Friday, August 20, 2010

பட்டிக்காட்டானும் புத்தகக்கடையும்

எப்படியாவது தேவாரம், பெரியபுராணம் மற்றும் பிரபந்தம் இவற்றை இசைத்தட்டுகளாக வாங்கிவிட வேண்டும் என்பது ரங்கமணியின் விருப்பம். அதே போல பெரியபுராணம் உரைநடையாக கிடைத்தால் முகுந்துக்கு நாயன்மார்கள் வாழ்க்கையை கதையாக சொல்லலாம் என்று நினைத்து கொண்டிருந்தோம். அதனால் இந்த இந்தியா பயணத்தில் இவை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஒரு to do லிஸ்ட் போட்டு வைத்து இருந்தோம்.

முதலில் நாங்கள் கோவில் என்று சென்றது தில்லை நடராஜர் கோவிலுக்கு அங்கு இரவில் சென்றதால் கோவில் கடைகளில் அதிகம் தேட முடியவில்லை. பிறகு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கடைகளிலும் விசாரித்தோம், அங்கும் தேவார ஓரிரண்டு பதிகங்கள் அடங்கிய இசைத்தட்டுகள் mp3 வடிவில் கிடைத்தன என்றாலும் முழுமையாக கிடைக்க வில்லை.

தேவார பதிகங்களாவது இசைத்தட்டுகள் வடிவங்களில் கிடைத்தன ஆனால் பெரியபுராணம் கிடைக்கவேயில்லை. திருவெண்காடு, திருக்கருகாவூர் மற்றும் நாங்கள் சென்ற வேறு சில சிவ ஸ்தலங்களிலும் விசாரித்து பார்த்து விட்டோம். பெரியபுராணம் கிடைக்கவில்லை. முடிவாக சென்னையில் உள்ள பெரிய புத்தக கடைகளில் விசாரித்து பார்போம், அதே போல சென்னையில் இருக்கும் பெரிய இசைத்தட்டுகள் விற்கும் கடைகளில் கிடைக்குமா என்று பார்போம் என்று வந்து விட்டோம்.

சென்னை வந்தவுடன் Higgin botham's மற்றும் வேறு சில புத்தக கடைகளிலும் விசாரித்து பார்த்ததில் உரைநடையாக இவை கிடைக்கவேயில்லை.

சிட்டி சென்டரில் இருக்கும் லேண்ட்மார்க் கடையில் எல்லா இசைத்தட்டுகளும் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். சரி அங்கு சென்று பார்க்கலாம் என்று சென்றோம்.

சிட்டி சென்டரில் இருக்கும் கடைகளையும் அங்கு வந்து செல்லும் இளைஞர் கூட்டத்தையும் பார்த்த பிறகாவது எங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டிருக்க வேண்டும். ஆனால் விடாப்பிடியாக ரங்கமணி லேண்ட்மார்க் சென்று தேடோ தேடு என்று தேடினார். எந்த தமிழ் இலக்கியங்களும் அங்கு இல்லை.

விசாரித்து வருகிறேன் என்று சொல்லி அவர் சென்று ஹெல்ப் டெஸ்கில் இருக்கும் ஒருவரிடம், "தேவாரம், CD வச்சிருக்கீங்களா?” என்று கேட்க அங்கே இருந்தவர் சொன்னது “What is that?" .

இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம். யாராவது கிடைக்குமிடம் தெரிந்தால் சொல்லுங்கள்.

17 comments:

- யெஸ்.பாலபாரதி said...

சென்னையில எல்லா இடமும் தேடினீங்களே.. Giri Trading Agency-ன்னு மைலாப்பூர்ல ஒன்னு இருக்கே.. அங்க போனீங்களா? ஆன்மீக தொடர்புடைய அனேக விசயங்கள் கிடைக்கும். அவங்களுக்கு வெப் சைட் கூட உண்டு. கூகிளாண்டவரை கேட்டிங்கன்னா சொல்லுவார். :))

settaikkaran said...

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை மறந்துட்டீங்களே? :-) விசாரித்துச் சொல்கிறேன்! டோண்ட் வொரி! சிவமயம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெரிய புராணம் சொற்பொழிவாக நாலு கேசட் எங்க வீட்டில் இருக்குது.. வாணி கேசட்ஸ்.. ரொம்ப நாள் முன்ன சென்னையில் தான் வாங்கினோம். கடை பேரு மற்ந்துபோச்சு.. ஆனா கிரி ல இருக்கலாம் அங்க தான் குவிச்சி வச்சிருக்காங்க ஆன்மீக ஐட்டம்ஸ்..

Chitra said...

விசாரித்து வருகிறேன் என்று சொல்லி அவர் சென்று ஹெல்ப் டெஸ்கில் இருக்கும் ஒருவரிடம், "தேவாரம், CD வச்சிருக்கீங்களா?” என்று கேட்க அங்கே இருந்தவர் சொன்னது “What is that?" .


.......அதானே..... "what is that?"
:-(

Anonymous said...

சென்னைல கிரில நானும் வாங்கியிருக்கேன்.

கோமதி அரசு said...

முகுந்த் அம்மா,குழந்தைக்கு நாயன்மார்,ஆழ்வார்கள் கதை சொல்ல நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


சென்னை மைலாப்பூர் கிரி கடையில் கிடைக்கும்.

பாலபாரதி,முத்துலெட்சுமி சொன்ன மாதிரி ஆன்மீக சம்பந்தப் பட்ட எல்லாம் கிடைக்கும்.

அமைதி அப்பா said...

