நேற்று, எங்கள் ஆபிசுக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஆந்திராவில் இளநிலை எஞ்சினியரிங் முடித்துவிட்டு இங்கு வந்து தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை முடித்துவிட்டு தற்போது வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்.
அவருடைய தங்கைக்கு ஊரில் மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னார். அதன் பின் அவர் சொன்ன பல விசயங்களும் எனக்கு தலை சுற்ற செய்தன.
அவருடைய தங்கை பிடெக் முடித்து இருக்கிறார். வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு வரும் வரன்கள் எல்லாம் தற்போது வரதட்சனை கேட்பது கோடிகணக்கில். அதுவும் வரன்களின் படிப்பு மற்றும் அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப வரதட்சனை கூடும் என்றார்.
அதே போல நகையாக இப்போதெல்லாம் கிலோ கணக்கில் கேட்கிறார்கள் என்றார். மணமகளின் எடைக்கு எடை வெள்ளி பாத்திரமும் தரவேண்டி என்று கேட்கிறார்கள் என்றார் அவர். வெளி நாட்டில் வேலை பார்க்கும் வரனாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டார் என்ன என்ன கேட்கிறார்களோ அவ்வளவும் தரவேண்டுமாம்.
”நான் கேள்வி பட்ட வரை தமிழ் நாட்டில் எல்லாம் இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது” என்று அவரிடம் சொன்னேன். இப்போதெல்லாம் வெளி நாட்டில் வாழும் மாப்பிள்ளைகளுக்கு முன்பிருந்த கிராக்கி இப்போது இல்லை என்ற போது அவர் ”இப்போது எங்கள் குடும்பம் இருப்பது சென்னையில் தான், சென்னையில் இருக்கும் வரன்களின் பெற்றோர் தான் இவ்வாறு கேட்கிறார்கள் “ என்று வேறொரு குண்டை தூக்கி போட்டார்.
எனக்கு தற்போதைய கல்யாண நிலவரங்கள் தெரியாததால், அவரிடம் பேசிவிட்டு வீடு வந்த பின்பு இணையத்தில் தேடினேன்.
அப்போது எனக்கு கிடைத்தது,
http://www.dowrycalculator.com/
என்ற இந்த தளம். நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருப்பவரென்றால் இந்த தளத்திற்கு சென்று தங்களை பற்றி அனைத்தையும் கொடுத்து தங்களின் வரதட்சனை ரேட் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இது விளையாட்டா உண்மையா தெரியவில்லை..ஆனாலும் இந்த தளத்தில் குறிப்பிட்டு இருப்பது போலே உண்மையில் யாராயினும் சென்று பார்த்து அதற்கு ஏற்றார்போல வரதட்சனை வாங்கினார்/வாங்குகிறார் என்றால் என்னாகும் நினைக்கவே பயமாக இருக்கிறது.
இதனை குறித்த டிவி9 கொடுத்த ஒரு செய்தி அறிக்கை
10 comments:
ஐயோ இந்த விபரத்தை என் கல்யாணத்திற்கு முன்பே நீங்கள் எழுதி இருந்தால் இப்படி லவ் மேரேஜ் பண்ணி ஏமாந்து இருக்க மாட்டேனே....போங்க முகுந்தம்மா நீங்க ரொம்ப லேட்டாக தகவல் தந்து இருக்கீங்க முடிஞ்சா இரண்டாவது கல்யாணத்திற்கு என்ன தருகிறார்கள் என்று முடிந்தால் எழுதவும்
முகுந்தம்மா நீங்க எழுதி இருப்பது மிகவும் உண்மைதான். ஆந்திராவில் இன்னும் வரதட்சணை பழக்கம் ரொம்ப அதிகமாக கொடி கட்டி பரக்கிறது என்பது உண்மைதான் அதுமட்டுமல்லாமல் மணமகளை மணமகன் வீட்டில் டார்ச்சர் பண்ணுவது அதிகம். இதை நீயூஜெர்ஸியில் உள்ள ஆந்திர நண்பர்களிடம் பேசும் போது தெரிந்து கொண்டேன். நமது தமிழகத்தில் இந்த பழக்கம் மிகவும் குறைந்து விட்டது போல ஒரு தோற்றம் இருக்கிறது என்பது உண்மை
கேள்விப்பட்ட வரையில் தமிழ்நாட்டில் பெண்வீட்டாரே தராசில் மேலே நிற்பதாகத் தெரிகிறது:)!
Aha....
TM 2.
இதெல்லாம் இப்ப பெரிசாக நடப்பதில்லை என்பது நிச்சயமாக ஒரு illusion. அநேகமாக நாம் ஒரளவிற்கு settle ஆகிய பின் எமக்கென்று உருவாக்கி இருக்கும் நட்பு வட்டத்திலோ நாம் கூடுதலாகப் பழகும் ஆட்களுடமோ வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அதைத் தாண்டி எமக்குப் பழக நேரமும் இருப்பதில்லை/ சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை. அதனால் இவை சமூகத்தில் நடப்பதேயில்லை என்ற எண்ணம் எமக்கு வந்திருக்கும் என்பதே உண்மை என்று நினைக்கிறேன். இந்த வட்டத்திற்கு வெளியில் சென்று எல்லா நிலை மனிதர்களையும் அவதானிக்கும் போதும் ஒவ்வொரு நாளும் இச்செயல்களையும் இதன் விளைவுகளையும் மாற்றப் போராடும் activists இடம் கேட்கும் போதும் தான் உண்மை விளங்கும்.
கொழும்பில் ஒரு திருமண brokers இன் அலுவலகத்தில் ஒருவரின் குறிப்புக் கொடுக்கப் போனபோது அவர் கண்டது. Broker ஒரு பெண்ணின் தந்தையுடன் potential மாப்பிளையின் விலையை பேரம் பேசிக்கொண்டிருந்தபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தந்தை சொன்னாராம், இவை கொடுப்பதையும் விட 10 லட்சம் கூடத்தரலாம் அந்தப் பெடியனை எமக்கு set பண்ணித் தாங்கோ என்று. ?! இப்படி நிறைய incidents எனக்குத் தெரியும். Seriously marriage is still just a business deal in many parts of our community.
ஆந்திராவில் வரதட்சணை அதிகம். (இங்கே இஞ்சினியர்கள்,டாக்டர்களும் அதிகம்) வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களூம் அதிகம் என்பதால் கோடிகளில்தான் பேச்சுவார்த்தை நடக்கும். நடிகர் ஜூனியர் என் டி ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரின் திருமணங்களின் போது பல கோடிகள் வரதட்சணையாக கொடுத்தார்கள் என்று செய்தி வெளிப்படையாக இருந்தது.
அதற்காக தமிழ்நாடு பரவாயில்லை என்று சொல்லிவிட முடியாது. இன்றும் விசு எடுத்த “டொளரி கல்யாணம்” படத்தை ரீமேக் செய்தால் சக்கை போடு போடும்.
:(
வரதட்சணை வேண்டாம் என்று சொல்பவர்களை ஏதோ விசேஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்க்கிறார்களே!! அது ஏன்???!!!!
என்னக் கொடுமை சார் இது !
It is true.... people never change their mind..... thanks for sharing....
please read my blog www.rishvan.com and join as follower of my blog.
என்னாச்சு பதிவுகள் ஓன்றும் காணவில்லை? புத்தாண்டு நல்வாழ்துக்கள் உங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்க வளமுடன்.
புத்தாண்டில் உங்கள் பதிவுகளை படிக்க காத்திருக்கும் வாசகன் நான். தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment