வேலை பார்க்கும் பெரும்பான்மை மக்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். மாங்கு மாங்கு என்று வேலை பார்த்து இருப்போம், அந்த ப்ராஜெக்ட் கான்செல் ஆகி இருக்கும். நீங்கள் உயிரை கொடுத்து வேலை பார்த்து இருப்பீர்கள், ஆனால் ரெவ்யுவில் உங்களை பற்றி தாறுமாறாக உங்கள் மேனேஜர் திட்டுவார். என்னய்யா/என்னம்மா வேலை பார்க்குற, ஒரு போகஸ் இல்ல என்பது போன்று நிறைய வாங்கி கட்டி கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமோசன் வேறு சிலருக்கு கிடைக்கும். உங்களை பற்றி உங்கள் நண்பர்களே அல்லது நண்பர்களாக நினைத்தவர்களே உங்கள் மேனேஜர் இடம் போட்டு கொடுத்து ப்ரோமோசன் வாங்கி இருப்பார்கள். எதிர் பார்க்காமல் உங்கள் வேலை போய் இருக்கும், உங்களின் இந்த வேலையை நம்பி வீட்டு லோன், கார் லோன் என்று பலதும் இருக்கும்..இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
இதே நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தால் என்ன செய்வோம், தாறுமாறாக சத்தம் போடுவோம், அழுது ஆர்பாட்டம் செய்வோம், சண்டை போடுவோம், எல்லாரையும் கை காட்டி உன்னால் தான் நடந்தது என்று பெரிய டிராமா செய்து விடுவோம். ஆனால் இவை எல்லாம் ஆபிசில் நடந்து இருக்கிறது. அங்கு எந்த வித உணர்சிகளையும் நீங்கள் காட்ட முடியாது. அப்படி ஏதாவது காட்டினாலும் உங்களை வீக், எந்த சூழலையும் ஸ்ட்ரெஸ் ஐயும் சமாளிக்க தெரியாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்கள்.
இப்படி எல்லா நெகடிவ் விசயங்களும் நிகழ்ந்தாலும் எப்படி உணர்ச்சி வசப்படாமால் நிதானமாக இருப்பது. சில டிப்ஸ் இங்கே. பொதுவாக நான்கு வகை எதிர்மறை உணர்ச்சிகள் நமக்கு நேரலாம்.
- நம்பிக்கை இழத்தல்
- கவலை கொள்ளுதல்
- கோவப்படுதல்
- வேலையில் வெறுப்பு கொள்ளுதல்
1. நம்பிக்கை இழத்தல்
இந்த வகை உணர்ச்சி பெரும்பாலும், நாம் முன்னேற முடியாமல் போகும்போது நிகழலாம். "Feeling stuck" அல்லது நமக்கு future இல்லை இங்கே, நம்மால் இனிமே சாதிக்க முடியுமா?, இங்கேயே இருந்து விடுவோமா? என்று மனம் அலைபாயும் போது நம் மீதே நம்பிக்கை குறையலாம். எப்படி இந்த நிலையை சமாளிப்பது.
- Stop and evaluate : மனதளவில் இந்த நிலைலையை பற்றி BP ஏறும் அளவு யோசிக்காமல் நிறுத்துங்கள். ஒரு மூன்றாவது மனிதனாக அந்த சொல் நிலையை பாருங்கள். ஏன் நமக்கு ப்ரோமோசன் கிடைக்க வில்லை, நமக்கு திறன் இல்லையா?, இல்லை நம்முடைய திறமை எங்கே குறைகிறது. எப்படி அதனை வளர்த்து கொள்ளுவது என்று யோசியுங்கள். இல்லை ஆபீஸ் பொலிடிக்ஸ் தான் காரணம் என்றால், எப்படி அதனை சமாளிப்பது, யாரை சமாளிப்பது என்று மூன்றாவது மனிதனாக யோசியுங்கள்.
