Saturday, April 21, 2018
கனவு, கவர்ச்சிகன்னிகளும் , Femme Fatale ம்.
Friday, September 9, 2016
கதாசிரியர்களும், உயிரி ஆயுதமும் !!
அதில் தற்போது இணைந்திருப்பவர் டான் பிரவுன்.
ஆங்கில நாவல்கள் எழுதுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட மைய கருத்து உண்டு அதிலிருந்து அவர்கள் விலகுவது இல்லை. உதாரணமாக ஜான் க்ரிஷம் அவர்களின் அத்தனை நாவல்களும் வழக்கறிஞர் அல்லது அதனை சார்ந்த அத்தனை பாயிண்டுகளையும் மைய படுத்தி இருக்கும். ஜான் க்ரிஷம் ஒரு வழக்கறிஞர் என்பதால் அவரின் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கலக்கி தெளித்து இருப்பார். உதாரணமாக "Time to Kill", "The Firm", "The Partner" etc.,
அதே போல, ராபின் குக் ஒரு மருத்துவர், இவரின் அத்தனை நாவல்களும் மருத்துவம் அல்லது உயிரியல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உதாரணமாக, Chromosome 6, Fever, Cell etc.,
அதே போல டாம் கிளான்ஸி அவர்களின் நாவல்கள் அனைத்தும் மிலிட்டரி அல்லது போர் சம்பந்தமானவை, பாலோ கோயல்ஹோ அவர்கள் எப்பொழுதும் மனோதத்துவ நாவல்கள் எழுதுபவர்.
இப்படி எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது போல, டான் பிரௌனின் ஸ்டைல் என்பது cyptography - ரகசிய குறியீடு வைத்து நாவல் எழுதுவது. அவரின் கிட்டத்தட்ட எல்லா நாவலிகளிலுமே ஒவ்வொரு சாப்டர்றிலும் ஏதாவது ரகசிய குறியீடு அதனை எப்படி கண்டு பிடிப்பது என்று இருக்கும். The Davinci Code, Angels and Demons , Digital Fortress etc., இன்னொரு விஷயம் என்னவென்றால் கிரேக்க, ரோம கலை மற்றும் ஓவியம் குறித்த பழைய வரலாற்று செய்திகள் நிறைய நாம் இவரின் நாவல்களில் தெரிந்து கொள்ளலாம். மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி என்று பல ஓவியர்கள் பற்றியும் சிற்ப வல்லுநர்கள் பற்றியும் டாவின்சி கோட் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.
அந்த வரிசையில் "Inferno" வில் முழுக்க முழுக்க Dante குறித்து நிறைய அறிய முடிந்தது.
அவரின் Inferno என்பது நரகம் எப்படி இருக்கும் எதற்கெல்லாம் தண்டனை தருவார்கள் என்பது குறித்த ஒரு சித்திரம். அதனை தவிர Dante வின் "The Divine comedy" என்ற புத்தகம் குறித்தும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. இது கிட்டத்தட்ட நம்முடைய கருட புராணத்தை ஒத்தது. அதாவது இந்த தப்புக்கு இந்த தண்டனை என்று கருட புராணத்தில் இருப்பது போல, 7 வகை குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதே Inferno அதாவது இத்தாலிய மொழியில் Inferno என்றால் நரகம் என்று பொருள்.
இந்த புத்தகத்தின் அடிநாதமே, வில்லனின் முயற்சியான "மக்கள் தொகையை எப்படி கட்டுப்படுத்துவது, அதுவும் உயிரி ஆயுதம் கொண்டு கட்டுப்படுத்துவது என்பதே". அதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பது.
இந்த புத்தகத்தை படித்த பிறகு ஒரு சில விஷயங்கள் எனக்குள் தோன்றின. அதாவது, இதில் கூறப்படும் ஒரு விஷயம், உலகில் நடக்கும் அதிக மக்கள் தொகை பெருக்கம். அதன் பின்விளைவுகள் அல்லது அதனால் நடக்க போகும் நிகழ்வுகள் குறித்த கற்பனைகள். அது ஓரளவு உண்மை என்றே வைத்து கொள்ளுவோம். உதாரணமாக, சுதந்திரம் வாங்கிய போது ~40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய மக்கள் தொகை தற்போது ~1 பில்லியன் அசுர 100 வளர்ச்சி.
அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் நடக்கும் சில விஷயங்களில் முக்கியமானவை, சாப்பாடு, தங்கும் இடம், உடை மற்றும் கழிவு நீர் மேலாண்மை. அதிக மக்கள் தொகை பெருக இவை அனைத்தும் கிடப்பது அல்லது மேலாண்மை செய்வது என்பது எவ்வளவு கடினம். இந்தியாவை எடுத்து கொண்டாலே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குப்பை அளவை விட தற்போது இருக்கும் தூக்கி வீசப்படும் குப்பை அளவு 100 மடங்கு அதிகம். தண்ணீர் என்பது கேன்களில் மட்டுமே, அடிகுழாய் தண்ணீர் என்பதெல்லாம் நமக்கு பின் வரும் சந்ததிக்கு மறந்தே விடும் போல. சாப்பாடும் அதனை தயாரிக்க அல்லது மக்களுக்கு தேவையான சாப்பிட்டுக்காகவே என்று மாஸ் ப்ரொடியூஸ் செய்ய என்று உயிரியல் தொழில் நுட்பம் புகுத்தப்பட்ட BT வகை உணவு பொருட்கள் சந்தையில் விடப்படுகின்றன, அவை மற்ற நாட்டு காய்கறிகளை சுத்தமாக அழித்து விடுகின்றன..இப்படி பல பல
எல்லாமே ஒரு டோமினோ எபெக்ட் போல..அதன் ஆரம்பம் என்பது அதிக மக்கள் தொகை பெருக்கம்..
ஆனால், இதனை தவிர்க்க உயிரி ஆயுதம் கொண்டு அதாவது 18 ஆம் நூற்றாண்டு நிகழ்ந்ததை போல பிளேக் கொண்டு அல்லது "மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிளேக்" கொண்டு , உலகின் மக்கள் தொகையை பாதி அழித்து விடுவது என்று எழுதி சற்று விளையாடி இருக்கிறார் டான் பிரவுன். இது அக்டோபர் மாதம் படமாகவும் வரப்போகிறது. டாம் ஹாங்க்ஸ் ராபர்ட் லாங்டன் ஆக நடிக்க விருக்கிறார். இதோ ட்ரைலர்
எனக்கென்னவோ இதனை படித்த பிறகு, நம் இதே போல உயிரி தொழில்நுட்பத்தை ஆயுதங்களாக உபயோகித்த தமிழ் சினிமா கதைகளான தசாவதாரம், 7 ஆம் அறிவு மற்றும் ஐ போன்றவை ஞாபகத்துக்கு வந்தன. இவர்கள் எல்லாம் சொல்வது போல, உயிரி ஆயுதம் என்பது பண்டமிக் ஆக உபயோகிப்பது சாத்தியமா?.
வைரஸ் என்பது எப்போதும் பரிணாம வளர்ச்சிப்படி மாறி கொண்டே இருப்பது ஏனெனில் நம் உடல் என்பது அற்புதமான ஒரு மெஷின் . மாறி கொண்டே இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற பலவற்றுக்கும் ஏற்ப ஆன்டிபாடி உருவாக்கி கொண்டே இருக்கும். அதனையெல்லாம் தாண்டி நம்மை நோயாளி ஆக்கவேண்டும் என்றால் தொடர்ந்த மரபியல் மாற்றம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதனையே வைரஸ்கள் செய்கின்றன. ஆனால், ஒரு பண்டமிக் உருவாவது என்பது தற்போது இருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் என்றாலும் (உதாரணமாக 2009 இல் நடந்த H1N1 swine virus பண்டமிக்) வைரஸ் பரவுதல் என்பது குறைந்தது 7 நாட்கள் முதல் 10 நாட்கள் ஆகும். தசாவதாரம் படத்தில் காண்பது போல, ஒரு செகண்ட் இல் நடப்பது இல்லை. வைரஸ் பரவ பரவ நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியும் ஆன்டிபாடிகளை உருவாக்கும்.
