Tuesday, September 29, 2015

மோடி என்னும் ஒரு ராக் ஸ்டார்..


மறுபடியும் ஒரு அரசியல் பதிவு.

என்னதான் எழுத கூடாது என்று நினச்சிட்டு பேசாம இருந்தாலும் இந்திய பிரதமர் மோடி ஒரு ராக் ஸ்டார் பெர்பார்மன்ஸ் கொடுத்து நம்மள வாய திறக்க வச்சிடுவார் போல.

FB தலைமையகத்தில எப்படி பேசினார் தெரியுமா எங்க மோடி? என்று மோடி ஜால்ராக்கள் சத்தம் தாங்க முடியவில்லை. அதோட FB யின் டிஜிட்டல் இந்தியாவில் வெரி பலரும் சேர்ந்து தங்களுடைய ப்ரொபைல் படத்தை மாற்றி வைத்து இருந்தார்கள்.

அதுமட்டும் அல்ல, அவர் எத்தனை உடைகள் மாற்றினார். எப்படி ஒரு முறை உடுத்தினதை இன்னொரு முறை உடுத்தவில்லை என்று பெருமை வேறு. இதில இன்னும் சிலர் அவரின் கேமரா மோகத்தை அவர் மார்க் ஜுகேர்பெர்க் ஐ இழுத்து காமெராவை மறைக்காதே என்பது போல போஸ் கொடுப்பது எல்லாம் போட்டு இருந்தனர்.  


எனக்கு தெரியாம தான் கேட்குறேன், இவரு பிரதமரா, இல்ல ராக் ஸ்டார் ஆ. பொதுவா, கேமரா மோகம், உடை மோகம் கொடண்டவங்க எல்லாம் பொண்ணுங்க அப்படின்னு சொல்லுவாங்க..இல்லாட்டி ராக் ஸ்டார்ஸ் அல்லது சினிமா பிரபலங்கள் இப்படி செய்யலாம். ஆனா, ஒரு நாட்டுக்கு பிரதமர், இப்படி கேமரா மோகம் பிடித்து ஆட்டுவது சிரிப்பாக இருந்தது. இதில எப்படி டீல்  போட்டு இருக்கார் தெரியுமா என்று ஜால்ரா சத்தம் தாங்க வில்லை.

அதோட, FB தலைமையகத்துல ஹிந்தில பேசுறாருப்பா...உடனே இந்தி தேசிய மொழி அப்படின்னு ஆடாதீங்க..பேசுங்க இந்தியாவில பேசுங்க..ஆனா வெளி நாட்டுக்கு வந்து பேசும் போது எல்லாருக்கும் புரியிற மாதிரி பேசினா, எங்கள போல ஹிந்தி தெரியாதவங்களும் புரிஞ்சிகிரலாம்ல..

நம்ம பக்கத்து நாடு சீனா, Baidu, Qihoo அப்படின்னு சத்தம் இல்லாம கூகிள் ஐ மாத்திட்டு இருக்கான். அதே போல, அலிபாபா அப்படின்னு ஒன்ன வச்சிட்டு அமேசான் ஐயும் மாத்திட்டு இருக்கான். இப்படி எல்லாத்திலையும் தன்னிறைவு பெறுவதோட அல்லாம, அமெரிக்கா கண்ணுல விரல விட்டு பொருளாதாரத்துல ஆட்டிட்டு இருக்காங்க..இவரு என்னடான்னா, ராக் ஸ்டார் ஆகி கூத்தாடிட்டு இருக்காரு. 

ஆனா சரியான பாலிவூட் பெர்போர்மான்ஸ்..எந்த நாட்டு பிரதமரும் கொடுக்காத ஒரு பெர்போர்மான்ஸ் கொடுத்துட்டு போய் இருக்கார். அதுக்கு எல்லாரும் ஜோரா கை தட்டுங்கப்பா.

நன்றி.

டிஸ்கி.

என் வீட்டுக்கு ஆட்டோ வரப்போவது நிச்சயம். 

Monday, September 28, 2015

உங்களின் மாதவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது?Photo courtesy Google images

இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி மீடிங்கில் பேசி கொண்டு இருக்கும் போதே கண்கள் சொருகி மயங்கி விழுந்து விட்டாள். உடனே EMR அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அந்த பெண்ணிற்கு அதிக உதிரபோக்கு இருந்துள்ளதும் அதன் விளைவாக மயங்கியதும் தெரிய வந்தது. மெனோபாஸ் நெருங்கும் வயது என்பதால் ஒரு சிலருக்கு இது போன்று ஏற்படாலாம் என்றாலும் இது போன்ற அதிக உதிரப்போக்கு சில நேரங்களில் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது.

பொதுவாக பெண்களின் மாதவிடாய் குறித்து அதிகம் விழிப்புணர்ச்சி கானபடுவதில்லை. எது சரியான அளவு, எத்தனை நாளுக்கு ஒருமுறை, எத்தனை நாட்கள் உதிரபோக்கு இருக்கலாம், அல்லது உதிரம் மட்டும் அல்லாமல் கட்டியாகவும் வரலாமா.. என்பதில் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். இந்த கேள்விகளுக்கு இவர்கள் அணுகுவது தன சொந்தகள், தோழிகள் அல்லது இணையம் உபயோகிக்க தெரிந்தவராயின் கூகிள்.

பெண்களுக்கு ஏற்படும் பொதுவன மாதவிடாய் பிரச்சனைகள் என்னவெனில், அதிக உதிரபோக்கு, உதிரம் கட்டியாகி வெளியேறுதல், உதிரம் வெளியேறாமல் வெள்ளையாக வெளியேறுதல் அல்லது மிக குறைந்த உதிரபோக்கு அல்லது உதிரப்போக்காக இல்லாமல் ஸ்பாட்டிங் மட்டுமே தட்டுபடுவது.


1. அதிக உதிரபோக்கு

இங்கு நான் அதிகம் என்பது ஒரு நாளில் 5 க்கு மேற்பட்ட நாப்கின் அல்லது டம்பூன் உபயோக்கிக்கும் அளவு உதிரபோக்கு இருப்பது. இதற்க்கு முக்கிய காரணமாக இண்டர்நெல் பெனிக்ன் ட்யுமெர் அல்லது fibroids இருக்கலாம். ஒரு சிலருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வரலாம்.
இப்படி அடிக்கடி நடந்தால் உடனே டாக்டரிடம் அணுகுவது நல்லது, ஏனெனில் இது பாலிப், endometriosis, பெரிய ட்யுமெர் என்று வந்து விட்டு விடும். நீங்கள் குழந்தை பெரும் வயதில் இருக்குறீர்கள் என்றால் உங்களின் குழந்தை பிறப்பை தடுத்து மலட்டு தன்மையை கூட உண்டாக்கலாம்.
அதிக உதிரபோக்கால், வயிற்று வலி, கால் கை வலி தவிர மன உளைச்சல், சாதாரண வேலையை கூட சரியாக செய்ய முடியாத தன்மை, எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம்.

2. மிக குறைந்த உதிரபோக்கு

நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் இது நடக்கலாம். அப்படி நீங்கள் எதுவும் எடுத்து கொள்ளவில்லை ஆனாலும் மிக குறைந்த அளவு உதிரபோக்கு இருக்கிறது எனில், உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம். முக்கியமாக உங்களின் பிட்யுடரி சுரபியின் செயல்பாடு குறித்து அணுகுவது நல்லது. ஒரு சிலருக்கு PCOS போன்ற பாலி சிஸ்டிக் ஓவரீஸ் இருப்பினும் இது போன்ற மிக குறைந்த அல்லது மாதவிடாய் தவறுவது போன்றும் ஏற்படலாம்.  உங்களின் வாழ்வியலில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் இதனை சரி செய்யலாம். ஒழுங்கான ப்ரோடீன், பழங்கள் காய்கள், நிறைந்த சாப்பாடு, நல்ல உடல் பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை கட்டுபடுத்தலாம்.

3. ஸ்பாடிங்

இது உங்களின் மாதாவிடாய் இறுதியின் போது ஏற்படும் ஸ்பாடிங் அல்ல, மாறாக எப்பொழுதும் ஒரு சிலருக்கு ஏற்படலாம். நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்பவாராயின் ஒரு சிலருக்கு இது நேரலாம். இல்லை என்றால் டாக்டரை அணுகுவது நல்லது. முக்கிய காரணம் கருப்பை வாய் அல்லது கருப்பையில் இருக்கும் பாளிப்கள் எதற்கு காரமணாக இருக்கலாம். அல்லது பைப்ரைட் அல்லது கான்செர் கூட காரணமாக இருக்கலாம். அதனால் இப்படி அடிக்கடி நடந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

4. மாதவிடாய் தள்ளி போவது

உடனே இது கர்ப்பம் என்று பலர் நினைக்கலாம்.ஆனால் உண்மையில் உங்களுக்கு ரெகுலர் ஆவுலேடிங் சைக்கிள் வரவில்லை என்று அர்த்தம்.PCOS, type  2 Diabetics போன்றவையும் உங்களின் உடலில் ஹார்மோன் இம்பாலன்ஸ் உருவாக்கி மாதவிடாய் தவறி அல்லது தள்ளி செல்லலாம். ஒரு சிலருக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு  இது உங்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தும். அதனால் டாக்டரை அணுகுவதும் உங்களை வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதும், மாவுப்பொருள்கள் தவிர்ப்பதும் நல்லது. இது உங்களின் மாதவிடாயை சரி செய்ய உதவும்.

மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை வராமல் 30-32 நாட்களுக்கு ஒரு முறை வரலாம். அது சாதாரணமானது. ஆனால், ஒவ்வொருமுறையும் 40 நாட்கள் அல்லது அதற்க்கு மேல் வந்தால் அது நல்லதல்ல. அதே போல, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலும் டாக்டரை அணுகுவது நல்லது.


டிஸ்கி
இது மருத்துவ அறிவுரை அல்ல, நான் வாசித்ததை, அனுபவத்தில் கண்டதை வைத்து எழுதியது.

நன்றி.


Friday, September 25, 2015

நாம் அதிகம் மெனக்கெடும் சில முட்டாள் தனமான செய்கைகள்!

ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு அல்லது முட்டாள் தனமான விசயத்திற்கு அதிகம் மெனக்கெடும் ஒரு சிலரை நாம் அனைவரும் சந்தித்து இருப்போம். அப்படி நான் சந்தித்த ஒரு சில விசயங்கள் இங்கே.


  • உங்கள் வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் உங்களின் குழந்தைகளும் சேர்ந்து வீட்டை ரெண்டு செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது திடீரென்று எதோ உடையும் சத்தம் நீங்கள் என்னவென்று பார்க்க செல்லுகிறீர்கள், அங்கே வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி பந்து அடித்து உங்கள் ஷோ கேசில் இருந்த ஒரு பொருள் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. இப்போது என்ன செய்வோம். "Blame Game" ஆரம்பிக்கப்படும். உங்கள் குழந்தை செய்தது..இல்லை உன் குழந்தை செய்தது..என்று ஒருத்தரை ஒருத்தர் blame செய்து கொள்ளுவோம். முடிவு, குழந்தைகள் நன்கு அடி வாங்கும், அல்லது சில நேரங்களில் எக்ஸ்ட்ரீம் ஆக நட்பு துண்டிக்க பட்ட காரியமும் நடக்கலாம். பின்பு பல நாட்கள் வாரங்கள் மாதங்கள் ஏன் வருடங்கள் கூட இந்த நிகழ்வு மனதில் இருந்து தொந்தரவு கொடுக்கும். இது தேவையா..இங்கு ஒரு சின்ன பொருள் உடைந்து விட்டது என்பதற்கு கொடுக்கும், மெனக்கெடும் நீங்கள், அதனால் நமக்கு மனதளவில் அல்லது நட்பளவில் என்னென்ன பின்விளைவுகள்வந்திருக்கின்றன என்று ஒரு நிமிடம் யோசித்தால் எப்படி இருக்கும் .

  • அடுத்த விஷயம், அடுத்தவர்களை இம்ப்ரெஸ் செய்ய என்று நாம் போடும் வேஷங்கள். நீங்கள் வீட்டில் சரி சோம்பேறியாக இருப்பீர்கள். ஆனால் யாராவது வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் உடனே..அன்று வீடு ரெண்டு படும். தான் ரொம்ப பெர்பெக்ட் என்று அவர்கள் முன் சீன் போடுவது. நான் இப்படி தான் என் பிள்ளைகளை வளர்ப்பேன், இப்படி தான் நடப்பேன்..சமைப்பேன், சுத்தம் செய்வேன். இப்படி தான் என் அழகை பராமரிப்பேன்..அதாவது நான் தான் பெர்பெக்ட் என்று சீன் போடுவது. சில நேரங்களில் நாம் சீன் போடுகிறோம் என்று தெரியாத நம் குழந்தைகளே எல்லார் முன்னிலையிலும் வந்து நம் குட்டை உடைக்கும்..அப்பொழுது ஒரு அவமானம் பிடுங்கி தின்னும்..இது தேவையா. அடுத்தர்வர்களை இம்ப்ரெஸ் செய்து என்ன சாதிக்க போகிறீர்கள். உங்களை உங்களாகவே ஏற்று கொள்ளாதவர்கள் உங்களுக்கு நல்ல துணையாக, நட்பாக இருக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள்.

  • அடுத்த விஷயம் கொஞ்சம் மேலே இருக்கும் விசயத்துடன் சம்பந்தப்பட்டது தான் என்றாலும், இது ஒரு பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் , என்னை பற்றி யாரும் தரக்குறைவாக பேசிடகூடாது , என்று நினைப்பது அதற்காக எல்லாவற்றிரையும் செய்வது. எல்லாவற்றிற்ற்கும் மரியாதை எதிர்பார்ப்பது. அப்படி யாரும் மரியாதை தரவில்லை என்றால் தன்னை தரக்குறைவாக பேசிட்டான் என்று சீன் போட்டு பெரிய பிரச்சனை ஆக்குவது. இது முக்கியமாக கொஞ்சம் வயதான பெரியவர்களுக்கு இருக்கும் குணாதிசயம் என்றாலும் இன்னும் பல மக்கள் இந்த மெனக்கெடல் கொண்டு அலைகிறார்கள். அதாவது இவர்கள் எப்பொழுதும் பெர்பெக்ட் என்று எல்லாரும் இவர்களை மதித்து கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் மகாத்மா, எந்த தவறும் செய்யாதவர் என்று மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. என்னை பொருத்தவரை, இதற்காக மெனக்கெடுபவர்களை பார்க்கும் போது சிரிப்பாக வரும்.

  • கடைசியாக எகோநோமிக் சம்பந்தப்பட்ட மெனகெடும் விஷயம். "தனக்கு தேவையே இல்லாவிட்டாலும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி சேகரித்து வைப்பது, அதனை யார் வீட்டுக்கு வந்தாலும் எடுத்து காட்டுவது, டம்பம் அடிப்பது". என் சிறு வயதில் நான் சந்தித்த ஒரு அம்மா இதற்க்கு சாட்சி. நிறைய பணம் கொழிக்கும் வீடு. ஒவ்வொரு மாதமும் ஒரு நகை அல்லது வீட்டு உபயோகப்பொருள் வாங்கும் அந்த அம்மா. கணவரிடம் எதனையும் கேட்காது அல்லது செய்தி மட்டுமே சொல்லும் . வாங்கி விட்டு அது போடும் சீன்..ஐயோ சாமி., எப்பொழுது யார் வீட்டுக்கு வந்தாலும் உடனே ஒரு கடை விரிக்கும்..இதனை இங்கு வாங்கினேன், இதனை அங்கு வாங்கினேன், விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனா என்ன பண்ணுறது வாங்கிட்டேன்  என்று டம்பம் அடிக்கும் ..யார் கேட்டா? நீங்க எங்க வாங்கினேன் என்று, என்று நான் பலமுறை நினைப்பதுண்டு. ஆனாலும் அந்த அம்மா விடாமல் செய்து கொண்டு இருந்தது. சொல்ல போனால் நிறைய நடுத்தர மக்கள் இந்த "தேவை இல்லாமல் வாங்கும் செயலில் விழுந்து இருக்கிறார்கள்" என்று சொல்லலாம். என்னுடைய இந்திய பயண அனுபவத்தில் நான் கண்டது இது.

  • அடுத்தது, இளசுகளுக்கு பொருந்தும்.  ஒரு லேட்டஸ்ட் டெக் பொருள் வாங்க 36 மணி நேரம் குயிவில் நின்று அல்லது இரவு முழுதும் நின்று வாங்கி காட்டுவது. தங்களின் அபிமான நடிகரின் படங்களுக்கு டிக்கெட் வாங்க இரவு முழுதும் நிற்கும் சினிமா வெறியர்களுக்கும் இது பொருந்தும். முதல் ஷோ பார்த்து என்ன சாதிக்க போகிறீர்கள். அல்லது முதல் ப்ரொடக்ட் வாங்கி என்ன சாதிக்க போகிறீர்கள். அதற்காக ஏனிந்த மெனக்கெடல்.

டிஸ்கி 

இதெல்லாம் நான் சந்தித்த சில மனிதர்கள் அவர்களின் குணாதிசயங்கள் கொண்டு எழுதியது. பொதுப்படையானது அல்ல.


நன்றி.Thursday, September 24, 2015

ஏன் இந்திய பத்திரிக்கைகள் நெகடிவ் செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்?

இன்றைய இணைய உலகில் மிகவும் ஹாட் டாபிக் என்றால் அது லெக்கின்ஸ் பற்றியது.

பல எதிர்ப்புகள் பதிவு செய்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் வழக்கம் போல ஒரு சில அமைப்புக்கள் இப்படி ஆபாசமாக அலையலாமா? அதற்க்கு தான் நாங்கள் நாகரிகமாக உடை உடுத்துங்கள் என்று சொல்லுகிறோம். நாகரிகமாக உடலை முழுதும் மூடி உடை உடுத்தினால் இப்படி எல்லாம் நடக்குமா?..உங்களை யாராவது கிண்டல் செய்வார்களா? என்று ஒரு புறம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்கள். அதாவது, இவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னா, குர்தா கூட லேக்கின்ஸ் போட்டுட்டு அப்போ பார்த்து காத்து அடிச்சா ஆபாசமா இருக்குமாம், அதன்னால தான் நாங்க நாகரிகமாக உடை உடுத்துங்க என்று சொல்லுகிறோம்..இது எப்படி இருக்கு?  உஷ் அப்பா முடியல. யார் யாருக்கு எது சவுகரியமோ அதை போட்டுகிறாங்க, இதில உங்களுக்கு என்னப்பா பிரச்சனை.

நான் முன்பே ஒரு பதிவில் சொன்ன மாதிரி, இந்தியா ஒரு முரண்பாடுகளின் மூட்டை. அங்கு பாசிடிவ் விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க படுவதே இல்லை. எப்பொழுதும் நெகடிவ் பப்ளிசிட்டி சும்மா பிச்சுக்கும். அதுவும், இப்படி பொண்ணுங்கள பத்தி ஏதாவது குறை சொல்லி மட்டும் ஒரு அர்டிகல் அல்லது படம் அல்லது பாட்டு வரட்டும் பொண்ணுங்க அதை பார்த்துட்டு பொங்கி எழுவாங்க பின்ன பப்ளிசிட்டி சும்மா பிச்சுக்கும். உதாரணமா, நாங்க எல்லாம் எங்கயோ இருக்கோம். எங்களுக்கு உண்மையிலேயே, குமுதம் ரிபோர்ட்டர் ல என்ன செய்தி வந்ததுன்னு தெரியவே தெரியாது..ஆனா இப்போ பாருங்க..யாரெல்லாம் இணையம் அதுவும் தமிழ் இணையம் உபயோகிக்கிறாங்களோ அவங்களுக்கு எல்லாம் இந்த லேக்கின்ஸ் செய்தி தெரியும். எவ்வளவு சீப் பப்ளிசிட்டி பாருங்க.

