Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Sunday, July 19, 2015

இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்குமா?

எனக்கு நடந்த ஒரு எதிர்பாராத அனுபவம் அது. அம்மாவின் ஆபரேஷன் க்கு பிறகு போஸ்ட்  செக்கப்க்கு என்று மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு நர்ஸிடம் ஒரு அம்மா, என் பையன் +2 முடிச்சிட்டான், சயின்ஸ் குரூப், என்ன படிக்கலாம் என்று கேட்டு கொண்டு இருந்தார். அந்த நர்ஸ் அம்மாவும், பயோடெக்னாலாஜி படிக்க வையுங்க என்று சொன்னார். அப்போது, அங்கு செக்கப்க்கு வந்து இருந்த இன்னொரு அம்மா, "வேணாம் மா, என் பைய்யன் அதை தான் படிச்சிட்டு 10 வருசமா வேலை இல்லாம இப்போ தான் மா வேலைக்கு போய் இருக்கான், வேற என்னானாலும் படிக்க வையுங்க இது வேண்டாம்" என்று சொன்னார். 

எனக்கு அந்த அம்மா சொன்னது தூக்கி வாரி போட்டது. என்னது நம்ம பீல்ட் பத்தி இப்படி பேசுறாங்களே என்று. பிறகு அந்த அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்னது இது தான். அவரின் பைய்யன் BTech பயோடெக்னாலாஜி படித்து இருக்கிறார், அதன் பிறகு வேலை இல்லை. பின்னர், PhD சேர்ந்து பிளான்ட் பயோடெக்னாலாஜி படித்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார். அதன் பிறகும் வேலை என்று பெரியதாக எதுவும் இல்லை ஆனால் 8-9 வருடங்கள் கடந்து இருக்கின்றன. இப்பொழுது Postdoc ஆக வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார். அதுவும் postdoc சம்பளம் என்பது மிக குறைந்தது. "சம்பளம் கம்மி என்று யாரும் பொண்ணு கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க மா!" என்று புலம்பி தீர்த்து விட்டார். 

இது உண்மையா, இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்காதா? என்று எனக்கு தெரிந்த, இந்தியாவில் பயோடெக்னாலாஜி ஸ்டார்ட் அப் கம்பெனி வைத்து இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது தான்.  இந்தியாவில்  பயோடெக்னாலாஜி என்பது வெறும் ஆராய்ச்சி சார்ந்த பீல்ட் மட்டுமே. ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல நிலைகள் clearance செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, இப்படி படித்து விட்டு வரும் மாணவர்களும் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்டு இருக்கிறார்கள். ப்ராக்டிகல் அறிவு இருப்பதில்லை. பல கல்லூரிகள்  பயோடெக்னாலாஜி என்ற பெயரில்ஆராய்ச்சி கூடம் கூட இல்லாமல் பாடம் நடத்துகிறார்கள். அங்கு படித்து விட்டு வெளிவரும் பலருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கூட Genetics, Recombinant DNA technology என்று எதுவும் சொல்லி தர தெரியவில்லை. ரொம்ப ஜெனெரல் ஆக படிக்கிறார்கள். specialize எதுவும் செய்து கொள்ளுவதில்லை.
இப்படி அனைத்தையும் மனபாடம் செய்து வெளி வரும் பலரும் இண்டர்வியு நேரத்தில் கேட்கும் அடிப்படை விசயங்களுக்கு கூட பதில் சொல்லுவதில்லை. இதனால் நல்ல subject தெரிந்த பலரை தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல,  நிறைய பயோடெக் கம்பெனிகளும் இல்லை என்று சொன்னார். 

இது ஒரு புறம் இருக்க, வெறும் BTech  பயோடெக்னாலாஜி படிக்கும் பலரும் படித்து முடித்து வெளி வரும் போது கெமிகல் எஞ்சினீர், பயோ மெடிக்கல் எஞ்சினீர், பயோ கெமிஸ்ட்ரி, பயாலாஜி படித்தவர்கள் என்று அனைவருடனும் போட்டி போட வேண்டி இருக்கிறது. அடிப்படை அறிவு இல்லாமல் எல்லாத்தையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு வரும் இவர்கள் நிறைய தடுமாறுகிறார்கள். 

