பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்?
அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பம்ப்கள் உள்ளன?
இது நாள் வரை நீங்கள் அனுபவித்த வித்தியாசமான உணர்வு எது?
1, 2, 6, 42, 1806, _____??? ஆறாவது எண் எது?
J ? M A M J J A S O N D விடுபட்ட எழுத்து என்ன?
நீங்கள் இந்த கேள்விகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
14 comments:
என்னங்க இதெல்லாம்..? :)
நினைக்கிறதென்ன.. யப்பாடா உங்களலளவு படிக்கலைன்னு தான் நினைச்சிக்கனும்..இப்படி கேள்வி எல்லாம் நான் கேக்க நேரலைன்னு :)
சரி எப்ப விடை போடுவீங்க வந்து படிச்சிக்கிறேன்..
உங்கள வேலைக்கு சேர்க்க கூடாதுன்னு நினைக்கிறாங்க போலும்.
உங்களுடைய Logical ability பற்றி அறிந்து கொள்வதற்காக இது போன்ற கேள்விகளை கேட்பார்கள். சில கேள்விகளுக்கு சரியான விடை என்று எதுவும் கிடையாது. ஆனால், நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி அணுகுகிறீர்கள் என்பதை அறிவதற்காக, அத்தகைய கேள்விகளைக் கேட்பார்கள்.
சில விடைகள்.
வட்டம் தவிர வேறு எந்த வடிவமாக இருந்தாலும் (சதுரம், முக்கோணம், செவ்வகம்), சாக்கடைக்குள் (தவறி) போட்டுவிட முடியும். ஆனால், வட்ட வடிவ மூடி, Man Hole க்குள் உள்விழ வாய்ப்பில்லை. மேலும், மிகப்பெரும் மூடியை கூட, தேவையெனில் ஒருவர் மட்டுமே வேறு இடத்திற்கு (உருட்டி) எடுத்துச் சென்று விட முடியும். ஆனால். மற்ற வடிவங்கள் எடை அதிகமாக இருந்தால் ஒருவரால் மட்டும் எடுத்துச் செல்ல முடியாது.
--
பின்வரும் விடைகள் எப்படி வந்தன என்று யோசியுங்களேன். மற்றவற்றிற்கும் விடை கிடைத்துவிடும்.
1, 2, 6, 42, 1806, 3263442
--
J F M A M J J A S O N D
--
சாக்கடை மூடிக்கு மட்டும் எனக்கும் ‘கும்மி’ சொன்ன உருட்டிக் கொண்டு போக எளிதாக இருக்கிங்கிற விசயம் மண்டையில பளிச்சின்னு மின்னுச்சு.
மத்ததெல்லாம் ஒண்ணுத்தியும் வெளங்கல... கொஞ்சம் ‘வீக்’ மண்டை :-)
1. பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்?
மைக்ரோசாஃப்டில் இன்டர்வியூவில் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி என்பார்கள். கும்மியின் விடை சரி.
2. அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பம்ப்கள் உள்ளன?
நேர்முகத் தேர்வு போகும் போது இந்த மாதிரி கேள்விக்கு சரியான விடை தெரிந்திருக்கத் தேவையில்லை. ஆனால், இந்த விடைக்கு வரும் ஆய்வு அறிவு தேவை. அமெரிக்காவில் எத்தனை மக்கள்; மக்களுக்கு / குடும்பத்துக்கு எத்தனை கார்; ஒரு காருக்கு எத்தனை முறை பெட்ரோல் போட வேண்டியிருக்கும்; இத்தனை பெட்ரோல் போட அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் ஸ்டேஷன் தேவையாயிருக்கும்னு.. கதை வளர்த்தணும். விரைவாய்ச் செயல்படும் ஆய்வு அறிவைக் காட்டவே இம்மாதிரி கேள்வி.
3. இது நாள் வரை நீங்கள் அனுபவித்த வித்தியாசமான உணர்வு எது?
நான். (இந்த மறுமொழி மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்; நான் இந்த மொழியை இன்னும் விளக்கிச் சொல்லணுமா என்று நேர்முகத் தேர்வாளர்களைக் கேட்டுக்குவேன்). இது தான் சரியான விடையா என்று எனக்குத் தெரியாது!
4. 1, 2, 6, 42, 1806, _____??? ஆறாவது எண் எது?
1; (1+1=2; 2*1=2) 2; (2+1=3; 3*2=6) 6; (6+1=7; 7*6=42).... 1806*43=...
5. J ? M A M J J A S O N D விடுபட்ட எழுத்து என்ன?
கும்மி இதுவும் சொல்லிட்டார்; ஆங்கில மாதங்களின் பெயர்களில் முதல் எழுத்து.
உங்களின் விரைவாய் ஆய்ந்தறியும், மற்றும் Social அறிவு தேர்வு செய்யப்படுகிறது. வாழ்த்துகள்.
அமேரிக்காவிலுள்ள பல பாதாள சாக்கடை மூடிகள் இந்தியாவில் செய்யப்பட்டவையாம்.
- சிமுலேஷன்
தமிழ் சினிமாவுல மட்டும்தான் இப்படியெல்லாம் கேட்பாங்கன்னு நினைச்சிருந்தேன் இவ்ளோ நாளும்:))!
