Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, October 13, 2019

குழந்தைகளும், பொறுப்புணர்வும்!!


picture adopted from
https://www.isd197.org/news/news_archives/2015-16_news_archives/realistically_raising_a_responsible_child#.XaNSxS-ZOgQ

பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கும் குழந்தைகள் பற்றிய முதல் கவலை என்னவாக இருக்கும் என்றால், "எப்படி பொறுப்பா வர போறானோ/போறாளோ தெரியல , எப்போ பாரு டிவி/கம்ப்யூட்டர்/போன்/ கேம்ஸ்  அப்படின்னு திரியுறாங்க?" என்பதாக இருக்கும்.


இது பொதுவாக உபயோகப்படுத்தப்படும் ஒரு வாக்கியம் என்றாலும், கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், பல அர்த்தங்கள் கொண்டது.

பொறுப்புணர்வு என்று எதனை குறிக்கிறோம்?

1. ஒரு காரியத்தை கொடுத்தால், அதனை முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக  செய்து முடிக்கும் தன்மையா?

2. வார்த்தை சுத்தம், தொழில் சுத்தம், வார்த்தை மாறாமல் சொன்னதை செய்யும் தன்மையா?

3. கொடுத்த காலக்கெடுவுக்குள் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தன்மையா?

4. உங்களின் முழு திறமையும் செலுத்தி காரியம் முடிக்கும் திறனையா?

5. தவறு செய்தாலும் நன்மை செய்தாலும், அதனால் விளையும் விளைவின் பலனை ஏற்றுக்கொண்டு கலங்காமல் இருக்கும் திறனிலா?

6. தான் சார்ந்த குடும்பத்துக்கு, வேலைக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு ...தன்னால் ஆன பங்களிப்பை  கொடுத்து நல்ல பேர் வாங்குவதையா?

இப்படி சொல்லி கொண்டே போகலாம். "பொறுப்பு" என்ற ஒரு வார்த்தை பன்முகம், பல பரிமாணங்கள் கொண்டது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் மேலே குறிப்பிட்ட அந்த பல பரிமாணங்களையும் எப்படியாவது கற்று கொள்ள வேண்டும், அல்லது பெற்றோர் அதற்க்கு உதவ வேண்டும்.இது பள்ளி, கல்லூரி, வேலை, குடும்பம் என்று அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.

பொறுப்புணர்வும், கீழ்ப்படிதலும் 

பொறுப்புணர்வு என்று சொன்னாலே பெருபாலான பெற்றோர் அதனை கீழ்ப்படிதல் என்று நினைத்து கொள்கிறார்கள். அதாவது, "நான் என்ன சொல்லுறேனோ/எதிர்பார்க்கிறேனோ, கேட்டு , பதில் கேள்வி எதுவும் கேக்காமல், அதன் படி(யே) நடக்கணும்/செய்யணும் " , இது கீழ்ப்படிதல்.

ஆனால் பொறுப்புணர்வு என்பது " எவரும் இதனை செய், அதனை செய் என்று சொல்லாமல் தானாகவே  எது செய்யவேண்டியதோ, அதனை தானாக செய்வது".

இரண்டுக்கும் ஒரு மெல்லிய கோடு அளவு வித்தியாசமே. அது, "பிறர் எதிர்பார்ப்பு" என்பது போய்  "தானாக முடிவெடுக்க முடியும்" என்ற ஒரு உணர்வு வரும் போது பொறுப்பு வந்துவிட்டது என்று உணரலாம்.

சொல்லப்போனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை, அவர்கள் பெரியவர் ஆன பின்பும் கூட, கீழ்ப்படிதல் கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர, பொறுப்பானவர் ஆக, தானாக முடிவெடுக்க முடிந்தவர் ஆக, அல்ல. தான் சொல்லுவதை கேட்க வேண்டும், பதில் ஏதும் சொல்லாமலே, அப்படியாயின் அவர், பொறுப்பான பிள்ளை. இல்லை எனில் "சொன்ன பேச்சு கேக்காத தறுதலை"

எப்படி பொறுப்புணர்வை வளர்ப்பது?

எப்போது கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு என்பதுபோய்  பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கும்? எவ்வளவு தூரம் குழந்தைகள் கையை பிடித்து நடக்க சொல்லி கொடுப்பது? அல்லது எப்படியாவது போ?  என்று தண்ணீர் தெளித்து விடுவதா? அல்லது எப்போது அவர்களாகவே சென்று கற்றுக்கொள்ளட்டும் என்று விடுவது? எப்போது அவர்க ளுக்கு நம் அறிவுரைகள் தேவை என்று அறிவது? இப்படி பல பல கேள்விகள்.

எப்போதும் பிள்ளைகள் நம் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரின் முதல் முதல் பயமே, "நம்ம கண்ட்ரோலில் இல்லை எனில், பிள்ளை தவறான பாதையில் போயிடும், பின்ன நமக்கு தான் பெரிய பாரம், வேலை" என்ற எண்ணத்திலே , விரல் நுனியில் பிள்ளைகளை வைத்துஇருக்கிறார்கள் . ஆனால், இப்படி வைத்திருப்பின், உங்கள் கட்டளைகளை கேட்கும் ஒரு ரோபாட் போல அவர்கள் இருப்பார்களே தவிர, எப்போது எதனை செய்தால் நல்லது, என்று முடிவெடுக்கும் பக்குவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்.

அதனால், இது உன்னுடைய வேலை, அதனை எப்படி செய்வாயோ அது உன்னுடைய திறமை. ஆனால் இதன் இறுதி நாள் அடுத்தவாரம் , அதற்குள் எப்படி முடிக்க முடியுமோ, முடித்து கொள். ஏதேனும் உதவி தேவை படின் கேள்? என்று சொல்லலாம்.


எப்போது உதவுவது, எப்போது உதவாமல் இருப்பது என்று அறிவது ஒரு கலை 

எப்போது உதவுவது, எப்போதுகுழந்தைகளை சுதந்திரமாக முடிவெடுக்க விடுவது என்று அறிவது என்பது எளிதான விஷயம் அல்ல.

மிகவும் கண்டிப்பாக,நான் சொல்லுவதை கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றுநினைப்பதும் தவறு , என்ன வேண்டும் என்றாலும் செய், எப்படி வேண்டும் என்றாலும் செய், என்று அதிகம் செல்லம் கொடுப்பதும் தவறு. ஒரு பாலன்ஸ் வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டும், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது ஒரு கலை.

அன்பை பொழியும் பெற்றோர் ரோல் 

உதாரணமாக, நீங்கள் நல்ல மூடில் இருக்கிறீர்கள் எனில் குழந்தைகளோடு கருணையாக, அன்பாக அக்கறையாக, அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்டு அவர்களோடு விளையாடி கொண்டு, உதவி கொண்டு இருக்கலாம்" இந்த நேரத்தில், நீங்கள் எந்தவித  எதிர்பார்ப்பில்லாத அன்பை குழந்தை மீது நீங்கள் செலுத்துகிறீர்கள்.

ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோல் 

நீங்கள் எல்லா நேரத்திலும், மேலே சொன்னது போல, அன்பை பொழிந்து  கொண்டிருப்பேன், உண்மை வாழ்க்கை நிலவரம் குழந்தைகளுக்கு தெரியாது, அதனால். சிலநேரம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ரோல் நீங்கள் எடுக்க வேண்டியது வரும்.

இந்த நேரத்தில், நீங்கள் ஒரு வேலை முடிக்க 1. கால அளவு நிர்ணயிக்கலாம் 2. டிஸிப்ளின்  அல்லது இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஒழுக்கம் சொல்லலாம் 3. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடத்தை சொல்லி கொடுக்கலாம். 4. உங்களின் நன் மதிப்புகள் , நற்குணங்கள், கருணை போன்றவற்றை சொல்லி கொடுக்கலாம்.

குழந்தைகள் கேட்டதை உடனே கொடுக்காமல் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைகொடுக்கலாம். இது,  எனக்கு உடனே அது கிடைக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்த உதவும். "Delayed gratification" என்பது குறைந்த மனக்கிளர்ச்சியை, "தான்/தன் சந்தோசம்" என்ற நிலையை விட்டு வர உதவும். இந்த எண்ணமே, வீடியோ கேம், இன்டர்நெட் அடிமையாக பிள்ளைகள்/பெற்றோர் கிடைப்பதற்கு அடிப்படை.

இது தான் "எதிர்பார்க்கப்படும் அடிப்படை ஒழுக்கம் " என்று தெளிவாக சொல்லி விடுங்கள். அதே போல, இதனை மீறினால் கிடைக்கும் விளைவுகளையும் சொல்லி விடுங்கள். தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்கு குழந்தைகள் சந்தோசப்பட வேண்டும். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும்.

இது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோலின் முக்கிய அம்சங்கள்.

இரண்டும் கலந்த கலவை ரோல் 

பெரும்பாலான குழந்தைகள், நீங்கள் அன்பாக, ஆதரவாக, அக்கறையாக,  சொன்னால் உங்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க சம்மதிப்பார்கள்.

ஆரோக்கியமான பொறுப்புணர்வான குழந்தைகள் எங்கே வளர்வார்கள் எனில், அங்கே அன்பும் கண்டிப்பும் ஒரு சேர இருக்கும் வீட்டில் தான். இந்த கண்டிப்பு, கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு அல்ல, மாறாக, விளைவை சார்ந்த நல்ல தன்னம்பிக்கை கொண்டது.


  1. தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள். பொறுமையாக, நோக்கம் நிறைவேறும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். 
  2. தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக அதிலிருந்து பாடம் கற்று கொள்பவர்களாக இருப்பார்கள்.
  3. இறுதிவரை எடுத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். தேவை எனில் உதவி கேட்க தயங்க மாட்டார்கள்.
  4. அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்து இருப்பார்கள்.
  5. புதிய விஷயங்கள் செய்ய துணிவுகொள்வார்கள்
  6. ஏதேனும் தடங்கல்கள் வரின் தன்னால்  சமாளிப்பது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.
உனக்காக நான் இருக்கிறேன் என்ற உணர்வு கொண்டு வருவது 

சரி, "எப்படி குழந்தைகள் நாம்சரி தவறு எது  செய்தாலும் நம்முடன் பெற்றோர் இருப்பார்கள் " என்று நம்பிக்கை கொள்ள  வைப்பது 

"நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்துவேன்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது 

"நீ எனக்கு மகனாக/மகளாக கிடைத்தது என் பாக்கியம்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது"

"உன்னுடன் நேரம் செலவழிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுக்கிறது" என்று சொல்லுவது 

இது போன்ற சின்ன சின்ன செய்திகள் அடிக்கடி சொல்வதன் மூலம், குழந்தைகள் நமக்கு பின்புலமாக நம் பெற்றோர் இருக்கிறார்கள், என்று நம்பிக்கை கொள்வார்கள்.

உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்துவது 

குழந்தைகளின் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கு அவர்களின் தன்னபிக்கை மிக முக்கியம். அதனை வளர்க்க சில வழிகளை பயன்படுத்தலாம்.

1. அவர்கள் தானாக செய்த திட்டப்பணி, படங்கள், உதவி போன்ற சிறு சிறு விஷயங்களையும் எடுத்து பாராட்டுவது. உதாரணமாக, அவர்களின் ஸ்கூல் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து கொண்டு, அவர்கள் எப்படி சிறப்பாக அதனை செய்தார்கள் என்று பாராட்டுவது.

2. வீட்டு வேலைகளில் ஏதாவது அவர்கள் உதவி இருப்பின் அதனை பாராட்டுவது.

3. அவர்கள்  ஏதாவது செய்த பிறகு,  "எனக்கு தெரியும் உன்னால் செய்ய முடியும் என்று" என்று  சொல்லுவது .

4. சொந்த பந்தங்களிடம் பரிவாக பேசும்போதோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் போதோ, அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று அறிய வைப்பது.

5. நாமாக சொல்லாமல் அவர்களாக எதாவது ஒரு உதவி செய்திருப்பின், அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவது. 


அதீத கவனிப்பும் அதன் விளைவும் 

நான் அதிகம் கவனித்த பார்த்த இந்த தலைமுறை குழந்தைகள் பலர் சுயநல வாதிகளாக, இருப்பதற்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாக, இது என் உரிமை, கொடு என்று வேண்டுபவர்களாக, தன்னால் செய்ய முடிந்ததையும் பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக, எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களாக, தாம் செய்த தவறை ஒத்து கொள்ளாதவர்களாக, முயற்சி செய்யத்தவர்களாக, அடுத்தவர்களிடம் பகிராதவர்களாக, இருக்குகிறார்கள்.

மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம், பெற்றோர். தான் பட்ட கஷ்டம் தன குழந்தை படக்கூடாது என்று கேட்டதை வாங்கி கொடுத்து, அவர்கள் கேட்காததையும் வாங்கி கொடுத்து, "எல்லாமே ஈசி" என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறோம். உதாரணமாக, நீங்கள் Ipad /போன்/கேம்ஸ் என்று அனைத்தும் சிறு வயது முதலே குழந்தைக்கு கொடுப்பது 


இன்னொரு உதாரணம், குழந்தைகள் தாமாகவே செய்ய முடிந்த வேலையை செய்ய விடாமல் தானாக செய்வது. உதாரணமாக, டிவி பார்த்து கொண்டு, அது கொண்டு வா, இது கொண்டு வா என்று ஆர்டர் செய்யும் குழந்தைகள். அதனை செய்யும் பெற்றோர்.

இது தான் உன்னுடைய லிமிட் என்று தெளிவாக இலக்கு நிர்ணயிப்பது. "நோ" என்ற வார்த்தையை சொல்லுவது இவை இரண்டும் தாரக மந்திரம்.


முடிவாக, நம் நோக்கம் தன்னம்பிக்கை கொண்ட, சமூக பொறுப்பு, குடும்ப பொறுப்பு கொண்ட ஒரு பொறுப்பான ஒரு பிள்ளையை வளர்ப்பது.இது எளிதான காரியம் அல்ல,  இரு பக்கம் கூர்மையான ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. அதிக செல்லமும் இல்லாமல், அதிக கண்டிப்பும் இல்லாமல் அதே நேரம், தெரிவான இலக்கு கொடுத்து வளர்க்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் முயற்சியும் சுய கட்டுப்படும் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.

நன்றி.

Sunday, January 6, 2019

கலவை: 16 வயதினிலே டாக்டர்ம், ருமினேஷன்ம், சில அறிவு கேள்விகளும் !!

ஏதோ ஒன்றை தேட யூ டூப் தேட விழைந்த போது, "செந்தூர பூவே, செந்தூர பூவே!" 16 வயதினிலே  பாடல் கேட்க நேர்ந்தது. அப்படியே அதனை குறித்த சிந்தனை பரவ, அந்த படமும் அடுத்து பார்க்க நேர்ந்தது.  பிறகு அதில் வந்த டாக்டர் குறித்த சிந்தனை. அவரின் கேரக்டர் குறித்த சிந்தனை என்று ஒன்றுக்கு பின் ஒன்றாக தொடர ஆரம்பித்தது.

இது ஒரு வித தொடர் சிந்தனை. அதாவது, எதோ ஒன்றை பார்க்க போக, அதனை தொடர்ந்து சில பல சிந்தனைகள் உங்களை சிந்திக்க வைக்க, அதனை தொடர்ந்து வேறு சில விஷயங்கள் உங்களுக்கு வர என்று தொடரும். அல்லது ஒரே சிந்தனையை வேறு வேறு கோணத்தில் சிந்திக்க ஆரம்பிப்போம். உளவியலில் இந்த மாதிரியான சிந்தனை, செக்கு மாடு போன்று ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சிந்திக்கும் நிலை, "ருமினேஷன்", என்று அழைக்க படுகிறது. ருமினேஷனுக்கும் மனஅழுத்தம் மனசிதைவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்தது மனம் வருந்துகிறோமோ, அப்போதே மனஅழுத்தம் உண்டாகி மனசிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டாகும்.




திரும்ப 16 வயதினிலே டாக்டர் க்கு வருவோம். இப்பொழுது எல்லாம் இது போன்ற பெர்சோனாலிட்டி கொண்டவர்கள் சர்வ சாதாரணமாக இருப்பினும். இதனை போன்றவர்கள் எல்லா காலத்திலும் இருந்து இருக்கிறார்கள், அதாவது, அவர்களின் டைம் பாஸ் காக மட்டும் ஆட்களை தேடுபவர்கள். இவர்களுக்கு தேவை எந்த கமிட்மென்ட்ம் இல்லாத fun, சந்தோசம். ஒரு பெண்ணுக்கு அல்லது பையனுக்கு வலை வீசுவது, அவர்கள் வலையில் வீழும் வரை நன்றாக பேசி, நடிப்பது. பின்னர் வலையில் வீழ்ந்தவுடன், நன்கு அவர்களிடம் இருந்து "கறக்க வேண்டியதை கறந்து விடுவது". பின்னர். எதோ காரணம் சொல்லி கழட்டி விடுவது. இவர்கள் டைம் பாஸ் லவ்வேர்ஸ். கழட்டி விட காரணம், முக்கியமாக பொருளாதார காரணமாக இருக்கும். "நீ சம்பாதிக்கல, உன் கிட்ட பணம் இல்லை, எப்படி என்னை வச்சு காப்பாத்த போற?", "உங்க அப்பா சாதாரண வேலை பாக்குறாரு, உன்னால நான் கேட்டதை வாங்கி கொடுக்க முடியாது" என்று பல பல காரணங்கள். எப்படி இந்த படத்தில் டாக்டர், "எனக்கு வரப்போற வைப், ஒரு பொட்டி கடை காரி பொண்ணா?" என்று கேட்டு கழட்டி விடுவாரோ அப்படி கழட்டி விட்டு விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு அவர்கள் வேலை பார்த்து போய் விடுவார்கள். நம்ம 16 வயதினிலே, டைம் பாஸ் லவ் டாக்டர் போல.


முகுந்த் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டான்?


  •  பூமியின் மேலோட்டில் (Crust) இருக்கும் ஆழமான பகுதி எது?


வழக்கம் போல எனக்கு முதல் கேள்விக்கு "கிராண்ட் கேன்யன்" என்று சொல்லி விழித்தேன். அது தவறு என்று பதில் வந்தது. "மரீனா ட்ரென்ச் " என்னும் பசுபிக் மகா சமுத்திரத்தில் "குவாம்" நாட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடமே பூமியின் மேலோட்டு ஆழமான இடம். கிட்டத்தட்ட பூமியின் மேலோட்டுக்கு  கீழே 25 கிலோமீட்டர் ஆழம் செல்லும் இடம் அது.


  • உங்களிடம் சாப்பிட தட்டுகள் இல்லை, ஆனால் இருப்பது 3 தட்டு போன்ற தட்டையான 3 பொருட்கள்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தவேண்டும் என்றால், எது உபயோகப்படுத்தலாம், எதில் கிருமிகள் கம்மி?
    • ஐபாட் 
    • காய்கறி வெட்டும் கட்டிங் போர்டு
    • டாய்லட் சீட் 
இரண்டாவது கேள்விக்கு, காய்கறி வெட்டும் போர்டு என்று பதில் அளித்தவுடன் , "அது தான் ஒர்ஸ்ட்சாய்ஸ்" . என்றான்.

அதே போல, போன், ஐபாட் என்று எதுவும் நல்ல சாய்ஸ் கிடையாது. டாய்லெட் சீட்டில் இருக்கும் பாக்டீரியாவை விட மிக மிக அதிக பாக்டீரியா செல்போன் மற்றும் கிட்டிங் போர்டுகளில் உண்டு. 
கூகிளில் இதை பற்றி தேடினால் நிறைய அறிவியல் கட்டுரை கிடைக்கும் என்பதால். சில சாம்பிள்கள் மட்டும் இங்கே.









நன்றி 


Tuesday, January 1, 2019

வருக 2019!!

 கடந்த வருடம் பெரும்பாலும் நன்றாக சென்றது என்றாலும் கடைசி இரண்டு மாதங்கள், நிறைய ஸ்ட்ரெஸ் கொடுத்தன. அதிலும் நடந்த சில விஷயங்கள் மனதை பெரிதும் பாதித்தன. முதல் விஷயமாக எங்கள் தோழிகள் குரூப்பில் நடந்த மரணம். அதுவும் சிறுவயது பெண்ணின் மரணம், எங்கள் அனைவரையும் உலுக்கிய ஒரு சம்பவம் அது. எவ்வளவு தூரம் பிடிவாதமாக இருக்கவேண்டும் அல்லது இருக்க கூடாது என்று எங்கள் அனைவருக்கும் செக் வைத்தது அந்த நிகழ்வு. 

எது சிறந்தது? ஆங்கில மருத்துவமா இல்லை இந்திய ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவமா?

வாட்ஸாப் முகநூல் என்று எது திறந்தாலும் உங்களுக்கு நிறைய பாரம்பரிய மருத்துவம், உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் தான் சிறந்தது, மற்றவை எல்லாம் கார்பொரேட் சதி என்று செய்திகள், பிரச்சாரங்கள் காணலாம். இது போன்ற பிரச்சாரங்கள் எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு ஜோடிக்கப்பட்ட பிரச்சாரங்கள். இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி

எவ்வளவு தூரம் ஒருவர் நம் மருத்துவ முறை தான் சிறந்தது, பாரம்பரியம், இயற்க்கை மருத்துவம், மூலிகை, ஆயுர்வேதம்  தான் உண்மையான மருத்துவம் மற்ற ஆங்கில மருத்துவம் எல்லாம் டுபாக்கூர் என்று இருக்கலாம்.  

அப்படி ஒருவர் இருந்து, ஆங்கில மருத்துவத்தில் சாதாரணமாக தீர்க்க கூடிய ஒரு வியாதியை கவனிக்காமல், முற்றவைத்து, பாரம்பரிய மருத்துவத்தை நாடி எந்த பயனும் இல்லாமல்  இறந்த ஒரு நிகழ்வே அந்த தோழியின் மரணம். தினசரி நான் அறிவுரை கூறினாலும், எதனையும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை. அட்வைஸ், பிரீ அட்வைஸ் என்று ஒதுக்கி விட்டு இருக்கிறார்கள். அந்த தோழியை நினைத்து நினைத்து நாங்கள் வருந்த மட்டுமே முடிந்தது. ஓரளவுக்கு மேல் எவருக்கும் அறிவுரை கூற இயலாது, என்று நான் கற்று கொண்டது அந்த நிகழ்வில் நடந்தது.

இரண்டாவது நிகழ்வு, ஒரு தோழியின் மிட் லைப் மெனோபாஸ் வாழ்வில் இருந்த டெப்ரேசன் கவனிக்கப்படாமல் விடப்பட்டு அவள் எஸ்ட்ரீம் எல்லைக்கு சென்ற நிகழ்வு அவளின் வாழ்க்கையில் பல கசப்பான நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை போன்ற நேரங்களில் கணவன் மற்றும் சொந்தங்களின் அரவணைப்பு மிக தேவை. அது இல்லாமல் அவர்களே எதிரியாக இருந்தால் என்ன நடக்கும் என்று நான் கண்டது. இங்கும், எதுவும் செய்ய முடியாமல்,  நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் சில விஷயங்கள் நடந்தே தீரும் என்று நான் கண்டது.

எவ்வளவு முயன்றாலும் சில விஷயங்கள் நடக்கும் என்றால் நடந்தே தீரும் என்று கடந்த வருடம் காட்டி சென்று இருக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது, இந்த வருடம் அது செய்ய வேண்டும் இது செய்யவேண்டும் என்று நினைப்பதுண்டு. அது ரெசொலூஷன் என்றெல்லாம் இல்லை, மாறாக ஒரு டுடூ லிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அப்படி இந்த வருடம், ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் செய்வது, அல்லது ஸ்ட்ரெஸ் வந்தால் எப்படி சமாளிப்பது, என்னுடைய டு டூ லிஸ்டில் முதலில் இருக்கிறது. , முடிந்தவரை மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும், தியானம் செய்ய வேண்டும், என்பன ஒரு சில டு டூ ஐட்டங்கள். அதில் , முகுந்தின் இண்டெர்ஸ்ட் களை பப்லிஷ் செய்வது என்பதும் ஒன்று. அதன் விளைவே  முகுந்தின் பெர்சனல் ப்ளாக் 

முகுந்த் அவனுடைய பள்ளி ப்ராஜெக்ட் காக ஒரு கதை எழுதி அதில் சில பல படங்களையும் வரைந்து இருந்தான். அவனை உற்சாகப்படுத்த நான் ஒரு ப்ளாக் உருவாக்கி அதில் அவனுடைய கதையை வெளியிட்டு இருக்கிறேன். நிறைய இலக்கண பிழைகள்/எழுத்து பிழைகள் அதில் இருக்கலாம்.

முடிந்தால் படித்து கருத்திடவும். நன்றி.



எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைத்திட இந்த புது வருடத்தில் எல்லா வல்ல இறைவன்/இயற்கை அருள்புரியட்டும்!!


Happy New Year 2019.

