Friday, October 29, 2010

இந்தியா தூதரகமா?

இன்று குடும்ப நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தோம். அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்தாலும் இங்கே குடியுரிமை பெற்று விட்டார். தற்போது திருமணம் முடித்து மனைவியை அழைத்து வந்துள்ளார்.

இங்கே வந்த பிறகு திருமண லைசென்ஸ் விண்ணப்பித்து மனைவிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் கிரீன் கார்டு வாங்கியும் விட்டார். தற்போது இந்தியன் பாஸ்போர்ட் இல் இருக்கும் மனைவியின் குடும்ப பெயரை மாற்றி தன் குடும்ப பெயரை சேர்க்க இந்தியா தூதரகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார். அதில் நடக்கும் கூத்துகளை அவர் கதையாக சொன்ன போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

முதலில், அந்த பெண் இங்கே வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இப்போது தான் அந்த பெண்ணிற்கு சோசியல் செக்யூரிட்டி நம்பர் வந்து இருக்கிறது. SSN எனப்படும் அது வந்த பிறகே எதுவும் செய்ய முடியும் உதாரணமாக, டிரைவர் லைசென்ஸ், வீடு வாடகைக்கு எடுப்பது, கிரெடிட் கார்டு வாங்குவது போன்ற சில.

பெயர் மாற்றத்திற்காக இந்தியா தூதரகத்திற்கு அவர் தன்னுடைய கல்யாண சான்றிதல், அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் அவரின் டிரைவர் லைசென்ஸ் எல்லாம் வைத்து அனுப்பி இருக்கிறார். சில வாரங்களுக்கு பிறகு ஒரு நோட் உடன் அது திரும்பி வந்து இருக்கிறது. அந்த நோட் இல் "பெண்ணின் டிரைவர் லைசென்ஸ் வைத்து அனுப்பவும் அதோடு முப்பது டாலர் போஸ்டல் செலவுக்கு பணமும் அனுப்பவும்" என்று வந்திருக்கிறது.

"இனிமேல் தான் டிரைவர் லைசென்ஸ் வாங்க போகிறாள் அந்த பெண் " என்று சொல்ல அவர் பல முறை போன் செய்து பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அது வாய்ஸ் மெசேஜ் க்கு சென்றிருக்கிறது. வாய்ஸ் மெசேஜ் கூட விட முடியாதபடி அவர்களின் மெயில் பாக்ஸ் புல் ஆகி இருக்கிறது. வேறு வழியில்லாமல் பல முறை போனில் தொடர்பு கொண்ட பிறகு ஒருவர் போன் எடுத்து இருக்கிறார். அவரிடம் எல்லாம் விளக்கிய பிறகும், தூதரகத்தில் இருப்பவர் "ரூல்ஸ் எல்லாம் ரூல்ஸ் தாங்க லைசென்ஸ் வாங்கியபிறகு எங்களுக்கு அனுப்புங்க" என்று சொல்லி போன் ஐ துண்டித்து இருக்கிறார்.

எங்கள் நண்பர் இந்தியாவில் யாரோ தெரிந்தவரை பிடித்து ஒரு வழியாக சரி காட்டி அவர் மூலமாக இங்கே உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றும் வேலை செய்ய திரும்ப அனுப்பி இருக்கிறார்.

தற்போது பாஸ்போர்ட் வந்து விட்டது ஆனால், எங்கள் நண்பரின் மனைவி பாஸ்போர்ட் அல்ல அது. வேறு யாருடைய பாஸ்போர்ட் ஒ அது. திரும்ப தூதரகத்தை தொடர்பு கொண்டாலும் அதே வாய்ஸ் மெயில், அதே பிரச்சனை.

இப்போது எனக்கு ஒன்று விளங்க வில்லை. எங்கள் நண்பர் கையில் கிடப்பதற்கு பதில் வேறு யார் கையிலாவது அந்த வேறு ஒருவருடைய பாஸ்போர்ட் கிடைத்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமே அதனை வைத்து?. என்ன ஒரு அலட்சியம் பாருங்கள். அதனை திருப்பி அனுப்ப கூட யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறார் எங்கள் நண்பர்.

