இந்திய சீரியல்களில் பெண்களின் கேரக்டர்கள்
வெளியூருக்கு வந்த இடத்தில் "தெய்வம் தந்த வீடு" என்ற ஒரு விஜய் டிவி சீரியலும் அதன் ஒரிஜினல் ஆன "Saath Nibhaana Saathiya" பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே, என் இந்திய பயணத்தில், தினமும் "தெய்வம் தந்த வீடு" கொடுமையை பார்க்க நேர்ந்ததால், கதை ரொம்ப புரிய ரொம்ப நேரம் ஆக வில்லை (ஒரு வருடம் கழித்து பார்த்தாலும் கதை புரிய நிறைய நேரம் ஆகாது போல)
அதே போல, என் அம்மா இங்கு இருக்கும் போது மது பாலா என்ற சீரியல் பார்பார்கள். அதன் ஒரிஜினல் ஆன "Madhubala -Ek Ishq Ek Junoon" பார்க்க நேர்ந்தது
இது போன்ற சீரியல்களை பார்த்த பிறகு, தோன்றிய சிந்தனைகள் இங்கே.
எப்பொழுதும் இரண்டு வகையான கேரக்டர்கள் இந்த சீரியல்களில் இருக்கிறார்கள். வில்லி, ஹீரோயின்.
மிக சுலபமாக அவர்களை நாம் கண்டு பிடித்து விடலாம்.
எப்பொழுதும் புடவை கட்டி, பொட்டு வைத்து, வட இந்திய சீரியல்கள் எனில், தலையில் முக்காடு இட்டு இருக்க வேண்டும். நீண்ட சிந்தூரம் இட்டு இருக்க வேண்டும், அது ஹீரோயின்.
மாடர்ன் உடைகள், ஜீன்ஸ் போன்றவை அணிந்து இருந்தால், அது வில்லி.
குடும்ப நலன் மட்டுமே தன் நலன், குடும்ப நலனுக்காக தன் நலனை மட்டும் அல்லாமல் தன்னை மெழுகு போல தியாகம் செய்பவள் ஹீரோயின்.அதுவும், தெய்வம் தந்த வீடு சீரியலில் வரும் ஹீரோயின் போல, முட்டாளாக, வெகுளியாக இருக்க வேண்டும். அதுவே மிக சிறந்த பெண், அது ஹீரோயின்.. (ஐயோ, அப்பா, முடியல.)
வில்லி, எப்பொழுதும் தன் சுயநலம், தான் என்று இருப்பவள். தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதனை செய்வாள். யாரேனும் தப்பு செய்தால் அதனை பொறுமையாக கேட்டு கொள்ளாமல், தாங்கி கொள்ளாமல், உடனடியாக சண்டை விடுவாள். அது வில்லி.,
அதாவது இவர்களின் அகராதியில், கணவனே கண் கண்ட தெய்வம், தன குடும்பமே கோவில், பதி சொல்லே மந்திரம் என்று கேட்டு வீட்டுக்கு அடங்கி நடந்தால் தான் அவர் நல்ல குடும்ப பெண். அவர் தான் இந்திய சீரியல் ஹீரோயின்.
எதிர்த்து பேசினாலோ, தன்னம்பிக்கை கொண்டு முடிவு எடுத்தாலோ, தனக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதனை உடுத்தினாலோ, தப்பு செய்தால் சுட்டி காட்டினலோ, அவள் வில்லி.
வீட்டு சம்பிரதாயங்களை மறக்காமல் பின்பற்ற வேண்டும். இந்த விசயத்தில் வட இந்திய சீரியல்கள் மறக்காமல், கர்வா சவுத், எனப்படும் கணவருக்காக விரதம் இருக்கும் ஒரு பண்டிகையை பிடித்து கொள்ளுகிறார்கள்.
இன்னும் ஒரு சீரியல் பார்த்தேன், அதில் ஹீரோயின் கருப்பாக இருக்கிறாள் என்று யாருக்கும் பிடிக்க வில்லை, அதனால் அவள் எப்படி தன குடும்ப மதிப்பை பெறுகிறாள், அதற்க்கு என்ன என்ன கஷ்டங்கள் அனுபவிக்கிறாள், இதுவே சீரியல். கிட்ட தட்ட எல்லா சீரியல்களும் மாமியார் மருமகள், நாத்தனார் பிரச்சனைகள், அதில் வரும் சிறு சிறு மனஸ்தாபங்கள் என்று மட்டுமே செல்லுகின்றன.
இந்திய பெண்களை எங்கே எடுத்து செல்லுகின்றன இந்த சீரியல்கள் எல்லாம். என்ன சொல்ல வருகின்றன இந்த சீரியல்கள் எல்லாம். இது தான் உண்மை நிலையா? உண்மையில் பெண்கள் இதனை தான் விரும்புகிறார்களா? பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் இவை மட்டும் தானா? வேறு பிரச்சனைகளே இல்லையா?
