Showing posts with label நோய்கள். Show all posts
Showing posts with label நோய்கள். Show all posts

Monday, June 1, 2015

தைராய்டும், ஐயோடின் குறைபாடும், பெண்களும்

சில நாட்களுக்கு முன்னர் என் அம்மாவுக்கு இருக்கும்  தைராய்டு குறைபாடு பற்றி எழுதி இருந்தேன். ஆரூர் பாஸ்கர் அவர்கள் சிறிது விளக்கமாக எழுதும் படி கேட்டு கொண்டதிற்கு இணங்க, எனக்கு தெரிந்த அளவு தைராய்டு பிரச்சனைகள் இங்கே.

கிட்டத்தட்ட 40 வயதை கடந்த பல பெண்களுக்கு இப்போது தைராய்டு பிரச்சனைகள் வருகின்றன. பலர் ஹைபோ /ஹைபர் தைரைடிசம் கொண்டு இருக்கிறார்கள். பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்செர் அளவுக்கு வந்து இருக்கிறது. தைராய்டு என்பது என்ன, என்ன செய்யும் நமக்கு என்பது பற்றிய சிறு விளக்கம் இங்கே.



நம் கழுத்தை  சுற்றி, உணவுக்குழல் மற்றும் பேச்சு குழலை ஒட்டி butterfly வடிவம் கொண்டது தான் தைராய்ட்.

தைராய்ட் என்றால் என்ன?, எதற்கு உதவுகிறது ?

தைரோய்ட் நம் உடலில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். உடல் நிலையை சீராக்கும் ஹார்மோன்களை சுரக்க உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் உடலின் பல பகுதிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர உதவு கின்றன. உங்கள் உடலின் உணவு செரித்தலை கண்ட்ரோல் செய்வது, எனெர்ஜி எப்படி கன்ட்ரோல் செய்வது. என்று உங்கள் உடலின் metabolism அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது தைரோய்ட் ஹார்மோன் ஆகும்.

தைராய்டு ஹார்மோன் குறைந்தாலோ அதிகமானாலோ என்னவாகும் ?

உங்கள் உடலில் தைரோய்ட் ஹார்மோன் அளவு குறைந்தால் Hypothyroidism என்று அழைக்கபடுகிறது.  கை கால்கள் வெலவெலத்து போகுதல், கைகால்கள் குளிர் எடுத்தல் அல்லது சில்லிட்டது போன்ற நிலை என்று இருக்கும். முடி கொட்டுதல், irregular periods..என்று சில அறிகுறிகள்.

தைரோய்ட் ஹார்மோன், நிறைய இருந்தாலோ hyperthyroidism என்று அழைக்க படுகிறது.  எப்பொழுதும் பதட்டமான, இதயதுடிப்பு  அதிகமாகுதல், தூக்கமின்மை, சில நேரங்களில் வயிற்று போக்கு..என்று சில அறிகுறிகள் தருகிறது.

தைராய்டு நோய்கள் 

Graves' diseases, Thyroiditis, Tyroid nodule போன்றவை ஹைபர் தைராய்டு இருப்பதால் உண்டாகும் நோய்கள்.

Hashimoto disease, fertility issues, hair loss, weight gain போன்ற சில அறியப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக மிடில் வயது பெண்கள் இந்த நோய்களுக்கு ஆளாகின்றனர்.

தைராய்ட் அளவு பெரியதாகுதல் Goiter என்று அழைக்கபடுகிறது.

பின்னர், தைரோய்ட் கான்செர்.



தைரோய்ட் கான்செர் தற்போது மிக அதிகமாக அறியப்படுகிறது. நிறைய பெண்களுக்கு வருகிறது.
RET என்னும் "ret proto-oncogene"  என்னும் ஜீனில் ஏற்படும்  DNA மாற்றங்கள் (mutations) முக்கியகாரணமாக அறியபட்டலும். இன்னும் அறியபடாத சில பல காரணங்களும் இருக்கின்றன.

iodine குறைவாக அல்லது அதிகமாக சேர்த்து கொள்ளுவது  நிறைய தைராய்டு நோய்களுடன் தொடர்பு படுத்த படுகிறது. Goiter முதல் தைராய்டு கான்செர் வரை பலவற்றுக்கு காரணமாக iodine காரணமாக  இருக்கிறது.