இதனை பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்த போது சமீபத்தில் மஸ்கட் நகரில் இந்திய தூதரக அதிகாரிகளின் அலட்சியத்தால் இறந்த அந்த பெண்மணியின் நினைவு வந்தது. எங்கே போய் சொல்வது இந்த அவலத்தை.




,

12 comments:

ஜோதிஜி said...

வெளிநாட்டில் உள்ள தூதரகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் தேவலோகத்தில் பணிபுரியும் ஜீவன்கள் போலவே இருக்கிறார்கள். நேரிடையாக பார்த்த அனுபவத்தில் அவர்களை என்ன செய்யலாம்??? என்று வெறுத்துப் போய் யோசித்தது உண்டு.

Chitra said...

என்ன கொடுமைங்க, இது!

வெத்து வேட்டு said...

you can get anything done in Indian High Commision in Toronto by paying BRIBE. The officials have no second thoughts about asking for bribe. There is even an agent travelling in the elevator to "sort things out".
Jai Hind

Unknown said...

நம்மூர் மக்கள் ஒரே கேள்வியை விதவிதமாகக் கேட்டு பதில் வாங்கிப்போம், நம்ம கலாச்சாரம் அப்படி:-) ஆனால், இதுவே கடியாயிடுதோ என்னவோ பதில் சொல்றவங்களுக்கு. (ரொம்ப பாலீஷ்டா சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன்).

இன்டர்நெட் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு பக்கத்துக்குள் விவரித்து (எல்லா பெயர், பாஸ்போர்ட் எண், அனுப்பிய தேதி, பெற்ற தேதி விவரங்களோடு), உடனடியாக ஏன் இந்திய தூதரகம் பாஸ்போர்ட்டை அனுப்பணும்னு தேவையான காரணத்தோடு (இது ரொம்ப முக்கியம்; உதாரணமாக, "அடுத்த மாதம் கான்கூன் போகிறோம்...") எழுதி அனுப்புங்கள். குறிப்பாக, கடைசியாக போல்டு செய்த எழுத்தில், "இவ்வளவு நேரமும் முயற்சியும் எடுப்பதால், வேறு யாரையாவது நாங்கள் தொடர்பு கொள்ளணுமா என்றும் தெரியப்படுத்தவும்"னு எழுதவும். மற்றவரின் பாஸ்போர்ட்டை நாம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதால், அந்த மற்றவரின் பாஸ்போர்ட் விவரத்தையும் இந்த லெட்டரில் எழுதி திருப்பி அனுப்பி விடுங்கள்.

This is nothing but veiled threat from the passport applicant that she/he is prepared to go to press and has documented details of where the consulate went wrong. But the letter should not have any explicit intent to offend the consulate. Follow the rules, DOCUMENT! and do not pay bribes. This is our country's pride in question.

Thekkikattan|தெகா said...

இந்த கடைசி பெயர் மாற்றம் செஞ்சிக் கொடுக்கிறது இந்திய கடவுச் சீட்டு நிலையங்களிலேயே மிக எளிதாக பண்ணிக் கொடுத்து விடுகிறார்களே. இங்கு அதனினும் எளிதாக கடவுச் சீட்டு சம்பந்தமான விசயங்களை செஞ்சிக் கொடுப்பதாகத்தான் எனது அனுபவத்தின் படி எண்ணியிருந்தேன்.

எப்படி இவ்வளவு இடியப்பச் சிக்கலாக ஆகிக் கொண்டது இந்த ஒரு சிறு வேலை?! இங்கு பதிந்த மற்றும் ஊரில் பதிந்த திருமணச் சான்றிதழும், கணவரின் ஓட்டுநர் உரிமமும் முறையான ஃபீஸ், ரிடர்ன் மெயில் தொகை வைச்சி செஞ்சிருந்தா வேல முடிஞ்சிருக்கணுமே??! ஆன்லைன் இன்ஸ்ரக்‌ஷன் சரியா ஃபாலோ பண்ணாங்களா??

