Saturday, March 3, 2012

சரக்கடிடா மச்சான்!!!!

மனதில் கவலையா?
பொண்டாட்டி சொல்லற பேச்சு கேக்க மாட்டேன் என்கிறாளா?,
காதலில் தோல்வியா?
காதலி கலட்டி விட்டுட்டாளா? 

சரக்கடி மச்சான்!!

பண பிரச்சனையா?,
கடன்காரன் தொல்லையா?,
பிசினஸ் லாஸ் ஆ?
வேலை போயுடுச்சா?
சாப்பாட்டுக்கு வழியில்லையா?

சரக்கடி மச்சான்!!!

பர்த்டே பார்ட்டி ஆ?
கெட் டுகெதர் ஆ  ?
பேசுலோர் பார்ட்டி ஆ?
பிசினெஸ் டீலிங் ஆ?
பதிவர் சந்திப்பா?

சரக்கடி மச்சான்!!!

நீ பெரிய அப்பாடக்கருன்னு உலகத்துக்கு காட்ட ஆசை பட்ட,
நல்லா தண்ணி அடிச்சு மட்டையாகிட்டு,
அப்புறம் எழுந்திருச்சு , எவ்வளோ தண்ணி அடிச்ச,
எத்தனை மணி வரைக்கும் அடிச்ச,
என்ன சைடு டிஷ் சப்பட்ட?,
யார் கூட சேர்ந்து தண்ணி அடிச்ச?
அவங்க வயசு என்ன?
எவ்வளவு தண்ணி அடிச்சாலும் வாந்தி எடுக்காம இருக்க என்ன என்னசெய்யிற?
இப்படி எல்லாத்தையும் ஒன்னு விடாம எழுதணும். 
அப்படி மட்டும் எழுதி blog ல 
போட்டுடு, அப்புறம் நீ பெரிய அப்படக்கர் தான்..

உன்னை பாலோ பண்ணினிட்டு இருக்கிற சில அடிபிடிகள்...ஆகா, ஐயூ... சான்ஸ் இல்லை அப்படின்னு உன்னை புகழ்ந்துட்டு அவங்களும் தண்ணி அடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. அப்புறம்
என்ன உனக்கும் ஊசியில சரக்கு கிடைச்சிடும்...அதனால

சரக்கடி மச்சான்!!!

பி.கு: இப்படி எல்லாத்துக்கும் சரக்கடி, சரக்கடின்னு சொல்லிட்டு இருந்த என் சித்தி பையன், போன மாதம் ஒரு பார்டியில நல்ல சரக்கடிச்சுட்டு ,motorbike la போயி மோதி இறந்து விட்டார். இப்போது அவர் மனைவியும், இரண்டு குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

30 comments:

Costal Demon said...

கொடுமையான விசயம். என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் திருமணம் முடிந்த‌ ஒரு வருடத்தில் பதவி உயர்வு கிடைத்து புதிய அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய செல்லும் போது சரக்கடித்து விட்டு பைக்கில் சென்று கடைசியில் ஒரு காலை எடுக்கும் படி ஆகிவிட்டது. இந்தப் பதிவைப் படிக்கும் பெரும்பாலானோருக்கு இதுபோன்ற நினைவு கிளறல்கள் இருக்கும். துரதிஷ்டவசமான நிகழ்வு.

ப.கந்தசாமி said...

இது போல் பல சம்பவங்கள் நடந்த பின்பும் பலர், அதெல்லாம் எனக்கு நடக்காது என்று தெனாவெட்டாகத் திரிவார்கள், அவர்களுக்கு எமதூதன் வரும் வரையிலும்.

இதுதான் உலகம்!

Yaathoramani.blogspot.com said...

போதைக்காரர்களின் மூளையில்
தண்ணீர் அடித்திருக்கிறீர்கள்
தெளிவடைகிறார்களா எனப் பார்ப்போம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

இப்ப எல்லாத்துக்கும் சரக்குதானா :(

Avargal Unmaigal said...

