அமெரிக்காவில் தனி வீடு வாங்கி இருப்பவர்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். "lawn care " என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்துகள்.
முதலில் புல்வெளி வேண்டும் என்று எல்லா மரங்களையும் வெட்டி, அங்கு எல்லாம் புல் விதைகளை வாங்கி போட்டு அதன் மேல் வைக்கோல் பரப்பி வைத்து இருப்பார்கள். இன்னும் சிலர் sod எனப்படும் சிறிது வளர்ந்த புல்வெளிகளை வாங்கி பரப்பி வைத்து, தண்ணீர் விட்டு கொண்டு இருப்பார்கள். புல் நன்றாக வளரவேண்டும் என்று உரம் போடுவார்கள். தினமும் தண்ணீர் விடுவார்கள், களை எடுப்பார்கள். களை வளராமல் இருக்க வேண்டும் என்று வார வாரம் ட்ரிம் செய்வார்கள்.
எல்லா செடிகளையும் வெட்டி விட்டு, பூ பூக்கும் செடிகளாக வாங்கி நட்டு வைப்பார்கள். உதாரணமாக நாங்கள் வசிக்கும் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வளரும் என்று ஒரு சில செடிகள் உண்டு, அதனை வாங்கி எங்கும் நட்டு வைப்பார்கள்.
மரங்களும் அதே போலவே. கிட்ட தட்ட எல்லா வீடுகளிலும் ஒரு டாக் வூட் மரமாவது இருக்கும். எல்லா வீடுகளிலும் பல "Azalea" செடிகள் இருக்கும். அதே போல, நாக் அவுட் ரோஸ் செடிகள் இருக்கும். அல்லது வசந்த காலமாக இருப்பின் கிட்டத்தட்ட அனைவரும் "துலிப்" செடிகள் வைத்திருப்பார்கள்.
இந்த செடிகள் நன்றாக வளர வேண்டும் என்று பல உரங்கள் போடுவார்கள்.
காய்கறி, பழங்கள் உண்டாக்கும் செடிகள் அல்லது மரங்கள் ஏதேனும் நட்டு வைக்க வேண்டும் என்றால் வரும் தலை வலி பெரியது.
முதலில், இங்கு எல்லா கம்யுனிட்டியிலும் ஒரு HOA அல்லது ஹவுஸ் ஒனெர் அசோசியேசன் இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் ரூல்ஸ் சில நேரம் தலை சுற்றும். முதலில், புல் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வளர்ந்தது என்றால் உடனே, வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி விடுவார்கள். இன்னும் ஒரு வாரத்திக்குள் புல்லை வெட்டுங்கள் இல்லையேல் பைன் என்று வரும் அதில்.
எந்த வகை செடிகள் வளர்க்க வேண்டும் என்று அவர்களிடம் பெர்மிசன் வாங்க வேண்டும். உதாரணமாக ஏதாவது காய்கறி வளர்க்கலாம் என்றாலும் அதனை வீட்டுக்கு முன் இருக்கும் இடத்தில் வளர்க்க கூடாது, வீட்டுக்கு ஓரமாக அல்லது பின் கட்டில் ஒரு பாத்தி போல கட்டி அதில் மட்டுமே வளர்க்க வேண்டும். அதிகம் பூச்சிகள் அல்லது புழுக்களை ஈர்க்கும் எந்த செடியும் வளர்க்க கூடாது. அடுத்த வீட்டிற்கு உபத்திரவம் கொடுக்கும் படி எந்த செடியும் இருக்க கூடாது etc etc
அப்படி நீங்கள் ஏதாவது மாற்றி செய்தாலோ உடனே நோட்டீஸ் வரும், அல்லது பைன் கட்ட வேண்டி வரும். இந்த காரணத்தினாலேயே இந்தியர்கள் பலரும் இங்குள்ளவர்கள் போலவே புல், செடி என்று நட்டு வைப்பார்கள். நாமால் புல் வெட்ட முடியவில்லை என்றால் யாருக்காவது காசு கொடுத்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை புல் வெட்டுவார்கள். அதற்கென்று பணம் அழ வேண்டும்.
இப்படி ஊருக்காக அல்லது அதனோடு ஒத்து வாழ நாம் நடத்தும் நாடகங்கள் எல்லாம் எனக்கு "Vanity Fair" என்னும் "William Thackeray" அவர்களின் நாவலை ஞாபகப்படுத்தும்.
சரி இதனால் என்ன?, ஊரோடு ஒத்துவாழ்ந்து விட்டு போகலாமே என்றால், அதனால் வரும் பின் விளைவுகள்.
