Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Friday, October 2, 2015

ஆஸ்துமாவும்-சிசேரியனும்

ஒரு அறிவியல் செய்தி படிக்க கேட்க நேர்ந்தது. ஒன்று எப்படி சிசேரியனில் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை அதிகம் வரும் என்பது குறித்தது.  

Bacteria under Microscope: Thanks to google images


ஆஸ்துமாவும்-சிசேரியனும் 


இந்தியாவில் தற்போது நடக்கும் பல பிரசவங்கள் சிசேரியன் ஆக மட்டுமே இருக்கிறது. முதலில் டாக்டர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு சிசேரியன் பண்ணுறாங்க என்று சொல்லுவார்கள். ஆனால், தற்போது மக்களே "நாங்க ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுறோம் நீங்க சிசேரியன் செய்துடுங்க" என்று சொல்லுகிறார்கள். அதாவது, குழந்தை பிறக்கும் நாள் நட்சத்திரம் எல்லாம் இவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். அப்படியே ஜாதகமும் தீர்மானித்து குழந்தையின் எதிர் காலத்தையும் தீர்மானித்து விடுகிறார்கள். 

இது ஒரு புறம் மும்முரமாக சென்று கொண்டு இருக்க, உண்மையில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் என்னவெல்லாம் இழக்கின்றன, சந்திகின்றன என்று பார்போம்  .


முதலில் சுகபிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகள் வெளியே வருவதற்குள் பெண்ணின் பிறப்பு உறுப்பில் சந்திக்கும் பாக்டீரியாக்கள் அவர்களின் உடல் எதிர்ப்பு சக்தி மற்றும் அலேர்ஜி குறித்து தீர்மானிக்கிறது. 
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் முதலில் இழப்பது   Lactobacillus என்னும் பாக்டீரியல் காலனி. இது குழந்தையின் GI tract எனப்படும் செரிமான பாதையை வழி நடத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. சிசேரியன் மூலம் பிறப்பதால் மனித தோலில் மற்றும் மருத்துவ மனையில் இருக்கும் Staphylococcus and Acinetobacter போன்ற கெடுதி விளைவிக்கும் பாக்டீரியாக்களை  முதலில் சந்திக்கிறார்கள். 

மேலும் தாய்பால் கொடுக்காமல் பார்முலா கொடுப்பது,சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு எல்லாம் அண்டிபயாடிக் எடுத்து கொள்ளுவது போன்றவையும்  இதனை மோசமாக்குகின்றன  என்றுதெரிவிகிறார்கள் .

முக்கியமாக 4 பாக்டீரியாக்கள் இதனை தீர்மானிக்கின்றன என்று மிக மதிப்புள்ள அறிவியல் பத்திரிக்கையான "Science" வெளியிடப்பட்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது.  3 வயதுக்குள் இந்த பாக்டீரியாக்கள் உணவிலோ அல்லது வேறு வகையிலோ உடலில்  சேர்த்து கொள்ளபடின், குழந்தைகள் ஆஸ்துமா போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று அது தெரிவிக்கிறது. 

அமெரிக்காவில் முக்கால் வாசி நேரம் சுக பிரசவத்திற்கு முயற்சி செய்ய சொல்லுவார்கள். ஆனாலும்,
மருத்துவ காரனங்களுக்காக ஒரு சிலருக்கு சிசேரியன் தவிர்க்க முடியாதது. உதாரணமாக, ப்ரீச் பேபி எனப்படும் தலை கீழாக குழந்தை இருக்கும் போது அல்லது பனிக்குடம் உடைந்த பிறகும் குழந்தை பிறக்க முடியாத நிலையில் இருக்கும் போது போன்ற ஒரு சில நேரங்களில். அப்படி ஏற்படும் சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதற்கான bacteriyal probiotic supplement கொடுப்பதன் மூலம் சிறு குழந்தை ஆஸ்துமா தவிர்க்கலாம்.  


photo courtesy : http://www.asthmaed.com/journal/2014/1/2/do-cesarean-sections-increase-atopy-and-asthma

ஆனால் மருத்துவ காரணம் இல்லாமல் ஜாதகத்துக்காக, நல்ல நேரத்திற்காக, அல்லது பணத்துக்காக என்று சிசேரியன் செய்வது மூலம் உங்கள் குழந்தைகளை நீங்களே உடல் நலம் இல்லாதவர்கள் ஆக்குகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள், உணருங்கள்.  