எப்படி லேக்கிங்க்ஸ் பாப்புலர் ஆகிடுச்சி என்ற உண்மைய சொல்லனும்னா, ரொம்ப சவுகரியாமான ஒரு பாண்ட் என்றால் அது லேக்கிங்க்ஸ் தான். பனியன் துணியில் உருவாக்கியது உடலை உறுத்துவதில்லை. விலையும் ரொம்ப கம்மி. எந்த டாப் உடனும் மாற்றி போட்டு கொள்ளலாம். உதாரணமாக ஒரு 5 செட் டாப்ஸ் 5 செட் லேக்கின்ஸ் வைத்து கொண்டு 25 விதத்தில் வித்தியாசமாக போட்டு கொள்ளலாம். காலேஜ் போகும் பெண்களுக்கு இதனை விட என்ன வேண்டும். அதனாலேயே காலேஜ் பொண்ணுங்க மத்தியில் மற்றும் சுடிதார் உடுத்தும் பெண்கள் மத்தியில் இது பிரபலம்.

நெகடிவ் விஷயம் இந்த லேக்கின்ஸ்இல் என்னவென்றால், எல்லா உடையிலும் இருப்பதை போல லேக்கின்ஸ் ம் சில நேரங்களில் அசிங்கமான தோற்றத்தை தரலாம். அதாவது, லோ ஹிப் புடவை போல, லோ நெக் ப்ளௌஸ் போல, ஒரு சில நேரங்களில் லேக்கிங்க்ஸ் கூட அசிங்கமான தோற்றத்தை தரலாம். உதாரணமாக, நீங்கள் கொஞ்சம் குண்டானவர் என்றால், உங்களின் டாப்ஸ் தேர்ந்தெடுக்கும் போது சைடு ஸ்லிட் இல்லாமல் அல்லது நீளமான டாப்ஸ் தேர்ந்தெடுக்கலாம்.  அவ்வளவு தான் லேக்கின்ஸ் இல் இருக்கும் பிரச்சனை, இதை போய் போட்டோ எடுத்து போட்டு சீப் பப்ளிசிட்டி தேடி, ஊரெல்லாம் அதை பத்தியே பேசி பேசியே ஏன்பா டைம் வேஸ்ட் பண்ணுறீங்க.

இங்கு எல்லாம் ஒரு விஷயம் சொல்லுவதுண்டு.. உங்க ஹிப் சைஸ் 12இன்ச் க்கு மேல என்றால் லேக்கின்ஸ் வாங்கதீங்க உடுத்தாதீங்க என்று. சொல்லபோனால் எனக்கு தெரிந்து சாதாரண துணிக்கடைகளில 12-14 சைஸ்க்கு மேல் லேக்கின்ஸ் கிடைக்காது. வேறு கடைகள் தான் சென்று தேட வேண்டும். ஆனாலும் இன்னும் பல மக்கள் லேக்கின்ஸ் போட்டுகொண்டு குட்டையான ஷர்ட் போட்டுகொண்டு வருவதுண்டு. இங்கு இந்தியாவில் செய்தது போல போட்டோ எடுத்து மட்டுமே பப்ளிஷ் பண்ணி இருக்கட்டும், இந்நேரம் அப்படி பப்ளிஷ் செய்தவரும் சரி பத்திர்க்கையும் சரி இந்நேரம்சட்ட பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும். இவை எல்லாம் தனி மனித உரிமைகளில் தலையிடுவது.

இப்படி செய்யலாமே என்று சஜ்ஜெஸ்சன் மட்டுமே சொல்லத்தான் நமக்கு உரிமை இருக்கிறதே தவிர, இப்படி செய்ய கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதனால்எந்தஒரு  விசயத்திலும் என்ன  நெகடிவ் விசயங்களைஇருக்கிறது என்று மட்டுமே கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு பப்ளிஷ் செய்து நெகடிவ் பப்ளிசிட்டிக்கு முனைவதை விட, நல்ல விசயங்களையும் செய்திகளையும் பகிரலாமே ஊடகங்கள்..

நன்றி.

Wednesday, September 23, 2015

இன, சாதி பாகுபாடுகள் பிறப்பில் இருந்து தொடர்வதோ!
என்னுடன் வேலை பார்த்தவர்கள் அவர்கள். இருவரும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். 20 களில் இருப்பவர்கள். ஒருவர் யூத மதத்தை சேர்ந்தவர், இன்னொருவர் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்றாலும் பெயரளவில் ஒரு முஸ்லிம் பெயர் கொண்டவர்.

எந்த மீட்டிங் என்றாலும், ஒருவர் பேசினால் இன்னொருவர் அதனை குறை சொல்லுவது என்பது எப்பொழுதும்  இருக்கும். வெளிப்படையாக அவர்கள் இருவரும் வெறுப்புணர்வை காட்டி கொள்ளாவிட்டாலும்(அது சட்டப்படி குற்றம்), அவர்களின் செய்கையில் ஒரு துவேஷம் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு இது தோன்றுவது உண்டு, இவர்கள் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்த, எங்கோ நடக்கும் பிரச்சனைகள் இவர்களுக்கு முந்தய தலைமுறையில் ஆரம்பித்த பிரச்சனைகள் எப்படி இவர்ளின் ஒவ்வொரு செயலிலும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றான், என்று யோசித்ததுண்டு. ஒருவேளை இவை பிறப்பில் இருந்தே உருவானதோ என்றும் யோசிப்பது உண்டு.

அதே போல, எப்பொழுதும் இந்தியர்கள் சந்தித்து கொண்டால் ஒரு சிலர் ஒதுங்கியே இருப்பதை கவனிக்கலாம். அதாவது பார்டி என்று வைத்து கொள்ளுவோம், பள்ளியில் ஒன்றாக படிக்கும் குழந்தைகள் பார்டி என்று போனாலும், சாதி வித்தியாசம் தெரியும், அதுவும் தற்பொழுது குடிபெயர்ந்த மக்களிடம் மட்டுமே இதனை அப்பட்டமாக பார்க்கலாம் (70-80 களில் குடிபெயர்ந்த மக்களிடம் இது அதிகம் காணப்படவில்லை) . அதாவது ஒரு சில  சாதி மக்கள்வேறு  சாதி மக்களுடன் அதிகம் ஒட்ட மாட்டார்கள். அல்லது வேறு சாதி மக்களும் ஒரு சில  சாதி மக்களின் பார்டிகளுக்கு சென்றாலும் ஒதுங்கியே இருப்பார்கள். ப்ரெண்ட்சர்குள் கூட நிறைய ஒரே சாதி மக்கள் அவர்கள் சாதி மக்களுடன் அதிகம் ப்ரெண்ட் ஆக இருப்பது காணலாம், ஒரே எண்ணம், சாப்பாடு, பழக்க வழக்கங்கள் என்று காரணம் வேறு சொல்லுவார்கள்.  அதில் வேறு சாதி மக்களை சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
அதே போல எல்லா  மக்கள் சேர்ந்து ப்ரெண்ட் சர்குள் வைத்து கொண்டாலும் அதில் நிறைய நேரம், ஒரு  சில  சாதி மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதனால் இன்னும் இந்திய சாதி வேறுபாடுகளை கட்டி  காக்கிறார்கள், என்று நினைத்து போனா போங்கள் என்று விட்டு விட நினைத்தாலும் , சில நேரங்களில் பிள்ளைகளுக்கும் அதனை கற்று கொடுப்பதுதான் கடுப்பை கிளப்பும்.

இதனை பற்றி நிறைய கவனித்து கவனித்து இந்த மக்கள் எல்லாம் திருந்த மாட்டார்கள் பா, என்று நினைத்து கொள்ளுவேன். ஆனால், சமீபத்தில் ஒரு செய்தியையும் அதனை சார்ந்த கட்டுரையும் படிக்க நேர்ந்தது. அது, எப்படி தன்னுடைய பிறப்பு சாதி குறித்த எண்ணங்கள் மக்களின் எண்ணங்களையும் முன்னேற்றங்களையும் மாற்றுகின்றன என்பது பற்றியது.

அதாவது பொதுவாக நம்பப்படுவது என்னவென்றால், நீங்கள் கடுமையாக அயராமல் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது. அது நீங்கள் எந்த இன, மதம், மொழி, பாலினம் சேர்ந்தவராயினும் உழைத்தால் பயன் உண்டு என்பதே  அது.

ஆனால், இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மக்கள் இன்னமும் தங்களின் வாழ்கையின் வெற்றி தங்களின் சாதியை சார்ந்தது என்று நம்புவதாக அறிய முடிகிறது. அதாவது, நான் என்ன தான் படித்து முன்னேற முயற்சி செய்தாலும், என்னுடைய் சாதி என்னை முன்னேற விடாது, என்ற எண்ணம். மக்கள் மனதில் புரையோடி இருப்பதாக அறிய வருகிறது.

குழந்தை பருவத்தில் இருந்தே தங்களின் சாதியை குறித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதன் விளைவாகவே அவர்கள் இந்த சமுதாயம் என்னை சாதிக்க விடாது அல்லது என்ன படித்தாலும் நான் இந்த வேலைக்கு தான் போவேன் என்று பட்டை குத்தி வைத்து இருக்கிறது என்று குழந்தைகள்/இளைஞர்கள் நம்ப ஆரம்பிகிறார்கள். அது படிப்படியாக தங்களின் கற்கும் திறனை குறைக்கிறது என்று சொல்கிறார்கள்.

இதனை எப்படி தவிர்ப்பது, குழந்தையில் இருந்து, சாதி என்ற ஒன்றை பற்றி குழந்தைகளிடம் பேசாமல் இருப்பது. எந்த சாதி மதத்தை சேர்ந்தவர்களும் சாதிக்கலாம். சாதி ஒரு பொருட்டே இல்லை என்ற என்னத்தை கொண்டு வருவது மட்டுமே.

என்ன தான் பண புழக்கம் அதிகமாகி இந்தியா முன்னேறுவதாக ஒவ்வொரு ஆட்சியாளரும் பறை சாற்றி கொண்டு இருந்தாலும், சாதியையும் அதனை சார்ந்த மக்களின் எண்ணங்களையும் மாற்ற முயலாத வரை, இந்தியா வல்லரசு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளில் இருந்து வருவது மட்டுமே. என்பது என் எண்ணம்.


நன்றி

Reference

Stereotypes persist that class and privilege determine intellect and succes  Yasmin Anwar | 

Monday, September 21, 2015

உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!

