என்ன ஒரு தலைப்பு!!..
அது என்னனங்க போன வாரம் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டாங்கன்னு போயிட்டோம்..அது ஏன் போனோம்னு நானும் ரங்கமணியும் தலையில முட்டிக்காத குறை தான்.
ஒரு இந்திய தமிழ் குழந்தையின் பார்ட்டி அது. அந்த குழந்தையின் பெற்றோர் எங்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்றாலும், முகுந்த் உடன் படிக்கும் பையன் பார்ட்டி என்பதால் அங்கு சென்றோம்.
அந்த பர்த்டே பார்ட்டியில ஒரு குறிப்பிட்ட சாதி வகுப்பை சேர்ந்த பலரும் சில அமெரிக்கர்களையும், சில வேறு சாதி மக்களையும் அந்த குழந்தையின் பெற்றோர் அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது அந்த பார்ட்டி.
அங்கு வந்திருந்த பலர் இந்தியாவில் நடக்கும் இட ஒதுக்கீடு பற்றியும், அது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது போன்று பேசிக்கொண்டு இருந்தனர். எப்போதும், இப்படி நடக்கும் டிஸ்கஸன்களில் நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன். எல்லாரும் வாய் கிழிய தமிழில் பேசிய பிறகு..கேக் வெட்டும் நேரம் வந்தது..பிறகு எல்லாரும் சாப்பிட வாங்க என்று அந்த பெற்றோர் அழைத்தனர். நாங்கள் எல்லரும் தட்டை எடுத்து கொண்டு புஃபேக்கு சென்று வரிசையில் நிற்க..அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் அவர்களின் டைனிங் டேபிளில் உட்கார்த்திருக்க..அவர்களுக்கு என்று தனி சாப்பாடு பரிமாறப்பட்டது.
எங்களை போன்ற சில குடும்பங்களுக்கு அமெரிக்கர்கள் உட்பட வேறு சாப்பாடு வைத்து இருந்தனர். அதில் ஒரு அமெரிக்க அம்மா..அது என்ன சாப்பாடு என்று கேட்க..அதற்கு அந்த பர்த்டே பார்ட்டி அம்மா, ”அது கடவுளுக்கு படைத்தது..வேறு மக்கள் சாப்பிட கூடாது” என்று கூறினார்.
அட..இது நல்லா இருக்கே..அப்படி கடவுளுக்கு படைத்த சாப்பாட்டை வேறு சாதி மக்கள் சாப்பிட கூடாது என்று சொல்பவர்கள்..எதற்கு மற்ற மக்களை பார்ட்டி என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை..
அதே போல சாப்பிட்ட பிறகு கை கழுவ என்று மற்ற சாதி மக்களுக்கு தனி இடம் என்று வைத்து இருந்தது கண்டு..அட அட என்ன அழகா நமக்கு இவங்க இடம் ஒதுக்கி இருக்காங்கப்பா என்று எனக்கு மலைப்பாக இருந்தது.
அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு வரை “இட ஒதுக்கீடு” பற்றி பேசிய பேச்சுக்கும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த “இட ஒதுக்கீடு” பற்றியும் நினைத்து ”அட நாம அமெரிக்காவில தான இருக்கோம்” கிள்ளி பார்த்து கொண்டு அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்று காலி செய்தோம்.

20 comments:
இந்திய நகரங்களில்கூட இப்படி ஒரு "இட ஒதுக்கீட்டை" பார்த்தில்லை :)
நாய்வாலை நிமிர்த்த முடியாது.
:)
நல்ல அனுபவம்
shocking :((
These guys lack decency, manners, hospitality and what not. I always thin that they are the LOWEST CLASS! They lack rational thinking as well. You should not have honored their invitation which was your mistake. Next time toss the invitation from that "community people" in a garbage can. This is a very big world and you can easily ignore interacting with these worthless "self-centered" duds!
Just name the Jaathi, If you know.
கோவி.கண்ணன் said...
நாய்வாலை நிமிர்த்த முடியாது.
