Friday, November 5, 2010

B. A, M. A ., எதற்கு?

எனக்கு நிறைய நாட்கள் ஒன்று தோன்றுவதுண்டு. எதற்கு எல்லாரும் தங்கள் பெயருக்கு பின்னால் டிகிரி போட்டு கொள்கிறார்கள்?.

நான் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் டிகிரி போட்டு கொள்வதற்காகவே படிப்பதாக என்னுடன் படித்த பெண்கள் சிலர் சொல்வார்கள்.

இன்னும் சிலர் ஒரே பாடத்தில் இளநிலை முடித்து முது நிலையும் அதே பாடத்தில் படித்திருந்தாலும் தன் பெயருக்கு பின்னால் இரண்டையும் போட்டு கொள்வதை பார்த்ததுண்டு.

உதாரணமாக

என்பெயர் B. A., M. A., என்று

இன்னும் சிலர் படித்து கொண்டிருப்பார்கள் அதற்குள் கல்யாணம் முடிந்து விடும் (அதற்க்கு பிறகு படிப்பார்களோ இல்லையோ, அது வேற விஷயம்) ஆனாலும் டிகிரி போட்டு கொள்வார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் பத்தாவது படித்து முடித்தார், பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக படிப்பை மூட்டை கட்டி விட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். பிறகு என்ன நினைத்தாரோ தெரிய வில்லை இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலை கழகத்தில் M. A., படிப்புக்கு அப்ளை செய்தார். அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நிச்சயித்தார்கள். பத்திரிக்கையில் அவருடைய பெயருக்கு பின்னால் M. A என்று போட்டு கொண்டு மேலே கோடு போட்டு கொண்டார்.

இவராவது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்ல வேண்டும். என்னுடைய சொந்த காரர்கள் வீட்டில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்தனர். அந்த பெண் பிளஸ் டூ பாஸ் செய்ய வில்லை. ஆனாலும் கல்யாண பத்திரிகையில் அவள் பெயருக்கு பின்னால் B. A., என்று (ஒரு கோடு கூட போடாமல்) போட்டு கொண்டனர்.

எனக்கு தெரிந்த இன்னொரு (அரசியல்வாதி) நண்பர் வக்கீலுக்கு படிக்க விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து அனுப்பிய அடுத்த நாளே B. L என்று போட்டு கொண்டதை பார்த்திருக்கிறேன். என்னுடைய சமீபத்தைய இந்தியா பயணத்தின் போது கிட்ட தட்ட எல்லா ப்ளெக்ஸ் போர்ட்களில் இருக்கும் பெயருக்கு பின்னாலும் ஒரு டிகிரி போட்டு (சிலர் கோடு போட்டு) பார்த்திருக்கிறேன்.

யாரும் வந்து பரிசோதிக்க போவதில்லை என்பதால் எத்தனை டிகிரி வேண்டும் என்றாலும் போட்டு கொள்ளாலாமா?. ஏன் இந்த டிகிரி மோகம்?

20 comments:

தமிழ் வினை said...

இப்பவெல்லாம் படிக்கறது கூட (பேருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதற்காக) அடுத்தவர்களுக்காக என்பது போலாகிவிட்டது. திருமண அழைப்பிதழில் போடுவதற்காகவே சிலர் படிக்கறாங்க.
//ஏன் இந்த டிகிரி மோகம்?// படிக்காதவர் என்று சமூகம் பேசுமே, இது பலரது தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாகிறது. அதற்காகத்தான் இதெல்லாம் பண்றது.

Avargal Unmaigal said...

Wishing you and your family
a very happy and prosperous
Diwali

இப்போதுதான் நாங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம். அதனால் தான் லேட் வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

சிலருக்கு பணத்தின் மீது மோகம், சிலருக்கு பதவியின் மீது, சிலருக்கு பட்டங்களின் மீது... என்ன செய்வது.

Thekkikattan|தெகா said...

