Wednesday, February 11, 2015

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி - 2 ? குறைகளுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்




குறை இல்லா மனிதன் இல்லை. எந்த காரியத்தையும் எந்தவொரு குறையும் இல்லாமல் பூரணமாக செய்ய என்னால் மட்டுமே முடியும் என்று ஒருவர் நினைக்க ஆரம்பித்தால் அவர் ஸ்ட்ரெஸ் ஐ வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார் என்று பொருள். 

எனக்கு அனுபவம் இருக்கிறது. இந்த முறையில் நான் வகுத்தபடி தான் அனைவரும் நடக்க வேண்டும் ஏனெனில் அதுதான் சரியான விளைபயன் தரும். அவ்வாறு நடக்க இல்லையேல் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்  என்று நினைத்து பயந்து தன்னையும் சரி அடுத்தவரையும் சரி தன்  வழி நடக்க வைக்க நினைப்பார்கள் (இம்சிப்பார்கள்) சிலர். மற்றவர்களுக்கும் அதனை பற்றி அனுபவம் இருக்கும் அல்லது அவர்களின் எண்ணங்களையாவது கேட்போம் என்று நினைப்பதில்லை இவர்கள். 
பெற்றோர் குழந்தைகளிடமும் ,கணவன் மனைவியிடத்தோ அல்லது மனைவி கணவனிடத்தோ இதனை போன்ற எதிர்பார்ப்பை(இம்சையை)  அடிக்கடி காணலாம் . 

இன்னும் சிலரோ தனக்கு உள்ள மிக சிறிய குறைகளையோ நினைத்து நினைத்து வருந்தவோ அல்லது மற்றவர்களிடம் உள்ள குறைகளையோ குத்தி காட்டவோ, கிண்டல் செய்யவோ  செய்வார்கள். அது வெளிப்புற தோற்றமாக இருக்கலாம் அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களாக அல்லது நடவடிக்கைகளாக இருக்கலாம். இது போன்று செய்யும் போது  முதலில் நம் மீது இருக்கும் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறோம். பின்னர் அடுத்தவர்கள் நம் மீது கொண்டுள்ள மரியாதையை, நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.

இதிலிருந்து எப்படி மீள்வது?. ஒவ்வொரு முறையும் அடுத்தவர்கள் ஒரு காரியத்தை தன்  வழியில் அல்லாமல் வேறு மாதிரியாக செய்யும் போதோ  உடனே டென்சன் ஆகி  நரம்பு புடைக்க  "நீ செய்வது தவறு, நான் சொல்லும்படி செய்"  என்று  கத்தாமல்  "இட்ஸ் ஓகே, ஒன்றும் இல்லை, எல்லாம் நன்றாக நடக்கும்" என்று ஒரு ஜென்டில் ரிமைன்டர் செய்து கொள்ளுங்கள். 

அடுத்தவரை பார்த்து குறை சொல்ல வாய் வரும்போதோ அல்லது உங்களின் குறைகளை பார்த்து மனம் வருந்தும் போதோ ஒன்றை நினைத்து கொள்ளுங்கள். குறைகளுடன் பிறந்து அதனை பெரிதாக நினைக்காமல் வாழ்ந்து சாதித்தவர்கள் ஏராளமானோர். உதாரணமாக இருவர்; ஒருவர் "பீதோவன் இசைக்கலைஞர் காது கேட்கும் தன்மையற்றவர்", மற்றொருவர் "ஹெலன் கெல்லர் எழுத்தாளர் காது கேட்கும் வாய்பேசும் பார்வை இல்லாதவர்."

முடிவாக இது 



நன்றி 

ஸ்ட்ரெஸை  கட்டுபடுத்துவது எப்படி -1 ? பேனை பெருமாளாக்க வேண்டாம் , துவக்க பகுதி இங்கே.


3 comments:

கோமதி அரசு said...

"இட்ஸ் ஓகே, ஒன்றும் இல்லை, எல்லாம் நன்றாக நடக்கும்" என்று ஒரு ஜென்டில் ரிமைன்டர் செய்து கொள்ளுங்கள்.//

இனி இப்படியே சொல்லிக் கொள்கிறேன்.

ஆரம்பம் முதல் நிறைவு வரை அடிகோடிட வேண்டிய அழகான வார்த்தைகள்.

அடிக்கடி இது போன்ற நல்ல கட்டுரைகளை வழங்க வாருங்கள் முகுந்த் அம்மா.

வேலை அதிகமா?
வாழ்த்துக்கள் நல்ல பதிவுக்கு.

முகுந்த்; Amma said...

நன்றி கோமதிமா, வருகைக்கும் கருத்துகளுக்கும்.
வேலை அதிகம். Draft ல் தேங்கி கிடந்த பல பதிவுகளை ஒவ்வொன்றாக publish செய்து கொண்டு இருக்கிறேன்.

நன்றி

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கட்டுரை.....

தொடர்கிறேன்.