நன்றி.


References

Asthma: Undoing millions of years of coevolution in early life?SCIENCE TRANSLATIONAL MEDICINE : 307FS39

Early infancy microbial and metabolic alterations affect risk of childhood asthma SCIENCE TRANSLATIONAL MEDICINE : 307RA152


Neu J, Rushing J. Cesarean versus Vaginal Delivery: Long term infant outcomes and the Hygiene Hypothesis. Clinics in perinatology. 2011;38(2):321-331. doi:10.1016/j.clp.2011.03.008.

http://www.npr.org/sections/health-shots/2015/09/30/444746094/missing-microbes-provide-clues-about-asthma-risk


Monday, September 28, 2015

உங்களின் மாதவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது?



Photo courtesy Google images

இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி மீடிங்கில் பேசி கொண்டு இருக்கும் போதே கண்கள் சொருகி மயங்கி விழுந்து விட்டாள். உடனே EMR அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அந்த பெண்ணிற்கு அதிக உதிரபோக்கு இருந்துள்ளதும் அதன் விளைவாக மயங்கியதும் தெரிய வந்தது. மெனோபாஸ் நெருங்கும் வயது என்பதால் ஒரு சிலருக்கு இது போன்று ஏற்படாலாம் என்றாலும் இது போன்ற அதிக உதிரப்போக்கு சில நேரங்களில் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது.

பொதுவாக பெண்களின் மாதவிடாய் குறித்து அதிகம் விழிப்புணர்ச்சி கானபடுவதில்லை. எது சரியான அளவு, எத்தனை நாளுக்கு ஒருமுறை, எத்தனை நாட்கள் உதிரபோக்கு இருக்கலாம், அல்லது உதிரம் மட்டும் அல்லாமல் கட்டியாகவும் வரலாமா.. என்பதில் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். இந்த கேள்விகளுக்கு இவர்கள் அணுகுவது தன சொந்தகள், தோழிகள் அல்லது இணையம் உபயோகிக்க தெரிந்தவராயின் கூகிள்.

பெண்களுக்கு ஏற்படும் பொதுவன மாதவிடாய் பிரச்சனைகள் என்னவெனில், அதிக உதிரபோக்கு, உதிரம் கட்டியாகி வெளியேறுதல், உதிரம் வெளியேறாமல் வெள்ளையாக வெளியேறுதல் அல்லது மிக குறைந்த உதிரபோக்கு அல்லது உதிரப்போக்காக இல்லாமல் ஸ்பாட்டிங் மட்டுமே தட்டுபடுவது.


1. அதிக உதிரபோக்கு

இங்கு நான் அதிகம் என்பது ஒரு நாளில் 5 க்கு மேற்பட்ட நாப்கின் அல்லது டம்பூன் உபயோக்கிக்கும் அளவு உதிரபோக்கு இருப்பது. இதற்க்கு முக்கிய காரணமாக இண்டர்நெல் பெனிக்ன் ட்யுமெர் அல்லது fibroids இருக்கலாம். ஒரு சிலருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வரலாம்.
இப்படி அடிக்கடி நடந்தால் உடனே டாக்டரிடம் அணுகுவது நல்லது, ஏனெனில் இது பாலிப், endometriosis, பெரிய ட்யுமெர் என்று வந்து விட்டு விடும். நீங்கள் குழந்தை பெரும் வயதில் இருக்குறீர்கள் என்றால் உங்களின் குழந்தை பிறப்பை தடுத்து மலட்டு தன்மையை கூட உண்டாக்கலாம்.
அதிக உதிரபோக்கால், வயிற்று வலி, கால் கை வலி தவிர மன உளைச்சல், சாதாரண வேலையை கூட சரியாக செய்ய முடியாத தன்மை, எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம்.

2. மிக குறைந்த உதிரபோக்கு

நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் இது நடக்கலாம். அப்படி நீங்கள் எதுவும் எடுத்து கொள்ளவில்லை ஆனாலும் மிக குறைந்த அளவு உதிரபோக்கு இருக்கிறது எனில், உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம். முக்கியமாக உங்களின் பிட்யுடரி சுரபியின் செயல்பாடு குறித்து அணுகுவது நல்லது. ஒரு சிலருக்கு PCOS போன்ற பாலி சிஸ்டிக் ஓவரீஸ் இருப்பினும் இது போன்ற மிக குறைந்த அல்லது மாதவிடாய் தவறுவது போன்றும் ஏற்படலாம்.  உங்களின் வாழ்வியலில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் இதனை சரி செய்யலாம். ஒழுங்கான ப்ரோடீன், பழங்கள் காய்கள், நிறைந்த சாப்பாடு, நல்ல உடல் பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை கட்டுபடுத்தலாம்.

