Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, April 28, 2019

குழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது?

முதலில் சில கேள்விகள்?

1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு?

  •  US 
  • இந்தியா 
  • உக்ரேன் 


2. சிறு பெண், ஆண்  குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகிறார்கள்?


  • பாலியல் தொழிலுக்காக 
  • பிச்சை எடுக்க 
  • அடிமை தொழில் செய்ய 
3. எந்த நாட்டில் 7 இல் 1 காணாமல் போகும் பெண் குழந்தைகள் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்?

  • US 
  • கனடா 
  • இந்தியா 

1.  முதல் கேள்விக்கு விடை. எந்த நாடும் மனித கடத்தலில் இருந்து பாதுகாப்பானது கிடையாது. எல்லா நாடுகளிலும் மனித கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.

2. இரண்டாவது கேள்விக்கு விடை நாடு விட்டு நாடு மாறும். உதாரணமாக, பெண் குழந்தைகள் கடத்தப்படுவது முக்கால் வாசி நேரம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த என்றாலும், கம்போடியா போன்ற நாடுகளில் ஆண் குழந்தைகளும் பாலியல் தொழிலில்  சித்திரவதை செய்து ஈடுபட வற்புறுத்த படுத்துகிறார்கள். கம்போடியா பெண் குழந்தைகள் சீனாவில் கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்.


3. மூன்றாவது கேள்விக்கு விடை, US. USA வில்  காணாமல் போகும் 7 இல் 1 பெண் குழந்தைகள்/பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.




மனதை வருத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், இது போன்ற கடத்தல்களும், அதற்கு துணை போகும் மக்கள் யார் என்று பார்த்தால், கடத்த பட்ட குழந்தைக்கு மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் அல்லது கணவன்/காதலன். இது உலகம் முழுக்க இருக்கும் நிகழ்வு. ஒரு சில ஹாட் ஸ்பாட்ஸ் இந்த நிகழ்வுக்கு உண்டு. அந்த ஹாட் ஸ்பாட்ஸ் நாடுகளில் இருந்தும் எல்லா நாட்டு பெண்கள்/குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.

உதாரணமாக "மத்திய கிழக்கு நாடுகள்", "மேற்கு ஐரோப்பா நாடுகள்", மற்றும் "வட அமெரிக்கா" இவை மூன்றும் ஹாட் ஸ்பாட்ஸ். இந்த ஹாட் ஸ்பாட்ஸ் களுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்/பெண்கள்/குழந்தைகள் சப்ளை செய்ய படுவார்கள்.



*Picture adopted from /www.unodc.org/


மனித கடத்தல் குறித்த போலாரிஸ் வீடியோ இங்கே






"மனித கடத்தலை தடுப்பது எப்படி" என்ற ஒரு "திட்டப்பணி" ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய நேர்ந்தது. அதன் விளைவே இந்த பதிவு.

நன்றி


References:

  1. https://www.unodc.org/documents/human-trafficking/Country_profiles/North_America.pdf
  2. https://www.unodc.org/documents/data-and-analysis/glotip/2016_Global_Report_on_Trafficking_in_Persons.pdf




Sunday, April 7, 2019

மறுபடியும், கேரேமேர் Vs கேரேமேர், 90ml

ஒரு 40 வருடங்களுக்கு முன்பு 1979 இல், ஹாலிவூட்டில் "Kramer Vs Kramer" என்ற அற்புதமான படம். குடும்ப உறவுகளை, ஜெண்டர் பையஸ், அல்லது பாலின பாகுபாடுகள் குறித்து வந்த படம்.
ஆண்கள் பாதுகாப்பாளர்கள், வீட்டுக்கு தேவையானதை சம்பாதிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், தன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள், அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மதியம் உணவு வேளையில் கூட 3 மார்டினி அடிக்கலாம். மாறாக பெண்கள் :வீட்டை,  குழந்தைகளை, குடும்பத்தை, வீட்டு பெரியவர்களை பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும் கவலை குடும்ப பிரச்னை இருந்தாலும் பொறுத்து கொண்டு, தியாக சிகரம் ஆக இருக்க வேண்டும். என்ற ஜெண்டர் பையஸ் இல் இருந்து வெளியே வர துடிக்கிறாள் ஜோயன். தன்னுடைய மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ளாத கணவன், அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட பரிமாறி கொள்ளாத கணவன் டெட்.

ஒரு நாள் மிக பெரிய ப்ரோமோஷன் கிடைத்ததை பகிர வீட்டுக்கு வரும் டெட் க்கு, தன்னுடைய மனைவி வீட்டை விட்டு செல்ல தயாராக இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அவள் யாருடனும் "ஓடி போக வில்லை", மாறாக தன்னை புரிந்து கொள்ள அறிந்து கொள்ள, தன்னுடைய ஐடென்டிட்டி ஐ தெரிந்து கொள்ள செல்கிறாள்.

தானாக வாழ வேண்டும், தனக்கென்று ஒரு ஐடென்டிட்டி உருவாக்க விழையும் ஒரு பெண்ணின் தேடுதல் அது.  ஜெண்டர் ரோல்ஸ் மாற வேண்டும் என்று 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன படம் அது.







25 வருடங்களுக்கு முன்பு வந்த படம் . "மறுபடியும்"

"கல்யாணம்கிறது ஒரு செக்யூரிட்டி அப்படின்னு கவிதா நினைக்கிறாங்க, ஆனா ஒரு கையெழுத்து போட்டா அது முடிஞ்சிடும்னு அவங்களுக்கு தெரியல"

"மறுபடியும் என்னை கோழை ஆக்கிடாதீங்க. எல்லாத்தையும் உங்க மேல தூக்கி போட்டு ரிலாக்ஸ் ஆகிடுவேன் நான். எனக்கு அது வேண்டாம்."

"மறுபடியும்" படத்தின் அற்புதமான வரிகள்.

"கல்யாணம் என்பது  செக்யூரிட்டி" என்ற பார்வையில் இருந்து ஒரு பெண் விலகி தனி ஆளாக எந்த குடும்ப பெயர், கணவன் பெயர், அப்பா பெயர் இல்லாமல்  சுதந்திரமாக வாழ முடிவெடுத்த ஒரு இடத்தில் முடிந்த படம் அது. அந்த பெண்ணுக்கு வாழ ஒரு பிடிமானம் கொடுத்தது "தத்தெடுத்த அந்த குழந்தை"






"மறுபடியும்" படம் தற்போது வரை கொண்டாட படுகிறது என்றால் அதற்க்கு காரணம், "துளசி" கேரக்டர், ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற தமிழ் சமுதாயம் வரையறுத்த இலக்கணத்தில் இருந்து மாறாமல் அதே சமயம் தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி தேடிய பெண்ணின் கதை என்பதால்.

இன்று வரை, பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் "பெண்ணின் விருப்பம் என்று ஒன்றும் இல்லை", ஆண் தன்னுடைய விருப்பத்தை பெண்ணின் மீதி திணிக்கலாம். பெண்கள் என்பவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும்  என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. உதாரணமாக "ரோஜா", "மௌன ராகம் ".  ஒரு சில படங்களில் மட்டுமே வலுவான பெண் கதாபாத்திரம் இருக்கும். அதுவும் தனக்கென்று முடிவெடுக்க தெரிந்த, அந்த முடிவில் நிலைத்து நின்ற பெண் தமிழ் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சரி ஹாலிவுட்டில் 40 வருடங்களுக்கு முன்பு வந்த kramer vs  kramer போன்ற ஒரு கருத்து உள்ள படம் தற்போது தமிழில் எடுக்கப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள், என்ன எதிர் வினை வரும்? உடனே அந்த பெண்ணின் கேரக்ட்டர் மேல் படுகொலை நடந்து இருக்கும். என்னப்பா படம் எடுக்குறீங்க? எப்படி அந்த பெண் தன்னுடைய விருப்பப்படி முடிவெடுக்க முடியும். இது குடும்பத்துக்கு எதிரானது, கலாச்சார படுகொலை, என்று கத்தி இருப்பார்கள்.

இந்திய திரைப்படங்களை பொறுத்தவரை, ஜெண்டர் பையஸ் என்பது இன்று வரை மிக அதிகமாக விரவி கிடக்கிறது. இந்தியா போன்ற சமூகத்தில், ஒரு பெண் தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை வாழ நினைக்கிறாள் என்பதை காட்சி படுத்த நினைத்த ஒரு படம் 90ML. "My life My rules!", தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி திருமணம் ஆனால் தொலைந்து விடும் என்று நம்பும் ஒரு பெண், திருமணத்தை தவிர்க்கிறாள். தனக்கு பிடித்ததை செய்கிறாள். அது தண்ணி அடிப்பதில் ஆகட்டும், மற்ற வஸ்துகள் உபயோகிப்பதில் ஆகட்டும். இதுவே நம் கலாச்சார காவலர்களுக்கு பெரிய ஷாக் ஆகிறது. எப்படி சமூக சீர்கேட்டை இந்த படம் பரப்புகிறது என்று குய்யோ முறையோ என்று அடித்து கொள்கிறார்கள். அதாவது, இதே போன்ற ஒரு காட்சி 100இல் 99.99 தமிழ் படங்களில் கதாநாயகர்கள் செய்வார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படும். அதே சமயம், பெண்கள் இது போன்று செய்தால் கலாச்சார சீர்கேடாம்.




