Monday, January 20, 2014

நுனிப்புல் தலைமுறை!


நீண்ட நாட்களுக்கு பின்னொரு பதிவு. மனதில் நெடுநாட்களாக அரித்து கொண்டிருந்த இந்த விடயம் குறித்து பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா வில் கண்ட  கேட்ட கருத்துகளுக்கு பின்னர் இதனை இன்று பதிய முடிவெடுத்தேன்.

சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் வேலை பார்க்கும் சிலருடன் ( அனைவரும் தமிழர்கள் ) சாப்பிட சரவணா பவன் சென்றிருந்தேன். சாப்பாடு முடித்து காப்பி கொண்டு வரச்சொல்லி காப்பியும் வந்தது. அப்போது நான் "காப்பியை ஆற்றி குடிக்கும் போது தான் சுவையே!" என்று சொன்னேன். உடனே என்னுடன் வந்திருந்த சென்னை பெண், "நீங்க pure தமிழ் பேசுறீங்க" என்றாள். " இப்பெல்லாம் யாரும் சுவைன்னு சொல்லதில்ல, எல்லாரும் taste அப்படித்தான் சொல்லுறாங்க" என்றாள்.


அதன் பிறகு இட்லி பற்றிய பேச்சு வந்தது அப்போது நான் " இட்லி ரொம்ப ஆரோக்கியமானது ஏனென்றால் அதை அவிப்பதால்" என்றேன். உடனே சாப்பிட வந்திருந்த பல இளைய தலைமுறை தமிழர்கள் "அவிக்கிரதுன்னா என்ன?"  என்றார்கள்.  எனக்கு தூக்கி வாரி போட்டது.   பிறகு அவிப்பது என்றால் என்ன என்று நான் விவரிக்க பிறகு கேட்ட அனைவரும் " oh, steam பண்ணுறது, ஓகே." என்றார்கள்.

 மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் மொழி அறிவு  முக்கியம்.  அது எந்த மொழியாயினும் சரி,  தமிழ் மட்டும் என்று இல்லை.  அனைத்து மொழிக்கும் இதே நிலை என்று தான் தோன்றுகிறது.
இப்படி என்னுடன் அரைகுறை மொழி பேசியஅனைவரும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக படித்தவர்கள் அல்லர். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை பாடமாக படித்தவர்கள்.   தமிலிஷ்  ஒரு பேச்சு மொழியாகவே இவர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்.

சரி  தமிழுக்கு தான் இந்த நிலை என்று நீங்கள் ஹிந்தியிலோ அல்லது வேறு மொழியிலோ கேள்விகள் கேட்டாலோ அல்லது புத்தகங்கள் பற்றி கேட்டாலோ இவர்கள் முழிக்கிறார்கள். எந்த மொழியாயினும் 20  முதல் 100  வார்த்தைகள் மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது.  இவற்றை வைத்து எப்படி சொற்றொடர் அமைப்பது என்று சிலர் கற்று கொண்டு மீதி ஆங்கிலம் கலந்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.  

  சரி எல்லாவற்றிலும் ஆங்கிலம் கலக்கிறார்களே இவர்களுக்கு நன்கு ஆங்கிலம்  தெரியும் என்று நினைத்தால் அதிலும் மண் விழும்.  பலருக்கு syllable என்றால் என்ன என்று தெரியாது. Soft c, hard c எப்போது உபயோகிப்போம் என்று தெரியாது.  இவர்கள் அனைவரும் எந்த ஆங்கில புத்தகத்தையும் படித்திருக்க மாட்டார்கள், அப்படி படித்திருந்தாலும் Sydney Sheldon, Jeffrey Archer உடன் நின்றுவிடும்.
 
எந்த மொழியும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றிலும் நுனிப்புல் மட்டுமே மேய்வதால் எல்லாவற்றிலும் குழம்பி ஒரு கூட்டான்சோறு மொழியை மட்டுமே இவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது திண்ணம்.
 
