Wednesday, December 29, 2010

சகுனங்களும் வாழ்கையும் !


சிறு வயதில் நிறைய பேர் சகுனங்கள் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். "நமக்கு நல்லது நடக்கிறதா இருந்தா சில பல சகுனங்கள் நமக்கு உணர்த்தும்" என்று என்னுடைய பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். சகுனங்கள் என்பது உண்மையா?, சகுனங்கள் நமக்கு எதனை உணர்த்துகின்றன. நிறைய பேர் "எனக்கு இப்போ நடக்கிறதெல்லாம் பார்த்தா நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்" என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்..அப்படியானால் நமக்கு சுற்றிலும் நடப்பவை நமக்கு எதையோ உணர்த்துகின்றனவா? இவை எல்லாம் எனக்கு நிறைய நேரம் எழும் கேள்விகள்.

சில மாதங்களாக வேலைக்கு முயற்சி செய்து ஒன்றும் சரியாக கிளிக் ஆகாத நிலையில் மனது வெறுத்து இருந்தேன். அந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் பாலோ கேல்ஹோ அவர்களின் தி அல்கெமிஸ்ட் என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.

- The Alchemist- : பாலோ கேல்ஹோவின் முக்கியமான புத்தகம். ஒரு மனிதனின் விதியை தேடிய பயணத்தை பற்றியது இந்த புத்தகம். அது தன்னம்பிக்கை புத்தகமா அல்லது கதையா, நாவலா எதிலும் வகைப்படுத்த முடியாத படியான அருமையான புத்தகம் அது. இப்போது படிக்கும் போது ஒரு வகையான எண்ணங்களை தருகிறது இந்த புத்தகம், ஒரு வேலை சில வருடங்கள் கழித்து படிக்கும் போது வேறு எண்ணங்கள் எனக்கு தோன்றக்கூடும்.


ஒரு மனிதன் தன்னுடைய விதியை நோக்கி பயணம் செய்யும் போது இந்த உலகமும் அதனை சார்ந்த அனைத்தும் உதவும் என்று அந்த புத்தகத்தில் படித்தேன். எத்தனை தூரம் இது உண்மை.

சில காரியங்களை செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் எல்லாமே நல்ல படியாக நடப்பது போன்று இருக்கும், ஆனால் நாட்கள் ஆக ஆக தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலை எடுக்கும். பின் ஒரு கட்டத்தில் எல்லாமே முடிந்து விட்டது நமக்கு இதில் எதிர் காலமே இல்லை என்று அந்த காரியத்தை ஊத்தி மூட நினைப்போம், அப்போது எல்லாமே நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் எதனை குறிக்கின்றன?

அந்த புத்தகத்தின் படி இயற்கை/விதி எதுவோ ஒன்று நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்த முதலில் நம்பிக்கை தருவது போல சில லக் தரும் அது பிகிநேர்ஸ் லக் என்கிறார். பிறகு காலம் செல்ல செல்ல வாழ்கையை/உலகத்தை புரிய வைக்க நமக்கு கஷ்டத்தை தருகிறது. பலர் இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே என்று வருந்தி முயற்சியை கை விட்டு விடுகிறார்கள். அவர்கள் losers ஆகிறார்கள். ஆனால் முயற்சியை கைவிடாமல் கடைசி வரை முயல்பவன் ஜெயிக்கிறான்.

அதனை தான் ஒரு வேலை

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

என்று வள்ளுவர் குறிப்பிட்டாரோ, தெரியவில்லை.

எப்படியோ அந்த புத்தகம் கிருஸ்துவ நம்பிக்கைகளை அங்கங்கே தூவினாலும் அது சொல்லும் கருத்துகள் மறுக்க முடியாததாக உள்ளன.

சில நாட்களுக்கு முன் CNN ஹீரோவான மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் இங்கு நியூ ஜெர்சி வந்திருந்த போது ஒன்று குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது, "நல்ல காரியம் செய்யனும்னு நான் ஆரம்பிச்சது தாங்க, நல்ல காரியம்னு ஆரம்பிச்சவுடன் fund தானா வர ஆரம்பிச்சது, எனக்கு பின்னால யாரவது இதனை தொடர்ந்து நடத்த ஆள் கட்டாயம் வருவார்" இது நாராயணன் கிருஷ்ணன் சொன்னது. இதனை தான் சகுனங்கள் என்பதோ?

டிஸ்கி: இந்த பதிவு புத்தக விமர்சனமா, அனுபவமா அல்லது கொசுவர்த்தியா எனக்கே தெரியவில்லை!

8 comments:

Thekkikattan|தெகா said...

சரியான நேரத்தில் கையில கிடைச்சு அனுபவிச்சு படிச்சிருக்கீங்கன்னு புரியுது.

அந்த புத்தகம் முழுக்க முழுக்க மனிதர்களுக்கான பயணத்தின் சிறப்பைப் பற்றி விளக்குவதான புத்தகம். அந்தத் தாகம் தேடியடையும் வரையிலும் எதற்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணி கொள்ளக் கூடாத ஒரு தவம் என்ற திசையிலேயே அந்த புத்தகத்தின் கதாநாயகன் மூலமாக பாலோ கோயல்ஹோ ஆன்மீக-தத்துவார்த்தா ரீதியில் எடுத்துச் சென்றிருப்பார்.

படிக்கும் அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் inspirationalஆக அமையக் கூடிய வாசிப்பனுபவத்தைக் கொடுக்கக் கூடியது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படித்ததும் தோன்றிய எண்ணங்களை அழகாக பகிர்ந்துகிட்டிருக்கீங்க..

பிகினர்ஸ் லக்..நல்லா இருக்கு..

அப்பறம் தன் திறமையையும் கொஞ்சம் காமிக்கலான்னா தோல்வியடையறாங்களா இருக்கும்..

ஹுஸைனம்மா said...

//புத்தக விமர்சனமா, அனுபவமா அல்லது கொசுவர்த்தியா //

எதைப் பார்த்தாலும்/படித்தாலும் நம் அனுபவத்தோடும், எண்ணங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கவே மனம் விரும்புகிறது இல்லையா?

Anonymous said...

அன்புத் தோழருக்கு வணக்கம்,

எமது தளத்தில் இருந்து மற்றுமொரு இணைய சஞ்சிகையாக அறிமுகத்தவத்தினை ( mag.pondicherryblog.com ) வெளியிடுகிறோம். இதில் பல பதிவர்களின் நல்ல எழுத்துக்களை வெளியிடுகிறோம். இந்த வாரப் பதிப்பில் தங்களின் படைப்பும் வெளியிடப்பட இருக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வலையேற்றப்படும்.

பார்த்துவிட்டு கருத்துக் கூறவும், இவற்றில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என்னிடம் கூறுங்கள், நீக்கிவிடுகிறோம். தாங்கள் மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,

அங்கிதா வர்மா,
தலைமை ஆசிரியர் - பாண்டிச்சேரி வலைப்பூ

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கையே ட்ரையல் அண்ட் எர்ரர் முறைப்படிதானே நடக்கிறது முகுந்த் அம்மா. களிப்பும் சுளிப்பும் மாறி மாறி வருகிறது. ஆரம்பித்த எத்தனையோ நல்ல காரியங்கள் தடை படுகின்றன. சிலவை தானாக சுலபமாக முடிவடைகின்றன. இறைவன் செயல் என்று பூர்த்தி செய்யலாம்.

முகுந்த்; Amma said...

@பாண்டிச்சேரி வலைப்பூ

அய்யா,

தங்கள் தளத்தில் வெளியிட்டுள்ள "கடவுளை கண்ட ஆடடோக்காரன்" இடுகை என்னுடைய தளத்தில் இருந்து
வந்ததல்ல. எனக்கு கல்லூரி செல்லும் வயதில் பெண் இல்லை. வேறு யாருடைய இடுகையையொ என்னுடையதென்று இங்கு அளித்திருப்பது அந்த இடுகையை எழுதியவருக்கு மனக்கஷ்டம் தரலாம். தயவு செய்து இதனை எடுத்து விடவும். என்னுடய தளத்தில் இருந்து வேறு எதாவது இடுகையை இங்கு சேர்த்தால் மகிழ்வேன்.

நன்றி.
முகுந்த் அம்மா

Anonymous said...

அன்புத் தோழருக்கு வணக்கம்,

எமது தளத்தில் இருந்து மற்றுமொரு இணைய சஞ்சிகையாக அறிமுகத்தவத்தினை ( mag.pondicherryblog.com ) வெளியிடுகிறோம். இதில் பல பதிவர்களின் நல்ல எழுத்துக்களை வெளியிடுகிறோம். இந்த வாரப் பதிப்பில் தங்களின் படைப்பும் வெளியிடப்பட இருக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வலையேற்றப்படும்.

பார்த்துவிட்டு கருத்துக் கூறவும், இவற்றில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என்னிடம் கூறுங்கள், நீக்கிவிடுகிறோம். தாங்கள் மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,

அங்கிதா வர்மா,
தலைமை ஆசிரியர் - பாண்டிச்சேரி வலைப்பூ

Anonymous said...

இச்சிறு தவறுக்கு வருந்துகிறோம். அடுத்த வாரம் வர வேண்டிய பதிவும், உங்களின் பதிவும் இடம்மாறிவிட்டது.

தற்சமயம் இதனை சரிசெய்துவிட்டோம்............... இத்தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு மனம் வருந்துகிறேன்...