இன்னும் 40-50 வருடங்கள் பின்தங்கி இருக்கும் தமிழ் திரை உலகில்,  "My life My rules! போன்ற அல்ட்ரா மாடர்ன் கருத்துகளை கொண்டு இருக்கும் இது போன்ற படங்களை ஓட ஓட விரட்டியே தீர்வார்கள். இன்னும் அருக்காணி போல, "மாமா" என்று கதாநாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் லூசு காதலி, அல்லது, தியாகசிகரம் மனைவி மட்டுமே இவர்கள் தேவை.  இந்திய சமூகத்தில், பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அதனை நீங்கள் சிறிதளவு தாண்டினாலும், நீங்கள் கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்ஆக்கப்படும் .

இன்னும் மனதளவில் வளராத ஒரு சமூகத்தின் முன்பு, இது போன்ற கருத்துகள் கொண்ட படங்கள் தேவை இல்லை. ஏனெனில் புரிந்து கொள்ள படாது என்பது என் எண்ணம்.


டிஸ்கி 
இது என்னுடைய கருத்துகள் மட்டுமே. இது தமிழ் கலாச்சார சீர்கேட்டை ஆதரிப்பதாக படிப்பவர்களுக்கு தோன்றினால் அது என் பொறுப்பு அல்ல.






Sunday, March 24, 2019

கார் சேல்ஸ் ம், ஆண் உரிமையும், லிடியனும்!!

ரொம்ப நாள் கழிச்சு வலைப்பக்கம், ரொம்ப சந்தோசமா இருக்கு. அது என்னவோ தெரியல நிறய எழுதணும்னு நினைக்கும் போது நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் நேரம் இருக்கும் போது, ஒரு கோர்வையா எண்ணங்கள் வந்து விழ மாட்டேன்கிறது. என்ன ஆனாலும் சரி எதையாவது கிறுக்கணும்னு முடிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.

செய்தி 1:

இப்போ எல்லாம் லண்டன் ல அல்லது UK ல இருக்கறவங்க எல்லாம் கார் வாங்குறது குறைஞ்சிருக்காம். ஒரு சில பிரெக்ஸிட்  னால  என்றாலும், சிலர்,  உபெர், லிப்ட் போன்ற செயலிகள் வந்ததன் தாக்கம் என்கிறார்கள்.  உபாயம் "தி கார்டியன்" , "பிபிசி" https://www.theguardian.com/business/2018/oct/04/bumper-to-slumper-new-emissions-tests-choke-uk-car-sales
https://www.bbc.com/news/business-47291627


கார் வாங்காம பப்லிக் ட்ராஸ்போர்ட், உபேர்  போன்ற வாகனங்களில் செல்வதில் என்னை பொறுத்தவரை நிறைய வசதிகள். டிராபிக் இல், எப்போ முன்னால இருக்கிற கார் போகும் நாம போகணும்னுகிற பிரச்னை இல்லை. ட்ரெயின் அல்லது பஸ் பிடிச்சோமா ஆபீஸ் போய் சேர்ந்தோமானு இருக்கு. இது போன்ற பப்லிக் ட்ரஸ்போர்ட் க்கு அல்லது HOV எனப்படும் நிறைய மக்கள் செல்லும் வண்டிகளுக்கு  என்று ஹை வே யில் தனி லேன்/பாதை உண்டு என்பதால், டிராபிக் இல் நிற்க வேண்டி இருப்பதில்லை. அது தவிர, கார் இன்சூரன்ஸ், பராமரிப்பு செலவு, பெட்ரோல் செலவு என்று அனைத்தும் மிச்சம். பல கம்பெனிகள் பயணப்படி கொடுப்பதால், நாம் ட்ரெயின் அல்லது பஸ்ஸுக்கு செலவுக்கும் பணத்தை திரும்ப ஆஃபிஸில் இருந்து வாங்கி விடலாம், நிம்மதியா ஆபீஸ் போனோமா வந்தோமான்னு இருக்கு. வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செல்ல மட்டுமே கார் என்பது எவ்வளவு சவுகரியமாக இருக்கிறது.

ஒரு இருபது வருடம் ரீவின்ட் செய்து பார்க்கிறேன். அப்போதும் இதே போல பஸ்ஸில் சென்றதுநியாபகம் வருகிறது. அப்போ எல்லாம், "ச்சே, நமக்குன்னு ஒரு கார் இருந்தா எப்படி இருக்கும்!!, இபப்டி கால் கடுக்க பஸ்ஸுக்கு நிக்க வேண்டியதில்லை இல்லை". என்று அலுத்து இருக்கிறேன். எல்லாம் பெர்செப்ஷன். அப்போ வசதின்னு நினைச்சது இப்போ உபத்திரவமா இருக்கு. அப்போ வேணும்னு தோன்றியது இப்போ வேணாமுன்னு தோணுது.


செய்தி 2:

எப்படி எல்லாம் 498A எனப்படும் பெண்களுக்கு ஆதரவான வரதட்சணைகொடுமை சட்டம், தற்போது ஆண்களுக்கு எதிராக பயன்படுத்த படுகிறது என்பது குறித்த ஒரு ஆவண படம் பார்க்க நேர்ந்தது.


தற்போது எல்லாம் கல்யாணம் கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியவில்லை பிரச்னை என்று வந்தால்,  பெண்கள் வசம் கையில் இருப்பது "மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகிறார்கள்" என்ற வழக்கு. உண்மையாகவே வரதட்சணை பிரச்சனையால் கஷ்டப்படும் பெண்களுக்கு ஆதரவாக வடிவமைக்க பட்ட இந்த சட்டம். தற்போது ஆண்களுக்கு எதிராக எப்படி பெண்களால் அல்லது பெண் வீட்டாரால் பயன் படுத்த படுகிறது என்று  இந்த ஆவணப்படம் விளக்குகிறது. இதனையே சார்ந்த "நிஷா சர்மா, வரதட்சணை வழக்கு" அனைவரும் அறிந்திருக்க கூடும்.  எனக்கு தெரிந்தே சில வழக்குகள் இப்படி பெண்கள் சுய நலத்துக்காக  உபயோகித்து ஆண்களை பழி வாங்கிய சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாம், எப்படி பெண்களுக்கு பெண் உரிமை சட்டங்கள் பாதுகாக்க இருக்கிறதோ, அதே போல, ஆண் உரிமை சட்டங்களும் வேண்டுமோ? என்பதை யோசிக்க தூண்டி இருக்கின்றன.


உபாயம்: விக்கி, பிபிசி

https://en.wikipedia.org/wiki/Nisha_Sharma_dowry_case
https://www.bbc.com/news/world-asia-india-40749636



செய்தி 3:

Ambidextrous எனப்படும் இரு கைகளையும் வேறு காரியங்களுக்கு பயன்படுத்த கூடிய திறமை இருக்கும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள்.
 உபாயம் , "தி கார்டியன்", "வெப் எம் டி"

https://www.theguardian.com/education/2010/jan/25/ambidextrous-children-school-languages

https://www.webmd.com/children/news/20100125/ambidextrous-kids-more-likely-to-have-adhd#1

பெரும்பாலானவர்கள் "லிடியன் நாதஸ்வரம்" அவர்களின் "தி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட்" பரிசு வாங்கியதை பார்த்து என்னை போல ஆனந்த பட்டு இருப்பீர்கள். ஆனால், கவனித்து பார்த்தீர்கள் ஆனால், லிடியனின் இன்னொரு திறமை, Ambidexterity, அதாவது அவரின் இரண்டு கைகளும் இரண்டு பியானோவில் இரண்டு வகையான மியூசிக் வாசிக்கும் திறமை.





இது போன்ற இரண்டு கைகளையும் வெவ்வேறு காரியங்களுக்கு பயன்படுத்த பழகியவர்கள், அல்லது பிறவியிலேயே இது போன்ற திறமை கைகொண்டவர்கள் மிக மிக சிறந்த கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி. தலை சிறந்த இசை மேதைகள் அனைவரும் இப்படி இருக்கை பழக்கம் உடையவர்கள். ஏன் , சொல்ல போனால் ஐன்ஸ்டீன் அவர்களுமே, வலது மற்றும் இடது கைகளை ஒரே சமயத்தில் பல நேரத்தில் வேறு வேறு பணி செய்ய பயன்படுத்தினார் என்பது வரலாறு. அதனாலேயே அவர் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், அவுட் ஆப் தி பாக்ஸ் யோசித்து  "ரிலேட்டிவிட்டி தியரி" கொண்டு வர முடிந்தது.

இப்படி இரண்டு கை பழக்கம் உள்ளவர்கள் பள்ளிகளில், மொழிகளை கற்று கொள்ளுவதில் சிரமப்படுவார்கள் என்கிறது ஆராய்ச்சி. ஆனால், அவர்களுக்கு பிடித்த துறையில், பிடித்த விதத்தில் திறமையை ஊக்குவித்ததால் லிடியன் போன்று "இளம் ஜீனியஸ்" ஆகலாம். இவரின் இசை திறமையை ஊக்குவித்த இவரின் பெற்றோருக்கு பாராட்டுக்கள். படிப்பு மட்டும் உலகம் என்று எண்ணாமல், உள் திறமையை கண்டு ஊக்குவித்ததற்கு.