வெறும் Btech மட்டும் படித்த இவர்களுக்கு மார்க்கெட்டிங் வேலை மட்டுமே கிடைகிறது. மேல்படிப்பு அல்லது Phd படித்தால் மட்டுமே கொஞ்சம் நல்ல வேலை கிடைகிறது. அதனால், IT சார்ந்த படிப்புகள் போல படித்து முடித்தவுடன் 5-6 வருடங்களில் வேலை, ஓரளவு நல்ல துவக்க சம்பளம் என்று எதுவும் கிடைப்பதில்லை.

 clearance பிரச்சனையை பற்றி இன்னொரு இடத்திலும் கேள்வி பட்டேன். என்னுடைய தற்போதைய பயணத்தில் ஆராய்ச்சி விசயமாக ஒரு பல்கலைகழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இருக்கும் உபகரணங்கள் எல்லாம் நன்றாக லேட்டஸ்ட் கட்டிங் எட்ஜ் ஆக இருந்தது.. DBT இல் இருந்து பண்டிங்க் கிடைத்ததாக சொன்னார்கள்.  ஆனால் கிடைத்த பண்டிங்க் வைத்து அவர்களால் உபகரணங்கள் வாங்க முடிந்ததே தவிர அதனை தொடர்ந்து நடத்த, கரண்ட் பில் கட்ட கூட அவர்களால் முடிவதில்லை, clearance என்ற பெயரில் நிறைய ரெட் டேபிசம் நடப்பதாக சொன்னார்கள்.

1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது  நோய்களும், வைரஸ்களும், பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில், பயோ டெக் போன்ற துறை கள் வளர்வது  எவ்வளவு முக்கியம். எவ்வளவோ சாதிக்கலாம் .  ஆனால் இது தான் தற்போதைய  நிலையா? எதிர்காலம் இல்லாமல் இருக்கும் பயோடெக்னாலாஜி பட்டதாரிகள் நிலை என்னாகும்..தெரியவில்லை. 


நன்றி.


Tuesday, February 3, 2015

எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தருவது? ஒரு அமெரிக்க கதை



இங்கு இருக்கும் தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக தன்னார்வ பணி செய்து கொண்டு இருக்கிறேன்.   நாங்கள் இருக்கும் ஜியார்ஜியா மாகணத்தில் வேற்று மொழி பாடமாக தமிழ் அங்கிகரிக்க பட்டு இருப்பதால், நமது மொழியும் கலாச்சாரமும் வளர வேண்டும் என்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் படிக்க தமிழ் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படிகிறார்கள். அங்கு ஆசிரியர்/ஆசிரியையாக வேலை பார்பவர்கள் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் தாம். வாரத்தில் ஒரு நாள் ஒன்றரை மணி முதல் இரண்டு மணிநேரம் மட்டுமே தமிழ் பள்ளி நடக்கும். கலிபோர்னியா தமிழ் அகாடமி யின் பாடத்திட்டத்தை பயன்படுத்தி பாடம் நடத்துகிறோம். தமிழ் நாட்டு தமிழ் பாடத்திட்டத்திற்கு இணையான அனைத்து பகுதிகளையும் கொண்டது எங்கள் பாட திட்டம்.  மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் நடத்தப் படுகிறது. வீட்டுப்பாடம் , மாததேர்வு, மாதம் ஒரு  ப்ராஜெக்ட்,  ரிவிசன் டெஸ்ட், வருட தேர்வு என்று அனைத்தும் உண்டு.


தமிழும் கலாச்சாரமும் வளரவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படி நாங்கள்  அனைவரும் எந்த பிரதிபலனும் இன்றி உயிரை கொடுத்து உழைத்தாலும், ஆங்கிலம் மட்டுமே முதல் மொழியாக வளரும் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் படிப்பது என்பது மியூசிக், Kumon , Soccer , டென்னிஸ், பியானோ  போல "இன்னொரு கிளாஸ்" அவ்வளவு தான். ஆர்வத்துடன் படிக்கும் சில குழந்தைகளும் இருக் கிறார்கள் என்றாலும் பெற்றோர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தமிழ் பள்ளி வரும் குழந்தைகள் தாம் அதிகம்.