Sunday, November 11, 2018

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 ஒருவரிடம் ஒரு 6-15 நிமிஷம் எதுவும் செய்யாம ஒரு ரூமுக்குள்ள சும்மா இருக்க முடியுமா? எதுவும் செய்ய கூடாது. நோ போன் பாக்குறது, நோ புக் படிக்கிறது, நோ டிவி, நோ கேம்ஸ், தூங்க கூடாது. உக்கார்ந்த இடத்தை விட்டு நகர கூடாது,  நீங்களும் உங்கள் எண்ணங்கள் மட்டுமே. இப்படி ஒரு ஆய்வு 11 வெவ்வேறு இடங்களில்நடத்தப்பட்டது. என்ன முடிவு வந்திருக்கும்? சயின்ஸ்ஆய்விதழில் கட்டுரை ஒன்று பார்க்க நேர்ந்தது.

 இந்த ஆய்வு நேரத்துக்கு பிறகு வெளியே வரும் ஆட்களிடம் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?  என்று கேட்ட கேள்விக்கு, "ஒரே கொடுமையாக இருந்தது" என்றே பலரின் அனுபவம்.
சரி உங்களுக்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை, உங்களுக்கு ஒரு தூண்டல் தருகிறோம், அது மைல்டு எலக்ட்ரிக் ஷாக்.  தற்போது, நீங்கள் சும்மா இருப்பதை தேர்ந்தெடுப்பீர்களா?, அல்லது எலக்ட்ரிக் ஷாக் கை தேர்ந்தெடுப்பீர்களா? என்று கேட்டால் 67% ஆண்கள், என்னால சும்மா இருக்க முடியாது? எலக்ட்ரிக் ஷாக் கொடுங்க? என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால் 25% பெண்கள் அதனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 


ஏன் சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டம்? சும்மா இருக்கும் போது, தனக்கு உள்நோக்கி, தன்னுடைய குறைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை சுழற்சியில் மாட்டி கொள்கிறார்கள். அதனால் எப்படியாவது அந்த சுய சிந்தனையில் இருந்து தப்பிக்க வேறேதாவது ஒரு வெளி தூண்டல் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.


இதனுடன் தொடர்புடைய டெலிகிராப் செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது. அது எப்படி தற்போதைய தலைமுறை (16-24 வயதுக்கு உட்பட்டவர்கள்) வாரத்தில் 34.3 மணி நேரம் நேரம் போக்குவதற்காக இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இது 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது விட 2 மடங்கு அதிகம். இந்தியாவும் இந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல, இந்தியர்கள் தினசரி 3 மணி நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

சும்மா இல்லாமல் இருக்க டைம் பாஸுக்காக எந்த எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள், அது நெகடிவ் விஷயம் ஆக கூட இருக்கலாம்.


இந்த கட்டுரை படித்த பிறகு எனக்கு வடிவேலுவின் "சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்ற காமெடி நினைவுக்கு வந்தது.





References

1. Just think: The challenges of the disengaged mind


2. https://www.telegraph.co.uk/news/2018/08/01/decade-smartphones-now-spend-entire-day-every-week-online/

3. https://economictimes.indiatimes.com/magazines/panache/indians-spend-roughly-3-hours-a-day-on-smartphones-but-are-they-paying-big-bucks-for-apps/articleshow/62866875.cms

Sunday, November 4, 2018

பழைய ரூபாய் நோட்டும், பரியேறும் பெருமாளும், ஹிந்தியும்!!


சோசியல் மீடியா வந்தாலும் வந்தது, அதில் எந்த வித பில்டரும் இல்லாமல் வந்ததை எல்லாம் சொல்லும், அடித்து சத்தியம் செய்யும், மற்றவர்களை பேச விடாமல், தான் பேசுவது மட்டுமே சரி என்று விவாதிக்கும் சிலரும் இருக்க தானே செய்கிறார்கள். அப்படி ஒரு குரூப்பிடம் மாட்டி கொண்ட என்னுடைய அனுபவம் இங்கே.

அது 1930 களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு குறித்தது.( அது உண்மையான நோட்டா, இல்லையா என்று தெரியவில்லை). அதனை ஒரு தோழி ஷேர் செய்து, பாருங்கள் இதில் "இந்தி இல்லை", என்று அவள் குறிப்பிட்டு விட்டாள். உடனே இன்னொரு தோழி, வரிந்து கட்டி கொண்டு. அதெல்லாம் உண்மை இல்லை, நோட்டின் அடுத்த பக்கத்தை பார்க்கவும். இந்தி எல்லாவற்றிலும் இருக்கும். "இந்த நோட்டு போலி", என்று விவாதம் மேல் விவாதம். அதோடு நின்று கொள்ளாமல், "இந்தி கற்று கொள்ளாததால் நாம் இழந்தது நிறைய" என்றுஅவள் சொல்ல  "இந்தி ஆதரிப்பு  பிரச்சாரமாக" ஆகி விட்டு இருந்தது.

 அவளிடம் உரையாடிய பிறகு பல சந்தேகங்கள். "ஒரு சிலரிடம் தர்க்கம் செய்வது என்பது ஏன் முடியாமல் போகிறது?, எப்படி விடாமல் தான் சொல்வது சரி என்று வாதிக்கிறார்கள். அடுத்தவர்களை பேச விடாமல், அவர்கள் எந்த விடயம் பேச ஆரம்பித்தாலும் அதற்கென்று ஒரு எதிர் பாயிண்டு எப்படி தயாரித்து பேச முடிகிறது.?"




மேலும், இந்த பிரச்னை கட்டாயம் பல இடங்களில் பேச/விவாதிக்க பட்டு இருக்கும், என்பதால், இது சரியா தவறா என்ற விவாதிக்க நான் வரவில்லை. ஆனால், உண்மையில் ஹிந்தி கற்று கொள்ளாததால், நாம் நிறைய இழந்தோமா?

இங்கு வந்த பிறகு, ஆபிசில் நிறைய இந்தியர்கள் இருப்பின், எந்த மாநில மக்களாயினும் சரி, இந்தியில் பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதே நேரம், தமிழ் பேசும் மக்கள், எனக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இந்தி படிக்காததால்  எந்த பிரச்னையும் அவர்கள் அனுபவித்ததாக தெரியவில்லை. ஒரு வேலை இந்தியாவில் இருப்பவர்கள் இந்தி படிக்காததால் பிரச்சனைகள் அனுபவிக்கிறார்களா?. எனக்கு தெரிந்து IT  வேளைகளில் இருக்கும் பலரும், பெங்களூரு, ஹைதெராபாத், சென்னை, புனே போன்றஊர்களில் வசிக்கும்போது   ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பதை பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் பாஷையிலும் பேசி சமாளிப்பதற்கு பார்த்திருக்கிறேன். அதனால், தெரியாமல் கேட்கிறேன்,  ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லை இது பிரச்சாரமா?


தற்போது, இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல முகத்தில் அறைந்த படம் பார்த்த திருப்தி.  இப்போயெல்லாம் எங்கப்பா சாதி பாக்குறாங்க/ என்று சொல்லி திரியும் சிலரின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில், "பரியேறும் பெருமாள்", உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட உண்மை விளக்கம்.

 நான் முதுநிலை படித்த கல்லூரியில் எப்போதும் விரிவுரையாளர்கள், பையன்கள் முதுகில் நன்கு தட்டி கொடுப்பார்கள். முன்பு எனக்கு அதன் அர்த்தம் புரியாது. ஆனால், பிறகு மற்றவர்கள் சொல்ல அறிந்து கொண்டது. அவர்கள், தட்டி கொடுப்பது போன்று எதனை தேடுகிறார்கள், என்பது, அதே போல, இளங்கலை படித்த போது, என்னுடன் படித்த சில பெண்கள், எப்படி ஒரு சில பெண்களிடம் நடந்து கொண்டார்கள்?, என்பதையும் அறிந்து இருந்தேன்.  அவர்களிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்அல்லது எதோ சொல்லி பாலிஷ் ஆக தவிர்ப்பார்கள்.

எனக்கென்னவோ, இந்த படம் பார்த்த பிறகு, சில எண்ணங்கள். அந்த "பரியனின்" இடத்தில் ஒரு பெண் இருந்திருப்பின் எவ்வாறு இருந்திருக்கும்?. ஒரு ஏழை பெண், கீழ் சாதியாய்இருப்பின்,  ஆங்கிலம் தெரியாமல், மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளமுடியாமல், அந்த பெண்ணின் பொருளாதார மற்றும் சாதிய நிலையை குத்தி காட்டி காட்டியே, அவளை முழுதாக கொன்றிருப்பார்கள். ஏதேனும் மேல் சாதி பையனிடம் அந்த பெண் பழகியிருக்கிறார் என்றால், அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்திருக்க மாட்டார்கள். மாறாக, அவளின் மானத்தை எடுத்து அப்போதே பிணமாக்கி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.  

இங்கே சாதி என்ற குறியீட்டை கூட எடுத்து விடுவோம். ஒரு ஏழை பெண், கிராமத்தில் வாழும், ஒரு பெண் படிக்கிறாள். படிக்க விரும்புகிறாள், என்று வைத்து கொள்ளுவோம்.  ஆங்கில அறிவு கொஞ்சம் மட்டுமே இருக்கும். மார்க்கும் நிறைய எடுக்கவில்லை அல்லது 10 ஆம் வகுப்பில் பெயில் என்றால் அவ்வளவு தான், படிப்பு வரல என்று கல்யாணம் செய்து வைத்து இருப்பார்கள்.  திரும்ப படிக்க வைப்பதோ அல்லது டுடோரியல் சேர்த்து படிக்கவைத்து பாஸ் செய்வதோ பெரிய விஷயமாகி இருக்கும். அப்படியே படிக்க வைத்த பெற்றோர் இருப்பினும். கல்லூரி வரை அந்த பெண் சென்றிருந்தால் பெரிய விஷயம். "பொம்பள புள்ளைய எதுக்கு படிக்க வச்சிட்டு, பேசாம கல்லாணம் பண்ணி வையுங்க", என்று பலரும் பரிந்துரைத்து இருப்பார்கள். திரும்ப படிக்க வைப்பது போன்ற சலுகை எல்லாமே பையனுங்களுக்கு தான்.

இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும். தமிழை தவிர பிற மொழியான ஆங்கிலமே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரு பப்லிக் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுக்க யாருப்பா இருப்பாங்க. அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம்  பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. 

சரி, கிராம பிள்ளைகளை விட்டுடுவோம். பல நகரங்களில் தற்போது பிள்ளைகள் ஹிந்தி கற்று கொள்கிறார்கள். சொல்ல போனால், தமிழை கற்று கொள்வதே இல்லை. மார்க்குக்காக, ஹிந்தி, சமஸ்க்ருதம், பிரெஞ்சு. ஜெர்மன், ஆங்கிலம் போன்றவற்றை மற்றும் கற்றுக்கொள்கிறார்கள்.  அதுவும் மிக மிக தொடக்க நிலை மொழி அறிவு மட்டுமே இவர்கள் அறிந்துஇருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?. இவர்களால் கோர்வையாக ஹிந்தியில் பேச முடியுமா?, அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் தான் பேச முடியுமா?. ஒன்றும் இல்லை. 

அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது.  எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது.

சரி, மறுபடியும், தொடங்கிய கேள்விக்கு வருவோம். 

ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லையா?

வாசிப்புக்கு நன்றி.



Saturday, October 27, 2018

எது அழகானது? எது மனதுக்கு மகிழ்ச்சி தரும்? ஒரு அறிவியல் பார்வை!

எங்கே வெளியே சுற்றுலா சென்றாலும் இயற்கை காட்சிகள் கண்டு புகைப்படம் எடுப்பது என்பது  புகைப்பட கருவிகள் வந்த காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதே இடங்களை முன்பே பலர் பல பல விதங்களில் புகைப்படம் எடுத்திருப்பார்கள். நிறைய பத்திரிக்கைகள், இணைய தளங்களில் கோடிக்கணக்கில் பார்த்திருப்போம். இருப்பினும் அந்த இயற்க்கை காட்சியை  பார்க்கும் போது நமக்குள் ஒரு சந்தோசம், அதனை நாமும் புகைப்படம் எடுப்போம். ஏன் இப்படி?, என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.

என்னுடைய சமீபத்திய உதாரணம், கொலோராடோ சென்றிருந்தது, அங்கு க்ளென்வூட் என்னும் ஒரு ஊரில் ஹைக்கிங் சென்றது. 2.8 மைல் ஹைக்கிங் என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி அங்கு சென்றதும், மெய் மறந்து ரசித்தது ஹாங்கிங் லேக் எனப்படும் தொங்கும் ஏரி.



