Sunday, January 9, 2011
மன்மதன் அம்பு காட்டுவது என்ன?
சமீப காலமாக நான் பார்த்த படங்களில், பத்து டாலர் அழுது ஒரு கொடுமையான படத்தை ஏன் பார்த்தோம் என்று நொந்து தலையில் முட்டி கொண்டது சமீபத்தில் பார்த்த மன்மதன் அம்பு படத்தில் தான் என்று நினைக்கிறேன்.
எனக்கு சில கமல் படங்களான பஞ்சதந்திரம், தெனாலி போன்றவை எப்போது பார்த்தாலும் பிடிக்கும். ஆனாலும் மன்மதன் அம்பு போன்ற ஒரு கொடுமையான படம் கமல் படம் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை.
கமலின் தோல்விப்படமான மும்பை எக்ஸ்ப்ரஸில் கூட காமெடி நன்றாக இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் வந்த சில வசனங்கள் எனக்கு சிரிப்பை விட கடுப்பை வரவழித்தது. அதை விட மாதவனை ஒரு கேனை போல சித்தரித்து இருந்தார்கள்.
இவற்றை எல்லாம் விட என்னை மிக மிக கடுப்பேத்தியது சங்கீதாவின் காரெட்டரை அவர்கள் போட்ரேட் செய்த விதம் ..
கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஒரு பெண் அவர் என்று அவரைப் பற்றி அவரே கூறிக்கொள்கிறார்.
நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்..எத்தனை பெண்கள் இப்படி இருக்கிறார்கள்...இதில் சங்கீதா ஒரு நடிகையாக காட்டவில்லை. அவர் நடிகையின் தோழியாக தான் காட்டப்பட்டு இருக்கிறார்..
விவாகரத்து என்பது மனதளவில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்...அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அதிக பாதிப்புக்கு உள்ளாபவர்கள் அவர்கள் தாம்..அப்படிப்பட்ட அவர்களை இப்படி ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் பெண் என்று சித்தரித்து இருப்பது... கடுப்பின் உச்சம்..
உடனே சிலர் இருப்பதை,ஊர் உலகத்தில நடக்கிறதை தானே சினிமாவில் காட்டுகிறோம் என்று சப்பை கட்டு கட்டலாம்..எனக்கு தெரிந்து எந்த ஊரில் இப்படி நடக்கிறது என்று சொல்லுங்கப்பா...
இங்கே அமெரிகாவில் கூட எனக்கு தெரிந்த பல அமெரிக்க தோழிகள் விவாகரத்துக்கு பிறகு படும் கஷ்டத்தை கண்ணாற கண்டு இருக்கிறேன். இங்கே நிறைய சர்ச்சுகளில் விவாகரத்துக்கு பிறகு ஏற்படும் மனமுறிவுக்காகவே பல கவுன்சிலிங்குகள் நடத்தப்படுவது உண்டு...சாதாரணமானவர்களின் உண்மை நிலை இதுதான்..
உண்மை நிலை இப்படி இருக்க யாரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு கமல் இந்த காரெக்டரை உருவாக்கினார் என்று தெரியவில்லை...
ஒரு வேலை அமெரிக்காவில் பணத்திற்காக பணக்கார கிழவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஒரு சில பெண்களை உதாரணமாக அவர் எடுத்து இருக்கலாம்..ஆனால் இந்த பெண்கள் எல்லாம் 15 மினிட் fame க்காக எதுவும் செய்பவர்கள்..அவர்களை அந்த படத்தில் சங்கீதா சித்தரிக்கபட்டு இருப்பது போல ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக காட்டி இருக்க வேண்டாம்..
ஒன்றே ஒன்று இறுதியாக..Kamal disappointed us..and he made me hate him.
Labels:
சமூகம்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
The way I saw it was that the character is not vilified for divorcing her husband and is shown to be a good mother. I thought that was a good thing and a big thing in Tamil movies. Although the reason for divorce was not discussed, it was briefly stated that her husband was not a good husband and a father. He was a rich man, so she got good alimony.
"விவாகரத்து என்பது மனதளவில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்...அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அதிக பாதிப்புக்கு உள்ளாபவர்கள் அவர்கள் தாம்..அப்படிப்பட்ட அவர்களை இப்படி ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் பெண் என்று சித்தரித்து இருப்பது... கடுப்பின் உச்சம்."
I don’t think Kamal generally has this idea as he has shown in “Vettaiyaadu Villaiyaadu” some of the heartaches through Jyothika’s character.
