படித்தது மனதை பிழிந்தது
முக நூலில் யாரோ ஷேர் செய்தது, தற்செயலாக பார்க்க, படிக்க நேர்ந்தது. அது பால் கலாநிதி என்னும் ஒரு நரம்பியல் நிபுணரின் கடைசி காலங்கள் பற்றிய அவரின் சொந்த எழுத்துக்கள். மார்ச் 9 ம் தேதி 37 வயதில் அவர் இறந்து விட்டார். நுரையீரல் புற்றுநோய், அவரை கொன்று விட்டது. புகைபழக்கம் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அவரை நோய் கொன்று விட்டது. அவர் இறப்பதற்கு முன் தனக்கு மரணம் வர போகிறதென்று தெரிந்து அவர் எழுதிய "How long have i got left" மற்றும் "Before I go" என்ற இரு கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. ஒரு டாக்டர் அவருக்கு கேன்சர். எவ்வளவு நாள் வாழப்போகிறோம் என்று அவருக்கு தெரியாது, ஆனால் குணப்படுத்த முடியாது என்று மட்டும் தெரியும். வேறு எந்த குறையும் இல்லை அவருக்கு, நல்ல வேலை, தன்னை போல டாக்டர் காதல் மனைவி , அப்போது பிறந்த பெண் குழந்தை..எல்லாம் இருக்கிறது. அவருக்கு தற்போது வேண்டியதெல்லாம் இன்னும் சில நாட்கள் வாழவேண்டும் தன் மகளுக்கு தன்னை பற்றிய சிறிது ஞாபகமாவது இருக்க வேண்டும் என்ற அவா. "எப்படி அதனை செய்வது, நிறைய கடிதங்கள் எழுதி வைக்க வேண்டுமா, அது என்ன செய்ய போகிறது, அவளுக்கு 15 ஆகும் போது, நாங்கள் வைத்திருந்த செல்ல பெயராவது ஞாபகம் இருக்குமா, அல்லது உபயோகிப்பாளா ? " இப்படி பல கேள்விகளை எழுப்பி, முடிவில் அவர் எழுதி இருப்பது இது தான், தன் மகளிடம் அவர் சொல்வது போல எழுதியது இது "உன் வாழ்கையில் ஒரு காலகட்டம் வரும், அதில் நாம் என்ன சாதித்தோம், உலகிற்கு என்ன செய்தோம், என்று யோசிக்கும் போது , ஒன்றை நினைத்து கொள் மகளே..நீ ஒரு சாகப்போகிற மனிதனுக்கு அளவில்லா, நான் முன்னெப்போதும் அனுபவித்திராத ஒரு சந்தோசத்தை கொடுத்து இருக்கிறாய். இன்னும் இன்னும் வேணும் என்று பேராசை படாத ஒரு நிறைவான மிகபெரிய சந்தோசம் அது., இது போதும் எனக்கு"
இந்த கடைசி வரிகளை படிக்கும் பொது என்னை அறியாமல் கண்ணீர் துளி. நுரையீரல் புற்றுநோயால் இறந்த தன் தந்தையை பற்றி, அவர் கடைசி காலத்தில் அனுபவித்ததை பற்றி எனக்கு தெரிந்த ஒருவர் கூறியது நினைவிற்கு வந்தது. அந்த சிறு குழந்தை இறந்து போன தன தந்தையை பற்றி கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டும் என்று ஏனோ மனது நினைக்கிறது.
கவனித்தது
இங்கு தமிழ் பள்ளியில் கவனித்தது. அதில் நடக்கும் கலை நிகழ்சிகளின் போதும் சரி, பொங்கல், தீபாவளி மற்றும் ஆண்டு விழா என்று எந்த நிகழ்ச்சியாக இருப்பினும், நிறைய பொது நோக்குடைய நிகழ்ச்சிகளாக அல்லது தமிழ் கலாச்சாரத்தை குறிக்கும் நிகழ்ச்சிகளாக பார்கிறேன். கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என்று பல பல காண்கிறேன். அல்லது, மொழியை காப்போம், உலகை காப்போம், தண்ணீர் சேமியுங்கள் என்பன போன்ற பொது நோக்குடைய நிகழ்ச்சிகள் நிறைய சிறு குழந்தைகளாய் வைத்து நடத்துகிறார்கள். இதில் என்ன நகை முரண் என்றால், நேற்று மதுரையில் இருக்கும் என் அண்ணனிடம் பேசிய போது அவர் சொன்னது, தன பையன் அவன் பள்ளி ஆண்டு விழாவிற்கு ஐ படத்திலிருந்து "ஐலா ஐலா" என்ற பாட்டுக்கு பேஷன் உடை அணிந்து நடனம் ஆட போகிறான் என்று கூறியது. எங்கேயே இடிப்பது போல இருந்தது.
