Sunday, June 3, 2012

வாழ்க்கை போராட்டம்.

ஏன் வாழ்க்கையை போராட்டம் என்றழக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு. போராட்டம் என்றாலே கொடிபிடிப்பது, கூச்சல் போடுவது, மறியல் செய்வது என்று மட்டுமே சிறுவயதில் நினைத்திருந்தேன் நான். ஆனால் ஒவ்வொரு நாளும் வாழுவதற்கு நாம் அனைவரும் ஏதோ ஒரு போராட்டம் செய்கிறோம். நாம் செய்யும் போராட்டங்களை பற்றிய அலசலே இந்த பதிவு.

ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே வாழ்வதற்கு போராட வேண்டும் மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கை போராட்டம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் வாழ்வில் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் சரி அவருடைய வாழ்விலும் ஒரு போராட்டம் இருக்கும். அது பொருளாதாரம் சார்ந்த போராட்டமாக இல்லாமல் இருக்கலாம்..ஆனால் அவர்களும் வாழ்வில் போராடவே வேண்டியிருக்கிறது.

இதற்கு சில உதாரணங்கள் சில.

முதல் உதாரணசில நாட்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பெண்ணை கூறலாம். அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய மண்னை சேர்ந்த பெற்றோரை கொண்டவள். அவளுடைய அப்பா, ஒரு மில்லியனர், ரிசாட் ஹோட்டல் ஹோட்டல் உரிமையாளர். பார்க்க அழகாக இருப்பாள். அவளுக்கு டாக்டருக்கு படிக்கும் ஒரு இந்திய மரபை சேர்ந்த பாய்ஃப்ரெண்ட்ம் உண்டு. அந்த பாய்ஃப்ரெண்ட் குடும்பமோ ஒரு கோடீஸ்வரர்கள் குடும்பம் படிப்பு. பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் நிலையை தாண்டி, தற்போது கணவன் மனைவியாகி விட்டனர்.

அந்த பையன் ஒரு அப்பாவி வேறு, எல்லாம் இவள் சொற்படி தான் நடப்பார்.  பணம், அழகு, அந்தஸ்து, அழகான, பணக்காரனான கணவன்..இப்படி அந்த பெண்ணுக்கு எல்லாமே உண்டு..ஆனால் அவளிடம் நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசினால் போதும்..வாழ்வில் விரக்தி வந்துவிடும்..காலையில் எழுந்ததில் இருந்து படுக்கப்போகும் வரை தான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனக்கு துரோகம் செய்கிறார்கள் என்பாள். தன்னுடைய தந்தையை பற்றி அசிங்க அசிங்க வார்த்தைகளால் திட்டுவாள். தன கணவனை பற்றியும், அவரின் குடும்பத்தார் பற்றியும் அவள் திட்டும் வாரத்தைகள் கேட்க்க காது கூசும்.அவளை பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஒரு போராட்டமே. 

அடுத்து நான் சொல்ல இருப்பது என்னை போன்ற ஒரு பெண் ஆராய்ச்சியாளரின் கதை,  இரண்டு குழந்தைகளுக்கு தாய் அவர். முனைவர் பட்டம் பெற பல்கலைகழகத்தில் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் ஆனது. குழந்தை பேரு வேண்டாம் என்று தள்ளி போட்டு கொண்டிருந்த அவர், பட்டம் பெற சில மாதங்கள் இருக்கும் பொது தாயாகி விட்டார். அவரின் கைடுக்கு அது பிடிக்காமல் போக, குழந்தையை பார்த்து கொள்ள முடியாத அளவு வேலைப்பளு கொடுத்து, வேலையை முடி இல்லை டிகிரி கிடையாது என்று மறைகமாக மிரட்ட, குழந்தைக்கும், எதிர்காலத்துக்கும் நடுவில் அவர் நடத்திய வாழ்க்கை போராட்டம் இன்னும் என் கண் முன் நிற்கிறது. கடைசியில் இந்த ஆராய்ச்சியே வேண்டாம் என்று தாக்கி போட்டுவிட்டு இன்னொரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும், அவரிடம் இருக்கும் அறிவும் ஆர்வவும் நினைத்த தொழிலை செய்ய முடியாமல் அவர் படும் வேதனையும் அவர் வாழ்க்கையை ஒரு போராட்ட களமாக்கி விட்டிருக்கிறது.

 கடைசியாக நான் சொல்ல இருப்பது நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும், இன்னும் உயர் பதவிக்கு வர துடிக்கும் ஒரு பெண்ணை பற்றியது. இவருக்கும் குழந்தைகள் உண்டு என்றாலும் அவர்களை முழுக்க முழுக்க கவனித்து கொள்ளுவது ஆயாக்களும் அவர் கணவரும் தான். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் வெறும் 4 மணி நேரம் மட்டுமே இவர் உறங்குவார். மற்ற எல்லா நேரமும் வேலை வேலை வேலை தான். நிறுவனத்தில் நடக்கும் அரசியல்களை சமாளிக்க, மேலும் பதவி உயர்வு பெற இவர் போராடும் போராட்டம் அப்பப்பா  சொல்லமுடியாது 

4 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாழ்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Avargal Unmaigal said...

கருவில் தொடங்கி கல்லறை செல்லும் வரை போராட்டம் தான் .போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை.போராட்டம் பற்றிய உண்மை தகவல்களை தந்த பதிவிற்கு நன்றி

இன்று நான் வெளியிட்ட ஆண்களின் போராட்டத்தை http://avargal-unmaigal.blogspot.com/2012/06/blog-post_03.html ஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது? என்ற பதிவாக இட்டுள்ளேன். முடிந்தால் பார்க்கவும்