2000 ஆவது ஆண்டு தீபாவளி மறக்க முடியாத தீபாவளி. குடும்பத்தில் அனைவரும் இருந்து வெடி வெடித்து, பலகாரம் சாப்பிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு சென்று, நண்பர்களை வீட்டுக்கு அழைத்து புகைப்படம் எடுத்து...இன்னும் நிறைய. கடந்த பத்து வருடங்களில் நான் கொண்டாடிய மகிழ்ச்சிகரமான தீபாவளி என்றாலும் அது தான்.
அடுத்த வருடம் நிகழ்ந்த பெரிய அண்ணனின் மறைவு குடும்பத்தை புரட்டி போட அந்த வருடம் தீபாவளி இல்லையென்று ஆனது. அதற்க்கு அடுத்த வருடம் நிகழ்ந்த அண்ணியின் மரணம் நெஞ்சில் தைத்து தீபாவளியை மறக்க செய்தது. வெளிநாட்டில் படிக்க போய் அங்கிருந்த படியே அடுத்தடுத்த வருடங்களில் தனியாக நான் கொண்டாடிய தீபாவளி சுவாரசியம் இல்லாமல் ஆனது. திருமணம் ஆன பின்பு கூட எங்கள் தலை தீபாவளி சந்தோசம் இல்லாமல் அவர் இங்கேயும் நான் வேறெங்கோ இருந்தும் தனித்தனியாக கொண்டாடியது நினைவில் வந்தது.
2005 தீபாவளி இல் நான் இங்கு வந்த பிறகு " அம்மா அப்பாவுடன் தான் சேர்ந்து தீபாவளி கொண்டாட முடியவில்லை அவருடன் சேர்ந்தாவது, தீபாவளி கொண்டாடலாம்" என்று இருந்தேன் அதற்கும் வேட்டு வைத்தது அவர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணம். என்ன எங்கள் ராசி யோ தெரியவில்லை ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு தடங்கல், மரணம்.
எப்போ தான் தீபாவளி கொண்டாட போறோமோ என்று நினைத்து யோசித்த படியே ஊருக்கு போன் செய்ய, எடுத்தது என் பெரிய அண்ணன் மகள் "அத்தை ஹாப்பி தீபாவளி" என்று மகிழ்ச்சியோடு அவள் சொல்ல, என் மனம் அழ ஆரம்பித்து விட்டது. "நமக்கு அம்மா அப்பாவுடன் தீபாவளி கொண்டாட தான் முடியவில்லை ஆனால் அவளுக்கு அம்மா அப்பாவே இல்லையே".
அடுத்த வருடம் நிகழ்ந்த பெரிய அண்ணனின் மறைவு குடும்பத்தை புரட்டி போட அந்த வருடம் தீபாவளி இல்லையென்று ஆனது. அதற்க்கு அடுத்த வருடம் நிகழ்ந்த அண்ணியின் மரணம் நெஞ்சில் தைத்து தீபாவளியை மறக்க செய்தது. வெளிநாட்டில் படிக்க போய் அங்கிருந்த படியே அடுத்தடுத்த வருடங்களில் தனியாக நான் கொண்டாடிய தீபாவளி சுவாரசியம் இல்லாமல் ஆனது. திருமணம் ஆன பின்பு கூட எங்கள் தலை தீபாவளி சந்தோசம் இல்லாமல் அவர் இங்கேயும் நான் வேறெங்கோ இருந்தும் தனித்தனியாக கொண்டாடியது நினைவில் வந்தது.
2005 தீபாவளி இல் நான் இங்கு வந்த பிறகு " அம்மா அப்பாவுடன் தான் சேர்ந்து தீபாவளி கொண்டாட முடியவில்லை அவருடன் சேர்ந்தாவது, தீபாவளி கொண்டாடலாம்" என்று இருந்தேன் அதற்கும் வேட்டு வைத்தது அவர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணம். என்ன எங்கள் ராசி யோ தெரியவில்லை ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு தடங்கல், மரணம்.
எப்போ தான் தீபாவளி கொண்டாட போறோமோ என்று நினைத்து யோசித்த படியே ஊருக்கு போன் செய்ய, எடுத்தது என் பெரிய அண்ணன் மகள் "அத்தை ஹாப்பி தீபாவளி" என்று மகிழ்ச்சியோடு அவள் சொல்ல, என் மனம் அழ ஆரம்பித்து விட்டது. "நமக்கு அம்மா அப்பாவுடன் தீபாவளி கொண்டாட தான் முடியவில்லை ஆனால் அவளுக்கு அம்மா அப்பாவே இல்லையே".
18 comments:
sorry for that girl!!