தைராய்டு குறைபாட்டை தவிர்ப்பது எப்படி ?

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது, தைராய்டு சுரப்பி அளவை கண்காணிப்பது, மற்றும் தக்க மருத்துவம் பார்த்து கொள்ளுவது.


குணப்படுத்தும் வழிகள் 

ஹைபர் தைரடிசம் நோய்க்கு, Thyroid ஹார்மோன் replacement மாத்திரைகள் அல்லது தெரபி வாழ்நாள் முழுதும் எடுக்க வேண்டி வரும். ஒரு சில நேரங்களில் goiter அளவு வந்தால் ரேடியேசன் ஐயோடின் தெரபி கொடுப்பார்கள். தைராய்டு கான்செர் வந்து விட்டாலோ, எந்த நிலையில் கான்செர் இருக்கிறது, தைராய்டு தவிர  வெளியில் எங்கும் பரவி இருக்கிறதா?, என்றெல்லாம் பார்த்து, ரேடியோ ஐயோடின் தெரபி, அல்லது கீமோ தெரபி அல்லது சர்ஜெரி என்பதே வழி. நான் கேள்வி பட்டவரை  தைராய்டு கான்செர் முழுவதும் குனபடுத்த கூடிய ஒன்று. எவ்வளவு சீக்கிரம் பிரச்னை பற்றி அறிகிறோமோ அவ்வளவு சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பித்தால் முழுதும் குணப்படுத்த  முடியும்.


டிஸ்கி
இது நான் படித்ததை, என் அம்மாவுக்கு நேர்ந்த அனுபவத்தை  வைத்து எழுதப்பட்டது மட்டுமே..மெடிக்கல் அட்வைஸ் அல்ல.  அம்மாவின் சர்ஜெரி முடிந்த பின்பு இன்னும் நிறைய அறிந்து இருப்பேன்,  திரும்பி வந்ததும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

நன்றி



Friday, October 7, 2011

ஒரு பசுவின் கண்ணீர் கதை



”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது.

”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான்.

”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!”

“என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்”

”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்”

”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே”

“அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முடியுமோ அதை எல்லாம் செய்துட்டு..சாமியா கும்பிடுராங்களாம்..நல்ல கதைப்பா”

“என்னது நாங்க கொடுமை செய்யுரமா?..என்னா சொல்லுற”

”நீங்க சொய்யிற கொடுமை ஒன்னா, ரெண்டா...வரிசையா சொல்லுரேன் கேளு”

”நான் ஏன் தான் பசுவா பிறந்தேனோன்னு நோகாத நாளில்லை..பிறந்த கொஞ்ச நாளில அம்மா கிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டாங்க..அப்புறம், நான் இனப்பெருக்கத்துக்கு தயாரானவுடன் என்னுடைய சோதனை காலம் ஆரம்ப்பிச்சிடுச்சு”

“வருடம் முழுதும் புள்ளதாச்சின்ங்கிற கதையா..எப்போ பார்த்தாலும் செயற்கை முறையில விந்தனுவை செலுத்தி என்னை புள்ளதாச்சி ஆக்கிடறாங்க...அப்புறம் கன்று பிறந்தவுடன்..கன்றையா பாலை குடிக்க விடறீங்க?....நீங்க தானேப்பா பாலை கறந்து குடிக்கிறீங்க..அதுவும் இப்பொல்லாம் எதோ rBGH ஒரு ஊசியை போட்டு அதிக நாள் பால் கொடுக்கிற மாதிரி பண்ணுறீங்க” என்று கண்ணீர் விட்ட பசு...கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தொடர்ந்தது.