இப்படத்தில், பல இடங்களில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசி சறுக்கி இறுக்கிறார். எப்போதும் தான் சொல்வதை ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்கிற அவரது நம்பிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கக்கூடும்.
இந்தப் படம் எனக்கும் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. சங்கீதாவின் கேரக்டர் சாமான்ய மக்களுக்கு டிவோர்ஸிகளைக் குறித்து ஒரு தப்பபிப்ராயம் ஏற்படுத்தக்கூடும் என்பதும் உண்மையே. அவரின் விவாகரத்துக்கானக் காரணமும், தன் இரு குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கே அவருக்குப் பணம் தேவைப்படுகிறது என்பதும் அழுத்தமாக எடுத்துச் சொல்லப் படவில்லை. ஆனால், அவரது நடிப்புத் திறமைக்கு நல்ல தீனி இதில். ரம்யாவை படையப்பா நீலாம்பரியாக்கியது போல, இப்படமும் சங்கீதாவை.. அவர் பெயர் என்ன படத்தில்.. மறந்துபோச்சே...
உங்கள் விமர்சனம் வித்தியாசமாக இருக்குதுங்க..... நான் கமல் படங்கள் பாத்து நாளாச்சு ..........
இயல்பு மீறிய பாத்திரங்கள் தான் சினிமாவில் சுவாரசியம், சங்கீதா அப்படியே,பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு டாக்டரிடம் செல்லாமல் , கண்டம்துண்டமாக வெட்டி போட கூறுவார் ப்ரியாமணி பருத்திவீரனில் , இப்படி உண்மை மீறிய கதை வெற்றி பெற்றது, ஒருவேளை மாதவன் சந்தேகம் காரணமாக த்ரிஷா கொலையானால் படம் பிச்கிட்டு போயிருக்கும், இன்றைய சோக முடிவு ட்ரெண்டில். செம கதை என்று பாரட்டும் பெற்றிருக்கும். பீல் குட் மூவி தமிழ் மக்களுக்கு வேலைக்கு ஆகாது, நிறையா ரத்தமும் சதையும் வேண்டும்.
Kamal himself a divorcee and he has gone through the same situation twice in his life, so he is the best person to talk about it! Even Kamal Hassan would agree the fact how painful is the divorce!
உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்குங்க. ஒரு டைவோர்ஸி, அலிமோனி சைல்ட் சப்போர்ட்னு ஹஸ்பண்டுட்ட இருந்து வர்ற பெரிய தொகைப்பணத்தை வச்சு சங்கீதா மாதிரி சந்தோஷமாக இருக்க மாதிரி காட்டி இருக்கார் கமல்.
ஒருவேளை சங்கீதா கேரக்டர்மூலம் தன் சொந்த வாழ்க்கையை ஜஸ்டிஃபை பண்ணுகிறாரோ? என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை.
என்னுடைய பார்வையில் இப்படிக்காட்டி தன் வாழ்க்கையை நியாப்படுத்துகிறார் என்றே தோனுது.
சிக்ஸ் டேஸ் செவென் நைட்ஸ் (ஹாரிசன் ஃபோர்ட் படம்)முடிவு இதுபோலதான் இருக்கும். இருந்தாலும் ரசிக்க முடிந்தது.
Romance in the high seas and there is something about Marry போன்ற படங்களின் தழுவலும் இருக்கு.
ஒண்ணு கவனிச்சீங்கனா, பெண்கள் இருவரும் ரொம்ப மெச்சூரா நடந்து கொள்வதுபோலவும், ஆண்கள் பலஹீனமானவர்கள் (மாதவன்) போலவும் எடுத்துள்ளதால் ஒரு சிலர் இதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அப்படிப் பார்ப்பவர்கள் மிகவும் சிறுபாண்மை என்பதால் படம் மக்களிடம் எடுபடவில்லைனு நெனைக்கிறேன். I can see a very small percentage of people enjoy this movie. Unfortunately lots of film critics do not fall in the small percentage!
எது எப்படியோ, கடைசி 15 நிமிடங்கள் ஒரு நாடகம்போல் முடிந்துள்ளது என்பதே இந்த்ப்படத்தில் மிகப்பெரிய குறை. That is the main reason it did not fly! :)
//மாதவனை ஒரு கேனை போல சித்தரித்து இருந்தார்கள்.//
கமல் படத்தில் இது வழக்கம்தானே. பிரபு தேவா .. ஜெயராம் .. பஞ்சதந்திர நால்வர் ....
தமிழ் படங்களை தியோட்டருக்கு சென்று பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு டைம் கிடைக்கிறதா? உங்களை ஏல்லாம் நியூ ஜெர்ஸிக்குதான் கடத்த வேண்டும்.