///இப்படி எல்லாத்துக்கும் சரக்கடி, சரக்கடின்னு சொல்லிட்டு இருந்த என் சித்தி பையன், போன மாதம் ஒரு பார்டியில நல்ல சரக்கடிச்சுட்டு ,motorbike la போயி மோதி இறந்து விட்டார்//

முதலில் உங்கள் சித்தி பையன் இறந்தற்கு ஆழ்ந்த வருத்தங்கள். எதிலும் நிதானமும் பொறுப்பு உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தால் இந்த மாதிரி செயல்களை தடுத்து நிறுத்தலாம். அடுத்தாக சரக்கு அடித்தது ஒரு காரணமாக இருக்காலாம் ஆனால் அது மட்டும் முழுகாரணமாக இருக்க முடியாது என்பது எனது கருத்து, உங்கள் சித்தி பையன் பார்ட்டிக்கு போய் இருந்தான் என்று சொல்லி இருக்கிறிர்கள் பார்ட்டியில் அவர் கலந்து இரவில் மிக லேட்டாக வருகையில் தூக்க கலக்கத்தில் பைக் ஒட்டிய காரணத்தால் அவர் ஆக்ஸிடண்டில் இறந்திருக்கலாம் அல்லவா அல்லது இரவு நேரத்தில் ரோட்டில் ஒட்டி வரும் போது ரோட்டில் கிடந்த கல் அல்லது பள்ளம் காரணமாக ஸ்லிப்பாகி அதனால் ஆக்ஸிடெண்ட் ஆகி இறந்திருக்கலாமே அதை எல்லாம் கவனத்தில் எடுத்து கொள்ளாமல் மொட்டைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடுவது போல குடித்ததினால் மட்டும் இறந்தான் என்று சொல்வது தவறுதானே.

உங்கள் கூற்று படி குடித்ததினால்தான் ஆக்ஸிடெண்டில் சாகிறார்கள் என்றால் குடிக்காதவர்கள் ஆக்ஸிடெண்டால் சாவது இல்லை என்று எந்த புள்ளி விபரத்தை வைத்து முடிவு செய்கிறிர்கள் என்பதை உங்களுக்கு நேரம் கிடைத்தால் விளக்கமாக கூறலாமே.

எனது கருத்து அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ஆகும் அது குடி ஆனாலும் சரி வேறு எதுவானாலும் சரி அடுத்தவன் செய்கிறான் அல்லது சொல்கிறான் என்பதற்காக எதுவும் செய்யாமல் தனக்கு எது நல்லது தன் உடம்பிற்கு எது நல்லது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ற படி செய்தால் நமக்கும் நல்லது நம் குடும்பத்திற்கும் நல்லது என்பது எனது கருத்து.

அதுமட்டுமல்லாமல் அளவோடு குடித்தால் உடலுக்கு நல்லதுதான் என்பது எனது கருத்து. குடிக்கு மட்டுமல்ல வேறு எதற்கும் அடிக்ட் ஆகாமல் இருக்க வேண்டும்.

குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று நான் சொல்லவில்லை. உங்களை போல ஆராய்ச்சியில் ஈடுபட்டு கருத்துக்களை வெளியிட்டவர்கள் சொன்னதுதான் அதிலும் உலகின் மிக தரமுள்ள யூனிவர்சிட்டியில் Harvard Medical School வெளியிட்ட ஆராய்ச்சியில் வெளியிட்ட ரிசல்ட்டை படித்து பார்த்தால் அதில் உள்ள உண்மை உங்களுக்கு புரியும். அல்லது ஆராய்ச்சி செய்பவர்கள் தவறான முடிவை வெளியிடுகிறார்களா என்பதை நீங்கள் ஆராய்ந்து சொல்லுங்கள்.