அதே போல இப்போது இருக்கும் சூழலில் ஒரு பண்டமிக் உருவாக்கி அது உலகில் இருக்கும் பாதி மக்கள் தொகையை கொள்வது என்பதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை. இது 18 ஆம் நூற்றாண்டு இல்லை, இப்பொழுது நடந்த 2009 H1N1 இல் கூட <0 .000001="" 3="" nbsp="" p="">பிளேக் க்கு தடுப்பு மருந்து உண்டு, ஆண்டிபயாடிக் ம் உண்டு.
அதனால் இது போன்ற வைரஸை உயிரி ஆயுதமாக கொண்டு உலகின் மக்கள் தொகையை பாதியாக குறைப்பது அல்லது வேரறுப்பது என்பது என்னை பொறுத்தவரை நடப்பது இயலாதது. கதாசிரியர்களும், சினிமா கதை எடுப்பவர்களுக்கு இனிமேலும் இதனை போன்ற கதை எடுக்க போகிறீர்கள் என்றால், வேறேதாவது ஒன்றை எடுத்து உலகை அழிக்க வில்லன் முயல்கிறான் என்று வைத்து எடுங்கள். தயவு செய்து உயிரி ஆயுதத்தை விட்டு விடுங்கள்.
டிஸ்கி
இங்கே குறிப்பிட்டு இருப்பவை எல்லாமே, அந்த புத்தகம் குறித்தும், சினிமா குறித்தும் என்னுடைய கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
நன்றி
0>
Tuesday, July 28, 2015
படித்தது, பார்த்தது, வருந்தியது!
இந்த புக்கை படிக்க ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு இளவரசி டயானா அவர்களின் பிரபலமான 1995 தொலைக்காட்சி பேட்டி ஒன்று தற்செயலாக காண நேர்ந்தது.
அதில் அவர் அவரின் கணவருக்கும், கணவரின் தற்போதைய மனைவி கமிலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றியும் குறிப்பிட்டதை காண நேர்ந்தது. இதை பார்த்தவுடன் எனக்கு "The art of Seduction" புக்கில் இருந்த முதல் சாப்ட்டர் "தி சைரென்" ஞாபகத்திற்கு வந்தது.
இளவரசி டயானா மிக அழகானவர், கல்யாணம் ஆன போது உலகமே அவர்களை வியந்து பார்த்தது. இளவரசரோ எல்லாம் தன் வழியில் நடக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட "Spoiled Brat". உலகமே வியந்து பாராட்டிய ஒரு அழகு கொண்டவர் டயானா. இப்படி அழகு சிலை வாய்க்கப்பட்ட அவரோ உலகின் மிக சிறந்த லக்கி தான் என்று சந்தோசம் பற்றிருக்க வேண்டும். மாறாக திருமணதிற்கு முதலில் தொடர்பில் இருந்த தன் காதலியுடன், தற்பொழுது வேறொருவர் மனைவியாக இருப்பவரிடம் மீண்டும் உறவை புதுப்பித்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இத்தனைக்கும் கமிலா, டயானாவின் அழகிற்கு சிறிதும் அருகில் வர முடியாது. ஆயினும் எப்படி சார்லஸ் போன்ற இளவரசரை கவர அவரால் முடிந்தது.
கமிலாவிடம் ஒரு நல்ல திறமை இருந்து இருக்கிறது, அது கவர்ந்து இழுக்க கூடிய ஒரு திறன். நல்ல பேச்சு திறமை. நிறைய விசயங்களில் அறிவு என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதிராக இருந்து இருக்கிறார். எல்லாரும் இளவரசரை கண்டு பயப்பட, இவரோ அவருக்கு சரி சமமாக இருந்து பேச, சவால் விட கூடியவராக இருந்து இருக்கிறார். அதுவரை பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்று பார்த்து பழக்கப்பட்ட இளவரசர், தன்னை சவால் விடக்கூடிய தன்னை ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களில் யோசிக்க வைத்த கமிலா இளவரசரை கவர்ந்து இருக்கிறார். இது ஒரு seductive குணம். அது நன்கு கைவர பட்டவராக இருந்து இருக்கிறார் கமிலா.
இன்னொரு விஷயம் அவருக்கும் டயானாவுக்கும் இருந்த வித்தியாசம். கமிலா, சார்லஸ் ஐ எப்பொழுதும் ஓவர்ஷடோ செய்யவில்லை, அதாவது, சார்லசின் புகழை தன் அழகு அல்லது மீடியா பார்வை கொண்டு தன் பக்கம் திருப்பவில்லை. எப்பொழுதும் தான் சார்லஸ்சின் பின்னால் என்று இருந்து இருக்கிறார். டயானா, தான் விரும்பவில்லை என்றாலும் மீடியாக்களுக்கு அந்த நாட்களில் நல்ல தீனி போட்டு இருக்கிறார். பத்திரிக்கை, டிவி என்று சகலமும் அவரை நன்கு கவர் செய்து இருக்கின்றன. இது பிரபலமாக இருந்ததற்கு அவர் கொடுத்த பரிசு.
தற்போது 10 வருடமாக தன் பழைய காதலியை திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கிறார்கள்.
வருந்தியது
கடந்த இரண்டு நாட்களாக, எங்கு திரும்பினாலும் கலாம், கலாம் தான். Blog, FB, Whatsapp என்று அனைத்திலும் நிறைந்து இருந்தார் கலாம் அவர்கள். வழக்கமாக கலாய்க்கும், மொக்கை போடும் என் தோழிகள் அனைவரும் நேற்று மிக வருத்தத்தில் இருந்தனர். என் அண்ணனிடம் இந்தியாவிற்கு பேசும்போது கூட கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரை பற்றியே பேசி கொண்டு இருந்தார்கள். பொது விடுமுறை அறிவித்து இருப்பாதாக சொன்னார். அந்த அளவிற்கு நிறைய சாதாரண மனிதர்களின் உணர்வுகளை அவர் எப்படி கவர்ந்து இருக்கிறார் என்று அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. சாதாரண மனிதராக இருந்து, உழைப்பால் உயர்ந்த கலாம் அவர்களும் மக்களை எப்படி உழைப்பால், தன்னம்பிக்கையால் கவரலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.
நன்றி.
Wednesday, May 20, 2015
எண்ணங்களும் ,காட்சிபடுத்தலும், வெற்றியும்
உதாரணமாக, "The Secret by Rhonda Byrne", "Think and grow rich by Napolean Hill" , "How to win friends and Influence people by Dale Carnegie, "Seven habits of highly effective people by Stephen Covey", "The power of positive thinking by Norman Vincent Peale"....etc etc போன்ற பல புத்தகங்களின் அடி நாதம் "The power of thoughts and visualization" அல்லது, "எண்ணங்களும், காட்சிப்படுதலும்".
உங்களுக்கு ஆபிசில் பிரச்சனையா, உங்கள் ஆபிஸ் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைகிறீர்களோ அதனை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அதனை காட்சி படுத்தி பாருங்கள். தொடர்ந்து, நீங்கள் ஒரு விஷயத்தை பற்றில் ஆழமாக நம்பும் போது, கனவு அல்லது காட்சி படுத்தி பார்க்கும் போது, நம்முடைய மூளையில் ஆழப்பதிந்து, நம்மை சுற்றியுள்ள auro மாறி விடுகிறது. இதனையே "Rhonda" அவர்கள் "The universe is like a Genie, whatever you wish /visualize with heart for , it will grand you" என்று சொல்லுகிறார். என்னை கேட்டால் நிறைய மத நம்பிக்கைகளுக்கும் இதுவே மூலம் என்று சொல்லுவேன். கடவுள் நாமத்தை ஜெபிக்க சொல்லுவது, கடவுளிடம் முறை இடுவது, திரும்ப திரும்ப ஒரே எண்ணத்துடன் கடவுளிடம் வாசிப்பது என்பதெல்லாம் இதில் இருந்து வந்திருக்கிறதோ என்று எனக்கு எண்ண தோன்றும்.நம்மூரில், நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள் என்பார்கள், அதுவும் இதனுடன் சேர்ந்தது என்று நினைக்கிறன்.