இங்கு இருக்கும் ஆசியர்கள் முறையாக ஆசிரிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றாலும் மிக சிறந்த முறையில் ஆர்வத்துடன் பாடம் நடத்துகிறார்கள். அதனால் பல நேரங்களில் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள முடிவதில்லை. தப்பித்தவறி ஒரு சில நேரங்களில் கண்டிப்பாக நடந்தால் என்னென்ன நேர்கிறது கேளுங்கள்.

ஒரு ஆசிரியர் பாடம் கவனிக்காத ஒரு பையனை கூப்பிட்டு கவனியாமல் இருந்தால் கிள்ளு வாங்குவாய் என்று சொல்லி இருக்கிறார். அவன் தன பெற்றோரிடம் சென்று என் தமிழ் ஆசிரியர் என்னை கொன்று (Kill )விடுவேன் என்கிறார் என்று முறையிட்டு இருக்கிறான்.

இன்னொரு ஆசிரியர் பாடம் கவனிக்காத ஒரு ஆறாம் வகுப்பு மாணவனை "நீ பாடம் கவனிக்காவிட்டால் நிறைய கற்று கொள்வதை lose செய்வாய்" என்று சொல்லி இருக்கிறார். உடனே அவன் அதனை பெரிய பிரச்னை ஆக்கிவிட்டான் . "எப்படி என்னை loser என்று அந்த ஆசிரியர் கூறலாம். என் வாழ்கையில் நான் loser ஆவேன் என்று எப்படி  சொல்கிறார், நான் இனிமேல் இந்த பள்ளிக்கு செல்வதில்லை "என்று ஒரு டிராமா செய்து விட்டான்.

நான் பாடம்  எடுக்கும் 1ஆம் வகுப்பு பையன் வகுப்பில் சரியாய் கவனிக்கவில்லை என்று அவன் பெற்றோரிடம் முறையிட்டேன். அதற்க்கு அவன், தன்னை பற்றி அனைவர் முன்னமும் ஆசிரியை குறை சொல்லி விட்டார், அதனால் இமேஜ் பாதிக்கப்பட்டு விட்டது எனவே நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இருக்கிறான். அவன் வயது 5-6 அதற்குள் இவர்களுக்கு எல்லாம் என்ன இமேஜ்ஓ தெரியவில்லை.

ஒன்றுக்கு இரண்டு பக்கம் இவர்களை எழுத சொன்னாலோ அல்லது கவனிக்க சொன்னாலே உடனே ஒரு அங்கலாய்ப்பு வந்து விடுகிறது. "You are giving us lots of stuff to write" அல்லது "Why should we write the same stuff again and again" அல்லது "I am bored" இவை எல்லாம் நான் சாதரணமாக வகுப்பில் கேட்க்கும் அங்கலாய்ப்புகள்.

இன்னும் சில பெரிய குழந்தைகளின் பெற்றோர் தம் பிள்ளைகள் எப்படி எல்லாம் தமிழ் படிப்பதில் இருந்து தப்பிக்க நினைகிறார்கள் என்று கூறுவதை கேட்கும் போது தமிழை எப்படி வளர்க்க போகிறோம் என்று சற்று பயமாகவே இருக்கிறது.

இங்கு இருக்கும் குழந்தைகள் சிறு வயது முதலே தர்க்கம் செய்ய நன்கு அறிந்து இருக் கிறார்கள்.ஏன்  நான் இதனை செய்ய வேண்டும்?. இதனை செய்வதால் என்ன பயன்?, செய்யாமல் விட்டால் என்ன நடக்கும்? அதனை எப்படி சமாளிப்பது? போன்ற பல கேள்விகள் கேட்கிறார்கள்.

ஒரு பெற்றோர் சொன்னது, தமிழ் படி என்று சொன்னபோது நடந்த உரையாடல்

அப்பா : தமிழ் வீட்டுபாடம் படிடா?
பையன் "Why should I do it ?"
அப்பா: அப்பொழுதான் உனக்கு எழுத படிக்க  பேச வரும்.
பையன்: I can learn that by watching tamil channels
 அப்பா: உன் குழந்தைகளுக்கு நம் மொழி கலாச்சாரம்  சொல்லி தரனும் இல்ல.
பையன்: You are there dad, you will teach them
அப்பா: ???


எப்படி இவர்களுக்கு தமிழ் படிக்கும் எண்ணத்தை தூண்டுவது? இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்? நினைக்கும் போதே மனம் பதைக்கிறது.