Monday, April 12, 2010

Idiot box



நான் எழுதிய சாதிகள் இல்லையடி பாப்பா, இடுகைக்கு இப்படி காரசாரமான விவாதங்கள் பின்னூட்டங்களாக வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வந்த பின்னூட்டங்களும் அதற்கு பின் வந்த எதிர்வாதங்களும் என்னை சில நேரம் நிலை தடுமாற வைத்து விட்டன. இனிமேல் இதனை போன்ற இடுகையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிப்பேன் என்பது மட்டும் உண்மை.

நேற்று நான் சனிக்கிழமை நடந்த நிகழ்விலிருந்து சரியாக விடுபடாத நிலையில் idiot box என்று அழைக்கப்படும் இரண்டு சாதனங்கள் முன் என் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. பழைய urban dictionary இல் idiot box என்றால் அது T.V மட்டுமே, ஆனால் இப்போது கணினியும் சேர்க்கப்பட்டு இருப்பதாக Jeopardy நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன்.

நாங்கள் subscribe செய்துள்ள Satellite டிவியில் மாத மாதம் சில சேனல்கள் இலவசமாக வரும். அப்படி நேற்று நான் பார்க்க நேர்ந்தது GSN எனப்படும் " Game Show Network ". ஒன்றன் பின் ஒன்றாக வெறும் கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு இந்த ஷோ க்கள் எல்லாம் இந்திய தொலைக்காட்சிகளில் பார்த்த ஞாபகம் வந்தது. இந்திய, அமெரிக்க கேம் ஷோ மற்றும் ரியாலிட்டி ஷோ பற்றிய ஒரு ஒப்பீடு.

Family Feud - ஜாக்பாட்
Newly wed game /Matchmaker - ஜோடி பொருத்தம்
Who wants to be a millionaire - kaun banega crorepati
Deal or No Deal - Deal ஆ No Deal ஆ
The Bachelor / The Bachelorette - Swayamvar
American Idol - சேனல்கள் நடத்தும் அனைத்து பாட்டு போட்டிகளும்
Dancing with the stars - ஜோடி நோ 1

இவை எல்லாம் எனக்கு ஞாபகம் வந்த நிகழ்ச்சிகள் பற்றிய ஒப்பீடு மட்டுமே. இன்னும் நெறைய இருக்ககூடும்.

ஓரிரண்டு இந்திய சேனல்களும் free preview வந்தது. அதில் ஒன்று B4U Music , அப்புறம் ஜெயா செய்திகள்.

B4U மியூசிக் சேனலில் வந்த நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்ட பாட்டுக்களில் எல்லாம் நான் கவனித்தது இது தான்

1 . அதில் ஆடும் நடனங்கள் எல்லாம் கிளப் இல் ஆடும் நடனங்கள் போல இருந்தன.

2 . அதில் நடுவில் ஆடும் நடிக,நடிகையர் தவிர முக்கால் வாசி பேர் வெளிநாட்டினர்.

3 . பெரும்பாலும் அதில் ஆடிய பெண்கள் உடுத்தியிருந்த உடை இங்கே strip club என்ற ஒன்று உண்டு, அதில் ஆடும் பெண்கள் உடுத்தும் உடை (சில ஆங்கில படங்களில் பார்த்த ஞாபகம்) போன்றிருந்தது.

4 . அதனை காம்பேர் செய்த பெண்ணின் உடையும் கிட்டத்தட்ட அதேபோல இருந்தது.

ஜெயா செய்தி சேனல் பார்க்க நேர்ந்தது, பார்த்து கொண்டே இருக்கும் போது நடுவில் "ஹமாம் க்ருஹப்ரவேஷ ஆபர்" என்று ஒரு பெண் செய்தி வாசிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, இதென்ன ஜெயா செய்திகளில் ஹாமம் கம்பெனி பிரச்சாரம் நடக்கிறது என்று யோசித்து கொண்டிருக்கும் போது தான் அறிந்தேன் அது ஒரு விளம்பரம் என்று.

