Showing posts with label சில பெண்கள். Show all posts
Showing posts with label சில பெண்கள். Show all posts

Saturday, March 12, 2016

மாதவிடாய் மனிதரும், இந்தியாவின் மகளும் மற்றும் தாலிக்கொடியின் கனமும்!

இரண்டு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது இரண்டும் பெண்களை குறித்தது என்றாலும் இரண்டும் மனதை பிசைந்த விடயங்கள். முதல் விஷயம் ஒரு நம் மண்ணின் மைந்தனின் சாதனை என்றால், இரண்டாவது  ஒரு சிலரால் நமக்கு ஏற்பட்ட தலைகுனிவு குறித்தது.

நான் தற்பொழுது முகநூல் பக்கமே செல்வது இல்லை. நேரமின்மை ஒரு காரணம் என்றாலும், ஏதாவது ஒரு மொக்கை ஜோக், அல்லது அரசியல் வாதிகளை கலாய்க்கும் காமெடி வரும்.இதெல்லாம் பார்க்குறது தேவையா என்று நினைத்து செல்வது இல்லை. உபயோகம் என்றால் அவ்வப்போது அறிவியல் வெப்சைட்களில் இருந்து கொஞ்சம் கட்டிங் எட்ஜ் செய்திகள் வரும். அதனை பார்க்க மட்டுமே நான் உபயோகிப்பது.

பல நாட்களுக்கு பிறகு முகநூலை திறந்த பிறகு ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. மனதை தொட்ட வீடியோ அது. "எப்படி  சின்ன சின்ன விஷயங்கள் பெரிய மாற்றத்தை தரும்" என்பதற்கு உதாரணமாக இருந்த ஒருவரை பற்றிய அல்ஜீரா வீடியோ. இதில் இன்னும் சந்தோசம் என்னவென்றால் அது ஒரு தமிழரை பற்றிய வீடியோ.

அவரை பற்றிய ஒரு செய்தியும் NPR செய்தியில் கேட்க நேர்ந்த போது, ஆச்சரியமாக இருந்தது. அவரை குறித்த ஒரு டாகுமெண்டரி யும் இருப்பதை கண்டு, இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று அதிசயமாக இருந்தது. அது அருணாசலம் முருகானந்தம் எனப்படும் "மாதவிடாய் ஆகும் ஆண்" ஒருவரை பற்றிய டாகுமெண்டரி.




இந்தியாவில் ஒன்றில் பத்து பெண்கள் பள்ளியை விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம் மாதவிடாய் நேரங்களில் சுகாதாரமான சானிடரி நாப்கின் கிடைக்காமல் கரைகளுக்கு பயந்து அல்லது ஒதுக்கப்பட்டு வெட்கப்பட்டு விலகுவது. அல்லது பழைய துணிகளை உபயோகித்து நிறைய நோய்களுக்கு ஆளாவது என்று பல பல பிரச்சனைகள் சந்திக்கிறார்கள். எப்படி இது போன்று இருக்கும் பெண்களுக்கு குறைந்த செலவில் நாப்கின்கள் உபயோகிக்க கொடுப்பது கிடைக்க செய்வது என்று முயற்சி செய்து வென்று காட்டிய ஒரு சாதாரண மனிதனின் சாதனை இது. தன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் எப்படி தன் மனைவியால் சொந்த பந்தங்களால் புறக்கணிக்க பட்டது, தன்னுடைய சோதனை முயற்சியை வெற்றியடைய செய்ய தானே சானிடரி நாப்கின் அணிந்து முயற்சி செய்தது என்று அருணாசலம் முருகானந்தம் அவர்களின் ஒவ்வொரு செயலும் வியக்க வைத்தன. இவற்றை எல்லாம் விட எனக்கு மிக மிக ஆச்சரியமும் பெருமையும் பட வைத்தது, இவரை பல பெரிய பெரிய கம்பனிகள் அணுகி இவரின் மெசினை வாங்க முயற்சி செய்தாலும் இது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று யாருக்கும் விற்காமல் உறுதியுடன் இருக்கும் இவரை பார்த்தவுடன், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறதோ என்று என்ன தோன்றுகிறது.