சரி, கனவு இருக்கிறது, பெரிய மனிதர் ஆக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று, அது மட்டும் போதுமா வெற்றியடைய என்றால், இல்லை என்கிறார் Napolean Hill அவர்கள். கனவு வெறியாக வேண்டும், உதாரணமாக, நீங்கள் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க விழைகிறீர்கள் என்று எடுத்து கொள்ளுவோம், அது ஒரு கனவு என்ற நிலையில் இருந்து வெறி என்ற நிலைக்கு வர வேண்டும், எண்ணம், செயல் எல்லாமே அதனை நோக்கியே இருக்க வேண்டும். அதனை "desire". அடுத்து அந்த எண்ணங்கள், கனவுகள் எல்லாம் நனவாகும் என்று நம்ப வேண்டும், அப்படி நனவானால் என்ன இருப்பீர்கள் என்று காட்சிபடுத்தி பாருங்கள் என்கிறார்கள். அதுவே "visualization". அடுத்து உங்களுக்கு அந்த கனவு சம்பந்தமான basic அறிவு இருக்க வேண்டும். "Specialised knowledge", அல்லது உங்களுக்கு அந்த அறிவு இல்லை என்றால், அதனை பெற முயற்சிக்க வேண்டும்.
சரி, உங்களுக்கு கனவு, வெறி, நம்பிக்கை, அடிப்படை அறிவு இருந்தால் போதுமா வெற்றி பெற என்றால் இல்லை. அடுத்த முக்கியமான தகுதி, "organized planning" அல்லது கவனமாக திட்டமிடல் வேண்டும். பின்னர், நல்ல டீம் ஒன்று உருவாக்குவது. ஏனெனில் ஒருவராக எதனையும் சாதிக்க இயலாது. டீம் உருவாக்குவது மட்டும் அல்லாமல் அந்த டீம் மக்களை வழிப்படுத்த உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவழிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்க வேண்டும், ஆனால் செயல் படுத்தும் போது நீங்கள் full responsibility எடுத்து கொள்ள வேண்டும். Pleasing personality இருக்க வேண்டும், motivate செய்ய வேண்டும்.
அடுத்தது, முடிவெடுத்தல், அதுவும் எப்போது முடிவெடுக்க வேண்டுமோ அப்போது முடிவெடுக்க வேண்டும், தள்ளி போடா கூடாது. தினமும் எது முக்கியம் என்று prioritize செய்ய வேண்டும். ஒரு முறை prioritize செய்து விட்டால், ஒவ்வொரு காரியத்தையும் தள்ளி போடாமல் முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகள் உங்கள் தோல்விக்கு முதல் படி.
நான் மேற் குறிப்பிட்ட எல்லாமே இருக்கிறது, பின்னரும் உங்களை வெற்றி தேடி வரவில்லை என்றால், அவசரபடாமல் பொறுமை காக்க வேண்டும். திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன மெய் வருத்த கூலி தீரும்" திருவள்ளுவர் சொன்னது.
நான் தொடங்கிய வாக்கியத்திற்கு வருவோம். கனவு காணுங்கள், ஆனால் அதோனோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், அந்த கனவை வெறியாக்கி, நம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து கட்சிபடுத்தி, அதற்க்கு தேவையான அறிவை சேகரித்து, கவனமாக திட்டமிட்டு, நல்ல ஒரு டீம் உருவாக்கி, தள்ளி போடாமல் முடிவெடுத்து, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.
டிஸ்கி
இது சில self help புத்தகங்களில் நான் படித்ததை வைத்து தொகுத்து எழுதியது மட்டுமே. பொது அறிவுரை அல்ல.
எப்பொழுதும் கனவு மட்டும் காணும் மக்களுக்காக இந்த பாடல். (நன்றி நந்தவனத்தான் அவர்களே!)
நன்றி
Friday, March 13, 2015
படித்தது மனதை பிழிந்தது , கவனித்தது, கேட்டது
Thursday, February 19, 2015
தட்டையான உலகம் முதல் "break the internet" வரை.. சுருங்கிய மனித மனங்கள்.
நவம்பர் 9 1989, உலகவரலாற்றில் ஒரு முக்கியமான நாள். பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியில் கம்யுனிசம் வீழ்ந்த நாள். உலக பொருளாதார சந்தைகள் திறக்க அடிகோலிய நிகழ்வு அது என்பது "The world is flat" புத்தகம் எழுதிய Thomas L. Friedman அவர்களின் கூற்று. மிக சுவாரஸ்சியமாக அவர் இதனை "சுவர் வீழ்ந்தது, ஆனால் விண்டோஸ் வளர்ந்தது" என்று மைக்ரோசாப்ட் விண்டோஸ், IBM வளர்ச்சி பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
உலகை தட்டையாக்கிய 10 காரணிகள் சொல்லபட்டாலும் இந்தியாவை பொருத்தவரை புரட்டி போட்டவை என் பார்வையில்: Netscape ,ஈமெயில், HTML, opensource software , uploading , outsourcing , offshoring என்பனவற்றை சொல்லலாம்.
இதை தவிர உலகம் அனைத்தையும் புரட்டி போட்டது கூகிள் போன்ற தேடு தளங்களும், அதன் பின்னர் வந்த "ஊக்கமருந்துகள்" ஆன mobile phones, instant messaging மற்றும் VoIP.
இன்றைய சூழலில் உங்களுக்கு facebook, twitter , blogs, instagram, whatsup என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னால் உங்களை ஏற இறங்க பார்பார்கள். உலகம் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் க்குள் அடங்கி விட்டது. November 9, 2014 , பெர்லின் சுவர் வீழ்ந்த நிகழ்வின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்.
உலகம் தட்டையாகிவிட்டது, ஆம், இன்று பல அமெரிக்க மென்பொருள் கம்பெனிகளில் எப்போது மீட்டிங் என்றாலும் , across the globe பல நாடுகளில் இருந்து குறிப்பாக, இந்தியா, பிரேசில் மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து சாதரணமாக பலர் Dial -in செய்து கலந்து கொள்வார்கள். எப்போதும் கூகுள் hangout அல்லது skype போன்றவை ஒன்று இவர்களுக்காக ஓபன் செய்து இருப்பதை காணலாம். இன்று பல கம்பெனிகள், செலவை மிச்சபடுத்த "Work from home" எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள்.
இன்று பலரின் நினைவூட்டியாக இணையம் இருக்கிறது. பிறந்தநாள், திருமண நாள், பிறப்பு, இறப்பு என பலவும் இப்போது இணைய குறுஞ்செய்திகள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்கிறோம். ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடந்தாலும் உதவாமல் அதனை புகைப்படம் எடுத்து உதவி செய்யுங்கள் என்று facebook ல் போடுபவர்களும் உண்டு . எங்கும் பரபரப்பான இந்த நடப்பு உலகத்தில் நட்புகளும் அதே பரபரப்புடன் ஆரம்பித்து பரபரப்புடன் முடிந்துவிடுகின்றன. அனைத்து நட்புகளுமே ரயில் சிநேகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஒரு புறம் இந்த இணையத்தால் பல நன்மைகள் இருப்பினும் மனித மனங்கள் சுருங்கி விட்டன என்று தோன்றுகிறது.
நன்றி
Thursday, February 12, 2015
50 shades பைத்தியம் பிடித்தலையும் அமெரிக்க பெண்கள்!
Wednesday, February 11, 2015
ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி - 2 ? குறைகளுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்
Monday, February 9, 2015
ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி -1 ? பேனை பெருமாளாக்க வேண்டாம்
எப்பொழுதெல்லாம் நமக்கு பிடிக்காத நிகழ்ச்சிகள் நம் வாழ்கையில் நடக்கும் போதோ அல்லது புரிந்து கொள்ளாத கடினமான நபரை சமாளிக்க வேண்டி வரும் போதோ அல்லது வாழ்கையில் ஏமாற்றங்களையோ அல்லது எதிர்பாராத சந்தர்ப்பங்களை சந்திக்கும் போதோ நாம் என்னவாகிறோம்.
overreact செய்கிறோம், எப்பொழுதும் அதனையே நினைத்து கொண்டு, ஒன்றை பத்தாக்கி,நூறாக்கி, ஆயிரமாக்கி, நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, நாம் மட்டும் தான் உலகின் ராசியற்ற மனிதன் என்று மனம் நொந்து என்று எல்லா எதிர்மறை விளைவுகளும் நடக்கும் என்று நினைத்து அழுது அரற்றி புலம்பி etc etc ...