உலகத்தில் அனைத்துமே பரிந்துரை ஆகி விட்டது. அது நாம் உடுத்தும் உடையில் இருந்து, சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து வசிக்கும் வீட்டில் இருந்து அனைத்துமே பரிந்துரை படி தான் நடக்கிறது. அது தற்போது நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தால் தீர்மானிக்கபடுகிறது. 

இல்லை என்கிறீர்களா? இதற்க்கு பதில் சொல்லுங்கள். 

  1. உங்களில் எத்தனை பேர், பேஷன் அல்லது நண்பர்கள் அல்லது டிவி, சினிமா நட்சத்திரங்கள் உடுத்தும் உடைகளை மட்டுமே வாங்காமல் இருக்கிறீர்கள். முக்கியமாக பெண்கள் புடவை, நகை வாங்குவது எல்லாமே அப்போதைய பேஷன் அல்லது கடைகாரர் லேட்டஸ்ட் டிசைன் என்று சொல்லி விற்பதுவாகவே இருக்கும்.
  2. இந்த டையெட் உனக்கு நல்லது இதனை சாப்பிடு வெயிட் குறையும் , சக்கரை நோய் வராது, ரத்த கொதிப்பு வராது அல்லது முடி கொட்டது அல்லது பருக்கள் வராது ...இப்படி நிறைய. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கிடைக்கும் அல்லது பரிந்துரைக்க படும் எல்லாத்தையும் உணவாக சாப்பிடும் மக்கள்.
  3. இந்த இடத்தில் வீடு வாங்குங்கள், இந்த இடத்தில் இது இருக்கிறது, அது இருக்கிறது..பள்ளி இருக்கிறது ரோடு பக்கம், சுத்தமான நீர்...இப்படி நிறைய நாம் இங்கு தான் வீடு வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்க படுகிறது.
நான் மேலே குறிபிட்டது ஒரு சில் பரிந்துரைகள் மட்டுமே. இதனை தவிர நிறைய இருக்கிறது.

மேலே நான் குறிப்பிட்டவை எல்லாம், மக்களின் சாய்ஸ் மட்டுமே..அதாவது பெரும்பாலான மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதனை சார்ந்து உங்கள் மீது தொடுக்கப்படும் பரிந்துரைகள் போர். இப்படி நம் மீது மறை முகமாக தொடுக்கப்படும் விளம்பர பரிந்துரைகள் சில நேரங்களில் வேலை செய்யலாம், சில நேரங்களில் வேலை செய்யது. ஏனெனில், இவை பொதுமக்களின் வாங்கும் திறனை அல்லது வாங்கும் சாய்ஸ் பொறுத்து உங்களுக்கு அளிக்கபடுவது. ஒரு சில மக்களுக்கு இவை வேலை செய்யாது.


தற்போது ஒரு விதமான பரிந்துரைகள் கடை பிடிக்க படுகின்றன அவை உங்களுக்கே உங்களுக்கான பரிந்துரைகள் அதாவது Personalized recommendation. நீங்கள் இணையம் உபயோகிப்பவர் ஆயின், இதனை கவனியாமல் இருந்திருக்க முடியாது. அது நீங்கள் கேட்காமலே உங்களுக்கு பரிந்துரைக்க படும் பொருட்களை பற்றியது.  ஒரு உதாரணம், ஒரு முறை குழந்தைகள் புத்தகம் வேண்டும் என்று கூகுளில் "சில்றன் புக்ஸ்" என்று தேடினேன். அவ்வளவு தான், பின் நான் எப்பொழுது கூகுளில் என்ன தேடினாலும் அதில் உள்ள சைடு பாரில் அல்லது எந்த தளம் சென்றாலும் அங்கு "உங்களுக்கு பரிந்துரைக்க பட்ட புத்தகம்" என்று பல பல புத்தகங்கள், தினமும் அல்லது ஒவ்வொரு முறை நான் தளத்தை திறக்கும் போதும் வரும். 


thanks to google images

கடந்த வருட ஆரம்பத்தில்  காசு, பணம், துட்டு, மணி, மணி! என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது எப்படி முகநூல் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் உங்களை பற்றிய செய்திகளை உங்களுக்கு தெரியாமல் திரட்டி உங்களுக்கு இவை தான் பிடிக்கும் என்று கணித்து அதற்க்கு தகுந்த விளம்பரங்களை முகநூல், ட்விட்டர் உபயோகிக்கும் போது தருகிறார்கள் என்பது பற்றியது. 

என்ன நடக்கிறது இங்கே, நீங்கள் ஒரு பொருளை பற்றி கூகுளில் தேடுகிறீர்கள், அதனை பற்றி ரிசர்ச் செய்கிறீர்கள் பின்னர் முகநூலில் கேக்குரீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அது போதும் அவர்களுக்கு. தற்போது கூகுள், FB, ஆப்பிள் என்று அனைவரும் செய்வது செய்து கொண்டு இருப்பது உங்களை பற்றின முழு செய்திகளையும் சேகரிப்பது.உங்களை பற்றி சேகரித்த செய்தியை கொண்டு உங்களிடமே  பொருட்களை திணிப்பது. 

இப்படி பரிந்துரைகள்  நல்லது தானே என்று நினைப்பவர்களுக்கு, முதலில் வித்தியாசமாக உங்களுக்கு வேண்டியதை மட்டுமே உடுத்த, உண்ண உறங்க என்று கொஞ்சம் அவர்கள் பரிந்துரைப்பதை உபயோகிக்க விளையும் நீங்கள், நாட்கள்  செல்ல செல்ல அவர்கள் என்ன உங்களுக்கு பரிந்துரை செய்கிறார்களோ அதனை மட்டுமே உபயோகிக்க ஆரம்பிப்பீர்கள். பின்னர் மோனோபோலி ஆகி விட கூடும். இது எகோநோமிக்ஸ் பிரச்னை என்றாலும், உங்களை பற்றிய அனைத்தையும் வேறு யாரோ தீர்மானிப்பார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று டொய்லெட் பேப்பரில் இருந்து விமான டிக்கெட் வரை அனைத்தும் அவர்கள் சொல்லி நீங்கள் நடப்பீர்கள். அதாவது கிட்டத்தட்ட ஒரு ரோபோ போல ஆக விடுவீர்கள்.  நிறைய எதிக்ஸ், தனி மனித உரிமைகள் பற்றி பேச்சுக்கள் ஆரம்பிக்க பட்டாலும், நடந்தாலும், எவ்வளவு தூரம் அவை செயல் படுத்த படும் என்று தெரியவில்லை.

டிஸ்கி 
எப்படி பரிந்துரைகள் செய்வது மற்றும் செயற்கை நுண்ணறிவு உபயோகிப்பது (Artificial Intelligence and Machine learning) என்பது குறித்த ஒரு கருத்தரங்குக்கு செல்ல, பேச நேர்ந்தது. அங்கு முகநூலில் , கூகிள் போன்றவற்றில் இருந்து மக்கள் வந்து உரையாற்றினர். அதில் நான் கேட்ட செய்திகளை வைத்தே இதனை எழுதி இருக்கிறேன்.
 
நன்றி.


Sunday, September 20, 2015

பிஞ்சிலே பழுத்த பழங்கள்!

இரண்டு விஷயங்கள் காண, அனுபவிக்க நேர்ந்தது. முதல் விஷயம் கண்டது ஒரு பர்த்டே பார்ட்டியில். இந்திய பெண் குழந்தை ஒன்றுக்கு பர்த்டே என்று சென்று இருந்தோம். அந்த குழந்தை முகுந்த் உடன் பள்ளியில் படிக்கிறாள். அந்த பார்டிக்கு வந்த இன்னொரு குழந்தை முகுந்தை பார்த்து பர்த்டே குழந்தையிடம் "எப்படி ஒரு பாய் உனக்கு ப்ரெண்ட் ஆக இருக்க முடியும். கேர்ள் க்கு கேர்ள் மட்டுமே ப்ரெண்ட் ஆக இருக்க வேண்டும். பாய் ப்ரெண்ட் செட் ஆகாது" என்று ஒரே சண்டை போட்டு கொண்டு இருந்தது. உடனே நான் தலை இட்டு , "என்னமா பிரச்னை" என்று கேட்க்க, அதற்க்கு அந்த குழந்தை, "எப்படி ஒரு கேர்ள் க்கு பாய், ப்ரெண்ட் ஆக இருக்க முடியும், பாய் ப்ரெண்ட் என்றால் கல்யாணம் செய்துக்குவாங்க, இது செட் ஆகாது..ஆகாது" என்று ஒரே சண்டை 6 வயது குழந்தைக்கு எப்படி இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும் யார் சொல்லி கொடுக்கிறார்கள் என்று யோசித்து, "எங்க மா இதெல்லாம் கேட்ட, அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லையே" என்று நான் கேட்க்க, அவள், "சினிமால பார்த்தேன், எனக்கும் தெரியும் " என்று குண்டை தூக்கி போட்டது.

இதனை பற்றி தோழி ஒருவரிடம் புலம்பி கொண்டு  இருந்த போது அவர், இப்போ இருக்க குழந்தைகள் எல்லாம் ரொம்ப அட்வான்சா பேசுதுங்க, இதை பாரு என்று "சன் டிவி யின் குட்டி சுட்டீஸ்" யு ட்யூப்  லிங்க் ஒன்றை அனுப்பினார்.


அதில் வந்த சிறுவன் பேசிய பேச்சை பார்த்து வாயடைத்து விட்டேன். அதுவும், "இது வேறையா " என்று அசால்டாக பேசுவது, பிறகு டேய் என்று வயதில் மூத்தவரை அனைவர் முன்பும் விளிப்பது, "வாயை மூடுப்பா" "அண்ணாச்சிக்கு நட்டு கழண்டுடுச்சு", என்று கூப்பிடுவது அவரின் தாத்தாவை பார்த்து கண்டபடி பேசுவது அதனை பார்த்து குழந்தையின் அம்மா சிரிப்பது கண்டு, இதில் என்ன சிரிக்க இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

மரியாதை என்பது கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டும் போல இந்த குழந்தையிடம். ஒரு 4 வயது குழந்தை இப்படி பேசினால் இது வளர்ந்து பெரியவரானால் எப்படி பேசும். அப்பொழுது அவர் அம்மா இப்படி சிரித்து கொண்டு இருப்பாரா ?