முகுந்தம்மா நான் நீங்கள் போட்ட பதிவிற்கு என் கருத்தை சொல்லி இருக்கிறேன். நான் சொல்லியது ஏதாவது உங்கள் மனத்தை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்வும். Dr. Anthony Komaroff, Harvard Medical School டாக்டர் குடிப்பதை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை கவினிய்ங்கள் அவர் தவறாக சொல்லி இருப்பதை நீங்கள் நிருபித்தால் நான் உங்களுடன் சேர்ந்து அவருக்கு எதிராக லிகல் ஆக் ஷன் எடுப்போம் http://www.askdoctork.com/is-moderate-drinking-healthy-20111017273 இங்கே சென்று படிக்கவும். அதுமட்டுமல்லாமல் உன்னும் நிறைய ஆர்டிக்கல் இந்த மெடிக்கல் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனதிற்கு கொண்டு வருகிறேன் .

என் கருத்தை சொல்லவதினால் என்னை தவறாக எடித்து கொள்ள மாட்டிர்கள் என நினைக்கிறேன், நன்றி வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

//பர்த்டே பார்ட்டி ஆ?
கெட் டுகெதர் ஆ ?//

நான் இந்த ரெண்டு காரணத்திற்காகதான் சர்க்கு அடிக்கிறேன்.

இப்பதான் புரியுது அடிப்பதற்கு இவ்வளவு காரணம் இருக்கிறது என்பது. நீங்கள் சொன்ன இவ்வள்வு காரணதிற்கு சர்க்கு அடித்தால் சிக்கிரம் எமலோகம் போய் சேர வேண்டியதுதான்

Avargal Unmaigal said...

//மனதில் கவலையா?///
இளைஞனாக இருந்த போது எவடா நமக்கு மனைவியாய் வந்து உசிரை எடுக்க போறா என்ற் கவலை இருந்துச்சு

///பொண்டாட்டி சொல்லற பேச்சு கேக்க மாட்டேன் என்கிறாளா?,//
நாங்க எல்லாம் மதுரைக்காரைய்ங்க பொண்டாட்டி கேட்குறதை மட்டும் தான் சொல்வோம்

//காதலில் தோல்வியா?//
காதலித்தவளை கல்யாணம் பண்ணிவிட்டால் காதல் தோல்வி அடைந்துவிடுவதாகதானே அர்த்தம்

காதலி கலட்டி விட்டுட்டாளா?
அவ எப்படா கலட்டிவிடுவா என்று அல்லவா என்று எதிர்பார்த்து கொண்டிடுக்கிறேன்/

கோமதி அரசு said...

இந்த பதிவை படிக்கும் போது மனது மிகவும் வேதனைப் படுகிறது.

ஹுஸைனம்மா said...

மிகவும் வருத்தமான விஷயம் முகுந்த் அம்மா. குடிப்பவர்கள் எல்லாமே, இப்படித்தான் ஒரு காரணம் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நஞ்சில் கொஞ்சம் என்ன, நிறைய என்ன? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.

இதிலே இன்னும் கலங்கச் செய்வது என்னவென்றால், குடிப்பது தப்பில்லை என்பதான எண்ணம் சமூகத்தில் விதைக்கப்பட்டு வருவதுதான். இன்றைய மொடாக் குடிகாரர்கள், செயின் ஸ்மோக்கர்கள் எல்லாருமே ஆரம்பத்தில் கொஞ்சமாக ஆரம்பித்தவர்கள்தான்.

அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.

பாச மலர் / Paasa Malar said...

கொடுமை....பல குடும்பங்களில் இதேதான் ப்ரச்னை..விடுத் தொலைக்கத்தான் முடியவில்லை..
சரக்கடிச்சால் வண்டியாவது ஓட்டாமல் இருக்கக் கூடாதா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் :(

அமைதி அப்பா said...

உங்கள் சித்தி பையனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இப்படி எழுதி நமது மனப்பாரத்தை இறக்கி வைக்க மட்டுமே முடியும்.