வாழ்த்துக்கள் லிடியன்.

நன்றி.





Sunday, November 11, 2018

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 ஒருவரிடம் ஒரு 6-15 நிமிஷம் எதுவும் செய்யாம ஒரு ரூமுக்குள்ள சும்மா இருக்க முடியுமா? எதுவும் செய்ய கூடாது. நோ போன் பாக்குறது, நோ புக் படிக்கிறது, நோ டிவி, நோ கேம்ஸ், தூங்க கூடாது. உக்கார்ந்த இடத்தை விட்டு நகர கூடாது,  நீங்களும் உங்கள் எண்ணங்கள் மட்டுமே. இப்படி ஒரு ஆய்வு 11 வெவ்வேறு இடங்களில்நடத்தப்பட்டது. என்ன முடிவு வந்திருக்கும்? சயின்ஸ்ஆய்விதழில் கட்டுரை ஒன்று பார்க்க நேர்ந்தது.

 இந்த ஆய்வு நேரத்துக்கு பிறகு வெளியே வரும் ஆட்களிடம் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?  என்று கேட்ட கேள்விக்கு, "ஒரே கொடுமையாக இருந்தது" என்றே பலரின் அனுபவம்.
சரி உங்களுக்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை, உங்களுக்கு ஒரு தூண்டல் தருகிறோம், அது மைல்டு எலக்ட்ரிக் ஷாக்.  தற்போது, நீங்கள் சும்மா இருப்பதை தேர்ந்தெடுப்பீர்களா?, அல்லது எலக்ட்ரிக் ஷாக் கை தேர்ந்தெடுப்பீர்களா? என்று கேட்டால் 67% ஆண்கள், என்னால சும்மா இருக்க முடியாது? எலக்ட்ரிக் ஷாக் கொடுங்க? என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால் 25% பெண்கள் அதனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 


ஏன் சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டம்? சும்மா இருக்கும் போது, தனக்கு உள்நோக்கி, தன்னுடைய குறைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை சுழற்சியில் மாட்டி கொள்கிறார்கள். அதனால் எப்படியாவது அந்த சுய சிந்தனையில் இருந்து தப்பிக்க வேறேதாவது ஒரு வெளி தூண்டல் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.


இதனுடன் தொடர்புடைய டெலிகிராப் செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது. அது எப்படி தற்போதைய தலைமுறை (16-24 வயதுக்கு உட்பட்டவர்கள்) வாரத்தில் 34.3 மணி நேரம் நேரம் போக்குவதற்காக இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இது 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது விட 2 மடங்கு அதிகம். இந்தியாவும் இந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல, இந்தியர்கள் தினசரி 3 மணி நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

சும்மா இல்லாமல் இருக்க டைம் பாஸுக்காக எந்த எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள், அது நெகடிவ் விஷயம் ஆக கூட இருக்கலாம்.


இந்த கட்டுரை படித்த பிறகு எனக்கு வடிவேலுவின் "சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்ற காமெடி நினைவுக்கு வந்தது.





References

1. Just think: The challenges of the disengaged mind


2. https://www.telegraph.co.uk/news/2018/08/01/decade-smartphones-now-spend-entire-day-every-week-online/

3. https://economictimes.indiatimes.com/magazines/panache/indians-spend-roughly-3-hours-a-day-on-smartphones-but-are-they-paying-big-bucks-for-apps/articleshow/62866875.cms

Sunday, November 4, 2018

பழைய ரூபாய் நோட்டும், பரியேறும் பெருமாளும், ஹிந்தியும்!!


சோசியல் மீடியா வந்தாலும் வந்தது, அதில் எந்த வித பில்டரும் இல்லாமல் வந்ததை எல்லாம் சொல்லும், அடித்து சத்தியம் செய்யும், மற்றவர்களை பேச விடாமல், தான் பேசுவது மட்டுமே சரி என்று விவாதிக்கும் சிலரும் இருக்க தானே செய்கிறார்கள். அப்படி ஒரு குரூப்பிடம் மாட்டி கொண்ட என்னுடைய அனுபவம் இங்கே.

அது 1930 களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு குறித்தது.( அது உண்மையான நோட்டா, இல்லையா என்று தெரியவில்லை). அதனை ஒரு தோழி ஷேர் செய்து, பாருங்கள் இதில் "இந்தி இல்லை", என்று அவள் குறிப்பிட்டு விட்டாள். உடனே இன்னொரு தோழி, வரிந்து கட்டி கொண்டு. அதெல்லாம் உண்மை இல்லை, நோட்டின் அடுத்த பக்கத்தை பார்க்கவும். இந்தி எல்லாவற்றிலும் இருக்கும். "இந்த நோட்டு போலி", என்று விவாதம் மேல் விவாதம். அதோடு நின்று கொள்ளாமல், "இந்தி கற்று கொள்ளாததால் நாம் இழந்தது நிறைய" என்றுஅவள் சொல்ல  "இந்தி ஆதரிப்பு  பிரச்சாரமாக" ஆகி விட்டு இருந்தது.

 அவளிடம் உரையாடிய பிறகு பல சந்தேகங்கள். "ஒரு சிலரிடம் தர்க்கம் செய்வது என்பது ஏன் முடியாமல் போகிறது?, எப்படி விடாமல் தான் சொல்வது சரி என்று வாதிக்கிறார்கள். அடுத்தவர்களை பேச விடாமல், அவர்கள் எந்த விடயம் பேச ஆரம்பித்தாலும் அதற்கென்று ஒரு எதிர் பாயிண்டு எப்படி தயாரித்து பேச முடிகிறது.?"




மேலும், இந்த பிரச்னை கட்டாயம் பல இடங்களில் பேச/விவாதிக்க பட்டு இருக்கும், என்பதால், இது சரியா தவறா என்ற விவாதிக்க நான் வரவில்லை. ஆனால், உண்மையில் ஹிந்தி கற்று கொள்ளாததால், நாம் நிறைய இழந்தோமா?

இங்கு வந்த பிறகு, ஆபிசில் நிறைய இந்தியர்கள் இருப்பின், எந்த மாநில மக்களாயினும் சரி, இந்தியில் பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதே நேரம், தமிழ் பேசும் மக்கள், எனக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இந்தி படிக்காததால்  எந்த பிரச்னையும் அவர்கள் அனுபவித்ததாக தெரியவில்லை. ஒரு வேலை இந்தியாவில் இருப்பவர்கள் இந்தி படிக்காததால் பிரச்சனைகள் அனுபவிக்கிறார்களா?. எனக்கு தெரிந்து IT  வேளைகளில் இருக்கும் பலரும், பெங்களூரு, ஹைதெராபாத், சென்னை, புனே போன்றஊர்களில் வசிக்கும்போது   ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பதை பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் பாஷையிலும் பேசி சமாளிப்பதற்கு பார்த்திருக்கிறேன். அதனால், தெரியாமல் கேட்கிறேன்,  ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லை இது பிரச்சாரமா?


தற்போது, இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல முகத்தில் அறைந்த படம் பார்த்த திருப்தி.  இப்போயெல்லாம் எங்கப்பா சாதி பாக்குறாங்க/ என்று சொல்லி திரியும் சிலரின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில், "பரியேறும் பெருமாள்", உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட உண்மை விளக்கம்.

 நான் முதுநிலை படித்த கல்லூரியில் எப்போதும் விரிவுரையாளர்கள், பையன்கள் முதுகில் நன்கு தட்டி கொடுப்பார்கள். முன்பு எனக்கு அதன் அர்த்தம் புரியாது. ஆனால், பிறகு மற்றவர்கள் சொல்ல அறிந்து கொண்டது. அவர்கள், தட்டி கொடுப்பது போன்று எதனை தேடுகிறார்கள், என்பது, அதே போல, இளங்கலை படித்த போது, என்னுடன் படித்த சில பெண்கள், எப்படி ஒரு சில பெண்களிடம் நடந்து கொண்டார்கள்?, என்பதையும் அறிந்து இருந்தேன்.  அவர்களிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்அல்லது எதோ சொல்லி பாலிஷ் ஆக தவிர்ப்பார்கள்.

எனக்கென்னவோ, இந்த படம் பார்த்த பிறகு, சில எண்ணங்கள். அந்த "பரியனின்" இடத்தில் ஒரு பெண் இருந்திருப்பின் எவ்வாறு இருந்திருக்கும்?. ஒரு ஏழை பெண், கீழ் சாதியாய்இருப்பின்,  ஆங்கிலம் தெரியாமல், மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளமுடியாமல், அந்த பெண்ணின் பொருளாதார மற்றும் சாதிய நிலையை குத்தி காட்டி காட்டியே, அவளை முழுதாக கொன்றிருப்பார்கள். ஏதேனும் மேல் சாதி பையனிடம் அந்த பெண் பழகியிருக்கிறார் என்றால், அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்திருக்க மாட்டார்கள். மாறாக, அவளின் மானத்தை எடுத்து அப்போதே பிணமாக்கி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.  