மேலும் தொங்கும் ஏரி பற்றி தெரிந்து கொள்ள. https://www.tripadvisor.com/Attraction_Review-g33446-d146055-Reviews-Hanging_Lake-Glenwood_Springs_Colorado.html

இயற்கை காட்சிகள் அழகானவை என்று எப்படி நாம்/நம் மனம் தீர்மானிக்கிறது? அதே போல, அழகான ஓவியங்கள், கலை பொருட்கள் இவை எல்லாம் பார்க்கும் போது மனது மகிழ்கிறது? ஏன்?. அழகென்பது என்ன? , என்று பலமுறை யோசித்தது உண்டு. அதற்க்கான விடையாக ஒரு TED டாக் பார்க்க நேர்ந்தது. டெனிஸ் டட்டன் என்ற அறிவியலார் அவர்களின் ""A Darwinian theory of beauty" தமிழில்  "அழகிற்கான டார்வின் கோட்பாடு" என்பதாகும்.




டெனிஸ் அவர்களின் உரையின் படி, "எதனை நம் மூளை அழகென்று தீர்மானிக்கிறது?, என்பது, நம் மூதாதையர்களான கற்கால மனிதர்களிடம் இருந்து வந்தது. கற்கால மனிதர்கள் எதனை, எந்த நிலப்பரப்பை பாதுகாப்பானது என்று நினைத்தார்களோ, அதுவே நிம்மதியானது, அழகானது என்று மூளையில் பதியப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு, அங்கு ஒரு நதி/குளம்/ஏரி போன்ற நிலப்பரப்பு, அங்கங்கு சில, ஆடு,மாடு, முயல் போன்ற மேயும் மிருகங்கள். நிறைய மரங்கள். இவை போன்ற ஒரு காட்சி, கற்கால மனிதனை பொறுத்தவரை, ஒரு பாதுகாப்பான இடம். ஏனென்னில், அவனுக்கு, உணவு, குடிக்க தண்ணீர், எந்த கொடிய மிருகங்களும் இல்லாத சூழல், என்பது ஒரு பாதுகாப்பை தந்து இருக்கிறது. அதுவே மனித மூளையில், அழகென்பது பதிவாகி இருக்கிறது.

அந்த பரிணாம தோற்றம் பதியப்பட்ட காரணத்தாலே, தற்கால மனித மனதிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பை நீர்.நிலம், மரங்கள், விலங்குகள் நிறைந்த இடப்பரப்பு அழகாக தெரிகிறது.


"சரி, நிலப்பரப்பை  விடுங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் எல்லாம் அழகாக தெரிவதன் பின்னணி என்ன?". அதற்க்கு டெனிஸ் அவர்கள், நம்மை அதே கற்கால மனிதர்கள் காலத்துக்கு முன்னெடுத்து செல்கிறார். மயில் றெக்கை உதாரணமும் நமக்கு தருகிறார். மயில்கள் எதற்கு றெக்கை வைத்து இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு எந்த பிரயோஜனம் இல்லை. ஆனால், அவைகள், தன் துணையை வசீகரிக்க தம் இறக்கையை உபயோகிக்கின்றன. அதே போல, கற்கால சுவர் ஓவியங்கள், கற்களால் செய்த சிறு சிறு கலை பொருட்கள் அனைத்தும் இணையை வசீகரிக்க என்று மனிதர்களுக்கு உதவி இருக்கின்றன.  அதே எண்ணங்கள்  படிமங்கள் ஆக மூளையில் படித்ததன் விளைவு மனித மூளைக்கு கலைப்பொருட்கள், ஓவியங்கள், இசை என்று பல பல விஷயங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனதுக்கு சந்தோசம் தருகிறது.  அந்த நேரங்களில் மூளையில் சந்தோச தரும் ஹார்மோன் ஆன டோபோமின் சுரப்பு அதிகம் இருக்கிறது. இது அழகானது, என்று பல விஷயங்களை மனதுக்கு மகிழ்ச்சியும் தருகிறது.


ரொம்ப நாளைக்கு பிறகு என்னுடைய போனில் ரிப்பீட் மோடில் நான் கேட்டு கொண்டிருக்கும் பாடல்கள், "96" பட பாடல்கள். என்ன ஒரு மெஸ்மெரைசிங். அதுவும் "வசந்த காலங்கள்" பாட்டுநான் எப்பொழுதும் முணுமுணுக்கும் ஒன்றாகி விட்டது.  வெல்டன் இசையமைப்பாளர் "கோவிந்த் வசந்தா"




மனதுக்கு நிம்மதி தரும், சந்தோசம் தரும் எல்லாம் அழகு தான்!, அது புகைப்படம், பாடல், கலைப்பொருள், இயற்க்கை காட்சி, ஒரு குழந்தையின் சிரிப்பு. என்று எதுவானாலும் இருக்கலாம்.


நன்றி.


Sunday, September 9, 2018

சோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை!

மனநிலை மனோ தத்துவம் இவற்றில் எல்லாம் நான் ரொம்ப கவனம் செலுத்தியதில்லை. ஆனால்,தற்போது நாடாகும் பல  விஷயங்களை படிக்கும் போதும் உற்று நோக்கும் போதும், அவை எவ்வளவு முக்கியமானவை வாழ்வியலுக்கு என்று தெரிகிறது.

மனிதன் ஒரு சமூகம் சார்ந்த குரங்கு. சோசியல் அனிமல். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, என்பது மிக முக்கியம். நமக்கு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது மிக முக்கியம். நான், எனக்காக வாழ்கிறேன், என்று சொல்லி திரிபவர்கள் கூட, எதோ "ஒரு விஷயத்தை" ரிகக்னிஷன்ஐ மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறார்கள்.  இது ஒரு வகை அட்டென்சன் சீக்கிங் அதாவது "கவனத்தை கோருதல்". என்னை பார், எப்படி இருக்கிறேன் பார். என்று காட்டுதல். இது, உடல் அழகில் ஆகட்டும், பணத்தில் ஆகட்டும், பட்டு பீதாம்பரம், விளம்பரம்...என்று பல பல வழிகளில் கையாள படுகிறது.


இதெல்லாம் தற்போதைய கலாச்சாரம், முன்பெல்லாம் இப்படி ஏதும் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு, முன்பும், இவை போன்ற அட்டென்ஷன் சீக்கிங் இருந்திருக்கிறது..ஆனால் வேறு மாதிரி. உதாரணமாக, என்னுடைய பாட்டி காலத்திய கதையாக, மாதம் ஒரு புடவை எடுப்பது, உடனே அதனை கோவில், விசேஷங்கள், கல்யாணம் என்று கட்டி கொண்டு போவது..இவை எல்லாம் சாதாரணம். எனக்கு தெரிந்தே, எங்கள் பக்கத்து வீட்டு பணக்கார அம்மா,  எப்பொழுது நகை வாங்கினாலும், கொண்டு வந்து எல்லோரிடமும் காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது ஒரு வகையான "அட்டென்சன் சீக்கிங்". பார் நான் உங்களை விட எவ்வளவு நகை வைத்திருக்கிறேன் பார் என்று காட்டுவதற்காக.

தற்போது சோசியல் மீடியா வந்த பிறகு, இப்படியான கவனம் கோருதல் அதிகமாகி இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். விளையாட்டாக சோசியல் மீடியாவுக்குள் வரும் பலரும், தொடக்கத்தில் எந்த புகை படங்களும் பகிராமல் இருந்தாலும், காலம் செல்ல செல்ல அடுத்தவர்கள், நண்பர்கள் பகிரும் போது அதனால் ஈர்க்கப்பட்டு மெதுவாக பகிர ஆரம்பிக்கிறார்கள். ஆனால்,  மெதுவாக, மெதுவாக, புகைப்படம் பகிர என்றே மேக்கப் செய்துகொள்வது, புது உடை உடுத்துவது, என்ன கன்டென்ட் கொடுக்கலாம், என்று  அதே வேலையாக திரிவது என்று தன்னை அடிமையாக்கி கொள்கிறார்கள்.

ஆனால், இப்படி விளையாட்டாக ஆரம்பிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல, சந்தோசத்தை தருவதை விட, டிப்ரெஷன்/மன அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறது என்று நான்  வாசித்த சில ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 

சோசியல் மீடியாவில் படங்களை பகிரும் பலரும், தம்முடைய புது உடை, கார், நகை, என்று பகிர்வது மட்டும் அல்லாமல், என்னுடைய கணவர். காதலர் வாங்கி கொடுத்தது என்று பகிர்வது தற்போது சகஜம். சொல்ல போனால், வீட்டில் நடக்குமா தெரியாது ஆனால் சோசியல் மீடியாவில் காதல் செய்யும், அன்பை பகிரும் கணவன், மனைவி அதிகம். இது ஒரு வித அட்டென்ஷன் சீக்கிங். "பாரு!! நான் உன்னை விட பெரிய பரிசு காதலர் தினத்துக்கு/கல்யாண நாளுக்கு  வாங்கியிருக்கேன், என் கணவர் தான் பெஸ்ட்" என்று பெருமை சாற்றிக்கொள்ளும் பலரும், அடுத்தவர்களுக்கு ஒருவித டிப்ரெஷன் ஏற்படுத்துகிறார்கள், என்பதே உண்மை.  பொது வெளியில், இப்படி பகிரப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பி, "நம்ம வீட்டுகாரர்க்கு நம்ம மேல பாசம், அன்பு இல்லை" என்று மனஅழுத்தத்துக்கு உண்டாகும் நிலை பல பெண்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட பெண்களின் மனநிலையை சாதகமாக்கி கொள்ளும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறிக்கோள், இப்படிப்பட்ட பெண்களிடம், பேசி பேசி, அன்பை காட்டுவது போல நடிப்பது அல்லது அந்த பெண்ணை அவள் அழகை, அவள் செயலை புகழ்வது. அதுவும் பப்லிக் ஆக சோசியல் மீடியாவில் புகழும் போது அதனை தனக்கு கிடைத்த ரெகக்னிஷன்/அங்கீகாரமாக பெண்கள் நினைத்து கொள்வது மட்டும் அல்லாமல், தன்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வாக நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இது, அவர்களின், ப்ளஷர் ஹார்மோன் ஆன, செரோட்டின், டோபோமின் போன்றவற்றை தூண்டி, ஒரு கனவுலகில் அவர்கள் வாழ தூண்டுகிறது. 

இதுவே, "குன்றத்தூர் அபிராமி போன்றவர்களை" கனவுலக வாழ்க்கை வாழ தூண்டி இருக்க வேண்டும். சோசியல் மீடியா அடிக்சன், அதனால் நிகழ்ந்த மனஅழுத்தம், அந்த நேரம் தன் அழகை பற்றி கிடைத்த "ரெகக்னிஷன்" , அதனை தடுக்க முனைந்த பெற்றோர், குடும்பம் மற்றும் கணவர், குழந்தைகள் அனைவரும், எதிரி போல கருதப்பட்டு இருக்கிறார்கள். இது போதை மருந்து/மதுவுக்கு அடிமையானவர்களை திருத்த போதை மருந்து தராமல், அல்லது மது தராமல் தடுக்கும் போது அவர்கள் செய்யும் எதிர்வினைக்கு சமமானது. போதையை அடைய எந்த தவறும் செய்ய தயாராக இருப்பார்கள், போதைக்கு அடிமையானவர்கள். அதே நிலையை "அபிராமி" அடைந்து இருக்கிறார்.

இப்படி ப்ளஷர் ஹார்மோன் வசப்பட்டவர்கள், எப்போதும் ஒரு வித பதட்டம், தூண்டல் கொண்டிருப்பார்கள். சோசியல் மீடியாவில் ஏதாவது கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று எந்த லெவல்க்கும் செல்ல தயாராக இருப்பார்கள். சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை
"அதிகம் பிகினி உடைகளை சோசியல் மீடியாவில் பகிரும் பெண்கள், அப்படி பகிர்வதன் மூலம், தான்  பொருளாதார அளவில் மற்ற பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று பறை சாட்டவே செய்கிறார்கள்" என்று தெரிவிக்கிறது.

சோசியல் மீடியாவில் அதிகம் படங்களை பகிரும் பெண்கள் வசிக்கும் இடங்களில் அதிக பியூட்டி பார்லர்கள், ஹேர் சலூன்கள், மேக் அப் ஐட்டம் விற்கும் கடைகள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கிளினிக் க்குகள் இருப்பதாத தெரிவிக்கிறது. அது மட்டும் அல்ல அந்த இடங்களில் எல்லாம் குடும்ப பொருளாதார வித்தியாசம் அதிகம் இருப்பதாக காட்டுகிறது.  அதாவது, பொருளாதார நிலையில் அதிக வித்தியாசம் இருக்கும் நிலையில், பெண்கள், தன்னுடைய நிலையை போலியாக உயர்த்தி காட்ட/ மற்றவர்களின் கவனத்தை கோர, இப்படி "ஆடைகுறைப்பு/பிகினி உடை/உடல் அழகை அதிகம் காட்டும் உடை " போன்றவற்றை உடுத்துகிறார்கள் என்று தெரிவிக்கிறது.


