Friday, January 7, 2011

பதிவுலகில் ஒரு வருடம் !


அப்பாடியோ!! ஒரு வருடம் எப்படி பறந்தது என்றே தெரியவில்லை. இன்றோடு நான் வலையுலகம் வந்து ஒரு வருடம் ஆகிறது. எப்படியாவது நூறு பதிவாவது எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் வலையுலகம் வரமுடியாத அளவுக்கு வேலை, நேரமின்மை..etc.

என்னுடைய, ஒரு வருட பதிவுலக அனுபவத்தை திரும்பி பார்க்கும் பதிவு இது.

கொசுவர்த்தி
-----------------
பதிவு ஆரம்பித்த பொழுதில் எல்லாம் பதிவுலகே கதியாக இருந்தது,அதற்காக ரங்கமணியிடம் திட்டு வாங்கியது, சிறிதுசிறிதாக இந்த அடிக்க்ஷனில் இருந்து வெளியில் வந்தது, பதிவெழுதவே நிறைய படிக்க ஆரம்பித்தது. நிறைய புத்தகங்கள், செய்திகள், பிற தளங்கள் என பலவும் வாசித்தது என நிறைய சொல்லலாம்... முன்னிருந்த ஆர்வம் இப்போது இல்லையென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வரவே மனம் விரும்புகிறது.

தட்டி கொடுத்தது
-------------------
ஒரு வருடம் நிறைய எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது என்றாலும், என்னாலும் எழுத முடியும் என்று என்னையே தட்டிக்கொடுத்தது, யூத்புல் விகடன், தேவதை மற்றும் பாண்டிச்சேரி வலைப்பூவின் அறிமுகத்துவம், இவற்றில் என்னுடைய பதிவை பற்றி வெளிவந்தது. அதனையும் தாண்டி என் வலைபூவிற்கு வந்து படித்து பின்னூட்டம் இட்டு என்னை தட்டிக்கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

மலைக்க வைத்தது
-----------------------
ஒரு நாளைக்கு அரை மணிநேரம் பதிவுலகிற்கு வருவதே இப்போது எனக்கு கடினமாகிவிட்ட நிலையில் எப்போதும் ஆன்லைனில் இருந்து எல்லாருடைய பதிவை படித்து தினம் ஒரு பதிவு இடும், பின்னூட்டம் இடும் பதிவர்களை பார்க்கும் போது மலைப்பும் பெருமூச்சும் வருகிறது.


நட்புகள்
------------

ஒரு சில மறக்க வேண்டிய நிகழ்வுகளை தவிர்த்து பார்த்தால்,வேலையில் இருந்து நான் எடுத்த பிரேக்குக்கு, இந்த பதிவுலகம் நல்ல வடிகாலாக இருந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.சில நல்ல நண்பர்களையும் இந்த பதிவுலகம் எனக்கு தந்திருக்கிறது. பெயர், ஊர் என்று என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தாலும் நிறைய பேர் இங்கு வந்து வாசித்து பின்னூட்டம் இட்டு ஒரு முகமறியா நட்பை என்னுடன் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் மற்றுமொறு நன்றி.

தற்போதய நிலவரப்படி இன்னும் சில நாட்களில் மறுபடியும் வேலைக்கு செல்ல போகிறேன். அதனால் வலைப்பூ வருவது இன்னும் குறையும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து வந்து உங்களை தொல்லை படுத்தாமல் விடப் போவதில்லை என்று உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

17 comments:

துளசி கோபால் said...

பயணம் தொடரட்டும்!!

இனிய வாழ்த்து(க்)கள்.

அமைதி அப்பா said...

வலைப்பூவை தொடர்வது மிகச் சிரமம்தான். ஆனால், அது பெற்றுத்தந்த நண்பர்களை இழக்க மனது விரும்பவில்லை என்பதுதான் உண்மை!

நல்ல பகிர்வு.

settaikkaran said...

நல்வாழ்த்துகள்! :-) எவ்வளவு பணியிருந்தாலும், அவ்வப்போது எழுதுங்கள்...!

எனக்கும் இரண்டாவது வருடம் இன்றுதான் துவக்கம்.....! :-)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க முகுந்த் அம்மா!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்...நீங்கள் இயல்பாக எழுதுவதே தொடர்ந்து எங்களை வாசிக்க வைக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்....:-)

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஹுஸைனம்மா said...

நல்ல அனுபவங்கள். முதல்ல இருந்த ஆர்வம், ரு வருஷம் கழியும்போது குறைஞ்சுடுது. இதில அஞ்சாறு வருஷமா தொடர்ந்து இருக்கவங்களைப் பாத்தா ஆச்சர்யமா இருக்கு!!

என் வேலையில் இணையத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிருந்ததால், அநேகப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்க முடிந்தது. ஆனா இப்ப வீட்டில இருக்கிறதனால, அப்படி முடியாது. உங்களுக்கு ஆப்போஸிட் ஸிட்டுவேஷன், ஆனா, அதே எஃபெக்ட்!!!! :-))))

Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள்! இதைச் சொல்லணும்னு மனசு அழுத்தும் போதெல்லாம் வந்து ஒரு பதிவா கொடுத்திருங்க.

ஆனா, தொடர்ந்து நின்னு விளையாடுங்க! :)

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ துளசி கோபால் said...
பயணம் தொடரட்டும்!!

இனிய வாழ்த்து(க்)கள்.//


ரிப்பீட்டேய்..:) வேலையோடு கூட நண்பர்களை மறக்காமல் தலையக்காட்டிட்டு அப்படியே அனுபவங்களை பகிர்ந்துக்குங்கப்பா..

