Tuesday, November 16, 2010

பொய் முகம்



V.S. Naipaul அவர்களின் புத்தகமான A Bend in the River இல் ஒரு பாதிரியார் ஒருவர் இருப்பார். அவரின் பொழுது போக்கு முகமூடிகள் சேகரிப்பது. இந்த கதையை படிக்கும் பலருக்கும் இந்த கதை மாந்தர் எதனை குறிக்கிறார் என்ற சந்தேகம் வருவதுண்டு. என்னை பொறுத்த வரை மனிதர்கள் பல நேரங்களில் நம் உண்மை முகத்தை மறைக்க உதவும் முகமூடியை இந்த கதை மாந்தர் சூசகமாக குறிக்கிறார் என்று சொல்லுவேன்.

என் கணவர் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஒன்றை கூறுவதுண்டு. அது "நாமெல்லாம் லிபரல் என்ற முகமூடியில் இருக்கும் கன்செர்வேடிவ்கள்" என்பதே அது. இதனை நான் இந்தியர்கள் மட்டுமே அல்ல எல்லா நாட்டினர்க்கும் பொருந்தும் என்பேன்.

உதாரணமாக என்னுடைய பாஸ் ஆக இருந்த ஒரு ஜெர்மனை கூறலாம். மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் அவர். எங்க க்ரூப்பில் இருந்த ஒரு பையன் gay. ஆனாலும் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறிய அவருக்கு gay பையனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. அவன் முதுகுக்கு பின்னால் பயங்கரமாக கிண்டல் செய்வார். லிவிங் டுகெதர் எல்லாம் சர்வ சாதரணமாக இருந்த அவருக்கு ஒரு பையன் இன்னொரு பையனுடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அவரை பொறுத்தவரை அவர் ஒரு லிபரல் ஆனால் கே விஷயத்தை எடுத்து கொண்டால் அவர் ஒரு கன்செர்வேடிவ். என்ன தான் அந்த பையனை கிண்டல் செய்தாலும் அவனுக்கு முன் சாதாரணமாகவே பேசுவார்.
அங்கு அவருக்கு லிபரல் முகமூடி தேவை பட்டது.

அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் சிவில் ரைட்ஸ் மூவ்மென்ட் வர ஆரம்பித்த பின்பு வரை கூட, ஒரு கறுப்பினத்தவர் ஒரு வெள்ளை இனத்தவரை காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ முடியாது. இன்னும் கூட சில இடங்களில் இதனை இங்கு காணலாம். ஆனால் தேர்தல் நேரங்களில் அவர்கள் எல்லாம் நான் லிபரல் என்ற போர்வையை போர்த்திக்கொள்வார்கள்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் சட்டபூர்வமாக்கபடும் வரை கூட பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் எழுபதுகளில் மிகப்பெரிய பெண்ணிய இயக்கம் வந்து பெண்கள் சம உரிமை கேட்க்க ஆரம்பித்து அமெரிக்காவை புரட்டி போட்டார்கள். பெண்ணுரிமை இயக்கங்கள் கொடி பிடிக்க ஆரம்பிக்கும் போது இங்கு ஏற்பட்ட எதிர்ப்பு அலை அடங்க பத்தாண்டுகள் பிடித்தது எனலாம். ஆனாலும் தற்போது பெண்கள் சம உரிமை என்பதெல்லாம் இங்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆயினும் பெண்ணுரிமை இயக்கங்கள் கொடி பிடித்த போது அது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது.


என்னை பொறுத்தவரை இந்தியாவில், அமெரிக்காவில் எழுபதுகளில் ஏற்பட்ட நிலை போன்றதொரு நிலை வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய இந்தியா பயணத்தில் அதனை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஒரு பத்து வருடதிற்க்கு முந்தய காலத்தில் கூட எல்லாவற்றிர்க்கும் எதிர் கேள்வி பெண்கள் கேட்டதில்லை. ஆனால் இப்போது நான் சந்தித்த அனைத்து இளைய சமுதாயத்தினரும் ஏன், எதற்கு, இப்படி செய்தால் என்ன ஆகும்.... இப்படி பல கேள்விகள் கேட்கிறார்கள்.

