Monday, March 5, 2012

என்னாது காந்திய கொன்னுட்டாங்களா ??

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட் பார்க்க நேர்ந்தது.

அதில் இரண்டு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கேற்றனர். அதில் ஒரு கேள்வி,
காந்தி படத்தின் முதல் காட்சியான, காந்தியை கோட்சே சுடுவது போன்ற ஒன்று, அதை போட்டு விட்டு, காந்தியை கொன்றது யார்? என்ற கேள்வி கேட்டார்கள்.
என்ன கேணத்தனமான கேள்வியா இருக்குதே, இது கூடவா 10th students don't know,
என்று நான் நினைக்கும் தருவாயில் அந்த அணியினர் பதில் எனக்கு புல்லரிப்பை தந்தது.

ஒரு அணியினர் சொன்ன பதில்.

நோ ஐடியா.

இரண்டாவதி அணியினர் சொன்னது

முசோலினி

அட கடவுளே!!! இது என்ன காந்திக்கு சோதனை.


இங்கே அமெரிக்காவில் நடக்கும் ஜெப்பர்டி ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது, அதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி.

காந்தியை கொன்றது யார்?

அதில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் பச்செர் அழுத்தினர் அனைவரின் பதிலும்

நாதுராம் கோட்சே 

எங்கே செல்கிறது இந்திய  குழந்தைகளின் கல்வித்தரம்

9 comments:

bandhu said...

நல்ல வேளை..
என்னாது காந்திய கொன்னுட்டாங்களா ??
அப்படின்னு கேக்காம விட்டாங்களே!

கீதமஞ்சரி said...

கேட்கவே மிகவும் கஷ்டமா இருக்கு. வெறும் மனப்பாடக்கல்வி மாணவர்களை இந்த நிலைக்குதான் தள்ளிவிடும்.

கோமதி அரசு said...

இந்த பதிவை படிக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.

10 வது படிக்கும் மாணவர்களுக்கு தெரியவில்லை என்றால் என்ன செய்வது?

Avargal Unmaigal said...

இந்திய குழந்தைகளை குறை சொல்லாதீர்கள். அதற்குபதில் கேள்வியை கேட்டவர்களை குறை சொல்லுங்கள். இந்த மாதிரி அவுட் ஆஃப் கொஸ்டினையா கேட்பார்கள். நாட்டுக்க்காக உழைக்கும் விஜயகாந்த எந்த படத்தில் யார் வயிற்றில் பம்பரம் விட்டார் என்று கேட்டு இருந்தார்களானால் அவர்கள் சரியாக பதில் சொல்லி இருப்பார்கள்

நிரஞ்சனா said...

அட... நீங்களும் இந்த Programme பாத்து அழுதிங்களா... நானும் பாத்துட்டு நொந்து நூடுல்ஸாயி ஒரு பதிவை போட்ருக்கேன் டைமிருந்தாப் பாருங்க...

http://www.nirusdreams.blogspot.com/2012/03/blog-post_04.html

என்னன்னு சொல்ல நம் கல்வித் தரத்தை. தேசப்பிதாவைப் பத்தித் தெரியாம தேச வரலாறு தெரியுமா... இல்ல தேசப்பற்றுதான் வருமா?

Chandru said...

நண்பன் கதைதான் கல்வியை கலவியாக்கி படிக்கிறார்கள்.”நோ ஐடியா”வாவது பரவாயில்லை, ” முசோலினி “கொடுமை.. இப்படித்தான் DEO வின் ”கட்டிலுக்கு எத்தனைகால்” என்ற கேள்விக்கு பஞ்சபாண்டவர்களைப் போல் மூன்றே மூன்று கால் என்று இரண்டு விரலை கான்பித்தானாம்.இன்றைய கல்வியின் நிலை இதுதான்.

பாச மலர் / Paasa Malar said...

இதுபோன்ற தேவையான பொது அறிவுக்கு இடம் கொடுக்காமல்..அதற்கான ப்ரத்யேக முயற்சிகள் எதுவும் இல்லாமல், வெறும் மதிப்பெண்களுக்காய் மாணவர்களைதி தயார்ப்படுத்தும் தொழிற்சாலைகள்தான் நம் கல்விக்கூடங்களில் நிறைய

உயிர்நேயம் said...

நீங்க எந்த காந்தியை சொல்றீங்க? இந்திரா காந்தியையா, சஞ்சய் காந்தியையா, ராஜிவ் காந்தியையா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உயிர்நேயம் கேக்கிற கேள்வி தான் சரி..
காந்தின்னா. இப்ப ஒன்லி ராஜிவ் ஃபேமிலி தான் காந்தி..