அந்த செய்தி சேனல் பார்த்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்ணிடம் மின்வெட்டு பற்றி கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அந்த பெண்ணும் "காலையில எழுந்து குழந்தைகள் படிக்க முடியல...." என்று சொல்லி கொண்டு இருந்தார். அப்போது தான் ஒன்று கவனித்தேன் அந்த பெண் nighty உடுத்தி இருந்தார். Nighty நைட் டிரஸ் ஆக அல்லாமல் day டிரஸ் ஆனது நான் கடந்த முறை இந்தியா வந்த போது கண்கூடாக பார்க்க நேர்ந்தது. அதுவாவது பரவாயில்லை, ஆனால் ஒரு பப்ளிக் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது கூடவா nighty உடுத்தி இருப்பது, கஷ்ட காலம் என்று நினைத்து கொண்டேன்.

இங்கெல்லாம் Pajama எனப்படும் இரவு உடையை அணிந்து வெளிஆட்கள் யாரிடமாவது பேசினால் அது அவர்களை அவமதிப்பது போல ஆகும் என்று கற்று கொண்டேன். இங்கு யாரையும் அவர்களின் Pajama உடையில் வெளியில் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதனால் வீட்டை விட்டு வாசல் வரவேண்டும் என்றால் கூட நான் உடை மாற்றி கொண்டே வருகிறேன்.

18 comments:

துபாய் ராஜா said...

அனுபவமே சிறந்த ஆசான்.

சுடுதண்ணி said...

தொலைக்காட்சியின் idiot box இடத்தையும் முழுமையாகக் கணினி வெகுவிரைவில் ஆக்கிரமித்து விடும் போல் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி :)

அரசூரான் said...

சனிக்கிழமையிலிருந்து ரொம்ப குழம்பி இருக்கீங்க... இததான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்-னு சொல்லுவாங்க. ரெண்டு முட்டாள் பெட்டியையும் ஓரம் கட்டி வெச்சுட்டு நூலகம் சென்று நல்லா (இத்தாலி வகை சாப்பாடு) சமைப்பது எப்படி என்று படிச்சி "செய்து & சாப்பிட்டு" தூங்குங்க டாக்டர்.

Chitra said...

Interesting post. :-)

அமைதி அப்பா said...

//ஒன்றன் பின் ஒன்றாக வந்த பின்னூட்டங்களும் அதற்கு பின் வந்த எதிர்வாதங்களும் என்னை சில நேரம் நிலை தடுமாற வைத்து விட்டன. இனிமேல் இதனை போன்ற இடுகையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிப்பேன் என்பது மட்டும் உண்மை. //

கவலைப்பட வேண்டாம் மேடம், உங்களுக்குத் தோன்றுவதை சொல்லுங்கள், அப்பொழுதான் கணினியும் 'Idiot box'-ஆக மாறாமலிருக்கும், இல்லையெனில் அதுவும் தொலைக்காட்சிக்குச் சமாகிவிடும்.
பாரதியோ, பெரியாரோ விமர்சனத்தைக்கண்டு ஒதுங்கியிருந்தால்‍‌...?!

settaikkaran said...

நல்ல பதிவு! தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய ஒப்பீடுகள் வியப்பாக இருக்கின்றன. ஆழ்ந்து கவனிக்கிறீர்கள் போலிருக்கிறது. இவற்றின் உளவியல் தாக்கங்கள் குறித்தும் எழுதலாமே?

பத்மா said...

nice comparitive study.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ முகுந்த் அம்மா.. நீங்க எதிர்பார்க்கலையா..
பட் இங்க இல்லையடி ந்னு சொன்னாலும் சரி இருக்குன்னு சொன்னாலும் சரி.. அந்த வார்த்தைக்கு செம மதிப்பு .. :)))

நல்லாவே எல்லாத்தையும் ஓப்பீடு செய்யறீங்க..

இராகவன் நைஜிரியா said...

ஜெயா செய்திகளை முழுவதுமாக பார்த்து இருக்கின்றீர்கள் என்றால், உலகத்திலேயே பெரிய பொருமைசாலி என்ற பட்டம் உங்களுக்குத் தகும்.

பனித்துளி சங்கர் said...

அறிய தந்தமைக்கு மிக்க நன்றி .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

முகுந்த்; Amma said...

@துபாய் ராஜா
//அனுபவமே சிறந்த ஆசான்.//

உண்மைங்க, அதை நான் ரொம்ப கஷ்டப்பட்டு கத்துகிட்டேன்.