எப்படி, சோசியல் மீடியா, பொருளாதாரத்தை பாதிக்கிறது, மனித மனநிலைகளை நெகடிவ் ஆக பாதிக்கிறது, அடுத்தவர் நல்லா இருக்கிறார், நாம நல்லா இல்லை, என்பதனை போன்ற போலி பிம்பத்தை உண்டாக்கி மக்களை குற்றங்கள்  புரிய தூண்டுகிறது என்பதனை படிக்கும் பலரும்  , "ஏன் இந்த கருமத்தை மக்கள் உபயோகிக்கிறார்கள் பேசாம தூக்கி போட்டுட்டு இருக்கலாமே!, " என்று அறிவுரை கூறுவதை பார்க்கலாம். இது காலத்தின் கட்டாயம். மனிதன் ஒரு சோசியல் அனிமல். ஏதாவது ஒரு வகையில் அவனுக்கு ஒரு அவுட்லெட் வேணும்.  உபயோகிக்காமல் இருக்க முடியாது. ஆனால், அதற்க்கு அடிக்சன் ஆகாமல் இருப்பது எப்படி, எப்பொழுது நிறுத்துவது என்று அறிந்து தானே மேனேஜ் செய்தாலே போதும். ஒரு செல்ப் கண்ட்ரோல் வேணும். அப்படி சோசியல் மீடியா அடிக்ட் ஆனவர்களையும், குடும்ப கவுரவம், அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று திரும்ப அதே நிலையில் அழுத்தாமல், மீட்பு நடவடிக்கை, கவுன்சிலிங்  என்று கொடுக்கலாம். இப்படி புரிந்து கொண்டு அனுசரித்து நடப்பதே அவர்களை வெளியே கொண்டு வரும். பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பது என் எண்ணம்.



நன்றி.



References
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/da.22466
https://www.ama.org/publications/MarketingNews/Pages/feeding-the-addiction.aspx
http://www.pnas.org/content/early/2018/08/13/1812331115?etoc=&utm_source=TrendMD&utm_medium=cpc&utm_campaign=Proc_Natl_Acad_Sci_U_S_A_TrendMD_0








Wednesday, July 25, 2018

சான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் !!


சான்பிரான்சிஸ்கோ poop  மேப்

சமீபத்திய நியூயார்க் பயணத்தில் நான் கண்டது நியூயார்க் தெருவுக்கு தெரு வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நிறைய மக்கள். ஒரு மூட்டை மட்டுமே வைத்து கொண்டு தெரு ஓரங்களில் நிறைய பேரை காண நேர்ந்தது. செக்ஸ் கொடுமைகள், பாலின மாறுபாடுகள், LGBT எனப்படும் மூன்றாம் பாலின புரிதல் மட்டும் அறிதல் காரணமாக வீட்டை விட்டு துரத்த படும் மக்கள், வேலையிழப்பு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் என்று பல காரணங்களுக்காக தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட  மக்கள்.

picture from google images

இப்படி தெருவில் வசிக்கும் மக்களுக்காக என்று ஹோம் லெஸ் ஷெல்ல்ட்டர் எனப்படும் தற்காலிக தங்குமிடங்கள் தரப்பட்டாலும், நிரந்தர தீர்வு என்று எதுவும்செய்து கொடுக்காத நிலையிலேயே இப்படி பலரும் தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.. அதுவும் பெரிய பெரிய மெட்ரோ நகரங்களான நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்றவற்றில் இது வேறு வகையான பிரச்சனைகளை கொடுக்கிறது. அது இப்படி வீடில்லாத மக்கள் தம் கழிவுகளை தெருக்களில் வெளியேற்றுவதால்  பல தெருக்களில் நாம் நடக்க முடியாத அளவு மூத்திர மற்றும் மல நாற்றம்.   

இந்த பிரச்சனையை முன்னிறுத்தியே 2014  ஜென்னிபர் வோங் என்னும் வெப் டெவலப்பர், ஹியூமன் வேஸ்ட் லேண்ட் என்னும் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்கினார். அதில் பே ஏரியா எனப்படும் சிலிக்கான் வேலே இல் எங்கெல்லாம் மனித கழிவுகளை ரோட்டில் காணலாம் என்று மேப்பில் குறித்திருப்பார்.


http://mochimachine.org/wasteland/



இது சான் பிரான்சிஸ்கோ என்று இல்லை இன்னும் பல பல மெட்ரோ நகரங்களின் நிலை. ஏன் அட்லாண்டாவில் கூட மிட்டவுன் அருகில் இருக்கும் பல பகுதிகள் இப்படி தான் இருக்கும்.


ஹாரி பாட்டர்

முகுந்தின் சம்மர் ஹாலிடேஸ்ல் 4 ஆவது கிரேடுக்கு முன் படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட் என்று ஒரு லிஸ்ட்  அவன் பள்ளியில் கொடுத்திருந்தார்கள். எப்போதும் டிவி, கேம்ஸ் என்று கழிக்காமல் எப்படியாவது ரீடிங் ஹாபீட்டை அதிகப்படுத்துவது என்று முடிவு செய்து ஹாரி பாட்டர் புத்தகத்தை படி என்று நூலகத்தில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவனுக்கு இண்டெர்ஸ்ட் வர என்று முதல் புத்தகத்தை அவனுடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன். அதுவே  வர வர ஒரு போட்டியாக போய் விட்டது. யார் முதலில் ஒரு சாப்டர் ஐ படிப்பது என்று. அப்படி படித்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல கூடாது என்று அக்ரீமெண்ட் வைத்து கொண்டோம். முதல் புத்தகம் கிட்டத்தட்ட முடிய போகிறது.



இரண்டு சாப்டர்கள் தவிர மற்றவை சரி இன்டெரெஸ்ட்டிங். இந்த புத்தகத்தை முழுதும் முடித்த பிறகு அந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன். என்னுடன் போட்டி போட்டு கொண்டே முகுந்த் இரண்டாவது புத்தகம் படித்து முடித்து விட்டான். அவனிடம், கதை ஸ்பாயில் பண்ண கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன்.

ஏற்கனவே நன்றாக படம் வரையும் முகுந்த் தற்போது காமிக் புக் ஒன்று எழுதி படம் வரைய ஆரம்பித்து இருக்கிறான். "Journey Through Time" என்று பெயர் கூட வைத்து இருக்கிறான். வைகிங், ரோமன், விஸார்ட் மற்றும்  விட்ச்ஸ் என்று அனைத்தும் அதில் வரைந்து இருக்கிறான். பார்க்கலாம் எப்படி வருகிறது என்று. 



வாசிப்பிற்கு நன்றி.



Sunday, July 8, 2018

கலவை: ரசித்தது, படித்தது, நொந்தது

ரசித்தது: 

அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு  டெம்பிளேட் லிஸ்ட் இருக்கிறது.

 ஈஸ்ட் கோஸ்ட் இல் என்றால்

1. நயாகரா, 2. வாஷிங்க்டன் டிசி வெள்ளை மாளிகை, கேப்பிடல் ஹில், சில ம்யூசியங்கள் 3. நியூ யார்க், டைம் ஸ்கொயர், சுதந்திர தேவி சிலை, எம்பையர் ஸ்டேட் பில்ட்டிங், மேடம் துஸ்ஸாட் மெழுகு ம்யூஸியம் 4. புளோரிடா பீச், டிஸ்னி லேண்ட், யூனிவேர்சல், 5. மியாமி பீச். 

வெஸ்ட் கோஸ்ட் என்றால் 1. லாஸ் வேகஸ், 2. கிராண்ட் கேன்யன், 2. சான்பிரான்சிஸ்கோ 4. லாஸ் ஏஞ்செல்ஸ் 

இவை எல்லாம் கூட்டி போய் காட்டிவிட்டால், மொத்த அமெரிக்காவும் காட்டி விட்டது போல சொல்லி கொள்ளலாம். 

ஒவ்வொரு முறையும் அம்மா ஊரில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட எதாவது ஒன்றை டெம்ப்ளட் லிஸ்டில் இருந்து கவர் செய்து இருக்கிறேன். அப்படி, ஊரில் இருந்து வந்த அம்மாவை அழைத்து கொண்டு நியூயார்க் பயணம். முன்பு சிலமுறை நியூயார்க் சென்றிருக்கிறேன்,  என்றாலும், அம்மாவுடன் தனியாக சென்றது ஒரு த்ரில்லிங். நியூயார்க் செல்லப்போகிறேன் என்றதும், என்னுடன் வேலை பார்க்கும் சிலர், "பிராட்வே ஷோ ரொம்ப பாமேஸ்" அழைத்து கொண்டு போ, என்றனர்.   

முன்பின் ஓபரா சென்றதில்லை, என்றாலும், எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு  சென்று மெய்மறந்து ரசித்தது எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். "பான்டோம் ஆப் ஓபரா" நியூயார்க் மெஜெஸ்டிக் பிராட்வே தியேட்டரில் 30 வருடங்களாக நடக்கும் ஷோ என்றார்கள். 30 வருசமா ஒரு ஸ்டேஜ் ஷோ நடக்குதா, என்று ஒரே ஆச்சரியம். விலை எல்லாம் கண்ணா பின்னா என்று இருந்தது, ஈவினிங் ஷோவுக்கு இடம் இல்லை. அதனால் மதியம் இரண்டு மணி ஷோவுக்கு புக் செய்து விட்டேன்.  2 மணி ஷோவுக்கு 30 நிமிடம் முன்னால் சென்றால் போதும் என்று சென்றால், ஒரு மைல் தூரத்துக்கு கியூ நின்றது. அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். 30 வருசமா நடக்குற ஷோவுக்கு இவ்வளவு கூட்டமா என்று.

உள்ளே சென்று ஒரு வழியா உக்கார்ந்து செட்டில் ஆனவுடன், 1800 களின் பிற்பகுதியில் இருக்கும் பிரான்ஸ் என்று ஒரு ஏலம் போன்ற ஒரு செட் ஆரம்பித்தார்கள். அதில் நடு நாயகமாக சாண்ட்லியர் ஒரு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஒருவர் ஓபன் செய்ய அற்புதமான தீம் மியூசிக் உடன் அந்த சாண்ட்லியர் மேலே செல்ல அட போட வைத்தது...

வாயை பிளந்து நான் பார்த்த ஒரு ஷோ என்றால் அது "பாண்டம் ஆப் ஓபரா பிராட் வே ஷோ" அமேசிங் எஸ்பிரின்ஸ்.  ஆர்கெஸ்ட்ரா வாசிக்க, பாண்டம் ஆக நடித்தவர், மற்றும் கிறிஸ்டின் ஆக நடித்தவர், பாடியது, செட் அலங்காரங்கள் எல்லாம் அருமையிலும் அருமை. எதோ வேறு உலகுக்கு சென்றது போன்ற ஒரு உணர்வு.

மறுபடி எப்பொழுது நியூயார்க் சென்றாலும் மறுபடியும் இந்த ஷோ செல்லவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஒரு அவுட் ஆப் வேர்ல்ட் உணர்வு.

பான்டோம் ஆப் ஓபரா படமாகவும் வந்திருக்கிறது. அதில் வந்த தீம் சாங் இங்கே



படித்தது :

எப்பொழுதும் எதிர்பாராமல் நடக்கும் சில விசயங்கள் மறக்க முடியாததாகி விடும். ஏர்போர்ட்டில்  விமானம் தாமதமாக, பொழுது போக ஒரு புத்தக கடையை சுத்தி கொண்டிருந்த போது, இந்த புத்தகம் கண்ணில் பட்டது, மால்கம் கில்டவெல் எழுதிய "அவுட்லையர்ஸ்" என்ற புத்தகம். புள்ளியியலில்  படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். அவுட்லையர்ஸ் என்பது எப்பொழுதும் எஸ்ட்ரீம் கேஸ் என்று டேட்டா அனாலிசிஸ் செய்யும் போது, நிராகரிக்கப்படும். எந்த டேட்டா நீங்கள் எடுத்து ஆராய்ந்தாலும் அதில் சில அவுட் லையெர்ஸ் எப்போதும் இருக்கும். அதாவது, எதோ ஒரு வகையில் பொதுவான பண்பில் இருந்து வித்தியாசமாக மாறுபட்டு தனித்து இருக்கும் விஷயங்கள் அவுட் லையெர்ஸ் எனப்படும்.