இங்கே சாதி என்ற குறியீட்டை கூட எடுத்து விடுவோம். ஒரு ஏழை பெண், கிராமத்தில் வாழும், ஒரு பெண் படிக்கிறாள். படிக்க விரும்புகிறாள், என்று வைத்து கொள்ளுவோம்.  ஆங்கில அறிவு கொஞ்சம் மட்டுமே இருக்கும். மார்க்கும் நிறைய எடுக்கவில்லை அல்லது 10 ஆம் வகுப்பில் பெயில் என்றால் அவ்வளவு தான், படிப்பு வரல என்று கல்யாணம் செய்து வைத்து இருப்பார்கள்.  திரும்ப படிக்க வைப்பதோ அல்லது டுடோரியல் சேர்த்து படிக்கவைத்து பாஸ் செய்வதோ பெரிய விஷயமாகி இருக்கும். அப்படியே படிக்க வைத்த பெற்றோர் இருப்பினும். கல்லூரி வரை அந்த பெண் சென்றிருந்தால் பெரிய விஷயம். "பொம்பள புள்ளைய எதுக்கு படிக்க வச்சிட்டு, பேசாம கல்லாணம் பண்ணி வையுங்க", என்று பலரும் பரிந்துரைத்து இருப்பார்கள். திரும்ப படிக்க வைப்பது போன்ற சலுகை எல்லாமே பையனுங்களுக்கு தான்.

இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும். தமிழை தவிர பிற மொழியான ஆங்கிலமே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரு பப்லிக் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுக்க யாருப்பா இருப்பாங்க. அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம்  பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. 

சரி, கிராம பிள்ளைகளை விட்டுடுவோம். பல நகரங்களில் தற்போது பிள்ளைகள் ஹிந்தி கற்று கொள்கிறார்கள். சொல்ல போனால், தமிழை கற்று கொள்வதே இல்லை. மார்க்குக்காக, ஹிந்தி, சமஸ்க்ருதம், பிரெஞ்சு. ஜெர்மன், ஆங்கிலம் போன்றவற்றை மற்றும் கற்றுக்கொள்கிறார்கள்.  அதுவும் மிக மிக தொடக்க நிலை மொழி அறிவு மட்டுமே இவர்கள் அறிந்துஇருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?. இவர்களால் கோர்வையாக ஹிந்தியில் பேச முடியுமா?, அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் தான் பேச முடியுமா?. ஒன்றும் இல்லை. 

அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது.  எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது.

சரி, மறுபடியும், தொடங்கிய கேள்விக்கு வருவோம். 

ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லையா?

வாசிப்புக்கு நன்றி.



Sunday, September 9, 2018

சோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை!

மனநிலை மனோ தத்துவம் இவற்றில் எல்லாம் நான் ரொம்ப கவனம் செலுத்தியதில்லை. ஆனால்,தற்போது நாடாகும் பல  விஷயங்களை படிக்கும் போதும் உற்று நோக்கும் போதும், அவை எவ்வளவு முக்கியமானவை வாழ்வியலுக்கு என்று தெரிகிறது.

மனிதன் ஒரு சமூகம் சார்ந்த குரங்கு. சோசியல் அனிமல். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, என்பது மிக முக்கியம். நமக்கு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது மிக முக்கியம். நான், எனக்காக வாழ்கிறேன், என்று சொல்லி திரிபவர்கள் கூட, எதோ "ஒரு விஷயத்தை" ரிகக்னிஷன்ஐ மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறார்கள்.  இது ஒரு வகை அட்டென்சன் சீக்கிங் அதாவது "கவனத்தை கோருதல்". என்னை பார், எப்படி இருக்கிறேன் பார். என்று காட்டுதல். இது, உடல் அழகில் ஆகட்டும், பணத்தில் ஆகட்டும், பட்டு பீதாம்பரம், விளம்பரம்...என்று பல பல வழிகளில் கையாள படுகிறது.


இதெல்லாம் தற்போதைய கலாச்சாரம், முன்பெல்லாம் இப்படி ஏதும் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு, முன்பும், இவை போன்ற அட்டென்ஷன் சீக்கிங் இருந்திருக்கிறது..ஆனால் வேறு மாதிரி. உதாரணமாக, என்னுடைய பாட்டி காலத்திய கதையாக, மாதம் ஒரு புடவை எடுப்பது, உடனே அதனை கோவில், விசேஷங்கள், கல்யாணம் என்று கட்டி கொண்டு போவது..இவை எல்லாம் சாதாரணம். எனக்கு தெரிந்தே, எங்கள் பக்கத்து வீட்டு பணக்கார அம்மா,  எப்பொழுது நகை வாங்கினாலும், கொண்டு வந்து எல்லோரிடமும் காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது ஒரு வகையான "அட்டென்சன் சீக்கிங்". பார் நான் உங்களை விட எவ்வளவு நகை வைத்திருக்கிறேன் பார் என்று காட்டுவதற்காக.

தற்போது சோசியல் மீடியா வந்த பிறகு, இப்படியான கவனம் கோருதல் அதிகமாகி இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். விளையாட்டாக சோசியல் மீடியாவுக்குள் வரும் பலரும், தொடக்கத்தில் எந்த புகை படங்களும் பகிராமல் இருந்தாலும், காலம் செல்ல செல்ல அடுத்தவர்கள், நண்பர்கள் பகிரும் போது அதனால் ஈர்க்கப்பட்டு மெதுவாக பகிர ஆரம்பிக்கிறார்கள். ஆனால்,  மெதுவாக, மெதுவாக, புகைப்படம் பகிர என்றே மேக்கப் செய்துகொள்வது, புது உடை உடுத்துவது, என்ன கன்டென்ட் கொடுக்கலாம், என்று  அதே வேலையாக திரிவது என்று தன்னை அடிமையாக்கி கொள்கிறார்கள்.

ஆனால், இப்படி விளையாட்டாக ஆரம்பிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல, சந்தோசத்தை தருவதை விட, டிப்ரெஷன்/மன அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறது என்று நான்  வாசித்த சில ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 

சோசியல் மீடியாவில் படங்களை பகிரும் பலரும், தம்முடைய புது உடை, கார், நகை, என்று பகிர்வது மட்டும் அல்லாமல், என்னுடைய கணவர். காதலர் வாங்கி கொடுத்தது என்று பகிர்வது தற்போது சகஜம். சொல்ல போனால், வீட்டில் நடக்குமா தெரியாது ஆனால் சோசியல் மீடியாவில் காதல் செய்யும், அன்பை பகிரும் கணவன், மனைவி அதிகம். இது ஒரு வித அட்டென்ஷன் சீக்கிங். "பாரு!! நான் உன்னை விட பெரிய பரிசு காதலர் தினத்துக்கு/கல்யாண நாளுக்கு  வாங்கியிருக்கேன், என் கணவர் தான் பெஸ்ட்" என்று பெருமை சாற்றிக்கொள்ளும் பலரும், அடுத்தவர்களுக்கு ஒருவித டிப்ரெஷன் ஏற்படுத்துகிறார்கள், என்பதே உண்மை.  பொது வெளியில், இப்படி பகிரப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பி, "நம்ம வீட்டுகாரர்க்கு நம்ம மேல பாசம், அன்பு இல்லை" என்று மனஅழுத்தத்துக்கு உண்டாகும் நிலை பல பெண்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட பெண்களின் மனநிலையை சாதகமாக்கி கொள்ளும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறிக்கோள், இப்படிப்பட்ட பெண்களிடம், பேசி பேசி, அன்பை காட்டுவது போல நடிப்பது அல்லது அந்த பெண்ணை அவள் அழகை, அவள் செயலை புகழ்வது. அதுவும் பப்லிக் ஆக சோசியல் மீடியாவில் புகழும் போது அதனை தனக்கு கிடைத்த ரெகக்னிஷன்/அங்கீகாரமாக பெண்கள் நினைத்து கொள்வது மட்டும் அல்லாமல், தன்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வாக நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இது, அவர்களின், ப்ளஷர் ஹார்மோன் ஆன, செரோட்டின், டோபோமின் போன்றவற்றை தூண்டி, ஒரு கனவுலகில் அவர்கள் வாழ தூண்டுகிறது. 

இதுவே, "குன்றத்தூர் அபிராமி போன்றவர்களை" கனவுலக வாழ்க்கை வாழ தூண்டி இருக்க வேண்டும். சோசியல் மீடியா அடிக்சன், அதனால் நிகழ்ந்த மனஅழுத்தம், அந்த நேரம் தன் அழகை பற்றி கிடைத்த "ரெகக்னிஷன்" , அதனை தடுக்க முனைந்த பெற்றோர், குடும்பம் மற்றும் கணவர், குழந்தைகள் அனைவரும், எதிரி போல கருதப்பட்டு இருக்கிறார்கள். இது போதை மருந்து/மதுவுக்கு அடிமையானவர்களை திருத்த போதை மருந்து தராமல், அல்லது மது தராமல் தடுக்கும் போது அவர்கள் செய்யும் எதிர்வினைக்கு சமமானது. போதையை அடைய எந்த தவறும் செய்ய தயாராக இருப்பார்கள், போதைக்கு அடிமையானவர்கள். அதே நிலையை "அபிராமி" அடைந்து இருக்கிறார்.