உதாரணமாக, போலன் அலர்ஜி எனப்படும் மகரந்த தூள் அலர்ஜி. இங்கு வசந்த காலம் ஆரம்பித்து விட்டால், வானிலை அறிக்கை வாசிக்கும் போது கிட்ட தட்ட எல்லா செய்தி சானல் களும் எவ்வளவு போலன் கவுன்ட் இருக்கிறது என்று ரிப்போர்ட் செய்வார்கள். எல்லா இடங்களிலும் ஒரே போல செடிகளும் மரங்களுமாக வைத்து வைத்து, அதே செடிகள் மலரும் போது பரப்பும் மகரந்த தூள்கள், மூச்சு குழாய்களில் புகுந்து சுவாச சம்பந்தமான பிரச்சனைகளை உண்டு செய்கின்றன. இதோடு பலருக்கு சைனஸ் பிரச்னையும் இந்த மகரந்த தூள்கள் உண்டாக்கு கின்றன.
எனக்கு ஜியார்ஜியா மாகாணம் வரும் வரை இந்த போலன் அலேர்ஜி இருந்ததில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் எனக்கு போலன் அலேர்ஜியும் சைனஸ் தலைவலியும் தொடர்ந்து வருகின்றன. கிட்ட தட்ட எல்லா இந்திய குழந்தைகளுக்கும் போலன், புல் அலேர்ஜி இருக்கிறது அல்லது ஆஸ்துமா இருக்கிறது.
இப்படி பணம் கொட்டி புல் வளர்த்து, வெட்ட, மீண்டும் வளர்த்து....என்ன பலன் இருக்கிறது, ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை.
நன்றி
5 comments:
நான் மிக்சிகன் மாநிலத்தில் இருந்த வரை இந்த போலன் தொல்லை இல்லை. ஆனால் நியூஜெர்ஸி வந்த சில ஆண்டுகளில் இந்த போலன் என்னை பிடித்து ஆட்ட ஆரம்பித்தது. ஆனால் கடந்த வருடத்தில் இருந்து நான் நாய்குட்டி வளர்க்க ஆரம்பித்ததில் இருந்து அதை போலன் என்னை தொல்லைப்படுத்தவில்லை இந்த இயர் போலன் கவுண்ட் மிக அதிகமாக இருந்தாலும் இது வரை என்னை பாதிக்கவில்லை. டச் வுட்
நம்மூரில் இந்த வகை அலர்ஜி வராதற்கு காரணம், புல் பூ பூக்கும் முன்னாடியே திரியும் மாடுகள் புல்லை டிரிம் பண்ணி விட்டிடும். நீங்கள் இந்த மாடு டெக்னிக்கை உங்க கம்யூனிட்ல டிரை பண்ண சொல்லுங்க. அலர்ஜி தொந்தரவு குறையும், கூடவே Grass-fed organic milk வேற சலீசா கிடைக்கும்.
I would like to mow my lawn every week rather than leaving it for longer. :) The reason is it gets harder to mow the tall and thick grass when it crosses a week. Mowing is something I think of as a work-out in the summer. I do burn decent amount of calories when I mow. So, I would not give that job to anybody. :) Only thing is I need to choose the right time to mow my lawn. If it is really hot, it is exhausting and so I choose a comfortable time (early morning or late evening if it is a hot day). Other than that I have nothing to complain about mowing. I do have pollen allergy which I did not have for a long while, but it is not severe (watery itchy eyes or of that sort) and so I can manage. We dont have any restrictions to plant vegetables. We dont invite anybody to come check it out either. So, they would not know what we have planted. However we dont get much sunlight in our backyard as there are many trees and so, so much shadow. We have plants like Jasmine,Roses, Curry leaves (which is illegal to have in states like TX and CA), tomatoes (many variety) and chillies and something like a banana tree (they are small and wont give any bananas either). ALL ARE in POTS and we keep them where the plants can get sunlight. They (Jasmine, rose and curry leaves plants) will go inside during winter and live comfortably there.
மகரந்த ஒவ்வாமைக்கு மிகவும் சரியான மருந்து அந்தந்த ஊர்களிலிருந்து கிடைக்கும் (அதாவது உங்களுக்கு ஜார்ஜியா மாநிலத்திலிருந்து) தேன் தான். இது எனக்குக் கைகொடுத்தது - கூடவே மூச்சுப் பயிற்சியும், யோகாசனமும்!
Got a town house. So, HOA taking care of the rest.
However, even though Indians buy a single family homes. Not sure why they end up being in a community and spend hundreds for HOA.
Post a Comment