"ஸ்டோரி ஆப் சக்ஸஸ்" என்று போட்டிருந்தது,  வித்தியாசமாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன். 

என்னை பொறுத்த வரை கற்பனை கதை என்பது மிக சுவாரசியமானது. அடுத்து என்ன என்ன என்று புத்தகத்தை புரட்ட வைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை குறிக்கும் புத்தகம், நான்பிக்சன்  புத்தகம் என்பது அடுத்தது என்ன என்று பக்கங்களை நகர்த்தியது என்றால் அது இந்த புத்தகம் மட்டுமே.

தொடக்க சாப்டர் "ரொசெட்டா மிஸ்டரி" , இத்தாலில் இருந்த ரொசெட்டா என்ற ஊரில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய ஒரு கிராமம் முழுக்க பென்சில்வானியா ஊரில் வந்து தங்கி, அங்கேயே ஒரு குடியிருப்பை நிறுவிய மக்களை பற்றிய அத்தியாயம் அது. 

1950 ஆம் ஆண்டு, இத்தாலியில் இருந்து பென்சில்வானியா  வந்து  கிட்டத்தட்ட 70-80 வருடங்கள் ஆன பிறகும் அந்த ஊரில் மட்டும் எந்த மக்களும் இதயநோயால் இறக்க வில்லை. யாருக்கும் இதயநோய் இல்லை, என்று ஆச்சரிய படுகிறார் ஸ்டீவர்ட் ஒலஃ என்னும் மருத்துவர். இதயநோய் மட்டும் அல்ல, அல்சர், மனஅழுத்தம் என்ற எந்த நோய்களும் இல்லை, என்ன காரணம்?, உணவு பழக்கமா, இல்லை உடற்பயிற்சி அதிகமா?, இல்லை சீதோஷண நிலை, இயற்கை நிலப்பரப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் எந்த வித துப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. உணவு பழக்கவழக்கம், சீதோஸ்ணம், உடல்பயிற்சி என்று எல்லா விதத்திலும் பென்சில்வானியா ரொசெட்டா கிராமம், மற்ற கிராமங்கள் போலவே இருக்கிறது. பின்பு எப்படி, இந்த ஊரில் மட்டும் ஒருவருக்கு கூட இதய நோய் இல்லை என்று குழம்புகிறார். இந்த ரொசெட்டா கிராமம், இதய நோயை பொறுத்தவரை ஒரு அவுட்லெயர்.

இதனை யோசித்து கொண்டு, அந்த கிராமம் வழியாக நடந்து சென்றபோது, ஒலஃ கவனித்தது ஒன்று. அந்த கிராம மக்கள், அனைவரும் அனைவரையும் அறிந்து இருக்கிறார்கள். எல்லாரும் எல்லோரிடமும் பேசுகிறார்கள். நடந்து செல்லும் போது கூட ஒவ்வொரு கடையிலும் நின்று எல்லோரிடமும் பேசுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொருவரும் கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள். 
குடும்பத்திற்குள் பிரச்னை என்றால் ஒருவரை ஒருவர் பேசி தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் வார இறுதியில் சர்ச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு குரூப் ஆக கலந்து பேசி, தமக்குள்ள இருக்கும் சண்டையை, மனக்கசப்பை தீர்த்து கொள்கிறார்கள்.  அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். என்று கண்டறிகிறார். மருத்துவ உலகில் மிஸ்டரி ஆக இருந்த "ரொசெட்டா" ஒரு அவுட்லையேர் அல்ல, ஒரு சக்ஸஸ் ஸ்டோரி.

நொந்தது:

மேலே குறிப்பிட்ட இந்த புத்தகம் படித்த சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய தோழி ஒருவரின் சமீபத்திய இந்திய பயணம் குறித்து அறிய நேர்ந்தது. ஒரு திருமணத்திற்கு என்று சென்ற அவர், தற்போது சொந்தங்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு கிலிம்ஸ் கொடுத்தார்.

முன்பெல்லாம், திருமணம் சடங்கு என்றால், அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வேலையை எடுத்து செய்து, அனைவரையும் உபசரித்து ஆளுக்கொரு வேலையாக செய்த காலம் போய், தற்போது திருமணம், நல்ல காரியம், ஏன், உடல் நிலை சரியில்லை என்றால் கூட, நெருங்கிய சொந்தம், அக்கா, அண்ணா, தங்கை,தம்பி, தவிர வேறு யாரும் எந்த உதவியும் செய்வதில்லை.  அதுவும் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்று இருக்கும் குடும்பத்தில், யாரும் இல்லை. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை குழந்தைகள் என்று எந்த சொந்தமும், கூட மாட வேலை கூட செய்யவேண்டாம், ஏனோ தானோ என்று வருகிறார்கள், சென்று விடுகிறார்கள். அப்படி வரும் பலரும், நம்மிடம், எதோ எதிர்பார்க்கிறார்கள், செய்யவில்லை எனில், நாம் எதிரி நம்பர் 1 ஆகி விடுகிறோம். 

இதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், என்னுடன் வேலை பார்க்கும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், தன்னுடைய பேமிலி கெட்டோகெத்தேர் இருக்கிறது அதனால் நான் லீவில் செல்கிறேன் என்று சொல்லி கொண்டிருந்தார். என்னது, கெட் டுகெதர் கு லீவா?, என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டிருதேன். அவர் சொன்னது. அவருடைய, சொந்தங்கள் அனைவரும், அதாவது, ஒரு பேமிலி பெயர் கொண்டிருக்கும் அனைவரும், வருடாவருடம் ஒவ்வொருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள். அதற்காக, எல்லா மாநிலங்களிலும் இருந்து கெட்டோகெத்தேர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். பின்னர், அவர்கள் வீட்டில் சாப்பாடு, சர்ச்சுக்கு செல்வது என்று சென்று விட்டு, இரண்டு நாள் கழித்து சென்று விடுவார்கள். அப்படி கெட் டுகெதர்க்கு ஆகும் செலவு, எல்லாரும் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள நல்ல வழி இது.  கிட்டத்தட்ட, 50- 100 பேர் வருவார்கள் என்று சொல்லி கொண்டிருந்தார்.

எனக்குள், ஒரே ஆச்சரியம், சந்தோசம்,வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சி அவர் சொன்னதை கேட்ட பிறகு. இந்தியாவில் சொந்தங்கள்  எல்லாம் பொய்யாகி விட்டனவா?, என்று எனக்குள் கேள்வி? அதனால் தான், நமக்கு, இருதய நோய், அல்சர், மனஅழுத்தம் என்ற அனைத்தும் அதிகம் இருக்கிறதா?நமக்கு  என்று இல்லாமல் தனக்கு   என்று வாழ ஆரம்பித்ததுக்கு நாம் கொடுத்த பரிசா இது? தெரியவில்லை.



வாசிப்புக்கு நன்றி.

Friday, May 18, 2018

அன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் !!

பொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப்புறம், அவசர அவசரமாக முடிப்பார்கள், முழுதும் பார்க்க முடியாது.இப்படி பல காரணங்கள். ஆனால்கடந்த வாரம் , "அன்னையர் தினம்" எங்காவது போகலாம் என்று முடிவு செய்து, தமிழ் சங்கம் சார்பில் பெண்கள் தினம் கொண்டாடுறாங்க வேணா போகலாம் என்று தோழி பரிந்துரைத்தாள். சரி என்று GATS தமிழ் சங்க  பெண்கள் தின விழாவுக்கு சென்றாகி விட்டது.

$10 இல், லஞ்ச், ஸ்னாக்ஸ் மற்றும்  சமையல் போட்டி, recycling போட்டி, பேஷன் ஷோ என்றெல்லாம் அறிவிப்பு பார்த்தேன். அதோடு, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்புரை என்றும் அறிவித்திருந்தனர்.

என்னப்பா, வேற ஏதாவது சிந்திக்க மாட்டிங்களா?, மறுபடியும் சமையல், பேஷன் ஷோ ஏன், அரைச்ச மாவைவே மறுபடியும் அரைக்கிறாங்க? என்று எண்ண தோன்றியது.  நான் முனைவர். பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை முன்பு கேட்டதில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்கலாம், ரொம்ப போர் அடிச்சா ஏதாவது மூவிபோகலாம் என்று பிளான் செய்தோம்.

பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சு ஆரம்பிக்கும் போதே, " என்னப்பா, மறுபடியும் அரைச்ச மாவா? ரீசைக்ளிங், குக்கிங் தானே வீட்டிலேயும் செய்யிறீங்க, புத்தக ரெவியூ, புத்தக, கவிதை வெளியீடு போன்றவற்றை செய்யலாமே?  "அடுத்த விழாவில் ஏதாவது புத்தக வெளியீடு எதிர்பார்க்கிறேன்" என்றார்.  பரவாயில்லையே, நல்ல ஸ்டார்டிங் என்று தோன்றியது. எதிர்பார்ப்பின்றி வாழ்வது, அழகென்பது ஆரோக்கியமாக இருப்பது, போன்ற விஷயங்கள், நன்றாக இருந்தது.  அவர்கள் சொன்ன சில கதைகளும், நன்றாகவே இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சை தவிர, மற்றவை அசுரசியமாக இருந்தது. 

ஒரே ஒரு பெனிபிட் என்றால், 10$ இல், லஞ்ச், ஸ்னாக்ஸ், பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு மற்றும் நீர் மோர் சூப்பர்.  மற்றபடி நோ கமெண்ட்ஸ்.

மூவிக்கு என்று நாங்கள் தேர்ந்தெடுத்தது, "நடிகையர் திலகம்". இந்த படம் குறித்த என்னுடைய சில அவதானிப்புகள். எனக்கு தெலுங்கு படங்கள் அதிகம் பிடிக்காது. ஆனாலும், "எவடே சுப்பிரமணியம்" எடுத்த "நாக் அஷ்வின்" மேல் ஒரு நம்பிக்கை உண்டு. அதனாலேயே, அவர் அடுத்த படத்தை நடிகை சாவித்ரி வாழ்க்கை என்றதும் பார்க்க ஆவலுடன் இருந்தேன். என்னை பொறுத்த வரை இந்த படம் நாக் அஸ்வினின் பெஸ்ட் என்று சொல்ல மாட்டேன். எவடே சுப்பிரமணியம் உடன் பொருத்தி பார்க்கும் போது, இது சுமார். கீர்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தது. எனக்கு பிடித்த ஒரு விடயம், உண்மையை எந்த சாயமும் பூசாமல் எடுத்தது. சாவித்திரியின் மிட் லைப் கிரைசிஸ் மற்றும் ஆணின் ஈகோ, நன்றாக காட்சி படுத்த பட்டு இருந்தது என்று சொல்வேன்.




சில நாட்களுக்கு முன் முகநூல் COO ஷெரில் (ஜிமிக்கி கம்மல் ஷெரில் அல்ல) அவர்களின் டெட் டாக் கேட்க நேர்ந்தது. "ஏன் மிக குறைந்தஅளவில் பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்?" என்பது குறித்த அவர்களின் உரை, அற்புதம்.




அவர்கள் சொல்ல வருவது இது தான். வேலை செய்யும் பெண்கள் பொதுவாக தனக்கு கிடைத்ததை வைத்து வாழ பழகி கொள்கிறார்கள். தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகும் போதோ அல்லது மறுக்கப்படும் போதோ அதற்காக போராடுவதில்லை.
உதாரணமாக, கல்யாணம் ஆகி குழந்தை குடும்பம் என்று வந்தபிறகு, இருப்பது போதும், எதுக்கு வீனா கேள்வி கேட்டுட்டு என்று அமைதியாக இருந்து விடுவது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கிடைத்தது வைத்து இருப்பது. என்று தனக்கென்று ஒரு வட்டத்தை வகுத்துக்கொண்டு, அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம் என்று முடிவு கட்டி வாழ பழகி கொள்வது.
இதுவே முதல் காரணம், பெண்கள் தலைமை பொறுப்பில் வரமுடியாமல் போவதற்கு என்கிறார்.

அவர் குறிப்பிட்ட இரண்டாவது காரணம், வீட்டில் இருக்கும் துணைவரை அனைத்து விடயங்களிலும் துணைவராக பயன்படுத்தி கொள்ளாதது. அல்லது பயன்படுத்த முடியாமல் போவது.
இது பொதுவாக நாம் பார்க்கும், கேட்கும், சந்திக்கும் ஒன்று. வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டில் கணவர் உதவாமல் போகும் பட்சத்தில் அந்த வேலை பெண்ணுக்கு ஒரு நரகம் மட்டுமே. வீட்டிலும் வேலை செய்து விட்டு, வெளியிலும் வேலை செய்து, பின் வீட்டுக்கு வந்து மறுபடியும், குழந்தை, சமையல் என்று ஒரு மெஷின் போல ஆகி விடும் ஒரு நிலை.

