Wednesday, January 12, 2011

ஆட்டோகிராப்!

சிறு வயதில் நாம் இருந்த ஊர், வீடு பள்ளி போன்றவை எப்போதும் மனதில் நிற்கும். அதற்க்கு பிறகு எத்தனை வீடு, ஊர், மாநிலம், நாடு மாறினாலும் எப்போது நினைத்தாலும் அந்த பழைய வீடு கண்முன் வந்து நிற்கும்.

எனக்கு எப்போது இந்தியா பற்றி நினைத்தாலும் நான் சிறு வயதில் இருந்து இந்தியாவை விட்டு வெளியில் வரும் வரை நாங்கள் வசித்த அந்த வீடு நினைவிற்கு வரும்..எனது சிறு வயது நண்பர்கள், பள்ளி தோழிகள், பக்கத்து வீட்டு எதிர் வீட்டு நண்பர்கள் என பலரும் நினைவுக்கு வருவார்கள்.

பள்ளி முழுப்பரிட்சை முடிந்து லீவு விட்டதும் என் நண்பர்களில் பலர் அவரவர் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லி செல்வார்கள் அப்போதெல்லாம் எனக்கும் அவர்களை போல தாத்தா பாட்டி வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றும், ஆனால் வாய்ப்பு வாய்த்ததில்லை. அதற்காகவே என் அம்மா கோவிலுக்கு, கடை வீதிக்கு என்று அழைத்து செல்வார்கள்.

அதிலும் சித்திரை மாதம் வரும் சித்திரை திருவிழா மறக்க முடியாதது. எல்லா நாட்களும் சாமி சுத்தி வருவதை பார்க்க சாயங்காலம் கிளம்பி விடுவோம். அப்புறம் மீனாட்சி கல்யாணம், தேர், பூபல்லாக்கு, அழகர் ஆத்தில இறங்குறதுன்னு சித்திரை திருவிழா முடியும் வரை ஒரே கொண்டாட்டம் தான்..

பிறகு மறுபடியும் போரடிக்க ஆரம்பிக்கும் போது, என் அம்மா, என்னை தையல் கிளாஸ் போ, பாட்டு கிளாஸ் போ என்று விரட்டுவார்கள். நான் போகவே மாட்டேன்! பிறகு ஒரு வழியாக போக ஆரம்பிக்கும் போது ஸ்கூல் திறந்து விடும்..அப்புறம் மறுபடியும் ரௌடீன் ஆரம்பித்து விடும்..

சிறுவயதில் நான் அனுபவித்த அந்த நாட்களை போல முகுந்துக்கு கிடைக்குமா என்று நினைத்தால் ஒரு சில நேரம் அவனை பார்க்க பாவமாக இருக்கிறது. பாதி நேரம் என்னையும் ரங்கமணியும் விட்டால் அவனுக்கு விளையாட எந்த ஆட்களும் இல்லை.

அதனாலேயே அவனை இங்கு லைப்ரரி களில் நடக்கும் ஸ்டோரி டைம்முக்கு அழைத்து செல்கிறேன். அதில் அவன் வயதொத்த பல குழந்தைகள் இருப்பர். ஒரு லைப்ரரியன் குழந்தைகள் புத்தகம் சிலவற்றை எடுத்து கொண்டு அதில் இருக்கும் கதைகளை வாசிக்கிறார். பல நேரங்களில் அந்த கதைகளை குழந்தைகள் உக்கார்ந்து கேட்பதில்லை இருப்பினும் சில பல விளையாட்டுகளை காட்டுகிறார் அந்த லைப்ரரியன். இந்த கதை நேரம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எந்த செலவும் இல்லாமல் மற்ற குழந்தைகள், பெற்றோரை சந்திக்க நல்ல வாய்ப்பு.

என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்ததை போன்ற ஒரு சூழ் நிலை முகுந்துக்கு கிடக்க போவதில்லை, இருந்தாலும் இந்த ஊரில் இருக்கும் சூழ்நிலைக்கு அவன் சீக்கிரம் பழகி கொள்வான் என்று நினைக்கிறேன்.

இது இப்படி இருக்க இப்போது வேறு ஊருக்கு செல்ல வேண்டும். அமெரிக்கா வந்ததில் இருந்து நோர்த் கரோலினா வாசியாக தான் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது வேலை கிடைத்திருப்பது பக்கத்து மாநிலமான ஜியார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில், அதனால் ஜியார்ஜியா சொந்த மாநிலமாக போகிறது. இனிமேல் அங்கு சென்று நண்பர்கள், வீடு என்று back to square 1.

எத்தனை நாள் தான் இப்படி சட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா திரியறதோ!..எப்போ இந்தியா வந்து அக்கடான்னு இருப்போம்னு தோணுது! என்ன செய்ய காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும்.

