Saturday, January 9, 2010

தமிழா !! கொஞ்சம் கஷ்டமுங்க

இது முழுக்க முழுக்க நான் சந்தித்த ஒரு சில பெண்களை பற்றிய பதிவு.

என் கல்லூரி நாட்களில் சந்தித்த அந்த பெண்.

கல்லூரியில் Admission கிடைக்குமா என்று வரிசையில் நின்று கொண்டிருந்த போது எனக்கு பின் கையில் ஒரு ஆங்கில புத்தகம் வைத்து கொண்டு நின்றாள். என்ன புத்தகம் அது என்று பார்த்த போது " N or M by Agatha Christie".

அவளுக்கு என்று ஒரு சில தோழிகள் உண்டு. எப்போதும் அவர்களுடன் மட்டும் தான் பேசுவாள். அவர்கள் அனைவரும் எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். அவளிடம் எப்போது பேசினாலும் பதில் ஆங்கிலத்தில் தான் வரும்.

"19c பஸ் போயிடுச்சா"
"I dont know, It must have been".

என் கல்லூரி இறுதி ஆண்டு முடியும் வரை நான் பார்க்கும் நேரம் எல்லாம் அவள் வசம் அந்த புத்தகம் இருக்கும். நெறைய பேர் இருக்கும் இடத்தில் அவள் கட்டாயம் அந்த புத்தகத்தை பிரித்து மறக்காமல் படிப்பாள்.

அடுத்து நான் சந்தித்த ஒரு பெண் என்னுடன் வேலை பார்த்தவள். தமிழ் பெண் தான் என்றாலும் தான் ஒரு தமிழ் பெண் என்ற அடையாளம் தன மீது விழுந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள்.

எப்போதும் பிற மொழி பேசும் மக்களுடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருப்பாள். தமிழ் பேசுபவர்கள் சென்று பேசினாலும் அவள் பதில்

"எனக்கு தமிழில் சரியாய் பேச வராது "


அடுத்து சில பெண்கள், தாங்கள் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் தமிழ்நாட்டில் என்றாலும், தமிழ் வாசகங்களை வாசிக்க சொன்னால் அவர்கள் பதில்.

"ஐயோ தமிழா!! கொஞ்சம் கஷ்டமுங்க"

எனக்கு இன்று வரை விளங்காத ஒன்று

"இவர்களுக்கு உண்மையாகவே தமிழ் பேச , எழுத தெரியாதா ?"

2 comments:

Karth said...

MukundAmma
Nice entry. I have seen many Peter people too !!

முகுந்த்; Amma said...

thanks for the first comment