@Analyst
//The way I saw it was that the character is not vilified for divorcing her husband and is shown to be a good mother. I thought that was a good thing and a big thing in Tamil movies. Although the reason for divorce was not discussed, it was briefly stated that her husband was not a good husband and a father. He was a rich man, so she got good alimony.
//
ம், நீங்கள் சொல்வது போல டிவோர்ஸ்ர்கான காரணங்கள் பத்தி அதிகம் இந்த படத்தில் கூற படவில்லை என்றாலும்...எனக்கு ஞாபகம் வந்த வரை ஒரு முறை சங்கீதா த்ரிஷா விடம் மாதவனை கல்யாணம் செய்துக்கோ அப்புறம் ஒத்து வரைலையினா, டிவொர்ஸ் வாங்கிட்டு, என்னைப் போல ஊர் சுற்றலாம்னு ஒரு இடத்தில சொல்வார்ன்னு நினைக்கிறேன்..
//I don’t think Kamal generally has this idea as he has shown in “Vettaiyaadu Villaiyaadu” some of the heartaches through Jyothika’s character.//
உன்மை..நானும் பார்த்து இருக்கிறேன்..ஆனா அந்த படம் கமலோடது அல்ல..முழுக்க முழுக்க கெளதம் மேனனோடது..
@தமிழ் உதயம் said...
// இப்படத்தில், பல இடங்களில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசி சறுக்கி இறுக்கிறார். எப்போதும் தான் சொல்வதை ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்கிற அவரது நம்பிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கக்கூடும்.//
சில வசனங்கள் சிறு பிள்ளை தனமா கூட இருந்ததுங்க..
நீங்கள் சொன்னது போல தான் சொல்வதை ஏற்றுகொள்வார்கள் என்கிற அவரது நம்பிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கக்கூடும்.
நன்றிங்க.
@ஹுஸைனம்மா said...
//இந்தப் படம் எனக்கும் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. சங்கீதாவின் கேரக்டர் சாமான்ய மக்களுக்கு டிவோர்ஸிகளைக் குறித்து ஒரு தப்பபிப்ராயம் ஏற்படுத்தக்கூடும் என்பதும் உண்மையே. அவரின் விவாகரத்துக்கானக் காரணமும், தன் இரு குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கே அவருக்குப் பணம் தேவைப்படுகிறது என்பதும் அழுத்தமாக எடுத்துச் சொல்லப் படவில்லை. ஆனால், அவரது நடிப்புத் திறமைக்கு நல்ல தீனி இதில். ரம்யாவை படையப்பா நீலாம்பரியாக்கியது போல, இப்படமும் சங்கீதாவை.. அவர் பெயர் என்ன படத்தில்.. மறந்துபோச்சே...//
நம்மை போல நிறைய பேர் இந்த படத்தை பார்த்து ஏமாந்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்.
ஆனா நீங்க சொன்ன மாதிரி சங்கீதாவுக்கு நல்ல ப்ரேக் கொடுக்கிற மாதிரி காரெக்டர் தான்...எனக்கு அவங்க பெயர் அந்த படத்தில என்னன்னு மறந்து போச்சுங்க..
நன்றிப்பா.
@Chitra said...
// உங்கள் விமர்சனம் வித்தியாசமாக இருக்குதுங்க..... நான் கமல் படங்கள் பாத்து நாளாச்சு ..........//
நீங்க தான் தீவிர ரஜினி ரசிகையாச்சே, அதனால தான் கமல் படம் பார்த்திருக்க மாட்டீங்க... நன்றிங்க..
@andygarcia said...
// இயல்பு மீறிய பாத்திரங்கள் தான் சினிமாவில் சுவாரசியம், சங்கீதா அப்படியே,பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு டாக்டரிடம் செல்லாமல் , கண்டம்துண்டமாக வெட்டி போட கூறுவார் ப்ரியாமணி பருத்திவீரனில் , இப்படி உண்மை மீறிய கதை வெற்றி பெற்றது, ஒருவேளை மாதவன் சந்தேகம் காரணமாக த்ரிஷா கொலையானால் படம் பிச்கிட்டு போயிருக்கும், இன்றைய சோக முடிவு ட்ரெண்டில். செம கதை என்று பாரட்டும் பெற்றிருக்கும். பீல் குட் மூவி தமிழ் மக்களுக்கு வேலைக்கு ஆகாது, நிறையா ரத்தமும் சதையும் வேண்டும்.//
ம்..ரொம்ப வித்தியாசமான எண்ணங்கள்ங்க..ஆனா நீங்க சொல்லுவது உண்மைன்னுதான் தோனுது..இப்போ இருக்கிற டிரெண்டு படி இப்படிப்பட்ட கதைகள் கொண்ட படங்கள் தான் ஜெயிக்குது...மக்களுக்கு ரத்தத்தின் மீது என்ன வெறியோ தெரியல..