9 comments:

Chitra said...

அட்லாண்டா வரீங்களா? மூணு நாட்கள் முன்னாடி தான் அங்கே விசிட் அடிக்க வந்து இருந்தேன்... அடுத்த முறை வரும் போது.... பதிவர் சந்திப்பு தான்! வாங்க ... வாங்க... வாங்க...!

சாந்தி மாரியப்பன் said...

இனிமையான ஆட்டோக்ராப் :-))

ஒவ்வொரு தலைமுறையிலும் குழந்தைகள் வளரும்விதம் மாறுதலடையத்தான் செய்கிறது.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-)))

அமைதி அப்பா said...

விரும்பி ஏற்றுக் கொண்ட நாடோடி வாழ்க்கை! எனக்கு, சிறு வயதில் எங்கள் கிராமத்துக்கு நாடோடியாக வரும் சிலரைப் பார்க்கும் பொழுது பொறாமை வரும். நாமும் இப்படி சுற்றித் திரிய வேண்டும் என்ற ஆசை வரும். இப்பொழுது ஓர் ஊர், ஓர் இடம் எப்பொழுது கிடைக்கும் என்ற ஏக்கம் வருகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானோ?!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒவ்வொரு தலைமுறையிலும் குழந்தைகள் வளரும்விதம் மாறுதலடையத்தான் செய்கிறது.. //

ரொம்பசரி சாரல் சொன்னது.. அதற்கேற்றார் போல குழந்தைகள் அறிந்து வளர்ந்து எஞ்சாய் செய்துட்டிருப்பாங்க..கவலைப்படாதீங்க..

Anna said...

எல்லா இடத்திலும் pros and cons இருக்கு. ஊரில் இருக்கும் சிலது இங்கு இல்லை. அதேமாதிரி இங்கிருக்கும் சில அங்கும் இல்லை. நிச்சயமாக இருவரில் யாராவது ஒருவரின் குடும்பமாவது ஒரே இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். அத்தோடு பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பும் அங்கு அதிகம். இங்கு நாம் மிகக் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும்.

"பல நேரங்களில் அந்த கதைகளை குழந்தைகள் உக்கார்ந்து கேட்பதில்லை இருப்பினும் சில பல விளையாட்டுகளை காட்டுகிறார் அந்த லைப்ரரியன். இந்த கதை நேரம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எந்த செலவும் இல்லாமல் மற்ற குழந்தைகள், பெற்றோரை சந்திக்க நல்ல வாய்ப்பு."

இங்கு நீங்கள் சொல்வது மாதிரி active movement என வாசிகசாலைகளில் உண்டு. நானும் அகரனை பிறந்த 2-3 மாதங்களிலிருந்து கொண்டு சென்றனான். Apparently it's been music, bright colours, dancing and reading out loud have been shown to be very stimulating to babies. குழந்தைகளை sponge க்கு ஒப்பிடுவர். தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் absorb பண்ணுவர், ஆனால் எம்முடம் communicate பண்ணத் தெரியாது.

Good luck with your move and future endevours. I am sure it'll be great.

ஹுஸைனம்மா said...

ஊரில இருக்கவங்களுக்கு இங்க வர ஆசை; நமக்கு அங்கே...
புது இடம், புது வேலை.. வாழ்த்துகள் முகுந்தம்மா!!

ஜோதிஜி said...

300 KM தொலைவில் இருக்கும் எனக்கே எங்கள் ஊரில் தாக்கம் இன்னமும் மறையவில்லை. அப்புறம் எங்கே உங்களுக்கு மறையும்? இங்கு குழந்தைகள் கூட வசதிகளை மட்டும் தான் எதிர்பார்த்து செல்வதற்கு முன்பு அது இருக்குதா இது இருக்குதா? என்று பட்டியலிடுகிறார்கள்.

சிலவற்றை இழந்த பலவற்றை பெறும் வாழ்க்கையிது என்பதை உணர்ந்தே குழந்தைகளை அவர்கள் சிந்தனைகளில் உள்ள சாதக பாதக அம்சங்களை மட்டுமே கவனித்து வருகின்றேன்.

பல சமயம் உங்கள் ஏக்கம் என்னுள்ளும் இருப்பதும் உண்மை தான்.

அன்புடன் மலிக்கா said...

அழகிய ஆட்டோக்ராப் அருமை..

சிவகுமாரன் said...

நிறைய சம்பாதித்துக் கொண்டு சீக்கிரம் இங்கு வந்து சேருங்கள். சொந்த மண்ணை விட்டுட்டு இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? ( சீ சீ இந்தப் பழம் புளிக்கும் )