Sunday, March 10, 2013

விஸ்வரூப கும்கி

இது திரை விமர்சன பதிவு அல்ல. ஆயினும் தலைப்பில் சொன்ன இரண்டு திரைப்படங்களையும் பார்த்த பிறகு எனக்குள் தோன்றிய சில எண்ண பதிவுகளின் தொகுப்பு இது.

எனக்குள் தோன்றிய சில கேள்விகள்
  1. திரைப்படம் என்பது என்ன?
  2. எதற்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது?
  3. யாருக்காக எடுக்கப்படுகிறது?
  4. எப்படி திரைப்படம் எடுக்கபடுகிறது?
  5. தேறாத படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க வைக்க படுகின்றன?
இதற்கு விஸ்வரூபம் திரைப்படத்தை முதலில் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

  • திரைப்படம் என்பது என்ன?
பல ஆங்கில படங்களையும் கொஞ்சம் தமிழையும்  கலந்து ஒரு திரைக்கதை தயார் செய்து அதில்  பெண் தன்மையான ஆள் என்று ஒரு கன்றாவி  ட்விஸ்ட் ஒன்றை வைத்து, நிறைய ரத்தம் சேர்த்து, ஒரு பெண் பேசுவதை நக்கல் அடித்து அவள் ஜாதியை கிண்டல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் டயலாக் வைத்தால் முடிந்தது திரைப்படம் ரெடி.

  • எதற்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது?
தான் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா என்று உலகுக்கு காட்டவும்., நானும் உலக பிரச்சனையை வைத்து படம் எடுத்திருக்கிறேன் பார் என்று தம்பட்டம் அடித்து கொள்ளவும்.
  • யாருக்காக எடுக்கப்படுகிறது?
நீங்க பெரிய அறிவு ஜீவி தலைவா, உங்களுக்கு  இருக்க அறிவுக்கு நீங்க எல்லாம் ஹாலிவுட் ல இருந்திருக்கனும், என்று ஜால்ரா அடிக்கும் சிலருக்காகவும். அப்புறம், "WoW, its an awesome movie, its going to take indian cinema to another level" என்று ஆங்கிலத்தில் பிதற்றும் சில மேல் தட்டு மக்களுக்காகவும் எடுக்கப்படுகிறது.

  • எப்படி திரைப்படம் எடுக்கபடுகிறது?
பணம் பட்ஜெட் குறைந்தது 100 கோடி.சில பல நவீன தொழில்நுட்பங்கள்  கட்டாயம் இருக்கணும்.பாரின் பொண்ணுங்க அல்லது ஆளுங்க பலர் படம் முழுதும் வரணும். நாம உலக பிரச்சனையை பற்றி பேசுவதால வெளிநாட்டில படப்பிடிப்பு கட்டாயம் இருக்கணும். படத்தில ஆங்கில டயலாக்ஸ்  நிறையவும், தமிழ் கொஞ்சமே கொஞ்சமும் சேர்த்துக்கனும். பாதி நேரம் என்ன பேசுறாங்கன்னு ஆடியன்ஸு  மண்டைய பிச்சுக்கணும்.

  •  தேறாத படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க வைக்க படுகின்றன?
நம்ம எடுக்கிற படங்கள் எப்பவுமே உலக பிரச்னையை பத்தி பேசுறதால கிராமத்தில இருக்கிறவனுக்கு ஒன்னும் புரிய போறதில்லை. நம்ம அடிபிடிகள் மட்டுமே நம்பி எப்படி 100 கோடியை திருப்பி எடுப்பது..அப்படின்னு யோசிச்சு..புதுசு புத்சா தானே  பிரச்சனை கிளப்பணும், நெகடிவ் பப்ளிசிட்டி சும்மா பிச்சுக்கும்..அப்புறம் என்ன வந்தவன் போனவன் எல்லாம் அதையே பேச வச்சு போட்ட காசை விட அதிகம் அள்ளிடலாம்.


இப்போது அடுத்த படமான கும்கிக்கு வருவோம்.

விஸ்வரூம் படத்திற்கு ஒவ்வொரு வகையிலும் எதிர்பதமாக இருந்தது கும்கி.