இப்படி ப்ளஷர் ஹார்மோன் வசப்பட்டவர்கள், எப்போதும் ஒரு வித பதட்டம், தூண்டல் கொண்டிருப்பார்கள். சோசியல் மீடியாவில் ஏதாவது கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று எந்த லெவல்க்கும் செல்ல தயாராக இருப்பார்கள். சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை
"அதிகம் பிகினி உடைகளை சோசியல் மீடியாவில் பகிரும் பெண்கள், அப்படி பகிர்வதன் மூலம், தான்  பொருளாதார அளவில் மற்ற பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று பறை சாட்டவே செய்கிறார்கள்" என்று தெரிவிக்கிறது.

சோசியல் மீடியாவில் அதிகம் படங்களை பகிரும் பெண்கள் வசிக்கும் இடங்களில் அதிக பியூட்டி பார்லர்கள், ஹேர் சலூன்கள், மேக் அப் ஐட்டம் விற்கும் கடைகள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கிளினிக் க்குகள் இருப்பதாத தெரிவிக்கிறது. அது மட்டும் அல்ல அந்த இடங்களில் எல்லாம் குடும்ப பொருளாதார வித்தியாசம் அதிகம் இருப்பதாக காட்டுகிறது.  அதாவது, பொருளாதார நிலையில் அதிக வித்தியாசம் இருக்கும் நிலையில், பெண்கள், தன்னுடைய நிலையை போலியாக உயர்த்தி காட்ட/ மற்றவர்களின் கவனத்தை கோர, இப்படி "ஆடைகுறைப்பு/பிகினி உடை/உடல் அழகை அதிகம் காட்டும் உடை " போன்றவற்றை உடுத்துகிறார்கள் என்று தெரிவிக்கிறது.


எப்படி, சோசியல் மீடியா, பொருளாதாரத்தை பாதிக்கிறது, மனித மனநிலைகளை நெகடிவ் ஆக பாதிக்கிறது, அடுத்தவர் நல்லா இருக்கிறார், நாம நல்லா இல்லை, என்பதனை போன்ற போலி பிம்பத்தை உண்டாக்கி மக்களை குற்றங்கள்  புரிய தூண்டுகிறது என்பதனை படிக்கும் பலரும்  , "ஏன் இந்த கருமத்தை மக்கள் உபயோகிக்கிறார்கள் பேசாம தூக்கி போட்டுட்டு இருக்கலாமே!, " என்று அறிவுரை கூறுவதை பார்க்கலாம். இது காலத்தின் கட்டாயம். மனிதன் ஒரு சோசியல் அனிமல். ஏதாவது ஒரு வகையில் அவனுக்கு ஒரு அவுட்லெட் வேணும்.  உபயோகிக்காமல் இருக்க முடியாது. ஆனால், அதற்க்கு அடிக்சன் ஆகாமல் இருப்பது எப்படி, எப்பொழுது நிறுத்துவது என்று அறிந்து தானே மேனேஜ் செய்தாலே போதும். ஒரு செல்ப் கண்ட்ரோல் வேணும். அப்படி சோசியல் மீடியா அடிக்ட் ஆனவர்களையும், குடும்ப கவுரவம், அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று திரும்ப அதே நிலையில் அழுத்தாமல், மீட்பு நடவடிக்கை, கவுன்சிலிங்  என்று கொடுக்கலாம். இப்படி புரிந்து கொண்டு அனுசரித்து நடப்பதே அவர்களை வெளியே கொண்டு வரும். பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பது என் எண்ணம்.



நன்றி.



References
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/da.22466
https://www.ama.org/publications/MarketingNews/Pages/feeding-the-addiction.aspx
http://www.pnas.org/content/early/2018/08/13/1812331115?etoc=&utm_source=TrendMD&utm_medium=cpc&utm_campaign=Proc_Natl_Acad_Sci_U_S_A_TrendMD_0








Sunday, April 29, 2018

அறையில் இருக்கும் யானைகள்!!

ஆங்கிலத்தில் "An elephant in the room" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கும் தெரியும் ஒரு பிரச்னை இருக்கிறது என்று, ஆனாலும் அந்த பிரச்னை இருப்பதை குறித்து பேசவோ, எழுதவோ, விவாதிக்கவோ நாம் விரும்பாத போது, அந்த பிரச்னையை "அறையில் இருக்கும் யானை" என்று குறிப்பிடலாம்.

நாம் அனைவருக்கும் தெரியும், அந்த யானை அறையில் இருக்கிறது என்று, ஆனாலும் நாமெல்லாம் அதனை பார்ப்பதில்லை அல்லது பார்த்தும் பார்க்காமல் இருக்க நினைக்கிறோம். நான் இப்போது சொல்ல வருகிற விஷயமும் அது போல சில  "அறையில் இருக்கும் யானை" தான்.

1. அறையில் இருக்கும் முதல் யானை 

என் கல்லூரி தோழிகள் குழுமத்தில் அடிக்கடி நான் கேட்கும் ஒன்று. இந்தியா மட்டும் தான் உலகில் இருக்கும் "மத சார்பற்ற ஒன்று", "வேற்றுமையில் ஒற்றுமை",  நம் அண்டைய நாடுகளை பாருங்கள், அவர்களை விட நாம் தான் மற்ற எல்லா விதத்திலும் உயர்ந்து இருக்கிறோம், நம்மை யாரும் பிரிக்க முடியாது.. இத்தியாதி இத்தியாதி..அதுவும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் இந்த சத்தம் பெரிதாக ஓங்கி ஒலிக்கும்.

இதுதான், என்னுடைய  முதல் "அறையில் இருக்கும் யானை" . நாம் எல்லோருக்கும் தெரியும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை விட்டு வெளியே வந்தாலும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று.  ஏன், ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. இந்திய சாதி பிரிவுகள் இங்கேயும் இருக்கின்றன. இவை ஏன், தமிழ் நாட்டில் வசித்து, அங்கிருந்து சாதியை இங்கே கொண்டு வந்து, தன் சாதியை சேர்ந்த மக்களாக மட்டும் அழைத்து தீபாவளி பொங்கல் என்று விழா கொண்டாடும் மக்களும் இங்கே இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தே, அப்படி "ஒரு பொங்கல் விழா" நடந்தேறியது. அந்த விழாவில் வேறு எந்த சாதிக்கும் அனுமதி இல்லை.


photo from google image

தற்போது இளைஞர்களை கூட தன்னுடைய ஜாதியை (அது உயர்ந்த சாதியாக இருக்கும் பட்சத்தில்) அதனை தன்னுடைய பெயருக்கு பின்னர் பெருமையாக இட்டு கொள்கிறார்கள். அதில் ஒரு பெருமை.

இந்த அறையில் இருக்கும் யானையில், என்னுடைய ஒரே நம்பிக்கை/எதிர்பார்ப்பு, நமக்கு அடுத்த தலைமுறை, இதனை தொடர கூடாது என்பதே. ஆனாலும், நம்முடைய "கலாச்சாரத்தை ஊட்டுகிறேன்" பேர்வழி என்று, கலாச்சாரத்தோடு, "சாதியையும்", சேர்த்து ஊட்டுபவர்களே  இங்கு அதிகம். இங்கே இந்த நிலை என்றால் இந்தியாவில் கேட்கவே வேண்டாம்.

2. அறையில் இருக்கும் இரண்டாம் யானை 

இந்த யானையும் முதல் யானையோடு சம்மந்த பட்டது தான் என்றாலும், இது கொஞ்சம் வேறானதும் ஆகும்.  முதல் யானை சாதி மதத்தை  பற்றியது என்றால், இரண்டாவது யானை சாதி மாறி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை குறித்தது.

என்னுடைய கல்லூரி தோழிகள் குழுமத்தில் எல்லா மத நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள், இப்படி "இந்தியா தான் சிறந்தது, வேற்றுமையில் ஒற்றுமை, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், இந்த அரசியல்வாதிகள் தான் மக்களை பிரிக்கிறார்கள்" என்ற வாக்கியங்களை கேட்க்கும் போது எல்லாம் நான் கேட்க்கும் ஒரு கேள்வி இது தான். சரி, நீங்கள் சொல்வது, "நன்று," "உங்கள் பெண் அல்லது பையன், மற்ற சாதி/மதம் சேர்ந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் வந்து கேட்கிறார் என்றால், நீங்கள் சம்மதிப்பீர்களா?" திருமணம் முடித்து வைப்பீர்களா?" இப்படி நான் கேட்டவுடன் "ஜகா" வாங்குபவர்களே அதிகம்.

உங்களால் ஒரு சொல்லுக்கு கூட, "ஆமாம் நான் சம்மதிப்பேன்" என்று சொல்ல முடியவில்லையே, பின்னர் எதற்கு இந்த வீண் பேச்சு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூச்சல்.