இது சமூக உளவியல் சார்ந்தது. எங்கு அறியாமையும், வருமையும் கோலுச்சுகிறதோ அங்கே இது போன்ற புறவயமான அடையாளச் சிக்கலில் தன்னை நிலை நிறுத்துவதாக நினைத்து தன் உள்ளீட்ட வெற்றிடத்தை வெளிக்காமிப்பதாக இருக்கும்.

ஒரு ஐன்ஸ்டைனோ, ஸ்டீவன் ஹாகிங்வோ தன் பேருக்கு பின்னால் பட்டயங்ளை போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இல்லை, ஏனெனில் அவர்களே அதுவாக இருக்கிறார்கள் :).

நம்மூர் மக்கள் இது போன்ற பட்டயங்களை போட்டுக் கொள்வதின் மூலம் யார் எப்போது வேண்டுமானாலும் தங்களை அணுகி எம். ஏ, சமூகவியலா அது சார்ந்து என்னிடம் வாங்க டிஸ்கஷன் பண்ணன்னு அறிவிப்பு விடுறாங்க போல ;)...

முட்டாப் பசங்கங்க விட்டுத் தள்ளுங்க. எரிச்சல் இதெல்லாம் பார்த்தா... அறியாமை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்பல்லாம் நான் இப்படி போட்டுப்பாக்கலையே முகுந்தம்மா.. டிகிரி வேலை எங்கே என்பது கூட கேட்டுத்தெரிந்துகொள்ளும் நிலைமையா இருக்கே.. இப்ப வர பத்திரிக்கையிலைன்னு நேத்து தான் நினைச்சேன்..

GEETHA ACHAL said...

இன்னும் நிறைய பேர் இப்படி தான் செய்து கொண்டு இருக்காங்க...என்ன செய்வது...

கெக்கே பிக்குணி said...

அமெரிக்காவிலும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட பரீட்சை பெயர்களை எல்லாம் கண்ட மேனிக்கு பேரு பின்னால போட்டுக்கிறாங்களாம். உலகளாவியது போலிருக்கு.

பத்மா said...

சிலருக்கு பிடிக்கறது
போட்டுக்கொள்ளட்டுமே !
சிலசமயம் சுவாரசியமாகவும் இருக்கும் ?
M A யா நீயி ன்னு பிரமிச்சு கேக்கவும் கேட்கலாம் :)

முகுந்த் அம்மா said...

@தமிழ் வினை
//படிக்காதவர் என்று சமூகம் பேசுமே, இது பலரது தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாகிறது. அதற்காகத்தான் இதெல்லாம் பண்றது.//

உண்மை. நன்றி தமிழ் வினை அவர்களே.

@Avargal Unmaigal said...

// இப்போதுதான் நாங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம். அதனால் தான் லேட் வாழ்த்துக்கள்//

நன்றிங்க. நாங்களும் உங்க டைம் ஜோன் ல தானே இருக்கோம். நாங்களும் உங்களை போல தான் கொண்டாடினோம்.

முகுந்த் அம்மா said...

@தமிழ் உதயம் said...

// சிலருக்கு பணத்தின் மீது மோகம், சிலருக்கு பதவியின் மீது, சிலருக்கு பட்டங்களின் மீது... என்ன செய்வது.//

இது புகழுக்காக செய்வது. எங்க அம்மா ஒன்னு சொல்லுவாங்க, எதுக்கு இந்த வெட்டி பந்தா அப்படின்னு, அது போல தான் இருக்கு.

முகுந்த் அம்மா said...

//இது சமூக உளவியல் சார்ந்தது. எங்கு அறியாமையும், வருமையும் கோலுச்சுகிறதோ அங்கே இது போன்ற புறவயமான அடையாளச் சிக்கலில் தன்னை நிலை நிறுத்துவதாக நினைத்து தன் உள்ளீட்ட வெற்றிடத்தை வெளிக்காமிப்பதாக இருக்கும்.//

சரியா சொல்லீருக்கீங்க, அறியாமை அதிகம் இருக்கிற இடத்தில இது போல நிறைய பார்க்க முடியுது.