இது நான் சந்தித்த நுனிப்புல் தலைமுறை இளைங்கர்களை பற்றி என் அவதானிப்பு  மட்டுமே.
 
நன்றி.
 










16 comments:

Avargal Unmaigal said...

ஏதாவது ஒரு மொழிப் புத்தகங்களை தொடர்ந்து வாசித்தால் மட்டுமே அவர்களால் ஒரு மொழியை நங்கு அறிந்து கொள்ள முடியும். இந்த காலத்தில் அவர்கள் பாடப் புத்தகங்களை தவிர மற்றவைகளை எல்லாம் SMS மூலமாக மட்டுமே அறிந்து கொள்கிறார்கள் எந்த செய்தியையும் அவர்கள் முழுமையாக படித்து தெரிந்து கொள்வதில்லை. அது மட்டுமல்லாமல் இந்த கால செய்தி பத்திரிக்கைளை படிக்க மிக குறைந்த வார்த்தைகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதுமென்று இருப்பதால் இப்படி பல நுனிப்புல் மேதாவிகள் வலம் வந்து கோண்டிருக்கின்றனர்...


ஒரு சந்தேகம் உங்க ஊரில் சாப்பிட ஒரு நல்ல இடம் கூட இல்லையா என்ன? போயும் போயும் சரவணபவந்தானா?

கோமதி அரசு said...

" இட்லி ரொம்ப ஆரோக்கியமானது ஏனென்றால் அதை அவிப்பதால்" /

அவித்தல் என்ற வார்த்தை நாங்கள் பேசுகிறோம். இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கு தெரிவது இல்லை, வீட்டில் பேசினால் தெரியும்.

துபாய் ராஜா said...

அவதானிப்பு சரிதான். துபாயில் இருக்கும்போது சரவணபவனில் இட்லி சாப்பிட்டு வயிற்றுவலியால் அவதிப்பட்டதை நினைக்கவைத்த பதிவு.கையேந்திபவன் என்றாலும் சூடும்,சுத்தமும்,சுகாதரமாக இருந்தால் சுவைக்காக கூட்டம் கூடும் என்பது அனுபவ அவதானிப்பு.

வேகநரி said...

சரியாகவே கவனிச்சிருக்கீங்க.தமிழ் பேசினா அவமானமென்றும்,ஆங்கிலத்தை எடுத்துவிட்டா தான் மிக உயர்வானது என்ற நம்பிக்கை தமிழகத்தில் மிக ஆழ அகலமாக ஏற்பட்டுள்ளது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.... பல சமயங்களில் தில்லி தமிழர்கள் பேசும் விதத்தில் நொந்து போனதுண்டு....

bandhu said...

மிக்க உண்மை.. சென்னையில் ஒரு வங்கி முன்னாள் ஒரு software engineer பெண் "என் கணக்கிலிருந்து atmஇல் பணம் எடுக்க முயற்சித்தேன்.பணம் இல்லை என காட்டுகிறது. நீங்கள் ஒரு முறை ட்ரை பண்ணுங்களேன்" என்றார் . அழுவதா.. சிரிப்பதா என்று தெரியாமல் முழித்தேன்!

வருண் said...

இன்றைய தமிழர்கள் இப்படித்தான் இருக்காங்க! தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகமாகிக்கொண்டேதான் போகிறது. அந்தக்காலத்திலும் இது இருக்கத்தான் செய்தது, "அஸ்ஸாட்" "மேல் டாப்ல", காஃபி, சார், போன்ற வார்த்தைகள் தமிழில் கலந்து இருந்தது. இப்போ ரொம்ப அதிகமாக ஆங்கிலக் கலப்பு ரொம்ப இருக்க மாதிரி இருக்கு!

திண்டுக்கல் தனபாலன் said...

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

முகுந்த்; Amma said...

நன்றி அவர்கள் உண்மைகள் அவர்களே.

