Monday, February 2, 2015

வேடிக்கை மனிதர்கள்!

நான் சந்தித்த சில வேடிக்கை மனிதர்கள்.


சத்தியசீலர்

இந்த வகை வேடிக்கை மனிதர்கள் தான் சத்திய சீலர்/ உண்மை விளம்பி என்று காட்டி கொள்வார்கள். தான் சத்திய சீலராக இருப்பது போல் அனைவரும் இருக்கவேண்டும் என்று ஆணை விதிப்பார்கள். அதாவது அவர்கள் மாமிசம் உண்ணாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம் மாமிசம் உண்பவர்கள் எல்லாம் பாவம் செய்பவர்கள் என்றரீதியில் உபதேசம் செய்வார்கள். இவர்களை போன்றவர்களை என்ன செய்வது?


மெழுகுவர்த்தி

இந்த வகை மக்களை சந்திக்கும் போது அவர்களுக்காக என்ன செய்வது என்று தெரியாது. இவர்களை சந்தித்து சில நேரம் கூட இருக்காது ஆனாலும் உடனே இந்த நிலைக்கு தான் வர என்ன என்ன கஷ்டப்பட்டார்கள் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். தாங்கள் பட்ட கஷ்டம் போல யாரும் கஷ்டப்படவில்லை என்று புலம்புவார்கள். அவர்கள் பட்ட கஷ்டத்தினாலெயே தான் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது என்பார்கள். இவர்களை போன்றவர்களிடத்தில் எப்படி பேசுவது.

ராஜா/ராணி

இந்த வகை வேடிக்கை மனிதர்கள் எப்போதும் தான் சொல்வதே/செய்வதே சரி, அடுத்தவர்கள் சொல்வதோ, செய்வதோ பிசாத்து என்று சொல்வார்கள். உலகின் எந்த டாபிக் எடுத்து கொண்டாலும் தனக்கு அதனை பற்றி அத்துப்படி என்று காட்டி கொள்ளுவார்கள். அடுத்தவர்களின் சிந்தனைகளை மதிக்கவோ காது கொடுத்து கேட்கவோ மாட்டார்கள். இவர்களை போன்றவர்களை பார்க்கும் போதும் பேசும் போதும், வாயை மூடி கொண்டு மனதுக்குள் சிரித்து கொள்ள தோன்றும்.


வெத்து வேட்டு/சவுண்டு பார்ட்டி 

இவர்களும் ராஜா/ராணி கேரக்டர் போல தான் என்றாலும் ஒரு பெரிய வித்தியாசமும் உண்டு. ராஜா/ராணி கேரக்டரில் இருப்பவர்களுக்கு விசயம் தெரியும் ஆனால் இவர்களோ வெத்து வேட்டுகள் யானையை குதிரை ஆக்குவேன், அவனை தெரியும் இவனை தெரியும் என்றெல்லாம் பேசுவார்கள் ஆனால் இவர்கள் ஒரு லொட லொட மட்டுமே.. இந்தவகை மக்கள் உண்மையில் ஒரு சரியான பயந்தாங்கொள்ளிகள். கஷ்டமான அல்லது சவாலான ஒரு பிரச்னையை கொடுத்து பாருங்கள் இவர்களிடம், ஓடி ஒளிந்து கொள்வார்கள்.


பொய்முகம்

நான் பார்த்த கேரக்டர்களிலேயே ரொம்ப பயங்கரமானவர்கள் இவர்கள். அதிகம் நடிப்பவர்கள். சிரித்து பேசியே நம்மை நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள். யாரை பற்றியும் உண்மையை சொல்ல மாட்டார்கள்..ஆனால் அனைவரைப் பற்றியும் அறிந்து இருப்பார்கள். இவர்களிடம் உண்மை என்பது துளிக்கும் இருக்காது..எல்லாமே நடிப்புதான். இவர்களை எப்படி இனம் கண்டு சமாளிப்பது என்பதே பெரிய சவால்.


டிராமா கிங்/குயீன்

இவர்கள் எந்த ஒரு situation ஐயும் dramatize செய்து தங்களுக்கு சாதகமாக வளைக்க வல்லவர்கள். இவர்கள் ஒரு சிறிய பிரச்சனையையும் பூதாகரமாக்கி அனைவரையும் torture செய்வார்கள். இவர்கள் கொஞ்சம் ராஜா/ராணி டைப் மக்கள். தான் செய்வது, நினைத்தது தான் சரி, அடுத்தவர்கள் சொல்வது நினைப்பது எல்லாம் தவறு என்று நினைப்பார்கள். அடுத்தவர்கள் சொல்ல வருவதை ஒரு வார்த்தை கூட கேட்பதற்கு இவர்கள் தயாராக இருப்பதில்லை. அனைத்து விசயங்களையும் சந்தேக கண்ணுடனே பார்பார்கள். பயங்கர சுயநல வாதிகள். மற்ற யாரையும் பற்றி கொஞ்சம் கூட நினைக்க மாட்டார்கள்.இவர்களின் முழு முதல் ஆயுதம் அழுகை பின்னை emotional blackmail.தனக்கு எதிரில் உள்ளவர்கள் சரணம் அடைந்து மன்னிப்பு கேட்கும்வரை இவர்கள் தங்கள் நாடகத்தை தொடர்வார்கள்.பெரும்பாலும் இந்த வகை கேரேக்டேர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.அடுத்தவர் வளர்ச்சியில் மீது பொறமை கொண்டவர்கள்.

இது நான் சந்தித்த சில வேடிக்கை மனிதர்கள் பற்றிய என்னுடைய கருத்துக்கள் மட்டுமே..இன்னும் பல பல கேரக்டெர்கள் இருக்க கூடும்...

5 comments:

Yaathoramani.blogspot.com said...

வேடிக்கை மனிதர்கள் சிலர் குறித்த
ஆழ்மான அலசலும் அதைச் சொன்னவிதமும்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வருண் said...

உலகில் பல அலைவரிசையில் மக்கள் இருக்காங்க. அவர்கள் நம் இண்டிமேட் ரிலேஷன்ஷிப் அல்லது க்ளோஸ் ரிலேடிவ்ஸ் அல்லது நம் எம்ப்ளாயராக இருந்தால் சகித்துக்கொண்டு கோகணும். மற்றபடி இவர்கள் மூனாவது ஆளாக, "நண்பர்களாக" இருந்தால் ஒதுங்கிப் போயிடலாம். It is better to choose people who have somewhat same frequency range of ours' and interact with them.

I find some people are irritating. I also know some people find me irritating to them. Once I learned that, I would avoid interacting with former and latter categories as well. I usually choose people whom I can tolerate and, of course people who can tolerate me and my attitude, to spend my time.

If one is not very careful in choosing the "correct environment" he/she will be comfortable with, he/she will have "long days".

I try not to blame others for not being what I expect them to be. Because I could not be like what some others expected me to be!

We choose our friends or not?

துபாய் ராஜா said...

இவர்கள் வேடிக்கை மனிதர்களல்ல... விபரீத மனிதர்கள்...

முகுந்த்; Amma said...

@ramani, @dubai raja

Thanks for the comments

முகுந்த்; Amma said...

@varun,

Yes, you are correct if the negative characters are in our family or intimate relationship then we have no choice other than adjusting. But while choosing friends these can be avoided. True