//"காலுக்கு செருப்பு இல்லை என்று ஒருத்தன் அழுதானாம், காலே இல்லாத ஒருத்தனை பார்க்கும் வரையில்".//
ம்ம்ம்... எவ்வளவு பெரிய முரண்.
வாழ்க்கையே எதிர் எதிர் முனைகளில்தான் சுழல்கிறது. எந்த ஒரு நிகழ்வும் நமக்கு மிக அண்மையில் நிகழும் வரைக்கும் அதன் கனம் உணர்வதில்லையே! அடுத்தவர்களின் வலியையும் நமக்கானதாக சிறிதளவேனும் எண்ணச் செய்யும் மனங்கள் மிகக் குறைவே...
""காலுக்கு செருப்பு இல்லை என்று ஒருத்தன் அழுதானாம், காலே இல்லாத ஒருத்தனை பார்க்கும் வரையில்". Count your blessings, என்று சொல்வார்கள். அப்படி பார்த்தால் நானெல்லாம் எவ்வளவு பாக்கியசாலி.".
- இந்த கடைசி பத்தி சரியாகப் பொருந்த வில்லை. பிடிக்கவில்லை.
உங்கள் இரு குடும்பத்தினர் குழந்தைகளும் சேர்ந்து கொண்டாடும் போது எல்லாம் மறந்து போவீர்கள்.
@Sethu
//- இந்த கடைசி பத்தி சரியாகப் பொருந்த வில்லை. பிடிக்கவில்லை.
உங்கள் இரு குடும்பத்தினர் குழந்தைகளும் சேர்ந்து கொண்டாடும் போது எல்லாம் மறந்து போவீர்கள்.//
சின்ன சின்ன கவலைகளை நினைத்து மனதை வருந்துவதை விட, பெரிய கஷ்டத்தையும் சுலபமாக எடுத்து கொண்ட என் அண்ணன் மகளை நினைத்து நான் எவ்வளவு பாக்கியசாலி என்று நினைத்ததையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
சின்ன கவலைகளை பெரிதாக நினைத்து மனம் வருந்திய என்னை எப்படி என் அண்ணன் மகளின் மகிழ்ச்சி வார்த்தைகள் மாற வைத்தன என்பதே நான் சொல்ல விளைவது, வேறு அர்த்தம் தரும்படி இங்கே மாறி இருந்தால் மன்னிக்கவும்.
இதை கவுன்ட் யுவர் blessings அல்லது நான் எவ்வளவு பாக்கியசாலி என்று முடிப்பதைவிட,
1 . எனது அண்ணன் மகள், தன் வலியை மறந்து 'ஹாப்பி தீபாவளி அத்தை' சொன்று சொல்லி மனதை இலகுவாக்கினாள்,
2 . வயதில் சிறியவள் எளிதாக எடுத்துக்கொண்டு பிறருக்கு வாழ்த்து சொல்லுவது நாம் சிறியவரிடம் கற்றுக் கொள்ளும் ஒரு பாடம்,
என்று இது மாதிரி முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் முடித்துள்ளவிதம் வெளியாட்களிடம் ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த வாய்ப்பளித்துவிடும்.
1 கவுன்ட் யுவர் blessings அல்லது நான் எவ்வளவு பாக்கியசாலி என்று தந்தை தாய் இழந்தவரோடு compare செய்தல் சிறப்பான செயல் அல்ல.
2 நிறைய குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் குழந்தைகளை தன் குழந்தையாக பாவிக்கும் குணம் நம் இந்தியரிடம் உண்டு. முன்பு என் தந்தை, இப்போது என் தம்பி இதை வெளிப்படையாகவே கூறுவார்கள். அப்பிடி பார்க்கும் பொது, நமது இந்திய கலாசாரத்தில் கொண்டாடப்படும் பண்டிகை நேரத்தில், சொந்த குடும்பத்தில் "கவுன்ட் யுவர் blessings அல்லது நான் எவ்வளவு பாக்கியசாலி" பொருந்தாது.
தவறாக நினைக்க வேண்டாம். உங்க தீபா வலி யை, உங்க தலைவலியாக்கிட்டேன்னு நினைக்காதீங்க.
Just a suggestion.
நன்றி சேது அவர்களே. நீங்கள் சுட்டிக்காட்டியதர்க்கு நன்றி.
வேறு அர்த்தம் தரும்படி இங்கே மாறி இருந்தால் மன்னிக்கவும்.//
அதெல்லாம் வேறு எந்த பொருளையும் தரவில்லை, சரியாகத்தான் கூறப்பட்டிருக்கிறது + உங்கள் மருமகளின் காலமாற்றிய healing உங்களிலும் கொஞ்சம் மனத் தேற்றத்தையே இந்தப் பதிவு எடுத்துக் கூறுகிறது.