ஏதேனும் ஒன்றை செய்யாதே என்றால், செய்தால் என்ன ஆகும்? என்று கேட்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் இருந்த பெண்கள் கேள்வி கேட்க்க ஆரம்பித்திருப்பது புதுமையாக சிலருக்கு தெரிகிறது, அவர்களின் ரத்தம் கொதிக்கிறது. நாங்கள் பெண்களுக்கு சம உரிமை வழங்குபவர்கள் என்று அவர்கள் அணிந்திருந்த முகமூடியை கிழித்து கொண்டு அவர்களின் கன்செர்வேட்டிவ் முகம் வெளியில் தெரிய ஆரம்ப்பிக்கிறது. இதுவும் சில காலம் மட்டுமே வித்தியாசமாக தெரியும், பின்பு பழகிவிடும்.

இந்த எதிர்ப்பு அலைகள் அடங்க சிறிது காலம் பிடிக்கலாம் ஆனால் மாற்றம் என்பது மாறாதது. நாம் வேண்டாம் வேண்டாம் என்று அடக்க ஆரம்பித்தால் தான், அதில் என்ன தான் இருக்கிறது என்று முயற்சி செய்து பார்ப்பவர்கள் அதிகரிப்பார்கள் என்பது என் எண்ணம்.

இதற்க்கு உதாரணமாக நான் படிக்கும் போது சந்தித்த ஒரு பெண்ணை சொல்லலாம். அந்த பெண் இந்தியாவில் இருக்கும் ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து வந்தவள், ஆனாலும் அவள் குடும்பம் ஒரு கட்டுப்பெட்டியானது. அவள் வீட்டில் அடக்கி அடக்கி வைத்திருந்ததன் விளைவாக வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன், அவள் புகை, தண்ணி...இன்னும் நிறைய.. எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். திரும்பி நான் ஊருக்கு போகவே போவதில்லை அது நரகம் என்று சொல்லி கொண்டிருப்பாள். இதே போல நிறைய சொல்லலாம்..

ஆகவே நான் நல்லவன், அதனால் அதே போல அனைவரும் இருக்க வேண்டும், என்ற நம்முடைய முகமூடியை கழற்றி வைத்து விட்டு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வதே நன்மை பயக்கும். அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது, இதனை செய்தால் என்ன என்ன பக்க விளைவுகள் நேரலாம், அதிலிருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்று ஒரு நண்பர்கள் போல அறிவுரை கூறலாமே தவிர, அடக்கி வைப்பதென்பது இனி வரும் தலைமுறையிடம் உதவாது என்பதே என் எண்ணம்.

5 comments:

Thekkikattan|தெகா said...

எல்லாமே பண்புகளுமே வளர்த்துக் கொள்வதுதானே, முகுந்தம்மா! அது சாத்தியம் எப்பொழுதென்றால் உண்மையாக தன் வளர்ச்சியை விரும்புவர்களால் மட்டுமே!

*முகமூடிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் தனக்கான தேவைகளை குறைத்துக் கொண்டாலே.

*இரண்டவது, புற வயமாக கிளம்பும் மாற்றங்கள் நம்மை விட பெரியது என்று உணர்ந்து, பக்குவப்பட்டுக் கொள்ளும் மன நிலை வரும் பொழுது தனக்கானதாக வாழ்வு கொடுக்கப் போகும் பெரும் ‘வலி’யை குறைந்தாக ஆக்கிக் கொள்ள முடியும்.

அதற்கு தேவை உண்மையை நேர் கொண்டு, தனக்கு தேவையானது போலவே எல்லாமே இயங்க வேண்டுமென்ற நிலையை disown பண்ணத் தெரிந்து கொண்டால் உதவலாம்.

//அதிலிருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்று ஒரு நண்பர்கள் போல அறிவுரை கூறலாமே தவிர, அடக்கி வைப்பதென்பது இனி வரும் தலைமுறையிடம் உதவாது என்பதே என் எண்ணம்..//

கூறியது போலவே, பிள்ளைகளை முதலில் தனக்கான ஒரு முதல் நண்பர்கள் போன்று சகஜநிலைக்கு நகர்த்துவம், உரையாடலுக்கான சாத்தியங்களை உருவாக்கி வைத்திருப்பமே ஓட்டத்தோடு ஓட மிக்க பயனளிக்கும்.