3. ஸ்பாடிங்

இது உங்களின் மாதாவிடாய் இறுதியின் போது ஏற்படும் ஸ்பாடிங் அல்ல, மாறாக எப்பொழுதும் ஒரு சிலருக்கு ஏற்படலாம். நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்பவாராயின் ஒரு சிலருக்கு இது நேரலாம். இல்லை என்றால் டாக்டரை அணுகுவது நல்லது. முக்கிய காரணம் கருப்பை வாய் அல்லது கருப்பையில் இருக்கும் பாளிப்கள் எதற்கு காரமணாக இருக்கலாம். அல்லது பைப்ரைட் அல்லது கான்செர் கூட காரணமாக இருக்கலாம். அதனால் இப்படி அடிக்கடி நடந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

4. மாதவிடாய் தள்ளி போவது

உடனே இது கர்ப்பம் என்று பலர் நினைக்கலாம்.ஆனால் உண்மையில் உங்களுக்கு ரெகுலர் ஆவுலேடிங் சைக்கிள் வரவில்லை என்று அர்த்தம்.PCOS, type  2 Diabetics போன்றவையும் உங்களின் உடலில் ஹார்மோன் இம்பாலன்ஸ் உருவாக்கி மாதவிடாய் தவறி அல்லது தள்ளி செல்லலாம். ஒரு சிலருக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு  இது உங்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தும். அதனால் டாக்டரை அணுகுவதும் உங்களை வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதும், மாவுப்பொருள்கள் தவிர்ப்பதும் நல்லது. இது உங்களின் மாதவிடாயை சரி செய்ய உதவும்.

மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை வராமல் 30-32 நாட்களுக்கு ஒரு முறை வரலாம். அது சாதாரணமானது. ஆனால், ஒவ்வொருமுறையும் 40 நாட்கள் அல்லது அதற்க்கு மேல் வந்தால் அது நல்லதல்ல. அதே போல, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலும் டாக்டரை அணுகுவது நல்லது.


டிஸ்கி
இது மருத்துவ அறிவுரை அல்ல, நான் வாசித்ததை, அனுபவத்தில் கண்டதை வைத்து எழுதியது.

நன்றி.


Wednesday, August 19, 2015

கொசு விரட்டிகள் ஏன் அதிகம் வேலை செய்வதில்லை?

Mortein, Good night, Hit ...என்று பல பல கொசு விரட்டிகள் தினமும் அறிமுகப்படுத்த படுகின்றன. இவர்களின் தாரக மந்திரம். கொசுக்களை சீக்கிரம் விரட்டி விடும். அதிக புகை இல்லை, இரவு முழுக்க பாதுகாப்பு, நிம்மதியாக தூங்கலாம்... என்று பல பல.. உண்மையில் இவர்கள் விளம்பர படுத்துவது போல கொசு விரட்டிகள் வேலை செய்யுமா, கொசுக்கள் இந்த கொசு விரட்டிகளை  கண்டு ஓடி விடுமா? உண்மை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கொசுக்கள் முதன் முதலில் கொசு விரட்டிகள் முன்பு  அறிமுகபடுத்த படும் போது துரத்த படுகின்றன. ஆனால் அடுத்த முறை எக்ஸ்போஸ் ஆகும் போது, கொசு விரட்டிகள் எந்த பயனும் ஏற்படுத்துவதில்லை.
அமெரிக்காவில் அதிகம் உபயோபடுத்தும் Deet என்னும் கொசு விரட்டியை வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து PloS என்னும் ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டு இருக்கின்றனர்(1).
இந்த ஆராய்சியின் படி, கொசு விரட்டிகள் உபயோகிக்கப்பட்டு மூன்று மணி நேரம் மட்டுமே கொசுக்கள் அதன் எபக்ட் கொண்டிருக்கும் என்று, அதன் பிறகு அவை பழகி கொள்ளும் என்றும் அறிந்து இருகிறார்கள். 