Logical reasoning..!! இந்தியாவுல இதுக்குன்னே பத்திரிகைகள் (competition success.. etc..) வருமே.. படிச்சு மண்டை காஞ்சுபோச்சு அப்போ!! ;-)))))
.
கெக்கே பிக்குணி அனைத்து புதிர்களுக்கும் விடையினை கண்டுபிடிக்கும் வழிகளைக் கூறிவிட்டார். வழிகளை அறிந்துகொண்டால், எவ்வித புதிர்களுக்கும் நொடியில் விடையினை கண்டுபிடித்துவிடலாம்.
தெகா,
உருட்டிச் செல்வது புரிந்தது போல், இதுவும் எளிதானதுதான். இந்த புதிருக்கு விடை கண்டுபிடியுங்களேன்.
Landline phone களின் ரிசீவர்களில் இருக்கும் ஒயர் சுருண்டு கொள்ளும். நாம் எடுத்து அதை நேராக்கி வைத்தாலும், மீண்டும் சில நாட்களில் அதே போல் சுருண்டு கொள்ளும். ஏன்? (நான் சொல்லுவது ரீசிவர் ஒயரில் இருக்கும் manufactured சுருள் அல்ல.)
.
தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக:
இரண்டாவது கேள்வி போன்ற இன்னும் சில கேள்விகள்.
ஒரு கால் பந்து மைதானத்தில் எத்தனை கைபந்துகளை நிரப்பலாம்?
ஒரு நீச்சல் குளத்தில் எத்தனை கோல்ப் பந்துகளை நிரப்பலாம்?
---
விடுபட்டவற்றை கண்டுபிடியுங்கள் என்று ஒரு எண்/எழுத்து/வடிவ வரிசையை கொடுக்கும்போது, அடுத்தடுத்த எண்களுக்கிடையே, அல்லது ஒன்று விட்ட எண்களுக்குக்கிடையே தொடர்பு இருக்கும். அந்த தொடர்பை கண்டுபிடித்துவிட்டால், விடையினை கண்டுபிடித்துவிடலாம்.
எழுத்துகளை அடிப்படையாக வைத்து வரும் தொடர்களில் பெரும்பாலும் மாதம் அல்லது கிழமைகளின் முதலெழுத்தே அடிப்படையாக இருக்கும்.
இவை அனைத்தும் Logical Thinking வகையில் வருபவை. Entry Level அல்லது Mid Level பதவிகளுக்கான தேர்வின் போது கேட்கப்படுபவை. ஒரு வேளை, Lateral திங்கிங் வகை கேள்விகளும் கேட்கப்பட்டு, நீங்கள் நன்றாக பதிலளித்தால், மற்றவர்களை விடவும் உங்களுக்கு பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்.
Lateral Thinking வகை புதிர் ஒன்று. (பலரும் அறிந்திருக்கக்கூடும்)
நீங்கள் ஒரு சிறைக்கூடத்தில் உள்ளீர்கள். அந்த சிறைக்கூடத்தில் இரண்டு வாசல்கள் உள்ளன. ஒரு வாசல் வழியே சென்றால், வெளியே சென்றுவிடலாம். இன்னொரு வாசல் வழியே சென்றால் மீண்டும் சிறைக்கூடத்திற்கு வந்துவிடுவீர்கள். இரண்டு வாசல்களிலும் தலா ஒரு காவலர் வீதம் நிற்கின்றனர். அவர்களுக்கு எந்த வாசல் வெளியே செல்வது, எந்த வாசல் சிறைக்கூடத்திற்கே வருவது என்று தெரியும்.
ஆனால், அவர்களுள் ஒருவர் உண்மை மட்டுமே பேசுவார். இன்னொருவர், பொய் மட்டுமே பேசுவார். யாரேனும் ஒருவரிடம் மட்டும், ஒரே ஒரு கேள்வியை கேட்டு அவர் கூறும் பதிலை வைத்து, நீங்கள் எப்படி வெளியே வருவீர்கள்? (யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று உங்களுக்குத் தெரியாது)
அது சரி நீங்கள் என்ன பதில் சொன்னீங்க...உங்கள் திறமையை கணக்கிடத்தான்...
கும்மி, உங்கள் புது கேள்வி செட் நல்லா இருந்தது.
அத்தோட, முகுந்த் அம்மா / நேர்முகத் தேர்வுக்குத் தயாராகுறவுங்க, இந்த இரண்டு இணைய தளங்களையும் இன்னும் பார்க்கலாம், பன்னாட்டு கம்பெனிகளில் பலநாடுகளிலிருந்தும் பல விதமான பதவிகளுக்கும் நேர்முகத் தேர்வு கண்டவர்கள் அந்தத் தேர்வு கேள்விகளை post செய்திருக்கிறார்கள்: http://www.glassdoor.com/, http://www.careercup.com/
@ கெக்கே பிக்குணி
தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி. இனி போரடிக்கும் சமயங்களில் பொழுதை போக்க மேலும் சில தளங்கள் கிடைத்துள்ளன.
உங்கள் தளத்தில் Lateral Thinking தொடர்பான புதிர்களை இடுங்களேன். விடையளிக்க முயற்சிக்கின்றேன்.
Post a Comment