Thursday, February 5, 2015

ஐயையோ! திருப்பரங்குன்றம் மலையை காணோமே!

இது என்ன வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி  போல இருக்கேன்னு நினைக்காதீங்க.  சமீபத்தில் மதுரை சென்ற போது நான் உண்மையில் கண்டது. திருப்பரங்குன்றம் மலை அங்கே தான் இருக்கிறது..ஆனால் அதனை பார்க்க தான் முடியவில்லை.  பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் இருந்த ஜெய் ஹிந்துபுரம் பகுதியில் இருந்து திருப் பரங்குன்றம் மலையை தெள்ள தெளிவாக பார்க்கலாம். தற்போது, ஒரே புகை மூட்டம் அதனை சுற்றி. என்ன காரணம் என்று விசாரித்த போது நான் அறிந்தது இது. திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகில் மாநகராட்சி குப்பை எரிக்கபடுகிறது. அதனால் ஏற்படும் புகை மூட்டம் அந்த பகுதி முழுதும் சூழ்ந்து ஒரே புகை மூட்டம்.

அது சரி..எரிக்காவிட்டால் அப்புறம் எப்படி தான் குப்பைகளை அகற்றுவது, என்று சிலர் கேட்கலாம். முதலில் குப்பைகளை எரிப்பதால் என்னவாகும் என்று சில நாட்களுக்கு முன் நான் வாசித்த கதிர் அவர்களின் வலைத்தளம் என்ன சொல்கிறது பாருங்கள். சுருக்கமாக சொன்னால், முதலில் எரிக்க்காகப்படும் பொருள்கள் மக்கும் கழிவுகள்  மக்கா கழிவுகள், நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள், மறுசுழற்சி செய்யபடும் கழிவுகள் என்று எரிக்கும் முன் பிரிக்கபடுவதில்லை. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து எரிக்கிறார்கள்.

எரிக்கப்படும் கழிவுகளில்  இருக்கும்  நெகிழி (plastic) கழிவுகள் dioxtin என்னும் நச்சு பொருள் வெளியாகிறது. அது மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை உண்டாக்குவது அல்லாமல், இதய நோய்கள், கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் விட இவை இனபெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்யவல்லவை. இதனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். குப்பைகளை பாதுகாப்பாக எப்படி அகற்றுவது என்று மாநகராட்சி கழிவு மேலாண்மையில் இருக்கும் யாருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை.



அனைவருக்கும், தன்  வீட்டில் இருந்து குப்பை சென்றால் போதும். அது என்னவாகிறது எப்படி உலகிற்கு கேடு விளைவிக்கிறது என்று கவலை இல்லை. அரசியல்வாதிகளுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே தெரிவதில்லை.

உண்மையில் குப்பைகள் கொண்டு மின்சாரம் தயாரிக்கபடுகிறது ஸ்வீடன் நாட்டில். அதில் கிடைக்கும்  energy கொண்டு 20% வீடுகளுக்கு heating சிஸ்டம் வழங்கபடுகிறது. குப்பைகள் போதவில்லை என்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குப்பைகள் இறக்குமதி செய்ய படுகிறது.   அதெல்லாம் வளர்ந்த நாடு, அவர்களிடம் பணம் இருக்கிறது அதனால் இப்படி விதவிதமாக மாற்று எரிசக்தி வழியில் முதலீடு செய்கிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது, சொல்லபோனால் இந்தியா தான் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இருக்கிறது.


References :

http://www.pri.org/stories/2012-06-26/sweden-imports-waste-european-neighbors-fuel-waste-energy-program

http://blogs.wsj.com/indiarealtime/2015/02/04/india-has-worlds-third-largest-number-of-billionaires/



6 comments:

ஹுஸைனம்மா said...

இந்த அம்மேரிக்காவுலருந்து வர்றவுங்கள்லாம் ஏன் இப்பிடி இருக்காங்க? ;-)

ராமலக்ஷ்மி said...

இதே போல, பெங்களூரில் குப்பை எரிக்கப்படும் காட்சிகளுடன் ஒரு பகிர்வு இங்கே. குப்பைகளைப் பிரித்துதான் வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சி இட்ட சட்டம் குறித்த ஒரு பகிர்வு இங்கே. இரண்டாவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். குடியிருப்புகள் ஆனாலும் சரி, தனி வீடுகளானாலும் சரி குப்பைகள் பிரித்தே வாங்கப்படுகின்றன . இப்போது சமையல் கழிவுகளை உரமாக்கும் இயந்திரங்கள் எல்லா குடியிருப்பிலும் இருக்க வேண்டுமென்பதும் அமலுக்கு வந்து விட்டது. உங்கள் பகிர்வைக் பார்க்கும் போது, நாடு முழுக்க இவை பின்பற்றப்படுமா என்பது கேள்விக்குறிதான் எனத் தோன்றுகிறது. மக்களின் அலட்சியம் ஒருபக்கம் இருக்க, அரசே இப்படி அக்கறையின்றிக் குப்பைகளை எரித்து, அறியாமையுடன் நடந்து கொள்கிறதே.

வெங்கட் நாகராஜ் said...

தில்லியின் எல்லைப் பகுதியில் இப்படி பல மலைகள். எரிப்பதில்லை என்றாலும், இன்னும் பல மலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்....

முகுந்த்; Amma said...

@hussainamma

Thanks for the comments. We, the NRI's are often the problem finders, what to do ?

முகுந்த்; Amma said...

@ramalakshmi, thanks for Bangalore garbage burning photo and the garbage management information law. That's a good initiative step. Hope all the cities follows that example.

முகுந்த்; Amma said...

@venkat nagaraj.

Thanks for the information.
Seems like even indian capital is not able to do proper waste management.