//நம்மூர் மக்கள் இது போன்ற பட்டயங்களை போட்டுக் கொள்வதின் மூலம் யார் எப்போது வேண்டுமானாலும் தங்களை அணுகி எம். ஏ, சமூகவியலா அது சார்ந்து என்னிடம் வாங்க டிஸ்கஷன் பண்ணன்னு அறிவிப்பு விடுறாங்க போல ;)...//

யோசித்து பார்க்கும் போதே சிரிப்பா வருது. அப்படி யாராவது பாடம் சம்பந்தமா கேள்வி கேட்டா தெரிச்சு ஓடிருவாங்க.

//முட்டாப் பசங்கங்க விட்டுத் தள்ளுங்க. எரிச்சல் இதெல்லாம் பார்த்தா... அறியாமை!//

உண்மை. சிரிச்சிட்டு போக வேண்டியதா இருக்கு.

நன்றி தெகா.

முகுந்த் அம்மா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

//இப்பல்லாம் நான் இப்படி போட்டுப்பாக்கலையே முகுந்தம்மா.. டிகிரி வேலை எங்கே என்பது கூட கேட்டுத்தெரிந்துகொள்ளும் நிலைமையா இருக்கே.. இப்ப வர பத்திரிக்கையிலைன்னு நேத்து தான் நினைச்சேன்..//

என்ன சொல்லுரீங்க முத்துலெட்சுமி அவர்களே. போன வாரம் தான் ஊரில இருந்து சித்தி பையன் கல்யாண பத்திரிக்கை வந்ததுங்க. அதில போட்டு இருக்கிற பெயர்களில் இருக்கும் பாதி டிகிரி சும்மா அப்படின்னு எனக்கு தெரியும். அதை பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் இந்த இடுகையே எழுதினேன்.

எனக்கு தெரிஞ்சே இன்னும் நிறைய இடத்தில நடக்குதுங்க .

முகுந்த் அம்மா said...

@GEETHA ACHAL said...

// இன்னும் நிறைய பேர் இப்படி தான் செய்து கொண்டு இருக்காங்க...என்ன செய்வது...//

உண்மைங்க, எங்க சொந்தகாரர்களே நிறைய இப்படி செய்யிறாங்க.

முகுந்த் அம்மா said...

கெக்கே பிக்குணி said...

// அமெரிக்காவிலும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட பரீட்சை பெயர்களை எல்லாம் கண்ட மேனிக்கு பேரு பின்னால போட்டுக்கிறாங்களாம். உலகளாவியது போலிருக்கு.//

நானும் இப்படி டிகிரி போட்ட சிலரை இங்கே பார்த்து இருக்கேங்க. உண்மைதான் யுனிவர்சல் ப்ரொப்லேம் தான் :)).

முகுந்த் அம்மா said...

பத்மா said...

// சிலருக்கு பிடிக்கறது
போட்டுக்கொள்ளட்டுமே !
சிலசமயம் சுவாரசியமாகவும் இருக்கும் ?
M A யா நீயி ன்னு பிரமிச்சு கேக்கவும் கேட்கலாம் :)//

ஜோக்கா இருக்கும். என்னோட சித்திக்கு B.A படிக்கும் போது கல்யாணம். இப்போ சித்தி பையன் கல்யாண பத்திக்கையில பார்கிறேன் எங்க சித்தி பெயருக்கு பின்னால ஒரு M.A :)) கோடு கூட போடலைங்க. என்ன செய்ய சிரிச்சு தான் ஆகனும்.

Sethu said...

எல்லோருமே அறியாமையை ஏதாவது ஒரு விதத்தில் வெளிபடுத்துவோம். உதாரணத்திற்கு சில:
1 . நான் டாப் டென் university இல் படித்துவந்தவன் என்போம். ஆனால் electrical இன்ஜினியரிங் படித்த மாணவர் வீட்டு சுவிட்ச் மாற்றுவதற்கு ஏலேக்ட்ரிசியனை கூப்பிடுவர்.
2 . Ph .D . பட்டம் பெற்ற ஒருவர் தான் ஒரு ஊசி போட முடியாத டாக்டர் என்பர்.
3 . Engineer தான் IIT இல் படித்தவன் என்று கூடி இருக்கும் சக engineer உடன் சொல்லுவது.
4 இந்திய ராணுவத்தினர் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது தான் வகிக்கும் பதவியைவிட ஒன்று அதிகம் சொல்லுவார்கள். ஆனால் எழுதும் பொது சரியாக இருக்கும்.