//ஒரு சந்தேகம் உங்க ஊரில் சாப்பிட ஒரு நல்ல இடம் கூட இல்லையா என்ன? போயும் போயும் சரவணபவந்தானா?//

அலுவலகத்துக்கு அருகில் இருப்பதாலும், இந்தியாவில் இருந்து வரும் புதியவர்களுக்கு இது சாப்பிட்டு பழகிய இடம் என்பதாலும் இங்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் :)

முகுந்த்; Amma said...

நன்றி, கோமதிம்மா.

//அவித்தல் என்ற வார்த்தை நாங்கள் பேசுகிறோம். இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கு தெரிவது இல்லை, வீட்டில் பேசினால் தெரியும்.//

உண்மை, ஆனால் பலர் வீட்டில் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிப்பதில்லை என்பதே உண்மை.

முகுந்த்; Amma said...

நன்றி துபாய் ராஜா அவர்களே.

//அவதானிப்பு சரிதான். துபாயில் இருக்கும்போது சரவணபவனில் இட்லி சாப்பிட்டு வயிற்றுவலியால் அவதிப்பட்டதை நினைக்கவைத்த பதிவு.கையேந்திபவன் என்றாலும் சூடும்,சுத்தமும்,சுகாதரமாக இருந்தால் சுவைக்காக கூட்டம் கூடும் என்பது அனுபவ அவதானிப்பு/

உண்மை. சரியான அவதானிப்பு.

முகுந்த்; Amma said...

நன்றி வேகநரி அவர்களே.

//சரியாகவே கவனிச்சிருக்கீங்க.தமிழ் பேசினா அவமானமென்றும்,ஆங்கிலத்தை எடுத்துவிட்டா தான் மிக உயர்வானது என்ற நம்பிக்கை தமிழகத்தில் மிக ஆழ அகலமாக ஏற்பட்டுள்ளது.//

உண்மை இப்படி ஒரு நிலை எந்த மொழிக்கும் நல்லதில்லை.

முகுந்த்; Amma said...

நன்றி வெங்கட் நாகராஜ்

//நல்ல பகிர்வு.... பல சமயங்களில் தில்லி தமிழர்கள் பேசும் விதத்தில் நொந்து போனதுண்டு....//

உண்மை. பல வேற்று மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் இன்னும் பல மொழிக்கலப்புடன் பேச வாய்ப்பு அதிகமே. நன்றி.

முகுந்த்; Amma said...

நன்றி பந்து அவர்களே.

//மிக்க உண்மை.. சென்னையில் ஒரு வங்கி முன்னாள் ஒரு software engineer பெண் "என் கணக்கிலிருந்து atmஇல் பணம் எடுக்க முயற்சித்தேன்.பணம் இல்லை என காட்டுகிறது. நீங்கள் ஒரு முறை ட்ரை பண்ணுங்களேன்" என்றார் . அழுவதா.. சிரிப்பதா என்று தெரியாமல் முழித்தேன்!//

என்னத்த சொல்ல..இப்படி பட்டவர்களை சந்திக்கும் போது நொந்து தான் கொள்ள வேண்டும்.

நன்றி

முகுந்த்; Amma said...

//இன்றைய தமிழர்கள் இப்படித்தான் இருக்காங்க! தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகமாகிக்கொண்டேதான் போகிறது. அந்தக்காலத்திலும் இது இருக்கத்தான் செய்தது, "அஸ்ஸாட்" "மேல் டாப்ல", காஃபி, சார், போன்ற வார்த்தைகள் தமிழில் கலந்து இருந்தது. இப்போ ரொம்ப அதிகமாக ஆங்கிலக் கலப்பு ரொம்ப இருக்க மாதிரி இருக்கு!//


நன்றி வருண் அவர்களே.

உண்மைதான், ஆனால் இப்பொது எல்லா மொழிக்கும் இந்த நிலை வர ஆரம்பித்தே விட்டது. எல்லாவற்றிலும் ஆங்கில கலப்பு!.

முகுந்த்; Amma said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

என் தளத்தை அறிமுகப்படுத்திய கீதா மஞ்சரி அவர்களுக்கும், எனக்கு தெரிய படுத்திய உங்களுக்கும் என் நன்றி.