3. அறையில் இருக்கும் மூன்றாவது யானை 

இது ஒரு விதத்தில் நான்   முன்பு சொன்ன விஷயத்துக்கும் தொடர்புடையது. "இந்திய கலாச்சாரம்தான் சிறந்தது", என்று நடக்கும் கூச்சல்.  

40 வயதை கடந்தாலே, நம் மக்களுக்கு ஒரு வித மனப்பான்மை வந்து விடுகிறது என்று கொள்ளலாம். "நமக்கு" என்ற சுயம் இல்லாமல் "போய்" அனைத்த்தும் குடும்பத்துக்கு என்று வாழ்வது என்றாகி விட்ட போது, "தான் யார் " என்று தேடும் "ஐடென்டிட்டி கிரைசிஸ்" வந்து விடுகிறது.  இது உண்மை, எல்லோருக்கும் நடக்கும், ஆண் பெண் வித்தியாசம் இன்றி, இதையே "மிட் லைப் கிரைசிஸ்" என்று அழைப்பார்கள்.  இது "அறையில் இருக்கும் மூன்றாவது யானை", பலரும் எதோ ஒரு வகையில் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள்.

இந்த சூழலில், இன்னொரு காதல் என்று திரும்பும்சிலரும்  இருக்கிறார்கள்.  எந்த பத்திரிக்கை எடுத்தாலும் இதனை போன்ற செய்திகள்இல்லாமல்  இருக்காது. பத்திரிக்கை வாசிப்பவரை பொறுத்தவரை, அது ஒரு கிளுகிளுப்பு செய்தி.  முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த செய்திகள் போய், தற்போது எங்கும் எதிலும் இப்படி நிறைய கேட்க முடிகிறது.


ஆனால், ஜோக் என்னவென்றால், இப்படி பரவலாக நடக்கும் விஷயங்களை மக்கள் "அறையில் இருக்கும் யானையாக" பாவித்து, "நமது கலாச்சாரமே சிறந்தது" நாம் தான் சிறந்தவர்கள் என்று கலாசார காவலர்களாக இருப்பது.

4. அறையில் இருக்கும் கடைசி யானை 


சில வாரங்களுக்கு முன்பு, என்னுடைய முதுநிலை கல்லூரி  குழுமத்தில் இருந்து வந்த ஒரு செய்தி. வயசான பெற்றோர், தன்னுடைய தனிமை குறித்து, தன்னுடைய பிள்ளைகள் குறித்து திட்டி எழுதிய ஒரு மடல், என்று வைத்து கொள்ளலாம். அதனை குறித்த ஒரு விவாதம் எங்கள் குழுமத்தில் நடக்க, அதில்  நான் பாட்டுக்கு சும்மா இல்லாமல், வயதான காலத்தில், எதுக்கு பிள்ளைகளை நம்பி இருக்கணும், காசு இருக்குல்ல, பேசாம, எங்கையாவது டூர் போகலாம், அவங்க பிரெண்ட்ஸ் கூட விளையாடலாம், பேசலாம், படிக்கலாம்".  என்று கூற, பயங்கர விவாதம். "நீ அந்த இடத்தில இருந்து  பார்த்தால் தான் தெரியும், எப்படி கஷ்டம் தெரியுமா? என்று. உங்களை போல வெளிநாட்டுல போய் செட்டில் ஆனவங்கனால தான் பெற்றோர் கஷ்டப்படுறாங்க" என்று என் மேலே திரும்பிய கணைகள்.

அந்த சூழலில் அறையில் இருக்கும் யானை, "எதோ வெளிநாட்டிலோ இருப்பவர்களாலே தான் பெற்றோர் இப்படி கஷ்டப்படுகிறார்கள்  உள்நாட்டில் நாங்கள் எங்கள் பெற்றோரை கண்ணில் வைத்து பார்த்து கொள்ளுகிறோம்" என்று திருப்பும் மக்கள். அதுவும் இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களை தாக்க என்று வெயிட் செய்து கொண்டிருப்பார்கள்.

அதில் என்னுடைய தோழி ஒருவர் சொன்ன சில விஷயங்கள், எங்கள் தரப்பு விவாதம் என்று வைத்து கொள்ள உதவியது.  அவர் சொன்னது இது தான், என்னுடைய பெற்றோரை எங்களுடன் வந்து இருங்கள் என்று அழைத்தாலும் வந்து இருப்பதில்லை, எப்படி "பெண்" வீட்டில் இருப்பது, என்ற ஈகோ வந்து விடுகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எங்களுடன் வந்து தங்க மாட்டார்கள். இன்னும் பெண் வீடு, பையன் வீடு என்று வித்தியாசம் பார்க்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.

இருப்பதை நினைத்து, வைத்து கொண்டு, சந்தோசமாக வாழ்ந்து குறை காலத்தை கழிப்பதே சுகம். என்னுடைய பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா, 75 வயதை கடந்தவர்கள். பிள்ளைகள் அருகில் இல்லை, ஆனாலும் அவ்வளவு ஆக்ட்டிவ். இன்னும் டென்னிஸ் விளையாடுவது, பாட்டி தோட்டவேலை செய்வது, சர்ச்சில் வலண்டீர் பணி செய்வது என்று சந்தோசமாக இருக்கிறார்கள்.

என் அம்மா மருத்துவ செலவு இவ்வளவு ஆகுது.. என்று புலம்பும் போதெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். "செலவு செய்து மருத்துவம் பார்க்கும் அளவு காசு இருக்குல்ல" அதனை நினச்சு சந்தோசமா இருங்க... என்று சொல்வேன். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு."



டிஸ்கி

இங்கே குறிப்பிட்டுள்ளதை எல்லாம் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. யாரையும் எவரையும், எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை. புரிதலுக்கு நன்றி

Saturday, April 21, 2018

கனவு, கவர்ச்சிகன்னிகளும் , Femme Fatale ம்.

Femme Fatale, என்றால் என்ன என்று கூகிளில் தேடவும்: An attractive and seductive woman, especially one who will ultimately bring disaster to a man who become involved with her.

நீங்கள் தமிழில் இதற்க்கு அர்த்தம் தேடினால், விவகாரமான பெண்,  கவர்ச்சியான பெண் என்பது போன்ற அர்த்தங்கள் வருகிறது. ஆனால் இவை இரண்டும் பொருந்தாது என்பது என் எண்ணம். இப்படி பட்ட பெண்கள், கவர்ச்சியாகவும் இருப்பார்கள், கனவு கன்னிகளாகவும் இருப்பார்கள், ஆனால் பயங்கரமான உள்நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தமிழ் சினிமாவில், முதன் முதலில் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட பேசப்பட்டவர் T.R. ராஜகுமாரி என்று சொல்வார்கள். அவரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடலில் "பறக்கும்  முத்தம்" அந்த காலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பார்கள்.  ஒரு seductress அவர். பார்வையில் ஒரு மயக்கம் கிறக்கம் இருக்கும். அந்த கால இளைஞர்களை அவரின் bold மூவ்ஸ் பாடாய் படுத்தியது என்று சொல்லலாம்.  அந்த நாட்களில் பின்னர் எத்தனையோ பேர் வந்தாலும், T.R.ராஜகுமாரி அளவு கவரவில்லை எனலாம். 1940-50 களில் கோடி கட்டி பறந்தவர்.

பின்னர் 60-70 களில் , நிறைய கிளப் டான்சர்ஸ் ரோல்களில் நிறைய பேர் அறை குறை ஆடையுடன் ஆடுவது போல நிறைய பாடல்கள் வந்தாலும், மனதில் நிற்பது போல Femme Fatale ரோல்கள் செய்தவர்கள் என்றால் ஜெயமாலினி, ஹிந்தி நடிகை ஹெலன், அனுராதா என்ற ஒரு சிலர். ஆனாலும், இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர், சில்க். தன்னுடைய கண்ணசைவில், கவர்ச்சியில் 80 களின் இளைஞர், முதல் முதியவர் வரை ஆட்டி படைத்தவர். என்ன படம் என்று நினைவில்லை, ஆனால் ஒரு படத்தில் பாடலின் ஒவ்வொரு பத்தியில் தன்னுடைய ஒவ்வொரு உடையின் லேயர் அவிழ்ப்பார். ரொம்ப பேமஸ் பாடல் அது.

முன்பெல்லாம் இது போன்ற Femme Fatale ரோல் செய்வதற்கு என்று சிலர் இருந்தனர். ஆனால் இப்போது பல ஹீரோயின்களே அந்த ரோல்கள் செய்து விடுகிறார்கள். ஆடை அவிழ்ப்பு மற்றும் அரைகுறை ஆடை, நீச்சல் உடை போன்றவை உடை அணிந்தால் Femme Fatale அல்ல,  

 என்னை பொறுத்தவரை, Femme Fatale ரோல் செய்வதென்றால் உங்கள் மேல் நெகடிவ் இமேஜ் இருக்க வேண்டும். பெண்களுக்கு உங்களை பிடிக்க கூடாது, ஆனால் ஆண்கள் கனவு காண வேண்டும்.  நல்ல அறிவாளியாக இருக்க வேண்டும், எதிராளியை எப்படி கவிழ்க்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அனைத்தையும், அனைவரையும், உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வளைக்க தெரிந்திருக்க வேண்டும். வெரி வெரி  போல்ட். ஜேம்ஸ் பாண்டு படங்களில் எல்லாம் ஒரு Femme Fatale ரோல் கட்டாயம் இருக்கும், இவர்கள் எல்லாருமே டபிள் ஏஜென்ட் ஆக இருப்பார்கள். 

