ஒரு செய்தி கேட்க நேர்ந்தது பிறகு அதனை சார்ந்த என்னுடைய இந்திய பயணத்தில் நான் கண்ட விசயமும், படித்த புத்தகமும் நினைவுக்கு வந்ததன் விளைவாக இந்த பதிவு.
எங்கள் தெருவில் வசித்த மிகவும் திடமான ஒரு அம்மா திடீரென்று இறந்து விட்டதாக என் அம்மா சொன்னார்கள். 40 களின் இறுதியில் இருந்த அவர்கள் எதோ ஒரு விழாவில் அல்லது குலதெய்வம் கோவில் திருவிழாவில் கறி சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். பின்னர் வயிற்று போக்கும் கடுமையான ஜுரமும் வந்து இருக்கிறது. அவர், சாதாரண ஜுரம் என்று பெரிய அளவில் கவலை படாமல் பாராசிடமால் எடுத்துவிட்டு படுத்து இருக்கிறார்கள். பின்னர் ரத்தத்துடன் கலந்த வயிற்று போக்கு ஆரம்பிக்க இவர்கள் ஆஸ்பத்திரி சென்று இருக்கிறார்கள், அவர்கள், ரத்தத்தில் இன்பெக்சன் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாது என்று கை விரித்து விட்டனர். முடிவாக ஒரு வாரத்தில் இறந்து விட்டார்கள்.
என்ன நடந்தது?, யார் காரணம் என்றெல்லாம் செல்லுவதற்கு முன்பு "Food borne illness" எனப்படும் உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும் சில நோய்கள் பற்றி சிறு குறிப்பு.
மஞ்சக்காமாலை, டைபாயிட், காலரா, Listeriosis, Camylobacteriosis மற்றும் E . Coli போன்ற பலவும் கெட்டுபோன உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் பரவுகின்ற கவனிக்காவிட்டால் உயிரை குடிக்கும்.
எப்படி இந்த நோய்கள் பரவுகின்றன. சுத்தமில்லாத இடங்களில் கையாள படும் இறைச்சி அல்லது சுத்தமில்லாத அல்லது கழிவு நீர் புழங்கும் இடத்தில் மேயும் அல்லது உண்ணும் கால்நடைகளை மாமிசமாக எடுத்து கொள்வதன் மூலம் பரவலாம். அல்லது முழுதாக சமைக்கபடாத இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுவதன் மூலமும் பரவலாம்.
சரி, கறி கடைகளுக்கும் நோய்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு. இந்தியாவில் உணவு பாதுகாப்பு அமைப்பு என்று ஒன்று இருப்பினும், தினசரி கறி வெட்டும் கறி கடை காரர்களும், ஹோட்டல் காரர்களும் எந்த உணவு பாதுகாப்பு முறைகளும் பின்பற்றுவதில்லை. நான் பார்த்த வரை நிறைய ஆடுகள் கறிக்காக வெட்ட படுவதற்கு முன்பு குப்பை கூளங்களில் மட்டுமே மேய்ந்து கொண்டு இருந்தன. இதே நிலை கோழி இறைச்சி விற்கும் இடத்திலும் பார்க்க நேர்ந்தது. கோழிகளை முட்டைக்காக உற்பத்தி செய்யும் இடங்களிலாவது ஏதாவது உணவு பாதுகாப்பு முறைகள் பின்பற்ற படுகின்றனவா என்று தெரியவில்லை. அல்லது அங்கும் லஞ்சம் வாங்கி கொண்டு செர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்களா தெரியவில்லை. ஒரு வேலை முட்டைகள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாக்டீரியா தாக்கி இருப்பின், பச்சை முட்டைகளையும், ஹால்ப் பாயில் முட்டைகளையும் சாப்பிடும் மக்களுக்கு அவை கட்டாயம் வரலாம்.
நோய் வயப்பட்ட கால்நடைகளும் கோழிகளும் முழுதும் கொல்லப்பட வேண்டும். அவற்றின் இறைச்சியை உபயோகிக்காமல் அப்புறபடுத்த வேண்டும் இதுவே, உணவுபாதுகாப்பு வாரியத்தின் கட்டுப்பாடாகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை , கோழிக்கு சீக்கு வந்துட்டா கறியாகிடும் என்பதேகண்டு இருக்கிறேன். ஏதனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.
அமெரிக்காவில் FDA அனுமதி பெறாமல் எந்த உணவும் சேர்டிபிகட் பெற இயலாது, சேர்டிபிகட் இல்லை என்றால் இறைச்சி மார்க்கெட்க்கு வர இயலாது. விற்க இயலாது. அப்படி ஒரு நிலை இருப்பினும், பல பில்லியன் அளவில் நிறைய இறைச்சி பொருட்கள் recall செய்ய படிபடுகின்றன. அதுவும் E. coli மற்றும் Salmonella தொற்று மிக பிரபலம் மற்றும் அதிகம். 2003 இல் மட்டும் 405 பில்லியன் இழப்பு உருவாக்கி இருக்கின்றன. அதுவும் Escherichia coli O157 (O157 STEC) எனப்படும் ஒரு திரிபு பாக்டீரியா, Shiga எனப்படும் ஒரு நச்சு பொருளை உண்டாக்கி விடுகிறது. இதனை உண்ணும் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படலாம்.
இதனை முன்னிறுத்தி ராபின் குக் அவர்களின் "Toxin" என்ற நாவல் படிக்க நேர்ந்தது. எப்படி இன்பெக்சன் ஏற்பட்ட சில நாட்களில் இந்த Escherichia coli O157 பாக்டீரியா ஷிகா என்னும் நச்ஹ்சு பொருளை வெளியிட்டு நோயாளியை கொல்லுகிறது என்று படிக்கும் போது பயமுறுத்தியது.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இப்படி நிறைய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு ஒத்து வராது என்றாலும் உணவு மூலம் பரவும் வயிற்று போக்கும், காலரா டைபாயிட் போன்றவையும் அதிகமாக ஏற்படும் என்பதால் கறிகடைகளில் பின்பற்ற வேண்டிய அடிப்படை சுகாதாரம் பற்றியும் உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டிய அவசியம் பற்றியும் மக்கள் விழிப்புணர்ச்சி உடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். இல்லையேல் நிறைய food borne நோய்களும் உயிரை குடிக்கும் கொல்லிகளாக வளரும்.
நன்றி.
