இரண்டு வருடங்களாக கழுத்தில் தைராய்ட் பிரச்னை அம்மாவுக்கு இருந்து இருக்கிறது. ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், இதெல்லாம் ஒன்னும் செய்யாது, சரியா போயிடும் என்று சொல்லி சொல்லியே சால்சாப்பு சொல்வார்கள். இப்போது, கழுத்தில் கட்டி போல ஆரம்பித்து இருக்கிறது, specialist இடம் கன்சல்ட் செய்த பொது, Goitre என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது தைராய்ட் அளவு பெரியதாகி இருப்பதை இப்படி குறிக்கிறார்கள். முக்கால் வாசி iodine குறைபாட்டினால் இது ஏற்படுகிறது என்றாலும், கவனியாமல் விட்டதால் கான்செர் அளவுக்கு கொண்டு வந்து விடும் அபாயமும் இருக்கிறது.
மேலும் இது கழுத்தை சுற்றி இருப்பதால், வாய்ஸ் கார்ட் அல்லது பேச்சு குழாய் மற்றும் airways அல்லது மூச்சு குழாய் களையும்அழுத்தும் அபாயம் இருக்கிறது. மிகவும் பெரியதாகி விட்டால் சர்ஜெரி மட்டுமே வழி. முதலில் தோன்றும் சிறு சிறு அறிகுறிகளை கவனித்து இருந்தால், வீக்கம் ஆகாமல் தடுத்து இருக்கலாம், சர்ஜெரி அளவு வந்து இருக்காது.
இப்போது என் அம்மாவிற்கு 5 வாரத்திற்குள் சர்ஜெரி செய்ய சொல்லி இருப்பதால், ஜூன் மத்தியில் இந்தியா பயணம். ஒவ்வொரு முறையும் இந்திய பயணம் எனக்கு பல பாடங்களை கற்று கொடுத்து இருக்கிறது. பார்க்கலாம் இந்த முறை என்ன கற்று கொள்ள போகிறேன் என்று.
நன்றி.
1 comment:
Hope she get well soon.
Recently, my parents went for master health checkup in India. My mom have been tested for "thyroid". Is this problem is specific to ladies ? Is this problem become common now a days ? How to avoid them? Help understand this.
Thanks.
Post a Comment