என்னவோ போங்கப்பா..Wednesday, September 16, 2015

கறிகடைகளும், உணவு பாதுகாப்பும், Toxinம்

ஒரு செய்தி கேட்க நேர்ந்தது பிறகு அதனை சார்ந்த  என்னுடைய இந்திய பயணத்தில் நான் கண்ட விசயமும், படித்த புத்தகமும் நினைவுக்கு வந்ததன் விளைவாக இந்த பதிவு.

எங்கள் தெருவில் வசித்த மிகவும் திடமான  ஒரு அம்மா  திடீரென்று இறந்து விட்டதாக என் அம்மா சொன்னார்கள். 40 களின் இறுதியில் இருந்த அவர்கள் எதோ ஒரு விழாவில் அல்லது குலதெய்வம் கோவில் திருவிழாவில் கறி சாப்பாடு சாப்பிட்டு   விட்டு வந்து இருக்கிறார்கள். பின்னர் வயிற்று போக்கும் கடுமையான ஜுரமும் வந்து இருக்கிறது. அவர், சாதாரண ஜுரம் என்று பெரிய அளவில் கவலை படாமல் பாராசிடமால் எடுத்துவிட்டு படுத்து இருக்கிறார்கள். பின்னர் ரத்தத்துடன் கலந்த வயிற்று போக்கு ஆரம்பிக்க இவர்கள் ஆஸ்பத்திரி சென்று இருக்கிறார்கள், அவர்கள், ரத்தத்தில் இன்பெக்சன் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாது என்று கை விரித்து விட்டனர். முடிவாக ஒரு வாரத்தில் இறந்து விட்டார்கள்.

என்ன நடந்தது?, யார் காரணம் என்றெல்லாம் செல்லுவதற்கு முன்பு "Food borne illness" எனப்படும் உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும் சில நோய்கள் பற்றி சிறு குறிப்பு.

மஞ்சக்காமாலை, டைபாயிட், காலரா, Listeriosis, Camylobacteriosis மற்றும் E . Coli போன்ற பலவும் கெட்டுபோன உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் பரவுகின்ற கவனிக்காவிட்டால் உயிரை குடிக்கும்.

எப்படி இந்த நோய்கள் பரவுகின்றன. சுத்தமில்லாத இடங்களில் கையாள படும் இறைச்சி அல்லது சுத்தமில்லாத அல்லது கழிவு நீர் புழங்கும் இடத்தில் மேயும் அல்லது உண்ணும் கால்நடைகளை மாமிசமாக எடுத்து கொள்வதன் மூலம் பரவலாம். அல்லது முழுதாக சமைக்கபடாத இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுவதன் மூலமும் பரவலாம்.

சரி, கறி கடைகளுக்கும் நோய்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு. இந்தியாவில் உணவு பாதுகாப்பு அமைப்பு என்று ஒன்று இருப்பினும், தினசரி கறி வெட்டும் கறி கடை காரர்களும், ஹோட்டல் காரர்களும் எந்த உணவு பாதுகாப்பு முறைகளும் பின்பற்றுவதில்லை. நான் பார்த்த வரை நிறைய ஆடுகள் கறிக்காக வெட்ட படுவதற்கு முன்பு குப்பை கூளங்களில் மட்டுமே மேய்ந்து கொண்டு இருந்தன. இதே நிலை கோழி இறைச்சி விற்கும் இடத்திலும் பார்க்க நேர்ந்தது. கோழிகளை முட்டைக்காக உற்பத்தி செய்யும் இடங்களிலாவது ஏதாவது உணவு பாதுகாப்பு முறைகள் பின்பற்ற படுகின்றனவா என்று தெரியவில்லை. அல்லது அங்கும் லஞ்சம் வாங்கி கொண்டு செர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்களா தெரியவில்லை.  ஒரு வேலை முட்டைகள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாக்டீரியா தாக்கி இருப்பின், பச்சை முட்டைகளையும், ஹால்ப் பாயில் முட்டைகளையும் சாப்பிடும் மக்களுக்கு அவை கட்டாயம் வரலாம். 

நோய் வயப்பட்ட கால்நடைகளும் கோழிகளும் முழுதும் கொல்லப்பட வேண்டும். அவற்றின் இறைச்சியை உபயோகிக்காமல் அப்புறபடுத்த வேண்டும் இதுவே, உணவுபாதுகாப்பு வாரியத்தின் கட்டுப்பாடாகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை , கோழிக்கு சீக்கு வந்துட்டா கறியாகிடும் என்பதேகண்டு இருக்கிறேன். ஏதனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.

அமெரிக்காவில் FDA அனுமதி பெறாமல் எந்த உணவும் சேர்டிபிகட் பெற இயலாது, சேர்டிபிகட் இல்லை என்றால் இறைச்சி மார்க்கெட்க்கு வர இயலாது. விற்க இயலாது. அப்படி ஒரு நிலை இருப்பினும், பல பில்லியன் அளவில் நிறைய இறைச்சி பொருட்கள்  recall செய்ய படிபடுகின்றன. அதுவும் E. coli மற்றும் Salmonella தொற்று மிக பிரபலம் மற்றும் அதிகம். 2003 இல் மட்டும் 405 பில்லியன் இழப்பு உருவாக்கி இருக்கின்றன.   அதுவும்  Escherichia coli O157 (O157 STEC) எனப்படும் ஒரு திரிபு பாக்டீரியா, Shiga எனப்படும் ஒரு நச்சு பொருளை உண்டாக்கி விடுகிறது. இதனை உண்ணும் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படலாம்.


இதனை முன்னிறுத்தி  ராபின் குக் அவர்களின் "Toxin" என்ற நாவல் படிக்க நேர்ந்தது. எப்படி இன்பெக்சன் ஏற்பட்ட சில நாட்களில் இந்த Escherichia coli O157 பாக்டீரியா ஷிகா என்னும் நச்ஹ்சு பொருளை வெளியிட்டு நோயாளியை கொல்லுகிறது என்று படிக்கும் போது பயமுறுத்தியது. 

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இப்படி நிறைய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு ஒத்து வராது என்றாலும் உணவு மூலம் பரவும் வயிற்று போக்கும், காலரா டைபாயிட் போன்றவையும் அதிகமாக ஏற்படும் என்பதால் கறிகடைகளில் பின்பற்ற வேண்டிய அடிப்படை சுகாதாரம் பற்றியும் உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டிய அவசியம் பற்றியும் மக்கள்  விழிப்புணர்ச்சி உடன் இருக்க வேண்டும்  என்று நினைக்கிறன். இல்லையேல் நிறைய food borne நோய்களும் உயிரை குடிக்கும் கொல்லிகளாக வளரும்.

நன்றி.
 

Tuesday, September 15, 2015

லட்சியங்கள் கொல்லபடுவது எப்படி?

உங்களுக்கு ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று லட்சியம் இருக்கிறது அது வெறியாகி  இருக்கிறது. ஆனாலும் எப்படி லட்சியங்கள் கொல்லபடுகின்றன?, யாரால் கொல்லபடுகின்றன?.
என்பதை பற்றிய TED talk  ஒன்று கேட்க்க நேர்ந்தது. 6 நிமிட சொற்பொழிவு மட்டுமே.. ஆனாலும் 5 பாயிண்டுகளை சொல்கிறார் சொற்பொழிவாளர் Bel Pesce. அதன் சாராம்சம் இங்கே முதல் பாயிண்ட்: ஒரு நாளில் வெற்றி அடைந்து விடலாம் என்று நினைப்பது, அது நடக்காவிட்டால் மனமுடைந்து போவது. இதனை கேட்கும் பொது எனக்கு தமிழ் சினிமாவில் காலம் காலமாக சொல்லப்படும் ஒரு பாட்டில் பணக்காரனாவது ஏனோ நினைவுக்கு வந்தது.

இரண்டாவது பாயிண்ட்: அடுத்தவர்கள் வந்து உங்களுக்கு வழி காட்டுவார்கள் அல்லது உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வைத்து இருப்பார்கள் என்று நம்புவது. எப்பொழுதும் அடுத்தவர்களை சார்ந்து இருப்பது. பண விசயமானாலும் அல்லது அறிவுரைகள் என்று ஏதாவது ஒன்றுக்கு நம்பி இருப்பது.

மூன்றாவது பாயிண்ட்:  ஒரு நிலையை அடைந்தவுடன் அப்பாடா என்று ரிட்டையர் ஆகா நினைப்பது. இது சிறிய விஷயம் போல தெரிந்தாலும் மிகவும் முக்கியமானது. ஒரு நிலையை அடைந்து விட்டோமே, அதில் வரும் வருமானமே போதும் என்று நினைத்து ஓய்வெடுப்பது.  இதனை கேட்டபோது, ஆசைக்கு ஒரு அளவு வேண்டும், அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே, என்று நம் ஆன்மீக வாதிகள் சொன்னது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது. உண்மையில், கனவுகள் சாதிக்க வேண்டும் என்று  வெறி இருப்பவர்களுக்கு அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மட்டுமே இருக்கும். இருப்பது போதும் அது சாஸ்வதமானது என்று நினைத்தால் சில வருடங்களில் நீங்கள் மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விடுவீர்கள். ஒரு இலக்கை அடைந்தவுடன், அடுத்தது ஒரு இலக்கு நிர்ணயித்து கொண்டு அதனை அடைய முயல வேண்டும் 

நான்காவது பாயின்ட்: மிக முக்கியமான ஒன்று இது. தோல்விக்கு அடுத்தவர்கள் அல்லது சுற்று சூழல் தான் காரணம் என்று நம்புவது. ஒரு பொருளை தயாரிக்கிறீர்கள் அது விற்பனை ஆகா வில்லை என்றால் உடனே..மார்க்கெட் சரியில்லை, மக்கள் சரியில்லை, டீம் சரியில்லை அதனால் தான் இப்படி நடந்தது என்று நம்புவது. உண்மையில் குற்றம் சொல்ல பட வேண்டியவர் நீங்கள் தான். நீங்கள் நன்கு மார்க்கெட் அனலிசிஸ் செய்யவில்லை. உங்கள் டீமை மோடிவேட் செய்யவில்லை..என்று அனைத்தும் உங்களை மட்டுமே.