பல நேரங்களில் பார்த்தோமானால் நாம் பெரிய பிரச்னை என்று நினைத்து அரற்றிய விஷயம் மிக சிறு பிரச்னை ஆக இருக்கும். சொல்ல போனால் பல சிறு பிரச்சனைகளை நாம் தான் ஊதி பெருசாக்கி அசைவற்று போகும் நேரங்களில் நாம் உண்மை நிலவரத்தை விட்டு வெகு தூரத்திற்கு சென்று விடுகிறோம். நாம் கற்பனை செய்த சந்தர்பம் மட்டுமே அப்போது நம் முன் நிற்கும். அதனால் பிரச்சனைக்கு சரியான தெரிவு காண முடியாது.
சுருங்க சொல்லபோனால் பல சிறு பிரச்சனைகளை நாம் பெரிய எமெர்ஜென்சி ஆக்கி ஒரு எமெர்ஜென்சிக்கு பின் அடுத்தது என்று ஓடிகொண்டே இருக்கிறோம்.
காலம் செல்ல செல்ல, எந்த ஒரு பிரச்சனையையும் அவசர அவரமாக முடிக்காவிட்டால் அது தீர்க்கப்படவில்லை என்றே நாம் நம்ப ஆரம்பித்து விடுவோம். ஏன் இப்படி?
சில நாட்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் அது, அது நடந்து முடிந்தவுடன் பயங்கரமாக மனமுடைந்த நான் ஒரு நாள் முழுதும் அழுது கொண்டிருந்தேன். உடனே என் கணவர் சொன்னது இது " எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தாதே! நீ நீயாகவே இரு, சிறு பிரச்சனையை பெரியதாகாதே. அதெல்லாம் வேலை வெட்டியில்லாதவர்கள் செய்வது, தூக்கி போட்டுவிட்டு உன் முன்னே இருக்கும் வேலையை பார்" என்றார். இப்போது நான் அந்த பிரச்சனையை திரும்பி பார்த்தால் எனக்கு சிரிக்க தோன்றுகிறது. நான் ஏன் அதனை பெரிய பிரச்னை என்று நினைத்தேன் அழுதேன் என்று தெரியவில்லை. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான், என்று தூக்கி போட்டுவிட்டு நம் வேலையை போய் பார்க்கவேண்டும் என்பது நான் கற்ற பாடம்.
பின்னர் எனக்கு "Don't sweat the small stuff" என்ற புத்தகம் பரிந்துரை செய்தார். வாழ்கையை எப்படி ஸ்ட்ரெஸ் இல்லாமல் அல்லது ஸ்ட்ரெஸ் குறைத்து வாழ்வது என்பதை கூறும் புத்தகம், அதனை பகிர்ந்து கொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.
அந்த புத்தகத்தின் துவக்க பகுதி தான் இது.
"Life is too short to argue, fight or be negative in any way. Count your blessings, value the people who matter and move on from the drama with your head held high."
Thursday, November 10, 2011
1984
இந்த நாவல் வெளிவந்த பிறகு, பல புதிய பதங்கள் நடைமுறைக்கு வந்தன..இப்போதும் கூட பல சொற்கள் நடைமுறையில் இருக்கின்றன..
உதாரணமாக..தற்போது உலகெங்கும் பிரபலமாக இருக்கும் “Big Brother" எனப்படும் ஒரு நிகழ்ச்சியின் கரு இந்த புத்தகத்தில் இருந்தே வந்தது (ஒரு வீட்டில் சில பிரபலங்கள் சில மாதங்கள் தங்க வேண்டும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் காமிரா மூலம் கண்காணிக்கப்படும்).
Double think, Thoughtcrime, Newspeak போன்ற பல பதங்கள் அந்த புத்தகம் வந்த பின்பே பிரபலமாகின.
மேலும் “Big brother is watching you" போன்ற சொற்றொடர்களும் இதன் மூலமே பிரபலமாகின.
பல முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி எண்ணங்கள் தோன்றும்.
நிறைய நாட்களுக்கு பிறகு கடந்தமாதம் மேலும் ஒரு முறை 1984 ஐ படிக்க நேர்ந்தது. தற்போதைய இந்தியாவிற்கும் 1984 நாவலுக்கும் எதோ தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது.
சரி இப்போது நாவலுக்குள் செல்வோம்.
அது ஒரு கற்பனையான நாடு, அதன் பெயர் ஓசோனியா. அதன் தலைவர் அனைவராலும் "பிக் பிரதர்" என்று அழைக்கப்படுகிறார்.
Thursday, July 28, 2011
ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்
இதென்ன!, மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதா? என்ன சொல்லுறாங்க! என்று கேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்
"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".
எப்படி செய்கிறார்கள்
"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது
எதற்க்காக செய்கிறார்கள்
மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோ, மனிதர்களிடமோ செய்வதற்கு முன், உயிரின செல்களிடம் செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்று காண்பர். இதனை போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும் பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்
சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர் செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.

போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை மருந்துகளும் முதன் முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில் தான். சொல்லப் போனால் ஒரு புது மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள் உருவாக்கி இருக்கின்றன. இன்னும் கூட பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவ ஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...
ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடைய உடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரிய இண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும் அறிந்திருக்க வில்லை.
புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் ஹென்றிட்டா மருத்துவர்களை அணுகி இருக்கிறார், ஆனால் அவர்கள் இவருடைய செல்லை எடுத்து எப்படி டிஷ் இல் வளர்க்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்திருககிறார்கள் அந்த மருத்துவர்கள். அதனை தவிர கதிரியக்கத்தை கொண்டு எப்படி புற்று நோய் கட்டிகளை கரைப்பது என்ற அப்போதைய புது தொழில்நுட்பத்தை அவர் மீது செலுத்தி ட்ரையல் அண்ட் எரர் முறையில் நிறைய சோதனைகள் அவர் மீது நடத்தி இருக்கிறார்கள்.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இனவெறி அதிகமாக அமெரிக்காவில் இருந்த சமயத்தில், கறுப்பர்களுக்கு என்று தனி மருத்துவமனை, தனி வார்டு, அவர்களுக்கு அளிக்கப்பட மாற்றான் பிள்ளை ட்ரீட்மென்ட் எல்லாம் அந்த புத்தகத்ததில் படிக்கும் போது இப்போது இருக்கும் அமெரிக்காவின் ஐம்பது வருடத்திற்கு முந்தய கொடூரமான முகம் தெரிகிறது.
அவ்வளவு ஏன், ஹீலா செல்கள் யாரிடம் இருந்து வந்தன என்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. எங்கே இவரிடம் இருந்து வந்தது என்று தெரிந்தால் இனவெறி பிரச்சனை வரும் என்றோ அல்லது பண பிரச்சனை வரும் என்றோ மிக ரகசியமாக அதனை மறைத்து இருக்கிறார்கள்.
எப்படியோ, முடிவாக ரெபேக்கா ஸ்க்லூட் என்ற பெண் எடுத்த அயராத முயற்ச்சியின் விளைவாக தற்போது ஹென்ரிட்டா பற்றி அறிய முடிகிறது. தானோ தன் குடும்பமோ சுகப்படாவிட்டாலும் கூட, மருத்துவ ஆராய்ச்சி உலகில் தனக்கென்று ஒரு நீங்கா இடம்பெற்று விட்டார் செத்தும் கொடுத்த ஹென்ரிட்டா லாக்ஸ் அவர்கள்.
Thursday, January 27, 2011
எல்லாம் பயமயம்!
