Wednesday, December 22, 2010

தி டின்னெர் கேம் , பீஜா பிரை & ஏப்ரல் பூல்






ஒரு வீடு, அதற்குள் இருவர், அதில் ஒருவருக்கு முதுகு வலி, இன்னொருவர் சற்று வெகுளியான மனிதர். இதுதான் கதை களம். இதனை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள காமெடி படம். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் அளவு காமெடி. நான் சொல்வது நேற்று நாங்கள் பார்த்த பிரெஞ்சு படமான Le dîner de cons' பற்றி.

இந்த வெகுளியை தங்கள் நண்பர்கள் நடத்தும் டின்னெர் பார்டிக்கு அழைத்து செல்வதே முதுகுவலிகாரரின் நோக்கம். அங்கு, அவரவர் உடன் அழைத்து வரும் வெகுளி/முட்டாள்கள் அனைவருடனும் பேச விட்டு கலாய்த்து அதில் ஒருவருக்கு "சிறந்த முட்டாள்" என்று பட்டம் கொடுப்பார்கள். இது பற்றி டின்னெர் முடியும் வரை அழைத்து வரப்படும் வெகுளிகளுக்கு தெரியாது.

அந்த டின்னேர்க்கு அழைத்து செல்வதற்கு முன் முதுகு வலி ஏற்பட்டு பாடாய்படுத்த, அவர் மனைவி அவரை விட்டு விட்டு செல்ல, இன்கம் டாக்ஸ் காரர் வீட்டுக்கு வர என்று வரிசையாக எல்லாமே தப்பாய் முதுகு வலிகாரருக்கு நடக்க, ஒரே சிரிப்பு தான்.


ஆங்கிலத்தில் இந்த படத்தின் பெயர் 'தி டின்னெர் கேம்' . சப் டைட்டில் உதவியுடன் நாங்கள் அந்த படம் பார்த்தாலும், சப் டைட்டில் தேவையே இல்லை என்று சொல்லுமளவு François Pignon ஆக நடித்த Jacques Villeret அவர்களின் நடிப்பு. அவரின் சொட்டை தலையும் அவர் முக பாவனைகளும் பார்த்தாலே சிரிப்பாய் வரவழித்தது. முதுகு வலியுடன் Pignon கொடுக்கும் தொல்லைகளையும் பொறுத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நடிக்கும் கதாபாத்திரத்தில் Thierry Lhermitte நடித்திருந்தார்.

நான் பிரெஞ்சு படங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை ஆயினும் சிரித்து சிரித்து வயிறு வலி வந்தே விட்டது. இப்படி நல்ல படத்தை நம்ம மக்கள் காப்பி அடிக்காம இருக்க மாட்டாங்களே என்று தேடிப்பார்த்ததில் கண்டுபிடித்தது இது தான். ஹிந்தியில் 'Bheja Fry' அப்புறம் மலையாளத்தில் "ஏப்ரல் பூல்" இரண்டுமே அன் அபீசியல் காப்பி ஆப் தி டின்னெர் கேம் படம்.


படங்கள்: நன்றி இணையம்


4 comments:

Thekkikattan|தெகா said...

ஹிந்தியில் 'Bheja Fry' அப்புறம் மலையாளத்தில் "ஏப்ரல் பூல்" இரண்டுமே அன் அபீசியல் காப்பி ஆப் தி டின்னெர் கேம் படம்.//

கையோட அந்த ஆராய்ச்சியிம் பண்ணினது நல்லது. இல்லன்னா, இத படிக்கிற அந்த துறையாளுங்க யாராவது ஓவர் எக்ஸைட் ஆயி அட அப்படியான்னு திரும்பவும் ஷுட்டிங் போட ஆரம்பிசிருவாங்க... :))

பத்மா said...

thanks for sharing

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) என்னிக்காச்சும் டீவியில் வந்தா பாக்கறேன்..

ஹுஸைனம்மா said...

மலையாளத்துல வந்திருக்குன்னா பாக்கணும். சிரிச்சுட்டுச் சொல்றோம்.