Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Sunday, August 7, 2016

மதத்தை மதிப்பவர்களும், மிதிப்பவர்களும்!!

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது. அது இந்திய கோயில்களை பற்றியது. அடிக்கடி இதனை போன்ற செய்திகளை தோழிகள் க்ரூப் பார்வேர்ட் செய்தாலும் பார்க்காமல் இருந்த நான் என்ன கிரகமோ, அன்று படிக்க தொடங்கினேன். அதில் கூறப்பட்ட ஒவ்வொரு செய்தியும் சிரிப்பை வர வழித்தது. வாயை வைச்சிட்டு சும்மா இருக்காம, வாயை கொடுத்து நான் வாங்கி கட்டி கொண்ட கதை தான் இங்கு.

அந்த பார்வேர்டில்  கூறப்பட்ட ஒரு விஷயம், காசி நகரை சுற்றி 20 கிலோமீட்டர் வரை காகம், கருடன் பறப்பதில்லை, அங்கு பல்லி இருப்பதில்லை. என்பது போன்ற செய்தி. என்ன கிரகமோ, அதனை படிப்பதற்கு சில காலம் முன்பு தான் என்னுடைய பிரெஞ்சு நண்பர் ஒருவர் தன்னுடைய "காசி" அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதுவும், 24 மணி நேரமும் எரியும் சிதை, பாதி வெந்தும் வேகாமலும் கங்கையில் தூக்கி வீசப்படும் சடலங்கள் குறித்தும், அதனை உண்ணும் பறவைகள்  , கோட்டான்கள் குறித்தும் தான் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அங்கு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் காட்டி விவரித்து கொண்டு இருந்தார். நான் காசிக்கு சென்றதில்லை என்றாலும், அவர் காட்டிய புகைப்படங்கள் புல்லரிப்பை ஏற்படுத்தின.

மேலை நாடுகளில் எல்லாம் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த உடலை உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள். அந்த உடல் அழகுபடுத்த எடுத்து செல்லப்பட்டு விடும். அதற்கு என்றே பியூனெரல் ஹோம்ஸ் எனப்படும் இறுதி சடங்கு இல்லங்களுக்கு சென்று, பின்னர் இறுதி சடங்கு அன்று எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். இப்படி பார்த்து பழக்கப்பட்ட அந்த பிரெஞ்சு மனிதருக்கு 24 மணிநேரமும் எரியும் சிதையும் அதனை சுற்றி நடக்கும் விஷயங்களும், உடல்களை உண்ணும் பறவைகளும் கோட்டான்களும்  ஆச்சரியப்படுத்தியதில் வியப்பு எதுவும் இல்லை என்று தோன்றியது. இதனை சார்ந்த நேஷனல் ஜியோகிராபியின் செய்தி ஒன்றும் காண நேர்ந்தது  முடிந்தால் படித்து பாருங்கள். இதுவே இன்றைய நிலை. இப்படி இருக்க, எங்கிருந்து பறவைகள் பறப்பதில்லை என்ற செய்தி வந்தது என்று தெரியவில்லை.


அடுத்த விஷயம், சாமிக்கு செய்யும் அபிஷேக தயிர் புளிப்பதில்லை என்பது. இதனை படித்த பிறகு எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தயிர் புளிப்பது என்பது லாக்டோபேசில்லஸ் எனப்படும் பாக்டீரியா செய்யும் வேலை. அது பாலில் இருக்கும் லாக்டோஸை சாப்பிட்டு லாக்டிக் ஆசிட் ஆக மாற்றும் அதனாலே புளிப்பு சுவை வரும். எவ்வளவு பாக்டீரியா இருக்கிறதோ அவ்வளவு லாக்டிக் ஆசிட் இருக்கும். அவ்வளவு புளிப்பு ஏற்படும். இதில் எப்படி சாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்று சொல்கிறார்கள் தெரியவில்லை. தயிரில் இருக்கும் பாக்டீரியா முழுதும் கொல்லப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். அப்படி ஆக வேண்டும் என்றால் சாமி விக்கிரகத்தில் ஆன்டி பாக்டீரியா தன்மை இருக்க வேண்டும். அதனை தான் சொல்லுகிறார்களா?. இந்திய சாமி விக்கிரகங்களை சுற்றி எல்லா பூச்சிகளும் ஓடி விளையாடி பாக்டீரியா வளர்வதற்கு மிக மிக சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் இன்றைய வேளையில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்க கூடாது போல..ஏன்னா..இதெல்லாம் நான் சும்மா இருக்காம பார்வேர்ட் செய்த தோழிக்கு சொல்ல  , அவளோ  "என்னமா வெளி நாடு போயிட்டு நம்ம ஊரு சாமிய, சூழலை கிண்டல் அடிக்கிற, நாத்திகனாயிட்டாயா?, ரொம்ப படிச்சிட்டு இப்படி நம்ம கலாச்சாரத்தை குறை சொல்லுறது இப்ப பேஷன் ஆகிப்போச்சு....மத  துரோகி"..அப்படிங்கிறாங்க.. என்னத்தை சொல்லுவது...

கடவுள் அல்லது நமக்கும் மேலே ஒரு போர்ஸ் இருக்கிறது என்பதை நம்புபவள் நான், ஆனால், இப்படி கதை கதையாக கட்டி விட்டு, அதனை சாமியின் அருள் என்று கலர் கலர் ஆக ரீல் விட்டு. அதனை நம்புபவர்கள் மட்டுமே இந்து மதத்தை மதிப்பவர்கள், மற்றவர்கள் எல்லாம் மிதிப்பவர்கள் என்று வாதிடும் மக்களை என்னவென்று சொல்லுவது.


டிஸ்கி 

இது, என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. அறிவியல் ரீதியாக எனக்கு தெரிந்ததை மட்டுமே இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். எந்த மதத்தையும் குற்றம் சொல்ல வில்லை.

நன்றி.


Monday, July 25, 2016

நானொரு முட்டாளுங்க!

முட்டாள் என்பவர் யார். விஷயம் தெரியாதவர்களே முட்டாள் என்று ஒரு விளக்கம் சொல்லுவார்கள். பள்ளியை எடுத்து கொள்ளுங்கள், ஆசிரியர் ஏதாவது எளிய கேள்வி கேட்டு, அதற்கு நமக்கு பதில் தெரியவில்லை எனில், சரியான முட்டாள் என்று திட்டுவார். அதே போல நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி அலுவலகத்திலும் சரி, எப்போதும் யாரும் நம்மை முட்டாள் விஷயம் தெரியாதவன் என்று எண்ணி விடக்கூடாது என்று நினைத்து நினைத்தே நாம் செயல்படுவோம்.

இந்த குணம் இந்தியர்களிடம் அதிகம் இருப்பதாய் உணர்கிறேன். அதாவது, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில் எனக்கு தெரியாது என்று ஒத்து கொள்ளுவது.  அதற்கு பதில், அதனை பற்றி தெரிந்தது போல காட்டி கொள்ளுவது. உதாரணமாக, நீங்கள் ஒரு ஆபீஸ் மீட்டிங்இல் இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அங்கு ஒரு விஷயம் குறித்து விவாதிக்க பேசுகிறார்கள் என்று வைத்து கொள்ளுவவோம், அந்த மீட்டிங்கில் நிறைய இந்தியர்கள் இருப்பின், நீங்ககவனித்து பாருங்கள், அதில் இருக்கும் எத்தனை இந்தியர்கள் தனக்கு விஷயம் தெரியாது இனிமே தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையை ஒத்து கொள்ளுகிறார்கள். மிக மிக சொற்பனமானவர்கள் மட்டுமே.. பலர், அதனை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், எனக்கும் ஏதோ தெரியும் நானும் முட்டாள் இல்லை என்று காட்டி கொள்ளுவார்கள்.

சொல்லப்போனால், நானும் கூட எங்கே நமக்கு விஷயம் தெரியாது என்று நினைத்து மட்டம் தட்டி விடுவார்களோ என்று பயந்து தெரியாத விஷயத்தையும் தெறி தெரிந்தது போல சில நேரங்களில் முன்பு நடந்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் யாராவது நேரடியாகவே என்னை முட்டாள் என்று திட்டினால் கூட அப்படியா, நன்றி என்று சொல்லி விடுகிறேன் என்பது வேறு கதை.

சரி என்னுடைய கதை இருக்கட்டும். என்னுடன் வேலை பார்க்கும் சிலர் தனக்கு தெரியாமல் ஏதாவது இருந்தாலும் என்ன எது என்று கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்ளாமல், தனக்கு அதனை பற்றி தெரியும் என்று கதை விடுவதை பார்த்து இருக்கிறேன். அதுவும் நிறைய இந்தியர்கள் இதனை போல செய்வதை கண்டு இருக்கிறேன்.

எனக்கு சமீபத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. புது ப்ராஜெக்ட் ஒன்றில் வேலை செய்ய நேர்ந்தது. அந்த ப்ராஜெக்ட் குறித்து தெரிந்த சிலரிடம் இருந்து தெரியாத சிலர் KT செய்ய வேண்டும். அறிவு பரிமாற்றம், என்பது தெரியாத விசயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுவது. ஆனால், நடந்தது காண சிரிப்பாக இருந்தது. ப்ராஜெக்ட் குறித்து தெரியாத ஒரு சிலர், எதோ தனக்கு எல்லாம் தெரியும் என்று பயங்கர சீன் போட்டு தான் பெரிய அறிவாளி என்று பாஸ் முன்பு படம் காட்டி கொண்டு இருந்தனர். பின்னர் மீட்டிங் முடிந்தவுடன், அதாவது பாஸ் யாரும் அருகில் இல்லாத போது , என்னிடம் வந்து இதனை எப்படி செயல் படுத்துவது என்று ரொம்ப ரொம்ப பேசிக் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். "நீ வாங்குற அஞ்சு பத்து காசுக்கு எதுக்கு இந்த விளம்பரம்" என்ற கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது.

சரி எதுக்கு இப்போ இதை பத்தி எழுதுறேன் அப்படின்னா, இரண்டு காரணம். முதல் காரணம் இது தான். சிறு வயதில் நிறைய கார்ட்டூன் புத்தகங்கள் படிப்பதுண்டு. இப்பொழுது கூட ஒரு சில காமிக் ஸ்ட்ரிப் படிப்பது பிடிக்கும். அதுவும் அன்றாட ஆபீஸ் விஷயங்களை நக்கல் அடிப்பதில் பெஸ்ட் ஆக
இருக்கும் "DILBERT" கார்ட்டூன் ரொம்ப இஷ்டம். அவரின் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. "The Dilbert Principle" என்ற புத்தகம். அதுவும் அதன் கதாசிரியர் Scott Adams பப்லிக் ஆக "நான் ஒரு முட்டாள் எனக்கு கார்ட்டூன் மட்டுமே வரைய தெரியும், ஆனால் என்னையும் நம்பி ஒருத்தர் புக் பப்லிஷ் செய்திருக்கிறார். அதனால் ஏதானும் தவறாய் இருந்தால் சாரி " என்று தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார். இவரே முட்டாள்னா, நானெல்லாம் அடி,அடி,அடி முட்டாளுங்கோ..


Photo from Google images

இரண்டாவது விஷயம், ஹி, ஹி,ஹி.. நிறைய அறிவு ஜீவிங்க படம் பார்த்துட்டு இது சரியான பப்படம் பா.. அப்படின்னு விமரிசனம் செய்த "கபாலி" நான்  பார்த்துட்டேங்க.. குட் பெலோஸ், காங்ஸ் ஆப் நியூயார்க் போல ஒரு காங்ஸ்டர் படம் பார்த்த திருப்தி. ரொம்ப சாதாரணமா கதைக்கு தகுந்தாற் போல பொருந்தி ரஜினி. டூயட் பாடாமல், அதிகம் பஞ்சு டயாலக் பேசாமல் நல்லா நடித்த ரஜினி பார்க்க நேர்ந்தது. முதல் நாள் முதல் ஷோ என்று சென்று 25$ செலவழிக்காமல் 4 நாட்கள் கழித்து சென்றதால் 10 $ சேமிக்க நேர்ந்தது. அதோடு, கூட்டமும் அதிகம் இல்லாமல் காண நேர்ந்தது.
அதனால், நானும் ஒரு முட்டாள் தானுங்கோ!


டிஸ்கி

இன்னைக்கு டிஸ்கிக்கி லீவு..
யாரும் வந்து படம் நல்ல இல்லைன்னு திட்டாதீங்கப்பா.. இது என்னோட வியு மட்டுமே.


Tuesday, June 7, 2016

ஊர் சுற்றலும், ஊர் புராணமும்!

கூடல் நகர், தூங்கா நகரம், சங்கம் வளர்த்த நகரம் இப்படி பல பல பெயர்கள். எங்கள் ஊர், நாங்க மதுரைகாரங்க என்று பெருமையாக சொல்லாத மதுரைகாரங்களை பார்ப்பது அரிது. ரொம்ப கோவபடுவாங்க ஆனா பாசக்காரங்க. இதெல்லாம் பல காலங்களாக மதுரை காரங்களை குறித்து சொல்லப்படும் சில விஷயங்கள். போன வருடம் வந்ததுக்கும் இப்பொழுது வந்ததுக்குமே நிறைய வித்தியாசங்கள் காண முடிகிறது. என் பார்வையில் சில விஷயங்கள் இங்கு.

முதலில் கோவில்கள் குறித்து. ஏற்கனவே நிறைய எழுதியாகி விட்டதால் தற்பொழுது கொஞ்சம் மட்டுமே இங்கு. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் மற்றும் கூடல் அழகர் பெருமாள் கோவிலில் எல்லாம் நீங்கள் ஆயிரம் ருபாய் நோட்டை நீட்டினால் நடக்கும்  உபசாரம் அருமையாக இருக்கிறது. 20ருபாய் 50 ரூபாய் மற்றும் 100 ருபாய் என்று வித வித டிக்கெட்டுகள் எடுத்தாலும்  எல்லாவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. VIP லைன் என்று ஒன்று தனியாகவே விடுகின்றனர். அர்ச்சகர்கள் சாமியை மறைத்தது போக , பாதி நேரம் VIP லைனில் செல்லும் பலருக்கும் பக்கத்தில் நிறைய நேரம் தரிசனம் தரும் அம்மன், தர்ம தரிசனத்தில்  கால்கடுக்க 1- 2 மணி நேரம் நின்று  சாமி தரிசிக்க வரும் பக்தருக்கோ அம்மன் தரிசனம் தருவது சில செகண்ட்ஸ் மட்டுமே. சரி, சாமி பாக்குறதுக்கும் ரெகமேண்டசன் வேணும் போல என்று நினைத்து கொண்டேன்.