- Find Something Positive about the situation: இந்த நிலை நாள் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது உண்டு. வாழ்கையில் பல விஷயங்கள் நமக்கு மிக மிக கசப்பான அனுபவங்கள் தரும். ஆயினும், நான் அந்த விஷயங்கள் நம்மை எப்படி மாற்றி இருக்கின்றன, என்ன கற்று கொண்டு இருக்கின்றன என்று பார்ப்பேன். நிறைய விஷயங்களில் சிறிதேனும் நல்ல பாடம் இருக்கும், அதனை நாம் பார்க்க தவறி இருப்போம். அந்த positive விசயங்களை கண்டறியுங்கள்.
- Remember last time: இதே போன்ற ஒரு நிலை முன்பும் நேர்ந்து இருக்கலாம், அப்பொழுது அதனை எப்படி சமாளித்தீர்கள், எப்படி அதிலிருந்து வெளியே வந்தீர்கள் என்று யோசியுங்கள். ஒரு முறை வெளியே வந்து விட்டோம், இப்பொழுது வருவதற்கு என்ன? என்று நமக்கு தோன்றி விடும்.
நிறைய பேருக்கு வேலை போகும் போது இந்த கவலை வந்து விடும். எதிர்காலத்தை பற்றிய பயம் வரும். இந்த நிலையை கிள்ளி எறியாவிட்டால் உங்கள் உடல் நிலை பாதிக்கப்படும். எப்படி சமாளிப்பது.
- உங்களுடன் வேலை பார்பவருக்கு வேலை போய் விட்டது என்று அங்கும் இங்கும் புரண் பேசுகிறார்களா?, அப்படி எனில் அந்த இடத்துக்கு செல்லாதீர்கள். இப்படி விஷயங்கள் கேட்க கேட்க உங்களுக்கு BP எகிற தான் செய்யுமே தவிர அந்த சூழ்நிலையை சமாளிக்க உதவாது.
- அப்படியும் காதில் விழுகிறது எனில் மூச்சு பயிற்சி செய்யுங்கள். எப்பொழுதும், இது இல்லாவிட்டால் வேறொன்று என்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். எந்த வேலையும் நிரந்தரம் இல்லை, இதனை விட்டால் வேறொன்று இருக்கும் என்று நம்புங்கள்.
- கவலைகளை எழுதுங்கள், worry log, எப்படி எழுதும் பொது, மன பாரம் குறையும், அதனை திரும்ப படிக்கும் பொது ஒரு தெளிவு, பாதை காட்டாயம் தெரியும். நிலைமையை சமாளிக்க என்ன என்ன வழிகள் இருக்கின்றன என்றும் எழுதுங்கள். அதனை எப்படி செயல் படுத்ஹ்டுவது என்றும் எழுதுங்கள்.
- Always think different: என்னுடைய பாலிசி இது. எப்பொழுதும் அடுத்தவர் அதிகம் செல்லாத, முயற்சி செய்யத விஷயத்தை செய்ய விழைவேன். உதாரணமாக வேளையில் பிரச்னை என்று தெரியும் பொது, வெரி வேலை ஏன் செய்ய கூடாது என்று யோசிப்பேன். அதனை செயல் படுத்த முயற்சிப்பேன். இது போன்று யோசிக்கும் போது, இந்த வேலை இல்லாட்டி ஆயிரம் வேலை என்று நம்பிக்கை பிறக்கும்.
"கோவம் பாவம் சண்டாளம்" என்று படித்து இருக்கிறேன். கோவப்படுவது போன்ற அதல பாதாளத்திற்க்கு எடுத்து செல்லும் ஒரு நெகடிவ் எண்ணம் இல்லாவே இல்லை. இது நம்மை ஈசி டார்கெட்ஆக்கி விடும். அதாவது இவனை கோவப்பட வச்சிட்டா போதும், நாம் காரியத்தை சாதிச்சிடலாம் என்று நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை உபயோகிக்க கற்று கொள்வார்கள். யாருக்கும் உங்களை பிடிக்காது. இதனை எப்படி சமாளிப்பது.
- உங்களுக்கு கோவம் வருவது போல நிகழ்சிகள் நடந்தால், என்ன செய்து கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தி விடுங்கள். கோவம் வரும் பொது செய்யும் எந்த காரியமும் நெகடிவ் ஆக தான் முடியும்.