ஐந்தாவது பாயிண்ட்: கோல் அல்லது முடிவு மட்டுமே நோக்கம் என்று நினைப்பது. உதாரணமாக, மலை ஏறும் போட்டியில் உயரமான மலையை கஷ்டப்பட்டு அடைந்த மக்கள், மலை உச்சியில் ஏறியவுடன் ஒரு நிமிடம் சந்தோசத்துடன் சாதித்து விட்டோம் என்று குதிப்பார்கள். அந்த சந்தோசம் ஒரு 5-10 நிமிடம் மட்டுமே..பின்னர். வேறு என்ன கீழே இறங்கலாம் என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். உங்களின் நோக்கம் மலை உச்சியை  அடைவது என்பது மட்டுமே என்றால், சீக்கிரம் போர் அடித்து விடும் மாறாக, இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் என்று நினைத்து பாருங்கள். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று உற்சாகம் கிடைக்கும்.

மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை, என்னை பொருத்தவரை, சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைவருக்கும் இவை முக்கியமானதாக தோன்றியது.

நன்றி.
 

Sunday, September 13, 2015

காதல் தோல்வியும், பெண்களும், ப்ரீ அட்வைசும்

காதல் தோல்வியால் துபாயின், புர்ஜ் கலிபாவில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணை பற்றிய செய்தியை படிக்க நேர்ந்தது. இந்த செய்தியை படித்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்கள் இங்கே. 

பொதுவாக காதலித்து ஏமாற்றுபவர்கள் என்று பெண்கள் மீது குற்றம் சட்டபடுவது உண்டு. அதுவும் இன்றைய திரை படங்கள் முக்கியமாக தமிழ் அனைத்திலும் காதல் தோல்வி பற்றிய ஒரு சீன் கூட இல்லாமல் படம் இருப்பதில்லை. அதுவும், பெண்களை கண்டபடி திட்டி ஒரு பாட்டு கட்டாயம் இருக்கும். "இந்த பொண்ணுங்களே இப்படி தான்", "போங்கடி நீங்களும் உங்க காதலும்"....blah blah.. என்று நிறைய. 

உண்மையில் காதலித்து ஏமாற்றுபவர்கள் பெண்கள் தானா?. இப்படி பெண்களை குற்றம் சொல்லுவது சரியா?. ஒரு சில ஹை ப்ரொபைல் காதல் தோல்வி செய்திகளை வைத்து இப்படி செய்வது நியாயமா? எனக்கு தெரிந்த இரண்டு பெண்களின் காதலும் ஏமாற்றமும் இங்கே. 

முதல் பெண் எனக்கு கல்லூரியில் சீனியர். எங்களது பெண்கள் கல்லூரி என்றாலும், அருகில் ஆண்கள் படிக்கும் கல்லூரியும் இருந்ததால் நிறைய காதல் விவகாரங்கள் அரசல் புரசலாக நான் கேள்வி பட்டதுண்டு. என் சீனியர் மிக அழகானவர். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். பெற்றோர் சிறு வயதில் இறந்து விட, பாட்டி தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆண்கள் கல்லூரியில் படித்த ஒரு பையன் இரண்டு வருடங்கள் சுற்று சுற்று என்று சுற்றி ஒரு வழியாக இருவரும் காதலிக்க தொடங்கி இருந்தனர். அந்த பையன் இந்து. காதலிக்கும் போது உலகம் தெரியாமல் சுற்றி திரிந்த அவர்களது காதலை பெற்றோர் எதிர்க்க ஒரு நாள் ஊரை விட்டு ஓடிபோய் விட்டார்கள். கல்லூரி முழுக்க அதே பேச்சாக இருந்தது. பின்னர் எங்கோ சென்று திருமணம் செய்து கொண்டார்கள் என்று பேசி கொண்டார்கள். பல வருடங்கள் கழித்து வேறு ஒரு ஊரில் என்னுடைய சீனியர் அக்காவை சந்திக்க நேர்ந்தது. ஒரு குழந்தை ஆனவுடன் கணவன் ஓடி விட்டான் என்றும். டிகிரி கூட முடிக்காததால் தற்போது தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்திற்கு  வேலை செய்து குழந்தையை காப்பாற்றி வருவதாகவும், தாத்தா, பேத்தி ஓடிப்போன அவமானத்தில் இறந்து விட, தற்போது பாட்டியுடன் வாழ்ந்து வருவதாகவும் குறிபிட்டார். அவரிடம் காதல் என்று தற்போது பேசி பாருங்கள், உங்களை கண்டபடி திட்டுவார்.

அடுத்த பெண்னை நான் சந்தித்தது எதிர்பாராதது. நானும் என் தோழியும் எப்போதும் கல்லூரிக்கு செல்ல பஸ் நிறுத்தம் வரை நடந்து செல்லுவது வழக்கம். அப்பொழுது, அவள் தன்னுடைய வகுப்பில் படிக்கும் ஒருவரை பற்றி சொல்லி கொண்டு வந்தாள். அப்பொழுது பஸ் நிறுத்தத்தில் எங்களிடம் எங்கள் பின்னால் அதுவரை வந்த ஒரு நடுத்தர வயது அம்மா, "ஆம்பளங்கள நம்பாதீங்க மா, காரியம் முடிஞ்சவுடன் கழட்டி விட்டுடுவானுங்க, என்ன பாரு, இப்படி ஒருத்தன நம்பி ஏமாந்து போனவ மா நானு" என்று அழுது கொண்டே சொல்லி சென்றார்.

பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று வரிந்து கட்டி கொண்டு டாஸ்மாக் பாட்டு வைக்கும் இயக்குனர்கள் எத்தனை பேருக்கு பெண்களை நம்ப வைத்து கழுத்து அறுத்து செல்லும் ஆண்களை பற்றி திட்ட அவர்களை பற்றி பட்டு வைக்க தைரியம் வரும். ஆண்கள் ஏமாந்தால் அது அவனுக்கு மட்டுமே ஏமாற்றம், பெண்கள் ஏமாற்ற பட்டால் அது அவளுடைய குடும்பத்தையும் பிடித்து கொள்ளுகிறது. அதுவும் காதலித்து கல்யாணம் செய்து விட்டு வயிற்றில் பிள்ளையை கொடுத்து விட்டு கலட்டி விடும் எத்தனயோ ஆண்கள்இருக்க தானே செய்கிறார்கள். அனாதை விடுதியில் வீசப்படும் பல குழந்தைகள் இப்படி காதலால் காதலித்து ஏமாற்ற பட்டதால் உருவானவை என்ற உண்மை உலகம் அறியாததா. ஒருவனை மனதார காதலித்து தன்னையே கொடுத்து பின்னர் அவமானத்தை சந்தித்து நடுத்தெருவில் நிற்கும் எத்தனயோ பெண்களுக்கு இந்த சமுதாயம்  கொடுக்கும் பட்டங்கள் பல பல.

சரி அப்பொழுது உண்மை காதலினை ஏமாற்றும் பெண்கள் இல்லவே இல்லையா? என்று கேட்பவர்களுக்கு, ஒரு பெண் ஏமாற்றுகிறாள் என்றால் அதற்க்கு முக்கியமான காரணம்,  ப்ரீ அட்வைஸ் கொடுக்கும் தோழிகளும் சொந்தங்களும்.காதலிக்கும் போது எதனையும் பார்க்காமல் குறைகளை நோக்காமல் காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும், சொந்தங்கள் உண்மை நிலையை எடுத்து சொல்லிகிறேன் பேர்வழி என்று ஒரு வழி செய்து விடுவார்கள். உதாரணமாக எனக்கு தெரிந்தே இரண்டு காதலர்களை எங்கள் தெருவில்  பிரித்து வைத்து இருக்கிறார்கள். இரண்டும் சாதி மதங்களை காட்டி பிரிக்க பட்டவை அல்ல, மாறாக பொருளாதாரத்தை முன்னிறுத்தி பிரித்து வைக்கும் வேலையை சொந்தங்கள் சேர்ந்து ப்ரீ அட்வைஸ் கொடுக்கிறேன் என்று பிரித்தவை. அந்த பெண் காதலித்தது ஒரு கொத்தனார் வேலை செய்யும் ஒருவரை, இந்த பெண் படித்தது டிப்ளோமா படித்தது. காதலிக்கும் போது எதுவும் தெரியாமல் காதலித்த இவர்கள், அந்த பெண் வீட்டில் இவளுக்கு கல்யாணம் செய்ய முயலும் போது, இவள் முடியவே முடியாது என்று சொல்ல, மூன்று மாதங்கள் சொந்த காரர்கள் வீட்டில் அடைத்து வைத்து தினமும், "ஒரு கொத்தனார் எப்படி உன்னை காப்பாற்ற முடியும்..என்ன சந்தோசத்தை அனுபவிக்க போற, வாழ்க்கை பூராம் சாப்பாட்டுக்கு கஷ்ட பட போறியா?" என்று ப்ரீ அட்வைஸ் தந்து, தந்து அவள் மூன்று மாதங்கள் கழித்து அவனை மறந்து விட்டு அவள் வீட்டில் பார்த்த பையனை கல்யாணம் செய்து கொண்டாள். 

இன்னொரு பெண், விடலை பருவ காதல், பத்தாவது படிக்கும் இவளுக்கும் ஒரு மெக்கானிக்க்கும், ஓடிப்போக இருந்த இவர்களை பிடித்து பின் அந்த பையனை போலிஸ் ஸ்டேசனில் வைத்து செமத்தியாக கவனித்து பின்னர் இந்த பெண்ணின் படிப்பை நிறுத்தி வேறு கல்யாணம் செய்து வைத்து இருக்கிறார்கள்.அவள், தன் காதலனை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள். இப்போது மகளை இழந்து நிற்கிறார்கள். 