“அந்த rBGH எங்களை என்ன பாடு படுத்துன்னு யாருக்காவது தெரியுமா? பால் மடியில எரிச்சல் ஏற்படுத்தி ஒரு பக்க பால்மடி பெருத்து வழி ஏற்படுத்துது. இதுவாவது பரவாயில்லை, இது எங்களை லேம்னெஸ் எனப்படும் நோயை தருகிறது. எங்களால் சரியாக நடக்க முடியாமல், நிற்க முடியாமல், செயல்பட முடியாமல் படும் பாடு இருக்கிறதே..அப்பப்பா!”

“சில நேரங்களில் இது எங்கள் கருப்பையில் கட்டிகளை ஏற்படுத்தி, அது கான்சேர் கட்டிகளாகும் அபாயத்தையும் தருகிறது, இதுவாவது பரவாயில்லை, எங்கள் கன்றுகுட்டிகளுக்கு ஏற்படும் நிலை இருக்கிறதே...அது இன்னும் பரிதாபம்”

 ”பிறந்த சில நாட்களில் எங்களிடம் இருந்து பிரிக்கப்படும் எங்கள் கன்றுகள், பசுங்கன்றுகளாக இருப்பின் என்னை போன்ற கதி அதற்கும் ஏற்படுகிறது..எருதுகளாக இருப்பின்...வெகு சீக்கிரமே அடிமாடுகளாக மாற்றப்படுகின்றன...,சில நேரங்களில் அவை நன்கு கொலுக்க என்று அதிக புரோட்டீன் கொண்ட உணவு கொடுக்க படுகிறது..அந்த உணவை செரிக்க முடியாமல் பல நேரங்களில் Mad cow disease போன்ற பலவும் எங்களுக்கு ஏற்படுகின்றன” என்று குலுங்கி குலுங்கி அழுத பசு...திடீரென்று எதோ நினைத்தாய் பலத்த ஒலியுடன் வில்லன் போல சிரிக்க ஆரம்பித்தது.

பசுவுக்கு என்னாயிற்று என்று நான் நினைத்த தறுவாயில், பசுவே பேச ஆரம்பித்தது....

“இப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்திய மனித குலத்துக்கு நாங்கள் தரும் பரிசு என்ன தெரியுமா, பழிக்கு பழி”

“எங்களை கொடுமை படுத்தி எடுக்கபடும் பாலை குடிப்பதால் அவர்களுக்கும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தியாகி.. சிறுமிகள் சீக்கிரம் பூப்படைவது, தேவையில்லாத அதிக முடிவளர்ச்சி..பெண்களுக்கு Male pattern வருவது...சில நேரங்களில் மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுத்துவது,... ஹாஹாஹா, எப்பூடி”

”ஹாஹாஹா” என்று பசு சிரித்தது நாலாபக்கமும் எதிரொலித்து...என் காதுகளை அடைத்தது....சடாரென்று தூக்கத்திலிருந்து எழுந்தேன்...

Friday, February 25, 2011

பறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! உண்மை தான்.
இன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெடுத்து வெளியிட்டு பெருகுகின்றன.

சரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது?
இந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து வந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.


சரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது?
காய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.


மேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.


ஃப்லூ தடுப்பூசி

ஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது?, அதற்குறிய மருந்து என்ன? என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.

Tuesday, April 6, 2010

பைத்தியக்கார மாடு (Mad cow)



பைத்தியக்கார மாடு- இது வசைச்சொல் அல்ல.

ஒரு மாடு மற்றொரு மாட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

என்னது! மாடு இறைச்சி சாப்பிடுவதா? ஒரு மாடு எப்படி இன்னொரு மாட்டை சாப்பிடும், மாடு புல்லை தானே சாப்பிடும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் வெறும் புல்லை தின்ற மாடுகள் புஷ்டியாக இல்லாமல் நோஞ்சான்னாக இருந்தன. அப்படி நோஞ்சான் மாடுகள் கறிக்கு உதவவில்லை என்று மாடுகள் பண்ணை நடத்தும் " Cattle Industry " மக்கள் உணர்ந்தனர். நோஞ்சான் மாடுகள் கொழுக்க சரிவிகித உணவு என்ற ஒன்றை கொடுக்க ஆரம்பித்தனர். ( நாம் சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு எக்ஸ்ட்ரா ப்ரோடீன் உள்ள nutritional drink கொடுப்பது போல)

அவர்கள் கொடுத்த சரிவிகித உணவுக்கு பெயர் "Meat and bone meal ( MBM )". இது மாட்டின் இறைச்சியை பிரித்தெடுத்த பிறகு மீதமுள்ள பொருள்களான எலும்பு, தசை, ரத்தம் .. இவற்றை கொண்டு தயாரிக்கப்படுவது. இந்த MBM இல் ப்ரோடீன் அதிகம் இருக்கும். அதனால் மாடுகள் நன்கு கொழுக்க ஆரம்பித்தன.