உண்மையில் ஒருவருக்கு இப்படி பய உணர்வு இருக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் உன்மையில் மனிதர்களுக்கு இருக்கும் பய லிஸ்ட் மிக பெரியது என்று தோன்றுகிறது.
- முடி கொட்டிட்டா என்னாவது?
- பரு அல்லது சுருக்கம் வந்தால் முகம் அசிங்கமாயிடுமோ?
- லேட்டஸ்ட் மாடல் பொண்ணை/பையனை போல டிரஸ்/ செல் போன்/பைக்வாங்காட்டி யாரும் நம்மை பார்க்க/மதிக்க மாட்டாங்களோ?
- அந்த பொண்ணு/பையன் என்னை கிண்டல்/சைட் அடித்தால்/அடிக்காட்டி என்ன செய்வது?
- வாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினால் என்னாவது?
- ப்ரோமோஷன் கிடைக்கா விட்டால் என்னாவது?
- மெமோ கிடைத்து விட்டால் என்ன செய்வது?
- வேலையை விட்டு தூக்கிவிட்டால் என்ன செய்வது?
- பதவி போயிட்டா என்னாவது?
- பக்கத்து வீட்டுக்காரன்/காரி என்னை பத்தி என்னா நினைப்பா?
இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பெரிய லிஸ்ட் கட்டாயம் இருக்கும்
உண்மையில் நமது சமுதாயம் சிறுவயது முதலே நமக்கு பயங்காட்டியே ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக "பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்", "பிள்ளை பிடிகிறவன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்", "சரியா சாப்பிடாட்டி பூனை வந்துடும்"என்று குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க பயத்தை உண்டாக்குகிறோம்.
சிறுவர்கள் ஆன பிறகு இது போன்று எதுவும் கிடையாது என்பதில்லை, அப்பொழுது வேறு மாதிரியான பயஉணர்வு ஏற்படுத்தி ஒழுக்கத்தை போதிக்கிறோம். உதாரணமாக, "ஒழுங்கா சாப்பிடாட்டி TV கிடையாது", "ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணாட்டி கிரிக்கெட்/கேம் கிடையாது", "ஒழுங்கா படிச்சு first ரேங்க் வராட்டி vacation கட் " போன்றவை.
இதனை போன்ற பயத்தின் மூலம் ஒழுக்கம் என்பது பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. உதாரணமாக "தப்பு செய்தால் போலீஸ் பிடிக்கும்", "பாவம் செய்தால் நரகத்துக்கு போவோம்", "படிச்சு, பாஸ் செய்யாட்டி வேலை கிடைக்காது" என்பது போன்ற சில.
அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் தரப்படுவதால் தான் அங்கு குற்றம் நடப்பதும் குறைவாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் திரைஉலகில் அந்த காலத்து வாத்தியார் படங்களில் இருந்து இந்த காலத்து அன்னியன் வரை பல படங்கள் இதனை வலியுறுத்துகின்றன.
தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துகொண்டே குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்து “நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா?” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா? இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?
என்ன இது லூசு தனமா இருக்கு என்று நினைகிரீர்களா? இப்படி ஒரு சூழலை மையமாக கொண்டது தான் நான் இப்பொது வாசித்த Paulo Cohelco வின் புத்தகமான The Devil and miss Prym இல் கேட்கப்படும் கேள்வி இது..என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.
Tuesday, January 11, 2011
நேரு - எட்வினா மௌன்ட்பாட்டன்

நான் பயோகிராபி புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை, ஏனென்றால் அவை போரிங் என்பது என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம், "Indian Summer: The Secret History of the End Of An Empire" by the historian Alex von Tunzelmann படிக்கும் வரை.
ஒரு அமெரிக்க நண்பரால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதி நாட்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறது என்றாலும், நேஹ்ருவுக்கும் மௌன்ட்பாட்டன் மனைவி எட்வினா விக்கும் இருந்த நட்பை போன்ற சில பர்சனல் விசயங்களையும் அந்த புத்தகம் விவரிக்கிறது.

நேஹ்ருவும், மௌன்ட்பாட்டன் மனைவி எட்வினாவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் நடப்பை பார்த்து மௌன்ட்பாட்டனே ஜூன் 1948 இல் தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில்" அவர்கள் இருவரும் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்" என்று கூறியதாக மௌன்ட்பாட்டன் மகள் பமீலா மௌன்ட்பாட்டன் India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power என்ற புத்தகத்தில் கூறி இருக்கிறார்.
இந்தியன் சும்மர் புத்தகத்தில் எட்வினா தன்னுடைய கணவருக்கு எழுதிய கடிதத்தில் "தனக்கும் நேஹ்ருவுக்கு இடையே உடல் தொடர்பில்லாத நல்ல நட்பு மட்டுமே இருந்தது " என்று எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
எது உண்மையோ தெரியவில்லை, ஆனாலும் தன் மனைவிக்கும் நேஹ்ருவுக்கும் இருக்கும் நட்பு தெரிந்தே, மௌன்ட்பாட்டன் இந்திய சுதந்திரத்தை சீக்கிரம் பிரகனப்படுத்துவதை ஆதரித்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த வருடம் இந்த புக் படமாக எடுக்கப்படுகிறது. அதில் எட்வினாவாக கேட் ப்லான்செலேட்ம் நடிக்கிறார். மௌன்ட்பாட்டேன் ஆக ஹுக் கிராண்ட்ம், நேஹ்ருவாக இர்பான் கானும் நடிப்பதாக அறிவிக்கபட்டிருக்கிறது.

இந்த படத்தில், எட்வினவுக்கும் நேஹ்ருவுக்கும் இடையே எந்த முத்தகாட்சியோ அல்லது நெருக்கமான காட்சிகளோ இருப்பது போல காட்டக்கூடாது என்று இந்திய அரசு ஆணையிட்டு இருப்பதாக தெரிகிறது.
எப்படியோ, ஒரு இந்திய சுதந்திரம் சார்ந்த ஒரு படம் வருவது so exciting!
Wednesday, December 29, 2010
சகுனங்களும் வாழ்கையும் !
சிறு வயதில் நிறைய பேர் சகுனங்கள் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். "நமக்கு நல்லது நடக்கிறதா இருந்தா சில பல சகுனங்கள் நமக்கு உணர்த்தும்" என்று என்னுடைய பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். சகுனங்கள் என்பது உண்மையா?, சகுனங்கள் நமக்கு எதனை உணர்த்துகின்றன. நிறைய பேர் "எனக்கு இப்போ நடக்கிறதெல்லாம் பார்த்தா நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்" என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்..அப்படியானால் நமக்கு சுற்றிலும் நடப்பவை நமக்கு எதையோ உணர்த்துகின்றனவா? இவை எல்லாம் எனக்கு நிறைய நேரம் எழும் கேள்விகள்.
சில மாதங்களாக வேலைக்கு முயற்சி செய்து ஒன்றும் சரியாக கிளிக் ஆகாத நிலையில் மனது வெறுத்து இருந்தேன். அந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் பாலோ கேல்ஹோ அவர்களின் தி அல்கெமிஸ்ட் என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.
- The Alchemist- : பாலோ கேல்ஹோவின் முக்கியமான புத்தகம். ஒரு மனிதனின் விதியை தேடிய பயணத்தை பற்றியது இந்த புத்தகம். அது தன்னம்பிக்கை புத்தகமா அல்லது கதையா, நாவலா எதிலும் வகைப்படுத்த முடியாத படியான அருமையான புத்தகம் அது. இப்போது படிக்கும் போது ஒரு வகையான எண்ணங்களை தருகிறது இந்த புத்தகம், ஒரு வேலை சில வருடங்கள் கழித்து படிக்கும் போது வேறு எண்ணங்கள் எனக்கு தோன்றக்கூடும்.
ஒரு மனிதன் தன்னுடைய விதியை நோக்கி பயணம் செய்யும் போது இந்த உலகமும் அதனை சார்ந்த அனைத்தும் உதவும் என்று அந்த புத்தகத்தில் படித்தேன். எத்தனை தூரம் இது உண்மை.