விளையாட்டுப் பையனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, உனக்கு ஆபத்து வந்தால் சுடு என்பது போல்தான் நம்மவர்களுக்கு அளவோடு குடி என்பது!

வவ்வால் said...

விபத்தில் இறந்துவிட்டார் என்பது வருத்தம் தருகிறது. விபத்துக்கும் மதுவும் ஒரு காரணம் மற்றது அவரின் அறிவற்ற தனம். குடித்தால் வண்டி ஓட்டக்கூடாது, வண்டி ஓட்ட வேண்டுமெனில் குடிக்க கூடாது என்ற காமன் சென்ஸ் கூட இல்லாதது.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர் உயிரை பணயம் வைப்பதோடு அல்லாமல்ல் அப்பாவி பாதசாரிகள்,பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் தீங்கானவர்.குடிப்பதோ ,குடித்து விட்டு நடந்தோ செல்வதோ குற்றமில்லையே ,குடித்து விட்டு வண்டி ஓட்டுவது தான் குற்றம்.

குடித்து விட்டால் வண்டியை தொடவே கூடாது, அப்படியே பயணம் செய்ய வேண்டுமென்றாலும் ஆட்டோவிலோ , கால் டாக்சியிலோ செல்ல வேண்டும்.நான் எப்பொழுதும் இதை தான் செய்வேன். மற்றவர்களையும் வண்டி ஓட்ட வேண்டாம் என்று தடுத்துவிடுவேன். மீறி அடம்பிடிப்பவர்களை நன்றாக தெளிய வைத்து பின்னரே போக சொல்வேன். எல்லாம் வேஸ்டா போச்சு என்று கடுப்பாவார்கள் :-))
****
ராம்குமார்,

// புதிய அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய செல்லும் போது சரக்கடித்து விட்டு பைக்கில் சென்று கடைசியில் ஒரு காலை எடுக்கும் படி ஆகிவிட்டது. //

அலுவலகத்துக்கு போகும் போதும் சரக்கடிச்சுட்டு போகிறார் என்றால் அவர்களை எல்லாம் என்னய்யா செய்வது, அப்படிப்பட்டவர்கள் வேலை செய்யும் இடம் அலுவலகமா இல்லை டாஸ்மாக் பாரா :-))

ஆமினா said...

வேதனையான விஷயம் தான் :'(

Avargal Unmaigal said...

/// நஞ்சில் கொஞ்சம் என்ன, நிறைய என்ன? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.///

இந்த வரிகளை குடிப்பவர்களுக்காக சொல்லுகிறார்கள்..சரி பெரியவங்க சொன்னா எல்லாம் சரிதான். இதே பெரியவர்கள் ஆடு மாடு தின்பவர்களையும் கூப்பிட்டு இதை சொல்லலாமே. இறைச்சியை சாப்பிட்டு அதனால் உடம்பில் கொழுப்பு சேர்ந்து ஹார்ட்டாக் வந்து இறப்பவர்கள் எத்தனை பேர் என்பது நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பது இல்லையே அப்போது இறைச்சி சாப்பிடுபவர்களை பார்த்து இந்த குடிகாரர்களிடம் சொல்வது போல நஞ்சில் கொஞ்சம் என்ன, நிறைய என்ன? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் என்று சொல்ல மறக்கிறார்கள். காரணம் இறைச்சி அவர்களுக்கு பிடித்து போனதினாலா அதை பற்றி பேசுவது இல்லை இறைச்சியாகட்டும் சரக்கு ஆகட்டும் அல்லது அமிர்தமே ஆகட்டும் எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சுதான் என்பது என் வாதம்

மதங்கள் குடிப்பது தவறு என்று சொல்லிவருகிறது. அதனால் குடிப்பவர்கள் அதை நிறுத்தி தங்கள் மதங்களில் சொல்லியபடி நடந்து அதை கடைபிடியுங்கள் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்

அடுத்தாக நான் சொல்லவருவது நான் முதலில் கொடுத்த பின்னுட்டத்தில் Dr. Anthony Komaroff, Harvard Medical School டாக்டர் குடிப்பதை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் படியுங்கள் அதை படித்து அப்புறம் உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள் அதைவிட்டுவிட்டு கடிவாளம் போட்ட குதிரை போல ஒரே நோக்கில் கருத்து சொல்ல வேண்டாம் http://www.askdoctork.com/is-moderate-drinking-healthy-20111017273 இங்கே சென்று படிக்கவு

ஹுஸைனம்மா said...