இது மாதிரி பல இருக்கு. ஒரு குழந்தை தன் பெருமையை கூறும் போது அதை வியந்து மகிழ்கிறோம். அது மாதிரி இதையும் உள்ளுக்குள் நினைதுக்கொல்வோமே.

முகுந்த் அம்மா said...

//Ph .D . பட்டம் பெற்ற ஒருவர் தான் ஒரு ஊசி போட முடியாத டாக்டர் என்பர்.//


எனக்கேவா :))

நான் சொல்ல வர்றது படிச்சிருந்த்தா போட்டுக்கலாம் தப்பில்லை. ஆனா படிக்காம சும்மா வெட்டி பந்தாவுக்காக எதுக்குங்கிறேன்.

கருதுக்கு நன்றிங்க.

Sethu said...

அப்பிடிங்களா!

நானும் இந்த நாலில் ஒன்றில் உள்ளடங்குவேன். ஏதாவது ஒரு விதத்தில் வெளியிட்டிருப்போம்.

Thekkikattan|தெகா said...

//நான் சொல்ல வர்றது படிச்சிருந்த்தா போட்டுக்கலாம் தப்பில்லை. //

அப்படியா நினைக்கிறீங்க? நான் என்ன நினைக்கிறேன்னா அது எதுக்காக அதக் கூட போட்டுகிட்டு, என்னமோ லைசென்ஸ கழுத்தில மாட்டிக்கிட்டு திரியற மாதிரிங்கிறேன். போட்டுக்கலன்னா நாம படிச்சு வாங்கின பட்டமே நமக்கு மறந்து போயிடுமா?

உதாரணத்திற்கு, இப்போ வேல பார்க்கிற இடத்தில பெரிய பெரிய கட்டடமா இருக்கு அந்த வராந்தாவில நிறைய அறைகள் இருக்கு, பல துறை வித்தகர்களும் தன்னோட ஒவ்வொரு கூண்டிற்குள்ளர அடைஞ்சிருக்காங்கன்னா, தேடி வர்றவங்க அடையாளம் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்டவரோட பேரோட பட்டயத்தை போட்டிருந்தா சரியான ஆளு அறைக்குள்ளரதான் நுழையுரோம்னு ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள உதவலாம்.

ஆனா, அதைத் தாண்டி எதை ஊர்ஜிதப்படுத்தி மிரட்ட இப்படி போட்டு ஊரைக் கூட்ட வேண்டும்? அது அமெரிக்காவ இருந்தாலும் சரி, ஆஃப்ரிகாவா இருந்தாலும் சரி... அப்போ என்ன சப்ஜெக்ட் அப்படிங்கிறதையும் போடுங்க ஆர்வக் கோளாரில அந்த சப்ஜெக்ட் பத்தி பேச ஆசைப்படுறவங்க கிட்ட நெருங்க ஒரு வாய்ப்பா இருக்கும் ;)) செய்வீங்களா??

கையேடு said...

இங்க அறியாமையில் இருப்பது படித்தவர்களே.. படித்துவிட்டால் உடனே ஒரு ஏற்றத் தாழ்வுப் பார்வையை தன்னுள் வைத்துக்கொள்வதே மற்றவரை இதற்குத் தூண்டுகிறது.

படிப்பு, படிக்கின்ற கல்லூரி, தொழில், தொழில் செய்யும் இடம், என ஏதாவது ஒரு வகையில் ஏற்றத்தாழ்வை கற்பித்துக்கொள்வதே இப்படியான போலிகளை உருவாக்குகிறது.

விளையாட்டா ஒரு கேள்வி, உண்மையிலேயே ஒரு டிகிரி இருந்தாலும் does it mean anything.