அடடா! பெரிய மனது பண்ணி, அதை மாத்திட்டீங்க! ரொம்ப நன்றி. சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும்.
என் பின்னூட்டங்கள் வேண்டாம் என்று தோன்றினால், எடுத்து விடுங்கள்.
again, மிக்க நன்றி.
**பெயரில் ஒரு டாக்டர் உண்டு ஆனாலும் ஊசி போட தெரியாது.***
You are a Doctor of Philosophy, I believe, but yet to learn how to deal with some situations like this. It is true, life is not fair but you need to brainwash yourself and find happiness (may be from mugunth's smile). Nothing wrong in inviting few families and spending time together on Diwali day. There are several ways to celebrate a festival.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
இந்த இடுகை என்னை ஒரு சோகத்தின் திருவுருவமாக சித்தரித்து இருக்கிறது என்று அறிய முடிகிறது. வாழ்க்கையின் சோகங்களை தாங்கிக்கொள்ளும் மன உறுதியை காலம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் சந்தோசமான தீபாவளி கொண்டாட முடியாதபடி இருக்கும் இந்த நிலை தற்காலிகமானதென்று நான் அறிவேன். என்னுடய உணர்வை பகிர்ந்து கொண்ட தெகா, சேது, மற்றும் வருண் அவர்களுக்கு என் நன்றிகள்.
"நமக்கு அம்மா அப்பாவுடன் தீபாவளி கொண்டாட தான் முடியவில்லை ஆனால் அவளுக்கு அம்மா அப்பாவே இல்லையே".
......
கண்களில் நீர் ...... மனதை கனக்க வச்சிட்டீங்க!
என் அண்ணா அண்ணி , குழந்தைகள் நியாபகம் வந்தது..
அக்குழந்தைக்கு என் வாழ்த்துகள்...
சந்தோசஷமான தருணங்கள் தொடர்ந்து வந்து இந்த சோகங்களை மறக்க உதவட்டும்.. முகுந்தம்மா.. அதற்காக வாழ்த்துகிறேன்..
சந்தோசஷமான தருணங்கள் தொடர்ந்து வந்து இந்த சோகங்களை மறக்க உதவட்டும்.. முகுந்தம்மா.. அதற்காக வாழ்த்துகிறேன்..
உண்மைதான் முகுந்த அம்மா; நாம் பெரிதாக நினைத்துக் கவலைகொள்ளும் சில விஷயங்கள், மற்றவர்களுடையதோடு ஒப்பிட்டால் மிக அற்பமாகி விடும். இம்மாதிரி அனுபவங்கள்தான் நம்மை பலப்படுத்தும்.
அனுபவங்களைச் சரியான விதத்தில் பாடமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். வாசிக்கும் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது.
நம்மால் மாற்ற முடியாத வலிகளை எப்போதும் நாம் வழிகளாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
***முகுந்த் அம்மா said...
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
இந்த இடுகை என்னை ஒரு சோகத்தின் திருவுருவமாக சித்தரித்து இருக்கிறது என்று அறிய முடிகிறது. வாழ்க்கையின் சோகங்களை தாங்கிக்கொள்ளும் மன உறுதியை காலம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் சந்தோசமான தீபாவளி கொண்டாட முடியாதபடி இருக்கும் இந்த நிலை தற்காலிகமானதென்று நான் அறிவேன். என்னுடய உணர்வை பகிர்ந்து கொண்ட தெகா, சேது, மற்றும் வருண் அவர்களுக்கு என் நன்றிகள்.***
உங்க தலைப்பு ரொம்ப சோகமானதாத் தான் இருக்குங்க. அந்தக்குழந்தையின் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லும்போது உங்கள் அந்த நிமிட உணர்வுகள் (அதைக்கேட்கும்போது இருந்த) இங்கே வெளிப்பட்டுள்ளது.
அதனுடைய விளைவுதான் வாசகர்களின் இதுமாதிரியான வெளிப்பாடுகள். அதன் பிறகு உங்கள் மனது ஓரளவுக்கு தைரியம் அடைந்து இருக்கலாம்/இருக்கும்னு நினைக்கிறேன்.
தங்கள் நிலையில் நானிருந்தால் இதைவிட மோசமாக இருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் "வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை" ங்கிற சோகப்பாடல் கேட்டு மனதைத்தேற்ற முயலுவேன்.
\\முத்துலெட்சுமி/muthuletchumi said...
சந்தோசஷமான தருணங்கள் தொடர்ந்து வந்து இந்த சோகங்களை மறக்க உதவட்டும்.. முகுந்தம்மா.. அதற்காக வாழ்த்துகிறேன்.. \\
Post a Comment