மாடுகள் பண்ணை நடத்துபவருக்கும், அதனை கறியாக்கி விற்றவருக்கும் ஏக மகிழ்ச்சி. ஆனால் சில வருடங்களில், மாடுகள் நோய்வாய்ப்பட ஆரம்பித்தன. சுணங்கி படுப்பது, நிற்க முடியாமல் போவது, இறப்பது என்று இருக்கவும், என்ன காரணம் என்று ஆராய ஆரம்பித்தனர்.

ஆராய்ச்சி முடிவில் அவர்கள் கண்டது இது தான். நோய்கள் பல வகைப்படும், பெரும்பாலான நோய்கள் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாவது. ஆனால் ஒரு ப்ரோடீன் ஆல் மாடுகளுக்கு இந்த நோய் உண்டாவது கண்டு பிடிக்க பட்டது. அந்த ப்ரோடீனுக்கு " prion " என்று பெயர். இந்த கெட்டுபோன ப்ரோடீன் மாடுகளின் மூளை மற்றும் தண்டுவடத்தில் உள்ள மற்ற நல்ல ப்ரோடீன் களையும் கெடுக்கிறது. விளைவு மாடுகள் மூளை செயல்பாட்டை இழக்கின்றன. மாடுகள் "பைத்தியம்" ஆகின்றன.

இது எப்படி ஏற்பட்டது? வெறும் புல்லை மட்டும் செரிக்கும் உடல் அமைப்பை கொண்டிருந்த மாடுகளுக்கு " MBM " என்ற எக்ஸ்ட்ரா ப்ரோடீன் உணவு அதுவும் மாடுகளின் மிச்சத்தையே கொடுப்பதால் இது உண்டானது என்று கண்டு பிடித்தனர்.

இந்த நோய் தாக்கிய மாடுகளின் இறைச்சியை சாப்பிட்ட மனிதருக்கும் இந்த நோய் உண்டானது. ஒரு சிலர் இறக்கவும் நேரிட்டது. இதனை கண்டு பிடித்த பின்னர் மாட்டு இறைச்சி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

மேலை நாடுகளில் இறைச்சி உண்ணக்கூடியதா என்று பரிசோதித்த பின்னரே கடைகளுக்கு அனுப்புவர். பல்வேறு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பிறகு விற்கப்பட்ட இறைச்சியில் இப்படி ஒரு நோய் இருந்தது கண்டு பிடிக்க முடியாமல் போனது.

ஆனால் இந்தியாவில் கோழிக்கு உடம்புக்கு முடியாமல் போனால் அது இறைச்சியாக ஆக்கப்படுகிறது. அது உண்ணக்கூடியதா, இதனால் பாதிப்பு எதுவும் வருமா என்று யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

இந்தியாவில் எப்படி இறைச்சி விற்கப்படுகிறது?

சென்ற முறை நான் இந்தியா வந்திருந்த போது, என் அம்மாவுடன் அதிகாலை வாக்கிங் சென்றேன், எங்கள் வீட்டுக்கு அருகில் ஆடுகள் குப்பை தொட்டியை மேய்ந்து கொண்டு இருந்தன. என்ன இப்போதெல்லாம் ஆடுகள் குப்பை சாப்பிட ஆரம்பித்து விட்டனவே என்று நினைத்து கொண்டே சென்றேன்.

வாக்கிங் முடித்து திரும்பும் போது அதில் ஒரு ஆடு கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அதனை வாங்க ஒருசிலர் நின்று கொண்டு இருந்தனர்.