London School of Hygiene and Tropical Medicine டாக்டர் ஜேம்ஸ் லோகன் அவர்களின் கருத்து படி "கொசுக்கள் மிக மிக வேகமாக மரபணு மாற்றம் செய்து கொண்டு சூழ்நிலைக்கு தக்க தங்களை மாற்றி தகவமைத்து கொள்ளுகின்றன. அதனாலேயே, பல கொசு விரட்டிகள் உபயோக்கிக்க ஆரம்பிக்கும் போது பயன் தருவது போல தெரிந்தாலும், கொஞ்ச நாட்களில் அல்லது கொஞ்ச நேரத்தில் அவை செயலிலந்தவை ஆகி விடுகின்றன.

அதனால் இனிமேல் எந்த விளம்பரமாவது எங்கள் கொசு விரட்டி இரவு முழுதும் கொசுக்களை கொள்ளும் பாதுகாப்பு அளிக்கும் என்றால் அவை உண்மை இல்லை. வெறும் வியாபார தந்திரம் மட்டுமே.

Photo credit to BBC 

மாறாக, இயற்கையாக கிடைக்கும் புல் ஒன்று கொசுக்களை விரட்டும் என்றும் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து தற்போது கொசுக்களை விரட்டும் Coumarin  என்னும் வேதிபொருளை பிரித்திருப்பதாகவும் படித்தேன். எப்படியே, இயற்கை வழியே சிறந்தது என்று இதன் மூலம் மறுபடியும் நிருபிக்க பட்டு இருக்கிறது. இதனை வைத்து என்ன என்ன விளம்பரங்கள் வர போகின்றனவோ? பார்க்கலாம்.

நன்றி.


Reference

1) Stanczyk NM, Brookfield JFY, Field LM, Logan JG (2013) Aedes aegyptiMosquitoes Exhibit Decreased Repellency by DEET following Previous Exposure. PLoS ONE 8(2): e54438. doi:10.1371/journal.pone.0054438

Thursday, July 30, 2015

அலுப்பும் நோய் தொற்றும் தொடர்புள்ளவையா?


இது குழந்தைகளிடம் அதிகம் காணலாம். உதாரணமாக, நீங்கள் அவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்லுகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உடனே அவர்களுக்கு அப்பொழுது தான் தலை வலிக்கும், உடல் வலிக்கும், தூக்கம் வரும் எல்லாமே செய்யும். அதே அவர்களை இதனை முடித்தால் நீங்கள் விளையாடலாம் அல்லது டிவி பார்க்கலாம் என்று சொல்லி பாருங்கள். உடனே, வேலை நடக்கும். அப்பொழுது அவர்கள் முதலில் உடல் வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று  பொய் சொன்னார்களா? யோசித்து வையுங்கள். 

இதே கேள்வியை உங்களிடமும் கேக்கிறேன். ஒரு நாள் ஆபிசில் இருந்து பயங்கர சோர்வாக வீட்டுக்கு வருகிறீர்கள். உங்களுக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது. அப்பொழுது உங்கள் நீண்ட கால நெருங்கிய நண்பர் போன் பேசுகிறார் அல்லது வீட்டுக்கு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம். உடனே, அவரிடம் கல கல வென்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். பழைய நினைவுகளை எல்லாம் அசை போடுகிறீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் சோர்வு மறைந்து விடுகிறது. அப்பொழுது முதலில் உங்களுக்கு இருந்த  சோர்வு பொய்யா? 

வேறு ஒரு சூழல் சொல்கிறேன்.  உங்களுக்கு பிடிக்காத மீட்டிங் ஆனால் நீங்கள் போயே ஆக வேண்டும். வேண்டா வெறுப்பாக பொய் உக்கார்ந்து இருக்கிறீர்கள். அப்பொழுது பார்த்து எங்கிருந்து தான் உங்களுக்கு கொட்டாவி வருமோ தெரியாது. தொடர்ந்து வந்து அனைவரும் உங்களை திரும்பி பார்க்கும் வரை தொடரும். தொடர்ந்து தலைவலியும் கொண்டு வந்து விடும். அதே நேரம்  வெளியில் வந்து கொஞ்ச நேரம் நடந்தாலோ அல்லது இசை கேட்டாலோ அல்லது நண்பர்களுடன் பேசினாலோ கொட்டாவி, தலைவலி எல்லாம் போய் விடுகிறது. எப்படி?

