Friday, April 6, 2012

வளர்சிதை மாற்றம் 

"லீவு எடுத்தாச்சு ஏதாவது பழைய படம் பாக்கலாம்" சொன்னது மனசு,
சிறுவயதில் நான் ரசித்த படம் ஒன்று டிவியில் வர  
அந்த படத்த சிறிது நேரம் கூட பார்க்க முடியல.
சிறு வயதில் பார்த்து ரசித்த அதே காட்சிகளும் செண்டிமெண்ட் களும்
இப்போது பார்க்க மனம் வெறுக்கிறதே ஏன்? 

கட் ஷு வும் ஜீன்சும் போடவேண்டும்
என்று ஏங்கிய காலம் போய்,
தினமும் அதை பார்க்கவே
வெறுப்பு ஏற்படுவதும் ஏன் ? 

ஊரில் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது
சாமி பார்க்க வா என்று அம்மா அழைத்தாலும்
போம்மா நான் படிக்கணும்னு சொல்லிட்டு டிவி பார்த்த காலம் போய் ,
இப்போ மதுரையை பத்தி யாரு கேட்டாலும்
சித்திரை திருவிழாவை பத்தி சொல்லுறது ஏன்?

அதிரவைக்கும் சத்தத்துடன் கலந்த இசையையும்
அவசர உலகையும் ரசித்த எந்தன் மனம்
இப்போது அமைதியான புல்லாங்குழல் இசையையும்
இயற்கையையும் விரும்புவது ஏன்? 

அறிவியலையும், வரலாற்றையும் வெறுத்த காலம் போய்
இப்போது  மாங்கு மாங்கென்று வரலாற்றை படிக்கவும்
அறிவியலை அறியவும் முனைப்பு ஏற்படுவது ஏன்? 

மனிதனால் எல்லாம் முடியும் என்று இறுமாந்திருந்த காலம் போய்,
நம்மால் எதுவும் முடியாது என்ற ஞானம்
இப்போது தோன்றுவது ஏன்? 

காருக்கும் கரன்சிக்கும் ஆசைப்பட்ட காலம் போய்
எல்லாம் இருந்தும் எதுவுமே நிலையானததல்ல
என்ற எண்ணம் தோன்றுவது ஏன் ?

எதற்காக வந்தோம், என்ன செய்ய போகிறோம்
என்று நிறைய கேள்விகள் தினமும் என்னை துளைக்க
எனக்குள்ளே தான் எத்தனை வளர்சிதை மாற்றங்கள்!!!

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

வளர்சிதை மாற்றம்....

எத்தனை மாற்றங்கள் நம்மில். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விருப்பம். பிறகு அதைப் பற்றிச் சிந்தித்தால் எதற்கெல்லாம் ஆசைப் பட்டிருக்கிறோமே என்று தான் தோன்றும்....

நல்ல கவிதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல சிந்தனை.. ம் இப்படித்தான் போகுது எல்லாம்..

கோமதி அரசு said...

எதற்காக வந்தோம், என்ன செய்ய போகிறோம்
என்று நிறைய கேள்விகள் தினமும் என்னை துளைக்க
எனக்குள்ளே தான் எத்தனை வளர்சிதை மாற்றங்கள்!!!//

இப்படித்தான் போகிறது எண்ணங்கள் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு எண்ணங்கள்,

மாற்றங்கள் இயல்பே.

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமை.

Stay smile said...

Stay Real ...!