அடுத்த டாகுமெண்டரி, "இந்தியாவின் மகள்" எனப்படும் BBC வீடியோ. 2012 இல் நிகழ்ந்த நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை குறித்த டாகுமெண்டரி. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த டாகுமெண்டரி நெட்ப்ளிக்ஸ் புண்ணியத்தில் பார்க்க நேர்ந்தது. சமீப காலத்தில் நான் பார்த்த பல நிகழ்ச்சிகளில் என்னை மிக மிக உலுக்கிய ஒன்று உண்டென்றால் அது இது தான்.





அந்த பெண் அனுபவித்த ஒவ்வொரு நிகழ்வும் நினைக்கவே மனது வலிக்கிறது. இது நிர்பயா மட்டும் அல்லாமல் நிர்பயா போன்றே எத்தனை எத்தனை பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று  மனம் வலிக்கிறது. இவற்றை எல்லாம் விட எனக்கு மிகவும் வலித்தது பெண்களை குறித்த குற்றவாளியின் வாக்குமூலம்.  இது குற்றவாளி என்று மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பாதிக்கு  பாதி படிப்பறிவில்லாத பல ஆண்களின் மனவோட்டமாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. என்ன தப்பு நாங்கள் செய்து விட்டோம் என்று கூறும் குற்றவாளிகள் இருக்கும் வரை,நம்மை  போன்ற நாடுகள் எவ்வளவு தான் மற்ற விடயங்களில் முன்னேறியதாக அறிவிக்க பட்டாலும் என்னை பொருத்தவரை மிக மிக பின்தங்கிய நாடு மட்டுமே.

முடிவாக ஒரு லைட் மொமென்ட். அது என் அண்ணி கூறியது. மதுரையில் இப்பொழுதெல்லாம் ஒரு நம்பிக்கை நிகழ்வதாக அவர் கூறியது.  அதாவது  பெண்களின் தாலிக்கொடி எவ்வளவுக்கு எவ்வளவு தடிமனாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளின் கணவரின் ஆயுள் கெட்டியாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார். எப்படியெல்லாம் நகை கடை காரங்க கதை கட்டி விடுறாங்கள் பாருங்க என்று சிரிக்க தோன்றியது.

டிஸ்கி
இங்கு குறிப்பிட்ட அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே யாரையும் குறிப்பிடவில்லை.

நன்றி.


Thursday, April 8, 2010

Take it easy ஊர்வசி

என்னுடைய முந்தய மங்கையராய் பிறக்க பதிவில், நன்றாக படித்தும், சூழ்நிலையால் படிக்க முடியாமல் கஷ்டப்பட்ட சுதாவை பற்றி எழுதும் போதே எனக்கு இன்னொரு பெண் பற்றி ஞாபகம் வந்தது. இந்த பெண் அடுத்த extreme . அதன் விளைவே இந்த பதிவு.

அவள் என்னோடு முதுநிலை படித்தவள். இவளுக்கு வீட்டில் அனைத்து வசதிகளும் உண்டு. அவள் அம்மா, அப்பா இருவரும் பெரிய வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே. இவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது அவள் பெற்றோரின் எண்ணம். அதனால் வீட்டில் கண்டிப்பு அதிகம். ஆனால் அவளோ கல்லூரிக்கு பொழுது போக்க வருவாள்.

பொதுவாக பெண்கள் serious nature கொண்டவர்கள். பெண்களில் ஏமாற்றுபவர்கள் குறைவு, ஏமாறுபவர்கள் அதிகம். ஆனால் இவளோ ஏமாற்றுபவர்கள் லிஸ்டில் இருந்தாள்.

நான் முதுநிலை சேர்ந்த புதிதில், எங்கள் Seniors எங்களுக்கு Welcome party கொடுத்தனர். அதில் எங்களுக்கு அவர்களுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் seniors என்றால் ஒரு மரியாதையுடன் விலகியே இருப்போம், ஆனால் அவளோ எங்கள் seniors சிலரிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டாள்.

