Monday, January 25, 2010

Peer பிரஷர்

என்னுடைய சின்ன வயசில காலை எழுந்ததும் நான் கேட்பது இது தான்

"எதிர்த்த வீட்டு மகேஸ பாரு, காலையில எந்திரிச்சு எப்படி வீட்டு வேலை பாக்கிறா? நீயும் தான் இருக்கியே, இங்க இருக்கிறதா எடுத்து அங்கே வைக்கிறாயா"

தினம் தினம் இந்த அர்ச்சனை தான் எனக்கு என் அம்மாவிடம் இருந்து கிடைக்கும்.
நான் எதை செய்தலும் எதிர் வீட்டு மஹேஸ் அக்கா வுடன் உடனே ஒரு comparison நடக்கும்.

நான் 10 வது படிக்கும் போது அந்த அக்கா +2 வில் 1000 இக்கு மேல மார்க் வாங்கிட்டாங்க, உடனே என் அம்மாவிடம் இருந்து வந்த வார்த்தைகளில் எல்லாம் அந்த மார்க் எப்படியோ வந்து விடும்.

மஹேஸ் அக்காவின் அப்பாவுக்கு வேற ஊருக்கு மாற்றலாகி போற வரை மஹேஸ் அக்காவுடனான என் comparison தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு வழியாக காலேஜ் final year வரை comparision இல்லை, அப்பாடா என்று இருந்தது. Final year முடிக்கும் போது ஒரு வகை pressure என் அப்பாவிடம் இருந்து வந்தது.

"உன் பெரியப்பா பொண்ணு ஒன்னோட வயசு தான், அவளுக்கு கல்யாணம் செய்துட்டாங்க, எப்போ உன் பொண்ணுக்கு கல்யாணம்னு என்னை எல்லாரும் கேட்குறாங்க, நான் என்னத்த சொல்ல?"

ஒரு வகையாக அந்த பிரஷர் இல் இருந்து தப்பிக்க வேற ஊரில் வேலை கிடைத்தது. பிறகு எப்போ ஊருக்கு போனாலும் அம்மா, அப்பா, அக்கம், பக்கம், சொந்தம், பந்தம் எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி

"உன்னோட set எல்லாம் கல்யாணம் ஆகி settle ஆகிட்டாங்க, நீ எப்போ கல்யாண சாப்பாடு போடா போறே?"

என் அம்மாவின் புலம்பல் தினம் தினம் அதிகம் ஆனதால் ஒரு வழியாக கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி கல்யாணமும் ஆன போது அப்பாடா இப்போ ஒரு வழியா pressure முடிஞ்சது என்று நினைத்தேன்.

என் ஆறுதல் ஆறு மாசம் கூட இல்லை அடுத்த pressure என் அம்மாவிடம் இருந்தே வந்தது.

"என்னமா எதாவது விசேஷம் இருக்கா, உன் சித்தி பொண்ணு அபி பாரு கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது, அவ இரண்டு மாசம் முழுகாம இருக்காளாம். நீ எப்ப நல்லா செய்தி சொல்ல போற ?"

"சீக்கிரம் சொல்றேன் மா" என்று நான் பொய்யாக சமாதானம் சொன்னாலும் , என்ன செய்வது?, எல்லா விதத்திலும் நாங்கள் இருவரும் fit ஆக இருந்தாலும் எங்களால் நல்லா செய்தி சொல்ல முடியவில்லை.

பிறகு ஒவ்வொரு நாளும் பிரஷர் அதிகம் ஆனது. மற்ற எல்லா pressure யும் சமாளிக்க தெரிந்த எனக்கு இதனை சமாளிக்க தெரியவில்லை. மற்ற வகை பிரஷர் எல்லாம் உடம்பை கெடுக்காது என்றாலும் குழந்தை விஷயத்தில் ஏற்படும் பிரஷர் உடம்பை ரொம்ப பாதிக்கும் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.

பிறகு எப்படியோ ஒரு வழியா "உண்டாகி" குழந்தை பிறந்த போது நினைத்தேன்

"இனிமேல் யாருடனும் என்னை ஒப்பிட மாட்டார்கள், நானும் என் பையனை அடுத்தவர்களுடன் ஒப்பிட மாட்டேன்"

சில மாதங்களில் என் அம்மா என்னிடம் கேட்டார்கள்

" அபி பொண்ணு பிடிச்சிட்டு நிற்கிறாளாம், முகுந்த் நிற்கிறானா?"

அட கடவுளே!! இதுக்கு முடிவே இல்லையா?.

3 comments:

Thekkikattan|தெகா said...

//நீ எப்ப நல்லா செய்தி சொல்ல போற ?"//

பயங்கர கொடுமைங்க இது. இதெல்லாம் போய் இப்படிக் கோட்டு கொடுமை பண்ணினா எப்படிங்க. இது என்ன கடையில போய் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கிற விசயமா, என்ன?. ஏன் நம்ம மக்கள் இவ்வளவு சென்சிடிவான விசயத்தை, இன்சென்சிடிவா அணுகுறாங்க. இது தொடர்பா ஒரு கட்டுரை எழுதணுங்க.

//அட கடவுளே!! இதுக்கு முடிவே இல்லையா//

:-(


பி.கு: அவசியம் தமிழ்மணத்தில உங்க தளத்தை இணைங்க. நல்ல நல்ல பதிவா எழுதிட்டு சும்மா உட்கார்ந்திருக்கு.

முகுந்த்; Amma said...

Romba nandri Theka. Tamil manathila ennoda pathivai enaichitein. Thanks for your comments and tips.

arul said...

pressure continues in all ages