:)
நல்ல அனுபவம்
அதே
இம்புட்டு படித்து அமெரிக்கா வந்து சம்பாதித்தும் இப்படி...இதைத்தான் ஊரில் 'நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சாலும் நக்கற புத்தி போவாது' எனபார்கள்!
அவாள் யாரும் சொம்பை தூக்கிக்கொண்டு இன்னும் வரவில்லை. ஏன்?
Jokes apart, மிக முன்னேறிய நாடான சமுக சமத்துவ நிலை கட்டமைப்பை கொண்ட ஒரு நாட்டிலே இப்படி என்றால், இன்றைய இந்தியாவிலும் இதற்கு முற்பட்ட காலங்களிலும் எப்படி இருந்திருக்கும்?
அமெரிக்காவிலுமா இப்படி? நம்ப முடியவில்லை.
Nallavelai naan pizhaiyhthu kondeyn...
I pity them... I wonder why they even bother inviting people over. I can't imagine how I would have behaved if I happened to be in that situation ...
Sorry guys, you had gone through this trauma :(
இப்படி இட ஒதுக்கீடு செய்து பார்ட்டி நடத்திய "பன்னி"களின் படத்தையும் வெளியிட்டு இருக்க வேண்டும்.
நல்ல இடஒதுக்கீடுதான் :)
இதை அங்கு வந்திருந்த ஒரு அமெரிக்கரோ அல்லது ஒரு அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியரோ.. இனவெறி பாராட்டுதல் என்ற அடிப்படையில் புகார் அளிக்க முடியாதா? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.
தோல் நிற அடிப்படையில் ஒரு வெள்ளைத் தோல் அமெரிக்கரை அவர்கள் தீண்டத்தகாதவராக நடத்தியிருக்கிறார்கள் தானே. இது இனவெறிக் குற்றமாகாதா..
//இதை அங்கு வந்திருந்த ஒரு அமெரிக்கரோ அல்லது ஒரு அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியரோ.. இனவெறி பாராட்டுதல் என்ற அடிப்படையில் புகார் அளிக்க முடியாதா? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.
தோல் நிற அடிப்படையில் ஒரு வெள்ளைத் தோல் அமெரிக்கரை அவர்கள் தீண்டத்தகாதவராக நடத்தியிருக்கிறார்கள் தானே. இது இனவெறிக் குற்றமாகாதா//
They can very well argue that the food we served to them is like the "Sacramental bread" which is not to be shared with other religion/faith people.
Unfortunately we cannot prove it as a racisim issue here.
thanks for the comment
Thanks a lot for all your comments.
Although I came across these kind of "separation" from handful of people before, This is the first time I/We encounter it in a public function.
The good news is, these are shown by only a handful of people who think they are "superior" to others, and do these kind of acts. I have many other friends from the same "community" who are very good supporters of "non partiality".
So generalizing this incident would do no justice to those from the same community.
I wrote this because people should know that, "untouchability" still exist even if you are in a place somewhere like US.
:(
[[They can very well argue that the food we served to them is like the "Sacramental bread" which is not to be shared with other religion/faith people.}}
Not related to this post but as a side note...
Any one can have Sacramental bread. In reality, if you go to church for someone's wedding, baptism, or even just to have a picnic, the father asks whether you have any objections to receive this bread. Most of the people receive this without any fuss.
Some Christians who are against Catholics' principles (both are different here) may refuse to take it. Pernod.
தமிழில் சொல்வதென்றால், விபூதி அல்லது கடவுள் பிரசாதம் கொடுத்தால் இந்தியாவில் சிலர் வாங்க மாட்டார்கள்; அதை இந்துக்கள் மனது புன்படுத்து என்பார்கள். ஒரு இந்து தமிழ் அரசியல்வாதியும் அவரது மனிவியும் விபூதி வாங்க மருதததிற்கு இந்து முன்னணி குதிச்சாங்க! மனது புன்படுது, மனது புன்படுது என்று!
மிகவும் அருமையான பதிவு. தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று பேசுவோர்களை தோலுரித்து காட்டுகிறது. இட ஒதுக்கீடு கிடைக்காதவர்களின் மனதை படம் பிடித்தும் காட்டுகிறது !!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
Post a Comment