Wednesday, April 28, 2010

Wisdom teeth எனும் வில்லன்

என்னுடைய முந்தய இடுகையான வலி க்கு பின்னூட்டம் அளித்து விசாரித்த அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள். தற்போது வலி குறைந்திருந்தாலும் இன்னும் இரண்டு நாட்களில் கடைவாய் பற்கள் பிடுங்கப்பட உள்ளன. அதனால் அடுத்த வலிக்கு நான் தயாராகி கொண்டிருக்கிறேன்.

மனிதனுக்கு தன் வாழ்நாளில் மூன்று முறை பல் முளைப்பதுண்டு. குழந்தையாய் இருக்கும் போது முளைக்கும் பால் பற்கள் (First Molar). பின்னர் பால் பற்கள் விழுந்து முளைக்கும் பற்கள் second molar எனப்படும். இந்த பற்கள் அவர் அவர் சுகாதார, பரம்பரை குண நலன்களுக்கேற்ப அறுபது எழுபது வயதில் விழ ஆரம்பிக்கும்.

இவை தவிர இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் முளைக்கும் wisdom teeth எனப்படும் (third molar) நான்கு கடைவாய் பற்கள். இந்த பற்கள் வளர்வதற்குள் மனித தாடை முழுமையாக வளர்ந்து விடுவதால் என்னை போல பலருக்கு இந்த பற்கள் முளைப்பதற்கு தாடையில் அதிகம் இடம் இருப்பதில்லை. கீழுள்ள படத்தில் குறிப்பிட்டு உள்ளதை போல இந்த பற்கள் பல வழிகளில் வளர்ந்து இருக்கும்.இப்படி சாய்ந்த, படுத்த நிலையில் வளர்ந்த பற்கள் அடுத்த பற்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கும் போது வலி உண்டாகிறது.

சில wisdom பற்கள் பாதி மட்டுமே வளர்ந்த நிலையில் அதன் வளர்ச்சி நின்று விடும். இந்த நிலையில் பாதி வளர்ந்த பற்களின் இடுக்குகளில் உணவுத்துகள்கள் சென்று infection ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் அடுத்த பற்களையும் இது தாக்க கூடும். அதன் விளைவாக அந்த பற்களும் கெட ஆரம்பிக்கும், வலி உயிர் போகும். இப்படி infection வந்தால் antibiotic மருந்துகளே வலி தீர ஒரே வழி. ஆனால் அவை நீண்ட நாட்கள் பயன் தராது என்பதால் இந்த பற்களை பிடுங்குவதே வலி குறைக்க உதவும்.

Wisdom பற்கள் multi rooted பற்கள். அதாவது ஆழமான வேர் கொண்டவை. முக்கால் வாசி wisdom பற்கள் தாடை நரம்புகளுக்கு வெகு அருகாமையில் இருக்கும் என்பதால் இந்த பற்களை எடுக்கும் போது கவனம் தேவை. இதனை இங்குள்ள dentist எனப்படும் பல்மருத்துவர்கள் பெரும்பாலும் செய்வதில்லை. Oral surgeons எனப்படும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்களே செய்கிறார்கள்.

எனக்கு கீழ் கடவாய் பற்கள் இரண்டும் படுத்த நிலையில் இருப்பதால் பிடுங்கியே ஆகவேண்டிய கட்டாயம். வரும் வெள்ளிகிழமை அதற்க்கான சுபயோக சுபதினம் எனக்கு. அதனால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நோ ப்ளாக் நோ இன்டர்நெட். நன்றி.

11 comments:

Chitra said...

எங்களுக்கு wisdom டூத் வளருதோ இல்லையோ, இந்த இடுகையை படித்து விட்டு, டூத் பற்றிய wisdom வளருது.

Dr.P.Kandaswamy said...

பிடுங்குவதைத்தவிர வேறு வழியில்லை. நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன்.

அமைதி அப்பா said...

வணக்கம் முகுந்தம்மா,
தாங்கள் பூரண குணமடைய விரும்புகிறேன். எனது உறவினர் ஒருவருக்கு இந்த மாதிரி நான்கு பற்களையும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தார்கள். நானும் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். ஆனால், அப்பொழுது இவ்வளவு விபரம் எனக்குத் தெரியவில்லை. தகவலுக்கு நன்றி.
பிளாக் பக்கம், மெதுவா வாங்க.

பாரதி பரணி said...

விரைவில் குணமடைய என் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்......

padma said...

get well soon

சேட்டைக்காரன் said...

பல் பற்றிய "பல்"சுவைப் பதிவு பளிச்சென்று இருக்கு! :-)

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை. இதே பிரச்சனை எனக்கும் வந்து சரியானது. உங்களுக்கும் சரியாப் போகும்:)! Take care.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . நன்றி

இராகவன் நைஜிரியா said...

Get well soon.

ஹுஸைனம்மா said...

இவ்ளோ விஷயம் இருக்கா இதில? நன்றிப்பா விவரங்களுக்கு.

சீக்கிரம் நலம்பெற்று வர பிரார்த்தனைகள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html