//Avargal Unmaigal said...

/// நஞ்சில் கொஞ்சம் என்ன, நிறைய என்ன? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.///

இந்த வரிகளை குடிப்பவர்களுக்காக சொல்லுகிறார்கள்..சரி பெரியவங்க சொன்னா எல்லாம் சரிதான். இதே பெரியவர்கள் ஆடு மாடு தின்பவர்களையும் கூப்பிட்டு இதை சொல்லலாமே.//

தம்பி, நான் சொல்லியிருப்பது ‘குடி’ என்கிற habit-ஐப் பற்றி. நீங்கள் சொல்லுவதோ, ’உணவு’ என்கிற necessity குறித்து!! நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

அசம்பாவிதம் நடந்தது வருந்தத்தக்கதுதான். ஆழ்ந்த அனுதாபங்கள்.

இங்கே, புது வருடக் கொண்டாட்டத்தின்போது, குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க, வேணும்ன்னா டாக்ஸி ஏற்பாடு செஞ்சு தரோம், இப்பவே புக் செஞ்சுக்கோங்க. நியூ இயர் பார்ட்டி முடிஞ்சப்புறம் பாதுகாப்பா வீடு போய்ச் சேரலாம்ன்னு பார் வசதியுள்ள ரெஸ்டாரண்டுகள் பேப்பர்லயே வெளம்பரம் கொடுத்துருந்தாங்க.. என்னத்தச் சொல்றது!!

முகுந்த்; Amma said...

அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு

நீங்கள் கொடுத்துள்ள தளத்தை சென்று பார்க்க நேர்ந்தது. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் ”ஒரு குறிப்பிட்ட அளவு குடிப்பதால் உடலுக்கு தீங்கு நேராது” என்றே.


ஆனால் குடி ஒரு அடிக்டிவ் பழக்கம்..அது ஏன் என்று பார்ப்போம்.

முதன் முதலில் ஒருவர் பீர் குடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.பீரில் உள்ள ஆல்கஹால் அளவு கிட்டதட்ட 4% மட்டுமே..ஆனாலும் அந்த புது “மருந்தை” ஜீரணிக்க நமது உடலிலுள்ள மூளையும்,ஈரலும் எதோ புதிதாக ஒரு வஸ்து வந்திருக்கிறது என்று நினைத்து புது முறையில் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

தினமும் ஒருவர் ஒரு பியர் அடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்..தினமும் மூளை அந்த வஸ்து இனிமே புதுசு இல்ல என்ற முடிவுக்கு வந்து விடும்.
அதனால் குடிப்பவருக்கு சில நாட்களுக்கு பிறகு ஒரு பியர் குடிப்பதால் எந்த “கிக்கும்” இருக்காது.

முகுந்த்; Amma said...

அந்த குடிமகன் சில நாட்களுக்கு பிறகு 1 பியர் என்பது போய் இரண்டு அடிக்க ஆரம்பிப்பார்.

பிறகு நாட்கள் செல்ல செல்ல..பியர் வேஸ்ட் என்று முடிவு கட்டி..அடுத்த நிலையான..ரம்,வைன், ஸ்காட்ச், ஸாம்பெயின், டெகீலா, வொட்கா..என்று...படிப்படியாக முன்னேறுவார்.