- உங்களை கோவப்பட்டு நீங்களே பார்ப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். எப்படி உங்கள் முகம் பாவனைகள் இருக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.
- எப்படி தாக்குதல்களை எதிர்ப்புகளை கோவப்படாமல் சமாளிப்பாது என்று மூன்றாவது மனிதனாக இருந்து யோசியுங்கள்.
- முக்கியமாக கோவம் வரும் நேரம் அந்த இடத்தை விட்டு அல்லது அந்த சொல்லலை விட்டு மனதளவில் அல்லது முடிந்தால் இடம்பெயர்ந்து சென்று விடுவது நன்மை பயக்கும். ஏனெனில் கோவம் என்பது ஒரு இன்ஸ்டன்ட் ரியாக்சன் மட்டுமே, பத்து நிமிடம் அல்லது அரை மணிநேரம் கழித்து கட்டாயம் வேகம் குறைந்து விடும்.
4. வேலையில் வெறுப்பு கொள்ளுதல்
உங்களுக்கு பிடிக்காத சில நபர்களுடன் வேலை செய்ய நேரும் பொது இது நேரலாம். ஒரு சிலர் இவனோட/இவளோட எல்லாம் வேலை செய்யிற நிலைமை இருக்கே என்று வெறுப்பு கொள்ளுவார்கள். எப்படி இதனை சமாளிப்பது.
- Be Respectful: யாராக இருந்தாலும், மரியாதை கொடுங்கள்.அவருக்கும்,உங்களுக்கும் பிரச்னை என்றால், முதலில் உங்களின் ஈகோ, பெருமை எல்லாவற்றியும் விட்டு விட்டு அவரை உங்கள் சமமாக நினையுங்கள். அவர் உங்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்றால் நாமும் அதே போல அவரை நடத்த வேண்டும் என்று இல்லை.
- Be assertive: நான் மேற்சொன்ன விசயங்களுக்காக அவர் நம்மை தவறாக நடத்தினால் நாம் செருப்பாகஇருக்க வேண்டியது இல்லை. மாறாக, நேருக்கு நேர் கோவப்படாமல் ஆனால் கண்டிப்புடன் உங்களுக்கு அவர் நடந்து கொள்ளும் விதம் பிடிக்க வில்லை என்று சொல்லுங்கள். முடிந்தால் அவரிடம் நேரில் பேசுவதை தவிர்த்து, ஈமெயில் அல்லது லெட்டெர் என்று மட்டுமே தொடர்ப்பு வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் நிலையை நன்றாகவும் அதே சமயம் உங்களை தவறாக எண்ணுபவரை பற்றி அனைவருக்கும் வெளிச்சம் போட்டும் காட்டும்.
முடிவாக, இதனை போன்ற நெகடிவ் எண்ணங்கள் வரும் பொது முளையில் கிள்ள பாருங்கள். ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இந்த வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை. உலகம் மிக பெரியது. உங்கள் மேல் மட்டுமே நம்பிக்கை வையுங்கள். உலகை வெல்லலாம்.
டிஸ்கி
இது IT தம்பதியினர் தற்கொலை செய்திக்கு பின்னர் வாசித்த விசயங்களை வைத்து எழுதியது.
7 comments:
நல்ல பதிவு. கருத்துகள் அருமை.
பதிவு நன்று! அனைவரும் அறிய வேண்டிய செய்தி!
நீங்கள் இங்கே சொல்லியது எல்லாம் சரிதான் ...ஆனால் , நடைமுறை வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் இதை கடை பிடிக்க முடியுமா என்பதில்தான் எனக்கு தெளிவில்லை ....அது குறித்து ஏதாவது டிப்ஸ் கொடுத்தாக்க நன்றாக இருக்கும்
@எனக்கும் தமிழ் எழுத வருமா
Thanks for the comment.
Actually most of the suggestions I have practically used and evaluated methods. I have been through job loss threat, and I have faced difficult coworkers and I have been through situations where I was denied of promotion.
Especially controlling anger, Controlling anxiety when job loss was near the horizon and dealing with difficult coworkers are my personal experiences. And I am not sure how much more level practical experiences you are expecting.