பிறகு அவர்களில் ஒரு சீனியர் ஐ தான் காதலிப்பதாக கூறினாள். எங்களுக்கு அவள் பற்றி எதுவும் அவ்வளவாக தெரியாததாகையால், அவள் சொன்னதற்கு நாங்கள் பதில் ஏதும் சொல்ல வில்லை. பின்னர் ஒரு சீனியர் அக்கா திருமணதிற்காக வெளியூர் செல்ல நேர்ந்தது, அங்கு சென்ற போது இவள் எப்போதும் அந்த சீனியர் அண்ணனுடன் தான் சுற்றி கொண்டு இருந்தாள். நாங்கள் அனைவரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று முடிவுக்கே விட்டோம். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை, அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிறகு சில நாட்களில் அந்த சீனியர் அண்ணன் வேலை கிடைத்து வேறு ஊருக்கு சென்று விட்டார், நாங்களும் இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்தோம். அப்போது நாங்கள் எங்களுடைய juniors இக்கு பார்ட்டி கொடுக்க வேண்டும். அப்போது ஒரு ஜூனியர் பையன் மிகவும் அப்பாவி அவர், எங்களுக்கு அறிமுகம் ஆனார்.

எங்கள் ஜூனியர், நல்ல அறிவாளி, அவர் இளநிலையில் நன்றாக மதிப்பெண் பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் GATE எக்ஸாம் க்கு தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்தார்.

இந்த பெண்ணின் பார்வை, எங்கள் ஜூனியர் மேல் விழுந்தது. எங்களுக்கு இவள் பற்றி முன்னமே தெரிந்து இருந்ததால், எங்கள் ஜூனியர் இடம் இவளை பற்றி ஜாடை மாடை ஆக சொல்லி பார்த்தோம். ஆனால் அவரோ என்ன மயக்கத்தில் இருந்தாரோ தெரியவில்லை. படிப்பில் அவரின் கவனம் குறைந்தது. ஒவ்வொரு வெள்ளிகிழமை மதியமும் அவர்களை அமிர்தம் தியேட்டர்இல் பார்க்கலாம். அப்படி ஒன்றாக ஊர் சுற்றினார்கள்.

அந்த பையன் அவளை அப்படி காதலித்தான் என்று தான் கூற வேண்டும். ஒரு முறை கையில் காசு இல்லை, ஆனால் இவளுடைய பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்ததால் அவர் எதோ சினிமாவில் வருவது போல, தன்னுடைய ரத்தத்தை விற்று ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுத்தார். அதனை அவள் எங்களிடம் எல்லாம் எதோ பெரிய சாதனை தான் செய்து விட்டது போல காட்டுவாள். நாங்கள் அனைவரும் கிட்டத்தட்ட இவள் அவரை ஏமாற்றி விடக்கூடாதே என்று பிராத்தனையே செய்ய தொடங்கி விட்டோம்.

ஆனால் இறுதி ஆண்டு முடிவில், மிகவும் கூல் ஆக ஒருநாள் எங்களுக்கு தன்னுடைய திருமண பத்திரிக்கையை நீட்டினாள். அதில் மாப்பிள்ளை அவளின் மாமா பையன். எங்களுக்கு எல்லாம் தூக்கி வாரிபோட்டது. அப்பொழுது எங்கள் ஜூனியர் பையனின் கதி என்ன என்று கேட்டோம். அவளோ, ஒரு சாரி சொல்லி தான் கடிதம் கொடுத்து விட்டதாக சொன்னாள்.

நான் அவள் கல்யாணத்திற்கு போகவில்லை, ஆனால் என்னுடைய juniors மூலம் நான் பின் தெரிந்து கொண்டது இது தான், அந்த ஜூனியர் பையன் முதல் வருடம் முழுவதும் நெறைய பாடங்களில் தேறவில்லை. பின்னர் காதல் தோல்வியில், GATE எக்ஸாம் இக்கும் படிக்க வில்லை. சில வருடங்கள் காதல் தோல்வியில் துவண்டு இருந்தார். பின்னர் தேறியதாக அறிந்தேன். இப்போது எங்கோ ஒரு தனியார் பள்ளியில் டீச்சர் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்கள். எப்படியோ வந்திருக்க வேண்டியவர் அவர், ஆனால் இவள் செய்த சதியால் எப்படியோ ஆகிவிட்டார்.