சில காரியங்களை செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் எல்லாமே நல்ல படியாக நடப்பது போன்று இருக்கும், ஆனால் நாட்கள் ஆக ஆக தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலை எடுக்கும். பின் ஒரு கட்டத்தில் எல்லாமே முடிந்து விட்டது நமக்கு இதில் எதிர் காலமே இல்லை என்று அந்த காரியத்தை ஊத்தி மூட நினைப்போம், அப்போது எல்லாமே நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் எதனை குறிக்கின்றன?
அந்த புத்தகத்தின் படி இயற்கை/விதி எதுவோ ஒன்று நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்த முதலில் நம்பிக்கை தருவது போல சில லக் ஐ தரும் அது பிகிநேர்ஸ் லக் என்கிறார். பிறகு காலம் செல்ல செல்ல வாழ்கையை/உலகத்தை புரிய வைக்க நமக்கு கஷ்டத்தை தருகிறது. பலர் இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே என்று வருந்தி முயற்சியை கை விட்டு விடுகிறார்கள். அவர்கள் losers ஆகிறார்கள். ஆனால் முயற்சியை கைவிடாமல் கடைசி வரை முயல்பவன் ஜெயிக்கிறான்.
அதனை தான் ஒரு வேலை
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "
என்று வள்ளுவர் குறிப்பிட்டாரோ, தெரியவில்லை.
எப்படியோ அந்த புத்தகம் கிருஸ்துவ நம்பிக்கைகளை அங்கங்கே தூவினாலும் அது சொல்லும் கருத்துகள் மறுக்க முடியாததாக உள்ளன.
சில நாட்களுக்கு முன் CNN ஹீரோவான மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் இங்கு நியூ ஜெர்சி வந்திருந்த போது ஒன்று குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது, "நல்ல காரியம் செய்யனும்னு நான் ஆரம்பிச்சது தாங்க, நல்ல காரியம்னு ஆரம்பிச்சவுடன் fund தானா வர ஆரம்பிச்சது, எனக்கு பின்னால யாரவது இதனை தொடர்ந்து நடத்த ஆள் கட்டாயம் வருவார்" இது நாராயணன் கிருஷ்ணன் சொன்னது. இதனை தான் சகுனங்கள் என்பதோ?
டிஸ்கி: இந்த பதிவு புத்தக விமர்சனமா, அனுபவமா அல்லது கொசுவர்த்தியா எனக்கே தெரியவில்லை!
Wednesday, November 3, 2010
The Metamorphosis - எனது பார்வையில்

கடந்த வாரம் தெகா அவர்கள் தன் தளத்தில் Franz Kafka வின் The Metamorphosis புத்தகம் பற்றிய அறிமுகமும் சுட்டியும் கொடுத்திருந்தார். Metamorphosis என்பது சில உயிரினங்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் என்று நான் அறிந்திருந்தாலும் , காஃப்கா பற்றி நான் அறிந்திருக்கக்வில்லை.
மாற்றம் என்பது மாறாதது, என்பதே கதையின் கரு. கதையின் நாயகன் கிறிகர் மூலம் அது காட்டப்படுகிறது. வளர்சிதை மாற்றம் என்பது வெளி தோற்றத்தில் ஏற்படுவது என்பது அறிவியல் கூறும் கருத்து. இந்த புத்தகத்தில் மற்றொரு மாற்றமும் நமக்கு அறிமுகப்படுத்தபடுகிறது. அது மனித மனங்களில் ஏற்படும் மாற்றம்.
கதையின் நாயகன் கிறிகர் சம்சா ஒரு சேல்ஸ் மேன். தன் தந்தை பட்ட கடனுக்காக ஒரு கம்பெனியில் அடிமை போல இரவு பகல், நாள் கிழமை எதுவும் பார்க்காமல் தனக்கென்று எதை பற்றியும் யோசிக்காமல் வேலை பார்கிறான். ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது தன் உடல் ஒரு பூச்சி போன்று மாறி விட்டதை போன்ற புறமாற்றத்தை பார்கிறான். அது ஒரு புற மாற்றமாகவே அவனுக்கு தெரிகிறது. அது சீக்கிரம் சரியாகிவிடும் தன் பணியை தொடரலாம் என்றே அவன் நினைக்கிறான்.
ஆனால், மற்றவர்களுக்கு அவன் உதவாக்கரை ஆகி விட்டான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது அவனை சார்ந்த மனிதர்களின் மனங்களின் மாற்றங்கள். படிப்படியாக அவன் இருப்பை பற்றியும், அவனை பற்றிய நினைவுகளையும் அனைவரும் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.
அவன் இருந்த அறை பழைய சாமான்கள் வைக்கும் அறையாக மாறுகிறது. பழைய மிச்சம் மீதிகள் அவனுக்கு உணவாகின்றன. அவன் தன்னுடைய அறையை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனாலும் ஒரு முறை தன் அறையில், தான் இருக்கும் நிலையை பார்த்து அவன் தாய் மயங்கி விழுந்து விடுகிறாள். அதற்க்கு அவனை காரணம் காட்டி அவன் தந்தை அவனை ஆப்பிள் பழங்கள் கொண்டு வீசி எரிய ஒரு பழம் அவன் முதுகில் பதிந்து புண் ஆகி ரணமாக ஆரம்பிக்கிறது. யாருக்கும் அவனுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் போகிறது.
ஒரு நாள் தன் குடும்பம் பேசும் போது அவன் கேட்க நேரிடுகிறது, அதில் அவனுடைய தந்தை அவனுக்கு தெரியாமல் அவன் சம்பாத்தியத்தை சேர்த்து வைத்திருப்பதாகவும் இன்னும் சில காலம் அது குடும்ப செலவுக்கு பயன்படும் என்றும் அறிகிறான். தந்தை சேர்த்து வைத்த அந்த பணம் தனக்கு கொடுத்திருந்தால் முன்னமே அவன் செய்த அடிமை வேலையை விட்டு விட்டிருக்கலாமே என்றும் நினைக்கிறான். ஆனாலும், தன் தந்தை செய்தது நல்லது தான் என்றும் நினைக்கிறான்.
அது நாள் வரை அவன் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்து கொழுத்த அவன் சொந்தங்கள் இப்போது வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவன் செத்து தொலைந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இவன் ஒரு ஒட்டுண்ணி ஆக தெரிகிறான். ஆனால் அவர்களே இத்தனை நாள் அவனை சார்ந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்தார்கள் என்பதை மறக்கிறார்கள். ஒரு நாள் அவன் மூச்சை விடுகிறான் அவன் குடும்பம் "தொலைந்தது சனியன்" என்று நிம்மதி அடைகிறது. அவன் பெற்றோரின் கவனம் அவன் இளவயது தங்கையின் மேல் விழுகிறது. "அவளின் இளமை அவர்களின் கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறது". புத்தகம் முடிகிறது.
கிறிகர்யிடம் உடல் சார்ந்த மாற்றம் மட்டுமே நிகழ்கிறது. அதனை தவிர அவன் மனதளவில் அவன் அவனாகவே இருக்கிறான். ஆனால் பெரும் மாற்றத்திற்கு உட்படுபவர்கள் அவன் சொந்த பந்தங்களே.
புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது ”96 பக்கம் தானே சீக்கிரம் முடிச்சிடலாம்” என்றே ஆரம்பித்தேன். படிக்க படிக்க ”ஒவ்வொரு வாக்கியத்தையும் பல முறை படிக்க வேண்டுமோ? , ஒவ்வொன்றுக்கும் பல அர்த்தம் இருக்கும் போல” என்று தோன்றுகிறது.
இப்படி ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து நெடுநாட்கள் ஆகி விட்டன. இப்படி பட்ட புத்தகத்தை அறிமுகம் செய்த தெகா வுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
Monday, September 20, 2010
திரைப்படமும், வாசிப்பனுபவமும்

இப்படி நிறைய எனக்கு பிடித்த புத்தகங்கள் திரைப்படங்களாக மாறும் போது ஏமாற்றம் தருவது உண்டு. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள், படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட திரைபடமாக மாறும் போது ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படி எனக்குள் தாக்கம் ஏற்படுத்திய ஒரு புத்தகம்/திரைப்படம் Khaled Hosseini அவர்கள் எழுதி Marc Forster அவர்கள் இயக்கிய The Kite Runner.