கேட்டது
என்ன மாயமோ தெரியவில்லை, இந்த பாடல்களிடம், இந்த படத்தில் இருந்து இருக்கும் ஒவ்வொரு பாடலும் எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கலாம். என்ன குரல் அர்ஜித் சிங் அவர்களுக்கு. பெரிய சல்யுட்.
4 comments:
டாக்டர் பால் கலாநிதியின் untimely மரணம் மிக மிகக் கொடுமையானது. இங்கு டாக்டர் படிப்பு என்பது நிறைய வருடங்களை விழுங்கக் கூடியது. அதுவும் அவர் படித்த நரம்பியல் ஏழு வருடங்கள் ரெசிடென்சி சேர்த்து மொத்தம் 15 வருடங்கள் படிப்பு+பயிற்சி, 12ம் வகுப்பிற்கு பிறகு. இவர் தனது ஆறாவது வருட ரெசிடென்சியில் தனக்கு கேன்சர் என்று தெரிந்து கொண்டது கொடுமையானது. அவர் மரணம் அவர் குடும்பத்திற்கும் நமக்கும் ஒரு பெரிய இழப்பு!
Sorry to know...
I just found this link googling. It has more details about the life he lived..
http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html
எனக்குத் தெரிய ஒரு டாக்டரின் மனைவி லங் கேண்சரில் இறந்துவிட்டார். இன்னும் ஒரு லங் கேண்சர் சர்வைவரும் தெரியும் (10 வருடங்கள் போடராடிக்கிட்டு இருக்காராம்).. வாரம் ஒரு முறை "ஜிம்" ல பார்ப்பேன் இவரை.
ஸ்டேஜ் 1 அல்லது ஸ்டேஜ் ரெண்டு ல இருக்கும்போது தெரிந்து இருந்ந்தால் ஓரளவுக்கு காப்பாத்த முடியும்னு நினைக்கிறேன். ஸ்டேஜ் 4 என்பதால் முடியாமல் போய்விட்டது போல இருக்கு.
கலாநிதி must be an extremely bright guy as he had got into top schools. Seems like "Weight loss" should be taken into consideration seriously.
I hate to go to doctors just for check-up, even for yearly physical check up. I just hate going to doctors because I think I am afraid/paranoid that they will find something which will spoil my mood. However I do go for yearly physical check up. Some people don't even do that as they feel they are very healthy.
My thought goes..
When we learn we are really sick and that we are going to die in months or years, we just have to find a way to live the rest of the life "happily". I guess we can learn that ONLY WHEN we are in such a situation. Right now I am clueless!
என் கூட வேலை பார்க்கும் ஒருவருக்கு இதே கேன்சர் கடந்த வாரம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டேஜ் 4 நிலையில் இருக்கும் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. என் வீட்டில் அந்த செய்தியை பகிரும் போதும் நான் சொன்னது எனக்கு அப்படி ஒரு நிலை வந்தால் டிரிட்மெண்ட் ஏதும் கொடுக்க வேண்டாம் இயற்கையாகவே என்னை சாகவிட்டுவிடுங்கள் என்றுதான் சாவை தடுப்பது என்பது நம் கையில் இல்லை எனது 12 வயது குழந்தைக்கு அவ்வப் போது சாவு என்றால் என்னவென்று அடிக்கடி சொல்லிவிளக்குவது உண்டு.காரணம் இங்கு வளரும் குழந்தைகளுக்கு சாவை பார்க்கும் வாய்ப்பு இந்தியாவைவிட மிக குறைவாகவே இருக்கிறது அதனால் அவர்கள் மனப் பக்குவம் அடைய வேண்டுமென்பதால் இதை நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்
எங்கு பார்த்தாலும் கேன்ஸர் என்ற சொல் காதில் விழுந்துகொண்டெ இருக்கீறது... இறைவன் காப்பானாக...
குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் விஷயத்தில், இந்தியாவில் இருக்கும் நிலை மனம் பதைக்க வைக்கீறது!! ஜூனியர் சிங்கர் டான்ஸர் போன்ற நிகழ்ச்சிகளின் பாதிப்பு!! எங்கே போகிறோமோ....
Post a Comment