அதே நேரம்,  ஆணை விட அதிகம் சம்பாதிக்கும் நிலை பெண்ணுக்கு வந்துவிட்டால் , ஆணுக்கு  ஈகோ தொற்றிக்கொள்கிறது. நம்மை மதிப்பதில்லை, என்ற ஒரு வித மனநோய். இப்போது தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மனநோய் குறைந்து கொண்டு வந்தாலும், இன்னும் முழுதும் மறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


எனக்கென்னவோ நான் மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று தோன்றுகிறது. மகளிர் விழா என்றாலும் அதற்கென்று எந்த ரிஸ்க் கும் எடுக்காமல், மறுபடியும் அனைத்து விழாவும் போல, "சமையல், கலைப்பொருள் என்று" மகளிர்  நினைக்கும் பாங்கு ஒரு புறம்,    புகழ் பணம், அதுவும் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் ஒரு நிலையில் நடக்கும் ஈகோ மோதல்கள் நடந்து, அதனால் திசை திரும்பிய சாவித்திரியின் வாழ்க்கை. இந்த இரண்டுமே ஷெரில் அவர்கள்  குறிப்பிட்ட பெண்கள் தலைமை பொறுப்பில் இல்லாமல் போனதற்கான காரணங்கள் என்று தோன்றுகிறது.


நன்றி.

Sunday, May 6, 2018

புகழ், திமிர், கோபம்


எதற்க்காக திடீரென்ற, "புகழ், திமிர், கோவம்" பற்றிய  ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு சிலர், அந்த டிபார்ட்மெண்டில் எல்லோருமே "திமிர்" பிடித்தவர்கள். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். உங்களை அவமான படுத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். 


திமிர் என்றால் என்ன? அரகன்ஸ் என்றால் என்ன?

திமிரை காட்டுபவர்கள் மறைமுகமாக சொல்ல விரும்புவது, " நான் தான் அறிவாளி. எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும், நீங்கள் எல்லாருமே முட்டாள்கள். ஒன்றுக்கும் உதவாதவர்கள். நான்  எதுக்கு உங்களுக்கு உதவி என்னுடைய நேரத்தை செலவளிக்க வேண்டும்." என்னுடைய அறிவை மதித்து எனக்கு மதிப்பளித்தால் நான் உங்களுடன் பேசுகிறேன்". "எனக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் எனக்கு கோவம் வரும்". "நான் தான் பெஸ்ட்"

எல்லோரும் பிறக்கும் போதே திமிருடன் இருக்கிறார்களா? இது எப்படி ஆரம்பிக்கிறது?




ஜிகர்தண்டா படத்தில் ஒரு டயலாக் வரும். "நம்மள பாத்து அடுத்தவங்க பயந்து ஒதுங்கும் போது ஒரு கிக்கு வரும்!!, அத மட்டும் அனுபவிச்சுடம்னா, அவ்வளவு தான்!!, சூர போதை!!". "அடுத்தவங்க மத்தியில நாம தனித்து தெரியுறோம். நம்மள எல்லாரும் மதிக்கிறாங்க". அவங்க மதிக்கிறாங்களா அல்லது பயந்து விலகி போறாங்களோ தெரியாது, ஆனா, நாம்ம  மத்தவங்கள விட பெரியாள்!!".

இந்த போதை/புகழ் கொடுக்கும் ஒரு திமிர்.  அந்த புகழ்/போதை கிடைக்காத போது அல்லது புறங்கணிக்க படும் போது வரும் ஒரு கோவம்.


"Stardom /ஸ்டர்டாம்" அடைந்த பலர் கடக்கும் பொதுவான பாதைகள்..


  • எதோ ஒரு திறமை இருக்கும்
  • அந்த திறமையை வெளியே கொண்டுவர வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் 
  • அந்த திறமையை உலகுக்கு காட்ட, எல்லா வகையிலும் பொறுமையாக தொடர்ந்து முயல்வார்கள்
  • ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும்.
  • அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.
  • உலகம் அவர்களை கொண்டாடும்
  • வெற்றியை சுவைக்கும் போது கிடைக்கும் சூர போதை. 
  • தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற "திமிர்" வருவது  
  • அந்தபுகழ் போதையை தக்கவைத்து கொள்ள எல்லாம் செய்வது 
  • புகழ் காணாமல் போவது, மக்கள் நம்மை மதிப்பதில்லை என்று அறிவது 
  • அப்போது வரும் கோவம், இயலாமை, அதற்காக மற்ற போதை வஸ்துக்களை தேடி சென்று தன் அழிவை தானே தேடி கொள்வது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த ஆர்ட்டிஸ்ட் எடுத்து கொள்ளுங்கள், பலரின் கேரியர் க்ராப் இப்படி தான் இருக்கும். இதுல பெண்கள் என்றால், வேறு மாதிரியான நிலைக்கு தள்ள படுவதும் உண்டு. 


இது நடிகை நடிகர்கள், ஆர்ட்டிஸ்ட் அல்லது showbiz இல் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா?

இல்லை, இது எந்த துறைக்கும் பொருந்தும். எவ்வளவோ வாழ்ந்து கெட்ட குடும்பங்கள். அவர்களின் வாழ்க்கை பயணம் கிட்டத்தட்ட நான் மேலே குறிப்பது போலவே இருக்கும். அந்த திறமை என்பது தொழில் திறமை ஆக இருக்கலாம். குடும்ப பெருமையாக இருக்கலாம்.  ஆனால், அந்த பெருமை எல்லாம் தன்னால் உண்டாக்கப்பட்டது என்ற ஒரு "போதை" மண்டையில் ஏறி ஒரு "திமிர்" மனிதன் மனதில் வந்துவிட்டது என்றால் அதுவே அவன் முடிவுக்கு முதல் படி.

பெரிய குடும்பங்கள், வாழ்ந்து கெட்ட குடும்பங்கள்  இதெல்லாம் விட்டு விடுங்கள், சாதாரண நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் எடுத்து கொள்ளுங்கள்,அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், மனதில்  எதோ ஒரு மூலையில், "புகழ்" அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். அது உலக புகழ், நாட்டு புகழ், ஊர் புகழ்,...என்றெல்லாம் கூட இல்லை, நண்பர்கள் வட்டத்திற்குள், தன் குடும்ப வட்டத்திற்குள், தன்னை புகழ வேண்டும், என்ற இச்சைக்காக காசை இறைக்கும், பலரும் இருக்கிறார்கள். இவர்கள் விரும்புவது எல்லாம்.. "நீ தான் பெஸ்ட்","உன்னை போல யாரும் இல்லை", என்ற வார்த்தைகள். அதற்காக என்னவேண்டும் என்றாலும் செய்வார்கள்.

"சபையிலே, எனக்கு உரிய மரியாதை கொடுக்கல, மதிக்கல", என்ற ஒரு சப்பை காரணத்துக்காக, சண்டை போட்டு பிரிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனையோ? தனக்கு என்று இருக்கும் புகழை, எல்லாரும் மதிக்க வேண்டும் என்ற "திமிர்", இப்படிபட்ட மக்கள் மனதில் ஆழ பதிந்து, அதனை அடுத்தவர் தராத பட்சத்தில் "கோவம்" தலைக்கேறி சண்டை போடுவது,இல்லை வன்முறையில் இறங்குவது.


நிற்க, தற்போது தொடங்கிய பிரச்சனையான," எப்படி திமிர் பிடித்தவர்களுடன் வேலை பார்ப்பது" என்ற கேள்விக்கு வருவோம்.

 "இந்த திமிர் என்பது ஒரு வித பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு". இவர்களிடம் "நீங்க தான் பெஸ்ட்" , என்று சொல்லி பாருங்கள். உடனே உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். நீங்கள் "நான் முட்டாள்" என்ற தொப்பியை அணிந்து கொண்டு அவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.  அடுத்தவர்கள் முன் இவர்கள் தான் பெஸ்ட் என்று காட்டி கொள்ளஎன்ன வேண்டும்  என்றாலும் செய்வார்கள். அதனால், இவர்களை, "நீ தான் பெஸ்ட்" என்ற "புகழ்" பிஸ்கெட் போட்டு அவர்களின்  "திமிரை" வழிக்கு கொண்டு வந்து வேலை செய்ய வேண்டும். 

இந்த டெக்கனிக் எல்லா இடத்திலும் உதவும், குடும்பத்தில், பிரெண்ட்ஸ் மத்தியில் என்று எல்லா இடத்திலும் உதவும். அதுவும் மாமியார் மருமகள் விஷயத்தில் ரொம்பவே உதவும். 

கடைசியாக நான் வாசித்த ஒரு quote இங்கே 




photos from Google images



நன்றி 





Thursday, March 29, 2018

எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை

ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?

ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும்.  அதே நேரம், அந்த மேனேஜர்க்கு  உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.

ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.

மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

Image from google images

1. இந்த படிநிலையில் முதல் படி," நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்", எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா  செய்திகள்/நிகழ்வுகள் கலவை"

2. இரண்டாவது படி, " நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்".  என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.

3. மூன்றாவது படி, "நம்முடைய கற்பனை கலத்தல்", நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது.  அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.


4. நான்காவது படி," நாம் கலந்த கற்பனை கொண்டு  இது தான்நடந்து கொண்டிருக்கிறது  "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு  பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய  ஊகத்தை வலுப்படுத்துவது.

5. ஐந்தாவது படியில், "நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து  அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது" . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க,  ஏன் இந்தம்மா/அய்யா  மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது

6.  ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது".  அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.

7. ஏழாவது படிநிலை, இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது. அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி  பிடிப்பது.


நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?

வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது  சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.

உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.


நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக  அறிவியல் பார்வை பாப்போம்.

எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light).  என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.

பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.


Image from google images

சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. "ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"


பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது

" What we observe is not nature itself, but nature exposed to our method of questioning."


நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.


உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு,  "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.


நன்றி.





Tuesday, September 12, 2017

நகையும், சுயமரியாதையும், கொசு(றும்)!!

ஒரு சில சமயம் சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகள் நம்மை வாயடைத்து போக வைக்கும். பல நேரங்களில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தாலும் சமீபத்தில் முகுந்த் கேட்ட ஒரு கேள்வி என்னை யோசிக்க செய்தது. அது, Why do Women/Girls wear jewellery and makeup?
அதாவது "எதுக்கு மா நகை போடுறாங்க?, எதுக்கு பொண்ணுங்க மேக்கப் பண்ணுறாங்க?" இதுவே அந்த கேள்வி?.

எனக்கும் இதனை சார்ந்த ஒரு விஷயம் தோழிகளுடன் பேசும் போது கேட்க நேர்ந்தது. அதாவது, #100சாரீபாக்ட் எனப்படும் ஒரு தினமும் ஒரு புடவை அணிந்து போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் போடுவது. புடவை மட்டும் என்றில்லாமல் அதற்க்கு தேவையான அணிகலன்கள் (ஜிமிக்கி, தோடு, வளையல், நகை etc ) அணிந்து, அவை எங்கே வாங்கியது என்று டாக் செய்வது.
இதனை பலர் தினமும் செய்து வருவதாக அறிந்தேன். எதற்காக இவை செய்கிறார்கள்? என்ற கேள்வியும் வந்தது.

 சைக்காலஜியில் "மாஸ்லோவின் தேவைகள் பிரமிட்" என்ற ஒன்று உண்டு.  அதனை "Maslow's Hierarchy of Needs" என்றழைப்பர்.  அதன்படி, மனிதர்கள் தேவைகளை பல படிநிலைகள் கொண்டு பிரிக்கலாம். அவை,

1. அடிப்படை தேவைகள் (உணவு உடை உறைவிடம்)
2. பாதுகாப்பு தேவைகள் (வேலை, உடல்நிலை, வாழ்வில் ஸ்திரத்தன்மை)
3. அன்பு தேவைகள் (நண்பர்கள், குடும்பம், உறவுகள்)
4. சுயமரியாதை தேவைகள் (தன்னம்பிக்கை, சாதித்தல், அடுத்தவர் மதிக்கும்படி நடத்தை, தனித்தன்மை)
5.சுயம் அறிதல் (நன்னடத்தை, படைப்பாற்றல், தன்னிலை உணர்தல், வாழ்வின் நோக்கம் அறிய முற்படுத்தல்)



ஒவ்வொருவருடைய வாழ்வையும் எடுத்துக்கொண்டால் இந்த பிரமிடின் எதோ ஒரு படிநிலையில் நாம் இருக்கிறோம் அல்லது பல படிநிலைகளை தொட்டிருக்கிறோம் என்று அறியலாம்.