பக்கத்தில் பார்க்க முடிந்த சில சாமிகளை சுற்றி நிறைய கரப்பான் பூச்சிகள். சண்டிகேஸ்வரர், வல்ல சித்தர் என்று அனைத்து சாமிகளின் மீதும் புகுந்து விளையாடுகின்றன கரப்புகள். சரி எல்லா ஜீவா ஜீவராசிகளுக்கும் கடவுள் படியளக்கிறார் போல என்று நினைத்து கொண்டேன்.

நவகிரகங்கள் இருக்கும் இடத்தில் எலி செத்த நாற்றம் குடலை பிடுங்கு கிறது.  இந்த இடத்தின் அருகிலேயே பிரசாதம் விற்கிறார்கள். அதனையும் மக்கள் வாங்கி அருகில் அமர்ந்தே
சாப்பிடுகிறார்கள். சரி கடவுள் படைத்த உடல் தானே கடவுள் பிரசாதத்தில் சரியாகி விடும் என்ற நினைப்பு போல என்று நினைத்து கொண்டேன்.நம் கோவில்களின் சுத்தம் குறித்து நினைகையில் உடல் புல்லரிகிறது. எல்லாம் கடவுள் செயல்.

அடுத்தது மக்களின் நடவடிக்கை குறித்து. ஞாயிறு மதியம் போல ராஜாஜி பார்க் போகலாம் என்று  போயாயிற்று. எங்கும் எதிலும் கூட்டம்.. பார்க்க்கு டிக்கெட் எடுப்பதில் இருந்து ஒவ்வொன்றுக்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் குழந்தைகள் கூட ஓடும் பெற்றோர் என்று இருந்தால் இன்னொரு பக்கம் காதல் ஜோடிகள்.முன்பாவது கொஞ்சமாவது டிஸ்டன்ஸ் விட்டு அமர்ந்து இருந்த காதலர்கள், தற்பொழுது எல்லாம் ஒருத்தர் மேல் ஒருத்தர் கை போட்டு கொண்டு பப்ளிக் ஆக எல்லா விசயங்களும் செய்கிறார்கள். கொஞ்சம் கூட அடுத்தவர்கள் பார்கிறார்களே என்ற வெட்கம் இருப்பதில்லை. பப்ளிக் ஆக நிறைய அரங்கேற்றம் நடக்கிறது. ஒரு சில விடலை பசங்க மட்டும் இப்படி இருக்கும் ஜோடிகளை குறிவைத்து ஜோக் கமெண்ட் அடிக்கிறார்கள். அதுவும் முக்கால் வாசி நேரம் பெண்ணை குறித்தே இருக்கிறது. இதெல்லாம் அந்த பெண்கள் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

அடுத்து மக்களுக்கு இருக்கும் சுத்த உணர்வு. பப்ளிக் பார்க் என்றாலும் டெல்லி அப்பளம், பாப்கார்ன், காலிபிளவர் பக்கோடா , ஐஸ் க்ரீம் என்று கன ஜோராக வியாபாரம் நடக்கிறது. அதனையும் வாங்கி சாப்பிடும் மக்கள்  சாப்பிட்டு முடித்தவுடன் குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு செல்கிறார்கள். இத்தனைக்கும் மூலைக்கு மூலை குப்பை தொட்டி வைத்து இருக்கிறார்கள்.
 ஆனால் யார் அதெல்லாம் பார்கிறார்கள். நம்ம சாப்பிட்டாச்சா குப்பைய தூக்கி எறிஞ்சிட்டு போயிடனும். அவ்வளவு தான். அடுத்தவர்கள் பக்கத்தில் உக்கரானுமே என்று  நினைப்பும் இல்ல. அதே போல முன்பெல்லாம் கொஞ்சம் இரக்க உணர்வு இருந்தது போல இருந்த மக்கள் இப்பொழுதெல்லாம் தான் தனக்கு என்று மட்டுமே பார்கிறார்கள். உதாரணமாக பொது இடம் பார்க்     பெஞ்ச் என்று வைத்து கொள்ளுங்கள் தான் அமர இடம் பார்த்து கொண்டு தன்  பை, சாப்பாடு கூடை என்று  வைத்து கொள்ளுகிறார்கள். அடுத்தவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமே என்றெல்லாம் நினைப்பே வருவதில்லை. அப்படி ஏதும் இடம் கேட்டு விடுவோமோ என்று நினைத்து நம் பக்கம் முகமே திருப்புவதில்லை.  இதே நிலை பஸ் போன்ற மற்ற இடங்களிலும் நடக்கிறது. கொஞ்சம்   கூட அடுத்தவர்களை பற்றியும் நினைக்க வேண்டும் என்று ஏனோ யாருக்கும் தோன்றுவதில்லை.

கடைசியாக நான் கவனித்த ஒரு விசயம் இன்னும் மக்களுக்கு இருக்கும் ஆண் குழந்தை தான் உசத்தி என்ற மனோபாவம் அதற்க்கு பெண்ணே காரணம் என்ற நினைப்பு அதனை சுற்றி நடக்கும் பிரச்சனைகள் எப்பொழுது மாறுமோ. இது ஒரு புறம் இருக்க உசிலம்பட்டி ஆண்டிபட்டி ஏரியாக்களில் எல்லாம் திரும்பும் இடம் எல்லாம் ப்ளெக்ஸ் பானேர்களில் மணமக்கள் பல வித போஸ்களில் சிரிக்கும் படங்கள். அதில் சிரிக்கும் ஒவ்வொரு மண மகள் கழுத்துகளில் சரம் சரமாக நகைகள். ஒவ்வொரு பெண்ணுக்கும் குறைந்தது நூறு பவுனாவது இருக்கும். நகை விற்கும் விலையில் எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று  தெரியவில்லை.

சரி போதும் என் ஊர்  சுற்றல் புராணம் என்று நினைக்கிறன்.

நன்றி .



Wednesday, April 20, 2016

"கில்லியும்","தெறியும்", ஆங்கரி யங் மேனும்!

கடந்த வாரம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் என்னுடைய பழைய கணினியை format செய்து, புது லினக்ஸ் OS போடலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கி ஆகி விட்டது. அப்பொழுது, பழைய பைல்கள் தேடி கொண்டு இருந்த போது..எப்பொழுதோ தரவிறக்கிய "கில்லி" படம் இருந்தது. அந்த படம்  பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்ட படியால் படத்தை ஓட விட்டேன். எத்தனையோ தடவை பார்த்தது தான் என்றாலும் இன்னும் பார்க்கும் போது மனிதரை என்கேஜ் செய்வது இந்த படத்தின் சிறப்பு. இன்னும் கூட மீனாக்ஷி அம்மன் கோயில் முன் இருக்கும் சீன் மற்றும் த்ரிஷா கழுத்தில் கத்தி வைக்கும் சீன். பிரகாஷ்ராஜ் நடிப்பு என்று, படம் எப்பொழுது பார்த்தாலும் ஒரு கம்ப்ளீட் பக்கேஜ். ஏற்கனவே தெலுகு ஒக்கடுவில் வந்த காட்சிகள் தாம் என்றாலும் கர்னூலுக்கு பதில் மதுரை, பழக்கவழக்கங்கள், செல்லம் ஐ லவ் யு  என்று கலக்கல்  விகிதமாக இருந்தது.

நிற்க, சென்ற சனிக்கிழமை விஜயின் "தெறி" பார்க்கலாம் என்று தோழிகளுடன் சினிமா பிளான்.  பலரும் கழுவி ஊற்றியாயிற்று. அதனால் வேண்டாம் என்று சொன்னாலும்,, விஜயின் தீவிர ரசிகர்கள் எங்கள் தோழிகள் லிஸ்டில் இருப்பதால், போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தாலும் சென்றாயிற்று. நிறைய கழுவி  ஊற்றியதால் நான் எந்த விமரிசனமும் செய்ய போவதில்லை. மாறாக எனக்கு அந்த படம் பார்க்கும் போது என்ன தோன்றியது என்று மட்டுமே சொல்ல போகிறேன்.

மிக அறுவை காட்சிகள், மகேந்திரன் என்னும் அருமை டைரக்டர் ஐ ஒரு கொடுமை வில்லனாக சித்தரிக்க செய்ய முயற்சிகள் காண சகிக்காத கொடுமை.  தன் மகன் செத்ததுக்கு ஒரு வருடம் கழித்து? விஜய் குடும்பத்தை பழி வாங்க வரும் கொடுமை. பின்னர் போன் செய்து "நீ இன்னும் உயிருடன் இருக்கியாமே?" என்று நம்மை டார்ச்சர் செய்வது.. பின்னர் பேய் போல விஜய் வருவது. பின்னர் கட்டி வைத்து அடிப்பது..."சாவை விட அதிக கஷ்டம் தரும் ஒன்னை தர்றேன்" என்று காசு கொடுத்து படம் பார்க்க வந்த நம்மை "படுத்தோ படுத்துன்னு கொன்னுர்றாங்கபா". எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. இவங்க படம் எடுத்தது விஜயோட ரசிகருக்காக மட்டும் தான் அப்படினா, அவங்க ரசிகர் மன்ற மக்களுக்கு மட்டும் போட்டு காட்டி இருக்காலாமே. எதுக்கு இப்படி பெரிய பில்ட் அப் கொடுத்து இப்படி ஒரு கொடுமையை நமக்கு கொடுக்கணும்.

இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால்  அதன் ஹீரோக்கள் "ஆங்ரி யங் மேன்", கொடுமையை கண்டு சகிக்காத கொதித்தெழும் ஒரு ஆள். தமிழில் 70 -80 களில் வந்த படங்கள் முதல் இன்று வரை வரும் பல ஆக்சன் படங்களின் ஹீரோ "ஆங்ரி யங் மேன்" தான். இன்னும் சொல்ல போனால்..ஏன் இந்திய படங்களின் கதாநாயகர்களும் ஆங்ரி யங் மேன் தான். அதுவும் தெலுங்கு படங்களில் எல்லாம் ஹீரோ ஒரு அடி விட்டால் அடியாட்கள் 50 அடி தூரம் பறந்து விழுவார்கள். அதுவே வீரம் என்று படங்களில் சொல்லபடுகிறது. அறிவுறுத்த படுகிறது. ஆனால் உண்மையில் ஒருவன் எப்பொழுது பார்த்தாலும் ரத்தம் கொதிக்க இப்படி சண்டை போட்டு கொண்டு இருக்க முடியுமா..இது சாத்தியமா?.. ஏனெனில், ஆபிஸ் பாலிடிக்ஸ் சமாளிப்பது எப்படி என்பது குறித்த ஒரு கோர்ஸ் எடுக்க நேர்ந்தது அது "emotional inteligence" சார்ந்தது. ஏனெனில் ஒருவர் நல்ல லீடர் அல்லது தலைவர் ஆக வேண்டும் என்றால் முதல் தகுதி அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளி காட்டி கொள்ள கூடாது என்பதே. உங்கள் முன்னிலையில் அநியாயமே நடந்தாலும் அதனை பகுத்து ஆய்ந்து எந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்து அதற்க்கு ஏற்றார்போல மட்டுமே பதில் வினை யாற்ற வேண்டும். இதனை சார்ந்த ஒரு வீடியோ காண நேர்ந்தது. எப்படி இதனை உபயோகித்து சிறந்த தலைவர் ஆவது என்பது குறித்த வீடியோ அது.



தலைவர்கள் யாவரும் "ஆங்ரி யங் மேன்" அல்லர், மாறாக ராஜ தந்திரம் தெரிந்த அரசியல் செய்ய உகந்த உணர்சிகளை கட்டுபடுத்தும் வித்தை கைவரபற்றவர்கள்.  அதனால் எனக்கு தெரிந்தவரை, படங்களில் காட்டும் ஹீரோக்கள் நிஜ வாழ்கையை பொருத்தவரை ஜீரோக்கள் மட்டுமே.அதனால் தொண்டரைடிகள் இதுவே வாழ்க்கை என்று நினைத்து ஏமாறாமல் இருக்க வேண்டும்.

டிஸ்கி
இது திரைப்படம் குறித்த என்னுடைய கண்ணோட்டம் மட்டுமே, விமரிசனம் அல்ல.

நன்றி.



Saturday, February 27, 2016

Gen Z தலைமுறையும், பாடல்களும்!


Gen Z தலைமுறை: 2000 க்கு பிறகு பிறந்த குழந்தைகள் Gen Z  தலைமுறை எனப்படுகின்றனர்.

1990 களில் எல்லாம் திண்டுக்கல் லியோனி அவர்களின் பட்டிமன்றம் ஒன்று ரொம்ப பேமஸ். அது பழைய பாடல்களா அல்லது புதிய பாடல்களா! என்பது. MKT, TR மகாலிங்கம், MSV காலத்து பாடல்கள் எல்லாம் எப்படி அமைதியாக அர்த்தமுள்ள வரிகள் கொண்டதாக இருந்து இருந்தது, இளையராஜா, ARRAhman ஆரம்ப கால பாடல்கள் எப்படி அர்த்தம் புரியாதவையாக வெறும் சத்தம் மட்டும் கொண்டதாக இருக்கிறது என்று  விவாதிப்பார்கள். பள்ளிபருவத்தில் நான் கேட்ட அந்த பட்டிமன்றம், அப்பொழுதெல்லாம் எனக்கு "என்ன இது இளையராஜா போட்ட நல்ல நல்ல பாட்டை எல்லாம் நல்லா இல்லைன்னு சொல்லுறாங்க" என்று கோவம் வந்தது நினைவிருக்கிறது.

20 வருடங்கள் பாஸ்ட் பார்வர்ட் செய்து கடந்த மாதம்  முன்பு ஒரு தமிழ்சங்கம் நிகழ்சிக்காக ஏதாவது டான்ஸ் நம் குழந்தைகளை ஆட செய்யலாம் என்று நினைத்து எங்கள் தோழிகள் குழுவில்  முடிவு செய்து சாங் செலெக்சன் பற்றி டிஸ்கசன் நடந்தது. லேட்டஸ்ட் தமிழ் சினிமா பாடல்கள் அதிகம் நான் கேட்பதில்லை என்பதால்  தற்போது என்ன சாங்க்ஸ் ட்ரெண்டு என்று நான்அறிந்திருக்க வில்லை. மொத்தம் 5-6 பாடல்கள் தற்போதைய ட்ரெண்டு, சும்மா பிச்சுக்கும் என்று மக்கள் பரிந்துரை செய்தனர். அவை, 1. டங்கமாரி ஊதாரி, 2. ஆலுமா டோலுமா 3. டண்டனக்கா நக்க 4. சூட் த குருவி 5. டான்னு டான்னு டான்னு மற்றும் 6. செல்பி புள்ள


முதலில் நான் அவர்களிடம் கேட்டது இது தான், இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம் என்னப்பா என்று. ஆனா, இப்படி கேட்டது நான் மட்டுமே என்று நினைக்கிறேன். முதல் இரண்டு பாட்டுக்கு எனக்கு சுத்தமா அர்த்தம் தெரியல. டனடனக்க பாட்டாவது கொஞ்சம் அர்த்தம் புரியுது. அது என்னப்பா பாட்டு சூட் த குருவி  உலகில் உள்ள அத்தனை Cuss வோர்ர்ட்ஸ் ம் இருக்கு. இதில என்ன கூத்துன்ன குழந்தைகள் எல்லாரும் அதன் அர்த்தம் புரியாமல் பாடுவது டான்ஸ் ஆடுவது தான். இதில எந்த பாட்டு டிவி ல வந்தாலும் சில குழந்தைகள் எழுந்து ஆடுதுங்க. அவங்க அம்மா அப்பாவும் பெருமையா பாருங்க எங்க பிள்ளைங்க எப்படி பாடுதுங்க ஆடுதுங்க அப்படின்னு சொல்லுறாங்க.

 அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதே பாட்ட இங்கிலீஷ் அர்த்தம் புரிஞ்சு அந்த குழந்தைங்க பாடினா நீங்க  ஏத்துகுவீங்களா? உதாரணமா, சூட் த குருவி  பாட்டு உலகத்துல அதிகம் உபயோகிக்க படுகிற கெட்ட வார்த்தைய மறைமுகமாக இல்ல நேரடியாகவே சொல்லுறாங்க. இங்கயாவது 18+க்கு ன்னு நிறைய பாட்டுக்கள் வரும், அதை டீனேஜ் குழந்தைகள் அல்லது சிறு குழந்தைகள் கேட்க எந்த பெற்றோரும் அனுமதிப்பதில்லை, அல்லது இப்படி பப்ளிக் ஆக கேட்க அனுமதிப்பதில்லை. பாத்ரூம் வார்த்தகள் உபயோகிக்க கூடாது என்று குழந்தைகள் சொல்லி சொல்லி வளர்க்க படுகிறார்கள். ஒருவேளை இது எல்லாம் ஆங்கில வார்த்தைகளுக்கு தானே, தமிழ் பிள்ளைகளுக்கு புரியாது என்று நினைத்தே, இப்படி பட்ட அர்த்தம் உள்ள பாட்டுகளை பிள்ளைகளுக்கு போட்டு ஆட சொல்லுறாங்க போல.

இது மாதிரி எல்லாம் கேள்வி கேட்குறது ஒரு வேளை நான் மட்டும் தானா, இது தான்  தலைமுறை இடைவெளியா? 1990 களில் லியோனி அவர்களுக்கு 80-90 களில் இருந்த பாடல்களில் தப்பாக  தோன்றிய வித்தியாசம் எனக்கு இப்படி தோன்றுகிறதா?. இல்லை இப்பொழுது லியோனி அவர்கள் பட்டிமன்றம் வைத்தால் எப்படி வைப்பார்.. "2010 க்கு  பின்பு வந்த பாடல்களா இல்லை முன்பு வந்த பாடல்களா என்று ஒரு வேலை வைப்பாரோ?"

 என்னவோப்பா, ஒண்ணுமே புரியல உலகத்தில!.


Monday, February 15, 2016

விவாகரத்தும், ஜாதி சார்ந்த வேலை வாய்ப்பும்- ஒரு அமெரிக்க இந்திய கதை

இரண்டு செய்திகள் இரண்டும் மன வேதனை தரும் செய்திகள் கேட்க நேர்ந்தது.

ஒன்று, எப்படி பகணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள் சுற்றங்கள் மற்றும் நண்பர்களால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு விவாகரத்து வரை சென்றும் ஊர் மக்களால் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாக்கபட்டார்கள் என்ற ஒரு செய்தி. 

வட இந்தியாவில் இருந்து வந்தவர் அவர். அவருடைய எக்ஸ் மனைவி இந்தியாவில் பிறந்தாலும் இங்கே சிறு வயதில் வந்து படித்து முடித்தவர்.   நிறைய செல்வம். இரண்டு வளர்ந்த  ஆண் குழந்தைகள்.  வேலை அடிமையான அவர், மனைவியை கவனிக்க நேரம் இல்லாமல் போக, மனைவியோ இணையத்தில் நேரத்தை செலவழித்து இருக்கிறார். அதில் ஒரு நட்பு உண்டாக அதிலேயே நேரம் காலம் தெரியாமல் செலவழித்து இருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த கணவன், என்னவென்று பார்க்க தன் மனைவி ஒரு வயதான ஒருவருடன் அதிக நேரம் இணையத்தில் நேரம் செலவழிப்பதை கண்டு பிடித்து இருக்கிறார். அதனால் குடும்பத்தில் சண்டை வர ஆரம்பித்து இருக்கிறது.  இதனை சாக்காக வைத்து அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஊதி ஊதி பெருசாக்க. இந்த பெண்ணோ, நான் என்ன தப்பு செய்தேன் என்ற ரீதியில் பெண்ணுரிமை பேச, நீயா நானா என்ற போட்டி. நான் அப்படி தான் செய்வேன் என்று மனைவி அடம் பிடிக்க, அவரோ விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டார். முடிவில் குழந்தைகள் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று அலைகழிக்க பட்டு, அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதில் யாரை குத்தம் சொல்ல, நேரம் செலவழிக்க முடியாமல் போன கணவனையா, அல்லது, இணையத்தில் நேரம் செலவழித்த மனைவியையா, இல்லை இதனை சாக்காக கொண்டு ஊதி ஊதி பெருசாக்கி குடும்பத்தை பிரித்த மக்களையா?.. எது எப்படியோ, நல்லா இருந்த ஒரு குடும்பம் இணையத்தால் சீர் கெட்டு விட்டது. இதில் ஹய் லைட் என்னவெற்றால், விவாகரத்து முடியும் வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசி திரிந்த மக்கள் இப்பொழுது அதனையோ ஒரு ஹாட் டாபிக் ஆக எந்த கெட் டுகெதர் என்றாலும் பேசி பேசி மகிழ்கிறார்கள். எங்கே சென்றாலும் இந்திய மக்களின் புரண் பேசும் எண்ணம் மாறாது போல.

அடுத்த விசயமும் இந்திய மக்களின் மாறாத குண நலன்கள் குறித்தது. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் நிறைய தெலுங்கு மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தற்போது புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்.தனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கவில்லை  என்றும். ஒரு வேலைதான்  ரெட்டியாகவோ அல்லது நாயுடுவாகவோ இருந்தால் சீக்கிரம் கிடைத்து இருக்கும் என்றும் கூறினார். இது என்ன புது கதை என்று கேட்டபோது அவர் சொன்ன விஷயங்கள் தலை சுற்றின. 

இங்கு, பெரிய பெரிய கம்பனிகளில் நல்ல உயர் நிலையில் இருக்கும் இந்திய மேனேஜர் எல்லாம் வெளியே, தன்னுடைய மனைவி அல்லது சொந்தகாரர் பெயரில் ஒரு கன்சல்டின்  கம்பெனி வைத்து இருப்பார்கள். அதன் மூலம் வேலைக்கு ஆட்கள் பிடித்து கொடுத்து கொண்டு இருப்பார்கள்.இதனை வைத்து கொண்டு அந்த கம்பெனியில் எந்த ஒபெனிங் என்றாலும் இவர்களின் கம்பனி வழி மட்டுமே அப்ளை செய்ய முடியும். அவர்கள் வேலைக்கு எடுப்பவர்கள் எல்லாமே, தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. இப்படி நிறைய தெலுங்கு ரெட்டிகளும், நாயுடுக்களும் நிறைய கம்பனிகள் வைத்து இருப்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களாக இருப்பின், வேலை கிடப்பது சீக்கிரம் என்று தெரிந்தது.

கண்டம் விட்டு கண்டம் வந்தாலும் மாறாத குண நலன்கள் கொண்ட மக்கள். எப்பொழுது திருந்த போகிறார்களோ!.

டிஸ்கி 
இது நான் கேட்ட செய்திகளை வைத்து எழுதியது மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

நன்றி.

Friday, November 20, 2015

குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைக்கடைகளின் ஏமாற்று வேலை!


சிறு வயது முதல் நகை தொழில் செய்பவர்கள் அருகில் இருந்து இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் சிலரும் இந்த நகை செய்யும் வேலையில் இருந்து இருக்கிறார்கள் என்பதால் நகை எப்படி தங்கத்தில் இருந்து செய்யபடுகிறது என்பது குறித்த சில அடிப்படை விஷயங்கள் எனக்கு தெரியும். எப்பொழுதெல்லாம் பெரிய பெரிய நகை கடை காரர்கள் குறைந்த சேதாரம், 0% சேதாரம் என்று கூவி கூவி விற்கும் போது எல்லாம் அடபாவிங்களா எப்படி எல்லாம் ஏமாத்துறீங்க என்று நினைப்பது உண்டு. முகநூலில் குடும்ப நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்த தங்க நகை தொழில் குறித்த சில விசயங்களும், எப்படி சேதாரம் இல்லை என்று கூவும் நகை கடை காரர்களின் பம்மாத்து வேலைகளும் இங்கே. இது தங்க நகை செய்யும் நண்பர் ஒருவர் எழுதியது, அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது.
தேங்க்ஸ் டு கூகிள் இமேஜ்
இனியும் ஏமாறவேண்டாமே நண்பர்களே.....
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரகசியம் என்று இருக்கும், அது போலவே நகைதொழிலுக்கும் இருந்தது, ஆனால் இன்று சில நகைகடை விளம்பரங்களில், அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றும், எங்கள் கடையில் நகை வாங்கினால் ஆஹா மற்ற கடையில் வாங்கினால் ஸ்வாகா, எங்கள் கடையில் மட்டும்தான் நிறைய தங்கம் கொஞ்சம் செம்பு மற்ற கடையில் நிறைய செம்பு கொஞ்சம்தான் தங்கம், என்று பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து விளம்பரம் செய்து மக்களை தன்னுடைய மாய வலைக்குள் சிக்க வைக்கின்றனர்,
இப்படிப்பட்ட விளம்பரங்களை பார்த்து அந்த பெரிய கடையில் போய் நகைகள் வாங்கி, தன் தோழியருடன் ஏய் நேற்று நான் அந்த கடையில் இந்த நகைவாங்கினேன்டி, ஏய் இந்த கடையில் அந்த நகை வாங்கினேன்டி, சேதாரம் ரொம்ப கம்மியா தர்றாங்க, என்று பெருமையாக ஏமாந்து வரும் மக்கள் அதை பெருமையாக சொல்வதை கேட்கும் போது குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளின் தரத்தை பற்றி சிந்திப்பதில்லை, எனவே சில உண்மைகளை உடைத்து காட்டவேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது,
தங்க நகை எப்படி செய்யபடுகிறது?
முதலில் தங்கத்தை உருக்கி, அதன் பிறகு அதை கம்பியாக்க, டை என சொல்ல படும் டிசைன் வடிவம் அமைக்க, அதன் பிறகு அந்த மாடலுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, பிறகு பாலிஷ் போட, கட்டிங் செய்ய, கல் வைக்க, என எல்லா வேலைகளையும் முடித்து, ஹால் மார்க் முத்திரை பதித்து என ஒரு நகை செய்து முடிக்க கிட்டத்தட்ட பத்து தொழிலாளர்களின் பட்டறை சென்று வர வேண்டியது இருக்கின்றது, இந்த அனைத்து வேலைகள் செய்யும் தொழிலாளிக்கும் சேதாரம் மற்றும் கூலி பகிர்ந்து கொடுக்க வேண்டும்,
உங்களிடம் வாங்கும் சேதாரத்தில் இவ்வளவு வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றால், விளம்பரத்தில் சொல்லப்படும் 3சதவிகித அல்லது 4சதவிகித அல்லது 5சதவிகித சேதாரத்தில் செய்து விட நிச்சயமாக முடியாது, ஏன் என்றால் எந்த நகைதொழிலாளியும் கூலி சேதாரம் இல்லாமல் வேலை செய்து கொடுப்பதில்லை.
ஹால் மார்க் 916 நகைகள் என்றால் என்ன? 
ஒரு நகையின் தயாரித்து முடித்த பிறகு அந்த நகையிலிருந்து சிறு பகுதியில் வெட்டி அதனை உருக்கி சோதனை செய்து அந்த தங்கத்தின் தரம் 91.60 எனப்படும் ஹால் மார்க் தரத்தில் இருக்கிறதா என அறிந்து, அதன் பின்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முக்கோண மற்றும் 916 என்ற முத்திரையை லேசர் ஒளிக்கதிர் கொண்ட கருவியால் பதிக்கச்செய்த நகைகள் மட்டுமே உண்மையான ஹால் மார்க் நகை, மேலும் ஹால் மார்க் தரத்தில் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் ( 10 கிராம்) சொக்கத்தங்கத்தில் ( 800 மில்லி கிராம்) செம்பு மட்டுமே கலவையாக சேர்க்கவேண்டும், மேலும் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் அதை ஒரு நகைதொழிலாளி மட்டுமே செய்து விட முடியாது,
இப்போது சிந்தித்து பாருங்கள் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகள் உண்மையான நகையாக இருக்க முடியுமா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை,
இதையும் மீறி நாங்கள் சோதனை செய்து பார்த்தோம் சரியாகத்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பெரிய கடையில் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கிய நகையை மீண்டும் திரும்ப கொண்டுசென்று கொடுத்து இந்த நகையை விற்க வேண்டும் பணம் தாருங்கள் என்று கேட்டு பாருங்கள் நிச்சயமாக பணம் தர மாட்டார்கள் இந்த நகையை தந்து வேறு நகை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் வாங்க முடியும் பணம் தர மாட்டோம் என்பதுதான் பதிலாக வரும், இதுதான் அவர்கள் தொழில் தந்திரம், பெருமையாக ஏமாந்து கடையை விட்டு வெளியே வருவோம்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கும், குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்கிறேன் கேளுங்கள்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளில் உள்ள கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படும், நீங்கள் வாங்கும் ஹால் மார்க் நகைகள் ஏதாவது பணதேவைகளுக்காக விற்க போகும்போது அன்றைய மார்க்கெட் விலைக்கு பணமாக தரப்படும். கல் நகைகளில் கல்லிற்கான பணத்தை வாங்கி கொண்டு, கல் எடையை முற்றிலும் கழித்து தரப்படும், 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுகிறது,
இனி குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளை பார்ப்போம்,
கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படுவதில்லை கல் பாசி எடை உங்களிடம் தங்கத்திற்கான பணமாக வசூல் செய்து ஏமாற்ற படுகிறீர்கள், நீங்கள் வாங்கும் நகையை திரும்ப கொடுத்து நகையாக மட்டுமே வாங்க முடியும் பணமாக வாங்க முடியாது, 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை, ஒரு வேளை நீங்கள் வெளியில் எங்காவது சோதனை செய்து கண்டுபிடித்து அந்த கடையில் போய் உங்களிடம் வாங்கிய நகையின் தரம் குறைகிறது என்று கேட்டால் கூட அங்கே மழுப்பலான பதிலும் இதை வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டும் என்ற கேள்விதான் பதிலாக வரும்,
இப்போது உங்களுக்கு அந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வந்தா நஷ்டத்தை தருவார்கள்?
எனவே குறைந்த சேதாரம் என்று போய் ஏமாற வேண்டாம், ஞாயமான சேதாரம் கொடுத்து நகைகள் வாங்கி தரமான தங்கத்தை வாங்கி செல்லுங்கள்.