ஒரு பாட்டில் பியர் குடிப்பதற்க்கும், ஒரு ஷாட் வோட்கா குடிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு.. அளவை பொறுத்தவரை பியர் அளவு அதிகம் ஆனால் ஆல்கஹால் அளவு குறைவு. ஆனால் வோட்கா அளவு ரொம்ப கம்மி ஆனால் ஆல்கஹால் அளவு 40%..

முகுந்த்; Amma said...

தினமும் ஆல்கஹால் குடிப்பதால் நன்மை கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் ஒரு மாயை..அது குடிமகன் கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்த சொல்லும் சாக்கு.

சரி நான் தினம் குடிக்கும் ஆள் இல்லை எப்போதாவது குடிப்பவர் என்று சொல்பவரா..சரி..அந்த எப்போது என்பது எத்தனை நாள் இடைவெளி..

ஒவ்வொரு வாரமா..இல்லை ஒவ்வொரு மாதமா...இல்லை வருடத்திற்கு ஒரு முறையா..??

சரி இப்படி எப்போதாவது குடிப்பவர்..எவ்வளவு குடிக்கிறார் என்று பார்ப்போம்...

ஒருவர் ஒவ்வொரு வாரமும் ஒரு பார்ட்டியில் ஒரு பாட்டில் வைன் குடிக்கிறார் அல்லது 3 மார்கரிட்டா குடிக்கிறார் என்று வைத்து கொள்வோம்.. அப்போது அவர் குடித்திருக்கும் ஆல்கஹால் அளவு கிட்டதட்ட 100%..அந்த நிலை ஒவ்வொரு வாரமும் தொடர்கிறது என்று வைத்துக்கொள்வோம்

ஒரு வருடத்திற்கு பிறகு அவர் வாரத்திர்கு இரண்டு முறை சரக்கு என்று அவரை அறியாமல் மாறி இருப்பார்..

முகுந்த்; Amma said...

இதுவரை நான் சொன்னது ஒருவர் எந்தஒருவருடைய உந்துதலும் இல்லாமல் குடித்தாலே எப்படி அவருடைய சொந்த மூளையே அவரை மாற்றி விடும் என்பதே..

இதனை தவிர..peer pressure..எனப்படும் ஃபிரெண்ட் பிரெஸ்ஸ்ர்..அதுவும் கும்பலாக குடிக்கும் போது ஏற்படுவது..இந்த நிலையில் எவ்வளவு குடிக்கிறோம் என்று தெரியாமலே குடிப்பவர்களே அதிகம்..

Avargal Unmaigal said...

//தம்பி, நான் சொல்லியிருப்பது ‘குடி’ என்கிற habit-ஐப் பற்றி. நீங்கள் சொல்லுவதோ, ’உணவு’ என்கிற necessity குறித்து!! நன்றி.//
மனிதனுக்கு ஹார்ட்டடாக்கை ஏற்படுத்தும் இறைச்சி என்கிற ’உணவு’ necessity என்பதை உங்கள் மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். நன்றி. என்னை பொருத்தவரை 'குடி' & இறைச்சி என்பது சமமே. குடி மைண்டுக்கு 'கிக்' கொடுக்குது 'இறைச்சி' நாக்குக்கு ஒரு கிக் அதவாது ஒரு சுவையை கொடுக்குது இரண்டையுமே அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கெடுதலே.

ஹசினம்மா இது மதத்திற்கு எதிரனாது அதனால் குடிக்க கூடாது என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த கருத்தை நான் உங்கள் காலை தொட்டு 100% நீங்கள் சொல்வது சரியென்று ஒத்துகொள்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் வேறு எந்த காரணமும் ஒத்துகொள்வதாக இல்லை.

முகுந்த்; Amma said...

இப்போது கண்டதுக்கெல்லாம் “தண்ணி பார்ட்டி” தான்..இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா சொல்லுங்கள்..அடுத்தவருடன் போட்டி போட்டுக்கொண்டு குடிப்பவர்கள் உண்டா இல்லையா..