சிலர் சொல்லலாம், தொடர்ந்து ஒரு பெண் ஏமாற்றுகிறாள் என்று. அப்படி ஏமாற்றுபவர் ஆயிரத்தில் ஒருத்தி மட்டுமே. பல நேரங்களில் சூழ்நிலைகள் காதல் செய்பவர்களை பிரித்து வைக்கலாம், அதற்காக பெண்கள் மட்டுமே இப்படி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் மனதார காதலித்த  எந்த ஒரு ஆணும் பெண்ணும்,  அடுத்தவர்களின் நினைவு வராமல் வாழ முடியாது. இது தான் உண்மை . இதில் ஆணுக்கு ஒரு பீலிங் , பெண்ணுக்கு வேறு பீலிங் என்று எதுவும் இல்லை. பெண்கள் ஆண்களை போல தண்ணி அடித்து கொண்டு பிதற்றுவதில்லை. வெளி உலகிற்காக வேறு கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும்,ஆழ் மனதில் தன் காதலுக்கு என்று எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.  இது நான் சந்தித்த பல காதல் தோல்வி பெண்கள் சொன்னது.  அதனால் காதல் தோல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமானது. அதனால் தயவு செய்து இனிமேல் காதலில் தோல்வி என்றால் பெண்ணை கண்டபடிதிட்டுவதை விடுங்கள் . 

நன்றி 


Saturday, September 12, 2015

அதிக கண்டிப்பும், அதிக செல்லமும், பாசிடிவ் பேரேண்டிங்ம்

தேங்க்ஸ் டு google images

இந்தியாவில், ஏன் உலகில் அதிகம் இருக்கும் மக்கள் என்றால், பொருளாதாரத்தில் மிடில் கிளாஸ் நிலையில் இருக்கும் மக்கள் தான்.   இவர்கள், பெரும்பாலும் நல்ல வேளையில் இருக்கும் மக்கள், தாங்கள் வாழ முடியாத கனவு கண்ட வாழ்கையை தங்கள் குழந்தைகள் மூலமாக வாழ நினைக்கிறவர்கள். 

என்னை பொருத்தவரை ரெண்டுகெட்டான் ஆக இருந்து டார்செர் கொடுக்கும் மக்கள் என்றால் அது லோயர் மிடில் கிளாஸ் லிருந்து அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் வரை இருக்கும் இந்த மக்கள் தான். பெரும்பாலும் சுயம் கொண்டு இவர்கள் முடிவுகளை எடுப்பதில்லை, மாறாக இவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களை பார்த்து தாங்களும் அது போன்று இருக்க வேண்டும் என்று வாழ்பவர்கள். அடுத்தவர்கள் தன்னை பற்றி என்ன சொல்வார்கள் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்வதாலேயே,  தங்களை தங்கள் குழந்தைகளை முடிந்த அளவு ஹை கிளாஸ் மக்கள் போல காட்டி கொள்ள பிரயத்தன படுவார்கள். குழந்தைகளை கான்வென்ட் போன்ற பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் அவை எவ்வளவு பீஸ் என்றாலும் எப்படியாவது சம்பாதித்து செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். 

இவர்களின் குழந்தைகள் மற்ற தெருவில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் முக்கியமாக வெளியே புழுதியில் விளையாட விட மாட்டார்கள். ஏன் அவர்களுடன் பேச கூட அனுமதிக்க மாட்டார்கள். ஹை கிளாஸ் மக்களுடன் மட்டும் தான் ப்ரெண்ட்ஷிப் வைத்து கொள்ள வேண்டும் என்று குழந்தைகளை வளர்ப்பார்கள்.  பெர்பெக்ட் ஆக வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளை எப்பொழுதும் ஏதாவது சொல்லி கரெக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். இப்படி உட்காரு, அப்படி நிக்காதே,...என்று ஏதாவது  சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்கள் சொல்லுவதை குழந்தைகள் கேட்கவில்லை என்றால், தண்டனைகள் தருவார்கள். அதாவது இவர்களின் அகராதியில், கண்டிப்பாக வளர்கிறேன் என்றால்  ஒரு மெசின் போல ரோபோ போல வளர்க்க வேண்டும் என்று அர்த்தம் அதற்க்கு அதிகம் முயற்சிப்பார்கள்.  எப்படி அதிக கண்டிப்பு கொண்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் சந்தோசம் இல்லாமல் வளர்கிறார்கள் என்பதை குறித்த ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. இப்படி சூழலில் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவராக வாழ்கையில் சந்தோசமில்லாமல், வளர வளர மிக கோபக்காரர்களாக, அதிக விரக்தி அடையும் குழந்தையாக வளரும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது, இதனை ஏனோஇப்படி பட்ட  மக்கள் அறிவதில்லை. 

இன்னொரு வகை மக்களும் அவர்கள் கண்டிபானவர்களுக்கு எதிர்மறையாக   இருக்கிறார்கள். அவர்கள், எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து அல்லது அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து குழந்தைகளிடம் வேலை வாங்குவார்கள். அதாவது, நீ இதனை செய்தால் உனக்கு சாக்கலட் தருவேன், இல்லை ஐஸ் கிரீம் தருவேன் என்று சொல்பவர்களையும் சந்தித்து இருக்கிறேன். பெரும்பாலும் ஒரே குழந்தை இருக்கும் மக்கள் அல்லது திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இவை நடக்கலாம். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பயங்கர நீடி எனப்படும் "ஐ", "மீ", "மைசெல்ப்" எனப்படும் தன்னை சுற்றியே வாழ்க்கை நடக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள். 

சரி இப்படியும் இருக்க கூடாது அப்படியும் இருக்க கூடாது என்றால் எப்படி தான் இருப்பது . எப்படி தான் குழந்தைகளை வளர்ப்பது. "பாசிடிவ் பேரேண்டிங்" எனப்படும் குழந்தைகளை உற்சாகபடுத்தும் அதே சமயம் கண்டிப்புடன் இருக்கும் வழியே சிறந்தது என்கின்றனர். 

அதிக கண்டிப்புடன் தொட்டதுக்கேல்லாம் தண்டனை நீங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு குளிர் விட்டு விடும்.அடிக்க  தானே தருவீங்க தாங்க என்று பெற்றோரிடம் முதுகை காட்டும் குழந்தைகளை பார்த்து இருக்கிறேன். மிகவும் செல்லம் கொடுத்தால் எல்லாவற்றியும் அழுதே சாதித்து விடுவார்கள். 

ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால் மூன்றே காரணங்களால் அதனை செய்கிறது 

1.எப்படி சரியாக  செய்ய வேண்டும் தெரியாததால்
2. எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தெரியும் ஆனால் தன்னை கட்டுபடுத்த முடியாததால் 
3. எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தெரியும் ஆனால் கவலை படாததால்.

முதல் காரணத்தை சமாளிப்பது எளிது. இப்படி தான் செய்ய வேண்டும் என்று  நாம் சொல்லி கொடுக்கலாம், 

இரண்டாவது வகை,  எப்படி செய்யும்  ஆசையை கட்டுபடுத்துவது என்று சொல்லி கொடுக்கலாம்.வேறு வகையில் கவனத்தை திருப்ப உதவலாம்.

மூன்றாவது வகை, இது செய்தால் உனக்கு என்ன பிரச்னை வரும் என்று சொல்லி புரிய வைக்கலாம்.

 முக்கியமாக,  குழந்தைகளுடன் குழந்தைகளாக விளையாட வேண்டும், அதே நேரம் அவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது அதனை நாம் ஊக்குவிக்கவும் வேண்டும். எல்லாவற்றையும் அவர்களுக்கு நாமே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. அதே நேரம், கண்டிக்க வேண்டிய நேரத்தில் அன்பாக கண்டிக்கவும் வேண்டும். 


டிஸ்கி 

இது என் அனுபவத்தில் கண்டதை வைத்து எழுதியது. வேறு கருத்துகள் இருப்பின் தெரிவிக்கவும்


Thursday, September 10, 2015

"Ashley Madison" ஹாக் சொல்லும் செய்திகள் என்ன?

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் அல்லது உலகின் பல செய்தி நிறுவனங்கள், ஒரு செய்தியை வைத்து  கதறி கொண்டு இருக்கின்றன. அது, Ashley Madison என்னும் திருமணதிற்கு வெளியே தொடர்பு ஏற்படுத்தி தரும் தளத்தில் இருந்து கசிந்த அல்லது கசிய விடப்பட்ட மக்களின் பர்சனல் விவகாரங்கள்.


Ashley Madison என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு?

எப்படி sathee, தமிழ் மேட்ரிமோனியல் போன்றவை திருமணம் செய்ய காத்திருக்கும் மணமக்களை சேர்த்து வைக்க பயன் படுகின்றனவோ, அதே போல திருமணம் ஆன ஆணும் பெண்ணும், அல்லது கமிட்டெட் உறவுகளில் இருக்கும் பலரும், வெளியே அல்லது ஊர் பேர் தெரியாதவர்களுடன்  தொடர்பு ஏற்படுத்தி கொள்ள விரும்பினால் அதற்க்கு உதவும் தளம்.

இதில் மெம்பெர் ஆக பல மில்லியன் மக்கள் பல நாடுகளில் சேர்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும், தங்கள் பெயர், முகவரி மற்றும் கிரெடிட் கார்டு  கொடுத்து, தங்களுக்கு ஒரு அப்பைர் வேண்டும், தங்களை பற்றிய செய்திகள் ரகசியமாக இருக்க வேண்டும் என்ற குறிப்பிட்டு சேர்ந்து இருகிறார்கள். உங்களை பற்றிய செய்திகள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டதால் பலரும் அதிக பணம் கொடுத்து சேர்ந்து இருகிறார்கள். இதில் பல பெரிய பெரிய தலைகளும் அடங்கும்.

தற்போது அவற்றில் பலரின் பெயர், முகவரி, கிரெடிட் கார்டு விஷயங்கள், இன்னும் பல பல பர்சனல் விஷயங்கள் ஹாக் செய்ய பட்டு, திருடப்பட்டு, கசிய விட பட்டு இருக்கின்றன. இது பலரின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது.

எப்படி இன்டர்நெட் செக்யூரிட்டி இருக்கிறது பாருங்கள், ப்ரைவசி என்று ஒன்றுமே இல்லை.  யாரும் எது வேண்டும் என்றாலும் செய்யலாம் போல என்று பலரும் கூப்பாடு போட்டாலும், இந்த ஹாக் மூலம் ஒரு விஷயம் தெளிவாக புலப்பட்டு இருக்கிறது.