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் முகுந்த் அம்மா!

தொடருங்கள்.

Anna said...

Congratulations and Good luck Mukund Amma.

முகுந்த்; Amma said...

@துளசி கோபால் said...

// பயணம் தொடரட்டும்!!

இனிய வாழ்த்து(க்)கள்.//

நன்றிங்க டீச்சர்.


@அமைதி அப்பா said...

// வலைப்பூவை தொடர்வது மிகச் சிரமம்தான். ஆனால், அது பெற்றுத்தந்த நண்பர்களை இழக்க மனது விரும்பவில்லை என்பதுதான் உண்மை!

நல்ல பகிர்வு.
//

உண்மைதாங்க அமைதி அப்பா.
கருத்துக்கு நன்றிங்க.


@சேட்டைக்காரன் said...

// நல்வாழ்த்துகள்! :-) எவ்வளவு பணியிருந்தாலும், அவ்வப்போது எழுதுங்கள்...!//

கட்டாயம் எழுதுரேங்க.

//எனக்கும் இரண்டாவது வருடம் இன்றுதான் துவக்கம்.....! :-)//

உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...மென்மேலும் தொடர்ந்து கலக்குங்க.

முகுந்த்; Amma said...

@அபி அப்பா said...

// வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க முகுந்த் அம்மா!//

நன்றிங்க அபி அப்பா. கட்டாயம் எழுதுரேங்க.

//சந்தனமுல்லை said...

// வாழ்த்துகள்...நீங்கள் இயல்பாக எழுதுவதே தொடர்ந்து எங்களை வாசிக்க வைக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்....:-)
//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சந்தனமுல்லை.

@தமிழ் உதயம் said...

// வாழ்த்துக்கள்.//

நன்றிங்க தமிழ் உதயம்

முகுந்த்; Amma said...

@அமைதிச்சாரல் said...

// பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//

நன்றிங்க அமைதிச்சாரல்


@ ஹுஸைனம்மா said...

// நல்ல அனுபவங்கள். முதல்ல இருந்த ஆர்வம், ரு வருஷம் கழியும்போது குறைஞ்சுடுது. இதில அஞ்சாறு வருஷமா தொடர்ந்து இருக்கவங்களைப் பாத்தா ஆச்சர்யமா இருக்கு!!//

ஹுஸைனம்மா வாங்கப்பா, உண்மைதான். பல வருசமா எழுதுற துளசி டீச்சர், முத்துலெட்சுமி அவங்களை போன்றவர்களை பார்க்கும் போது ஆச்சர்யமா தான் இருக்கு.

//என் வேலையில் இணையத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிருந்ததால், அநேகப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்க முடிந்தது. ஆனா இப்ப வீட்டில இருக்கிறதனால, அப்படி முடியாது. உங்களுக்கு ஆப்போஸிட் ஸிட்டுவேஷன், ஆனா, அதே எஃபெக்ட்!!!! :-))))//

வீட்டில இருந்தா வீட்டுவேலையே சரியா இருக்குங்க...இணையம் பக்கம் வர்ரது குறையும்..
நீங்க...டைம் கிடைக்கும் போது வந்து நிறைய அசத்துங்கப்பா.

எனக்கு வேலையும் இணையத்தில ரொம்ப இருக்குறது மாதிரி இல்லீங்க..அதனால ரொம்ப வர முடியாம ஆகிடும்னு நினைக்கிறேன்.

தொடர்ந்து வந்து ஊக்குவிப்பதற்க்கு நன்றிங்க.

முகுந்த்; Amma said...

//Thekkikattan|தெகா said...

// வாழ்த்துக்கள்! இதைச் சொல்லணும்னு மனசு அழுத்தும் போதெல்லாம் வந்து ஒரு பதிவா கொடுத்திருங்க.

ஆனா, தொடர்ந்து நின்னு விளையாடுங்க! :)

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்...
//

நன்றிங்க தெகா..கட்டாயம் நின்னு விளைடாடுவேங்க..

தொடர்ந்து வந்து ஊக்குவிப்பதற்க்கு நன்றிங்க.

@ முத்துலெட்சுமி/muthuletchumi said...
// ரிப்பீட்டேய்..:) வேலையோடு கூட நண்பர்களை மறக்காமல் தலையக்காட்டிட்டு அப்படியே அனுபவங்களை பகிர்ந்துக்குங்கப்பா..//

கட்டாயங்க..வேலையோடு வேலயா..இந்த பக்கம் வந்து நண்பர்கள்கிட்ட ஒரு ஹல்லோ சொல்லுவேங்க..

நன்றிங்க முத்துலெட்சுமி..

நான் வலைபூ ஆரம்பிச்சபோ இருந்து இப்போ வரை தொடர்ந்து வந்து என்னை மெறுகேற்றுவது நீங்களும் தெகாவும் தாங்க..அதனால உங்க ரெண்டு பேருக்கும் இந்த நேரத்துல ஒரு ஸ்பெஸல் தாங்ஸ்ங்க.

முகுந்த்; Amma said...

@ராமலக்ஷ்மி said...

// நல்வாழ்த்துக்கள் முகுந்த் அம்மா!

தொடருங்கள்.
//

நன்றிங்க ராமலக்ஷ்மி

@The Analyst said...

// Congratulations and Good luck Mukund Amma.//

நன்றிங்க அனலிஸ்ட்.