இதெல்லாம் என்னோட கடவுச் சீட்டுச் சம்பந்தமான நான் பெற்ற அனுபவத்தின் வாயிலாக நல்நம்பிக்கையுடன் கூறுகிறேன். இங்கயே ரினுவல் பண்ணியிருக்கேன், புது ஃபோட்டோ ஒட்டி மாத்தி வாங்கியிருக்கேன், சமீபத்தில இரட்டை குடியுரிமை சார்ந்த புது கடவுச் சீட்டும் கூட வாங்கியிருக்கேன் - ஹுயுஸ்டன் செண்டர்தான் எனக்கு சர்வீஸுக்கு.

ஆமா, உங்க நண்பருக்கு எந்த ஊரு செண்டர்?

முகுந்த்; Amma said...

தெகா,

இப்பொது இந்தியா செல்வதற்கு முன் நான் கூட என்னுடய கடவுச்சீட்டை இங்கே இருக்கும் தூதரகத்தில் அனுப்பி புதுப்பித்து இருக்கிறேன்.

எங்கள் நண்பர் Washington DC இல் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு அவர் மனைவியின் பாஸ்பொர்ட் அனுப்பி இருக்கிறார். எங்கே தவறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை.

கெக்கெ பிக்குனி அவர்கள் சொல்வது போல ஒரு கடிதம் எழுதி மற்றொருவருடைய கடவுச்சீட்டையும் வைத்து அனுப்பும் படி நண்பரிடம் சொல்கிறேன்.

எப்படியாவது அவருடைய மனைவியின் கடவுச்சீட்டு நல்லபடியாக வந்தால் சரிதான்.

Unknown said...

இங்கே பாரிஸ் இந்திய தூதுவராலயத்தில் லஞ்சம் கொடுத்தால்
சகலதும் செய்கிறார்கள். இல்லையோ அலச்சல் தான்.
லஞ்சப் பணப் பட்டுவாடாவுக்கு என்றே சில இந்தியக் கடைகள் ஒழுங்கு செய்துள்ளார்கள்.

Thekkikattan|தெகா said...

சொல்லணும்னு நினைச்சது, முதல் பின்னூட்டம் நீண்டுடுடுடு கிட்டே போனதால், மீண்டும் ஒண்ணு... :)

கடவுச் சீட்டு ஒப்படைக்கிறதுக்கென நான் பட்டக் கஷ்டம் டெல்லியில இங்கே இருக்கு பாருங்க ...தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - II

Asiya Omar said...

எப்படி எல்லாம் பிரச்சனை தராங்க,என்னத்த சொல்றது?

முகுந்த்; Amma said...

@ஜோதிஜி said...
வாங்க ஜோதிஜி,

//வெளிநாட்டில் உள்ள தூதரகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் தேவலோகத்தில் பணிபுரியும் ஜீவன்கள் போலவே இருக்கிறார்கள். நேரிடையாக பார்த்த அனுபவத்தில் அவர்களை என்ன செய்யலாம்??? என்று வெறுத்துப் போய் யோசித்தது உண்டு.//

சில நேரங்களில் நானும் அப்படி நினைத்தது உண்டு.

கருத்துக்கு நன்றி

@Chitra said...

//என்ன கொடுமைங்க, இது!//

ஆமாங்க சித்ரா ரொம்ப கொடுமை தான்.

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@வெத்து வேட்டு said...

வாங்க வெத்து வேட்டு

//you can get anything done in Indian High Commision in Toronto by paying BRIBE. The officials have no second thoughts about asking for bribe. There is even an agent travelling in the elevator to "sort things out".
Jai ஹிந்த்//

டொராண்டோ இந்தியா தூதரகம் பற்றி கேள்விப்படும் போது மன வருத்தம் தருகிறது. எங்கே சென்றாலும் லஞ்சம் ஒழிய மாட்டேன் என்கிறது :((

@கெக்கே பிக்குணி said...

நன்றி கெக்கே பிக்குணி அவர்களே. தாங்கள் சொன்னது போல கடிதம் எழுதி நண்பரிடம் அனுப்ப சொல்லி இருக்கிறேன். பார்போம் என்ன நடக்கிறது என்று

கருத்துக்கும் அறிவுரைக்கும் நன்றி.

Radhakrishnan said...

எரிச்சலூட்டும் இந்திய தூதரகங்களோ