அது, என்ன தான் நீங்கள் மிகவும் அட்வான்ஸ் நாடு என்று அழைக்கப்படும் மேற்கத்திய நாடுகளில் வசித்தாலும், அங்கே டைவோர்ஸ், லிவிங் டுகெதர்  எல்லாம் சர்வசாதாரணமாக இருந்தாலும் இன்னும் திருமணதிற்கு வெளியே தொடர்பு ஏற்படுத்தி கொள்வது  என்பது அவர்களை ஈர்க்கிறது. அதுவும் தனக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள தானாகவே முன்வந்து பல ஆண்களும்  இந்த சைட் இல் பணம் கட்டி சேர்ந்து இருக்கிறார்கள். பெண்கள் இதில் ரெஜிஸ்டர் செய்வதற்கு பணம் கட்ட தேவை இல்லை. ஆண்கள் மட்டுமே இதற்க்கு பணம் கட்ட வேண்டும்.

இது எதனை குறிக்கிறது. தங்கள் திருமணத்தை இவர்கள் துண்டிக்க விரும்பவில்லை ஆனால், அதே சமயம் ஒரு கிளர்ச்சி இவர்களுக்கு தேவை பட்டு இருக்கிறது.
பெண்களை பொருத்தவரை, இது கம்பானியன்ஷிப் என்று ஆரம்பித்து பின்னர் வேறு விதமாக முடிந்து இருந்தாலும், ஆண்களை பொருத்தவரை இது முழுக்க முழுக்க இண்டிமசி சம்பந்த பட்டதாகவே இருந்து இருக்கிறது. அப்படி என்றால் குடும்பத்தில் இன்டிமசி அல்லது கம்பானியன் ஷிப் இல்லை என்று தான் இவர்கள் இப்படி சென்றார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு சிலர் வீட்டில் மிகவும் சந்தோசமாக இருந்தாலும் ஒரு வெரைட்டி வேண்டும் என்று இதில் பணம் கட்டி சேர்ந்து இருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக மிடில் ஏஜ் ஆண்கள் இந்த வலையில் விழுந்து இருகிறார்கள்.

பொதுவாக இது போன்ற அப்பைர்கள் எல்லாம்  டோபோமைன் என்னும் வேதிப்பொருள் தரும் ஒரு மயக்கம். போதை மருந்துக்கு இணையாக கிளர்ச்சி கொடுக்கும் இந்த வேதிப்பொருள் செய்யும் வேலை தான் என்றாலும், மேற்கத்திய நாடுகளை போன்ற ஓபன் ரிலேசன் ஷிப் இருக்கும் நாட்டிலேயே இப்படி சென்று மக்கள் விழுந்து இருக்கிறார்கள் என்றால், மிகவும் கட்டுபாடான சமூகமும் அல்லாமல் கட்டவிழ்த்து விட்ட சமூகமும் அல்லாமல் திரிசங்கு சொர்க்கம் போல இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் இப்படி திருமணதிற்கு வெளியே நடக்கும் இந்திராணி முகர்ஜி போன்றவர்களின் தொடர்புகளும்  அதன் விளைவாக  நடக்கும் பிரச்சனைகள், குற்றங்கள் மற்றும்  கொலைகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இவை போன்ற பிரச்சனைகளை மட்டுமே தலையாய பிரச்சனைகளாக வைத்து வியாபாரம் செய்யும் செய்தி ஊடகங்கள் தான் ஆச்சரியம் தருகின்றன என்றால் அதனை வைத்து FB, வாட்ஸ் ஆப்  போன்ற பலவற்றிலும் செய்தி அனுப்பும் மக்களும் ஆச்சரியம் தருகிறார்கள்.

Wednesday, September 9, 2015

வெளிநாட்டுக்கு குடிபெயர்தல்: கனவுகளும் உண்மைகளும்..

உங்கள் குழந்தைகள் படிப்பு மற்றும் நல்ல வாழ்க்கை உங்களுக்கு வேண்டும் என்றால் கனடா போன்ற  வெளிநாட்டுக்கு குடிபெயருங்கள், என்று பல விளம்பரங்கள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய மக்களை நோக்கி இந்த விளம்பரங்கள் வெளியிடபடுகின்றன.

சொல்ல போனால் கனடா நாட்டு கிரீன் கார்ட் எனப்படும் PR கார்டு கிடைப்பது என்பது US ஐ ஒப்பிடும் போது சுலபமே. உங்களின் படிப்பு தகுதிக்கு ஏற்ப குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் PR கார்டு வந்து விடலாம். அப்பாடா, வந்துடுச்சு என்று பலர் பெட்டியை கட்டி கொண்டு குடும்பத்துடன் இங்கு வந்து செட்டில் ஆக ஆரம்பிக்கிறார்கள். டொராண்டோ ஏர்போர்ட்ல் இறங்கும் போதே, "நீங்கள் கனடாவிற்கு புதியவரா?, உங்களுக்கு உதவ என்று எங்களின்  கிரெடிட் கார்டு" என்று CIBC பேங்க்ன் விளம்பரம் பார்க்க முடிந்தது. உடனே நான் கூட, பரவயில்லையே..எப்படி immigrant மக்களை உற்சாகபடுத்துகிறார்கள் பாருங்கள் என்று நினைத்து கொண்டேன்.

ஆனால் உண்மையில் இவர்கள் சொல்வது போல, குடிபெயர்தல் மிக சுலபமா?..நான் பார்த்த சில சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கை வைத்து அனுமானித்தது இங்கே.

உள்ளே நுழையும் வரை கலர்புல் ஆக இருக்கும் பலருக்கும், இங்கே வந்த சில நாட்களில் உண்மை முகத்தில் அறைய ஆரம்பிக்கும். முதலில் நீங்கள் immigrant என்றால் வீடு நிறைய இடங்களில் வாடகைக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படியே, உங்களின் PR கார்டு காட்டி குடியிருக்க வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அது இப்படி குடிபெயற்பவர்களுக்கு என்றே சில குடியிருப்புகள் இருக்கின்றன, அவற்றில் மட்டுமே கிடைகிறது. அவை பெரும்பாலும் லோ இன்கம் ஏரியா எனப்படும் அதிக சேப்டி இல்லாத ஏரியாகளில் மட்டுமே கிடக்கிறது. அங்கு உங்களை போலவே பலர் வெளி நாடுகளில் இருந்து வந்து இருக்கிறார்கள்.


இரண்டாவது முக்கிய பிரச்னை அல்லது மிக மிக மிக முக்கிய பிரச்னை, உங்களுக்கு வேலை கிடப்பது.

நீங்கள் இந்தியாவில் பெரிய டிகிரி வாங்கி இருந்தாலும், இங்கு அந்த டிகிரி எல்லாம் ஒத்து கொள்ள படாது. நீங்கள் இங்கே படித்து ஏதேனும் டிகிரி வாங்கி இருந்தால் மட்டுமே அவை இந்த நாடுகளில் ஒத்து கொள்ள படும். நீங்கள் அங்கே டாக்டர் டிகிரி வாங்கி இருந்தாலும், இங்கே அவை ஒத்து கொள்ள பட மாட்டாது. அதனால் வேலையும் கிடைக்காது. அதனால், நிறைய பேர் சர்வைவல்காக அல்லது வாழ வேண்டும் என்று எந்த வேலையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவை, ஜானிடோர், truck டிரைவர் என்று என்ன கிடக்கிறதோ அவற்றை செய்ய ஆரம்பிகிறார்கள். வேலை பார்த்து கொண்டே படிக்கிறார்கள். அப்படி படித்தாலும் உங்களுக்கு வேலை கிடப்பது நிச்சயம் இல்லை. மாறாக, உங்களுக்கு அனுபவம் இல்லை என்று பல கம்பனிகள் உங்களை beginner அளவு அனுபவம் உள்ள வேலை அல்லது சம்பளம் மட்டுமே தருகிறார்கள். அப்படி ஒரு நிலை அடைய நீங்கள் கிட்டத்தட்ட 2-3 வருட படிப்பு கனடாவில் முடித்து இருக்க வேண்டும்.

வேலை கிடைக்க நெட்வொர்கிங் மிக மிக முக்கியம். வேலைக்கு அப்பளை செய்து உங்களுக்கு இண்டர்வியு வரும் வேலைக்கு செல்லலாம் என்று கனவு காண முடியாது. உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் மட்டுமே அவர்கள் ரெபர் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கிறது. மற்ற படி நீங்கள் தலை கீழ் நின்று குட்டிகரணம் அடித்தாலும் யாரும் வேலை சுலபமாக தர மாட்டார்கள். வேறு வேலை மட்டுமே பார்க்க வேண்டும்.

அடுத்தது கிளைமேட். இங்கே டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மூன்று மாதங்களும் கடுங்குளிர்...மைனஸ் 35 டிகிரி வரை செல்லும் குளிர் பலரை ஏன்டா இந்த ஊருக்கு வந்தோம் என்று வருந்த வைத்து விடுகிறது. அதுவும், புதிதாக குடிபெயர்ந்த பலரும், கார் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் பொது ட்ரான்ஸ்போர்ட் பஸ்களை நம்பி இருக்கும் வேளையில், பஸ் நிறுத்தத்தில் நிற்க கூட முடியாத அளவு கடுங்குளிர் இருக்கும் என்று என் நண்பர்கள் சொன்னபோது மிகவும் பயங்கரமாக இருந்தது.


நன்மைகள் என்று பார்த்தால், படிப்பு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இலவசம். உங்கள் குழந்தைகள் சீக்கிரம் இங்கே பழகி கொள்ளுவார்கள். நீங்கள் முதல் 5-6 வருடம் பொறுத்து கொண்டு தாக்கு பிடித்து கொண்டால் சமாளித்து விடலாம். பின்னர் பிரச்னை இல்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனாலும் முதல் 5 வருடம் வாழ்க்கை பெரிய போராட்டமாகவே இருக்கும். அதனை உணர்ந்து அதற்க்கு ஏற்ப தயார் படுத்தி கொண்டு இங்கு குடிபெயர்வது நல்லது.

டிஸ்கி

இது நான் சந்தித்த நண்பர்களை வைத்து அவர்களின் அனுபவங்களை வைத்து எழுதியது. வேறு கருத்துகள் இருப்பின் வரவேற்க படுகின்றன.

நன்றி.