Wednesday, May 9, 2012

30 வயது பெண்களும், தமிழ் சினிமாவும்

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். தமிழ் சினிமால காட்டுற மாதிரி எப்போதும் நாம ஸ்கூல் படிக்கிற, காலேஜ் படிக்கிறவங்களா இருந்திட்டா எப்படி இருக்கும். ஏன் இந்த கேள்வியை இப்போ கேட்குறேன்னா, 100 க்கு 99 தமிழ் சினிமாலா வர்ற ஹீரோயின் எல்லாரும் ஒன்னு ஸ்கூல் படிப்பாங்க..இல்ல காலேஜ் படிப்பாங்க.. அதுவும் இல்லாம கிராமத்து பொண்ணா இருந்தா நம்ம பதினாறு வயதினிலேலெ வர்ற மயிலு மாதிரி  மத்த விசயம் எல்லாம் ஒன்னுமே தெரியாத ஆனா “என் மன்னன் எங்கே?”ன்னுட்டு செந்தூரப்பூவை கேட்டுட்டு இருப்பாங்க.

தமிழ் சினிமால வர்ற 99/100 ஏன் 100/100 பெண்ணுங்களுமே ஏன் 15-25 வயசுக்குள்ளார இருக்காங்க.. அதுக்கு மேலே வயசுல பொண்ணுங்கள காட்டினா..அவங்கள ஒரு மாதிரி பொண்ணு மாதிரி சொல்ல போனா  ”ஆண்ட்டி” ன்னு ஒரு பட்ட பேர வச்சி..எப்போ பாரு பொண்ணுங்கள ஒரு வட்டத்துக்குள்ளாரயே வச்சி இருக்கிகாங்க தமிழ் சினிமால..

இந்த மாதிரி ட்ரெண்டு சாவித்திரி,சரோஜா தேவி..காலத்தில இருந்து, இப்போ வரை தொடருது..வர வர இப்போ வந்த எல்லா படத்திலையும் ஸ்கூலு லவ்வையே காட்டி..கடுப்படிக்குறாங்கப்பா..


எவ்வளவோ கீழே இருந்து போராடி ஜெயிச்சு எடுத்துக்காட்டா திகழ்ற எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்கப்பா..ஒரே ஒரு உதாரணம் சொல்லனும்னா..பர்மாவின் Aung San Suu Kyi...என்னா ஒரு பொண்ணுப்பா அவங்க..நாட்டுக்காக..கடைசிவரை வீட்டு சிறையில இருந்துட்டு..காதலிச்சு கல்யாணம் முடிச்ச கான்சரில் அவதிப்பட்ட தன்னோட கணவரை அவரின் கடைசி நிமிடம் கூட பார்க்க முடியாமல் போனாலும் தன்னோட நாடு முக்கியம்னு நினைச்சு வாழ்ந்த/வாழ்ந்துட்டு இருக்கிற பொண்ணுங்க மாதிரி பொண்னுங்க எல்லாம் இந்த தமிழ் சினிமா எடுக்குறவங்க கண்ணுக்கு தெரியாதா..

இல்லை தெரியாம தான் கேட்குரேன்..30 வயசுக்கு மேல பெண்ணுங்க இருக்க கூடாதா..அதை தான் தமிழ் சினிமா சொல்ல வருதா..


7 comments:

ஹுஸைனம்மா said...

//தமிழ் சினிமால பெண்கள் ஏன் 15-25 வயசுக்குள்ளார இருக்காங்க.//

ஹீரோ பேரன்பேத்தி எடுத்திருந்தாலும், ஹீரோயின் மைனராத்தான் இருக்கணும்!! (ரஜினி, ஐஸ்வர்யாகூட எப்படியாவது(!!) நடிச்சிடணும்னு ஆசைப்பட்டுச் சாதிச்சாரே!!)

இந்த வயசு மேட்டரைக்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, படிச்ச, அறிவாளியான ஹீரோயின்கள், ஹீரோ படிக்காதவனாகவோ, ஏன் கெட்டவனாகவோ இருந்தால்கூட காதலித்து மணந்துகொள்வாள்.

இப்போ இன்னொரு ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு வருகிறது - ஹீரோ மனநிலை குன்றியவனாக இருந்தாலுங்கூட காதலித்து மணந்துகொள்ளலாமாம்!!

இந்தப் பள்ளிக்கூட காதல் சமூகத்தைப் பீடிக்கும் இன்னொரு வியாதி!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னமுகுந்தம்மா நீங்க.. காதலில் சொதப்புவது எப்படி ல ..ஹீரோ ஹீரோயின் சுரேஷும் சுரேகாவும் தானே.. அவங்களுக்கு இருக்குமே 40 க்கு மேல.:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்ம வயசுக்கு படம் எடுக்கனும்ங்கறீங்க அதானே :))))

Thekkikattan|தெகா said...

:)) kalakkals , keep writing.

Avargal Unmaigal said...

30 வயதுக்கு மேல் உள்ள பெண்களிடம் வடரும் காதல் மிகவும் ஆத்ம பூர்வமானது அதில் இளமையின் துள்ளல் வேகம் துடிப்பு இருக்காது. அது மிகவும் அமைதியாக ஒடும் நதியை போல தெளிவாக இருக்கும். அந்த மாதிரி 30 வயதுக்கு மேல் உள்ளவர்களின் காதலை காண்பித்தால் படம் எடுப்பவர்களுக்கு வருமானம் வராது. அதனால் தான் இளமையின் அறியாதன்மையும் துடிப்பு துள்ளல் வேகம் கவர்ச்சியை காண்பித்து படம் எடுக்கிறார்கள்

டோண்ட்வொரி முகுந்தம்மா எனக்கு லாட் ரி டிக்கெட்டில் பரிசு விழுந்தால் உங்களை வைத்து ஒரு படம் எடுக்கிறேன்

துளசி கோபால் said...

//தமிழ் சினிமால பெண்கள் ஏன் 15-25 வயசுக்குள்ளார இருக்காங்க.//

வரியில் ஒரு தவறு இருக்கேப்பா.

தமிழ்சினிமாவில் வர்ற பொண்ணுங்களின் சினிமா வயசு 16 இல்லை 17. இதைத் தாண்டப்பிடாது.

அசல் வயசு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது நியதி!!!!

தமிழ் தினசரி பார்த்தீங்கன்னா ஒன்னு தெரியவருமே.......

முதியவர்....ன்னு வரும் விபத்து/சம்பவம் பகுதிகளில் அந்த முதியவர் 40 வயசுப்பெண்ணா இருப்பார்!!!!!

Stay smile said...

mmhhmm...!