"தேவாரம், CD வச்சிருக்கீங்களா?” என்று கேட்க அங்கே இருந்தவர் சொன்னது “What is that?" .//

"பழைய போலிஸ் ஆபிசர் பற்றிய சி.டி.யா?" ன்னு கேட்காமல் இருந்தாங்களே!

நல்ல பகிர்வு.

குட்டிப்பையா|Kutipaiya said...

cd patriya idea ilai - aanal puthaga vadivam kandipaga 'newbooklands' T.ngr(http://www.newbooklands.com), allathu bharathi puthagalayam, teynampet'il kidaika niraya vaaipullathu.
cd'yum kuda kidaikalam.

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் மேடம் (நமக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம் மேடம் )

முகுந்த்; Amma said...

@யெஸ்.பாலபாரதி ♠ said...

//சென்னையில எல்லா இடமும் தேடினீங்களே.. Giri Trading Agency-ன்னு மைலாப்பூர்ல ஒன்னு இருக்கே.. அங்க போனீங்களா? ஆன்மீக தொடர்புடைய அனேக விசயங்கள் கிடைக்கும். அவங்களுக்கு வெப் சைட் கூட உண்டு. கூகிளாண்டவரை கேட்டிங்கன்னா சொல்லுவார். :))//

இல்லீங்க, கிரி பத்தி எனக்கு தெரியாது, முன்னமே தெரிஞ்சிருந்தா அங்க போயி எல்லாத்தையும் வாங்கியிருப்பேன். வெப்சைட் பார்த்தேன், ரொம்ப நன்றிங்க. ஆர்டர் பண்ணினா இங்க அனுப்புவாங்கலான்னு தெரியல, முயற்சி பண்ணி பார்கிறேன்.

நன்றி.

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன் said...

//சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை மறந்துட்டீங்களே? :-) விசாரித்துச் சொல்கிறேன்! டோண்ட் வொரி! சிவமயம்!//

மதுரையில சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் தாங்க தேவாரம் சில பதிகங்கள் அடங்கிய இசைத்தட்டு வாங்கினேன். ஆனா, எல்லாமே கிடைக்கல.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி/muthuletchumi said...

//பெரிய புராணம் சொற்பொழிவாக நாலு கேசட் எங்க வீட்டில் இருக்குது.. வாணி கேசட்ஸ்.. ரொம்ப நாள் முன்ன சென்னையில் தான் வாங்கினோம். கடை பேரு மற்ந்துபோச்சு.. ஆனா கிரி ல இருக்கலாம் அங்க தான் குவிச்சி வச்சிருக்காங்க ஆன்மீக ஐட்டம்ஸ்..//

எங்க வீட்டில பெரியபுராணம் புலவர் கீரன் அவர்களோட காசெட் இருக்குங்க, அதில நாலு நாயன்மார்கள் கதையை அற்புதமா அழகு தமிழ்ல சொல்லி இருப்பார், அதனாலேயே தான் இன்னும் சில வாங்கனும்னு நினைச்சோம்.

கிரியில தேடி பார்குறேங்க, கிடைக்கும்னு நினைக்கிறேன்.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

@chitra
//.......அதானே..... "what is that?"
:-(
//

நன்றிங்க

@சின்ன அம்மிணி

//சென்னைல கிரில நானும் வாங்கியிருக்கேன்.//

தேடி பார்குறேங்க, கிடைக்கும்னு நினைக்கிறேன்,நன்றிங்க.

முகுந்த்; Amma said...

@கோமதி அரசு said...

//முகுந்த் அம்மா,குழந்தைக்கு நாயன்மார்,ஆழ்வார்கள் கதை சொல்ல நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.//

இங்க இருக்குகிற குழந்தைகளுக்கு இப்படி ஏதாவது சொல்லி தாம்மா நம்ம கலாச்சாரத்தை நினைவு படுத்த வேண்டி இருக்கு. இல்லாட்டி சீக்கிரமே அவங்க அமெரிக்க கலாச்சாரத்தை பிடிச்சிகிறாங்க.

நன்றிம்மா.

முகுந்த்; Amma said...

@அமைதி அப்பா said...

//"பழைய போலிஸ் ஆபிசர் பற்றிய சி.டி.யா?" ன்னு கேட்காமல் இருந்தாங்களே!

நல்ல பகிர்வு.//

என்னங்க பண்ணுறது உலகம் எங்கயோ போகுது. :(

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

@kutipaiya said...

//cd patriya idea ilai - aanal puthaga vadivam kandipaga 'newbooklands' T.ngr(http://www.newbooklands.com), allathu bharathi puthagalayam, teynampet'il kidaika niraya vaaipullathu. cd'yum kuda kidaikalam.//

'newbooklands' நான் போகலைங்க, நீங்க சொன்ன வெப்சைட் ல தேடி பார்க்குறேன்.

நன்றிங்க.

@மங்குனி அமைசர் said...

//ஆஜர் மேடம் (நமக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம் மேடம் )//

வாங்க மங்குனி அமைச்சர், எனக்கும் கூட அப்படிதாங்க ரொம்ப நாளா இருந்தது, என் பையனுக்காக வேற வழியில்லாம தேடி தேடி படிக்க, கேட்க்க ஆரம்பிச்சிருக்கேன்.


நன்றிங்க.

அரசூரான் said...

முகுந்த் அம்மா, ப்ராஜெக்ட் மதுரை இணையத்தில் உரை நடை நிறைய இருக்கு, தேடிப் பாருங்களேன்.
http://pm.tamil.net

அகர வரிசையில் இருக்கு, ப, பா-னு தொடர்ந்து கீழே பாருங்கள். பெரிய புராணம் வரும்.
http://pm.tamil.net/pub/pm0209/periya1.pdf