மேலே சொன்ன உதாரணங்களில், ஒருவரின் மனநிலை அவரின் உடல்நிலையை பாதிக்கிறது. மருத்துவத்தில் நியூரோஇம்யுனாலாஜி என்று ஒரு துறை இருக்கிறது அதில் நரம்பு மண்டலம் நம் உடல் நிலையை, எதிர்ப்பு சக்தியை எப்படி பாதிக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக, உங்களின் மூட், தூக்கம் நடவடிக்கை பொறுத்து உங்களின் உடம்பில் இருக்கும் cytokine எனப்படும் செய்தி எடுத்து செல்லும் மேச்சென்ஜெர் மாலிகுல்கல் பாதிக்க படுகின்றன அல்லது தூண்டப்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இவை பொதுவாக தலையில் காயம் ஏற்படும் போது , வைரல் அல்லது பாக்டீரியல் தாக்குதலின் போது பாதிக்கப்படும் மேச்சென்ஜெர்கள் ஆகும் (1). இதே போன்ற cytokine மற்றும்  chemokine போன்றவை நரம்பு மண்டலத்தில் செய்தி கடத்தும் மாலிகுல்கலை எப்படி பாதிக்கிறது என்று அறியப்பட்டு இருக்கிறது (2)

தொடர்ந்த மன அழுத்திற்கும் , அதிக வைரல் தொற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விலங்குகளில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளை, அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது  glucocorticoid அளவு அதிகமாகி, streptococcal எனப்படும் தோல் தொற்று அதிகமாவது நிரூபிக்க பட்டு இருக்கிறது (3).

இவை என்ன தெரிவிகின்றன என்றால்,  உங்கள் குழந்தைகளிடம் வீட்டுபாடம் செய்ய சொல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் அலுப்புகள் அவர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அவர்களுக்கு தலை வலியை கொடுக்கலாம். அதனால் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.

அதனால், எப்பொழுது பார்த்தாலும் படி, வீட்டுபாடம்  செய், இல்லை அதனை செய் இதனை செய் என்று நீங்கள் நடத்தினீர்கள் அல்லது வேலை கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் நிலை சரியில்லாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்பொழுது பார்த்தாலும் படி படி என்று அவர்களை படுத்தாமல், அவர்களுக்கு மன சந்தோசம் தரும் விசயங்களையும் செய்ய கொடுங்கள், நிறைய விளையாடவும் நேரம் கொடுங்கள். அப்பொழுது தான் அவர்கள் சந்தோசமாக நோய் தொற்று இன்றியும்  இருப்பார்.

நன்றி.

References 
1) http://grants.nih.gov/grants/guide/pa-files/pa-05-054.html
2) Kipnis J, Derecki NC, Yang C, Scrable H (October 2008). "Immunity and cognition: what do age-related dementia, HIV-dementia and 'chemo-brain' have in common?". Trends Immunol. 29 (10): 455–63
3) Kawli, Trupti; He, Fanglian; Tan, Man-Wah (2010-01-01).It takes nerves to fight infections: insights on neuro-immune interactions from C. elegans. Disease Models & Mechanisms 3 (11-12): 721–731.

Sunday, March 22, 2015

சிறு குழந்தைகள் காய்ச்சலில் மெத்தனம் வேண்டாம்!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

சில குடும்பங்களை வீட்டுக்கு கெட் டுகெதர் க்கு அழைத்து இருந்தோம். எல்லா குழந்தைகளும் நன்கு விளையாடி கொண்டிருந்தன. அவற்றில் ஓரூ 2 வயது சிறுவனும் அடங்குவர். நன்றாக விளையாடி கொண்டிருந்த அவன் திடீரென்று நடுங்க ஆரம்பித்து விட்டான். உடனே temperature பார்த்ததில் 101 காட்டியது. ஐபுப்ரொபின் கொடுத்து விட்டோம். அவன் உடைகளை கலைந்து ஸ்பான்ஜ் பாத் கொடுக்க ஆரம்பித்தோம். ஆனால் சிறிது நேரத்தில் அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. உடல் வெப்பநிலை திடீரென்று அதிகரிக்கும் பொது மூளை இப்படி ரியாக்ட் செய்கிறது.
உடனே 911 அடித்து பரமேடிக்ஸ் வந்து விட்டார்கள். அவர்கள் பார்க்கும் பொது அவன் உடல் 104 ஐ  கடந்து இருந்தது. 20 நிமிடத்திற்குள் 2-3 டிகிரி வெப்ப நிலையை சிறு உடல் தாங்கி கொள்ள இயலவில்லை, வலிப்பு வந்து விட்டது.  அந்த சிறுவனுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் விட்டு விட்டு வந்திருக்கிறது என்ன செய்ய போகிறது என்று இவர்கள் மெத்தனமாக இருந்து இருக்கிறார்கள்.