Wednesday, November 4, 2015

வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த சுயநலவாதிகளும், மாட்டுக்கறி ஏற்றுமதியும்!

என்னுடன்  இளநிலை அறிவியல் படித்த தோழிகளுடன்  பேசும் வாய்ப்பு கிட்டியது. பலருடன் மறுபடியும் பல வருடங்களுக்கு பிறகு பேசும் போது உண்டான சந்தோசம் அதிகம் என்றாலும். கிட்ட தட்ட எல்லாருடைய கேள்வியும், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக  "இந்தியாவில படிச்சிட்டு, இங்க இருக்கிற எல்லாத்தையும் உபயோகிச்சிட்டு, இப்போ வேற நாட்டுல இருந்துட்டு இருக்கீங்களே, இது அடுக்குமா?, ஏன் மா இப்படி பிறந்த நாட்டுக்கு  துரோகம் பண்ணுறீங்க?" என்ற ரீதியில் இருந்தது. இதே போன்ற கேள்விகளை நான் நிறைய சந்தித்து இருக்கிறேன் என்றாலும், இவர்கள் கேட்ட போது, மறுபடியும் மொதல்ல இருந்தா? என்று யோசிக்க தோன்றியது.

இவர்களை பொருத்தவரை, இந்தியாவில் படித்து அங்கிருக்கும் உதவிகளை பெற்று வளர்ந்து இப்போ இந்தியாவுக்கு சேவை செய்யாமல் வெளி நாட்டுக்கு சேவை செய்யறோம்?, ஏன் இது?, இது திரும்ப திரும்ப NRI மீது சுமத்தப்படும் குற்றம். 

உண்மையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவை மறந்து விட்டனரா?..அவர்களால் இந்தியாவுக்கு என்ன பயன்? பலருக்கும் இந்த கேள்வி இருக்கலாம். 

இந்திய மக்கள் தொகையை பொருத்தவரை 1% இந்திய மக்கள் மட்டுமே வெளிநாட்டுக்கு சென்று வசிக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் மற்றும் முதலீடு மற்றும் சாரிட்டி என்று அனைத்தும் சேர்ந்து கிட்டத்தட்ட 250 பில்லியன் டாலர் அளவை 2014 இல் தாண்டி உள்ளது. இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவின் GDP அளவு ஆகும்.

 வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என்று அனுப்படும் பணம் தான் உலகஅளவில் அதிக பணம் அனுப்படும் அல்லது பெறும் நாடு இந்தியா என்பது 2014 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட அல்லது, பணம் பெறப்பட்ட நாடுகளின் சர்வே பற்றிய வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் கட்டுரை தெரிவிக்கிறது. 



thanks to Wall Street Journal

70 பில்லியன் டாலர் பணத்தை NRI கள் இந்தியாவிற்கு 2014 ஆம் ஆண்டில் மட்டும் அனுப்பி இருக்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 4.2 லட்சம் கோடி 

இதனை தவிர எல்லா வங்கிகளும், நிதி நிறுவனங்களும், NRI மக்களை குறிவைத்து, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் நல்ல வட்டி தருகிறோம் என்று விளம்பரபடுத்துகிரார்கள். இதெல்லாம் ஏன், தற்பொழுது சிலிக்கன் வாலியில் இந்திய பிரதமர் மோடி கூவி கூவி அழைத்ததும் NRI களை, இவர்களை தான்.

அடுத்து கூறப்படும் குற்றச்சாட்டு, இந்தியாவுக்கு உழைக்காமல் வேறு நாட்டுக்கு உழைக்கிறோம் என்று. யாரெல்லாம் இதனை சொல்லுகிறார்களோ அவர்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான், நாங்க என்ன, இந்தியாவில  வேலை வச்சிட்டா இங்கே வந்தோம். வேலை கிடைக்காம வேற வழியில்லாம இங்க வந்தோம். நீங்க சொல்லுற மாதிரி இந்தியா திரும்பி நாங்க எல்லாரும் வந்துட்டாலும் எங்களுக்கு வேலை இருக்குமா?

இதில ஜோக் என்னன்னா, இப்படி NRI மேல கம்ப்ளைன் பண்ணுறவங்க கிட்ட நீங்க வெளிநாடு போறீங்களா அப்படின்னு கேட்டு பாருங்க, உடனே ஓகே சொல்லிடுவாங்க.. உங்களுக்கு பொழுது போக, ஏன் இப்படி எங்க தலையை உருட்டுறீங்க..சும்மா, செக்கு மாட்டு சிந்தனை வைச்சிட்டு, ஒரே நேர் கோட்டுல..NRI எல்லாரும் குள்ளநரி, சுயநல வாதிகள் என்று ஏன் இப்படி கரிச்சி கொட்டுறீங்கள்?

முதல்ல, நீங்க ஒழுங்கா இருக்கீங்களா?, எத்தனை பேரு ஒழுங்கா வரி கட்டுறீங்க?, எத்தனை பேரு லஞ்சம் வாங்காம இருக்கீங்க, தலைமையில இருந்து கடை நிலை ஊழியர் வரை லஞ்சம் தலை விரித்து ஆடுது. சொல்ல போனா, லஞ்சம் வாங்க தெரியாதவன எல்லாம் பிழைக்க தெரியாதவன் ற நிலையில, தண்ணி எல்லா இடத்திலையும் ஆறா ஓடுது, தண்ணி அடிக்கதேன்னு பாட்டு பாடினா ஜெயில், மாட்டு கறி சாப்பிட்டா வச்சிருந்தா சிறையாம்..இதை படிச்சவுடன், எனக்கு ஞாபகம் வந்தது ஒன்னே ஒண்ணுதான் CNN ல நான் படிச்ச நியூஸ், அதில, உலகத்திலேயே இந்தியா தான் மாட்டுக்கறி எச்போர்ட் பண்ணுறதில நம்பர் 1 ஆம். அதாவது இவங்கள பொருத்தவரை...நம்ம நாட்டு மக்கள் சாப்பிட கூடாது..ஆனா, அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணலாம்?...கொன்னா பாவம் இல்ல..தின்னா தான் பாவம்?..


thanks to CNN 


என்னவோ போங்கப்பா!



References
http://blogs.wsj.com/indiarealtime/2015/04/15/india-wins-the-remittance-race-again/

http://money.cnn.com/2015/08/05/news/economy/india-beef-exports-buffalo/

Tuesday, October 27, 2015

அரபு நாட்டில் அடிமைகள் ஆகும் வேலைகார பெண்கள்?

வீட்டு வேலைக்கு என்று அரபு நாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் வேலைக்கார பெண்கள் பின்னர் எப்படி கொடுமை படுத்தப்பட்டு சில நே ரங்களில் கொல் லபடுகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்பொழுது கேள்வி பட்டு/படித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சரி இன்னொரு வெளிநாட்டு வேலைக்கு சென்று கஷ்டபடுகின்ற பெண்ணின் இன்னொரு கதை, என்று கடந்து சென்று இருக்கிறேன்.

ஆனால், நேற்று அரபு நாட்டு வேலைக்கு சென்று தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி அந்த நாட்டு அரசியல் சட்டப்படி கர்ப்பமானது தெரிந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்ற நிலையில் சொந்த நாட்டின் ரேடியோ ஸ்டேஷன் மூலம் தொடர்பு கொண்டு தப்பித்து பிலிப்பைன்ஸ் நாடு சென்ற மோனிகா என்ற பெண்ணின் கதையை Raped, pregnant and afraid of being jailed என்ற BBC செய்தி மூலம் படிக்க நேர்ந்தது. அதன் தொடுப்பு செய்தியாக நைஜீரியா நாட்டின் மற்றொரு பெண் Almaz என்றொரு பெண்ணின் கதையையும்  படிக்க நேர்ந்தது. அல்லது படங்களாக பார்க்க நேர்ந்தது . கண்ணீர் வரவழிக்கும் கதைகள் இவை எல்லாம்.

இதே போன்றொரு செய்தியையும் அதனை தொடர்ந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முடிவான இனிமேல் வீட்டு வேலைக்கு என்று பெண்களை அனுப்புவதில்லை என்ற முடிவும் அதே போல எதியோபியா மற்றும் நேபால் போன்ற நாடுகள் லெபனான் நாட்டுக்கு வேலைக்கார பெண்களை அனுப்புவதில்லை என்ற முடிவு குறித்து பல செய்திகளும்  படிக்க நேர்ந்தது.



எல்லா கதைகளும் கிட்டத்தட்ட எப்படி பெண்கள் வீட்டு வேலைக்கு என்று அழைக்கப்பட்டு அடிமைகளாக மாற்ற படுகிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இதனை படித்த பிறகு, வேலைக்கு சேரும் அரபு நாட்டினரால் இந்த நிலையை பெண்கள் அடைகிறார்களா? அல்லது அங்கே சென்ற  இந்திய குடும்பங்களும் இந்த கொடுமையை செய்கின்றனவா ? என்று பல கேள்விகள் என்னுள்ளே.

என்னெனில், எனக்கு தெரிந்து அரபு நாடுகளில் சென்று செட்டில் ஆன இந்தியர்கள் கூட டொமெஸ்டிக் ஹெல்ப் என்று சிலரை உதவிக்கு வைத்து கொண்டவர்களை பார்த்து இருக்கிறேன். சாப்பாடு, காப்பி எல்லாம் அவர்களுக்கு கிடையாது. ஒவ்வொரு மாதமும் இந்திய ரூபாயில் 15-20 ஆயிரம் பணம். ஷிபிட் முறையில் வேலை செய்வார்கள். காலையில் இருந்து மாலை வரை வேலை. இதற்க்கு வேலைக்கு பிடித்து தருவதற்கு என்றே சில எம்ப்லோய்மென்ட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. லோக்கல்இந்தியன்  கம்யுநிடியில் சொன்னால் போதும், வேலைக்கு ஆட்களை அனுப்பி விடுவார்கள்.
இன்னும்  பலர் எனக்கு தெரிந்து , தின வேலைக்கு இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டு வேலைக்கு என்று ஆட்களை வைத்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இப்படி வேலைக்கு வரும் பெண்கள் பலரும் ஸ்ரீலங்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பதை காண நேர்ந்தது. அதே போல, பல அரபு பெண்களும் தங்களுக்கு உதவியாக பிலிப்பைன்ஸ் பெண்களை அழைத்து கொண்டு ஷாப்பிங் வருவதை பார்க்க முடிந்தது.

இப்படி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உண்மையில் பாதுகாப்பு கொடுக்க படுகிறதா? அல்லது மனித உரிமைகள் மறுக்கபடுகிறதா? இல்லை பிலிப்பைன்ஸ் பெண் மோனிகா போல அடிமை போல நடத்தப்பட்டு கொடுமை படுத்த படும் நிலை இருக்கிறதா? வெளியேற நினைத்தாலும் சட்டங்கள் அதற்க்கு துணை வருகிறதா?, இல்லை அவர்களின் சொந்த நாட்டின் உதவியை  சுலபமாகஅணுக முடியுமா?  அடுக்கடுக்கான கேள்விகள் தொக்கி நின்றாலும்.

அடி மனதில் கனமாக நிற்பது எப்படி ஒரு சக மனிதனை அடிமை போல் இப்படி  நடத்த இந்த மக்களுக்கு மனது வருகிறது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


References

http://www.economist.com/node/16953469
http://www.bbc.com/news/magazine-34616879
http://www.bbc.com/news/magazine-29415876
http://www.huffingtonpost.com/josie-ensor/maids-made-into-slaves-in_b_397648.html



Monday, October 26, 2015

பிரெண்ட்லி மக்களும் அன்பிரெண்ட்லி மக்களும்

எப்பொழுதும்  சைகோலோஜி மீது ஆர்வம் உண்டு, அதுவும் மக்களின் நடத்தைகள் குறித்த சைகோலோஜி ரொம்ப சுவாரசியமானது. அப்படி எனக்கு அப்பட்டமாக தெரிந்த பிரெண்ட்லி, அன்பிரெண்ட்லி குணாதிசயங்கள் இங்கே.

ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சாதாரணமாக உடை உடுத்தி இருந்தார் , மிக மிக சிம்பிள் ஆக. ஹலோ, ஹாய் சொல்லி சாதாரணமாக பேச ஆரம்பித்து , சில நிமிடங்களில் நமக்கு வாவ் என்று சொல்ல தோன்றும் அளவு அவர்களின் பேச்சு இருந்தது. நல்ல அறிவு ஞானம் கொண்டு இருப்பார்கள். நீங்கள் சொல்லுவதை சின்சியர் ஆக கேட்பார்கள், உங்களுக்கு அறிவுரை தேவை எனில் சொல்லுவார்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லாரையும் எப்படியாவது சிரிக்க வைத்து விடுவார்கள். அவர்களிடம் பேசினாலே நேரம் போவதே தெரியாது. இவர்களை குறித்து சிலர் கமெண்ட் எல்லாம் பின்னால் அடித்தாலும் எதை பற்றியும் இவர்கள் கவலை பட மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் தன்னை பற்றி நன்கு அறிந்தவர்கள், அடுத்தவர்களின் ஜட்ஜ்மெண்ட் க்கு எப்பொழுதும் காத்து கிடக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களை பற்றி நல்லது சொன்னாலும் சரி கெட்டது சொன்னாலும் சரி, கண்டு கொள்ளமாட்டார்கள். இப்படி குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மிக அபூர்வம், ஆனால் இவர்கள் ஹை ஸ்பிரிடட், ஹை அசிவிங் மக்கள். அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஒரு தேடல் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். மிக மிக பிரெண்ட்லி மக்கள் இவர்கள்.

