Friday, March 2, 2012

அழியப்போகும் ஆண்கள் இனம்.


ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது http://www.bbc.co.uk/news/science-environment-17127617.  http://news.bbc.co.uk/2/hi/europe/8060289.stm     அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஆண் வர்க்கத்தை நிர்ணயிக்கும் Y குரோமோசொம்கள் இருக்காது என்று கணித்திருக்கிறது. என்ன என்று தேடிய போது ஒரு புத்தகம் சிக்கியது அது ஆதாமின் சாபம் என்ற புத்தகம்.

அது என்ன Y குரோமோசொம்கள், எப்படி அவை ஆண்களை அழிக்க போகிறது என்று கேட்பவர்களுக்கு.

மனிதர்கள் அனைவருக்கும் மனித உடலை. உருவ அமைப்பை நிர்ணயிக்கும் 22 pairs குரோமோசொம்களும், 2 செக்ஸ் குரோமோசொம்களாலும் இருக்கும். ஆண்களுக்கு இவை X & Y வும்,  பெண்களுக்கு இது X & X ஆகவும் இருக்கும்.

File:HumanChromosomesChromomycinA3.jpg
குரோமோசொம்கள் செல்பிரிவின் போது
File:NHGRI human male karyotype.png
ஆண் குரோமோசொம்கள்.
பெண் குரோமோசோம்கள்.மேலே உள்ள இரண்டு படத்தில் இருப்பது கார்யோடைப்பிங்(karyotyping) எனப்படும் முறையில் குரோமோசொம்களை வகைப்படுத்துவது.

குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண்கள் தான் என்று இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அப்பாவிடம் இருந்து வரும் விந்தணுக்களில் Y குரோமோசோம் இருப்பின் பிறக்க போகும் குழந்தை ஆண்குழந்தையாகவும், X இருப்பின் பெண்குழந்தையாகவும் இருக்கும்.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.
இந்த Y குரோமோசோம்களே, ஆண் உறுப்புகள், ஆண்களுக்கான ஹார்மோன்கள் அனைத்தையும் உண்டாக்கும் ஜீன்களை கொண்டிருக்கும்.இந்த Y குரோமோசோம்கள் படிப்படியாக தன்னிடம் இருக்கும்  ஜீன்களை இழந்து வருகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் 1400 ஜீன்களை கொண்டிருந்த இந்த குரோமோசோம் இப்போது வெறும் 45 ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது போன்ற ஜீன்களை இழக்கும் தன்மை யால் ஜீன்கள்  படிப்படியாக குறைந்து ஒரு சமயம் y குரோமோசோம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு. ஆனால் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்த ஜீன் இழப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிந்தாலும் எந்த நேரமும் அது தொடரும் அபாயம் உள்ளது குறித்து  அறிய முடிகிறது.

சரி அப்போது ஆண்கள் இனமே இல்லாது போகுமா? என்ன ஆகும்? யாருக்கும் தெரியவில்லை.உண்மை நிலைமை இப்படி இருக்க ஆண் குழந்தை தான் உசத்தி என்று நினைத்து கொண்டு இந்தியாவில் நடக்கும் பெண் சிசுகொலைகளை என்னவென்று சொல்ல?


11 comments:

Avargal Unmaigal said...

நல்ல அறிவியல் செய்தியை பதிவிட்டதற்கு. நன்றி

Avargal Unmaigal said...

ஆண்கள் இல்லாத உலகமா.... அப்ப அமைதியான உலகத்தை பார்க்கவே முடியாதா..? அடக் கொடுமையே...

Avargal Unmaigal said...

ஓ மை காட் அப்ப எங்கு பார்த்தாலும் பிங்க் கலர்தானா? மிச்சம் பிழைச்சு இருக்கும் ஆண்கள் கதி அவ்வளவுதானா

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

சார்வாகன் said...

வண்க்கம் சகோ
அருமையான் பதிவு&பகிர்வு.இது அந்த புத்த்கம் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது.இது உண்மையாக் இருக்கும் வாய்ப்பு உண்டால் என்பது பிற்குதான் சொல்ல முடியும் எனினும் ஒரு த்வ்ல் பகிர்கிறேன்
உல்கில் முதல் ஆண்[Y chromosome male] கண்டறியும் சோதனை இந்த 'ஒய்' குரோமோச்சொம ஆண்வாரிசு தலைமுறை தலைமுறையாக் உள்ளவர்களை தேடியபோது [atmost]142,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்க மனிதர் என கணடறிந்தனர்.ஆனால் ஆதிபெண் [மைட்டோகான்டிரியல் ஈவ்] ஆண்வாரிசு தலைமுறை தலைமுறையாக் உள்ளவர்களை தெடியபோது 150,000 to 200,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என கண்டறிந்தனர்.அதாவது தலைமுறை தலைமுறையாக் பெண் வழி தொடர்பு ஆண்வழித் தொடர்பை விட அதிக காலம் நீடிப்பது கூட நீங்கள் பகிர்ந்த விடயத்திற்கும் தொடர்புள்ளதோ என் எனக்கு தோன்றுகிறது.

In human genetics, Y-chromosomal Adam (Y-MRCA) is the most recent common ancestor (MRCA) from whom all living people are descended patrilineally (tracing back only along the paternal lines of their family tree). Many studies report that Y-chromosomal Adam lived as early as around 142,000 years ago [1] and possibly as recently as 60,000 years ago.[2] All living humans are also descended matrilineally from Mitochondrial Eve who is thought to have lived earlier about 190,000 - 200,000 years ago. Y-chromosomal Adam and Mitochondrial Eve need not have lived at the same time.

http://en.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam
http://en.wikipedia.org/wiki/Mitochondrial_Eve

நன்றி

மதுரை சரவணன் said...

thanks for sharing the scientific truth.

baleno said...

பயமுறுத்தும் அறிவியல் செய்தி.நன்றி.
உண்மை நிலைமை இப்படி இருக்க பெண்ணுக்கு பர்தா போடுவதை என்ன என்று சொல்வது!

Anuja Kekkepikkuni said...

ஆண்கள் இனமே அழிந்து போகக்கூடிய நிலை வந்தால்... பற்றி முந்தைய ஒரு பெண்கள் தினத்தன்று நான் போட்ட கதைப்பதிவு: http://kekkepikkuni.blogspot.com/2008/03/1.html

நீங்க குறிப்பிட்டிருக்கிற செய்தி போலவே அப்போ ஒரு முறை செய்தி படித்ததன் தாக்கம் இந்த கதை.

Girls Rule:-)

chandru said...

ஆண்கள் இனம் இயற்கையாக அழிந்து போவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு . அதுமட்டுமில்லாது ஆண், பெண் குழந்தை பிறப்பு பற்றியும் எழுதியுள்ளேன் கருத்து கூறுங்கள்.
http://chandroosblog.blogspot.in/2011/10/16.html

EniyavaiKooral said...

"மனிதர்கள் அனைவருக்கும் மனித உடலை. உருவ அமைப்பை நிர்ணயிக்கும் 22 pairs குரோமோசொம்களும்,"

குரோமோ சோம்கள் 23 ஜோடிகள் என்று படித்த ஞாபகம். சரியா ?

http://eniyavaikooral.blogspot.com/

Stay smile said...

குரோமோ சோம்கள் 23 ஜோடிகள் என்று படித்த ஞாபகம். சரி :)