Sunday, November 2, 2014

அமெரிக்காவிலிருந்து இந்தியா பயணம் இரண்டு மணி நேரத்தில் சாத்தியமா?

இது என்ன புது கதை என்று நினைக்க வேண்டாம். இன்னும் 2- பத்து ஆண்டுகளில் இது சாத்தியம் ஆகலாம். 

The Virgin Galactic SpaceShip2 (VSS Enterprise) By Mark Greenberg/Virgin Galactic

Virgin Galactic நிறுவனம் தற்போது space flight technology எனப்படும் விண்வெளியை தொடும் விண்கலத்தை மாற்றியமைத்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் விண்கலம், சுற்றுபயணம் செல்ல வசதியானதாக மாற வாய்ப்பு உள்ளது. 

செய்திகள் 

அதிவேக Concorde விமானம் போல இந்த விண்கல விமானம் பூமியின் வளிமண்டலத்தை தாண்டி பூமியின் சுற்றுப்பாதையில் நுழைவதால் மணிக்கு கிட்டத்தட்ட 4200 mph அல்லது 6720 kmph செல்ல இயலுமாம்.


கிட்டத்தட்ட புவிஈர்ப்பு இல்லாத ஜீரோ கிராவிட்டி நிலையை எட்டி பயணித்து பின்பு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பின்பு திரும்ப தரை இறங்கும் படி இந்த விமானங்கள் அமைக்க பட்டு இருக்கிறது. இதுவரை Virgin நிறுவனத்தின் SS2 வகை விண்கலவிமானம் பூமியின் stratosphere கீழ் அடுக்குமண்டலத்திலிருந்து மட்டுமே நுழைந்து வெளியேற முடிந்திருக்கிறது.

ஏற்கனவே செய்த இரண்டு சோதனை ஓட்டங்கள் விபத்தில் முடிந்தாலும், அடுத்த வருடம் , இந்த அதிவேக விமானம் சத்தியமென்று Virgin Galactic நிறுவனர் தெரிவித்துள்ளார்.


இதனால் லண்டன் டு சிட்னி பயணம் இரண்டரை  மணி நேரத்தில் சாத்தியமாம். அப்படியெனில், அமெரிக்கா டு இந்திய பயணமும் இரண்டு மணி நேரமாகலாம்.

என்ன ஒரு டிக்கெட் விலை $200,000 மட்டுமே, கிட்டத்தட்ட 640 பணக்காரர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் அதன் மூலம் இந்த நிறுவனம் $80 மில்லியன் பணம் வசூலித்து இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த கம்பெனி நிலவுக்கு சுற்றுபயணம் செல்லும் வசதியும் பொது மக்களுக்கு செய்து தர எண்ணியுள்ளதாக தெரிகிறது.

எப்படியோ இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இரண்டைரை மணி நேர இந்திய பயணம் சாத்தியம் என்றால் மகிழ்ச்சியே. அதே போல டிக்கெட் விலையும் குறையும் என்று நம்புவோம்.

நன்றி 



4 comments:

Avargal Unmaigal said...

ஒரு வேளை நீங்கள் டிக்கெட் புக் பண்ணினால் எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிவிடுங்கள்

தனிமரம் said...

நல்ல விடயம் தான் வரவேற்போம்.

வருண் said...

பறக்கிற நேரம் குறைதால் டிக்கட் விலையும் $200 ஆச்சுனா அடிக்கடி "விசிட்" பண்ணலாம்! :-)))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்....

வேகம் விவேகமல்ல என்பதும் ஏனோ நினைவுக்கு வருகிறது!