இப்பொழுது  இன்னொரு வகை மக்கள், இவர்கள் மிக அன்பிரெண்ட்லி, இவர்கள் முந்தய மக்களின் எதிர்பத மக்கள்  எப்பொழுது அந்த இடத்தை விட்டு நகருவோம் என்று நினைக்க வைத்து விடுவார்கள். இவர்களின் பேச்சு எப்பொழுதும்அவர்களை  சுற்றியே இருக்கும்,  ரொம்ப அலுத்து கொண்டே இருப்பார்கள், எல்லாவற்றையும் கம்ப்ளைன்ட் செய்வார்கள். ரோடு சரியில்லை, வீடு சரியில்லை, மக்கள் சரியில்லை என்று எல்லாவற்றையும் கம்ப்ளைன்ட் செய்து செய்து நமக்கு காதில் ரத்தம் வர வைப்பார்கள்.

இன்னொரு மக்கள், இவர்கள் எப்பொழுதும் யாருடனாவது கம்பெடிசொன் அல்லது போட்டி போட்டு கொண்டே இருப்பார்கள். அது சின்ன சின்ன விசயங்களாக கூட இருக்கும். அவ  கார் வச்சிருக்கா, நானும் வாங்கணும். அவர் சேலை வாங்குறா நானும் வாங்கணும் என்று மெட்டீரியல் பொருள்களில் இருந்து வேலை, லட்சியம் வரை இது தொடரும். எல்லாரையும் இவர்கள் போட்டியாக மட்டுமே நினைப்பார்கள். எல்லாரையும் விட தான் உசத்தி என்று காட்டுவதில் இவர்களுக்கு அலாதி பிரியம். இவர்கள் தங்களின் நண்பர்களை கூட எதிரிகளாக அல்லது போட்டியாளர்களாக  தான் பார்பார்கள். இவர்களிடம் நட்பு வைத்திருப்பது என்பது கடினாமான வேலை.

அடுத்த வகை மக்கள் தான் பாஸ் என்று காட்டி கொள்ளுவார்கள். அதாவது பிரெண்ட்ஸ் கெட் டுகெதர் என்று வைத்து சென்றோம் என்றாலும் அதில் அவர் மட்டுமே ஆர்டர் தர வேண்டும் மற்றவர்கள் நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது, தான் பாஸ், எல்லா முடிவுகளும் தான் மட்டுமே எடுப்பேன் என்று நடந்து கொள்ளுவது. இது வெகு சீக்கிரத்தில்அவர்களை அவர்கள்  நட்பு வட்டத்திடம் இருந்து பிரித்து விடும் அட்டிடுட் என்று உணருவதில்லை.

இன்னொரு வகை மக்கள், இவர்கள் தங்களுக்கு ஏதாவது தேவை எனில் யாருடைய காலையும் பிடிப்பார்கள். நமக்கு போன் மேலே போன் போடுவார்கள். அக்கறையாக விசாரிப்பார்கள். என்னடா இது என்று யோசிக்கும் வேளையில் தனக்கு ஆக வேண்டிய காரியத்தை குறித்து சொல்லுவார்கள். ஆடடா இதுக்கு தானா?, என்று நமக்கு சிரிப்பு வரும். இதே மக்களிடம் நீங்கள் எந்த ஹெல்ப் வேண்டும் என்று கேட்டாலும், போனே எடுக்க மாட்டார்கள், அல்லது காலம் கடத்துவார்கள்.

இந்த கடைசி வகை மக்கள், எனக்கு கொஞ்சமும் ஒத்து வராதவர்கள். இவர்கள், எப்பொழுதும் அடுத்தவர்களை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று அனைவர் முன்னிலையிலும் அவமான படுத்துவார்கள். அவர்களை பொருத்தவரை அது பன், என்ன தவறு  என்று சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் சரியான காலை வாறும் bullyகள். நம்மிடம் சிரித்து பேசி விஷயத்தை வாங்கி விட்டு அனைவர் முன்னிலையிலும் அதனை சொல்லி கிண்டல் செய்வார்கள். இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதை யாக இருப்பது நல்லது.


டிஸ்கி
இது நான் சந்தித்த, கடந்து சென்ற சில பிரெண்ட்லி, அன்பிரெண்ட்லி மக்களின் சைகோலோஜி குறித்த எனது புரிதல் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நன்றி.

Thursday, October 22, 2015

சாமி ஆடிகளும், குறி சொல்பவர்களும், பேயுடன் பேசுபவர்களும்!

நேற்று சஸ்பென்ஸ் த்ரில்லெர் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி அவர்களின் நாவலின் தழுவலான Poirot  தொடர்  "Dumb Wintness" பார்க்க நேர்ந்தது. Poirot ஆக David Suchet நடித்து அசத்தி இருப்பார்.



இந்த நாவலில் ஒரு கேரக்டர் வரும், அது எப்பொழுதும் பேயுடன் பேசும் கேரக்டர். பேய் என்ன சொல்லுகிறது யாரை குறித்து சொல்லுகிறது , யார் கொலையாளி என்று தெரிவிக்கிறது என்று பேயை அழைத்து பேசும் கேரக்டர். 

அந்த கேரக்டர் பார்த்து அவர் பேசுவதை குறித்து எல்லாரும் பயந்து கொண்டு இருக்க, Poirot ஒன்று சொல்லுவார், "அவர் சொல்லுவது எல்லாம் கெஸ் வொர்க், உண்மை இல்லை, உங்களை நம்பவைக்க, திசை திருப்ப நடக்கும் நாடகம்" என்று. எனக்கு அதனை கேட்ட பின்னர், நான் சந்தித்த,படித்த   சில சாமி ஆடிகளும் குறி சொல்லுபவர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

சிறு வயதில் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது சாமி ஆடிகள் பார்த்து இருக்கிறேன். அதுவும் பூசாரிகள் அனைவரும் சாமி ஆடிகளாக அருள் வந்தவர்களாக பார்த்து, என் அம்மாவிடம் "எப்படி மா சாமி வரும்?" என்று கேட்டது ஞாபகம் வருகிறது. அதுவும் ஒரு  சாமி கோவில் பூசாரி அருள் வந்து கையில் அருவாள் எல்லாம் வைத்து சாமி ஆடியதை பார்த்து பயந்து இரவெல்லாம்  தூங்காமல் இருந்தது ஞாபகம் இருக்கிறது. 

அதே போல, நிறைய அம்மன் கோவில்களில் எல்லாம் பெண்கள் சாமி ஆடுவதை பார்த்து இருக்கிறேன். சாமி வரும் போது எல்லாம் "டேய், அவனே இவனே என்று அனைவரையும் திட்டுவதையும் பார்த்து இருக்கிறேன்". முக்கியமாக கோவிலில் சாமி வரும் போதெல்லாம், "சாமிக்கு படைக்க வேண்டும், சாமி கும்பிட வேண்டும்" என்று பலரும் குறிப்பிடுவார்கள். இதே போன்ற ஒன்று "பொன்னியின் செல்வன்" கதையில் தேவராளன் சன்னதம் வந்து ஆடுவதையும், "அவர் வேண்டுவதை சூசகமாக கூறுவதையும்" படித்த பிறகு, ஒரு வேலை எல்லா சாமி ஆடிகளும் "தனக்கு வேண்டுவதை சூசகமாக, சாமி கேட்பதாக கேட்கிறார்களோ?, அல்லது மன அழுத்தத்தை இப்படி வெளி இடுகிறார்களோ" என்று எண்ணுவது உண்டு. இன்னும் சிலர், "சாமி ஆடினா, நம்மையும் மதிப்பார்கள்"  என்று வோலேன்டீர் ஆக சாமி ஆடுகிறார்களோ என்றெல்லாம் நான் நினைப்பது உண்டு.


உதாரணமாக, எங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு அடிக்கடி சாமி வரும், என்ன சாமி வேண்டும் என்று கேட்டால், "அவருக்கு வேண்டியதை, பெரிய லிஸ்ட் படிப்பார், அதுவும்  சாமி கேட்பது போல" கேட்பார். தன்னை சுற்றி எல்லாரும் கடவுளுக்கு பயந்தவர்கள், இவர்களை நன்கு உபயோகித்து கொள்ளலாம் என்ற சூட்சுமம் தெரிந்ததால் அவர் இப்படி ஆட்டி படைத்து கொண்டு இருந்தார். நான் ஒரு முறை, "அவருக்கு சாமி எல்லாம் வர வில்லை, எல்லாம் பொய்," என்று சொல்லி, எல்லாரும் நீ சாமிய குத்தம் சொல்லுற என்று என்னை திட்டியது நியாபகம் வருகிறது.

இன்னொரு விசயமும் எனக்கு தெரிந்து புதிராக இருந்து இருக்கிறது. அது, பெரிய பெரிய கோயில்களில் எல்லாம் சாமி கும்பிடும் மக்களுக்கு சாமி வந்து பார்த்ததில்லை. ஆனால் சிறிய அம்மன் கோயில்கள் அல்லது குலதெய்வ கோயில்களில் எல்லாம் சாமி கும்பிடும் மக்களுக்கு அதிகம் சாமி வந்து பார்த்து இருக்கிறேன். ஏன் இப்படி என்று வியந்தது உண்டு.

அதே போல, இன்னொரு அனுபவம் எனக்கு உண்டு, ஒரு முறை மதுரையில் இருந்து சென்னை பயணம், ரயிலில் என் குடும்பத்துடன் சென்று கொண்டு இருந்தோம். எங்களுடன் இன்னொரு நடுத்தர வயதுக்காரரும் ஏறினார், பெரிய பட்டை போட்டு, காவி வேட்டி கட்டி இருந்தார் அவர். அப்பொழுது, ஒரு நடுத்தர வயது அம்மாவும், அய்யாவும் ஏறினார்கள். அவர்களுடன் சாதாரணமாக பேச்சு கொடுத்த அவர், திடீரென்று சாமி வந்தவர் போல, "உங்கள்  வீட்டில் பெண் தெய்வம் இருக்கிறது, அதனை நீங்கள் சரியாக கும்பிடவில்லை, கோவமாக இருக்கிறது" என்று எல்லாம் சொல்லி விட்டு, "ஒரு சில பரிகாரங்கள் செய்ய வேண்டும், என்னை வந்து சந்தியுங்கள்" என்று போன் நம்பர் குடுத்தார். எல்லாரும் அவர் சொன்னதை பார்த்து பயந்து விட, எனக்கு நிறைய சாமி ஆடி அனுபவங்கள் இருந்ததால் எதையும் நம்பவில்லை.

இதனை குறித்த நியாபகம் கூட எனக்கு மறந்து விட்டது, ஆனால் என் அண்ணன்,  கிட்டதட்ட இதே போல ஒன்றை ஒரு பஸ் பயணத்தில் ஒருவர் தன்னிடம் கூறியதாக நேற்று தெரிவித்தார்.நான்  Poirot அவர்கள் கூறியது போல, இது "சரியான கெஸ் வொர்க் , எல்லாருடைய வீட்டிலும் ஏதேனும் பெண் தெய்வம் குல தெய்வமாக இருக்கும், அதனை நன்கு உபயோகித்து இப்படி செய்கிறார்கள்" என்றுகூற, என் அண்ணனோ "எப்படி அவர்களுக்கு என்னிடம் மட்டும் அப்படி சொல்ல தோன்றும், உண்மையில் அவருக்கு சாமி வருது" என்று சொல்ல, படித்தவர்களே இப்படி இருப்பது கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரிவில்லை. . 

குறி சொல்பவர்கள் கூறுவது என்பது பல நேரங்களில் கெஸ் வொர்க் தான், தங்களை தேடி வரும் மக்கள் பல நேரங்களில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக வருகிறார்கள் என்று நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் வாயில் இருந்தே பல விசயங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கே சொல்கிறார்கள். நல்ல வாக்கு சாதுரியமும், ஸ்ட்ரீட் ஸ்மார்ட்நெஸ் ம் தெரிந்தவர்கள் இவர்கள். தற்போது சாமி பக்தி மிக மிக அதிகமாகிவிட்ட இந்த நிலையில், நிறைய மக்கள் இப்படி இன்ஸ்டன்ட் "குறி" சொல்பவர்களாக மாறி இருப்பதை கண்கூடாக காண நேர்ந்தது. 

அதுவும் நன்கு படித்த நல்ல வேலையில் இருப்பவர்களும் இப்படிகுறி கேட்க செல்வது நாம் நிறைய backward ஆக சென்று கொண்டு இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. 

டிஸ்கி 

நான் எவரின் கடவுள் நம்பிக்கையையோ, பாரம்பரியத்தையோ இங்கு குறிப்பிட்டு  சொல்லவில்லை. ஆனால், மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி ஆதாயம் தேடும் மக்களை குறித்த என் அனுபவங்களை குறித்தே இங்கு பதிந்து இருக்கிறேன். இது என் அனுபவம் மட்டுமே, பொதுப்படையானது அல்ல.



நன்றி.


Tuesday, July 28, 2015

படித்தது, பார்த்தது, வருந்தியது!

படித்தது 

ராபர்ட் கிரீன் என்னுடைய பிடித்த எழுத்தாளர்கள் லிஸ்டில் இருப்பவர். இவரின் 48 Laws of Power மற்றும் Mastery இரண்டும் ஒவ்வொரு வரியும் அடிக்கோடிட்டு படித்து இருக்கிறேன். எப்பொழுதெல்லாம் ஆபிஸ் விசயங்களில் நிறைய டிப்ஸ், எப்படி பிரச்சனைகளை சமாளிப்பது என்பதெல்லாம் அறிய நான் ரெபர் செய்வது இவரின் புத்தகங்களாக தான் இருக்கும். பவர் அல்லது கண்ட்ரோல் நம்மிடம் இருந்து விலகுவது போன்று தோன்றும் போதோ அல்லது பவர் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நான் ரெபர் செய்வது இவரின் இந்த புத்தகங்களாக தான் இருக்கும்.


இவரின் இன்னொரு புத்தகம் "The art of Seduction" நான் படித்திருக்க வில்லை. ஏனெனில் Seduction என்பது பாலியல் சார்ந்தது என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் என் என்னுடைய என்னத்தை மாற்றி கொள்ள உதவி இருக்கின்றனர். ஏனெனில் கவர்ந்து இழுக்க கூடிய, மக்களை மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல கட்டிபோடகூடிய பேச்சாற்றல் அல்லது ப்ரெசென்ஸ், கவர்ந்து இழுக்க கூடிய தன்மை ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களிடம் இருந்து இருக்கிறது.  சொல்ல போனால் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆரம்ப கால பேச்சுக்கள் கேட்டால் அவர்  எப்பொழுதும் கவர்ந்து இழுக்கக்கூடிய பேச்சாளராக இருந்ததில்லை என்று புரியும் . பின்னர் எப்படி இவர்களால் கவர்ந்து இழுக்க கூடியவர்களாக மாற முடிந்தது என்று நினைத்து இருக்கிறேன்.  ஆனால் "The art of Seduction" புத்தகம் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஸ்டேஜ் ப்ரெசென்சை எப்படி உபயோகிப்பது என்று நிறைய டிப்ஸ் கொடுகிறது.  

