ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது http://www.bbc.co.uk/news/science-environment-17127617. http://news.bbc.co.uk/2/hi/europe/8060289.stm அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஆண் வர்க்கத்தை நிர்ணயிக்கும் Y குரோமோசொம்கள் இருக்காது என்று கணித்திருக்கிறது. என்ன என்று தேடிய போது ஒரு புத்தகம் சிக்கியது அது ஆதாமின் சாபம் என்ற புத்தகம்.
அது என்ன Y குரோமோசொம்கள், எப்படி அவை ஆண்களை அழிக்க போகிறது என்று கேட்பவர்களுக்கு.
மனிதர்கள் அனைவருக்கும் மனித உடலை. உருவ அமைப்பை நிர்ணயிக்கும் 22 pairs குரோமோசொம்களும், 2 செக்ஸ் குரோமோசொம்களாலும் இருக்கும். ஆண்களுக்கு இவை X & Y வும், பெண்களுக்கு இது X & X ஆகவும் இருக்கும்.
| பெண் குரோமோசோம்கள். |
மேலே உள்ள இரண்டு படத்தில் இருப்பது கார்யோடைப்பிங்(karyotyping) எனப்படும் முறையில் குரோமோசொம்களை வகைப்படுத்துவது.
குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண்கள் தான் என்று இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அப்பாவிடம் இருந்து வரும் விந்தணுக்களில் Y குரோமோசோம் இருப்பின் பிறக்க போகும் குழந்தை ஆண்குழந்தையாகவும், X இருப்பின் பெண்குழந்தையாகவும் இருக்கும்.
சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.
இந்த Y குரோமோசோம்களே, ஆண் உறுப்புகள், ஆண்களுக்கான ஹார்மோன்கள் அனைத்தையும் உண்டாக்கும் ஜீன்களை கொண்டிருக்கும்.இந்த Y குரோமோசோம்கள் படிப்படியாக தன்னிடம் இருக்கும் ஜீன்களை இழந்து வருகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் 1400 ஜீன்களை கொண்டிருந்த இந்த குரோமோசோம் இப்போது வெறும் 45 ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது போன்ற ஜீன்களை இழக்கும் தன்மை யால் ஜீன்கள் படிப்படியாக குறைந்து ஒரு சமயம் y குரோமோசோம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு. ஆனால் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்த ஜீன் இழப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிந்தாலும் எந்த நேரமும் அது தொடரும் அபாயம் உள்ளது குறித்து அறிய முடிகிறது.
சரி அப்போது ஆண்கள் இனமே இல்லாது போகுமா? என்ன ஆகும்? யாருக்கும் தெரியவில்லை.உண்மை நிலைமை இப்படி இருக்க ஆண் குழந்தை தான் உசத்தி என்று நினைத்து கொண்டு இந்தியாவில் நடக்கும் பெண் சிசுகொலைகளை என்னவென்று சொல்ல?