ஒருவர் குடித்தே ஆக வேண்டும் என்றால் வவ்வால் அவர்கள் சொன்னது போல..தயவு செய்து வண்டி ஓட்டாதீர்கள்..

Avargal Unmaigal said...

முகுந்தம்மா நீங்கள் சொல்வது எல்லாம் கட்டுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு என்னை போன்று அடிப்பவர்களுக்கு இல்லை.
நான் கல்லூரியில் படிக்கும் வரை வீட்டைவிட்டு வெளியே தண்ணிர் கூட குடித்ததில்லை. நான் வேலைக்கு சேர்ந்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த போது குடிக்க ஆரம்பிதேன். அப்போது டெய்லி குடித்தேன்.அப்போது நான் பேச்சுலராக சென்னையில் இருந்தேன் 8 வருடங்களுக்கு மேலாக டெய்லி குடித்தேன். அது ஒரு இளமைக்கால அனுபவம் அதன் பிறகு கல்யாணம் ஆனதும் வீக்லி 2 தடவைகள் குடித்தேன். இப்போது எல்லாம் மாதத்திற்கு 2 அல்லது 3 தடவை குறிப்பாக சனிக்கிழமை இரவுகளில் என் விட்டிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ குடிப்போம். எனது அனுபவத்தில் அளவு குறைந்து கொண்டுதான் வருகிறதே தவிர அதிகம் ஆனது இல்லை.

என்னை போன்று அடிப்பவர்களுக்கு இதெல்லாம் சுவிட் சாப்பிடுபவது போலத்தான் இது. நிரிழிவு நோய் வருவதற்கு முன்பு யாரும் சுவிட் சாப்பிடுவதை நிறுத்துவதில்லை அது போல நிரிழிவு நோய் வந்த பின் சுவிட் சாப்பிடும் அளவை குறைத்து கொள்வது அல்லது முற்றிலும் நிறுத்துவது என்பது அப்போதைய உடல் நிலைக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவு போல எங்களது குடிப்பபழக்கமும் காலத்திற்கு ஏற்பவும் உடல் நிலைக்கு ஏற்பவும் எடுக்கப்படும் முடிவு

Avargal Unmaigal said...

முகுந்தம்மா குடித்தே ஆக வேண்டுமென்று என்பது கட்டாயம் அல்ல. குடிப்பதைவிட குடிக்காமல் இருப்பது நல்லதுதான். ஆனால் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்களுக்கும் குடும்பங்களை சரிவர கவனிக்காதவர்களுக்கும் பொண்ட்டாட்டியை அடிப்பவர்களுக்கும் ""எங்களை போன்று நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து குடிப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைதான் நான் இங்கே சொல்ல முயல்கிறேன்.""

Avargal Unmaigal said...

///இப்போது கண்டதுக்கெல்லாம் “தண்ணி பார்ட்டி” தான்///
நீங்கள் சொல்லவது இந்தியாவில் அங்குதான் கலாச்சார சீர்கேடு அதிகம்.ஆனால் எனக்கு தெரிந்தவரை அமெரிக்காவில் கண்டதுகெல்லாம் யாரும் தண்ணி பார்ர்டி வைப்பதில்லை.என்பது உண்மை.

இங்கு வார இறுதியில் அதாவது சனிக்கிழமை மாலை நான் நண்பர்கள் வீட்டுக்கு போனாலோ அல்லது அவர்கள் என் வீட்டிற்கு வந்தாலோதான் அடிப்போம் நமது விட்டிற்கு வருபவர்களுக்கு காபி கொடுப்பது போலத்தான் இந்த பழக்கம்.

Avargal Unmaigal said...