2000 ஆம் ஆண்டு கதைமாந்தர் அமிரின் நினைவுகளாக படம் ஆரம்பிக்கிறது. ஆப்கானிஸ்தானில் 1978 இல் சோவியத் படைகள் நுழைவதற்க்கு ஒரு சில மாதங்களுக்கு முந்தய அமைதியான, அழகான காபூல் நகரம் அது. குழந்தைகள் குதூகலத்துடன் பட்டம் விட்டு கொண்டிருக்கின்றனர். அதில் உயர்ந்த குலத்தை சேர்ந்த பணக்கார அமிரும், தாழ்ந்த குலத்தை சேர்ந்த அமிர் வீட்டில் வேலை செய்யும் ஹாசனும் அடுத்து நடைபெரும் பட்டப்போட்டியில் எப்படி ஜெயிப்பது என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.
பட்டபோட்டியின் விதிகளின் படி, பட்டத்தை ஒருவர் அறுத்த பிறகு தன் பட்டத்துடன் அறுந்த பட்டத்தையும் ஓடி சென்று எடுக்க வேண்டும், அப்படி செய்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்க படுகிறார். அமீர் ஒவ்வொரு பட்டத்தை அறுக்கும் போதும் ஹாசன், அமீருக்கு அறுந்த பட்டத்தை எடுத்து வரும் Kite Runner ஆக இருக்கிறான்.
தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனாக வீட்டு வேலைகாரனாக ஹாசன் இருந்தாலும் அவன் மீது தன் தந்தைக்கு அதிக பாசம் இருப்பதாக அமீர் எப்போதும் பொறமை படுகிறான். எப்படியும் வரும் பட்டப்போட்டியில் வெற்றி பெற்று தந்தையிடம் நல்ல பேர் பெறவேண்டும் என்று அமீர் நினைக்கிறான்.
பட்டபோட்டி நாள் வருகிறது. ஒவ்வொரு பட்டமாக அமீர் அறுக்க அமிரின் தந்தை குதூகளிக்கிறார். கடைசி பட்டத்தையும் அறுத்த பிறகு ஹாசன் அறுந்த அந்த பட்டத்தை எடுக்க ஓடுகிறான், அவனை தேடி அமிரும் பின் செல்கிறான். அப்போது உயர்ந்த இனத்தை சேர்ந்த சில சிறுவர்கள் ஹாசனை சூழ்ந்து கொண்டு பட்டத்தை கொடுத்து விடும்படி மிரட்டுகிறார்கள். "இது அமீர் உடையது கொடுக்க முடியாது" என்று ஹாசன் மறுக்க அவனை பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்து கின்றனர். இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அமீருக்கு அதிலிருந்து குற்றஉணர்ச்சி மனதில் ஏற்பட அதிலிருந்து தப்பிக்க ஹாசன் குடும்பத்தின் மீது திருட்டு பட்டம் காட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.
சில மாதங்களில் சோவித் படைகள் காபூலில் நுழைய உயிருக்கு பயந்து அமிரும் அவன் தந்தையும் பாகிஸ்தானுக்கு செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்க வருகின்றனர். அமீர் வளர்ந்து திருமணம் செய்யும் வரை அவன் தந்தை அவனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். அமீர் ஒவ்வொரு முறை வெற்றி பெரும் போதும் "ஹாசன் இப்போ இருந்த நல்ல இருக்கும்" என்று கூறுகிறார்.
அமிரின் தந்தை இறந்த பிறகு அவன் தந்தையின் நண்பர் மூலம் ஹாசன் தன்னுடைய சகோதரன் என்றும், தன் வீட்டு வேலைகாரிக்கும் தந்தைக்கும் பிறந்தவன் என்றும் அமீர் அறிகிறான். மேலும் ஹாசன் இப்போது உயிரோடு இல்லை என்பதும் தாலிபான் படைகளால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்பதும் தெரிய வரும் போது அமீர் மனம் வருந்துகிறான். அவனுக்கு மேலும் துன்பம் சேர்க்கும் வண்ணம் ஹாசனின் மகன் சொஹ்ராப் இப்போது அனாதையாக யாருமில்லாமல் தாலிபான்கள் வசம் உள்ளான் என்றும் அறிகிறான்.
சொஹ்ரப்பை மீட்டு வர காபூல் கிளம்புகிறான், அவன் பார்த்த அழகான அமைதியான காபூல் நகர் அழிந்து விட்டு இருக்கிறது. ஒரு மைதானத்தில் ஒரு பெண்ணை கல் எறிந்து கொள்வது, நடு ரோட்டில் சுட்டு கொள்வது, தாடி இல்லாதவர்களை சுடுவது, நினைத்த போது யாரையும் கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது போன்ற தாலிபான்கள் ஆதிக்கம் அவனுக்கு அதிர்ச்சி தருகிறது.
சொஹ்ராப் ஒரு பெண்ணைப்போல உடைகளை அணிந்து நடனம் ஆடுவதை பார்கிறான், தாலிபான்கள் வசம் இருந்த சொஹ்ரப்பை பலத்த காயங்களுடன் ஒரு வழியாக மீட்டு வீடு திரும்புகிறான்.
புத்தகமாக இதனை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை விட அதனை படமாக பார்க்கும் போது மனதை நெகிழ செய்தது இந்த படம்.
Monday, August 30, 2010
A House for Mr Biswas - ஒரு சொந்த வீட்டுக்கான கனவு

அது மூட நம்பிக்கைகள் அதிகம் நிறைந்த கிராமம். அங்கு ஏழை ஒருவர் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. "குழந்தை பிறந்த நேரம் சரியில்லை, அவன் ஒரு பெண்பித்தனாக ஊதாரியாக இருப்பான், தந்தை தாயை விழுங்கி விடுவான், அதனால் தோஷம் கழிய அவனை தண்ணீர் அருகில் செல்ல விடாதீர்கள்" என்று அங்கு இருக்கும் ஜோதிடர் கணிக்கிறார். அவனுக்கு மோகன் என்று பெற்றோர் பெயரிடுகின்றனர். அவனுடன் குடும்ப பெயரான பிஸ்வாஸ்ம் சேர்ந்து அவன் மோகன் பிஸ்வாஸ் என்று அழைக்க படுகின்றான்.
சில ஆண்டுகளுக்கு பின் சிறுவன் பிஸ்வாஸ் ஒரு கன்று கன்றுக்குட்டியை துரத்தி போகிறான், அது ஒரு நீரோடைக்கு அருகில் செல்ல வாழ்நாளில் நீரோடையை முதலில் பார்த்து மெய் மறந்து கன்று குட்டியை மறந்து விடுகிறான். அந்த கன்று குட்டி நீரில் விழுந்து இறந்து விடுகிறது. அதனை தேட சென்ற அவன் தந்தையும் நீரில் மூழ்கி இறக்க அங்கே ஆரம்பிக்கிறது பிஸ்வாஸ் இன் கஷ்ட காலம்.
அப்பாவை இழந்த, பள்ளிகூடத்தில் இருந்து நிறுத்தபட்ட அவன் ஒரு குருக்களிடம் வேதம் கற்று கொள்ள அனுப்பி வைக்க படுகின்றான். அவன் அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் அவன் சொந்த காரர்கள் உடன் தங்குகிறார்கள். அவன் அக்கா வசதியான அவனுடைய மாமா அத்தை உடன் சென்று தங்க குடும்பம் திசைக்கு ஒன்றாக பிரிகிறது.
சிறிது நாட்களில் குருக்கள் வீட்டில் பிடிக்காத சில விஷயங்கள் நடப்பதை அவன் பார்த்து விடுகிறான், உடனே குருக்கள் அவன் சுத்த பத்தமாக இல்லை என்று சொல்லி அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். அவன் அத்தை தன் தம்பி கடைக்கு வேலைக்கு அனுப்ப அங்கும் நடக்கும் தில்லு முல்லுகளை அவன் கண்டறிகிறான் அதனால் அங்கிருந்தும் வெகு விரைவில் வெளியேற்றப்படுகிறான்.