இப்படி வலிப்பு வந்து விட்டால் உடனே இரும்பு போன்ற எதையும் கையில் கொடுக்காதீர்கள், உடலில் உள்ள ஆடைகளை அவிழ்த்து நிறைய தண்ணீர் ஒத்தடம் கொடுங்கள், நிறைய காற்று படும் இடத்திற்கு குழந்தையை தூக்கி சொல்லுங்கள், தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம். இப்படி காய்ச்சலால் வரும் வலிப்பு 3 நிமிடத்திற்குள் இருக்கும். குழந்தை பிறந்த 30 நாட்களுக்குள்  இருப்பின் உடல் வெப்பம் 100.4 டு 101 காட்டுகையில் மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. இப்படி அழைத்து செல்வது Meningitis போன்ற மூளை காய்ச்சல் வருவதை தவிர்க்கும். மூளை காய்ச்சல் கவனிக்காமல் விட்டால் வலிப்பு, பேச்சுத்திறன் இழத்தல், கண்பார்வை இழத்தல் போன்ற பல ஆபத்துகளை ஏற்படுத்த வல்லது.

அதே போல 5 வயதிற்கு கீழே உள்ள குழந்தைக்கு காய்ச்சல் ஐபுப்ரொபின்  6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுத்தும் ககுறையாமல்  இருந்தால் TYLENOL இடையே 4-6 மணி நேரத்திக்கு ஒரு முறை கொடுக்கலாம். உடல் வெப்பநிகை 101 ஐ தாண்டாமல் பார்த்துகொள்வது மிக அவசியம்.

இன்னும் சில அனுபவ குறிப்புகள்.

சிறு குழந்தைகள் 3-4 நாட்களாக DRY COUGH  எனப்படும் வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் கொண்டிருந்தால் ear infection ஆக இருக்கலாம்,

சிறு குழந்தைகளுக்கு சளி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் இருப்பின் வைரல் காய்ச்சல் ஆக இருக்கலாம். சளியின் நிறத்தை வைத்து bacterial அல்லது vairal  infection என்று சொல்கிறார்கள். அதாவது சளியின் நிறம் தெளிவாகவோ அல்லது வெள்ளையாகவோ இருந்தால் அது viral , அதுவே மஞ்சள் அல்லது பச்சையாக இருப்பின் அது bacterial infection.

VIRAL என்றால் antibiotics தேவை இல்லை , சில நேரங்களில் நிறைய வாந்தி அல்லது வயிற்ருபோக்கு இருக்கும். நிறைய தண்ணீர் கொடுங்கள். pedialite கொடுக்கவும். BRAT டயட் அதாவது, பிரட், அரிசி கஞ்சி, ஆப்பிள் sauce ,வாழைபழம் கொடுக்கவும் .

Bacterial  infection என்றால் Antibiotics கொடுப்பார்கள்.10
நாளைக்கு கொடுக்கிறார்கள் என்றால் 10 நாட்களும் கொடுக்க வேண்டும்.
இடையே காய்ச்சல் சரியானாலும் கூட.ஏனெனில் FULL COURSE கொடுப்பது பாக்டீரியாவை முழுதும் கொல்ல உதவும்.இடையே நிறுத்தினால் பாக்டீரியா மீண்டும் வளர வாய்ப்புள்ளது,
சில நாட்களில் மறுபடியும் காய்ச்சல் வரலாம்.

கவனிக்கால் விடப்பட்ட VIRAL INFECTION  சில நேரங்களில் BACTERIAL உடன் சேர்ந்து
co -infection  ஆகலாம். அது ஆபத்தானதாக முடியும்.

முடிவாக, சிறு குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலை அலட்சியம் செய்யாதீர்கள்.

நன்றி

Tuesday, February 24, 2015

ஒரு வருட கால கணக்கு -ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி - 3 ?


ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி பகுதி  1

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி பகுதி  2

கணவன் மனைவிக்குள் சண்டை அல்லது ஆபிசில் மேனேஜர் கடுப்படிக்கிறார் அல்லது   நமக்கு நெருங்கிய ஒருவர் தவறு செய்து விட்டார் அல்லது ஒரு வாய்ப்பை தவற விட்டுவிட்டோம் அல்லது  பர்ஸ்/போன்  தொலைந்து விட்டது, கால் சுளுக்கி விட்டது அல்லது உடைந்து விட்டது அல்லது ஒருவர் ஏமாற்றி விட்டார்  ....இப்படி பல பல விஷயங்கள் நமக்கு பெரிய தலை போகிற விசயமாக இருந்து ஸ்ட்ரெஸ் கொடுக்கும்.

ஆனால் தற்போது பெரிய விசயமாக தெரியும் பல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெரிய விசயமாக இருக்காது அல்லது காலத்தின் ஓட்டத்தில் ம ற /றை ந்து  விடும்.

அதனால் எந்த ஒரு விசயத்தையும்  ரத்த கொதிப்பு வரும்வரை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக யோசிக்காமல் "இன்றிலிருந்து ஒரு வருட காலத்தில் இந்த நினைப்பு இருக்குமா" என்று நினைத்து பாருங்கள்.

உங்கள் மேனேஜரிடம் நீங்கள் இன்று வாங்கிய திட்டு , அல்லது உங்களின் குழந்தை அல்லது நெருக்கமானவர் செய்த தவறு ஒரு வருடம் கழித்து நினைவில் இருக்குமா உங்களுக்கு? யோசியுங்கள். பர்ஸ் தொலைந்தது, போன் தொலைந்தது, கால் சுளுக்கு இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதாரணமாக ஒரு வாரம்/ஒரு மாதம்/ சில மாதங்கள் , பெரிய விசயமாக இருக்கும் இருக்கும் பின்னர் அதனை பற்றி நினைவாவது இருக்குமா என்று யோசியுங்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு உப்பு சப்பிலாமல் போக கூடிய விசயங்களை நினைத்து இப்போது ஸ்ட்ரெஸ் ஆகி என்ன பயன்.  பெரும்பாலான நம்முடைய ஸ்ட்ரெஸ்கள் இப்படி யோசித்தால் மறைந்து போகும்.


என்னுடைய சொந்த அனுபவத்தில் கண்டது இது , போன வருடம் பெரிய விசயமாக தெரிந்த பல இப்போது பெரிய விசயமாக தெரிவதில்லை. ஒரு வேலை தான் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது இது இல்லாவிட்டால் மற்றொன்று என்ற தோன்றுகிறது . மிகவும் முக்கியமான நபர் என்று நினைத்த பலர் இப்போது முக்கியமானவராக தெரிவதில்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும்.

ஸ்ட்ரெஸ் ஆகி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது தொடர்ச்சியாக அனைத்து நெகடிவ் விசயங்களும் நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். இதனை ஆங்கிலத்தில் "snowball effect " என்பர். அதுவும் சில நேரங்களில் இரவில் திடீரென்று ஒருவரை போனில் அழைக்க வேண்டும் என்று நினைப்பு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், உடனே மனம் அதோடு நின்றுவிடாமல் அதனை தொடர்ந்து அந்த நபரை பற்றிய அனைத்தும் ஞாபகம் வரும், பின்னர் அது மற்ற விசயங்களுக்கு தாவும், பின்னர் இது தொடர்கதையாகி முடிவில் தூக்கம் இல்லாமல் ஸ்ட்ரெஸ் ஆகி அடுத்த நாள் தூங்கி வழிவோம். அதனால் எப்போதும் எந்த ஒரு விசயத்தையும் அந்த விசயத்துடன் நிறுத்தி ஒரு புல் ஸ்டாப் வைத்து விடுங்கள். அல்லது முளையிலையே அந்த நினைப்பை கிள்ளி விட்டு அடுத்த வேலைலையை பாருங்கள். என்னுடைய உதாரண படி, ஒரு சிறு பேப்பரில் "அடுத்த நாள் இவரை போனில் அழைக்க வேண்டும்" என்று எழுதி வைத்து விட்டு தூங்கி விடுங்கள். அதனால் நீங்கள் மறந்தும் போக மாட்டீர்கள், அதே சமயம் snow ball effect இல் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.