புத்தகத்தின் துவக்கத்தில் வரலாற்றில் இருந்த சிறந்த seducers ஆன கிளியோபாட்ரா, ஜோசபின் போன்றோர் பற்றி குறிப்பிடும்  ஆசிரியர், தற்பொழுது எப்படி seducing அரசியலில் உபயோகிக்கபடுகிறது என்று வரை குறிப்பிடுகிறார்.  


பார்த்தது 

இந்த புக்கை படிக்க ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு  இளவரசி டயானா அவர்களின் பிரபலமான 1995  தொலைக்காட்சி பேட்டி ஒன்று தற்செயலாக காண நேர்ந்தது.



அதில் அவர் அவரின் கணவருக்கும், கணவரின் தற்போதைய மனைவி கமிலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றியும் குறிப்பிட்டதை காண நேர்ந்தது. இதை பார்த்தவுடன் எனக்கு "The art of Seduction" புக்கில் இருந்த முதல் சாப்ட்டர் "தி சைரென்" ஞாபகத்திற்கு வந்தது.

இளவரசி டயானா மிக அழகானவர், கல்யாணம் ஆன போது  உலகமே அவர்களை வியந்து பார்த்தது. இளவரசரோ எல்லாம் தன் வழியில் நடக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட "Spoiled Brat". உலகமே வியந்து பாராட்டிய ஒரு அழகு கொண்டவர் டயானா. இப்படி அழகு சிலை வாய்க்கப்பட்ட அவரோ உலகின் மிக சிறந்த லக்கி தான் என்று சந்தோசம் பற்றிருக்க வேண்டும். மாறாக திருமணதிற்கு முதலில் தொடர்பில் இருந்த தன் காதலியுடன், தற்பொழுது வேறொருவர் மனைவியாக இருப்பவரிடம்  மீண்டும் உறவை புதுப்பித்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இத்தனைக்கும் கமிலா, டயானாவின் அழகிற்கு சிறிதும் அருகில் வர முடியாது. ஆயினும் எப்படி சார்லஸ் போன்ற இளவரசரை கவர அவரால் முடிந்தது.

கமிலாவிடம் ஒரு நல்ல திறமை இருந்து இருக்கிறது, அது கவர்ந்து இழுக்க கூடிய ஒரு திறன். நல்ல பேச்சு திறமை. நிறைய விசயங்களில் அறிவு என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதிராக இருந்து இருக்கிறார். எல்லாரும் இளவரசரை கண்டு பயப்பட, இவரோ அவருக்கு சரி சமமாக இருந்து பேச, சவால் விட கூடியவராக இருந்து இருக்கிறார். அதுவரை பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்று பார்த்து பழக்கப்பட்ட இளவரசர், தன்னை சவால் விடக்கூடிய தன்னை ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களில் யோசிக்க வைத்த கமிலா இளவரசரை கவர்ந்து இருக்கிறார். இது ஒரு seductive குணம். அது நன்கு கைவர பட்டவராக இருந்து இருக்கிறார் கமிலா.

இன்னொரு விஷயம் அவருக்கும் டயானாவுக்கும் இருந்த வித்தியாசம். கமிலா, சார்லஸ் ஐ எப்பொழுதும் ஓவர்ஷடோ செய்யவில்லை, அதாவது, சார்லசின் புகழை தன் அழகு அல்லது மீடியா பார்வை கொண்டு தன் பக்கம் திருப்பவில்லை. எப்பொழுதும் தான் சார்லஸ்சின் பின்னால் என்று இருந்து இருக்கிறார். டயானா, தான் விரும்பவில்லை என்றாலும் மீடியாக்களுக்கு அந்த நாட்களில் நல்ல தீனி போட்டு இருக்கிறார். பத்திரிக்கை, டிவி என்று சகலமும் அவரை நன்கு கவர் செய்து இருக்கின்றன. இது பிரபலமாக இருந்ததற்கு அவர் கொடுத்த பரிசு.

தற்போது 10 வருடமாக தன் பழைய காதலியை  திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கிறார்கள்.


வருந்தியது

கடந்த இரண்டு நாட்களாக, எங்கு திரும்பினாலும் கலாம், கலாம் தான். Blog, FB, Whatsapp என்று அனைத்திலும் நிறைந்து இருந்தார் கலாம் அவர்கள். வழக்கமாக கலாய்க்கும், மொக்கை போடும்  என் தோழிகள் அனைவரும் நேற்று மிக வருத்தத்தில் இருந்தனர்.  என் அண்ணனிடம் இந்தியாவிற்கு பேசும்போது  கூட கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரை பற்றியே பேசி கொண்டு இருந்தார்கள். பொது விடுமுறை அறிவித்து இருப்பாதாக சொன்னார்.  அந்த அளவிற்கு நிறைய சாதாரண மனிதர்களின் உணர்வுகளை அவர் எப்படி கவர்ந்து  இருக்கிறார் என்று அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. சாதாரண மனிதராக இருந்து, உழைப்பால் உயர்ந்த கலாம் அவர்களும் மக்களை எப்படி உழைப்பால், தன்னம்பிக்கையால் கவரலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.

நன்றி.


Tuesday, July 21, 2015

திருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .

என்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில்  முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று  நீளமான அடர்த்தியான முடி, அதுவும்  அவர்கள் செய்வது போல நிறைய சடைகள் போட்டு கொண்டு வந்து இருந்தாள் , எப்படி முடி முளைத்தது அதுவும் இவ்வளவு முடி என்று எனக்கு சந்தேகம். ஒரு வேலை விக் எதுவும் வைத்து இருப்பாளோ என்று கேட்டதில் அவள் சொன்னது இது தான் "ஹேர் எக்ஸ்டென்சன்  எனப்படும் . முடியை நீளபடுத்தும்  ட்ரீட்மென்ட் செய்து இருப்பதாகவும்.இப்படி  நீள படுத்தும் ட்ரீட்மென்ட் இல் இந்தியாவில் இருந்து வரும் முடிக்கு விலை அதிகம்" என்றும் கூறினாள்.



இது என்னடா புது கதை, என்று எனக்கு இதனை பற்றி அதிகம் தெரியாததால் என்ன தான் சொல்கிறாள்  என்று வாசித்து பார்த்தேன். முடியை வைத்து நடக்கும் ஒரு மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி பார்த்து அசந்து போனேன்.

ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மக்கள் திருப்பதிக்கு சென்று தங்கள் முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். இவர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியினை ஏலம் விட்டு கிட்டத்தட்ட வருடத்திற்கு 2000 கோடி சம்பாதிக்கிறார்கள் திருப்பதி தேவஸ்தானத்தார்.

ஒரு பெண்ணின் தலையில் இருந்து சராசரியாக 283.5 கிராம் முடி கிடைக்கிறது. இப்படி காணிக்கை கொடுக்கும் முடி வெர்ஜின் முடி அல்லது கன்னி முடி என்று ஹேர் இண்டஸ்ட்ரி இல் அழைக்க படுகிறது. அதாவது, எந்த ட்ரீட்மென்ட், கலரிங், டையிங் என்று எதுவும் இல்லாமல் சுத்தமான முடி என்று இது அழைக்க படுகிறது. பொதுவாக இந்தியர்களின் முடி அடர்த்தியானது, நீளமானது மற்றும் வலுவானது. எந்த டிசைனுக்கும், கலரிங் க்கும் பொருந்தும் முடி.

இப்படி நீளமான 283.5 கிராம் முடிக்கு வெளிநாட்டு மார்கெட்டில் இருக்கும் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 30ஆயிரம் ரூபாய். அதாவது தன்னுடைய 30 ஆயிரம் மதிப்புள்ள முடியை காணிக்கையாக கொடுக்கிறார் அந்த பெண். ஆனால் இது ஏலம் விடுவதற்கு முன் மதிப்பு. பொதுவாக ஏலம் எடுத்த பின் கிடக்கும் முடிகளை இவர்கள் ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்.

1. 31 இன்சை விட நீளமாக முடி
2. 16-30 இன்ச் நீளமான முடி
3. 10-15 இன்ச் நீளமான முடி
4. 5-10 இன்ச் நீளமான முடி
5. 5 இன்ச்க்கும் குறைவான நீளமான முடி

ஒவ்வொரு வகையான முடிக்கும் ஒரு இண்டஸ்ட்ரி இருக்கிறது. நீளமான, அடர்த்தியான முடிகள் பாலிவூட் நடிகைகளில் இருந்து ஹாலிவூட் நடிகை வரை தங்கள் விக் ஆக பயன்படுத்துகிறார்கள்.
நீளம் குறைவான சிறிய முடிகள் சீனாவில் விக்க்குகலா தயாரிக்கப்பட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றன.

ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு ஹேர் சலூனும் தற்பொழுது இந்திய முடிகளை விக்காக, ஹேர் எக்ஸ்டென்சன்க்கு என்று பயன் படுத்துகிறார்கள்.  விக்குகளாக மாற்றப்பட்டவுடன் அல்லது ஹேர் எச்ட்டேன்சொனுக்கு என்று பயன்படுத்தப்படும் முடியின் விலை அதன் தரத்தை பொறுத்து கிட்டத்தட்ட 3000 பவுண்டு வரை கூட செல்லுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சம் ருபாய்.

உதாரணமாக ஹாலிவூட் நடிகை Eva Longoria செய்திருக்கும் ஹேர் எக்ஸ்ட்டேன்சியன் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.




படங்கள் உதவி http://www.dailymail.co.uk/femail/article-2153691/From-Hindu-temple-Hollywood-hairdo-How-thousands-Indian-women-having-heads-shaved-gods-hair-end-3-000-extensions.html


மக்களின் கடவுள் நம்பிக்கையும் அதனை சுற்றி நடக்கும் மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி யும் மலைக்க வைக்கின்றன. எப்படியோ, கோடிகணக்கில் பணம் காணிக்கையாகவும், காணிக்கை முடிகளை கொண்டும் கோடி கோடியாக திருப்பதி மற்றும் பழனி  தேவஸ்தான மக்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால் அது மிகை இல்லை.


டிஸ்கி

இது, படித்ததை, பார்த்ததை வைத்து எழுதியது மட்டுமே.. யாருடைய கடவுள் நம்பிக்கையும் பற்றி கூறவில்லை.


நன்றி.

Wednesday, June 24, 2015

உண்மையில் இந்தியா வளர்ந்து இருக்கிறதா?



விமான பயணத்தில்  பொருளாதாரம் பற்றிய ஒரு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது. அது உலக பொருளாதாரங்கள் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறது எப்படி இன்னும் சில வருடங்களில் வளரும் என்ற உலக வங்கியின் International Monetary Fund ப்ரோஜெச்சன். அதன் கூற்றுப்படி இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  IMFடைரக்டர்  Christine Lagarde அவர்களின் கூற்றுப்படி இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் சீனா பொருளாதரத்தை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார். இவை எல்லாம் கேட்கும் போதும் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. 

இன்றைய சூழலில் வீட்டுக்கு ஒரு சாப்ட்வேர் மக்கள் இருக்கிறார்கள், சாப்ட்வேர் தவிர வேறு துறை எவ்வாறு வளர்ச்சி அடைந்து  இருக்கிறதா? இந்த சாப்ட்வேர் துறையில் ஏற்படும் வளர்ச்சி மட்டுமே பொருளாதரத்தை உயர்த்துமா? என்று எனக்குள் கேள்விகள். 

இப்பொழுது சீன பொருளாதரத்தை எடுத்து கொள்ளுவோம். இந்தியாவில் புழங்கும் 99% எலேக்ட்ரோனிக் பொருள்கள் சீனாவில் இருந்து வந்தவை. உலகில் எங்கு சென்றாலும் எந்த பொருள்கள் வாங்கினாலும் அதில் made in china tag இருக்கும். துணிமணியில் இருந்து பிளாஸ்டிக், வீட்டு உபயோக பொருட்கள் என்று அனைத்தும் சீனா மார்க்கெட் ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் 20 வருடத்திற்கு தேவையான infrastructure, ரோடுகள், கழிப்பறை, சுகாதாரம்  என்று நகரங்களில் மட்டும் அல்ல, கிராமங்களிலும் கூட சீனாவில்  அடிப்படை வசதிகள் பக்காவாக இருக்கின்றன.

மதுரை வந்த பிறகு சுற்றி இருக்கும் infrastructure பார்க்கும் போது,  சாலை வசதி ,சுகாதார வசதி, கழிப்பறை வசதி, வேஸ்ட்மானேஜ்மென்ட் வசதி போன்ற வற்றை பார்க்கும் போது இந்தியா உண்மையில் சீனா பொருளாதாரத்தை மிஞ்சுமா?,இது சாத்தியமா என்று பல கேள்விகள். 

உதாரணமாக, மதுரையில் காலை நேரங்களில் ஏர்போர்ட் பை பாஸ் ரோட்டில் இருந்து எங்கு சென்றாலும் ரோட்டை அடைத்து கொண்டு மனித கழிவுகளை ஏற்றிக்கொண்டு செல்லும் மாநகராட்சி வண்டிகளும் குப்பை எடுத்து செல்லும் வண்டிகளும் செல்கின்றன. மூக்கை பிடித்து கொண்டு பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. காலை நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள், சிறுவர்கள் கல்லூரி செல்லுவோர் என்று பலரும் அவசர கதியில் கிளம்பி பறந்து கொண்டு இருக்கும் பொழுது பல நேரங்களில் குப்பை எடுக்கும் வண்டிகளில் இருந்து குப்பை முகத்தில் அடிப்பதை அல்லது கழிவு பொருட்களை எடுத்து செல்லும் வண்டிகளில் இருந்து சிதறும் கழிவை தடுக்க முடிவதில்லை.
மற்ற நாடுகளில் இருப்பது போல, ஷிப்ட் முறையில், இரவு நேரங்களில் இப்படி பட்ட கழிவு பொருட்களை எடுத்து செல்வது அல்லது ரோடு கூட்டுவது குப்பை கூட்டுவது என்று செய்தால் எப்படி இருக்கும் என்று எனக்குள் கேள்விகள்.

எங்கும் எதிலும் குப்பை, எல்லா இடங்களிலும் முத்திர வாடை, மனித கழிவுகள் அகற்ற கழிப்பறைகள் கூட இல்லை என்று ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நிறைய வீடுகள். நான் சொல்லுவது எதோ ஒரு கிராமம் இல்லை, ஆனால் மதுரை போன்ற நகரத்தின் நிலை. 