****இது நம்மை ஈசி டார்கெட்ஆக்கி விடும். அதாவது இவனை கோவப்பட வச்சிட்டா போதும், நாம் காரியத்தை சாதிச்சிடலாம் என்று நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை உபயோகிக்க கற்று கொள்வார்கள். யாருக்கும் உங்களை பிடிக்காது. இதனை எப்படி சமாளிப்பது.***
I think there are two kinds of people in the world..one who easily get provoked and another one who knows how to provoke. Thats the way they are naturally. Most of the time the latter would seem "more successful" than the former and the former is would be more honest than latter. The former might lose the battle because of the emotional outbursts if they do not have a "good boss" who understands the reason for such.
Adjusting to some co-workers is somewhat impossible, imho. We can not deal with some personalities. If you find the "co-workers" environment as very unhealthy, one can survive there if and only if the boss understands her/his productivity and work ethics. If the boss is a worthless guy, then it is better find another job and get the hell out of there. Adjusting to the environment and getting rid of your genuine anger at some instigators are some things I would not like to do in my life. This is a very big world, and so find some other place at the earliest and leave this place which is not right for you! Again this is my personal opinion. This is what I really do in my personal/professional life! I do have a job all the time until now! :)
@Varun
I will tell you a story that happened last month in my work place. There were frictions between me and my coworker. That person was intimidated by me and started complaining each and everything I did to my boss, without even discussing that with me and screaming in front of everyone with anger etc..etc.
As a result, everyone thought that person as a person who dont know how to behave or what they call as unprofessional person.
'
In order to tackle the situation, my boss called me and told me, "you have to work with that person. There seems to be some trust issue. How would you build trust? think like that..and analyze the situation as a third person, and try to solve the problem".
I let the situation cool off for 10 days and thought in detail how to tackle the situation. Although the person complained about me, I never complained to anyone but wrote down what are the steps I should take to tackle the situation.
I had all the communication by email and gave the person all the material or gave introductions etc etc..
I praised the person for the help and thanked genuinely. I took the person to coffee and asked how can i help the person so that he/she will be successful as well the team will be successful. Whenever there is a team meeting, I gave my honest opinion and emphasized the need for team work and how each team members contribution is must.
When I showed genuine interest, that person responded and reciprocated and I learnt a biggest lesson in my life. Analyzing the situation as a third person and not taking anything personally will solve any problems in work place.
IMHO, all problems are solvable if we dont react instantly and approach it as the third person.
****IMHO, all problems are solvable if we dont react instantly and approach it as the third person. ***
We are all opinionated. Our opinions are based on our "unique" experiences. The experiences are sometimes very unique to some individuals. It is true all problems are solvable. There is a solution for every problem. There are ways to convince some individuals and, there is a way to please anyone. No argument there! There is certainly a way to make some people to understand some things by going "their way".
Here is the problem.. Is that worth spending some of our precious time to solve a "silly problem"?
In research we approach a problem by a first route. But on the way, there are some steps which are tedious and time-consuming in this route. We get frustrated. One could certainly attain the target in six-month time and with lots of effort. Yes there is a solution to the problem and it is solvable by going in this route. Now one can also think of a completely different route to get to the same target with two-months of your time. Which way I should choose? Should I stick to the tedious one? Probably not. I would choose the latter approach although I can attain the target with my former route as well.
Now, Is that worth spending that much time? So, we give up the former one and take up the latter route to attain the target more efficiently. Now you should apply the same logic with different people and different complex personalities to deal with and convincing some issues in "their way". Is that worth explaining someone 2+2 = 4 in a very time-consuming approach(NICER WAY)? I am not going to live that long. So, I would find another person who gets it faster. Yes, the former one will understand that if I approach in the "correct way" or "his way". But there is nothing fascinating here FOR ME to explain something trivial for hours together to make this particular guy to understand. Again we are not talking about kids or people who have difficulty in understanding. We are talking about guys with "arrogance" and "lack of open-mind" in understanding simple facts! I would be careful in spending my valuable time to solve some worthless problems as I think it is not worth solving it!
Take it easy, mukundammA!
Post a Comment