கருத்துக்கு நன்றிங்க
@Paul Amirtharaj said...
// Kamal himself a divorcee and he has gone through the same situation twice in his life, so he is the best person to talk about it! Even Kamal Hassan would agree the fact how painful is the divorce!//
அவர் டிவோர்ஸி ஆக இருக்கிறதால அதன் வலிகளை முன்னிருத்தி ஒரு படம் எடுத்து இருக்கலாமே..மக்களுக்கும் அதன் வலி நன்றாக புரிந்திருக்கும் இல்லையா..
@வருண் said...
// உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்குங்க. ஒரு டைவோர்ஸி, அலிமோனி சைல்ட் சப்போர்ட்னு ஹஸ்பண்டுட்ட இருந்து வர்ற பெரிய தொகைப்பணத்தை வச்சு சங்கீதா மாதிரி சந்தோஷமாக இருக்க மாதிரி காட்டி இருக்கார் கமல்.
ஒருவேளை சங்கீதா கேரக்டர்மூலம் தன் சொந்த வாழ்க்கையை ஜஸ்டிஃபை பண்ணுகிறாரோ? என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை.
என்னுடைய பார்வையில் இப்படிக்காட்டி தன் வாழ்க்கையை நியாப்படுத்துகிறார் என்றே தோனுது.//
அவர் சொந்த வாழ்க்கையில் எப்படி வேனா இருந்திட்டு போகட்டுங்க..அது அவரோட பெர்ஸனல் வாழ்க்கை...ஆனா இதனை போன்ற காரெக்டர்களை முன்னிருத்தி எல்லாரும் இப்படி தான் இருப்பாங்க அப்படின்னு ஜஸ்டிபை பண்ணாம இருந்திருக்கலாம்..
// சிக்ஸ் டேஸ் செவென் நைட்ஸ் (ஹாரிசன் ஃபோர்ட் படம்)முடிவு இதுபோலதான் இருக்கும். இருந்தாலும் ரசிக்க முடிந்தது.
Romance in the high seas and there is something about Marry போன்ற படங்களின் தழுவலும் இருக்கு.
//
நான் நீங்க குறிப்பிட்ட எந்த படமும் பார்த்ததிலீங்க...ஆனா நிறைய ஆங்கில படங்களின் தழுவல்கள் தான் கமல் படமுன்னு படிச்சிருக்கேன்.
// எது எப்படியோ, கடைசி 15 நிமிடங்கள் ஒரு நாடகம்போல் முடிந்துள்ளது என்பதே இந்த்ப்படத்தில் மிகப்பெரிய குறை. That is the main reason it did not fly! :)//
உண்மை தாங்க...கடைசி 15 நிமிசம் போரோ போர்...சீட்டில உக்கார முடியல...
கருத்துக்கு நன்றிங்க
@தருமி said...
// கமல் படத்தில் இது வழக்கம்தானே. பிரபு தேவா .. ஜெயராம் .. பஞ்சதந்திர நால்வர் ....//
உண்மைதாங்க தருமி அய்யா..நானும் கவனிச்சிருக்கேன்...அப்படி மத்தவங்களை காட்டினா தானே தான் ரொம்ப ப்ரில்லியண்ட்டுன்னு காட்ட முடியும் அதான் காரணம்னு நினைக்கிறேன்..
நன்றிங்க
@Avargal Unmaigal said...
// தமிழ் படங்களை தியோட்டருக்கு சென்று பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு டைம் கிடைக்கிறதா? உங்களை ஏல்லாம் நியூ ஜெர்ஸிக்குதான் கடத்த வேண்டும்.//
ஹாஹாஹா...நீங்க வேற, ரொம்ப நாள் ஆச்சே தியேட்டர் போயின்னு நினைச்சி தாங்க...ரங்கமணி கூட சண்டை போட்டு அந்த படத்துக்கு போனேன்..ஆனா அதுவே சொந்த செலவில சூன்யம் வச்ச மாத்ரி ஆகிட்டது..
ஏங்க..நியூ ஜெர்சியில இருக்குறவங்க தியேட்டருக்கு போயி படம் பார்க்க கூட நேரம் இருக்காத அளவு பிசி பீஸ் ஆ என்ன?
Post a Comment