அருமையான் பதிவு!

வருண் said...

***இதற்க்கு உதாரணமாக நான் படிக்கும் போது சந்தித்த ஒரு பெண்ணை சொல்லலாம். அந்த பெண் இந்தியாவில் இருக்கும் ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து வந்தவள், ஆனாலும் அவள் குடும்பம் ஒரு கட்டுப்பெட்டியானது. அவள் வீட்டில் அடக்கி அடக்கி வைத்திருந்ததன் விளைவாக வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன், அவள் புகை, தண்ணி...இன்னும் நிறைய.. எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். திரும்பி நான் ஊருக்கு போகவே போவதில்லை அது நரகம் என்று சொல்லி கொண்டிருப்பாள். இதே போல நிறைய சொல்லலாம்..***

நல்லாயிருக்கட்டும்! :)

ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பினு அந்தம்மா பாடிக்கிட்டு இருப்பாங்க. ஆனால், சொர்க்கம் கெடச்சபிறகு ஒரு சாதாரண இடம்தான். கெடைக்காத வரைக்கும்தான் சொர்க்கம்! :)

அரசூரான் said...

முகுந்த் அம்மா, உங்க முந்தைய பதிவை விட இந்த பதிவு கலாச்சார தேடலுக்காண ஒரு பகுதி விடையை தந்திருக்கு. எல்லோருக்குள்ளேயும் ஒரு கன்சர்வேட்டிவ் (விகிதாச்சார மாறுபாடுகளுடன்) தன்மை இருப்பது மறுக்க முடியாத உண்மை. அது எதுகுறித்து (ஆணியம்/பெண்ணியம், உடை, நடை, பாவனைன்னு...) அவங்கள பாதிக்கிற இடமா பார்த்து வெளிய வரும். சில வேலைகளில் நான் முகமூடியை விரும்பி அணிவதுண்டு... ஆனால் அது அடுத்தவர்களை பாதிக்காதவாரு அணிவேன்.

settaikkaran said...

கலாச்சாரம் என்பதன் அளபீடுகள் என்னென்ன என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது சரி; இது தவறு என்று நிர்ணயம் செய்ய எது அடிப்படை? தனிமனிதரின் வாழ்க்கை முறைகளின் தொகுப்புதான் கலாச்சாரம் என்று வேண்டுமானாலும் சவுகரியமாகச் சொல்லி விடலாம். ஆனால், விதிவிலக்குகளின் சூழல்களையும் அவர்களின் மீறல்களுக்கான உந்துதல்களையும் கவனித்தல் தேவை.

இது குறித்து இணையத்தில் அண்மையில் வாசித்த இடுகைகளில் பெரும்பாலானவற்றில் தெளிவு தெரிகிறது. இந்த இடுகையிலும் தெரிகிறது. நன்றி!

வருண் said...

***என்னை பொறுத்தவரை இந்தியாவில், அமெரிக்காவில் எழுபதுகளில் ஏற்பட்ட நிலை போன்றதொரு நிலை வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.***

I am not sure whether you can compare with US. These days I hear people are paid for their votes during by-election!!! Is this a PROGRESS??!! They get CASH for their votes!! Things are getting worsening in India in the name of "progress".

In US, you cant make someone pregnant and run away even if you have not married that person. A DNA test would tell you that such and such is father and the person must pay the child-support to the "illegitimate" child and he will be the "father" in any "papers or documents". The MOM decides whether to abort the child or NOT. Not the "dad"!

But, in our country, the law and order and scientific advancement put together is only for top 5% of RICH people. The rest cant afford anything. They will find a way to "kill" that child. Or let that child "beg" as a orphan. The law and order is getting worsening everyday as far as I am seeing.

I am talking about practical situation here. Not theory and speculation. We are not quite there yet. We use cooking gas in Cars (including my relatives) bcos it is "economic". We hardly do anything right. So, the more freedom they are given, the freedom will be abused or misused I am afraid. Because I know how things work in India. So, I am very pessimistic about it. Serious changes might lead us in a bad direction instead of making "progress". Because we are not Americans. We might never become like American system.