முகுந்தம்மா & ஹசினம்மா நான் எனது கருத்தைதான் கூறுகிறேன் அதனால் தவறாக் எடுத்து கொள்ளதீர்கள் நான் இப்படி சொல்லவதால் எதோ என்னை எதிரி போல கருதவேண்டாம்.உங்களிருவரையும் மட்டுமல்ல எல்லோரையும் என் வயதில் சிறியவர்களையும் மதிப்பதோடு மரியாதையும் கொடுப்பவன் இன்று வரை கொடுத்தும் வருபவன். அதனால் எனது கருத்தையும் தனிப்பட்ட என்னையும் சேர்த்து குழப்பி கொள்ள வேண்டாம். இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

Chandru said...

இது பற்றிய எனது இறவாமை என்ற தலைப்பில் சுற்றி வளைத்து சொல்லப் பட்ட கருத்தை அறிய நீங்கள் ஏன் எனது தளத்திற்கு வரக்கூடாது.

http://chandroosblog.blogspot.in/2010/07/immortality-1.html

வருண் said...

***இப்படி எல்லாத்துக்கும் சரக்கடி, சரக்கடின்னு சொல்லிட்டு இருந்த என் சித்தி பையன், போன மாதம் ஒரு பார்டியில நல்ல சரக்கடிச்சுட்டு ,motorbike la போயி மோதி இறந்து விட்டார்.***

:-(

***எங்களது குடிப்பபழக்கமும் காலத்திற்கு ஏற்பவும் உடல் நிலைக்கு ஏற்பவும் எடுக்கப்படும் முடிவு***

இப்போ தெளிவாக இருக்கதாலே சொல்றீங்க. அடிக்ஷன் என்று ஒண்ணு இருக்குங்க, அந்த நிலைக்கு போய்விட்டால் இந்த மாதிரி தெளிவாக யோசிக்கவெல்லாம் முடியாது.

இவ்ளோ நாள் வாழ்ந்து என்னத்தைக் கிழிச்சுட்டோம்? எல்லாரும் ஒரு நாள் சாகத்தானே போறோம்? என்னை மறந்து, தன்னை மறந்து சாவோமே?னு எல்லாம் வேற மாதிரி யோசிப்பாங்களாம். நீங்க அப்படியெல்லாம் போக மாட்டீங்கதான். ஆனால் அந்த நிலைக்கு போனவங்களும் தான் அந்த நிலையை அடையமாட்டோம்னு நினைத்தவர்கள்தானாம்!

Anyway, you agree that "dont drink and drive". Such an advice is needed for one who drinks. Certainly not for one who does not drink at all. So, you can just take the advice and move on.

This is not the "correct place or time" to argue or justify "drinking safely" or "drinking wisely" as there is GREAT LOSS in the example she quotes! That is my two cents! :)

ஹுஸைனம்மா said...

நேற்று ஜூ.வி.யில் இதை வாசித்தபோது, உங்களின் இந்தப் பதிவுதான் ஞாபகம் வந்தது!!

//சிலர் சொல்வார்கள், ''எப்போவாச்​சும் குடிப்பேன்... கம்பெனி மீட்டிங்... ஃப்ரெண்ட்ஸ் கெட் டு கெதெர்... மன்த்லி ஒன்ஸ்... வெளியூர் போனால்தான்... ஆனா, நான் குடிகாரன் இல்லை'' என்று. குடிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் நான் குடிகாரன் இல்லை என்று சொல்லும் தகுதி கிடையாது. ஏனெனில் மனநல மருத்துவர்கள் மது குடிப்பதை 'குடிப்பழக்கம்’ என்று சொல்வது இல்லை. 'குடிநோய்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒரு முறை குடித்தாலும் கிருமி, கிருமிதானே? அதேபோல, 'எப்போதாவது குடிக்​கிறேன் ஆசாமி’கள் பார்க்க ஆரோக்கிய​மாகத் தெரியலாம். ஆனால், குடிப் பழக்கம் உள்ள எவருக்கும் கல்லீரல், கணையம் போன்றவை குறைந்தது 10 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டு இருக்கும். ஆக, 'எப்போதாவது குடிக்கிறேன் ஆசாமி’கள் முதல்நிலைக் குடிநோயாளிகள்!// - ஜூ.வி.