உதாரணமாக. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் இரண்டாம் படிநிலையான வேலையை சார்ந்இருக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் பலரின் அடிப்படை வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகின்றன.

வேலையும் இருந்து விட்டால், வாழ்வின் அடுத்த நிலையான, உறவுகளை தேட ஆரம்பித்து விடுகிறோம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நிலை பொருந்தாது, ஏனெனில், வேலைவெட்டி இல்லாதவன் தான் கதாநாயகன், ஆனால் உண்மை நிலவரம் வேறு, வேலை வெட்டி இல்லதவனை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

உறவுகளும் அமைந்த பின், அடுத்த நிலை பிரச்சனைகள் எட்டி பார்க்கின்றன, பெரும்பாலும் அவை, சுயமரியாதை சம்பந்தப்பட்டவை. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் 100க்கு 99 சீரியல்கள் இந்த சுயமரியாதை பிரச்னைனை கையிலெடுத்து, சமூக அந்தஸ்து, அடுத்தவர் மதிக்கும்படு நடத்தை,…என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுபவை.

சீரியல்கள் தவிர்த்து உண்மை நிலவரம் என்னவென்றால், தன்னை இந்த சமூகம் மதிக்க வேண்டும், அதற்கான சில ப்ரோடோகால் உண்டு, நகை போடுவது, மேக்கப் போடுவது, 100சாரீபாக்ட் எல்லாமே, தனக்கான, தன்னுடைய சுயத்துக்கான தேடல். இதனாலேயே, நிறைய வீடுகளில் சீட்டுப்போட்டு நகை வாங்குவது. வாயை கட்டி வயிற்றை கட்டி நகை வாங்குவது. கஷ்டப்படும்போது அடகு வைக்க என்று காரணம் சொல்லப்பட்டாலும், மற்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியான பல வீடுகளில் நகை என்பது, தன்னுடைய சுயமரியாதையை வளர்த்து கொள்ளவே. எனக்கு தெரிந்தே ஏழை குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு செல்லமாட்டார்கள், ஏனெனில், நீங்கள் எவ்வளவு நகை அணிந்து இருக்குறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் இருக்கும் என்பதால்.

சுயமரியாதை என்ற ஒன்று மட்டுமே பலரை பலநிலைக்கு கீழே தள்ள வல்லது. பலர் கடன் வாங்கியாவது வீடு கட்டுவது, நகை வாங்குவது, பார்ட்டி வைப்பது எல்லாமே, தன்னுடைய ஸ்டேட்டஸ் ஐ வெளிக்காட்டி கொள்ள, ஏதோஒரு வகையில் தான் உயர்ந்தவன் அல்லது நானும் உங்களில் ஒருவன் என்று காட்டி கொள்ள. இப்படி வெட்டியாக சுயமரியாதை மட்டுமே கருத்தில் கொண்டு, உறவுகளை, வேலையை தொலைத்து அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்கள் எல்லாம் பந்தா பேர்வழிகள், "ரொம்ப நல்லவங்க சார்/மேடம்" நீங்க என்று சொல்லிவிட்டால் போதும், எதையும் செய்வார்கள்.

சுயமரியாதை என்பது ஒருவகை தேவை மட்டுமே, ஆனால் அதுவே வாழ்வின் முழுநோக்கமாக இருப்பின் இழப்பு மட்டுமே கிட்டும்.  வாழ்வின் முழு நோக்கம் தெரிய, அதீத சுயமரியாதை நிலையை விட்டு வெளிவரவும்.  நம்முடைய முழு திறமை வெளிப்படும்.

கொசு(று)

கொசுக்கடி பற்றிய ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கொசுக்கள் ஏன் ஒருசில மட்டும் அதிகம் கடிக்கின்றன?, இதுவே கட்டுரை

நீங்கள் ஒருபார்க்குக்கு நண்பர்களுடன்  சென்றுள்ளீர்கள், அங்கு உங்களை மட்டுமே கொசு பயங்கரமாக கடிக்கிறது, மற்றவர்களை அல்ல. ஏனென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா?, ஏனெனில், கொசுக்கடிக்கும் உங்கள் ரத்தவகைக்கும் சம்பந்தம் உண்டு. கொசுக்கள் ஓரிரு ரத்தவகை மனிதர்களை அதிகம் விரும்பும். அதுவும், ஓ வகை மனிதர்கள் தாம் கொசுக்களின் முதல் விருப்பம். ஆனால் உங்கள் ரத்தவகை ஏ  எனில், உங்களை அதிகம் கடிக்காது.

நன்றி



Saturday, September 9, 2017

கலிங்கத்து பரணியும், விக்ரம் வேதாவும், கைதிகள் குழப்பமும்!

படித்தது:
தமிழ் சரித்திர நாவல்களில் கல்கியை தவிர நான் வாசித்ததில்லை. கல்கியின் எழுத்துகளில் கூட பொன்னியின் செல்வன் கவர்ந்த அளவு கூட பார்த்திபன் கனவோ இல்லை சிவகாமியின் சபதமோ கவரவில்லை. இந்த முறை  இந்திய பயணத்தில் மூச்சு முட்ட வேலை இருந்ததால், கடைசி நாளில் மதுரையில் கோவிலுக்கு சென்று விட்டு  புதுமண்டபத்தில் தேடி கடல் புறா வாங்கி வந்தேன். சாண்டில்யனின் நாவல்கள் வாசித்ததில்லை, ஆயினும் பலர் சிலாகித்து சொல்வதை கேட்டதுண்டு. 
முன்பெல்லாம் ஓரிரு வாரங்களில் புத்தகத்தை முடிக்க நேரம் இருந்தது போல் இப்பொழுது இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாவது முடித்து இருக்கிறேன். ஒருவழியாக 3 பாகங்களையும் 3 மாதத்தில் முடித்தாகிவிட்டது.
 

இதன் கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்பதால் சிறு கதை சுருக்கம் இங்கே. தென்னிந்தியாவை ஆண்ட சோழர்கள் பற்றியதே "கடல் புறாவும்". ஆனால் கதையின் நாயகன் கருணாகர பல்லவன் அல்லது இளைய பல்லவன். பொன்னியின் செல்வன் கதை வந்தியத்தேவனை சுற்றி நகர்வது போல, கடல்புறா, இளையபல்லவனை சுற்றி நகர்கிறது. அவன் கடலோடும் திறமை, படை நடத்தும் திறமை, அவன் சந்திக்கும் பிரச்னைகள் அதனை எப்படி முறியடிக்கிறான்..இப்படி நகர்கிறது கடல்புறா.

 ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், வந்தியத்தேவன் என்ற அரசன் பெயரளவில் பொன்னியின் செல்வனில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பார். அவர் உண்மையில் வாணர் குலத்தை சேர்ந்தவரா இல்லையா, என்று உறுதியாக தெரியவில்லை. அவரை பற்றியும் பெரிய அளவில் சரித்திரத்தில் இல்லை. ஆனால், இளையபல்லவனோ கதையின் நாயகன், உண்மையில் கருணாகர தொண்டைமான் என்று புகழ்பெற்று குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக படைத்தளபதியாக இருந்தவன். 

புத்தகத்தை பற்றி என்னுடைய கருத்துக்கள், ஒவ்வொரு ஆசிரியர்க்குள்ளும் ஒரு எழுத்து நடை உண்டு. தான் சொல்லவந்ததை சொல்லும் விதமும் வித்தியாசமாக இருக்கும். சாண்டில்யனின் நடை, ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் அடுத்த அத்தியாயத்துக்கான லீட் (சுருக்கம் ) கொடுக்கிறார், அது வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு நாவல் படிக்கும் போதும் அதன் தொடர்புடைய கிளை கதைகள் படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல தோண்டியபோது, எனக்கு சில விஷயங்கள் புரிந்தன.  

கடல்கடந்து ராஜ்யத்தை விரிவு செய்த இந்திய அரசர்களில் சோழர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் கடற்படை எப்படி அந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. எப்படி எல்லாம் அவர்கள் படையை காத்தார்கள், வழி நடத்தினார்கள் என்றெல்லாம் படிக்கும் போது புல்லரிக்கிறது.  இதெயெல்லாம் கடந்து எனக்கு புரிந்த விஷயம், கலிங்கத்து பரணி என்ற காவியத்தின் தலைவன் இளையபல்லவன். 

பரணி என்பது ஆயிரம் யானைகளை போரில் கொன்ற ஒரு தலைவனை பற்றி பாடுவது "கலிங்கம்" என்ற நாட்டை பிடிக்க நடந்த போரில் ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு தலைவனின் புகழ் பாடும் காவியம் கலிங்கத்து பரணி. அதனை முன்னின்று நடத்திய கருணாகர பல்லவனின் கீர்த்தி பாடும் காவியம் கலிங்கத்து பரணி. 

கலிங்கத்து பரணி என்ற ஒரு காவியம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்திருந்தாலும், அது என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை. ஒரு சில தமிழறிஞர்கள் அவ்வப்போது மேடைகளில் "கலிங்கத்து பரணி" குறித்து பேசுவது மட்டுமே கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஒரு வகை இலக்கியவகை. பரணி பாடுவதற்கு என்று சில வழிமுறைகள், இலக்கணங்கள்  இருக்கின்றன. அதன் படி பாடுவது சுலபமல்ல என்றெல்லாம் அறியும் போது நமது தமிழ் மொழியின் சிறப்பை முன்னோர்களின் சிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
எனக்கென்னவோ கடல் புறா படித்த பிறகு, லியோ டால்ஸ்டராயின் "War and  Peace" ஞாபகத்துக்கு வந்தது. இரண்டும் ஒரு அரசனின்/தலைவனின் போர்முறையை, வீரத்தை பறைசாற்றுகிறது. ஒரு அற்புதமான அனுபவம். 



பார்த்தது

அமெரிக்கா வந்தபிறகு தியேட்டரில் சென்று நான் பார்த்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் நிறைய பேர் புகழ்ந்து சொன்ன "விக்ரம் வேதா" தமிழ் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த வரை மிக மிக நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு என்று அனைத்திலும் பின்னி எடுத்த ஒரு அற்புதமான படம் இது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் (கைதட்டல்) கொடுத்தனர்.  அதில் எல்லா நடிகனின் ரசிகனும் இருந்தார்கள். அதுவே படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி. வெல் டன் டீம்.




வாசித்தது 

விக்ரம் வேதா படத்தை பார்த்த பிறகு வாசிக்க நேர்ந்த ஒரு விஷயம், "  Prisoner's dilemma"
அதாவது, இரண்டு குற்றவாளிகள் A , B இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். இருவரும் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது. இருவரும் வாயை திறக்க மறுக்கிறார்கள்.  அவர்களை அழைத்து  ஒரு டீல் பேசுகிறார்கள், அதாவது, A ஐ அழைத்து நீ உண்மையை ஒப்புக்கொண்டால் உன்னை வெளிவிட்டு B ஐ 20 வருட தண்டனை கொடுப்போம். அதேபோல B ஐ அழைத்து நீ ஒப்புக்கொண்டால் உனக்கு  விடுதலை, A க்கு 20 வருட தண்டனை. அதே போல இருவரும் ஒப்புக்கொண்டால் 5 வருட தண்டனை. ஆனால் இருவரும் கடைசிவரை வாயை மூடி இருந்தால் 1 வருடம் மட்டுமே சிறை. என்று சொல்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். 

இந்த நிலையில் என்ன முடிவெடுப்பார்கள் அந்த கைதிகள்?



 
 என்ன ஆகிறதென்றால்,  இருவரும் வாய் மூடி இருந்தால் ஒருவருடம் தண்டனை என்றறிந்து இருந்தாலும்,  பெரும்பாலும்எங்கே அடுத்தவன் ஒப்புக்கொண்டு தனக்கு 20 வருட தண்டனையும், அவனுக்கு விடுதலையும் பெற்றுத்தந்த விடுவானோ என்றெண்ணி,  இருவரும் ஒப்பு கொண்டு இருவரும் ஐந்து வருட சிறை அனுபவிப்பர். 

இது அவர்கள் இருவரும் வாய் மூடி இருந்தால் கிடைக்கும் ஒருவருட சிறையை விட அதிகம் என்றாலும், நிறைய பேர் தன்னலமாக யோசித்து அதிக தண்டனை பெற்று கொள்கிறார்கள் என்பது "கைதிகள் குழப்பம்"  எனப்படும் "Prisoner's dilemma"



நன்றி