உண்மையில் நடக்கும் பிரச்சனைகளான, பெண் சிசு கொலைகளும், கற்பழிப்புகளும், வீட்டில் நடக்கும் வன்முறைகளும், வேலையில் நடக்கும் பாகுபாடுகளும், பிரிவினைகளும், மறுக்கப்படும் பேச்சு சுதந்திரங்களும்.....எப்பொழுது உண்மையான பிரச்சனைகளாக சீரியல்கள் பேச போகின்றன. அல்லது, அவை TRB ரேடிங் தராது என்று பேசபடுவதில்லையா? என்ன காரணமோ தெரியவில்லை.
ப்ளீசிங் க்ரீம்கள்
ஏன் இந்தியர்களுக்கு வெள்ளை தோலின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு, என்று என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் கேட்டார். ஆண் பெண் வித்தியாசம் இன்றி, "Fair and Lovely" போன்ற ப்ளீசிங் க்ரீம்கள் விளம்பரங்கள். 10 நாட்களில் சிகப்பழகு என்று. இது இந்தியா என்று மட்டுமே அல்ல, என்னுடன் வேலை பார்க்கும் கென்யா நாட்டை சேர்ந்த பெண் சொன்னதும் இது தான். அவளும் சிறு வயதில் இவற்றை போன்ற ப்ளீசிங் கிரீம் உபயோகித்ததாக சொன்னால். மாநிறம் அல்லது கருப்பு தோல் நிறத்தை கொண்ட பல நாட்டு பெண்களை நோக்கியும் இதனை போன்ற ஒரு விளம்பரங்கள் குறி வைத்து அறிவிக்க படுகின்றன. வெள்ளை தோல் மட்டுமே அழகு மற்றவை எல்லாம் இல்லை என்று.
சமீபத்தில் நியூ யார்க் டைம்ஸ் இல் படித்த செய்தி இது. ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் என்னும் நாட்டில் ஸ்கின் fairness கிரீம்கள் தடை செய்ய பட்டு இருக்கின்றன. அவை ஸ்கின் கான்செர் தூண்டும் என்று அறியப்பட்டதால் அவை தடை செய்ய பட்டன.
Photo Courtesy: http://nytlive.nytimes.com/womenintheworld/2015/05/12/another-african-nation-bans-popular-skin-whitening-creams/
என்னுடைய கடந்த பதிவில் சொன்னது போல, இந்த ப்ளீசிங் கிரீம்கள் எல்லாம், வெள்ளை தோல் மட்டுமே அழகு என்று மக்களை மூளை சலவை செய்து இருக்கிறார்கள். உண்மையில் இவை மெலனின் அளவை கட்டுபடுத்துவதன் மூலம், வெளிர் நிறத்தை தர முயன்றாலும், அதன் மூலம் ஸ்கின் கான்செர் பாதிப்பை மட்டுமே அவை அதிக படுத்தும்.
இந்தியாவில் எப்பொழுது சிகப்பு தோல் மோகம் தீர்வதோ, இது போன்று ஒரு தடை ப்ளீசிங் க்ரீம் களுக்கு நடக்குமோ..
டிஸ்கி
இந்திய சீரியல்கள் பற்றி என்னுடைய கருத்தை மட்டுமே இங்கு பதிந்து இருக்கிறேன். பொதுப்படையான கருத்து அல்ல இது.
நன்றி.
4 comments:
வெள்ளை நிறத்தில் இருக்கும் மேலைநாட்டினரிடமும் கருப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய கிரிம்களை விற்கமுடியாது. இந்தியா போன்ற மாநிற மேனியுடையவர்களிடம்தான் விற்கமுடியும். அதனால்தான் மீண்டும் மீண்டும் வெள்ளை அழகு என்று போதிக்கப்படுகிறது.
சரியான பதிவு. பாராட்டுக்கள்.
வெள்ளையோ மாநிறமோ கருப்போ எல்லாமே இயற்கையின் மெலனின் செய்யும் வர்ணம் என்பது புரியாதவரை இதுபோன்ற அபத்தங்கள் நிற்காது.
தமிழ் சீரியலில் வில்லி என்றால் எப்போதும் ஏதொ ஒரு நாயோடு செல் போனில் பேசிக்கொண்டு இருக்கவேண்டும்!
போட்டு தாக்கிட்டீங்க. சன் டிவியில் ரம்யா கிருஷ்ணின் 'வம்சம்' என்று ஒரு சீரியல் . அபத்தத்தின் உச்சம்
Post a Comment