வெளியே வந்த பிஸ்வாஸ் தன் தாயிடம் சென்று தன்னை யாரிடம் தன்னை தங்க அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொள்கிறான். பிறகு என்ன வேலை செய்வது என்று தெரியாமல் தெருவில் சென்று கொண்டிருந்த பிஸ்வாஸ் பள்ளிகூட நண்பனை சந்திக்கிறான். அந்த நண்பன் sign board எழுதும் வேலையை கற்றுகொடுக்க, அதனையே ஒரு தொழிலாக அவன் எடுத்து கொள்கிறான்.
சில வருடங்களுக்கு பிறகு அவன் sign-board எழுத ஒரு கடைக்கு செல்கிறான் அங்கே இருக்கும் கடைகாரர் மகளை பார்த்து காதல் கொள்கிறான் . அந்த கடை காரர் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய துளசி குடும்பம் என்று அழைக்கபடுகிறது. இதனை அறிந்த அந்த கடைகாரர் அவனுக்கே அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க அவன் அம்மாவுக்கும் மற்றைய உறவினர்களுக்கும் நிம்மதி ஏற்படுகிறது.
அவனுக்கு என்று சொந்த வீடு என்று எதுவும் இல்லாததால் துளசி குடும்பத்துடன் அவர்களின் வீடான அனுமான் ஹவுஸ் இல் தங்குமாறு அவன் தாய் கூறுகிறாள். ஹனுமான் ஹவுஸ் சென்ற சில நாட்களிலேயே அந்த வீட்டு பெண்கள் தங்கள் கணவர்களுடன் அங்கு தங்கியிருப்பது தெரிகிறது. அவர்களின் கணவன் மார்கள் அந்த வீட்டுக்கு கூலியில்லாத வேலைகாரர்கள் ஆக மாறி இருப்பதும் பிஸ்வாசுக்கு தெரிய வருகிறது.
எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று அவன் விடாமல் முயற்சி எடுக்கிறான். அவன் அனைத்து முயற்சிகளையும் துளசி குடும்பத்தினர் முறியடிக்கிறனர். ஓவ்வொரு முறை தோற்கடிக்க படும்போதும் தனக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற அவனது வெறி அதிகமாகி கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் கூட தாண்டாத அவன் சிறிது சிறிதாக முயற்சி செய்து ஒரு பத்திரிக்கையாளர் ஆக மாறுகிறான்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனக்கென ஒரு வீடு கட்டுகிறான், தான் மனைவி குழந்தைகளுடன் அங்கு குடியேறுகிறான். ஆனால் அங்கு சென்ற சில காலத்தில் நாற்பது நாற்பத்தைந்து வயதிற்குள் அவன் வாழ்க்கை முடிகிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபல் பரிசு வென்ற திரு. V. S. நைபால் அவர்களின் எழுத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய மிக முக்கியமான நாவல் இது. நாவல் நடப்பதாக காட்டப்படுவது இந்தியாவில் அல்ல. ட்ரினிடாட் நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதியில் கதை நடப்பதாக சித்தரிக்க படுகிறது. நைபால் அவர்களின் எழுத்து நடை கட்டிபோட வைக்கும். என்னை மிகவும் பாதித்த நாவல்களில் இதுவும் ஒன்று.
Wednesday, May 26, 2010
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன்

Tuesday, April 20, 2010
உலகம் தட்டையானது (The World is flat)

சில நாட்களுக்கு முன் தாமஸ் எல். பிரீட்மான் எழுதிய "The World is flat - உலகம் தட்டையானது ", புத்தகம் படிக்க நேர்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் information age எனப்படும் அதி நவீன காலத்திற்கு நம்மை இட்டுச்சென்ற முக்கிய காரணிகளை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தபால், கடிதம், செய்திதாள்கள், தூர்தர்ஷன் இவைதான் இருந்தது. ஆனால் இன்று SMS பற்றி தெரியாதவரை வேற்று கிரக வாசி போல பார்க்கின்றனர். ஒரு வீட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி இருக்கிறது. கைபேசியுடன், டிஜிட்டல் கேமரா, இன்டர்நெட், FM ரேடியோ, ஆயிரக்கணக்கான டிவி சேனல்கள் என்று அனைத்து வசதிகளும் உண்டு. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் சில நொடிகளில் நம்மை வந்தடைந்து விடுகின்றன.
இது எப்படி சாத்தியமானது?
பிரீட்மான் அவர்களின் கூற்றுப்படி உலகத்தை தட்டையாகிய காரணிகள் சில
1 . முதல் காரணி 1989 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெர்லின் சுவர் இடிப்பு அல்லது சோவியத்தில் கம்யுனிசத்தின் வீழ்ச்சி - சோவித் யூனியனின் வீழ்ச்சி, அதன் பொருளாதார அமைப்பை போன்று பின்பற்றிய இந்தியா, சீனா போன்ற நாடுகளின் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறக்க வழிகோலியது.
2. இன்டர்நெட் - மனிதரின் துணை இல்லாமல் ஒரு இயந்திரம் அடுத்த எந்திரத்துடன் தொடர்பு கொள்ள உதவிய SMTP , HTTP போன்ற தொடர்ப்பு தொழில்நுட்பம் . இவை PC எனப்படும் தனிக்கணினியை ஒன்றுடன் ஒன்று இணைக்க உதவியது. Intranet ஆக இருந்த கணினி இணைப்பு பின்பு இன்டர்நெட் ஆனது இதனை போன்ற மென்பொருள்களின் உதவியால் தான்.
3 . Netscape போன்ற browser கள் - இவை இண்டர்நெட்டை ஐந்து வயது குழந்தைகளில் இருந்து எழுபது வயது பெரியவர்கள் வரை கொண்டு சேர்த்தது. அனைத்தும் virtual மயமாக்கப்பட்டது. அதாவது இங்கிருந்த படியே நான் இந்தியாவில் இருக்கும் கணினியை இயக்க முடியும்.
4 . Open source - யார்வேண்டுமாயினும் எதைவேண்டுமாயினும் எழுத, பகிர உதவும் Open source மென்பொருட்கள், வலையுலகம், விக்கிபீடியா போன்றவை.
5 . Outsourcing & Offshoring - ஓரிடத்தில் இருக்கும் வேலையை வேறு வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்புதல். பிரீட்மான்னின் கூற்றுப்படி நிறுவனங்கள் தங்களின் லாபத்தை கணக்கில் கொண்டு எங்கு கூலி குறைவாக வேலை அதிகமாக செய்து தருவார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு outsource செய்வது . உதாரணமாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செய்து தரப்படும் துணிமணி, பொம்மை, தளவாடங்கள் போன்ற அனைத்து பொருட்களும், இந்தியாவில் இருந்து செய்து தரப்படும் மென்பொருட்கள், BPO க்கள் போன்றவை. இதனால் மக்களிடம் ஏற்பட்ட பணப்புழக்கமும் ஒரு காரணம்.
இவை எல்லாம் பிரீட்மான் அவர்கள் சொல்லும் உலகம் தட்டையானதிற்க்கான சில காரணிகள். இதனை எல்லாம் சொல்லிவிட்டு அவர், அமெரிக்கர்கள் உலகத்துடன் போட்டியிட வேண்டுமாயின் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதெல்லாம் சரி தான், ஆனால், நேற்று என்னுடைய கணவர், தான் இந்தியா பற்றி ஒரு செய்தி படித்ததாக கூறினார். அது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. அதன் படி இந்தியாவில் இருக்கும் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கைபேசிகளின் (cellphone) எண்ணிக்கை அதிகம் என்று அது தெரிவிக்கிறது.
ஆமாம், உலகம் தட்டையாகி விட்டது. கழிவறைக்கு கூட கைபேசி எடுத்து செல்கின்றனர் சிலர். ஆனால் கழிவறை தான் போதுமான அளவு இல்லை.










