகுட்டிகளுக்கு ஏற்படும் நிலை இருக்கிறதே...அது இன்னும் பரிதாபம்”

 ”பிறந்த சில நாட்களில் எங்களிடம் இருந்து பிரிக்கப்படும் எங்கள் கன்றுகள், பசுங்கன்றுகளாக இருப்பின் என்னை போன்ற கதி அதற்கும் ஏற்படுகிறது..எருதுகளாக இருப்பின்...வெகு சீக்கிரமே அடிமாடுகளாக மாற்றப்படுகின்றன...,சில நேரங்களில் அவை நன்கு கொலுக்க என்று அதிக புரோட்டீன் கொண்ட உணவு கொடுக்க படுகிறது..அந்த உணவை செரிக்க முடியாமல் பல நேரங்களில் Mad cow disease போன்ற பலவும் எங்களுக்கு ஏற்படுகின்றன” என்று குலுங்கி குலுங்கி அழுத பசு...திடீரென்று எதோ நினைத்தாய் பலத்த ஒலியுடன் வில்லன் போல சிரிக்க ஆரம்பித்தது.

பசுவுக்கு என்னாயிற்று என்று நான் நினைத்த தறுவாயில், பசுவே பேச ஆரம்பித்தது....

“இப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்திய மனித குலத்துக்கு நாங்கள் தரும் பரிசு என்ன தெரியுமா, பழிக்கு பழி”

“எங்களை கொடுமை படுத்தி எடுக்கபடும் பாலை குடிப்பதால் அவர்களுக்கும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தியாகி.. சிறுமிகள் சீக்கிரம் பூப்படைவது, தேவையில்லாத அதிக முடிவளர்ச்சி..பெண்களுக்கு Male pattern வருவது...சில நேரங்களில் மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுத்துவது,... ஹாஹாஹா, எப்பூடி”

”ஹாஹாஹா” என்று பசு சிரித்தது நாலாபக்கமும் எதிரொலித்து...என் காதுகளை அடைத்தது....சடாரென்று தூக்கத்திலிருந்து எழுந்தேன்...

Thursday, September 23, 2010

பிங்க் ரிப்பனும் , BRC1 & BRC2 ம்

அக்டோபர் 1st என்ன விசேஷம்?

எந்திரன் ரிலீஸ் அப்படின்னு சொல்லுறவங்களுக்கு (ஹி, ஹி, ஹி, இந்த விளையாட்டுக்கு நான் வரல, கொஞ்சம் சீரியஸ் ஆ யோசிக்கலாம்)

அக்டோபர் ஒன்னு உலக பிங்க் ரிப்பன் டே, பிங்க் ரிப்பன் மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை குறிக்கிறது.

கான்செர் ன்னா என்னங்க?

Unconditional growth, அதாவது எல்லை இல்லா வளர்ச்சி. எதுக்கும் ஒரு எல்லாம் இருக்கணும் அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க, அது ஒவ்வொரு செல்லுக்கும் கூட பொருந்தும். நம்ம உடம்பில இருக்கிற ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு கன்ட்ரோல் ஜீன் இருக்கு. அந்த ஜீன் ஒவ்வொரு செல்லையும் தேவையானப்போ "வளருன்னு" சிக்னல் கொடுக்கும், அதே போல தேவை இல்லாதப்போ "போதும் நிறுத்து" அப்படின்னு சிக்னல் கொடுக்கும். ஆனா இந்த கன்ட்ரோல் ஜீனுக்குள் மாற்றம் (Mutation) ஏற்பட்டுடுச்சுன்னா அந்த ஜீன் தன்னோட கன்ட்ரோல் பண்ணுற திறமையை இழக்குது. பிறகு ஒவ்வொரு செல்லும் கன்ட்ரோல் இல்லாம வளரும். இதுதான் ஒவ்வொரு கான்செர்க்கும் அடிப்படை.


சரி, பிங்க் ரிப்பன் Breast cancer awareness, ஆனா BRC1 & BRC2 ன்னா என்ன?

BRC1 & BRC2 ங்குறது மனுஷ உடம்புல இருக்கிற மார்பக செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ரெண்டு ஜீன். இந்த ரெண்டு ஜீன்லையும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுடுச்சுன்னா, உடனே மார்பக புற்று நோய் வந்துடும்ன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க.

சரி, எப்படி Breast கான்செர் கண்டுபிடிப்பது?

பெண்கள் வாரம் ஒரு முறை பத்து நிமிடம் எடுத்துகோங்க. ஒரு தனி அறையில் சென்று கீழ்க்கண்ட படத்தில் சொல்லுவது போல மார்பகத்தை நன்கு அமுக்கி ஏதேனும் கட்டி போன்று தென்படுகிறதா என்று பார்க்கவும். ஏதேனும் சிறிய கட்டி போன்று இருப்பதாக சந்தேகம் வந்தால், இதே டெஸ்டை திரும்ப இரண்டு நாட்கள் கழித்து செய்து பார்க்கவும். மறுபடியும் இருப்பது போல அறிந்தால், உடனே மீமொக்ராம் (Mammogram) மார்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளவும்.





நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஆரம்ப நிலை மார்பு புற்றுநோயை முழுதும் குணப்படுத்த முடியும்.

மார்பு புற்றுநோய்யை தடுக்க என்ன செய்யலாம் ?

  1. குண்டாகாமல், ஆரோக்கியமான எடையுடன் இருப்பது.
  2. நிறைய காய்கறி, பழங்கள் உண்பது, இறைச்சி உண்பதை முடிந்த அளவுகுறைத்து கொள்வது
  3. முடிந்தவரை உடற்பயிற்சி செய்வது
  4. அதிக கொழுப்பு, மாவு பொருட்களை உண்ணாமல் இருப்பது
இவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த வழிகள் தான் ஆனாலும் யாரும் பின் பற்றுவது இல்லை.

விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்யலாம்?

பெண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அம்மா, அக்கா, தங்கை, மகள், தோழியர் அனைவருக்கும் மார்பு புற்றுநோய் பற்றி எடுத்து சொல்லுங்கள். முடிந்தால் விழிப்புணர்வுக்காக கீழ்க்கண்ட பிங்க் ரிப்பன்ஐ உங்கள் தளத்தில் இணையுங்கள்.



மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள http://www.pinkribbon.org/ என்ற தளத்தை பாருங்கள்.