நன்றி

Friday, May 14, 2010

எனது கட்டுரை யூத்புல் விகடனில்

அனைவருக்கும் ஒரு நற்செய்தி,

HFCS பற்றிய எனது பின்வரும் கட்டுரை விகடன் முகப்பு பகுதியில் வெளிவந்து இருக்கிறது.

http://www.vikatan.com

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறோம். "Corn இல்லாமல் எந்த உணவுமே இல்லை" என்று புதிதாக ஒரு மொழி வரும் போல இருக்கிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா? எப்படி என்று அறிய கீழே உள்ள கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் சொல்லுகிறீர்கள் பார்ப்போம்.

நீங்கள் காலையில் எழுந்தவுடன் breakfast-க்கு corn-flakes அல்லது Grits என்பதை போன்று உண்பவரா?

உங்களுக்கு கோக் அல்லது பெப்சி இல்லாமல் வாழவே முடியாதா?

ஐஸ்கிரீம் சாப்பிடுபவரா?

உணவகங்களில் டோமோடோ சூப் அல்லது ஏதேனும் ஒரு சூப் குடிப்பவரா?

எந்த உணவுக்கும் ketchup தொட்டு கொள்பவரா?

சாக்லேட், பிஸ்கட், Candy சாப்பிடுபவரா?

பீர் குடிப்பவரா?

விக்ஸ், இருமல் டானிக் எடுத்து கொள்பவரா?

சாலட் சாப்பிடும் போது சாலட் டிரெஸ்ஸிங் போட்டுகொள்பவரா?

Pizza சாப்பிடுபவரா?

பிரட் சாப்பிடுபவரா?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் அளித்திருந்தால் நீங்கள் சோளத்திலிருந்து எடுக்கப்படும் சோள சர்க்கரை - High Fructose Corn Syrup (HFCS) என்ற சுவையூட்டியை தினமும் உண்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த சர்க்கரை அதிக ஆபத்தானது. தற்போதைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தால் இந்த சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்கிறார்கள். இதுகுறித்து இளைம் தலைமுறையினருக்கு பெற்றோருக்கும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

சோளத்தில் உள்ள கார்போஹைடேரேட் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு fructose எனப்படும் சர்க்கரையாக மாற்றபடுகிறது. இந்த fructose, corn syrup (100% glucose) உடன் மேலும் சுவையூட்ட சேர்க்கபடுகிறது.
சோளத்தின் விலை கரும்பின் விலையை விட மலிவாதலால் இந்த HFCS மேற்குறிப்பட்ட எல்லா உணவு பொருள்களிலும் சர்க்கரைக்கு பதில் அமெரிக்காவில் முதலில் சேர்க்கபட்டது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் அதிக அளவு இது சேர்க்கப்பட்டு வருகிறது.

சரி, இது நல்ல விஷயம் தானே என்று நினைத்தால், இல்லை!

கரும்பு சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவை விட இந்த சோள சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவு அதிகம் என்பதால், அதில் தயாரித்த உணவை செரிக்க நம்முடைய உடல் அதிக அளவில் இன்சுலின் தயாரிக்க வேண்டி வரும். முடிவு சர்க்கரை வியாதி.

இந்தியாவில் தற்போது இருக்கும் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக புள்ளியியல் தெரிவிக்கிறது. இதிலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமான இந்த சோள சர்க்கரை உணவுகள் கொண்ட பொருள்களை உண்ண ஆரம்பித்தால் இந்தியாவில் அனைவரும் வெகு விரைவில் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஆகி விடுவோம்.

இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

முடிந்த அளவு HFCS உள்ள பொருள்களை உண்ணாமல் தவிர்க்கலாம்.

கடைகளில் பொருள்களை வாங்கும் போது லேபிள்களை படித்து, அதில் HFCS என்ற பொருள் இருக்கிறதா? என்று பரிசோதித்த பின் வாங்கலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தால் உண்ண நேர்ந்தால் அளவாக உண்ணலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

நமது பாரம்பரிய உணவு முறையில் அதிகம் உபயோகபடுத்தபடும் கரும்பு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனை வெல்லம் போன்றவை இயற்கையானவை. எந்த வேதியியல் மாற்றத்துக்கும் உட்படுத்தபடாதவை ஆகையால் முடிந்த அளவு இயற்கையான இனிப்பை குறித்த அளவு உண்ணுவோம் உடல் நலம் காப்போம்.

*