Tuesday, January 11, 2011

நேரு - எட்வினா மௌன்ட்பாட்டன்



நான் பயோகிராபி புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை, ஏனென்றால் அவை போரிங் என்பது என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம், "Indian Summer: The Secret History of the End Of An Empire" by the historian Alex von Tunzelmann படிக்கும் வரை.

ஒரு அமெரிக்க நண்பரால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதி நாட்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறது என்றாலும், நேஹ்ருவுக்கும் மௌன்ட்பாட்டன் மனைவி எட்வினா விக்கும் இருந்த நட்பை போன்ற சில பர்சனல் விசயங்களையும் அந்த புத்தகம் விவரிக்கிறது.

நேஹ்ருவும், மௌன்ட்பாட்டன் மனைவி எட்வினாவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் நடப்பை பார்த்து மௌன்ட்பாட்டனே ஜூன் 1948 இல் தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில்" அவர்கள் இருவரும் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்" என்று கூறியதாக மௌன்ட்பாட்டன் மகள் பமீலா மௌன்ட்பாட்டன் India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power என்ற புத்தகத்தில் கூறி இருக்கிறார்.

இந்தியன் சும்மர் புத்தகத்தில் எட்வினா தன்னுடைய கணவருக்கு எழுதிய கடிதத்தில் "தனக்கும் நேஹ்ருவுக்கு இடையே உடல் தொடர்பில்லாத நல்ல நட்பு மட்டுமே இருந்தது " என்று எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

எது உண்மையோ தெரியவில்லை, ஆனாலும் தன் மனைவிக்கும் நேஹ்ருவுக்கும் இருக்கும் நட்பு தெரிந்தே, மௌன்ட்பாட்டன் இந்திய சுதந்திரத்தை சீக்கிரம் பிரகனப்படுத்துவதை ஆதரித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வருடம் இந்த புக் படமாக எடுக்கப்படுகிறது. அதில் எட்வினாவாக கேட் ப்லான்செலேட்ம் நடிக்கிறார். மௌன்ட்பாட்டேன் ஆக ஹுக் கிராண்ட்ம், நேஹ்ருவாக இர்பான் கானும் நடிப்பதாக அறிவிக்கபட்டிருக்கிறது.



இந்த படத்தில், எட்வினவுக்கும் நேஹ்ருவுக்கும் இடையே எந்த முத்தகாட்சியோ அல்லது நெருக்கமான காட்சிகளோ இருப்பது போல காட்டக்கூடாது என்று இந்திய அரசு ஆணையிட்டு இருப்பதாக தெரிகிறது.

எப்படியோ, ஒரு இந்திய சுதந்திரம் சார்ந்த ஒரு படம் வருவது so exciting!

10 comments:

Chitra said...

I had read the book before. Yeah, it was quite interesting... I don't know how much of it was real - definitely juicy though ;-)

வருண் said...

***இந்த படத்தில், எட்வினவுக்கும் நேஹ்ருவுக்கும் இடையே எந்த முத்தகாட்சியோ அல்லது நெருக்கமான காட்சிகளோ இருப்பது போல காட்டக்கூடாது என்று இந்திய அரசு ஆணையிட்டு இருப்பதாக தெரிகிறது.***

Apparently Mountbattens dont care in what level they had this relationship! LOL

Does today's Nehru family care if Nehru did have an affair with her? I hope not! LOL

எல் கே said...

well i have read this book. but not sure the film will hit the theaters

settaikkaran said...

புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். விலையைப் பார்த்ததும் ‘இது நமது பட்ஜெட்டுக்கு தோதுப்பட்டு வராது,’ என்று விட்டுவிட்டேன்.

கையேடு said...

பகிர்வுக்கு நன்றி..
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கக் கூடாதான்னு தோணியது.

முகுந்த்; Amma said...

@Chitra said...

// I had read the book before. Yeah, it was quite interesting... I don't know how much of it was real - definitely juicy though ;-)//

Sure..Its definitely juice...

thanks Chitra..

முகுந்த்; Amma said...

@வருண் said...

// Apparently Mountbattens dont care in what level they had this relationship! LOL

Does today's Nehru family care if Nehru did have an affair with her? I hope not! LOL//

மொன்பாட்டன் குடும்பத்துக்கோ அல்லது நேரு குடும்பத்துக்கோ இதை பத்தி கவலை இல்லீங்க.. ஆனா காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய மானப்பிரச்சனை அதான்
இந்திய மானத்தை இப்படி காப்பாத்துராங்களாம!

முகுந்த்; Amma said...

@எல் கே said...

// well i have read this book. but not sure the film will hit the theaters//

எனக்கும் அந்த சந்தேகம் இருக்குங்க...கட்சி மக்கள் போர்கொடி தூக்குனாலும் தூக்குவாங்க

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன் said...

// புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். விலையைப் பார்த்ததும் ‘இது நமது பட்ஜெட்டுக்கு தோதுப்பட்டு வராது,’ என்று விட்டுவிட்டேன்.//

ஓ அப்படியா!..நான் எந்த புக்கையும் விலை கொடுத்து இப்போ வாங்குறதே இல்லீங்க..எல்லாம் லைப்பிரரி புக் தான்..

முகுந்த்; Amma said...

@கையேடு said...

// பகிர்வுக்கு நன்றி..
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கக் கூடாதான்னு தோணியது.//

நன்றிங்க கையேடு..நிறைய பிரிவினை சமய அரசியல் தொடர்பானதா இருந்ததுங்க..அதை எழுதினா ரொம்ப வரலாற்று அரசியல் பாடமாயிடுமோன்னு பயந்து தான் கொஞ்மா எழுதினேன்..வேனா இன்னோரு சமயத்தில விளக்கமா எழுதிடுறேன்..