அடுத்து மக்களுக்கு இருக்கும் இலவச மோகம். உதாரணமாக என் சொந்தகார பெண் நல்ல வசதியுடன் போன வருடம் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டாள். அவளுக்கு இப்பொழுது ஒரே கவலை. அது அவள் வோட்டிங் வார்டு மதுரையின் வேறு ஏரியா வில் இருப்பது தான். அப்படி இருப்பதால் இன்னும் ஆறு மாதத்தில் நடக்க போகும் எலெக்சனில் இலவசமாக வரும், மிக்சி கிரைண்டர், அடுப்பு , டிவி...போன்ற எதுவும் கிடைக்க போவதில்லை என்று வருத்தம். காசு வாங்கி கொண்டு உரிமையை விக்கிறோம் என்று யாருக்கும் தோணுவது இல்லை.  எங்கே செல்கிறது இந்தியா?

எந்த விசயத்தில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்ற கேள்விக்கு,  எனக்கு கிடைத்த பதில் என்னவோ இங்கு இருக்கும் கவுன்சிலருக்கும், வார்டு மெம்பருக்கும், மேயருக்கும், MLA களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல் அமைச்சர்களுக்கும், MP களுக்கும் எவ்வளவு பணம் அடிப்பது என்று போட்டி நடப்பதில் இந்தியா மிக முன்னேறி இருக்கிறது. மிக மிக முன்னேறி இருக்கிறது. இதனை தவிர எனக்கு தெரிந்து முன்னேற்றமாக ப்ராஜெக்ட் செய்யபடுவதெல்லாம் வெறும் மாயை போல தோன்றுகிறது.


டிஸ்கி.

இது என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்ததை, கேட்டதை வைத்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நன்றி.

Friday, May 29, 2015

ஐ, மீ, மைசெல்ப், நான், மே...




சில நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்தித்து இருப்போம். ஒரு மீட்டிங் அல்லது பொது இடத்தில் அல்லது பார்டியில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் இப்படி எங்காவது. அவர் நீங்கள் பேசுவதை கேட்பார், ஆனால் கேட்க மாட்டார். அதாவது, நாம் பேசும் வார்த்தைக்கு எப்படி பதில் தருவது என்பது மட்டுமே அவர் கேட்பார் ஆனால் என்ன சொல்ல வருகிறோம் என்று முழுதாக கேட்க மாட்டார்.

உதாரணமாக  நீங்கள் ஒரு ப்ராஜெக்ட் பற்றி எடுத்து அதனை பற்றி பேச வருகிறீர்கள் என்று வைத்து கொள்வோம், அதில் பல modules இருக்கலாம் அல்லது ஸ்டேஜ் இருக்கலாம். அதனை நீங்கள் விவரித்து கொண்டு இருப்பீர்கள், அப்பொழுது ஒருவர், நாம் குறிப்பட்ட எதோ ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு, நம்மை கேள்வி கேட்பார். நாம் ஏதேனும் பதில் சொன்னாலும் அந்த பதிலில் இருக்கும் ஒன்றை பிடித்து கேள்வி கேட்பார். நம்மை பேச விட மாட்டார், மாறாக அவர் சொன்ன பதிலில்/கேள்வியில் இருக்கும் நியாயத்தை பக்கம் பக்கமாக விவரிப்பார், விதண்டாவாதம் பேசுவார். "ஏன் எப்படி செய்ய கூடாது?" "என்ன முட்டாள் தனமான செய்கை இது" என்று அனைவர் முன்பும்  கமெண்ட் அடிப்பார்.

நம்மை பேச விடாமல் கேள்வி கேட்டு, நாம் கொஞ்சம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாலும், அதனை பிடித்து கொண்டு, நம்மை மட்டம் தட்டுவார்கள். நாம் தடுமாறுவதை பார்த்து ரசிப்பார்கள். அதுவே அவர்கள் வேண்டுவது.

இப்படி கேள்வி கேட்பவரின் நோக்கம், விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு அல்ல, மாறாக சென்ட்டர் ஆப் அட்ராக்ஷன் தன் பக்கம் திருப்ப மட்டுமே. அதாவது, "என்னா கேள்வி பாரு", "அவன் சொல்லுவது தான் சரி" என்று எல்லாரும் அவரை புகழ வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் நோக்கம் எப்பொழுதும் தன்னை சுற்றி மட்டுமே எல்லாமே நடக்க வேண்டும் என்பது.

 நீங்கள் அவரை தனியே அழைத்து ப்ராஜெக்ட் பற்றி  பற்றி கேட்டு இருபீர்ர்கள், அப்போது வாயை திறந்து இருக்க மாட்டார். அல்லது, "எல்லாம் சரியாக இருக்கிறது" நம்மிடம் பசப்பி இருப்பார். இவர்களின் நோக்கம் தனக்கு மட்டுமே அந்த ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும், தான் மட்டுமே அதனை நடத்த வேண்டும்..ஐ, மீ, மைசெல்ப், நான் ...என்று எல்லா மொழியிலும் இருக்கும் "நான்" என்ற வார்த்தை மட்டுமே.

இவர்கள் பாம்புக்கு சமமானவர்கள். எப்பொழுதும் கொஞ்சம் தள்ளியே வைத்து இருக்க வேண்டும். இவர்களை ஆங்கிலத்தில் "Narcissist" என்பர். இந்த வகை மக்கள், தான் எப்போதும் successful, என்று காட்டி கொள்ள பார்பார்கள்.  அதே போல, ஏதேனும் குறை, தப்பு என்று அவர் மீது காட்டி விட்டால், உடனே தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது எளிதாக கையை காட்டி விடுவார்கள். "They dont mind throwing someone under the bus to save their back. They enjoy doing such things". இப்படி பட்டவர்கள் தன்னை சுற்றி எல்லாரும் புகழ வேண்டும் என்று நினைப்பார்கள், எல்லாரும் சலாம் போடா வேண்டும், கும்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட மக்கள் அரசியல் தலைவர்கள் ஆயின், அவரை சுற்றி உள்ளவர்கள் பாடு அதோ கதி தான்.

உண்மையில் இப்படி பெர்சொனாலிட்டி இருக்கும் மக்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சின்ன சின்ன criticism கூட அவர்களை உசுப்பேத்தி விட்டு விடும். இப்படி பட்ட பெர்சொனாலிட்டி இருக்கும் மக்கள் குடும்பத்தில், வேலையில், வெளி உலகத்தில், பண விசயத்தில் என்று  எல்லா வற்றிலும் தோல்வியை மட்டுமே சந்திப்பார்கள். இப்படி பட்ட மனிதர்களை சந்திக்கும் போது அல்லது பழகும் போது கவனமாக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையேல் உங்களை குழப்பி, உங்கள் தன்னம்பிக்கையை நாசமாக்கிவிட்டு போய் விடுவார்கள். இது என் சொந்த அனுபவத்தில் கண்டது.

நன்றி.

Friday, May 15, 2015

ஜாக்பாட்டு அடித்த பலரும் பின் நடுத்தெருவுக்கு வருவதேன்?



என் கூட வேலை பார்த்தவரின் சொந்த காரர் அவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு எதோ லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது அவருக்கு என்று சொல்லி கொண்டு இருந்தார். நாங்கள் அனைவரும் "உங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும், வேலையை விட்டு விடுங்கள்" என்று ஓட்டி கொண்டு இருந்தோம். நெடு நாளைக்கு பிறகு சென்ற வாரம் பேசும் போது அவர் சொன்னது இது தான் , அவருடைய சொந்தகாரர் இப்போது "ஓட்டாண்டி ஆகி விட்டார், bankruptcy file செய்து விட்டார்" என்று. பயங்கர ஷாக் எங்கள் அனைவருக்கும். இரண்டு வருடத்திற்கு முன்பு மில்லியனர் அவர், இப்போது ஓட்டாண்டி. என்ன முரண் இது, அதுவும் இரண்டு வருடத்திற்குள் எப்படி?

எனக்கு இந்த கதை கேட்கும் போது இந்தியாவில் சிறுவயதில் எங்கள் சொந்தகாரர் ஒருவருக்கு கிடைத்த 1 லட்சம் ருபாய் லாட்டரி பரிசும், அதற்க்கு பின் நிகழ்ந்த சில நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன.  மிக மிக சாதாரணமான வேலை பார்த்தவர் அவர். சொல்ல போனால் தின வருமானம் போல. வாடகை வீட்டில், மனைவி மற்றும் 2 சிறிய குழந்தைகளுடன் வாழ்க்கை. லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்த அவருக்கு ஒரு நாள் 1 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. 80 களில் 1 லட்சம் ரூபாய் என்பது மிக  பெரிய தொகை. ஒரே நாளில் லட்சாதிபதி ஆன அவருக்கு தலை கால் புரியவில்லை. இது என் பணம் எனக்கு வந்தது என்ற தலைகனம் அவரிடம் ஒரே நாளில் வந்து ஒட்டி கொண்டது. நிறைய தேவை இல்லாத செலவுகள் செய்தார். பணம் இருக்கிறது என்று வந்து ஒட்டி கொண்ட காக்காய் கூட்டங்களுக்கு தினமும் "தண்ணி" "சாப்பாடு" என்று சகலமும் நடக்கும். அந்த காக்கைகளின் பேச்சை கேட்டு அவர்கள் சொன்ன பல இடங்களில் இன்வெஸ்ட் செய்கிறேன் என்று பலதும் செய்து இரண்டே வருடங்களில் எல்லா பணமும் தொலைத்து விட்டார். அவரின் பிள்ளைகள் பணம் இல்லாமல் படிப்பு படிக்க கூட பட்ட கஷ்டம் கண்ணீர் வரவழிக்கும். ஒரு பைசா கூட குழந்தைகளுக்கு என்று அவர் சேமித்து வைக்க வில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார் அவர்.

கிட்டத்தட்ட இதே ஒரு நிலை இப்போது நான் கேள்விபடுகிறேன். ஆனால் இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிலை போல. இணையத்தில் தேடிய போது சிக்கிய ஒரு கட்டுரை இதனை ஆமோதிக்கிறது. பரிசு விழுந்த 70% மக்கள் அதனை 1-5 வருடத்திற்குள் தொலைத்து விடுவார்கள் என்று.  

நம்மூரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்று. கிட்டத்தட்ட அதே ஒரு நிலை எல்லா பரிசு விழுந்த மக்களிடமும் இருக்கிறது. தேவை இல்லாத ஆடம்பரம் உடனே அவர்களின் வாழ்கையை ஆக்கிரமித்து இருக்கிறது. இது என் பணம், எனக்கு கிடைத்த வரம், என்று ஒரு திமிர் வந்து அவர்களிடம் ஒட்டி கொண்டு இருக்கிறது. தேவையே இல்லாமல் "கார், போட், பெரிய பெரிய வீடுகள், நகைகள், பெயிண்டிங்க்ஸ், தண்ணீ, போதை என்று இவர்கள் அனைவரும் பணத்தை தொலைத்து இருக்கிறார்கள். முறையான "financial planning" இல்லாமல் ஒரு பண திமிர், கர்வம் வந்து இவர்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இது நாடு, இன, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரிடமும் பார்க்க முடிகிறது. இதற்காவே இப்போது அமெரிக்காவில் லாட்டரி பரிசு வென்றவர்களுக்கு என்று இப்போது நிறைய கவுன்செல்லிங் தருகிறார்கள். எப்படி இன்வெஸ்ட் செய்வது என்று. ஆனாலும் இது ஒரு மாயை, ஒரு குறிப்பிட்ட வருடங்களில் மறைந்து விடும் என்று பலரும் அறிவதில்லை. அந்த இன்ஸ்டன்ட் மட்டுமே நினைக்க தோன்றுகிறது. கொஞ்சம் நிதானமாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.

நன்றி.


Thursday, April 16, 2015

வெளிநாட்டவர் பார்வையில் இந்தியர்கள் மனநிலை.

டிஸ்கி

இது எனக்கு  நெருங்கிய சில அமெரிக்க தோழர்களிடம் இருந்து அறியப்பட்டது. இது ஒரு சில தனிப்பட்டவர்களின் கருத்தாகவும் இருக்கலாம்.


சில lighter மொமேன்ட்களில் அவுட் சைட் வொர்க் நேரங்களில் என்னுடைய அமெரிக்க தோழர்களிடம் நான் வேலை தவிர பேசும் போது  அவர்களிடம் "இந்தியர்கள் பற்றிய அவர்களுடைய பார்வை அல்லது perception கேட்பதுண்டு" நிறைய பேர் சொன்ன ஒரு சில விசயங்கள் இங்கே 



  • Many indians are shallow and judgmental
  • Extremely hierarchically and many Indians find it difficult to work in a non-hierarchical structure
  • They expect commands or instructions from managers and they always on reactive mode and we cannot expect too much initiative from subordinates or they are not proactive. 


முதல் பாயின்ட்: judgmental


எத்தனை பேர் இதனை அனுபவித்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு அயன் செய்யாத சட்டையை அல்லது பாண்டை அணிந்து வெளியில் செல்கிறீர்கள்  அப்போது நீங்கள் புதிதாக சந்திக்கும் நபர்கள் முக்கியமாக இந்தியர்கள் உங்களை எப்படி பார்பார்கள். 


மற்றவர்கள் எப்படியோ, நான் நிறைய விசயங்களில் அனுபவித்து இருக்கிறேன்.  இந்தியாவில் இருந்த போதும் சரி இங்கே வந்த போதும் சரி. முதல் பார்வையில் இந்தியர்கள் உங்கள்  உடைகளை பார்த்து ஒரு எடை போட்டு நீங்கள் அப்படி தான் என்று பேச ஆரம்பிப்பார்கள் அல்லது நீங்கள் நகையோ அல்லது காஸ்ட்லி உடை அணியாமல் இருந்தாலோ உங்களிடம் பேச மாட்டார்கள்.  அடுத்து யாரோ ஒருவர் வந்து நம்மை பற்றி கூறி இருப்பார், உடனே உங்களிடம் முகம் திருப்பியவர்கள் திரும்பி வந்து பேசுவார்கள்.எனக்கு ரொம்ப சிரிப்பாக இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு முன் முகம் திருப்பியவர்கள் இப்போது வந்து பேசுகிறார்கள் என்று.  அதே போல, ஒரு சிலர் நம்மிடம் வந்து பந்தா காட்டுவார்கள், அதாவது என்னிடம் அது இருக்கு இது இருக்கு என்று எதிரில் இருப்பவர்களின் உடைகளை மட்டும் வைத்து ஜட்ஜ் செய்து உங்களிடம் ஒன்று இல்லை என்று நினைத்து பேசுவார்கள்.அப்படி செய்பவர்களி பார்க்கும் போது எனக்கு வடிவேலுவின் துபாய் காமெடி நினைவுக்கு வரும்.