@சுடுதண்ணி

//தொலைக்காட்சியின் idiot box இடத்தையும் முழுமையாகக் கணினி வெகுவிரைவில் ஆக்கிரமித்து விடும் போல் தெரிகிறது//

இப்போ என்னை போல சிலர் டிவி பார்ப்பதை விட, கம்ப்யூட்டர் பார்க்க பழகிக்கொண்டு இருக்கிறோம், so idiot box இடத்தை முழுமையாகக் கணினி வெகுவிரைவில் ஆக்கிரமித்து விடும் .

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@அரசூரான் அண்ணாச்சி

//சனிக்கிழமையிலிருந்து ரொம்ப குழம்பி இருக்கீங்க... இததான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்-னு சொல்லுவாங்க//

ஹி, ஹி, ஹி உண்மைதானுங்க

//ரெண்டு முட்டாள் பெட்டியையும் ஓரம் கட்டி வெச்சுட்டு நூலகம் சென்று நல்லா (இத்தாலி வகை சாப்பாடு) சமைப்பது எப்படி என்று படிச்சி "செய்து & சாப்பிட்டு" தூங்குங்க டாக்டர்//

நீங்கள் சொன்ன தட்ட முடியுமா, இதோ இப்போதே போகிறேன், ஆனா ஏன் இத்தாலியன் மட்டும், வேற சாப்பாடு சாப்பிட்டா, தூக்கம் வராதாங்க.

முகுந்த்; Amma said...

@Chitra
//Interesting post//

Thanks Chitra.

முகுந்த்; Amma said...

@அமைதி அப்பா
//கவலைப்பட வேண்டாம் மேடம், உங்களுக்குத் தோன்றுவதை சொல்லுங்கள், அப்பொழுதான் கணினியும் 'Idiot box'-ஆக மாறாமலிருக்கும், இல்லையெனில் அதுவும் தொலைக்காட்சிக்குச் சமாகிவிடும். //

நான் என்னை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவில்லை அய்யா. நான் இதோ எனக்கு நேர்ந்ததை உணர்ச்சி வேகத்தில எழுத போயி, அது எதாவது சாதிக்கலவரத்தை தூண்டி விட்டுடுமோனு பயந்துட்டேன். இது போன்ற sensitive issues எழுதும் போது மிகுந்த கவனம் தேவைன்னு இப்போதான் புரிஞ்சுகிட்டேன்.

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன்

//நல்ல பதிவு! தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய ஒப்பீடுகள் வியப்பாக இருக்கின்றன. ஆழ்ந்து கவனிக்கிறீர்கள் போலிருக்கிறது. இவற்றின் உளவியல் தாக்கங்கள் குறித்தும் எழுதலாமே?//

நன்றிங்க சேட்டை, உளவியல் தாக்கங்கள் நல்ல topic தான், எழுத பார்கிறேன்.

@பத்மா
//nice comparitive study //

நன்றி பத்மா

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி
//ஓ முகுந்த் அம்மா.. நீங்க எதிர்பார்க்கலையா.. //

இப்படி எல்லாம் வரும்னு நான் சுத்தமா எதிர் பார்கலீங்க.

//இங்க இல்லையடி ந்னு சொன்னாலும் சரி இருக்குன்னு சொன்னாலும் சரி.. அந்த வார்த்தைக்கு செம மதிப்பு//

அதை இப்போதான் புரிஞ்சுட்டு இருக்கேன். இனிமே கவனமா தான் எழுதுவேங்க.

//நல்லாவே எல்லாத்தையும் ஓப்பீடு செய்யறீங்க.//

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@ராகவன் நைஜீரியா
//ஜெயா செய்திகளை முழுவதுமாக பார்த்து இருக்கின்றீர்கள் என்றால், உலகத்திலேயே பெரிய பொருமைசாலி என்ற பட்டம் உங்களுக்குத் தகும்//

ஒரு ஒருமணி நேரம் பார்த்து இருப்பேனுங்க, அதுக்கே மண்ட காஞ்சு போயிட்டேன்.
அதுக்கே பொருமைசாலி பட்டமா, ரொம்ப நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

இராகவன் நைஜிரியா said..

// பொருமைசாலி //


ஆஹா... தப்பா தட்டச்சுட்டேனே... தமிழ் ஐயா பழமை வந்து திட்டப் போகிறாறு...

நான் தான் தப்பா அடிச்சேன்னு பார்த்தா நீங்களுமா...

இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா ஆச்சு... எனக்கு திட்டு வாங்க ஒருத்தர் துணை இருக்கீங்க இல்ல..