அழகான கதை, கதை களன் .நம் மண்ணின்  மனிதர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை நம்பிக்கை, யானைகள், கும்கி யானை, நடிக்க தெரிந்த ஹீரோ,   ஹீரோயின், துணை நடிகர்கள், பாடல்கள்  என்று அதகள படுத்தி இருந்தார்கள்.

இந்திய கிராமங்களின் ஒவ்வொரு தெருக்களில் மட்டுமன்றி இங்கும் கூட "சொய்  சொய் " பாடல் கேட்க்க முடிகிறது.

இப்போது மறுபடியும் என்னுடைய ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.

திரைப்படம் என்பது என்ன?

ஒவ்வொரு நாட்டிலும் வாழும் அல்லது வாழ்ந்த மக்களின் நிலையை, வாழ்வியலை படம் பிடித்து காட்டுவது திரைப்படம்.

எதற்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது?, யாருக்காக எடுக்கப்படுகிறது?

அனைத்து தரப்பு மக்களையும் கவர, அவர்களும் சந்தோசத்தை அனுபவிக்க திரைப்படம் எடுக்க படுகிறது.

எப்படி திரைப்படம் எடுக்கபடுகிறது?
நல்ல கதை,பாடல்கள், நடிக நடிகையர் அமைந்து நல்ல ரசனையுள்ள ஒரு இயக்குனர் கையில் ஒரு திரைப்படம் மாட்டும் பொது மன நிறைவுள்ள ஒரு படம் கிடைக்கிறது.

தேறாத படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க வைக்க படுகின்றன?

நல்ல படங்களுக்கு அதிக விளம்பரம் தேவை இல்லை. அது எப்படியும் கவனிக்க பட்டுவிடும்.
 

10 comments:

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துக்கள். உங்களுடன் நானும் அந்தக் கருத்துகளை வலியுறுத்துகிறேன்.

Avargal Unmaigal said...

படத்தை பற்றிய உங்களின் எண்ணங்கள் உண்மையை அப்படியே போட்டு உடைக்கின்றன

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு படங்களுக்கு உங்கள் கேள்வி-பதில் மூலம் விமர்சனம்.

நல்ல பகிர்வு.

இரண்டுமே இன்னும் பார்க்கவில்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தாக்குதல்...!

ஹுஸைனம்மா said...

கும்கி படம் பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப்போகீறேன். எனினும், இதிலும் சில உண்மைகளைத் திரித்துவிட்டார்கள் - பழங்குடிகளின் வாழ்க்கையைச் சரியாகச் சித்தரிக்கவில்லை; கொம்பன் யானையை கொல்வதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டர்கள் - போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், நல்ல படம்.

கோமதி அரசு said...

நல்ல கதை,பாடல்கள், நடிக நடிகையர் அமைந்து நல்ல ரசனையுள்ள ஒரு இயக்குனர் கையில் ஒரு திரைப்படம் மாட்டும் பொது மன நிறைவுள்ள ஒரு படம் கிடைக்கிறது.//
உண்மை உண்மை.

Jayadev Das said...

Good comparison..........

வருண் said...

I was really surprised when I watched kumki. Honestly, these days it is hard to watch a whole tamil movie but kumki was an exception.

I am happy that we still have some good talents like Prabhu Solomon.

-------------

****நீங்க பெரிய அறிவு ஜீவி தலைவா, உங்களுக்கு இருக்க அறிவுக்கு நீங்க எல்லாம் ஹாலிவுட் ல இருந்திருக்கனும், என்று ஜால்ரா அடிக்கும் சிலருக்காகவும். அப்புறம், "WoW, its an awesome movie, its going to take indian cinema to another level" என்று ஆங்கிலத்தில் பிதற்றும் சில மேல் தட்டு மக்களுக்காகவும் எடுக்கப்படுகிறது.***

Most of such people are "illiterates" pretend to be "well-educated".

This time even professional reviewers gave not-so-deserved "good reviews" for this movie because of some sort of sympathy wave associated with the "problems" in releasing the movie.

Well..

Thekkikattan|தெகா said...

:)) Mukundamma, you are so right. still I wonder who is the audience for the latest Kamal's movie?

Stay smile said...

I think u like "kumki" film :) me too...