சரி, என்ன திடீரென்று, Femme Fatale பற்றிய ஆராய்ச்சி. உண்மையில் இது Paulo Cohelho வின் "தி ஸ்பை"  படித்த பிறகு ஏற்பட்ட ஆராய்ச்சி.


photos from google images

இந்த நாவலின் கதாபாத்திரம், "மாதா ஹரி"/ "Mata Hari" என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல. உண்மையில் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு Femme Fatale. மிக மிக கவர்ச்சியான, அறிவான, யாரையும் மயக்கக்கூடிய, ஒரு பெண். உண்மையான டபிள் ஏஜென்ட். முதல் உலகப்போரில் டபிள் ஏஜென்ட் ஆக செயல்பட்டவர் என்று பிரெஞ்சு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்.

ஆனால், யார் இந்த மாதா ஹரி. என்று Paulo, அவர் இறக்கும் முன்பு தன்னுடைய வக்கீலுக்கு எழுதிய கடிதங்களை வைத்து விவரிக்கிறார். 

சந்தேகப்படும், அடிக்கும்  கணவனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து, அடிபட்டு சுதந்திரமாய் இருக்க என்று  வீட்டை விட்டு ஓடி வந்த பெண் அவர். சிறு வயதில் கற்ற நடனம் உடன் இருக்க. எப்படியாவது பெரியாளாக வேண்டும் என்று  கையில் ஒருபைசா இல்லாமல் பாரிஸ் நகரம் வந்திறங்கிய "மார்க்ரெட் ஸில்லே".  எப்படி பெரியாளாவது என்று யோசனையில், தன்னுடைய பெயரை "மாதா ஹரி" என்று மாற்றி வைத்து கொண்டு, தான் கீழை நாடுகளில் வாழ்ந்தவர், அங்கிருக்கும் நடனம் பயின்றவர் என்று பரப்பினார். "கீழை நாடுகளில் மக்கள் நடனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால், என்னதான் இந்த பெண் காட்டுகிறார் என்று பார்க்க வந்த கூட்டத்தை, தன்னுடைய வித்தியாசமான அலங்காரம், எஸோட்டிக்மூவ்மெண்ட் என்று தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை, சரியாக பயன்படுத்திய மாதா ஹரி, அதனுடன் நிற்கவில்லை. தன்னுடைய ஷோ ஸ்டாப்பர், மூவ்மெண்ட், ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய ஒவ்வொரு லேயர் துணியை உருவி விடுவது, முடிவில் முக்கால் வாசி ஆடை உருவி ஷோவை முடிப்பது என்று, முடித்து, 1904-5 களில், பாரிஸ் நகரை அலற வைத்தவர்.



photos from google images

 பின்னால் நடராஜர் சிலை இருக்க, அலங்காரங்களும், தோரனைகளும் வேறு மாதிரி இருக்க, இவரின் நடனம், அந்த கால பத்திரிகைகள், பெரியமனிதர்கள், "யார் இவர்", இப்படி ஒரு டான்சர் பார்த்ததில்லை என்று அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின. 

ஆனால், "கவர்ச்சி"  சிறு ஆயுட்காலம் கொண்டது. சில ஆண்டுகளில் வெறுத்து. அதே பத்திரிக்கைகள், இவரை, வேறு மாதிரி விவரிக்க தொடங்க ஆரம்பிக்கும் போது , தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க மறக்க வில்லை மாதா ஹரி. ஒவ்வொரு முறையும், வேறு வேறு கிழக்காசியா நாடுகளின் நடனத்தை புகுத்தி, புதுமை கொண்டுவர மறக்கவில்லை. ஒரு சூழலில், "இவரை யாரும் மதிக்கவில்லை, ஆனால் மறக்கவும் இல்லை". 

படிப்படியாக, பெரிய மனிதர்கள் பலருக்கு இவரின் "சகாயம்" தேவைப்பட. இவரும், அந்த சூழலை நாசுக்காக பயன்படுத்தி, தன்னுடைய அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார். முதல் உலகப்போர் மூண்ட நேரம், பிரான்சும், ஜெர்மனியும், எப்படி போரை கையாள்வது, அடுத்தவர்களை பற்றிய துப்புகளை எப்படி அறிவது என்று ஒற்றர்களை பல திசைகளிலும் அனுப்ப எத்தனித்து கொண்டிருக்க. பல பெரிய மனிதர்களின், சர்கிளில், சுதந்திரமாக வாழ்ந்து வந்திருந்த "மாதா ஹரி"  தயவை "ஜெர்மனி" அடைய ஒற்றர் H21 நியமித்தது. வயதாகிவிட்டது, இன்னும் டான்ஸ் ஆட முடியாது, என்று, இவரே சென்று, "பிரெஞ்சு" போர் அமைச்சரவையில், "இங்கே பாருங்கள், ஜெர்மனி என்னை அவர்களின் தூதரக நியமித்து இருக்கிறது, எனக்கு "ஜெர்மனி" பெரிய மனிதர்களும் பழக்கம். வேண்டும் என்றால், பிரெஞ்சு க்காக நான் ஒற்றரிகிறேன், எனக்கு பணம் கொடுங்கள்" என்று இரண்டு பக்கமும், "டபிள் ஏஜென்ட்" ஆக செயல்பட்டு, ஆனால், ஒரு பக்கமும், பயனுள்ள எந்த தகவலையும் தெரிவிக்காமல் இரண்டு நாட்டிற்கும் "பெப்பே"  காட்டியவர். இரண்டு பக்கமும் எந்த தகவலும் சொல்லாமல் இவர் நழுவி கொண்டிருக்க, இவரை பிரெஞ்சு ஒற்றராக நியமித்த பிரெஞ்சு அதிகாரி, எப்படி ஒரு பெண் தன்னை ஏமாற்றி இருக்கிறார் என்று வெறுப்பாகி, அவரை கர்ணம் வைத்து மாட்டி விட்டிருக்கிறார்"

கடைசியில் பிரெஞ்சு  தூதராகத்தால், சிறை பிடிக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில்  யாராலும், அவர் செய்த எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பலியாடாக இவர் தலை உருண்டிருக்கிறது.

வழக்கமான, Paulo Coelho, புத்தகம் இது இல்லை என்றாலும், அங்கங்கே, சில தத்துவங்களை போலோ,  தூவ தவறவில்லை. போலோ வின் கூற்றுப்படி, "ஆணாதிக்க சமுதாயத்தில், தனக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக   வாழ எத்தனித்த ஒரு பெண்ணின் முடிவு" என்று முடிக்கிறார்.
எது எப்படியோ, என்னை பொறுத்தவரை, "மாதா ஹரி", உண்மையான  Femme Fatale.


நன்றி.

Thursday, March 29, 2018

எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை

ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?

ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும்.  அதே நேரம், அந்த மேனேஜர்க்கு  உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.

ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.

மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

Image from google images

1. இந்த படிநிலையில் முதல் படி," நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்", எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா  செய்திகள்/நிகழ்வுகள் கலவை"

2. இரண்டாவது படி, " நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்".  என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.

3. மூன்றாவது படி, "நம்முடைய கற்பனை கலத்தல்", நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது.  அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.


4. நான்காவது படி," நாம் கலந்த கற்பனை கொண்டு  இது தான்நடந்து கொண்டிருக்கிறது  "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு  பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய  ஊகத்தை வலுப்படுத்துவது.

5. ஐந்தாவது படியில், "நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து  அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது" . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க,  ஏன் இந்தம்மா/அய்யா  மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது

6.  ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது".  அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.

7. ஏழாவது படிநிலை, இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது. அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி  பிடிப்பது.


நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?

வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது  சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.

உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.


நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக  அறிவியல் பார்வை பாப்போம்.

எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light).  என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.

பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.


Image from google images

சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. "ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"


பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது

" What we observe is not nature itself, but nature exposed to our method of questioning."


நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.


உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு,  "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.


நன்றி.





Thursday, March 22, 2018

முகநூல், ப்ரொபைலிங், பிரைவசி மற்றும் வேலை இழப்பு

சில வருடங்களுக்கு முன்பு, சோசியல் மீடியா குறித்தும், பிரைவசி குறித்தும் அது எப்படி நம்முடைய பர்சனல் வாழ்வில் தலையிடலாம் என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
  1. உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!
  2. Facebook ம் ப்ரைவசியும் பெண்களும்
  3. காசு, பணம் துட்டு, மணி மணி ! 

நான் என்னென்ன குறிப்பிட்டேனோ அது நடந்து விட்டிருக்கிறது. முகநூலில் உங்களை குறித்த விஷயங்களை சேகரித்து, உங்களுடைய பர்சனல் விஷயங்களை வேறொரு கம்பெனியிடம் விற்று, உங்களையே டார்கெட் செய்து மார்க்கெட் செய்து இருக்கிறார்கள். அதுவும் அமெரிக்க தேர்தலில் இது ஒரு பெரிய வித மார்க்கெட்டிங் உத்தியாக உபயோகப்படுத்த பட்டு இருக்கிறது. நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மார்க் ஸுகேர்பேர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் போனது போனது தானே.