அதே போல, நான் ரொம்ப அனுபவிப்பது இது. ஒரு பெண் பெரியவேலையில்  இருப்பதோ, நிறைய படித்திருப்பதோ அறியாமல் இருக்கும் போது அவர்களிடம் பேசுவதும் பின்னர் அவையெல்லாம் தெரிந்த பிறகு பேசுவதும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் முதலில் பேச ஆரம்பிக்கும் பொது ஒரு ஜட்ஜ் மென்ட் இல்லாத ஒரு மனநிலையில் பேசவே மாட்டார்கள்.ஏன்  இப்படி என்று பல முறை யோசித்து இருக்கிறேன்.


இதே போன்ற ஒரு மன நிலையை நான் ஒரு சில  UK ஆங்கிலேயர்களிடம் பார்த்து இருக்கிறேன். நான் முதன் முதலில் கேம்பிரிட்ஜ் சென்ற புதிது, இந்தியாவில் இருந்து சென்ற நான் இந்திய accent மட்டுமே உபயோகித்து ஒரு இடத்திற்கு வழி கேட்ட போது அங்கிருந்த அம்மா சொன்ன accent  புரியாமல் "கேன் யு ப்ளீஸ் டெல் மீ ஸ்லோவ்லி" என்று நான் கூற  அந்த அம்மா ஒரு ஊமையிடம் செய்து காட்டுவது போல சைகை காட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. 


ஒரு வேலை இந்த ஒரு மனநிலை ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்ததா என்று தெரியவில்லை. 


அடுத்த பாயின்ட், shallow. அதாவது எல்லாவற்றியும் நுனிப்புல் மேய்வது, ஊன்றி படிப்பதில்லை, மேலோட்டமாக படித்து விட்டு, எனக்கு எல்லாம் தெரியும் என்று ஷோ காட்டுவது. நாம் தெரிந்தது போல காட்டி கொண்டாலும் நம் எதிரில் இருக்கும் அவர்கள் எளிதில் நீங்கள் shallow என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று அறியாமல் நடந்து கொள்வது. என்னுடைய நண்பர்கள் இப்படி சொன்ன பிறகு, நம்மை பற்றி எல்லாம் இவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் என்று நினைத்து பார்த்தேன். 


அடுத்த இரண்டு பாயின்ட்களும் பற்றி.  ஒரு hierarchy இல்லாமல் எல்லாரும் பொது என்ற மன நிலையில் இந்தியர்கள் எங்காவது வேலை பார்ப்பதை  இந்தியாவில் பார்த்து இருக் கிறீர்களா. ஒரு பாஸ் இருக்க வேண்டும் அவர் முடிவெடுப்பார் அவர் எடுக்கும் முடிவை எல்லாரும் பதில் சொல்லாமல் ஏற்றுகொள்ள வேண்டும். இல்லாவிடில் பாஸ்க்கு கோவம் வந்து விடும். அதனாலேயே நிறைய கீழே வேலை செய்பவர்கள் எதுவும் புதிதாக தொடங்க மாட்டார்கள். இந்த மன நிலையுடன் வளர்க்கப்படும் நாம் எல்லாவற்றிலும் hierarchy எதிர் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம் என்று நினைக்கிறன்.


 நீங்கள் கொஞ்சம் பெரிய  பொசிசன் வந்த பிறகு உங்களுக்கு கீழே இந்தியர்களை வேலைக்கு எடுத்து அவர்களிடம் வேலை வாங்கும் போது இதனை நிறைய கவனித்து இருப்பீர்கள். அதாவது, அனைவரும் சமம் என்று நீங்கள்நடத்தினால்  உடனே ஒரு கிளாஷ் வந்து விடும், நிறைய backbiting நடக்கும். நம்மிடம் வந்து நிறைய கம்ப்ளைன் செய்வார்கள். அதே, நீங்கள் ஒரு hierachy உருவாகினால் அதிகம் இருப்பதில்லை.  நம்மிடம் தொன்று தொட்டு இருக்கும் காஸ்ட் மற்றும் ஜாதி பிரிவுகளும் நான் பெரியவர் நீ பெரியவர் என்ற ஆதிக்க மனபான்மையுமே இதற்க்கு காரணம் என்று நினைக்கிறன்.



நன்றி

Saturday, April 11, 2015

சென்யோரிட்டா, லோலிட்டா, போனிட்டா, காசோலினா ..

என்ன இது எல்லாம் என்று கேட்பவர்களுக்கு, இவைகளெல்லாம் நம் தமிழ் படத்தில் வரும், தொடக்க  பாடல் வரிகள். இவற்றின் ஒரிஜினல் ஸ்பானிஷ், போர்துகீஸ் மற்றும் ரஷ்யன் மொழியில்.

நம்ம ஊரில் நான் இருந்த வரை இப்படி ஏதாவது புதுசா வார்த்தைகள் வந்துட்டே இருக்கும், அதுவும் நான் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம், என்னுடன் படித்த மற்றவர்கள் புதுசு புதுசாக நிறைய சொல்வார்கள். அவர்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது என்றாலும், கேட்க்க தைரியம் இருக்காது. எங்கே ஏதாவது கேட்க போய் அவங்க எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடுவார்களோ, என்று நினைத்து கேட்க மாட்டேன். நம்முடைய நாட்டில் பல மொழி, பல கலாச்சாரம் இருப்பதால் வெளி மாநில மக்கள் வர வர அவர்களுக்கு உரிய வார்த்தைகள் எல்லாம் நம்முடைய மொழியில் கலந்து மக்களிடம் கலந்து விடுகிறது. மக்களும் அதன் அர்த்தம் முழுமையாக தெரியாவிட்டாலும் பயன் படுத்த ஆரம்பிப்போம்.

உதாரணமாக, எனக்கு இப்போது கூட புது வார்த்தையாக இருந்தது "போங்கு" என்ற வார்த்தை. நிறைய பேர் உபயோகிறார்கள். ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு முதலில் கேட்ட போது தெரியவில்லை. மதுரை பக்கம் எல்லாம் ரொம்ப "ஜூ" விடாத என்று சொல்வார்கள். அதற்கும் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை அப்போது..ஆனால் அர்த்தம் தெரியாமல் நிறைய நானே உபயோகித்து இருக்கிறேன். என்னுடைய கணவரிடம் , முதலில் நான் ஜூ என்ற வார்த்தையை அவரிடம் சொன்ன போது  அவர் அதற்க்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். எனக்கு உண்மையில் அர்த்தம் தெரியாததால் "ஷோ" காட்டுறது என்று சொல்லி வைத்தேன். ஏனெனில் நிறைய வார்த்தைகள் நாம் காண்டக்ஸ்ட் வைத்தே அர்த்தம் அறிகிறோம்.

இப்படி எல்லா வார்த்தையையும் அதன் அர்த்தம் என்ன என்று தெரியாமல் அடுத்தவர்கள் உபயோகிகிரார்களே, நாமும் உபயோகிப்போம் என்று உபயோகிக்கிறோம். உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்தால் இப்படி எல்லா நேரமும் உபயோகிப்போமா என்று தெரியாது.

அர்த்தம் தெரியவில்லை என்றால் கேள்வி கேள், "There is no such thing as dumb question" என்று என்னுடைய ஆராய்ச்சி கைடு சொல்லும் வரை எதனை பற்றியும் கேள்வி கேட்க எனக்கு தைரியம் வந்ததில்லை. இப்போது எல்லாம் அர்த்தம் தெரியாமல் எந்த வார்த்தையும் நான் உபயோகிப்பதும் இல்லை, எந்த கேள்வியும் கேட்க்க தயங்குவதும் இல்லை.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.சென்யோரிடா என்றால் கன்னிப்பெண் என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம். மிஸ் என்பதை சென்யோரிடா என்று அழைகிறார்கள் . பரவாயில்லையே, நம்ம ஊர் கவிஞர்கள் எல்லாம் அடுத்த நாட்டு மொழியையும் எடுத்து எப்படி உபயோகிகிறார்கள் என்று சந்தோஷ படாதீர்கள்.

ஏனெனில் "லோலிடா" என்ற தொடங்கும்  பாட்டு  ஒன்று கேட்க நேர்ந்தது. உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்து தான் இதனை உபயோகித்தார்களா என்று தெரியாது. ஏனெனில் லோலிடா என்பது ரஷிய எழுத்தாளர் Vladimir Nabokov அவர்களின் நாவலில் வரும் ஒரு கதை மாந்தர் பெயர். உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்றால் "a sexually precocious young girl" என்பது. யாரையும் லோலிடா என்று அழைத்து விடாதீர்கள், அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரிந்து, அப்படி அழைத்தீர்கள் என்றால் உங்களை சும்மா விட மாட்டார்கள். 

அதே போல, பொனிட்டா, கசொலினா என்று ஒரு பாட்டு கேட்டேன். பெனிட்டா என்றால் pretty, cute போன்ற அர்த்தம் வரும். ஆனால் காசொலினா என்றால் ஸ்பானிஷ் மொழியில் பல அர்த்தங்கள் அதுவும் காண்டக்ஸ்ட் பொறுத்து மாறும், முக்கியமாக கோகனே, போன்ற போதை பொருள்கள் ஒரு அர்த்தம் என்றால், அசிங்கமான சில பல அர்த்தங்களும் லோக்கல் உபயோகத்தில் உண்டு. இதெல்லாம் பாட்டு எழுதுபவர்களுக்கு தெரியுமா இல்லை சும்மா உபயோகிப்போமே என்று உபயோகிகிறார்களா என்று தெரியவில்லை.

ஊருக்கு சென்றிந்த போது பல சிறு குழந்தைகள் இந்த பாட்டை பாடுவதை கேட்டு இருக்கிறேன், அர்த்தம் தெரிந்தால் இப்படி பாடுவார்களா அல்லது பெற்றோர் பாட அனுமதிப்பார்களா, என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.
நம்முடைய குழந்தைகளை பிறர் செய்கிறார்கள் அதனால் இவர்களும் செய்யட்டும் என்று ஒரு ஆட்டு மந்தை கூட்டமாக மாற்றாதீர்கள். நிறைய கேள்வி கேட்க வையுங்கள், உங்களுக்கும் தெரியவில்லை என்றால் அர்த்தம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இருக்கவே இருக்கிறது கூகிள்.  


நன்றி.



Wednesday, April 8, 2015

இன்ஸ்டன்ட் நூடுலேஸ் என்ன செய்யும் உங்கள் உடலுக்கு?

Maggi, சன்பீஸ்ட்,  Ching's, Ramen என்று வித வித நூட்லஸ் விளம்பரங்கள். இது ஹெல்தி, இது ஹோல் வீட் என்று வேறு சப்பை கட்டு. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கட்டாயம் சாப்பிடுகிறார்கள். வேகமாக வேலை முடிவது, பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு நல்ல டிபன் என்று பல தாய்மார்களும் செய்து தருகிறார்கள். ஆனால் அது உண்மையில் ஹெல்தியா என்று யாரும் சிந்திப்பதில்லை. Massachusetts General Hospital ஐ சேர்ந்த டாக்டர்  Dr. Braden Kuo அவர்கள் செய்த இன்ஸ்டன்ட் நூடல்ஸ் ஆய்வின் முடிவை பாருங்கள். 

எப்படி இன்ஸ்டன்ட் நூடுல்களை செரிக்க வைக்க குடல் என்ன பாடு படுகிறது என்று கீழ்க்கண்ட வீடியோ தெரிவிக்கிறது.







இன்ஸ்டன்ட் நூடுல்கள் பல நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க tertiary-butyl hydroquinone (TBHQ) என்னும் ஒரு நச்சு தன்மை உள்ள ப்ரிசெர்வேடிவ் சேர்கிறார்கள். இது நம் குடலுக்குள் செல்லும் போது குடலில் செரிக்க வைக்க சுரக்கப்படும் வேதிப்பொருள் களால் இந்த TBHQ வை செரிக்க வைக்க இயலாது, அதனால் இந்த நூடுல்கள் செரிக்கபடாமல் மற்ற பொருள்களையும் செரிக்க விடாமல் எள்ளது உடல் சத்துகளை உறிஞ்ச விடாமல் கெடுகிறது.


TBHQ என்பது ஒரு பெட்ரோலியம் பை ப்ரொடக்ட். வேறு எந்த எந்த பொருள்களில் எல்லாம் இது சேர்க்கபடுகின்றது என்று தேடியபோது கிடைத்த செய்திகள் தலை சுற்றியது. McDonald கடைகளில் கிடைக்கும் சிக்கன் nuggets, Kellogg’s CHEEZ-IT crackers, Reese’s peanut butter cups, Wheat Thins crackers, Teddy Grahams, Red Baron frozen pizza மற்றும் டகோ பெல் பீன்ஸ் என்று தெரிந்த ஐடம்ஸ் அனைத்தும் இந்த TBHQ பதபடுத்தும் பொருளை உபயோகிகிறார்கள்.


இன்னும் என்ன இந்த இன்ஸ்டன்ட் நூட்லஸ் செய்யும் என்று பாருங்கள். ஜர்னல் ஆப் நியூட்ரிசன் ல் வெளிவந்த கட்டுரையின் படி(1), அதிகமாக அதாவது வாரத்திற்கு இரண்டு முறைக்கு அதிகமாக இன்ஸ்டன்ட் நூட்லஸ் சாப்பிடும் பெண்களுக்கு  metabolic syndrome எனப்படும் ஹார்மோன் குறைபாடுகள் வரலாம் என்று கூறுகிறது. அதித எடை, அதிகரிக்கும் ரத்த அழுத்தம்,  அதிகரிக்கும் ரத்தத்தில் சக்கரை அளவு மற்றும் சக்கரை வியாதி


இன்ஸ்டன்ட் நூட்லுஸ் சாப்பிடுவோர் protein, calcium, phosphorus, iron, potassium, vitamin A, niacin,மற்றும்  vitamin C போன்ற உடலுக்கு அத்திவசியமான ஊட்ட சத்துகள் எதனையும் பெறுவதில்லை. அவர்கள் பெறுவது எல்லாம் அதிக உப்பு (கிட்ட தட்ட 2700 மில்லி கிராம் அளவு) மற்றும் அதிக ஆபத்தான கொழுப்புகள் மட்டுமே. இவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனை தவிர இந்த இன்ஸ்டன்ட் நூட்லஸ்களில் நிறைய MSG அல்லது அஜினோமோடோ வேறு உண்டு.


சிறு வயதில் இருந்து இன்ஸ்டன்ட் நூட்லுஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு  அதிக எடை, சக்கரை வியாதி அல்லது ரத்த அழுத்த  பிரச்சனைகள் வரலாம்.


நூடல்ஸ் ஒரு சத்து இல்லாத அன் ஹெல்தி உணவு, முடிந்த வரை இதனை சாப்பிடுவதை தவிருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்காதீர்கள்.


நன்றி.



Reference
(1) Instant Noodle Intake and Dietary Patterns Are Associated with Distinct Cardiometabolic Risk Factors in Korea
J. Nutr. 2014 144: 1247-1255first published online June 25, 2014.