இதனால் என்னங்க பிரச்னை என்று கேட்பவர்களுக்கு.. நீங்கள் என்ன சாப்பிடுவது, என்ன பார்பது என்ன உடை அணிவது, என்ன கேட்பது, என்ன என்ன செயல்கள் செய்வது, என்று ஒன்று விடாமல் உங்களை குறித்த ப்ரொபைலிங் நடக்கிறது. உங்களை குறித்து அறிந்தபிறகு, உங்களுக்கு தேவையான பொருட்கள், வீட்டிற்கே வந்து மார்க்கெட்டிங் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போது எல்லா இடங்களிலும் கொடி கட்டி பறக்கிறது. உங்களுக்கு தேவையானதை, மற்றொருவர் முடிவு செய்வார்.  உங்களுக்கு என்று சுயம் ஓன்று இல்லாமல் போகும்

இப்பொது, கூகிள் ஹோம், அலெக்சா, சிறி  என்று பல பர்சனல் அசிஸ்டென்ட் ஆப் கள் இருக்கின்றன. அதுவும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று டேட்டா கலெக்ட் செய்து அனுப்புகின்றன. இதனால், நீங்கள் பொது வெளியில் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, வீட்டில் என்ன என்ன செய்கிறீர்கள் என்று உங்களை முழுக்க ப்ரொபைல் செய்கிறார்கள்.

அப்படி செஞ்சா என்ன பிரச்னை ஆகப்போகுது..விடுங்க என்பவர்களுக்கு, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் எப்படி ரோபோக்கள் பல வேலைகளுக்கு மனிதர்களை விட பயன்படுத்த பட்டிருக்கும் என்ற மார்க்கெட் வாட்ச் செய்தி மற்றும் படம் இங்கே.




இதில் என்ன குறிப்பிட படுகிறது என்றால், மூளையை உயோகிக்காமல் செய்யப்படும் பல  வேலைகளை ஆட்டோமேஷன் செய்து விடுவார்கள். முதல் உதாரணமாக,  சூப்பர்மார்கெட் செல்கிறீர்கள் என்றால், அங்கே பில் போட  என்று இருக்கும் மக்கள் இனிமேல் இருக்க மாட்டார்கள். அதற்க்கு பதில் ஆட்டோமேட்டிக் ஆக நீங்கள் பில் போடா முடியும். ஏற்கனவே, ஆட்டோமேட்டிக் செக்கின் என்று பல கடைகள் வந்துவிட்டன, இன்னும் சில வருடங்களில் இந்த வேலை எல்லாமே இருக்காது. அந்த வேலை மட்டுமே செய்த தெரிந்த பலருக்கு வேலை இழப்பு ஏற்படும்.

சரி இதற்கும் உங்களை பற்றிய ப்ரொபைலிங் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு? ப்ரொபைலிங் செய்வதன் மூலம் உங்களுடைய முழு விவரமும் அவர்களுக்கு தெரியும். அந்த விவரங்களை ஒரு AI /அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு படிமுறை மூலம் படிப்படியாக கம்ப்யூட்டர் உங்களை பற்றி கற்றுக்கொள்ளும்.

இது எப்படி ஒரு குழந்தை சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்கிறதோ, அதனை ஒத்தது. சரி கற்று கொண்டு என்ன ஆகபோகிறது, என்றால். நீங்கள் செய்யும் வேலையும் கம்ப்யூட்டர் செய்கிறது எனில் அதுவும் நீங்கள் செய்யும் வேலை வெறும் உடல் உழைப்பு சார்ந்தது எனில், மனிதர்கள் வேலைக்கு எடுக்க மாட்டார்கள், பதிலாக, கம்ப்யூட்டர் அல்லது ரோபோக்கள் வேலைக்கு எடுக்கப்படும்.

இப்படி மனிதர்கள் அல்லாத ரோபோக்களை வேலைக்கு வைப்பது அவர்களுக்கு சௌகரியம். PF,பஞ்சபடி, மாதாமாதம் சம்பளம், இன்சூரன்ஸ், என்று எதுவும் கொடுக்க தேவை இல்லை. வேலையில் நேரும் குற்றங்கள் நிறைய இருக்காது. சப்போர்ட் வேலைகள் எல்லாமே கம்ப்யூட்டர் செய்துவிடும். ஆட்டோமேட்டிக் மெஸேஜ் போல, தற்போது ஆட்டோமேட்டிக் டெல்லர் வந்து விட்டது. இதனால் BP வேலை செய்யும் பலருடைய வேலை போகும்.

உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களையே வேலையை விட்டு தூக்கலாம், அதற்க்கு உங்களுடைய ப்ரொபைல் பயன்படுத்தலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு, SSN போன்றவற்றையே சேகரித்து உங்கள் பெயரில் வேறொருவர் லோன் வாங்கலாம். இல்லை பொருட்கள் வாங்கலாம். எங்கும் டேட்டா செக்யூரிட்டி என்று எதுவும் இருக்க போவதில்லை. இவர்கள் சேகரிக்கும் டேட்டா பாதுகாக்கப்படும் என்று யாரும் உறுதி கொடுக்க போவதில்லை.  நாமே சென்று எதிர் இந்த நிலைக்குள் விழ  வேண்டும். சிந்திப்போம்.

நன்றி.



References

http://www.foxnews.com/tech/2018/03/21/facebook-ceo-zuckerberg-breaks-silence-on-data-scandal-dont-deserve-to-serve-without-security.html

https://www.marketwatch.com/story/this-chart-spells-out-in-black-and-white-just-how-many-jobs-will-be-lost-to-robots-2017-05-31





Sunday, March 11, 2018

இனிமேல், ஆடு வெட்டாம ஆட்டுக்கறி சாப்பிடலாம்!!

இந்த பதிவுக்கு ஆடு வெட்டாம ஆட்டுக்கறியும், ஹீலா செல்களும்!! என்று தான் தலைப்பு வைக்கணும்னு நினைச்சேன், ஆனா, ஹீலா செல்கள் "கான்செர் பேஷண்ட்" என்பதால் நெகடிவ் பதம் வந்து விடும் என்று மாற்றி வைத்து விட்டேன்.

"என்ன தலையும் புரியல வாலும் புரியல ?"என்பவர்களுக்கு, என்னுடைய முந்தைய பதிவான "
ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்" இல் இருந்து சில பகுதிகள்.

"மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாகஇருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனிதசெல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்ததுHeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!!,மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதாஎன்ன சொல்லுறாங்கஎன்றுகேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது 

எதற்க்காக செய்கிறார்கள் 

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோமனிதர்களிடமோ செய்வதற்கு முன்உயிரின செல்களிடம்  செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்றுகாண்பர்இதனை  போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும்பரிசோதனை  என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர்  ஒருவரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா  என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர்செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை  மருந்துகளும் முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில்  தான். சொல்லப் போனால் ஒருபுது  மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள்உருவாக்கி இருக்கின்றன.  இன்னும் கூட  பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடையஉடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரியஇண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும்அறிந்திருக்க வில்லை.
"

நிற்க, சரி இப்பொழுது எதற்கு ஹீலா செல்களை பற்றியும், ஆட்டு கறி பற்றியும்  குறிப்பிடுகின்றேன் என்றால், எப்படி ஹீலா செல்களை  பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்தார்களோ, அதே போல, மற்ற விலங்குகள் செல்களையும் பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ஏன் இதை பிசினெஸ் ஆக செய்ய கூடாது என்று பிசினெஸ் முதலாளிகள் நினைத்ததன் விளைவாக, தற்போது பல பல கம்பெனிகள் இதனை ஒரு பிசினிஸ் ஆக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் "க்ளீன் மீட்". "மெம்பிஸ் மீட், சூப்பர் மீட்" என்று பல பல கம்பெனிகள் இந்த பிசினெஸ் இல் இருக்கிறார்கள்.


அதாவது சின்ன பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்ப்பதற்கு பதில், பெரிய, அல்லது இண்டஸ்ட்ரி லெவல் உற்பத்தி செய்வது. இதன் மூலம், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி அனைத்தும் லேபில் உற்பத்தி செய்யப்படும். அதன் சுவை மாறி இருக்கிறதா என்று நிறைய டேஸ்ட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள்.  

இதனை சார்ந்த புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது "கிளீன் மீட்"  எப்படி இனிமேல், ஆட்டுக்கறி மாட்டு  கறி உற்பத்தி இருக்க  போகிறது என்பது குறித்த விளக்கம் இதில் இருக்கிறது.




இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இனிமேல் கடைக்கு சென்று கறி வாங்கும் போது அது உண்மையிலேயே ஒரு ஆடு மாடு வெட்டி வர்ற கறியா, இல்லை லாபில் வளர்த்த கறியா என்று தெரியாது என்பது உண்மை. 


நன்றி.